Wednesday, June 27, 2007

எட்டுக்குள்ள (பிளாக்) உலகம் இருக்கு ராமையா!

எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு போப்பா அம்பி!னு பாசமா வல்லியம்மா கூப்பிட்டு இருக்காங்க. பில்லு பரணி கூப்பிட்டு இருக்காரு! மாமியார் வீடு வேற சென்னைல இருக்கு, பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே? :)

கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)

(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p


ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).

1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!

2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?

நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.

3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.

4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!

5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?

ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!

6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?

7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?

8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?

அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)

ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!

பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!

Wednesday, June 20, 2007

வாஷிங்க் மெஷின்

எப்பொழுதும் கரை புரண்டு ஓடும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமையில் வாஷிங்க் மெஷின் என்ற சாதனம் 5 வருடம் முன் வரை கூட வரவில்லை. எல்லோருக்கும், எல்லாத்துக்கும் பரணி தான்! (யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை).

எங்கூர் மாமாக்கள் காலங்க்காத்தால ஒரு 6 மணிக்கு எழுந்து, துண்டை தலைபாகையா கட்டி, வேட்டிய மடிச்சு கட்டி அப்படியே ஹாயாக வயற்வரப்பில் நடந்து, அக்கம்பக்கம் யாராவது வராங்களா?னு பார்த்து, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"னு வரவேண்டியதை பாட்டு பாடி வரவழைத்து, நைசா பங்காளி வயலுக்கு உரமிட்டு, அந்த வேட்டியை நம்ம வடிவேலு ஸ்டைலில் லேசா தூக்கிண்டு ஒரு வழியா ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்து, 501 சூப்பர் பார் சோப் போட்டு பாறாங்கல்லில் அந்த வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.

ஒரு சில மாமாக்கள் பொறுப்பு சிகாமணியாய் தங்கள் தங்கமணியின் புடவை, ரவிக்கை, இன்ன பிற ஐட்டங்களையும் அரசன் சோப் போட்டு வெளுத்து கட்டி எடுத்து வருவார்கள். அப்படி வந்தால் தான் ஒழுங்கா புவா கிடைக்கும் அது வேற விஷயம்.

தீடிரென்று சீமாச்சு மாமா மட்டும், "டெக்னாலஜி எல்லாம் நாமும் யூஸ் பண்ண வேண்டாமா? எத்தனை நாளைக்கு தான் இப்படி உழச்சு உழச்சு(துவைச்சுனு வாசிக்கவும்) ஓடா தேயறது?"னு பேங்க்ல லோன் போட்டு ஒரு வாஷிங்க் மெஷின் வாங்கி வந்து விட்டார்.
எங்க தெருவே ஓடி போய் பார்த்து, வாய் பிளந்து நின்றது.

"என்னடா சீமாச்சு! துணி துவைக்கறத்துக்கு இவ்ளோ பெரிய பொட்டியா? ஆனாலும் இதுக்கு இம்புட்டு ரூவாயா?

கிரிஜா! உங்காத்துகாரரை அனியாயத்துக்கு வேலை வாங்கற, அதான் பாவம்! பொறுக்க முடியாம இந்த வண்ணான் பொட்டிய வாங்கிட்டான் பாரு!னு போற போக்கில், சீமாச்சு மாமாக்கும் ஆப்படித்து விட்டு போனார்கள்.

வெறும் சோப் பவுடரை போட்டு தண்ணிய வாரி விட்டாச்சுனா அரைமணி நேரத்துல அதுவே கும்மு கும்முனு கும்மி, துவைச்சு, பிழிஞ்சு மொட்டை மாடியில காய போட்டு மடிச்சு எல்லாம் வெச்சுடுறது!னு சீமாச்சு மாமா தனது சகாக்களிடம் அள்ளி விட்டதில் சங்கு மாமா, வெங்காச்சம் மாமா, கிச்சா மாமா என மேலும் சில மாமாக்கள் தங்கள் தங்கமணிகளிடம் கண்ணை கசக்கி, வண்ணான் பொட்டி வாங்கி அழகு பார்த்தனர்.

சரி நம்ம கதைக்கு வரேன். கல்யாண கிப்டாக வாஷிங்க் மெஷின், பிளாஸ்மா டிவி எல்லாம் வரும்னு சப்பு கொட்டிண்டு இருந்த எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்.

சரி, நம்ம ஜீன்ஸை எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தானே துவைக்கிறோம்? வாஷிங்க் மெஷின் எல்லாம் இப்போ தேவைப்படாது!னு நினைத்த எனக்கு " பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!னு கதறாத குறையாய் எந்த கம்பெனிகாரன் மலிவு விலையில் மெஷினும் தந்து துவைத்து போட கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?னு ஒரு வாரமாய் என்கொயரி செய்ததில் மூன்று தேறியது (சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்).
ஒரு மாலை இளவெயில் நேரம், தங்கமணியையும் கூட்டிக்கொண்டு நாலு கடை ஏறி இறங்கி சேல்ஸ்மேன் கையில் துண்டு போட்டு பேரம் பேசி, இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்!னு கடைக்காரான் கத்தியதில் கடைசியாக ஒன்னை வீட்டுக்கு தள்ளிண்டு வந்தாச்சு (இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ)

அடுத்த நாள் டெமோ காட்ட ஆள் வருவான்! சன் மியூஸிக்குல ஹேமா சின்ஹாவ பாத்து ஊத்திண்டு இருக்காம ஒழுங்கா கவனிச்சு வைங்கோ!னு அம்மணி டோஸ் விட்டவுடன் எனக்கு டக்குனு ஏனோ சீமாச்சு மாமா தான் நினைவுக்கு வந்தார்.

"இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை.
முதலில் நீ கத்துக்கோ! அடுத்த மாசம் நான் தேறிடுவேன்!னு இப்போதைக்கு வண்டி ஓடுகிறது. (இந்த போஸ்ட் பப்ளிஷ் ஆனதும் அதுக்கும் ஆப்பு - இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வெச்சுக்றது சொல்றாங்களா?)

நமது பிளாகர் யூனியனிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து தான் இந்த வாஷிங்க் மெஷின் வாங்கப்பட்டுள்ளது! அதுக்காக நீங்க பெங்களூர் வரும் போது உங்க டிரஸ் எல்லாம் கழட்டி தந்து என்னை துவைத்து தர சொல்லப்படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!)
இந்த அரிய பணியில் புயல் போல சுழன்று, இடி போல முழக்கமிட்டு, சூறாவளியாய், வசூல் செய்த நமது ஜி3 அக்காவுக்கு என் உளமார்ந்த நன்றிகள் கோடி.
ஜி3 யக்கா, நீங்க மட்டும் பெங்களூர் வாங்க, உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)
(உங்க ரேஞ்சுக்கு பில்லு பரணி தாங்குவான், நம்மால முடியாதுக்கா!)

இதை திறம்பட ஒருங்கிணைத்த டாக்டர் டிடி அக்காவுக்கு மிக்க நன்றி ஹை!

பி.கு: விரைவில் எதிர்பாருங்கள் கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா! - உங்கள் அபிமான பிரவுஸர்களில் - உலகமெங்கும்...

Thursday, June 14, 2007

மொய்

பொதுவாக கல்யாணங்களில் மக்கள் எந்த அளவுக்கு சாப்பாடு பத்தி பேசுவார்களோ( நான் ஜி3 அக்காவ ஒன்னும் சொல்லலை) அதே அளவு முக்கியத்துவத்தை மொய் எழுதுவதிலும் (ஹிஹி வசூலிப்பதிலும் தான்) காட்டுவர்.

குழந்தைக்கு (அட நான் இல்ல பா) காது குத்துவதிலிருந்து, பூப்புனித நீராட்டு, பரிசமிடுவது, முறை மாமன் சீர், கல்யாணம் என தமிழர்களின் வாழ்வில் மொய் என்பது பின்னி பிணைந்து விட்ட ஒரு விஷயமாகி விட்டது.
அன்பை வெளிகாட்ட ஒரு வழியாக இருந்த இந்த மொய், இப்போழுது பலருக்கு கவுரவப் பிரச்சனையாகி அடிதடி வரை கூட சென்று விடுகிறது.

"சோறு சாப்ட கோவிந்தசாமி எழுதும் மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்ய்"னு எங்க ஊர்களில் குழாய் மை செட்டில் ஒருவர் முழக்கமிட்டால் தான் அவரது சாதி சனங்கள் மத்தியில் அவருக்கு பெருமை.

பெரிய குடம், அரிசி அண்டா, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு, என பொருளாகவும் இந்த மொய் வசூலாகும்.
பின்னர் காலம் மாற, மாற அண்டா-குண்டா எல்லாம் சுவர் கடிகாரம், டின்னர் செட், கண்ணாடி-பீங்கான் செட், மிக்ஸி, கிரைண்டர் என புதிய அவதாரம் எடுத்தது.
இதில் மாப்பிளை பேரில் வரும் மொய் தனி, பெண் பேரில் வருவது தனிதனியாக பிரித்து குடுக்கப்படும். கல்யாணம் எல்லாம் முடிந்து, மணமக்கள் இருவரும் ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு இந்த கிப்ட் வகையறாக்களை பிரித்து பார்த்து தம் பெயரில் வந்த கிப்ட் பத்தி ஒருவருகொருவர் நக்கல் விட்டு கொள்வது பொதுவாக நடக்கும் விஷயம்.

