Wednesday, April 18, 2007

அக்ஷ்ய திருதி

நமக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சே கிடையாது. போன வருஷம் அக்ஷ்ய திருதிக்கு என்ன பதிவு போட்டேனோ அதே தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா எழுதி காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

ஏப்ரல் 20 2007 - அக்க்ஷ்ய திருதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய திருதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் நடக்கும். தங்கம் உபயோகம் இருக்கும். இதை இதை பயன்படுத்தி, அக்க்ஷ்ய திருதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"

மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 880 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான்.

இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).

8) இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
மல்லிகைப் பூவும் வெள்ளை நிறம் தான்.
"பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய திருதியை லலிதா, GRT, பிரின்ஸ், Fathima ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.
வாங்கிண்டு வாங்கனா வாங்கிண்டு வாங்களேன்!னு தங்கமணிகள் அதட்டலுக்கு பயந்து வாங்கிண்டு வரத்துக்கு இது ஒன்னும் இதயம் நல்லெண்னை இல்லை. எதாவது டகால்டி பண்ணி நிலைமையை சமாளிக்க பாருங்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கோ-ஆப்டெக்ஸில் 20% தள்ளுபடியில் தலைல போட்டுக்க துண்டு.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியான்தத்தின் தவபுதல்வனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் தவபுதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

55 comments:

dubukudisciple said...

ha me the pashtu

dubukudisciple said...

padivu padichachu
comments ellam appla vanthu podaren

Padmapriya said...

2nd!!!

Padmapriya said...

Sariyana post!!!
serious issues eh kamedia nallave sollirkeenga...
ana yaar keappa???
Punnagai thaan perisu .. pon nagai illenu sonna?!!??!!!
u know, my frnd Priya had given 80L dowry!!!

ambi said...

@DD, yekka, neenga postla damage panna vendaam, ethunaalum nerlaye sollunga.
adichalum pidichalum unga veetu saambaruku thaan varanum! :)

@padmapriya, atleast intha posta padikara oru 40 peravathu kepaanga illa? :)

//my frnd Priya had given 80L dowry//
ammmmmmmmmmmaaaaaaaaaaa! 80Laaaaaa?
maaplai vaanginaangala? illa oru companyaa? how many horns that maaplai has..? :p

Padmapriya said...

seri neenga enna manni ku vaangi kudukka poreenga?? gold eh platinum eh?? :)

Ms.Congeniality said...

seri vetti pechu edhuku naan ketta gold chain vaangineengala? :-p

வேதா said...

இதெல்லாம் ஒரு பொழப்பு:)
சரி ஏற்கனவே போட்ட பதிவுக்கெல்லாம் லைன் கட்டி கமெண்ட முடியாது போன முறை போட்ட கமெண்டையே காப்பி&பேஸ்ட் பண்ணிடுங்க:)

மு.கார்த்திகேயன் said...

/ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? //

இன்னும் நீ இதை விடலையா அம்பி..

Ms.C, கவனிக்கவும்.. பூரிக்கட்டை வேணும்னா மலேசியவுல இருந்து மை பிரண்ட் பிளைட் பிளைட்டா அனுப்புவாங்க

மு.கார்த்திகேயன் said...

//(முடிந்தால் காதிலும் தான்).//

நீ காதுல பூ வைக்கிற ஆளு தான் அம்பி..

மு.கார்த்திகேயன் said...

//ஏற்கனவே போட்ட பதிவுக்கெல்லாம் லைன் கட்டி கமெண்ட முடியாது போன முறை போட்ட கமெண்டையே காப்பி&பேஸ்ட் பண்ணிடுங்க//

ரிப்பீட்டே!

Dreamzz said...

அடடா! அப்பப்ப அமர்க்களமா ஒரு நல்ல விஷயம் சொல்லி கலக்கறீங்க தலை!

Dreamzz said...

//"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"//
நல்லா சொல்லுங்க! நம்மாளுகளுக்கு அறிவு வருதானு பாப்போம்!!

Dreamzz said...

///ஹிஹி, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை.
10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை! என்ன கார்த்தி புரிஞ்சதா? :)//

மாப்ள. இங்க தான் தப்பு பன்னிடீங்க!
அஸின் மாதிரி பிகர் கிடைக்கும் என்பது நம்பிக்கை!
அஸின் கிடைப்பா என்பதே மூட நம்பிக்கை தான்!
//10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை//
இது அதீத லூஸுத்தனம்! ;)

ஆமா.. இதுல கார்த்தி பேரு எதுக்கு வருது? கார்த்தி அண்ணாத்த என்ன மேட்டர்?

Dreamzz said...

15 போட்ட எனக்கு ஒரு கப் பாயாசம்!

தி. ரா. ச.(T.R.C.) said...

சிலபேருக்கு கலயாணம் ஆனா பைத்தியம் தெளியும். சிலபேருக்கு முத்தும்போல இருக்கு

Anonymous said...

