Friday, April 13, 2007

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்னியன்: நாம் ஆங்கில புத்தாண்டுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு குடுப்பதில்லையோ?னு நிறைய தடவை தோன்றி இருக்கு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை கூட "ஹேப்பி டமில் நியூ இயர்"னு சொல்லும் வெள்ளைக்கார துரைகளும் இங்கு உண்டு.

அம்பி: சரி விடுங்கோ! நூறு வருஷத்துக்கு மேல துரை தானே நம்மள ஆண்டான். எல்லாத்தையும் அந்த பெருமாள் பாத்துண்டு தான் இருக்கார். எல்லோருக்கும் நன்னா குடுப்பார்.

ரெமோ: " நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.

அன்னியன்: மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!

அம்பி: பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா?

ரெமோ: ஹே கமான் பேபி! வாட்ஸ் ராங்க் இன் இட்?

அன்னியன்: தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!

என்ன மக்களே! நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), இல்ல அன்னியன் பேச்சா?

எல்லோருக்கும் இனிய என் உள்ளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த தமிழ் புத்தாண்டு எனக்கு ரொம்ப எதிர்பார்ப்புடன் துவங்குகிறது.
ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம். அதனால் உங்க கடை பக்கம் வர முடியாது! மாப்பு-மன்னிப்பு!

பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. அவை மீண்டும் சந்தித்த போது பேச முடியலையே?னு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்ருக்கேன்.

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)

48 comments:

ambi said...

ஹிஹி, இன்னிக்கு நான் தான் பஷ்ட்டு!
எல்லா கேசரியும் எனக்கு தான்!

KK said...

Post'a innum padikala aana Ungalukkum unga kudumbathaarkum, namma blog ulaga makkalkum yen inniya puthaandu vaazhthukal :)

Anonymous said...

me 2nd! :)

-porkodi

KK said...

hahahha!! Porkodi naan than 2nd :D

Anonymous said...

poi vaa ambi! poi vaa!! ;-)

-porkodi

Anonymous said...

illa ambi naat counted kk!

-porkodi

Anonymous said...

adhu thavira neenga unga kadaila naan busy so vara mattenu potrundhinga! adhunala idhuvum selladhu selladhu :D

-porkodi

KK said...

Sellum sellum...Appo naan than first'a???
Chickaango cheeyaango... kuala lampur kovil patti poitu vanthene...(Celebration paatu) :D

Bharani said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்திக்கள் அம்பி :)

Priya said...

சென்று வென்று வாருங்கள் அம்பி..

Priya said...

உங்களுக்கும், உங்கள் தங்கமணிக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மு.கார்த்திகேயன் said...

போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன்.

மு.கார்த்திகேயன் said...

ரெண்டு நாளைக்கு சென்னைப் பக்கம் ஒரே டூயட் பாட்டாத் தான் இருக்கப் போகுது

அம்பி, நீ கலக்கு ராசா

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பா அம்பி!

தங்கமணிக்கும் சொல்லிடு அம்பி

mgnithi said...

//உங்களுக்கும், உங்கள் தங்கமணிக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

oppicela Tamila type panna mudiyathu so cut copy paste..

Happy tamil new year dude . he he...

mgnithi said...

//" நமீதாவின் தமிழ் புத்தாண்டு!னு சன்/கே டிவில ஒரு ப்ரொக்ராம் இருக்காம்.
//

//மாத்தனும்! எல்லாத்தையும் மாத்தனும்!
சாத்தனும்! எல்லாரையும் சாத்தனும்!
//
R.O.T.F.L

mgnithi said...

//தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது!
//
Anniyana vithyasama thandanai kudukanum sonnathe neenga thappa purinjikiteenganu ninaikkaren..

mgnithi said...

//ஆமா! தங்கமணி ஆணி பிடுங்கிட்டு தாய் நாட்டுக்கு வராங்க. அதனால சென்னைல தான் 4 நாளுக்கு எமது வாசம்//

T.R.C sir veetukku avaisyam poveenga thaane ;-)

Syam said...

//பெருமாளே! ரூல்ஸ நாமளே கைல எடுத்துக்கப்படாது! டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா//

ROTFL...க.க.க.போ :-)

Syam said...

உனக்கும் தங்கமனிக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

mgnithi said...

//போய் வா அம்பி!
போய் வா!னு வழியனுப்பி வைங்களேன். :)
//

Chennai maanagarukku amiyananda swamigal varugainu board paarthen...Vaanga ... vaanga..

Syam said...

//நீங்க யாரு சொன்னத கேப்பீங்க அம்பியா? ரேமோவா?(ஷ்யாம் கைய தூக்கறான் பாரு), //

பின்ன எதுக்காக தமிழ் நியூ இயர்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்ச...நாலு நடிகைக வந்து இங்கிலீசுல பேட்டி குடுக்கறத பாக்க தான் :-)

mgnithi said...