ரங்கு: ( நக்கலாக) உன் அருமை பெரியம்மா என்ன இப்படி 10 கண்ணாடி கிண்ணமா பிரசண்ட் பண்ணி இருக்கா? நான் என்ன அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?

தங்கமணி: (பதிலுக்கு நக்கலாக) உங்காத்துல மட்டும் என்ன வாழுதாம்? உங்க அருமை அத்தை பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?

ரங்கு: (சமாளிப்புடன்) சரி, குழந்தைகள் எண்ணை பட்சணம் போட்டு வெச்சுகட்டுமேனு ஆசையா குடுத்ருக்கா. எவ்ளோ வெயிட்டா இருக்கு பாரு! இத மாதிரி தூக்கு உங்காத்துல பாத்ருக்கவே மாட்டா.

தங்கமணி: நன்னா சமாளிக்காதீங்கோ! ஈஈஈனு இளிச்சுண்டு வந்தாளே உங்க பாம்பே மாமி, வெறும் ஃபொக்கேவோட தானே கை வீசிண்டு வந்தா ரிஷப்ஷனுக்கு. அதுவும் ஊமத்தம் பூ வெச்சு ஒரு ஃபொக்கே, இந்த ஊருலயே உங்காத்து காராளுக்கு தான் கிடைக்கும்.

ரங்கு: (ரோஷத்துடன்), இதோ பாரு, நானும் பேசுவேன் அப்புறம்! சாயந்தரம் ஜானுவாசத்துக்கு கடலேண்ணைல ஒரு பஜ்ஜி போட்ருந்தேளே, யப்பா சாமி! சாப்ட அவனவனுக்கு கார்க் புடுங்கிருச்சு தெரியுமா? உங்க சித்திக்கு கூட நாலு வாட்டி போச்சாம்.

தங்கமணி: சரி, சன் பிளவர் ஆயில் காலியாயிடுச்சுனு ஒரு சேஞ்சுக்கு அதுல போட்டோம். அந்த பஜ்ஜிய கூட விட்டு வைக்காம ஒரே ஆளா 15 பஜ்ஜி சாப்டாரே உங்க கல்கத்தா சித்தப்பா அவருக்கு எத்தனை தடவ போச்சு?னு நான் சொல்லவா? மண்டபமே நாறி போச்சு.
இதுல கொத்தமல்லி சட்னி இல்லையா?னு மனுஷனுக்கு ரொம்ப குறை வேற.

ரங்கு: டிஸன்சியே இல்லை உங்காத்து காராளுக்கு.

தங்கமணி: டிஸன்சி பத்தி ரொம்ப பேச வேண்டாம். லைட் மியூசிக் காரா பாடின "அப்படி போடு! போடு! பாட்டுக்கு வேட்டி அவுந்தது கூட தெரியாம உங்க மாதுங்கா மாமா ஆடின ஆட்டம் தான் அன்னிக்கு டாக் ஃஆப் தி டவுனாம். சன் டிவியில பிளாஷ் நியூஸ்ல போடாத குறை தான்.

ரங்கு: (சமாதான தொனியுடன்) சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி!

தங்கமணி: ( நக்கலாக) எங்காத்துல எல்லாம் ஃலிப்ட் தான்.

ரங்கு: (பாவமான முகத்துடன்) ரொம்ப டயர்ட்டா இருக்கு. உங்க டெல்லி அத்தை ஆசையா பிரசண்ட் பண்ண சரக்கடிக்கற கண்ணாடி கோப்பைல அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன். உங்க அத்திம்பேருக்கு அதேல்லாம் உண்டா?

தங்கமணி: இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

Monday, June 04, 2007

வந்தேன்! வந்தேன்!

வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!னு சொன்னவங்க வாயில நெய்யோட முந்திரிபருப்பு போட்டு இளம் சூடான கேசரிய தான் போடனும்.

பெங்களுர்-மதுரை-சென்னை-திருநெல்வேலி-கேரளா - மறுபடி தமிழ் நாடு - பெங்களுர்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!

16 நாளில் 3500 கி.மீட்டர்கள் 3 மாநிலங்கள். லட்சகணக்கான நமது கட்சி தொண்டர்களின் ஆரவார வரவேற்பு.(ஒரு விளம்பரம்தேங்க்!)

இதோ உங்கள் அம்பி வந்து விட்டான். ஒரு 16 நாள் பிளாக் படிக்காதது, சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.
ஒரு வழியா இன்னிக்கு நானும் தங்கமணியும் ஆபிஸுக்கு கிளம்பியாச்சு. அம்மணி ஆபிஸ் பஸ் தான் முதலில் வரும். காலைல அரக்க பரக்க 5.30 க்கு எழுந்து, தங்கமணிய ரெடி பண்ணி, எந்த எடத்துல பஸ் வரும்?னு விசாரிச்சு, ஸ்டாபுல கொண்டு போய் விட்டு, பஸ் வர வரைக்கும் ரோட்டுல பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற) வீடு வந்து சேர்ந்தா காலை மணி எட்டு.


சரி, நாமளும் ஒரு வழியா ஆபிஸுக்கு கிளம்பற நேரத்துல டிவில நச்சுனு ஒரு பாட்டு!


"போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமால் இருப்பாய்!

சரியென்று சரியென்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்!"

உடனே நாமளும் ஒரு ரொமாண்டிக் மூடுல, வீட்டுல சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம்னு டிரை பண்ணினா,"டாய் அம்பி! ஒழுங்க மரியாதையா இன்னிக்கு ஆபிஸ் வந்து சேரு! ஆணி இல்ல, கடப்பாரையே சேர்ந்து போச்சு!" வேற என்ன, டேமேஜர் கிட்ட இருந்து போன்.

சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே!

என்ன கொடுமை இது சிங்கம்லே ACE? (வேற பெயர் இன்னும் மாத்தலையா?)
எழுத நிறைய விஷயங்கள் இருக்கு, என் கல்யாண கலாட்டாக்கள், கேரள டிரிப்னு ஒவ்வோன்னா வரும். (பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?).

எனக்கு நேரிலும், கைபேசியிலும், இமெயிலிலும், பதிவுகள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த, ஹிஹி, மொய் எழுதிய, இன்னும் Belated மொய் எழுத துடிக்கும்,(விட மாட்டோம் இல்ல) அனைத்து அன்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி ஹை!

இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :)

Wednesday, May 09, 2007

வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

தனது எட்டாம் ஆண்டு திருமண நாளை மே 13 அன்று கொண்டாட இருக்கும் 'வடையேழு வள்ளல்' டுபுக்கு அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

இதோ அதோ!னு தீர்ப்பு சொல்ற நாளும் வந்தாச்சு.

சற்று பின்னோக்கி பார்க்கிறேன்!

ஆஹா! கேரள திருச்சூர் விளக்கு டாப் டக்கர்! :)

சே! சற்று காலத்தால் பின்னோக்கி பார்க்கிறேன்.

விளையாட்டு போக்குல பிளாக் ஆரம்பிச்சு, அடிச்சு பிடிச்சு தமிழில் மட்டுமே எழுதி, உங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர்(?) வாங்கி, 68 பதிவு போட்டு, டகால்டி பண்ணி, தங்கமணிய பிக்கப் பண்ணி, 95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.

ஆமா! இது என்னோட 95வது பதிவு.

100 அடிச்சுட்டு கிளம்பலாம்!னு தான் பார்த்தேன். முடியலை. சரி விடுங்க, ஞாயிறுக்கும் திங்களுக்கும்(சாரி 'பில்லு' பரணி) தூரம் இல்லை.

தெரிஞ்சவங்க, பழகியவங்க, கூட வேலை பார்த்தவங்கனு எல்லாருக்கும் பத்திரிகை அனுப்பியாச்சு. நம்ம யூனியன் மக்களை டிடி அக்கா வாயிலாக வரவேற்றாச்சு.

சென்னையில வெய்யில் பட்டய கிளப்பும்!னு குகிலிள் தெரிந்து கொண்ட எங்கள் ஆபிஸ் ரசகுல்லா கூட்டம், "பாப் ரே! அம்பி நீ இங்க வந்தபிறகு உன்னை உங்க வீட்டுக்கே வந்து வாழ்த்தறோம்!னு சொல்லிட்டாங்க.

வேணாம் சாமி! நீங்க வந்துட்டு கும்மி அடிச்சுட்டு போனா தங்கமணி, "ஓதலாவா! நாக்கு எந்தா தைரியமு? சம்பிஸ்தானு! நேனு சந்ரமுகி!" னு அதட்டல் விடுவாங்க! ஆரம்பமே அல்லோலப்படும்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் நல்லா சாப்பிடவும், சைட் அடிக்க மட்டுமே கல்யாணங்களுக்கு போனதால், இப்ப தீடிர்னு என் கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு. கொடி, உனக்கும் அப்படி தான் இருந்ததா? :p

பொதுவா சொந்த பந்தங்களில் கல்யாணம்னு வந்துட்டா, அதுவும் நல்லா சம்மர் லீவுல வந்தா எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

இதையே சாக்கா வெச்சு ரங்கு தலைல மிளகாய் அரைச்சு, பட்டு புடவை வாங்கும் நம்ம டிடி அக்கா மாதிரி தங்கமணிகளாகட்டும்,
"ஆஹா! கல்யாணத்துல ஏதேனும் பிக்கப் ஆகுமா?"னு யோசிக்கும் நம்ம கோப்ஸ் மாதிரி பாசக்கார தம்பிகளாகட்டும்,
"காலை டிபன்லேந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்!"னு சப்பு கொட்டும் ஜி3 அக்காகளாகட்டும்,
எனக்கு ரிவர்ஸிபிள் பட்டு புடவை வாங்கி தந்தா தான் கல்யாணத்துக்கு வருவேன்!னு அடம் பிடிக்கும் கீதா பாட்டிகளாகட்டும்,
இனிமேலாவது அம்பிக்கு நல்ல புத்தி வரனும்!னு நல்லதையே நினைக்கும் TRC சார் மாதிரி இனிமையான அங்கிள்களாகட்டும்,
குழந்தைய (நான் தான்) ஒன்னும் சொல்லாதீங்கோ!னு எனக்கு சப்போர்ட் பண்ணும் TRC சாரின் தங்கமணி உமா மேடங்களாகட்டும்,எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவது திருமணங்கள்.

