ஐந்து வியர்டு விஷயங்கள் ஒழுங்கா எழுதிடு!னு நம்ம டாக்டர் டிடி அக்கா அன்பு கட்டளை போட்டுட்டாங்க.
ஏற்கனவே நான்
கடவுள் பாதி மிருகம் பாதி!னு எழுதியாச்சு!னு அழுது பார்த்தேன். தினமும் இரவு தரும் சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.
ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )
இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க.
"பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு!"னு சும்மாவா சொல்லி இருக்கா.
சரி, ரெண்டாம் தடவை எழுதிடறேன்!னு சொல்லியாச்சு.
1) ஜயண்ட் வீல்: சின்ன வயசிலிருந்தே இந்த பொருட்காட்சில இருக்கற ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி. நான் எம்சிஏ படிகறச்ச இப்படி தான் ஒரு தடவை நண்பர்களுடன் போய் வசமா மாட்டினேன்.
ஜயண்ட் வீலை பாத்தவுடனே, பக்கி மாதிரி எல்லோரும் போயி உக்காச்சுண்டு, எனக்கும் டிக்கட் எடுத்து வலய விரிச்சாங்க.
ஹ! இதெல்லாம் ஜுஜுபி, என் ரேஞ்சே வேற!னு எல்லாம் நைசா சமாளிச்சு பாத்தும் நடக்கலை. தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி. அந்த வீல் ஜிவ்வுனு மேலே மேலே எழும்பியதும் வைரமுத்து சொன்ன வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது எனக்கு. நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.
தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
2) சோப்பு: சின்ன வயசுல சோப்பு!னா எனக்கு உயிர். வாசனையே வெச்சே அது என்ன சோப்பு?னு கரக்ட்டா சொல்லிடுவேன். இதோட முடிஞ்சா பரவாயில்ல. அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
எங்க அம்மா அன்பா சொல்லி பார்த்தாங்க, முதுகுல நாலு போட்டு பார்த்தாங்க, ஒன்னும் நடக்கலை. அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம். இப்ப வெறும்ன வாசனை பிடிக்கறதோட சரி.
3) மிமிக்கிரி: எல்லா குரலையும் மிமிக்ரி பண்றது கஷ்டம். ஆனா சில பெக்யூலியரானவங்க குரல், அவங்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் மாடுலேஷன் எல்லாம் கவனமா நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).
எனது முந்தைய கமபனியின் பெரிய்ய தலை ஒருத்தர், பிறப்பால் இந்தியர், ஆனால் படிச்சது எல்லாம் லன்டன். தொர இங்க்லீஸ், அதே Accent பொளந்து கட்டுவார். ஒரு தடவை ஆபிஸ்லேருந்து பார்ட்டி போனப்ப, அவர மாதிரியே என் டீம் கிட்ட நான் பேசி காட்ட, உடனே ஒரு ரசகுல்லா அவர்கிட்டேயே போயி சொல்ல, அவரும் ரொம்ப ஆர்வமா என்ன பேச சொல்ல, ஒரு நிமிஷம் எனக்கு உள்ள போன கோபி மஞ்சூரியன் எல்லாம் வேளியே வந்து விட்டது. அப்புறம் பேசி காட்டினேன்.
தொரைக்கு ரொம்ப சந்தோஷம். கட்டி பிடிச்சுண்டார். இதே நம்ம ஊரு பெரிய தலயா இருந்தா அப்ரைஸலுல ஆப்பு தான்!
4) மருதாணி கைல வெச்சுக்க பிடிக்காது. என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது.ஆனா வெச்சதுக்கு அப்புறமா வர டிஸைன பார்க்க பிடிக்கும். இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.
5) ஸ்டெப்புடு: நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாபிலிருந்து வீட்டுக்கு போயி சேர நேத்திக்கு 500 அடிகள் எடுத்தேன். இன்னிக்கு எவ்வளவு?னு எல்லாம் யோசிப்பேன். இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?
டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு? சரி யாரையாவது மாட்டி விடலாம்!னு முடிவு பண்ணி
1)மெஹந்தி புகழ் பத்மப்ரியா
2) என்னை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா!னு பாசமாக அழைக்கும் பத்மா ( நான் என்ன அறிஞர் அண்ணாவா?)
டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா! (அடிங்க, ஆனா கைய கழுவிட்டு அடிங்க! -விவேக் ஸ்டைலில் படிக்கவும்)
69 comments:
அட, அட என்ன பொறுப்பு, ஒசில வர்ர ரசம்-குழம்புக்கு நல்லா மரியாதை தருகிறீர்கள்...கலக்குங்க அம்பி....ஆமா இன்னும் 1 மாசம் கிட்ட வேணும் இல்லையா?
next post???!!
//லூஸாப்பா நீயி? //
title sairyadhan koduthu irukeenga.
Soap saaptta yennatha solla!!!Ms.C Careful about him.;)
//ஹிஹி, ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி! (யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )//
OC Ambi..idhellam konjam overu pa.
//1) ஜயண்ட் வீல்://
idhula nanum unga katchi.:D
//2) சோப்பு://
karumam!
//நோட் பண்ணி மிமிக்ரி பண்ணிடுவேன். ஹிஹி, TRC சார், கீதா மேடம் மாதிரியே நானும் தம்பியும் சில சமயம் பேசிப்போம். (தங்கமணி குரலும் தான்).//
Keep developing this.
//4) மருதாணி //
I just love that smell.:D
//ஜயண்ட் வீல்//
Enaku romba pidikum, ongalayum vidradhaa illai :p
//சோப்பு//
Soap saapadradha!!!!Veetla margo soap dhaan inumelum :p
//Mimicry//
As skm said, keep developing :)
//மருதாணி//
Enaku idha vechika romba pudikum and I like the smell too and..
//ஸ்டெப்புடு//
Thaniya nadakum bothu naa paravaa illa. Steps count pannitrundha kooda varavanga enna pesaraanga nu eppdi concentrate pannuveenga?An, enna sonna nu keteenga appo iruku diwali :p
poochuda adhukkulla 6a :(
-porkodi
rotfl! nalla velai thirupi ennaiye tagama vittingle!! indhaanga adhukku punjab kodhumai alwa! :)
soapa thimbingla? karumam! ana manniku velai kuraivu, mysore sandal, cinthol, hamaam, dove ellam vangi kudutha podhum samaikkave vendaam!! ;)
-porkodi
paravayilla, skm, manni ellarum ore maadhiri than reply pannirukkom! :)
loosapa neeyi?? ;)
-porkodi
ஆமா! சாதம் மட்டும் குக்கரில் வெச்சுட்டு மீதி எல்லாம் அக்கா வீட்டுல தான் ஓசி!
யாரு நீ சாதம் வெச்சுட்டு ரசம் மத்திரம்தான் ஓசியா.
\
அண்ணன் தம்பி ரெண்டு பேரும் "வெத்தலைதான் மாத்திரம் நம்மகிட்டே இல்லை, சுண்ணாபு இருந்தா பாக்கு எங்கேயாவது கிடைச்சுடும்" கேசு
நம்ம கடை பக்கம் வந்ததுக்கு நன்றிங்கோ.. :))
//சாம்பார்/ரசத்தை கட் பண்ணிடுவேன்!னு மிரட்டறாங்க.//
இது என்னங்க பிரச்சனை.. சோப் சாப்பிட்டு பசியாறுங்க :))
//இதெல்லாம் ஒரு பொழப்பா?னு கூட எக்ஸ்ட்ராவா ஒரு கமண்டு போட்டுட்டு போங்க//
காரியத்துல கண்ணா தான் இருக்கீங்க..:))
அந்த மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(
கவலையேப் படாதே இன்ந்ததரம் நீவரும்போது விம் பார் சோப்புதான் உனக்கு சாப்பாடு.