//ஹிஹி, இன்னிக்கு நான் தான் பஷ்ட்டு!
எல்லா கேசரியும் எனக்கு தான்! //

ithu enna pudhu technica irukku.. avanga avangale postla first comment pottu ellathayum saapidaratthu... ithu aniyayam.. akkiramam...

Naatamai .. neenga ithai konjam thatti ketka koodatha?

Arunkumar said...

சென்று வா தலைவா
வென்று வா :)

Arunkumar said...

போன போஸ்ட் பாத்தேன். டீடெய்ல்ஸ் அனுப்பி வைக்கிறேன் :)

Arunkumar said...

உங்களுக்கும், உங்கள் தங்கமணிக்கும் மற்றும் நம் உறவினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வேதா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்பி:)

golmaalgopal said...

ungalukkum unga thangamani'kkum tamizh putthaandu nalvaazhthukkal ambi... :)

sangam'laam aarambikkarenga...naa illaamaya...iddhooooooo vaaren... :)

k4karthik said...

இப்படி ட்ரிப்பில் ஆக்சேன் போட்டு காலாசிட்டீங்க... அம்பி, அன்னியன், ரெமோ னு யாரு வந்தா என்ன... இன்னும் நம்ம சிவாஜி வரலேயேப்பா....

k4karthik said...

//பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?னு ஒரே யோசனையா இருக்கு.
//

இம்புட்டு நாளா தங்கமணிட்ட கரடி விட்டது பத்தாதா..

கீதா சாம்பசிவம் said...

Ambi, vetkamaa illai? TRC Sir veetula 4 naal deraa poda? grrrrrrrrr :P

Sumathi said...

ஹாய் அம்பி,

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!!!

Sumathi said...

ஹாய்,

ஆமாம்..இத்தனை நாளா தங்கமணி பக்கத்துல இல்லைன்னு கரடி உட்டது போதாதா?

தி. ரா. ச.(T.R.C.) said...

ஐய்யோ அன்னியன் நம்ப வீட்டுக்குத்தான் வரப்போறானா !
ஆணடவா என்னைக் காப்பாத்து

Padmapriya said...

உங்களுக்கும்,தங்கமணிக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Padma said...

tamizh puthandu nalvazhuthukkal ambi anna..
i think now u should start parcelling the choclated manni has brought for u to us :D.. have fun..

மதுரையம்பதி said...

ஓகோ! மேட்டர் இப்படி போகுதா?, இது தெரியாம நான் DD மேடம் கிட்ட உங்களுக்கு ஓசில பாயசமும் குடுக்க ரெக்கமெண்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்...

என்சாய் !!!!

புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் தங்கமணிக்கும்...

ACE said...

//டாக்டர் ராமதாஸ், அவர் புள்ளையாண்டன் எல்லாம் எதுக்கு இருக்கா? பாவம்! அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா//

ROTFL.. :):)

ACE said...

//பரிசா கரடி பொம்மை குடுக்கலாமா? இல்ல மலிவா இருந்தா ஒரு கரடியே(சொம்பு அப்பா ஒன்னும் நான் சொல்லல) வாங்கி குடுக்கலாமா?//

LOL :) :)

ACE said...

//ஹிஹி, இன்னிக்கு நான் தான் பஷ்ட்டு!
எல்லா கேசரியும் எனக்கு தான்! //

இந்த மாதிரி உங்க பதிவுல நீங்களே கமென்ட் போட்டா, நாங்களாம் என்ன தான் பண்றது..

Mr அன்னியன்.. இந்த அம்பிய என்னனு கேளுங்க

smiley said...

தப்பு செஞ்சா தண்டனை!
தங்லீஷ்ல போஸ்ட் போடற எல்லாரும் இனிமே மாதம் ஒரு தடவையாவது தமிழ்ல போஸ்ட் போடனும். இல்லாடி நைட் அவங்க பெட்ல உச்சா போக கடவது

You will get this experience in a few months. ennada ithu thoongum pothu kanavil swim panrathu pol irukku enru? my son pissed in the night while sleeping.

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!" copy and paste :)

Dreamzz said...

அட்ரா அட்ரா! மீட் பன்ன போற சந்தோஷத்தில் இருக்கீங்க! ஜூப்பர்!

Dreamzz said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! ;)

Happy tamil new year :)

irandaiyum solli vaipom!

ராஜி said...

iniya tamil puthaandu vazhtthukkal Ambi..
Unga thangamanikkum sollidunga..

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் "

Enjoy maadi Ambi!!

SKM said...

neenga sollradhaalaeyae thanglish dhaan ezhudhuven.;)
Puthaandu vazhththukkal.

TRC sir Ippovae Arandu poittar.Adhunala yenakku Mail a sollra vishyathai Comments la pottutar.Ippdiya Bayamurutharadhu avarai ?Paavam.:D

மணி ப்ரகாஷ் said...

vaazthukkal ambi..

kalakkunga ambi...

ராஜி said...

@TRC
Sir kavalaipadadhael..Ambi unga kooda thunai iruppar;)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信