தங்கள் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி கொள்ள, "நான் யார் தெரியுமா?" மாப்பிள்ளைக்கு ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு!
கல்யாண பெண்ணை ஸ்கூலில் கொண்டு போய் விட்ட பெரியம்மா நான் தான்!னு மார் தட்டி கொள்ள திருமணங்கள் அல்வா மாதிரி.

"எங்க ராஜு கல்யாணத்துல, எங்க குக் வெச்சுருந்த பாசந்தி இருக்கே!"னு நீட்டி முழக்க கல்யாணங்கள் நல்ல சான்ஸ். கொஞ்சம் தள்ளி பார்த்தா, ராஜுவுக்கே தோனி மாதிரி உசரமா ஒரு புள்ளையாண்டன் சைட் அடிச்சுண்டு இருப்பான்.

"இந்த நெக்லஸ் புதுசா இருக்கே! லலிதாவா?"
இல்லை, பிரின்ஸ்!னு பீத்தி கொள்ள இது ஒரு சாக்கு.

இது போதாதுனு யார் முக்கியத்துவம் பெற்றவர்கள்? யாருக்கு மரியாதை?னு ரெஸ்லிங்க் கிரவுண்ட் போல பல பரீட்ச்சை நடக்கும் களமாகவும் திருமணங்கள் அமைவதுண்டு.

மாப்பிள்ளை வீட்டார் ஆளுங்கட்சி போலவும், பொண்ணு வீட்டார் மைனாரிட்டி எதிர்கட்சி போலவும் ஒரு வித பய உணர்வுடன், எச்சரிக்கையுடனே ஒருவரை ஒருவர் அணுகுவர்.

"காப்பி சாப்டேளா அண்ணா? டிபன் சாப்டேளா அண்ணா?"னு விசாரிக்க மட்டும் பெண்ணின் ரெண்டு அத்திம்பேர்கள் ஆன் டூட்டியில் இருப்பார்கள்.

எல்லாம் திருப்தி தானே? ஒன்னும் குறை இல்லையே?னு காவிரி மன்ற நடுவர்கள் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்டு அந்த கொட்டை மரமாகி வளர்ந்த க்ரூப் ஒன்னு வலம் வரும்.
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும். எங்களுக்கு சாம்பாரே வரலைடா!னு இன்னோரு க்ரூப் கோதாவுல குதிக்கும்.

இதையெல்லாம் மீறிக்கூட திருமணங்கள் மகிழ்ச்சியை தருவது தான் ஆச்சர்யம் கலந்த உண்மை! (அட! சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரி இருக்கே!)

இப்ப கொஞ்சம் நிலைமை மாறி இருக்குனு தான் சொல்லனும்.

எது மாறுதோ இல்லையோ எனக்கு ரெண்டே ரெண்டு விஷயத்துல டவுட்டாவே இருக்கு.

1) கன்னா பின்னானு டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?

ஸ்ஸ்ப்பா! அத கட்டிட்டு, "அவுராம இருக்கனுமே முருகா!"னு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு தவிக்கறது இருக்கே!

2) கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)

உங்கள் நல்லாசியுடன், பேராதரவுடன் இன்னொரு புதிய துவக்கம். குடுத்த வாக்குறுதிகளை(யாருப்பா அது அல்வா!னு படிக்கறது?) காப்பாத்தனும்.

இதோ, இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :)

Friday, May 04, 2007

மொக்கை டேக்

மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது?) ஃமை பிரண்ட் ஒரு மொக்கை டேக் எழுத சொல்லி இந்தா அந்தா!னு போக்கு காட்டி ஒரு மாசம் ஆச்சு.

அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)

நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?

மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.

ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!

சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.

காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!

ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.

வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.

(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.

சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.

அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)

Monday, April 30, 2007

மைசூரை சுத்தி பாக்க போனேன்!

கடந்த ஈஸ்டர் விடுமுறையில் நம்ம டாக்டர் டிடி அக்காவின் குடும்பத்தோடு மைசூர் சுத்தி பாக்க போனோம். பெங்களூரிலிருந்து 3.5 மணி நேரத்தில் மைசூரை அடைந்து விடலாம், நடுவில் இருக்கும் மாண்டியா என்ற மாவட்டத்தில் ஏதும் ரோடு மறியல், பந்த் நடக்காமல் இருந்தால். ஏனெனில் நமது கன்னட கண்மணிகள் சும்மா டீ குடிப்பது போல இந்த ஏரியாவில் பந்த் நடத்துவார்கள்.

மைசூர் போகிற வழியில் ஸ்ரீரங்க பட்னம் என்ற அழகிய புதுமையும் பழமையும் கலந்த ஊர் உள்ளது. தமிழகத்தில் தஞ்சை வழியாக காவிரி ஸ்ரீரங்கத்து எம்பெருமாளின் காலை வருடிக் கொண்டு போவது போல இந்த ஊர் வழியாக தவழும் காவிரி இங்கு கோவில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியை தொட்டுக்கொண்டு செல்கிறது.


பெருமாள் அதே சயன கோலம் தான். வாக்காக கால் அமுக்கி விட தாயார் இருக்கும் போது தூக்கம் வராமலயா இருக்கும்? எனவே நமது வேண்டுதல்களை எல்லாம் தாயாரிடமே சொல்வது நலம். (சரி, உலா வரும் ஒளி கதிர் மாதிரி போகுது போஸ்ட்! அய்யே வேதா! நான் உங்கள சொல்லலை).

ஸ்ரீரங்க பட்னம் எம்பெருமாளின் கருட வாகனம் - பெரிய திருவடி (Air Force One )


இந்த கோவிலில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கட்டிட கலை. (எவன்டா அவன்! புளியோதரை தானே?னு நக்கல் விடறது?). விஜய நகரத்து அமைப்பையும், முகலாயர்களின் சாயலும் நன்றாக தெரிந்தது. திப்பு சுல்தான் கூட மானியம், நகைகள் எல்லாம் வாரி வழங்கியதாக கல்வெட்டுக்கள் சொல்கிறது. வசூல் செய்வதில் பெருமாள் பலே கில்லாடி ஆச்சே! கோவில் கொஞ்சம் பராமரிக்கபடலாம். ஆனாலும் ரொம்ப மோசமாக இல்லை.




கோவில் வாயிலில் கணிணி தவிர எல்லாத்தையும் போட்டு விற்கிறார்கள். தாராளமாக பேரம் பேசலாம். வழக்கம் போல "அம்மா! தாயே! கைல இருக்கும் செல்போனையாவது தர்மம் பண்ணுங்க!" போன்ற தொல்லையும் உண்டு. குதிரை எல்லாம் சவாரிக்கு உள்ளது.

இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!



ஹைதர் அலி ஏறிய குதிரையின் கொள்ளு பேத்தி குதிரை தான் இது!னு குதிரைகாரன் அள்ளி விட வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது ஒரு மார்வாடி குடும்பம்.


இந்த ஊர் வருவதற்க்கு முன்னாலேயே திப்பு சுல்தானின் கோட்டை, சமாதி எல்லாம் உள்ளது.


மதியம் லஞ்சை நல்ல ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. மைசூர் அரண்மனை பார்க்க கிளம்பினோம்.


இதற்க்கு முந்தைய அரண்மனை தீக்கிரையானதால் கிட்டத்தட்ட சுமார் 14 வருடங்களாக கடின உழைப்போடு 1897ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கான செலவு அந்த காலத்திலேயே 40 லட்சம் ரூபாய்.


கன்னட, சாளுக்ய, விஜய நகர, மொகலாய, ஆங்கிலேய கட்டிட கலைகளின் ஒரு கூட்டு கலவையாய் திகழ்கிறது இந்த அரண்மனை. திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண ஓவியமென்ன, பளபளக்கும் தரைகள் என்ன, மார்பிள்கள், கிரானைட்டுகள், பெல்ஜியம் கண்ணாடிகள், கலர்கலரான லஸ்தர், சாண்டில்யர் விளக்குகள், சந்தன/பர்மா/தேக்கில்/யானை தந்தத்தில் கதவுகள் என பார்க்கும் இடமெல்லாம் கலையும் செல்வ செழிப்பும் வழிந்தோடுகின்றன.






பல ஓவியங்கள் ரவிவர்மா தீட்டியது. அரண்மனை ஊர்வலங்கள், யானை மேல் அம்பாரி வைத்து ராஜா, ராணி, அவர்களின் ஜால்ராக்கள் ஊர்வலம், சாமுண்டி தேவியின் திருவீதி உலா, ராஜாவின் தர்பார் காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.


"ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக, விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் பராக்! பராக்!என நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.

கீழே விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் மற்றும் அவரது தம்பி உடையார்!

(சரி, சரி, துப்பறத்துக்கு தான் கமண்ட் செக்க்ஷன் இருக்கே! இப்பவே ஆரம்பிச்சா எப்படி?)


நானும் டிடி அக்காவின் ரங்கமணியும்! :)





அரண்மனை உள்ளே காமிரா கொண்டு செல்ல அனுமதி நஹி. ஆனால் காமிரா மொபைல் கொண்டு போகலாம். என்ன கொடுமை I'm not ACE? :)



உள்ளேயே ஒரு மியூசியம் உள்ளது. பெரிசா ஒன்னும் இல்லை. ராஜா சாபிட்ட தட்டு, சரக்கு அடித்த கண்ணாடி கோப்பைகள், உபயோகித்த வாள், வேல், உடுத்திய சிலுக்கு ஜிப்பாக்கள், பயணித்த பல்லக்கு, காலணிகள், அடித்து கொண்ட செண்டு, இத்யாதி.
ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.

ராஜாவின் பட்டு மேலங்கியை "ராஜா கா கோமணம் ஹை!"னு ஒரு கைடு சில சப்பாத்திகளிடம் அள்ளி விட்டு கொண்டிருந்தான். அரண்மனையின் முக்யமான இடமான அந்தபுரம் எங்கே?னு நைசா தேடி பார்த்தேன். விவரமா பூட்டி வெச்ருக்காங்க.

என்ன தான் கலை, ஓவியம்!னு நாம பாராட்டினாலும், ஒரு தனி மனிதனுக்கா இவ்வளவும்?னு சாமனிய மக்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை தவிர்க்க முடியலை.
இவ்ளோ சிறப்பு பெற்று இருந்தாலும், இந்த ராஜ பரம்பரைக்கு ஒரு சாபம் உள்ளதே! இதை பற்றி நமது டிடி அக்கா வூட்டுல போயி பாத்துக்கோங்க. :)

அரண்மனை மாலை 6 மணிக்கு பூட்டி விடுவார்கள். நாங்கள் அங்கேயே ரொம்ப நேரம் செலவிட்டதால் சாமுண்டி ஹில்ஸ் போக முடியலை. வரும் வழியில் நெடுஞ்சாலையில் உள்ள காமத் ஓட்டலில் இரவு டிபனை அமுக்கினோம். மசால் தோசை சூப்பர்.

அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))

Friday, April 27, 2007

நரசிம்ம ஜெயந்தி

எங்கேடா உன் ஹரி? ஹிரண்ய கசிபுவின் குரல் அந்த பரந்த மண்டபத்தில் இடி போல எதிரொலித்தது.

அந்த குரலில் தான் எத்தனை ஆணவம், இறுமாப்பு கோபம்!
பின்ன இருக்காதா? மூவுலகிலும் தேவரால், அசுரர்களால், மனிதர்களால், யக்ஷர்களால், கிங்கரர்களால், பஞ்ச பூதங்களால், எந்த வகை ஆயுதங்களால், அஸ்த்ர சஸ்த்ரங்களால், காலை-மதியம்-இரவு வேளைகளில் தனக்கு இறப்பு வர கூடாது! என வரம் வாங்கிய புத்திசாலி அரக்கன் அல்லவா?
அப்பா! என்னுடைய ஹரி எங்கும் இருக்கிறான். இந்த தூணிலும் உள்ளான், அந்த துரும்பிலும் உள்ளான். என் மனதிலும் உள்ளான், தேடுங்கள் உங்கள் மனதிலும் வந்து அமருவான்!
- ஆணவத்திற்க்கு அடக்கம் பதிலளித்தது பிரஹலாதன் என்று தன்னை சொல்லிக் கொண்டு.

இந்த தூணில் இருக்கானாடா உன் ஹரி? அரக்கனுக்கு சந்தேகம்!

இன்னுமா உங்களுக்கு சந்தேகம் தந்தையே?

இதோ தொலைத்து விடுகிறேன் உன் ஹரியை! - தனது கதாயுததால் ஓங்கி அடித்தான் அந்த தூணை.
பக்தருக்கு தன் மோஹன புன்னைகையாலே அருள் பாலிக்கும் அந்த ஹரி எங்கே?

"ஹே! ஆதிமூலமே! அனாதரக்க்ஷகா! ஆபத்பாந்தவா!" என கதறிய கஜேந்ர யானையின் குரலுக்கு பதறியடித்து கொண்டு கருடாழ்வார் மேல் வந்தால் நேரமாகும்! என மனோ வேகத்தில் வந்த அந்த ஹரி எங்கே?

அண்டம் கிடுகிடுக்க, அலைகள் ஆர்பரிக்க, அடித்த தூண் இரண்டாக பிளக்க, இடியோசையுடன், மின்னலென்ன கோடி சூரிய பிரகாசத்துடன், எரிமலையென சீறி, ஆஜானுபாகுவாய், சிங்க முகமும் மனித உடலுடன் கோர பற்களும் கூரிய நகங்களுமாய்,பயங்கரமாக கர்ஜனை புரிந்து கொண்டு ரெள்த்ரமாக வெளி வரும் இந்த நரசிம்ஹனா அந்த ஹரி?
என்ன செய்வது? அரக்கன் வாங்கிய வரத்தை உடைக்க வேண்டுமே? மிருகமும் இல்லை, மனிதனும் இல்லை, கையில் எந்த அஸ்த்ரமும் இல்லை, வந்த பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை) வேளை தான்.
அரக்கனுக்கு ஒரு நொடி நேரம் கூட குடுக்க வில்லை நரசிங்கம். காட்டாறு போல பாய்ந்து, அலேக்காக தலைக்கு மேல் தூக்கி விடுவிடுவென வீடும் இல்லை, வெளியிலும் இல்லாத மனையின் வாயிற்படியில் சாவகாசமாக அமர்ந்து, அந்த சுதர்சன சக்ரமே கூரிய நகங்களாய் வர, அரக்கனின் வயிற்றை கிழித்து குடலை உருவி மாலயாய் அணிந்து செங்குருதி முகத்தில் தெளிக்க அந்த தாயாரும் அருகில் வர அச்சப்பட்டு தள்ளி நிற்க பக்தனான பிரகலாதனுக்கு மட்டும் கருணை கடலாக காட்சி அளிக்கிறான் என் நரசிங்கம்! அவன் ஒரு உக்ர சிங்கம்.
ஏப்ரல் 30 - நரசிம்ம ஜெயந்தி!
ஹே சிம்ம பிரபு! இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே!
எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன். ஒரு முறை வந்து விடு, இந்த பூமியின் பாரத்தை குறைத்து விடு!"

Wednesday, April 25, 2007

ஏர்போர்ட்

சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை.

"இச்வாகு குலத்தில் பிறந்த நான் என் மனைவியை பிரிந்தேனே!"னு ஷ்ரிராமர் அரற்றுவதை கம்பர் அழகாக பாடி இருப்பார்.

கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்.

"நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.

தலைவனை பிரிந்ததால் உடல் மெலிந்து, அதனால் தனது கை வளையல்கள் கழன்று விட்டதாக ஒரு தலைவி தனது தோழியிம் சொல்வதாக அக நானூறில் பாடலாக வரும்.

"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.

"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.

"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?

"முதல்வனே! என்னை கண் பாராய்!
முத்த நிவாரணம் எனக்கில்லையா?னு அர்ஜுன் மாமாவை நினைத்து கிராபிக்ஸ் உதவியுடன் மனிஷா மாமி உருகியதை நம்மல் மறக்க முடியுமா?

சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?

தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது.

ஒரு வித எதிர்பார்ப்பு, பரபரப்பு, மகிழ்ச்சி, பதட்டம் னு கலவையாய் இருந்தது என் மனம். நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.

அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்.

நான் ஏர்போர்ட் அடைந்த நேரத்தில் நம்ம பிளைட் வந்து விட்டது. செக்கிங்க் முடிந்து வர நேரமாகும் என்று தெரிந்தது.

"காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.

முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.

வரிசையாக பயணியர் வந்து கொண்டே இருந்தனர். பல முகங்களில் எதிர்பார்ப்பு, உறவினர்/ நண்பர்களை எதிர்பார்த்து அலைபாயும் கண்கள், மகிழ்ச்சியில் விரியும் முகங்கள், சில விம்மல்கள், பெருமூச்சுக்கள்.

வெள்ளைகார அம்மணி, குரங்கு குட்டியை சுமப்பது போல தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர.

என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
இதோ! அதோனு ஒரு வழியா தங்கமணி வந்து சேர்ந்தாங்க. வெளியே வந்ததும் தயாரா இருந்த ஃபொக்கேவை குடுத்தேன். (படத்துல வர மாதிரி முட்டி போட்டு எல்லாம் ஒன்னும் குடுக்கலை.)
இருவர் கண்ணும் மகிழ்ச்சியில் ஒரு கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.

அவங்க அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு உம்மா எல்லாம் குடுத்து மீனம்பாக்கத்துல ஒரே பாச மழை தான். அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க.
என்ன கொடுமை ACE?(ஹிஹி, உன் பேரு சரவணன் தானே?) :)

Friday, April 20, 2007

என்ன அழகு, எத்தனை அழகு!