Dear ambi,
Nalla than irundhadhu unga advice.

ana konjam overa poyi saayam veluthuduthu ambi.

eppadi theriyuma? Ippadi sonnaelae appo dhan..

பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).

Unga thangamanai enna solra parungo.Appo eppadi matha thangamani ellam poo matum vechupa? he he ehh he...

With Love,
Usha Sankar

தி. ரா. ச.(T.R.C.) said...

எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா


இதை யார் சொல்லரது.48 மணி நேரம் பனங்கல் பார்க்கிலேயே பழியா கிடந்தவர்

Anonymous said...

Hi,
The lady in this photograph is not dawood's daughter. She is some chennai business man's daughter. Media made a mistake in publilshing this photograph as dawood's daughter and then appologised for it.

Suresh R

Harish said...

"பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே"
Nalla pesareenga thalai....
aduta varusham inda neram neengalum GRT vaasalla Q la irupeenga :D

Priya said...

சரி, உங்க தங்கமணி உங்க லெக்சர கேட்டுட்டு நகை கேக்காம சும்மா விட்டுட்டாங்களா?

Priya said...

Seriously, மக்கள் craze அ பாத்து கோபம் தான் வருது.

SKM said...

yedhukku ithanai reasoning????
ozhunga Nagai vangi kodunga.Kalyanam munnadiyae Ivalo saakku sonna, appuram...???Paavam Ms.C.

SKM said...

@Ms.Congeniality :
//seri vetti pechu edhuku naan ketta gold chain vaangineengala? :-p //

Thats Right!Ammani yavadhu Theliva irukeenga.Thats good.
@தி. ரா. ச.(T.R.C.) :
//சிலபேருக்கு கலயாணம் ஆனா பைத்தியம் தெளியும். சிலபேருக்கு முத்தும்போல இருக்கு //

adhudhaanae! Neenga sonna sariyadhaan irukkum.:D

G3 said...

velli vizha commentu.. akshaya thrithiyaikku ungalukku dhaanamaaga vazhanga padugiradhu :P

golmaalgopal said...

ada naanum idhey dhaan sollitrundhen...akshaya thrithiye yaarukku nalladho illayo...kandippa goldsmiths'kkum nagai kadaigalukkum rommmmmmmmbbaaaa nalladhu...

**ippovaadha nambunga pa...gr8 minds think alike'nu...* seri dhaane ammmmbbiii :)

golmaalgopal said...

aamaa...y the build-up..anyway adutha varushatthilendhu indha time'la neengalum T.ngr la nagai kadaiya dhaan sutthindiruppenga..indha maadhiri samooga sindhanai post potta vittuduvaangala manni :)

*Ms.C note the point :)) *
*happa...innikku duty over..* :D

Anonymous said...

if your message reaches atleast half of our nagai crazy women,i"l be happy,but idhe maddhiri adutha varusham solvingla????????enna..kamu vera kapi vera....adhanga kalyanathuku mun and pin.

dubukudisciple said...

//yekka, neenga postla damage panna vendaam, ethunaalum nerlaye sollunga.
adichalum pidichalum unga veetu saambaruku thaan varanum//
seri edo kaalla vizhundu kenjara seri nu comment podama vidaren.. pozhachu po!!!

S.K.Ramachandran said...

"At the end of the game, both the Pawn and the king goes to the same box." - Nice one. Liked a lot.

ராஜி said...

Super info Ambi ...

3 varusathkku munnadi varaikkum ipdi oru vishyam pathi enga thaeru makkalukku theriyadhu ..But pona varsusham oorukku ponappa thaan paarthaen,ellam nagai vaanga adichi pidichi poananga...
Idhula enna comedy na ,sila paeru irukkura nagaya adagu vachu pudhu naga vaanga poananga ....Apa makkalooda weakness business people evalavu laabamaa aakiraanga ....

ராஜி said...

Unga pona post paarkala..So super postngoooo ambi sir...

ராஜி said...

Apuram ambi,ooralaam epdi irundhuchu?
Rangamani epdi irukkaanga?

ராஜி said...

//கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"//

Hmmm aamanga ambi
kaetkuravan kaenayaa irundhaa eli kooda aeroplane ottumaam....

ராஜி said...

Seriousaa sindhikka vaendiya vishayaththai sirichikittae yosikka vachurukkeenga..Hats off...

Padma said...

nijame ambi anna . enda atshaa thritiyai oru emathal than .. aana neenga evalo than periya post ezhudi. gold vanga koduthanu sonnalum.. manni parunga kariyathula kuriya erukka:)..
kandippa ungalukku enda varushathulerndu co optex 20% than :)

mgnithi said...

//இதை யார் சொல்லரது.48 மணி நேரம் பனங்கல் பார்க்கிலேயே பழியா கிடந்தவர்
//

Enna ambi ippadi unmaiya sollitanga T.R.C sir..

mgnithi said...