எங்க ஊருகாரர் இலவச கொத்தனார் ஆரம்பிச்சு வெச்சாலும் வெச்சார், இதோ நம்மையும் மதிச்சு கார்த்தியும், சுமதி அக்காவும் எழுத சொல்லிட்டாங்க.
1)பெண்மை:
பெண்மையின் எல்லா பரிமாணங்களும் அழகு தான். மாம்பழ கலரில் அரக்கு பார்டர் போட்டு அழகான பட்டு பாவாடை கட்டி, சின்ன கொண்டையில் 100 முல்லை பூ சூடி, காலில் அத்தை போட்ட கொலுசுடன் தத்தி தாவி, நடை பழகி வரும் பெண் குழந்தையாகட்டும், கஸ்தூரி மான் போல துள்ளி வரும் மங்கையாகட்டும்(மீரா ஜாஸ்மின்?), மெலிதாக மேடிட்ட வயதுடன் பூரிப்பாக வரும் தாய்மையாகட்டும்,
"பார்கர்ஸ் பெஞ்சில் அமர உனக்கு ஆசை, எனக்கு தெரியும்!" என தனது சோர்வான ரங்குவுக்கு ஹார்லிக்ஸ் குடுக்கும் அந்த குடும்ப தலைவியாகட்டும்( நம்ம SKM அக்கா?) நரை கூடி, முதுமை அடைந்து தனது அனுபவங்களால் தனது பேரன்/பேத்திகளை கண்ணின் மணி போல காக்கும் பாட்டியாகட்டும்(எலேய் கொடி, அது கீதா மேடம் தான் சந்தேகமே வேண்டாம்!) எல்லாமே அழகு தான்.
அடக்கம், கம்பீரம், தெளிவு, இவை மூன்றும் இருந்தால் அதுவே அழகு. பெண்மையிடத்தில் அது மூன்றும் உள்ளது. ஆனால் பல சமயங்களில் தன்னை அது உணர்ந்து கொள்வதில்லை.
- இப்படியேல்லாம் நான் எழுதினாலும் "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா அம்பி!னு தான் கும்மி அடிக்க போறீங்க. ஆனது ஆயி போச்சு,
இதோ இதையும் சொல்லிடறேன். அடுத்த கேபின்ல காக்ரா சோளியில் (சாயந்தரம் ரிஷப்ஷனாம்) உக்காந்து இருக்கும் ரசகுல்லா அழகா? இல்ல சைடு கேபின்ல திருச்சூர் விளக்கு மாதிரி நச்னு வெண்பட்டுல வந்ருக்கற மல்லு பிகர் அழகா?னு ஒரே குழப்பமா இருக்கு.

நாட்டாமை, போட்டோ அனுப்பினா கொஞ்சம் தீர்ப்பு சொல்ல முடியுமா?

2)சுந்தரன் - சொல்லின் செல்வன்:

உருவத்தில் மட்டும் அழகு இருந்து என்ன பயன்? சொல்லும், செயலும் அழகாக இருக்க வேண்டுமே!
"கண்டேன் கற்பின் கனலை"னு உலகின் முதல் தந்தி/SMS சொல்லி அந்த ஷ்ரிராமனுக்கே மகிழ்ச்சியை தந்த அனுமன் தான் அழகு. அதனால தான் சுந்தர காண்டம்!னு பெயர் வந்தது.

நங்கநல்லூர் அனுமனை தங்கமணியுடன் போயி தரிசித்து வந்தேன். என்ன கம்பீரம், பிரமாண்டம், ஆகிருதி, அதே சமயம் துளியும் ஆணவம் இல்லாத கை கூப்பிய அந்த பவ்யம்! அனுமந்தா! நீ தான்யா என்னிக்கும் தல!

3) ரயில் வண்டி:

நான் ரொம்பப சின்ன குழந்தையா இருக்கும் போதே(Profile போட்டோ பாருங்க) "கூகூகூகூ குச் குச் குச்"னு புகை விட்டுன்டு போற ரயிலை பார்த்தா தான் சாப்பிட போவேன். அதுவும் எங்க வீட்டுலேருந்து பார்த்தாலே இந்த அழகான வயலுக்கு நடுவே ஓடற அந்த பாசஞ்சர் ரயில் ரொம்பவே என்னை ஈர்த்தது.
என் அப்பா: பெரியவனா ஆயி என்ன வேலை பாக்க போற?
குழந்தை அம்பி: அதோ போறதே அந்த ரயிலுக்கு கரி அள்ளி போடற வேலைக்கு போவேன்! (பெருமிதத்துடன்)
இத கேட்டதும் எங்க அப்பா முகம் போன போக்க பாக்கனுமே! :)
4) நதிகரைகள்:
ஜல ராசியில் பிறந்ததாலோ என்னவோ நீர் நிலைகளை கண்டு விட்டால் எனக்கு உற்சாகம் கரை புரண்டோடும். துவட்டி கொள்ள துண்டு இல்லாவிட்டாலும் அப்படியே தண்ணீரில் குதித்த நாட்களும் உண்டு. இந்த கோடையில் கூட குறைவில்லாமல் ஓடும் எங்கள் தாமிரபரணி நதியில் நண்பர்களுடன் தொட்டு பிடித்து விளையாடிய அந்த நாளும் வந்திடாதோ?
5)ஆத்துல இறங்கும் அழகர்:
மதுரைக்காரங்க எல்லோருக்கும் அழகர் ஆத்துல இறங்கற விழா ரொம்ப பிடிக்கும். தக தகனு தங்க குதிரை மேல சும்மா கம்பீரமா ஒரு கையில் சாட்டையுடன் மறு கையில் அபய முத்திரையுடன், மக்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகர் வைகை ஆத்துல இறங்குவார் பாருங்க! மதுரைக்கு அழகர் அழகா? அழகரால் மதுரை அழகா?னு எண்ண தோணும்.
6) என் தங்கமணியின் மாசில்லா அன்பு:
எத சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்?
இந்த அமெரிக்கவுல தீடிர்னு எல்லா கடிகாரத்தையும் திருப்பி வெச்சுடானுங்க. நான் காலையிலேயே இந்த பெங்க்ளூர் டிராபிக்ல அடிச்சு பிடிச்சு எங்க ஆபிஸ் பையன் கூட்டி பெருக்கற டைமுக்கு வந்தாலும் எனக்காக இரவு 11- 12 மணி வரைக்கும் முழிச்சு இருந்து என் குரலை கேட்ட பிறகு தான் தினமும் தூங்குவாங்க. இதுல இந்த ஸ்கைப்புல(skype) கனெக்ஷன் சரியா கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அவங்க இடத்துல நெட் கனெக்ஷன் புடிங்கிக்கும்.
ஸ்ப்ப்பா! இவ்ளோ தொல்லை இருந்தலும் என் மேல அன்பை பொழியற தங்கமணியின் மாசில்லா உள்ளம் தான் எனக்கு பிடிச்ச அழகு. நான் போன ஜென்மத்துல கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேனோ?
யப்பா! முடிச்சாசு ஒரு வழியா.
இதை தொடர்ந்து,
என்னை கவர்ந்த ஏழரை நாட்டு சனி!
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
நவகிரகங்கள் ஒன்பது!
பிளாக் உலக சூப்பர் டென்!னு யாராவது ஒரு புதிய டேக் ஆரம்பிச்சுடாதீங்க பா! கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.
போற போக்குல யார இழுத்து விடலாம்?
1) மலேசியாவுல மையம் கொன்டுள்ள நமது புயல் மை பிரண்ட்
2) அருமை அண்ணன் டுபுக்கு
3) வாழ்வளித்த தெய்வம் வேதா பிராட்டியார்

Wednesday, April 18, 2007

அக்ஷ்ய திருதி

நமக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சே கிடையாது. போன வருஷம் அக்ஷ்ய திருதிக்கு என்ன பதிவு போட்டேனோ அதே தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எழுதி காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

ஏப்ரல் 20 2007 - அக்க்ஷ்ய திருதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய திருதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் நடக்கும். தங்கம் உபயோகம் இருக்கும். இதை இதை பயன்படுத்தி, அக்க்ஷ்ய திருதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"

மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 880 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான்.

இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).

8) இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
மல்லிகைப் பூவும் வெள்ளை நிறம் தான்.
"பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய திருதியை லலிதா, GRT, பிரின்ஸ், Fathima ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.
வாங்கிண்டு வாங்கனா வாங்கிண்டு வாங்களேன்!னு தங்கமணிகள் அதட்டலுக்கு பயந்து வாங்கிண்டு வரத்துக்கு இது ஒன்னும் இதயம் நல்லெண்னை இல்லை. எதாவது டகால்டி பண்ணி நிலைமையை சமாளிக்க பாருங்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கோ-ஆப்டெக்ஸில் 20% தள்ளுபடியில் தலைல போட்டுக்க துண்டு.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியான்தத்தின் தவபுதல்வனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் தவபுதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்னியன்: நாம் ஆங்கில புத்தாண்டுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு குடுப்பதில்லையோ?னு நிறைய தடவை தோன்றி இருக்கு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை கூட "ஹேப்பி டமில் நியூ இயர்"னு சொல்லும் வெள்ளைக்கார துரைகளும் இங்கு உண்டு.

அம்பி: சரி விடுங்கோ! நூறு வருஷத்துக்கு மேல துரை தானே நம்மள ஆண்டான். எல்லாத்தையும் அந்த பெருமாள் பாத்துண்டு தான் இருக்கார். எல்லோருக்கும் நன்னா குடுப்பார்.

ரெமோ: " நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.

அன்னியன்: மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!

அம்பி: பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா?

ரெமோ: ஹே கமான் பேபி! வாட்ஸ் ராங்க் இன் இட்?

அன்னியன்: தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!

என்ன மக்களே! நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), இல்ல அன்னியன் பேச்சா?

எல்லோருக்கும் இனிய என் உள்ளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் துவங்குகிறது.
ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம். அதனால் உங்க கடை பக்கம் வர முடியாது! மாப்பு-மன்னிப்பு!

பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. அவை மீண்டும் சந்தித்த போது பேச முடியலையே?னு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்ருக்கேன்.

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)

Wednesday, April 11, 2007

மனிதம் வளர்ப்போம் வாருங்கள்!

அருணின் H1B visa பற்றிய பதிவை படித்ததும் எனக்குள் ஒரு யோசனை. இதை மாதிரி எத்தனை உருப்படியான தகவல்களை நாம் பறிமாறி கொள்ளலாம்? ஒரு இமெயில் ஐடி கூட இல்லையே?னு சிறிது வருத்தமாக இருந்தது.
இதை பற்றி டிடி அக்காவிடம் வழக்கம் போல OC சாம்பார் வாங்கும் போது பேசியதில் எங்கள் இருவருக்கும் தோன்றியது தான் இந்த ஐடியா.

1) உங்கள் நிஜபெயர், இமெயில் ஐடி, பார்க்கும் வேலை, கம்பெனி போன்ற தகவல்களை இந்த mailto:blog_union@yahoo.com ஐடிக்கு அனுப்பி விடுங்கள். ஒரு தகவல் வங்கியாக செயல்படும்.

2) உங்கள் சித்தி பையனோ, அத்தை பெண்ணோ(ஹிஹி) கல்லூரி இறுதியில் பிராஜக்ட்/வேலை தேடலாம். என்னுடைய அல்லது வேறு சிலரின் கம்பனியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் இல்லையா? தகவல்களை பறிமாறி கொள்வோமே? ஷுவை தொலைக்காமலேயே பிராஜக்ட் கிடைக்கட்டுமே! என்ன சரி தானே கார்த்தி? :)

3) உங்கள் பெற்றோர் இங்கு இந்தியாவில் இருக்கலாம். அவர்களுக்கு அவசரமாக ஏதவது ஒரு செய்தி அனுப்ப இருந்து, உடனே அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்தியாவில் உள்ள சக பிளாக்கர்கள் உதவுவார்களே!
அதுக்காக "எங்க அம்மாவோட ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு அடுத்த வாரம் US வராங்க. அவர்களிடம் 4 கட்டு பிந்து அப்பளம் வாங்கி அனுப்பவும்"னு மொக்கை தகவல் எல்லாம் அனுப்ப கூடாது, இப்பவே சொல்லிட்டேன் ஆமா! :)

4) எந்த சக ப்ளாகராவது இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யனும். ஓட்டல் பில்லை கட்ட இருக்கவே இருக்கார் நம்ம பில்லு பரணி.
30 நாளில் தெலுங்கு கற்பது எப்படி? புக் எங்க கிடைக்கும்னு "காதல் யானை" ப்ரியா கூகிளில் தேட வேண்டாம். எமன்டி! பே ஏரியாவுல எல்லாரும் பாகுன்னாரா? :)

5) முடிந்தால் வருடத்துக்கு ஒரு முறை பிளாகர் மாநாடு நடத்துவோம். சமோசா சப்ளை பண்ண இருக்கவே இருக்கார் நம்ம TRC சார். (எலேய் கொடி, அந்த தடவையும், என் சமோசவ நைஸா நீ அமுக்கிடாத, இப்பவே சொல்லிட்டேன்)
TRC சாரின் வீட்டுக்கு போனா என்ன ஆகும்?னு நான் சொல்லி தான் தெரியனுமா?

முதலில் இந்த ஜோதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஐக்கியமாக அழைப்பு.

முடிந்தால் வீட்டு அட்ரஸும் தெரிவிக்கவும். அப்ப தான் ஆட்டோ, சுமோ அனுப்ப எங்களுக்கு வசதியா இருக்கும்.

தகவல்தொடர்புதுறை அமைச்சகம் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது! என்பதை இந்த தருணத்தில் எதிர்கட்சிகளுக்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனக்கு தெரிஞ்ச சில பேரின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளேன். இதில் யாருக்கு விருப்பமோ அவர்கள் மாத்திரம் அனுப்பினால் போதுமானது.
வேறு ஏதாவது உதவி செய்யலாம்னு உங்களுக்கு பட்டா அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1) Syam
2) Veda
3) Karthikeyen muthurajan
4) Priya (Priyamana Neram)
5) Ms.C
6) Arunkumar
7) Dreamz
8) Bharani
9) G3 akka
10) Porkodi
11) G-Z
12) Raji
13) Sachin Gops
14) Ramya
15) ACE
16) Sumathi
17) Mani Prakash
18) TRC Sir
19) Geetha Madam
20) Padma Priya
21) Padma
22) Ravishankar Kannabiran
23) SKM
24) my friend
25) kk
26) k4k
27) Usha shankar
28) Devi
29) Kavitha
30) BSK
31) Maduriampathi
32)Mgnithi
33)Nagai siva
34)marutham
35) Ponnarasi kodhandaraman
36) Kutichuvaru
37) Harish
38) Golmaal-gopal

இதே விஷயத்தை பற்றி டிடி அக்கா எழுதிய பதிவு இங்கே பாருங்கள்.
உங்கள் தகவல்களின் ரகசியங்கள் காப்பற்றப்படும்.. அம்பியை நம்பினோர் கை விடபடார். வேணும்னா என் தங்கமணியை கேட்டு பாருங்கள் :)
வாய்பேச்சோடு இல்லாமல் கொஞ்சம் காரியத்திலும் இறங்குவோம். என்ன சொல்றீங்க..?

Friday, April 06, 2007

லூஸாப்பா நீயி?

ஐந்து வியர்டு விஷயங்கள் ஒழுங்கா எழுதிடு!னு நம்ம டாக்டர் டிடி அக்கா அன்பு கட்டளை போட்டுட்டாங்க.
ஏற்கனவே நான்
கடவுள் பாதி மிருகம் பாதி!னு எழுதியாச்சு!னு அழுது பார்த்தேன். தினமும் இரவு தரும் சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.
ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )

இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க.
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு!"னு சும்மாவா சொல்லி இருக்கா.
சரி, ரெண்டாம் தடவை எழுதிடறேன்!னு சொல்லியாச்சு.

1) ஜயண்ட் வீல்: சின்ன வயசிலிருந்தே இந்த பொருட்காட்சில இருக்கற ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி. நான் எம்சிஏ படிகறச்ச இப்படி தான் ஒரு தடவை நண்பர்களுடன் போய் வசமா மாட்டினேன்.
ஜயண்ட் வீலை பாத்தவுடனே, பக்கி மாதிரி எல்லோரும் போயி உக்காச்சுண்டு, எனக்கும் டிக்கட் எடுத்து வலய விரிச்சாங்க.
ஹ! இதெல்லாம் ஜுஜுபி, என் ரேஞ்சே வேற!னு எல்லாம் நைசா சமாளிச்சு பாத்தும் நடக்கலை. தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி. அந்த வீல் ஜிவ்வுனு மேலே மேலே எழும்பியதும் வைரமுத்து சொன்ன வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது எனக்கு. நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.
தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

2) சோப்பு: சின்ன வயசுல சோப்பு!னா எனக்கு உயிர். வாசனையே வெச்சே அது என்ன சோப்பு?னு கரக்ட்டா சொல்லிடுவேன். இதோட முடிஞ்சா பரவாயில்ல. அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
எங்க அம்மா அன்பா சொல்லி பார்த்தாங்க, முதுகுல நாலு போட்டு பார்த்தாங்க, ஒன்னும் நடக்கலை. அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம். இப்ப வெறும்ன வாசனை பிடிக்கறதோட சரி.

3) மிமிக்கிரி: எல்லா குரலையும் மிமிக்ரி பண்றது கஷ்டம். ஆனா சில பெக்யூலியரானவங்க குரல், அவங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் மாடுலேஷன் எல்லாம் கவனமா நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).
எனது முந்தைய கமபனியின் பெரிய்ய தலை ஒருத்தர், பிறப்பால் இந்தியர், ஆனால் படிச்சது எல்லாம் லன்டன். தொர இங்க்லீஸ், அதே Accent பொளந்து கட்டுவார். ஒரு தடவை ஆபிஸ்லேருந்து பார்ட்டி போனப்ப, அவர மாதிரியே என் டீம் கிட்ட நான் பேசி காட்ட, உடனே ஒரு ரசகுல்லா அவர்கிட்டேயே போயி சொல்ல, அவரும் ரொம்ப ஆர்வமா என்ன பேச சொல்ல, ஒரு நிமிஷம் எனக்கு உள்ள போன கோபி மஞ்சூரியன் எல்லாம் வேளியே வந்து விட்டது. அப்புறம் பேசி காட்டினேன்.
தொரைக்கு ரொம்ப சந்தோஷம். கட்டி பிடிச்சுண்டார். இதே நம்ம ஊரு பெரிய தலயா இருந்தா அப்ரைஸலுல ஆப்பு தான்!