//உங்கள் மனைவியை தங்கமணி!னு அன்போழுக கூப்பிடுங்கள்.
உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (தில்லு இருந்தா பக்கத்து சீட்டு பிகரையும் தான்).
//

Pakkathu seetu figurea paarthu solra alavukku Ungalukku ippa dhillu irukka ;-)

mgnithi said...

//பூவைக்கோர் பூ வைத்தாய்!"னு பாட்டு பாடின்டே தங்கமணிகளுக்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வையுங்கள். (முடிந்தால் காதிலும் தான்).
//

L.O.L

mgnithi said...

//இந்த வருஷம் வெள்ளை கலரும் நல்லது!னு சரடு விட ஆரம்பிச்சாச்சு. வேற என்ன பிளாடினம் நகைகளை நம்ம தலையில் கட்ட இது ஒரு சாக்கு.
//

Latest comedy theriyuma? Platinumoda atomic number 78 aam. athai add panna 6 varutham (7+8 = 15 1+5 = 6) 6 sukranoda favourite numberam. athanala platinum vaanganumaam..ROTFL..

mgnithi said...

Ambi.
ungalai cooptex kadai vasala thallupdaila vaangina thundoda paarthatha namba thanguntha vattarangal solluthu...

Bharani said...

idhula ivlo vishayam irukaradhu theriyaama....makkal annaiku jewellery shop-ku padai edukaraangale.....kadavul dhaan kaapathanum...

கீதா சாம்பசிவம் said...

Karthik ethukkup parkkanum? parkka vendiyathu MSC. MsC note the point. grrrrrr Kalyanam nichayam aanathukku appuramum alayararu unga fiancee.

கீதா சாம்பசிவம் said...

@dd, I know ningalum unga arumai ambiyum pesi vachtu muthal idathuku pinnutam kodukaringa. ithu nallava irukku? :P

மு.கார்த்திகேயன் said...

/seri vetti pechu edhuku naan ketta gold chain vaangineengala? :-p//

இது தான்யா அம்பி உன் வாயில நீயே சூன்யம் வச்சுக்கிறதுங்கிறது..

கரெக்டா அட்டென்டன்ஸ் போட்டு கேக்குறாங்க உன் தங்கமணி..
அடியேய் அம்பி... தங்கமணின்னு கூப்பிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பாக்காதா.. அப்புறம் உன்னை அடிக்கிறதுக்கு சைக்கிள் செயினும் தங்கத்துல தான் வேணும்னு சொல்லிடப்போறாங்க..

Arunkumar said...

அம்பி நீங்க என்ன நெனச்சீங்க.. சும்மா ஒரு பதிவு போட்டா தங்கமணிக்கு தங்கம் மறந்திடுமா?

//
seri vetti pechu edhuku naan ketta gold chain vaangineengala? :-p
//
இப்பொ பாருங்க உங்க பதிவ வெட்டிப்பேச்சு-னு சொல்லிட்டாங்க !!!

பேசாம ஸ்யாம் என்ன தில்லாலங்கடி செஞ்சி அவரு தங்கமணிய ஏமாத்துறாரு-னு அவரு கிட்ட கேட்டுக்குங்க !!!

(ஹ்ம்.. அப்பிடியே ஏமாத்திட்டாலும்-னு ஸ்யாம் சொல்ற மாதிரி இருக்கு)

பொற்கொடி said...

விவிசி :-)

பொற்கொடி said...

சி காரியத்துல கண்ணா இருக்காங்க ;-) இந்த திருதியைக்கு தங்கமணி கிடைச்சுருக்காங்க. அடுத்த திருதியைக்கு? ;-)

பொற்கொடி said...

வந்தது வந்தாச்சு...

பொற்கொடி said...

50க்கு ஒரு 50 கிராம் தங்கம் குடுத்தீங்கனா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அக்க்ஷ்ய திருதியை//

இப்படி ஒரு வார்த்தையை இன்றைக்குதான் கேள்வி படுகிறேன் அம்பி.

நல்ல வேளை.. இதைப்பற்றி மலேசியாவில் தெரியாது. இல்லைன்னா, இங்கேயும் தங்கத்துக்கு ஏற்ப்பட்ட நிலைதான் ஏற்ப்படும். ;)

dubukudisciple said...

//dd, I know ningalum unga arumai ambiyum pesi vachtu muthal idathuku pinnutam kodukaringa. ithu nallava irukku? :P //
apdi ellam illa maaminu sonna nambava poreenga??
arasiyal vaazhkaila idu ellam jagajam.. so me not taking seriouslyu

Ponnarasi Kothandaraman said...

Ammani ku jewel vanguiyacha? ;) ????

Anonymous said...

aiyoooo...juz was reading this post...
the guy & gal are no way related to dawood..

the guy was my classmate in Engg - son of a business grp

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信