4) மருதாணி கைல வெச்சுக்க பிடிக்காது. என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது.ஆனா வெச்சதுக்கு அப்புறமா வர டிஸைன பார்க்க பிடிக்கும். இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.

5) ஸ்டெப்புடு: நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாபிலிருந்து வீட்டுக்கு போயி சேர நேத்திக்கு 500 அடிகள் எடுத்தேன். இன்னிக்கு எவ்வளவு?னு எல்லாம் யோசிப்பேன். இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?

டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு? சரி யாரையாவது மாட்டி விடலாம்!னு முடிவு பண்ணி
1)மெஹந்தி புகழ் பத்மப்ரியா
2) என்னை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா!னு பாசமாக அழைக்கும் பத்மா ( நான் என்ன அறிஞர் அண்ணாவா?)
டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா! (அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க! -விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

Wednesday, April 04, 2007

காட்டுக்குயில்-கருகுமணிமாலை!



டிஸ்கி: இந்த கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.

ஒரு ஊர்ல ஷ்யாம்!னு ஒரு வெட்டி இருந்தான். சாரி, விறகு வெட்டி இருந்தான்.
ஒரு நாள் வழக்கம் போல தன் தங்கமணிய கூட்டிண்டு காட்டுக்கு விறகு வெட்ட போனான்.
போனானா, நடு வழில ஒரு ஆறு(திரிஷா நடிச்ச படம் இல்லை)வந்ததாம். "ஏனுங்க, இன்னிக்காவது நீங்க குளிக்க கூடாதா?"னு தங்கமணி கேக்க, "அட! நான் பல்லே தேச்சது கிடையாது, குளிக்க எல்லாம் சொல்றீங்களே எஜமான்?"னு ஷ்யாம் பம்மினான்.
சரி, எப்படியோ போங்க!னு சொல்லிட்டு தங்கமணி முகத்த கழுவ ஆத்துல இறங்கினாங்களாம். நம்ப ஆளு எவ்ளோ பாசம் வெச்சு இருக்கர்ரு?னு டெஸ்ட் பண்ண சும்மா ஆத்துல முங்கினாப்ல முங்கி, "அய்யோ! தண்ணி இழுக்குது, கை குடுங்க!னு கத்தினாங்களாம்.
நம்ப ஆளு பழக்க தோஷத்துல F1 F1னு கத்தினானாம். அப்ப அழகா ஒரு தேவதை (குகிள் தேவதை!னு வெச்சுப்போம்)டொயிங்குனு ஷ்யாம் முன்னாடி வந்து, என்ன வேணும்? ஏன் F1 F1னு கத்தற?னு கேட்க, நம்ப பயலும் விவரம் சொல்லி இருக்கான்.
சரினுட்டு, குகிள் தேவதையும் தண்ணில முங்கி தங்கமணிய வெளிய கொண்டு வந்தாங்களாம்.
அட! அப்ப தான் தெரியுது, அந்த தேவதை கொண்டு வந்தது நமீதாவ!
இது தானே உன்னோட தங்கமணி?னு கேட்க ஷ்யாம் பயலும் தேன் குடிச்ச நரியாட்டும், "ஆமா! ஆமா! இது தான் என்னோட தங்கமணி!"னு குதிச்சானாம்!
தேவதை கோபமா ஒரு லுக்கு விட்டுட்டு, அட பாவி! போன தடவை கோடரிய தண்ணில போட்டுடுட்டு F1 F1னு கத்தின. அப்ப கூட நான் காட்டின தங்க, வெள்ளி கோடரி எல்லாம் என்னோடுதில்லை!னு ஒழுங்கா தானே பதில் சொன்ன. இப்ப நமீதாவ பாத்தவுடனே இப்புடி ஊத்தறியே டா?

அப்பவும் இந்த பூனையும் பகார்டி அடிக்குமா?ங்கற ரேஞ்சுக்கு முகத்த வெச்சுண்டு "நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட்டு தான்! இது என் தங்கமணி இல்ல தான்! ஆனா பாருங்க, நான் உண்மைய சொன்னா அடுத்து நீங்க பாந்தமா பாவனாவ காட்டுவீங்க! (அய்யே! பரணி இது கதை தான் பா! அளுவாத, உன் டாவு உனக்கு தான்!) நான் அதுவும் இல்லை!னு சொன்னவுடனே நச்சுனு நயன் தாரவ காட்டுவீங்க. கடைசில என் தங்கமணிய காட்டுவீங்க. நானும், ஆமா! ஆமா!னு தலையாட்டினேன்!னு வைங்க, உடனே ஆஹா!
நீ தான்டா மனுஷன்!
தங்கமணிக்கேத்த புருஷன்!னு சொல்லிட்டு மூனு பேரையும் என்கிட்ட தந்ருவீங்க. ஒரு தங்கமணிட்டயே அடி வாங்க முடியலை. மாசம் ஒரு பூரி கட்டை உடையுது. போண்டா எல்லாம் போட வேண்டி இருக்கு. இதுல மூனு பேருனா? தாங்காது மா என் உடம்பு! அதான் வாங்கற அடிய நமீதா கையால வாங்கலாமேனு ஹிஹி ஒரு நப்பாசை!னு சீன் விட்டானாம் ஷ்யாம்.



உடனே தேவதையும், உன்னைய திருத்தவே முடியாது!னு சொல்லி மறைஞ்சு போக, இவ்வளவையும் தண்ணில தம் கட்டி கேட்டுட்டு இருந்த உண்மையான தங்கமணி கோபத்தோட டாய்!னு கிராபிக்ஸ் இல்லாத இராம நாராயணன் படத்து அம்மன் மாதிரி வெளியே வர, அப்புறம் என்ன ஷ்யாம் பயலுக்கு ஷ்டார்ட் மிஜீக் தான்!

எப்பிடி இருக்கு கதை?

எல்லாம் சரி, அது என்னடா இந்த கதைக்கு இப்படி ஒரு டைட்டில்?னு தானே நீங்க கேக்கறீங்க.

பச்சைக்கிளி-முத்துச்சரம்!னு அந்த கதைக்கு அவங்க டைட்டில் வைக்கலாம்! காட்டுக்குயில்-கருகுமணிமாலை!னு இந்த கதைக்கு நான் டைட்டில் வைக்கப்படாதா?

Friday, March 30, 2007

சிருங்கேரி - II

Part - I
2000 வருடங்கள் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கம். இதையும் சேர்த்து ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பரமேஷ்வரனால் ஆதி சங்கரருக்கு வழங்கப்பட்டு பாரததின் ஐந்து இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஐந்து லிங்கங்களுக்கும் கடந்த 2000 வருடங்களாக (ஒரு நாள் கூட தவறியதில்லை)மூன்று கால அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளது என்பது சிறப்பு.


2) நாங்கள் சென்ற தினத்தன்று லக்க்ஷ தீபம் ஏற்றி இருந்தார்கள். காண கண் கோடி வேண்டும்.
3) அதி காலை நேர துங்கா நதிக்கரை.


4) இங்குள்ள வித்யா சங்கரர் கோவில் சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அழகான லக்ஷ்மி நரசிம்ஹரை பாருங்கள்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டான்!"
(நரசிம்மரை பார்த்ததாலோ என்னவோ என் முகத்திலும் சிறிது உக்ரம்!)

5) இரவு நேரத்தில் சாரதா கோவிலின் வாசலில் அழகான ரங்கோலி. சிகப்பு கலரில் இருப்பது நல்ல தாழம்பூ மணக்கும் குங்குமம் (பத்திரிகை இல்லை)


6) ஞான ஸ்வரூபிணியாய், வாக்வினியாய், கலைவாணியாய், அருளமுதை அள்ளி தரும் வாகீஸ்வரியாய் அன்னை சாரதாம்பாள் கொலுவிருக்கும் கோவில்.
7) மற்றுமொரு அழகான வயல்வெளி

பி.கு: அம்பி ஸ்டைலில் ஒரு கதை காட்டுக்குயில்-கருகுமணிமாலை முன்பதிவுக்கு முந்துங்கள்!

Thursday, March 29, 2007

சிருங்கேரி

போன முறை சிருங்கேரிக்கு பயணம் செய்த போதே முடிவு செய்து விட்டேன் - கண்டிப்பாக இந்த இயற்கையோடு இணைந்து இரண்டு நாளாவது வாழ வேண்டும்.
அதன் பின், கடந்த நவம்பரில் ஒரு சனி மஹாபிரதோஷம் வந்தது. அந்த புண்ணீய நாளில் 2000 வருடம் பழமை வாய்ந்த சந்ர மவுலீஸ்வர லிங்கத்தை தரிசனம் செய்தால் பிளாக்கில் நிறைய கமண்ட் விழும் என்பது ஐதீகம்!னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க?
நானும் உடன்பிறப்பும் கிளம்பி விட்டோம். போன முறை சென்ற போது சிருங்கேரியின் அழகை வர்ணிக்க முயன்று இருந்தேன்.
இந்த தடவை எல்லாமே படம் பார்த்து கதை சொல்ற டெக்னிக் தான்!
1) மேற்க்கு தொடர்ச்சி மலையின் வனப்பில் அழகான வயல் வெளிகள்....
2) ஆரவாரமில்லாமல் அழகாக ஓடி வரும் துங்கா நதி
3) கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். எல்லோரும் கண்ணத்துல போட்டுகோங்கோ!
4) சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வருகையில் மயில்கள் ஆடின, குயில்கள் கூவின!னு நான் சொன்னா நம்பவா போறேள்?
வேணும்னா இப்படி வெச்சுக்கலாம்:
மயில்கள் ஆடும் போது, குயில்கள் கூவும் போது சைலஷ்ரி அம்பியானந்தா சுவாமிகள் நடந்து வந்தார்.

5) நானும் உடன்பிறப்பும்.
அம்பியானந்த சுவாமிகள் கண்ணில் வழியும் அந்த கருணையை பாருங்கள்.
மீதி படங்கள் அடுத்த பதிவில்...

Tuesday, March 27, 2007

ராமன் எத்தனை ராமனடி


தந்தையே, என்னுடைய பாவத்தில் பங்கு ஏற்பீர்களா? பரிதாபமாக கேட்டான் அந்த வேடன்.

குழந்தாய்! குறிப்பிட்ட வயது வரை உன்னை வளர்பது எங்கள் கடமை. நீ பெரியவன் ஆனதும், எங்களை பரிபாலிப்பது உன்னுடைய கடமை. உன் சுக துக்கங்களில் பங்கு ஏற்போமே தவிர பாவத்தில் எப்படியப்பா நாங்கள் பங்கு ஏற்க முடியும்..? இது தந்தை.

நேரே அவனது தங்கமணியிடம் வந்து, "ப்ரியே! நீயாவது என் பாவத்தில் பங்கு கொள்வாயா?" நல்லா இருக்கே கதை! நீங்க சம்பாதித்து தந்தால் நான் செலவழிப்பேன், செலவழித்தது போக முடிந்தால் எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பேன்! பாவத்தில் எப்படி பங்கு கொள்ள இயலும்? - இது அவனது தங்கமணி.
அவனது குழந்தைகளும் இதே பதிலை தந்ததால் ஏமாற்றத்துடன் நாரதரிடம் வந்தான் வேடன்.

என் சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் அறிந்து கொண்டேன். புண்ணிய நதிகளில் நீராடியதில்லை, கைலை யாத்திரையும் போனதில்லை. செய்த பாவத்தை போக்க வழி சொல்லுங்கள் பெரியவரே!

வேடனே கேள்! எந்த நாமத்தை சொன்னால் எல்லோருக்கும் சந்தோஷத்தை தருமோ, எந்த நாமத்தை சொன்னால் சம்சாரம் என்ற சாகரத்தை எளிதாக கடக்க முடியுமோ, எந்த நாமத்தை பரமேஷ்வரனே பார்வதிக்கு உபதேசித்தானோ அந்த நாமத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கவனமாக கேள்!
அய்யா! கோவிலுக்கும் போனதில்லை, கையெடுத்து கும்மிட்டதில்லை. மந்திரமும் நான் அறியேன்! என்ன செய்வது?

சரி, இது தான் மரா மரம். இந்த மரத்தின் பெயரை விடாது சொல்லி வா! உனக்கு முக்தி கிடைக்கும் - நாரதர் சென்று விட்டார்.

வேடன் துவங்கி விட்டான்

மரா மரம்

மரா மரம்

மராமரம்

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

நாட்கள் வாரங்களாகி, மாதங்கள் வருடங்களாய் உருண்டது. வேடன் வால்மீகி முனிவராய் ஞானம் பெற்று ராமாயண இதிகாசத்தை இயற்ற முடிந்தது.
இன்று(27/3/2007) ஷ்ரி ராம நவமி.
ஒரு சொல்!
ஒரு வில்!
ஒரு இல்!
தந்தையின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டவனாம், ஒரே வில்லில் பகைவரை அழித்தவனாம், ஒரே இல்லாளுடன் வாழ்ந்தவனாம், தன்னுடைய பக்தர்களுக்கு கோசல ராமனாக, தசரத ராமனாக, சீதாராமனாக, அயோத்தி ராமனாக, ராஜாராமனாக, ஜானகி ராமனாக, ரகுராமனாக, ரங்கராமனாக(!) அருள் பாலிக்கும் அந்த ஷ்ரிராமனின் நாமாவை ஒரு முறையேனும் சொல்வோமாக!
பக்தி பதிவானதால், எல்லோருக்கும் கண்டிப்பாக வடை, சுண்டல், பானகம் உண்டு.

பி.கு: இந்த பதிவை படிக்கும் எல்லா வானரங்களுக்கும் அந்த ராமன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்! :)
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

Friday, March 23, 2007

பார்த்த முதல் நாளே! - II


Part-I


என் முறைப்பை புரிந்து கொண்ட TRC சார், "சரி! பொண்ண வர சொல்லுங்கோ!னு சிக்னல் குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக! மற்றும் நம் உறவினரேல்லாம் வந்ருகாக! வாம்மா! மின்னல்!னு ஒன்னும் டயலாக் அடிக்கலை. அம்மணியும் மின்னல் மாதிரி சரட்டுனு எல்லாம் ஒன்னும் வரலை.

மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
என் போஸ்ட் படிச்சதும் உடனே அம்மணி பிளாக் என்ன கலர்?னு கிளிக் பண்ணி பாக்கற வேலை எல்லாம் வேண்டாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
வந்து பெரியவங்களுக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணினாங்க.
"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"

(சரி, சரி, இதேல்லாம் கண்டுக்கப்படாது!)
எல்லாரும் ஒரு வழியா அவங்க அவங்க இடத்துல செட்டில் ஆனதுக்கு அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!
கேசரி நன்னா இருந்தது. போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?

சரி, மறப்போம்! மன்னிப்போம்!

அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்.
டீயா? காப்பியா?னு தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.
இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!

இதுக்கு தான், சைட் அடித்து கொண்டே உண்ணேல்!னு அவ்வையார் சொல்லி இருக்காங்க.
அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.

தங்கமணி பரத நாட்டிய டான்ஸர்! அதுக்காக நடு ஹால்ல சலங்கைய கட்டிண்டு, ரா! ரா! சரசுக்கு ரா! ரா!னு ஆட சொல்ல முடியுமா?
எங்க அப்பாவுக்கு பாட்டுனா உயிர். காலையில 4 மணிக்கு எழுந்து சாதகம் எல்லாம் நடக்கும். அதுவும் முருகன் பாட்டுனா அவ்ளோ இஷ்டம். அதுனால ஏற்கனவே தங்கமணிய ஏதவது முருகன் பாட்டு நாலு வரி பிராக்டிஸ் பண்ணி வை!னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டாலும் எனக்கு ஒரே பயம்!
மேடம், "பழம் நீயப்பா! தமிழியான பழம் நீயப்பா!னு பாடிட்டா என்ன பண்றது? நல்ல வேளை! அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?

ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

எல்லோரும் கேசரிய முழுங்கறதுலயே கவனமா இருந்தாங்களே தவிர, அடே! பொண்ணு கூட தனியா பேசறீங்களா(கடலை போடறீங்களா) அம்பி?னு யாருக்கும் தோணலை.
இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...

அப்ப தான் ஒரு வழியா தாய் மாமா திருவாய் மலர்ந்தார், "பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"

என் வயத்துல ஆரோக்யா பால வார்த்தீங்க மாமா!னு தடால்!னு எழுந்துட்டேன்.
TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை. கைய கால வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டான். எதுக்கும், நீயும் அவன் கூட போயிட்டு வா!னு என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.
மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.
ம்ம், ம்ம், அப்புறம்?னு எல்லோரும் சப்பு கொட்ட வேண்டாம்.

வெறும்ன பேசிட்டு வெளியே வந்தோம்.(வர வெச்சுட்டாங்க).
எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
ஊருக்கு போயி லெட்டர் போடரோம்!னு அல்வா குடுக்கலை. உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)

Friday, March 16, 2007

பார்த்த முதல் நாளே!

பெண் பாக்கற அந்த நிமிடம் வரை தங்கமணியை நேர்ல பாக்கலை, போட்டோல பாத்தது தான். அதுனால சம்ப்ரதாயபடி பொண்ணு பாக்க வாங்க!னு அழைப்பு வந்ததும், நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம். எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.

என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!
(டொயிங்க்! டொயிங்க்!)"
னு அம்மணி போன்ல பாடினதுனால சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே ஜிலேபி தேசத்துல புதுசா வாங்கியாச்சு! அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?) வாங்கிட்டான்.

காலையில அம்மா கூட GRT ல ஷாப்பிங்க் எல்லாம் போயிட்டு சாயந்தரம் பொண்ணு பார்க்க TRC சாரோட கிளம்பினோம்.
(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)

சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.

அவங்க வீட்டுகுள்ள போனா,

ஆஹா! தங்கமணி பெரிம்மா, பெரியப்பா, அவங்க பசங்க, மாமா, மாமி, அவங்க பசங்க, சித்தி, சித்தப்பா!னு சுத்தி கும்மி அடிக்க ரெடியா இருந்தாங்க.
மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.
அவங்களும் அம்மணி, நல்லவள், வல்லவள்! நாலும் தெரிஞ்சவள்!னு சொன்னாங்க. பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.

இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.

அப்புறம், செல்லாது! செல்லாது!னு தீர்ப்பு சொல்லிட்டா என்ன பண்றது?
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.

மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)