டிஆர்சி சார் மாதிரி பேசகத்துண்ட நீ என்னை மாதிரியே கையெழுத்து போட்டாலும் போடுவே அடுத்த தடவை வரும்போது உள்ளே விடலாமான்னு வேண்டமான்னு யோஜனை பண்ணவேண்டியதாக இருக்கு.
//ஜயண்ட் வீலுல ஏறதுனா ஒரே அலர்ஜி//
டுபுக்கு அண்ணன் மாதிரி நீங்களும் பயத்தை அலர்ஜின்னு தான் சொல்லிக்கறதா?? :))
//நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு.//
நான் கைபம்புல தண்ணி அடிக்கும் போது, எத்தனை தடவை அடிச்சா ஒரு பக்கெட் ரொம்புதுன்னு எண்ணுவேன்...
நாட்டாமை தண்ணி அடிக்கும் போது எத்தனை க்ளாஸ் அடிக்கறோம்னு எண்ணுவார்
அப்ப நாங்களாம் வியர்டா?? :)) :))
பி.கு : (நாட்டாமை எண்றது தப்பா தான் இருக்குங்கிறது வேற விஷயம்)
இதில் உள்குத்தெல்லாம் இல்லீங்கோ.. :) :) :) :)
அட, என்ன இப்பலாம் அடிக்கடி போஸ்ட்?
"லூஸாப்பா நீயி?"
- ROFTL :) அதுல யாருக்கும் சந்தேகமே இல்ல..
//யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு!//
DD, உங்களுக்கு இது தேவையா??
அம்பி, ரசப்பொடி பழைய ஸ்டாக் இல்லயாம். ரசமே பழைய ஸ்டாக் தானாம். போன வாரம் பண்ணினதாம்.
//ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை.//
shame shame..Just kidding. சில பேருக்கு motion sickness இருக்கும். அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது..
எனக்கு roller coaster லாம் அல்வா சாப்டற மாதிரி :)
சோப் சாப்பிடறது செம லூஸுத்தனம்..
// ana manniku velai kuraivu, mysore sandal, cinthol, hamaam, dove ellam vangi kudutha podhum samaikkave vendaam!! //
ROFTL..
பொற்கொடி, உங்க ரங்குக்கு அந்த பழக்கம் இல்லனு வருத்தப் படற மாதிரி இருக்கு.
//இது வரை என் கைல மருதாணி வெச்சதே கிடையாது, இனி மேலும் வைக்க போறது இல்லை.
//
எனக்கு தெரிஞ்சி பசங்க யாரும் மருதாணிலாம் வைச்சிக்க மாட்டாங்க..
//நடக்கும் போது எனது ஸ்டெப்ஸை எண்ணும் பழக்கம் உண்டு.//
எனக்கு படி ஏறும் போது எண்ணும் பழக்கம் உண்டு.நடக்கும் போது?
@TRC Sir,
//டிஆர்சி சார் மாதிரி பேசகத்துண்ட நீ என்னை மாதிரியே கையெழுத்து போட்டாலும் போடுவே அடுத்த தடவை வரும்போது உள்ளே விடலாமான்னு வேண்டமான்னு யோஜனை பண்ணவேண்டியதாக இருக்கு. //
LOL. அப்படியே விட்டாலும் check book லாம் பத்திரம்.
priya, pesama hotel thorakalama nu paakren :)
pasanga kooda vechupanga. naan pathurken. north indians na kekkave vendaam. endha vizhanalum mehendhi undu. adhum kalyanam podhu groom rendu kailayum muzhankai varai pottu iruparu!! enakku pasanga mehendhi potta pidikaadhu!! :)
-porkodi
yaar vetukuku enemae neenga ponalum tiffin soap thaan..
marudhani pidikatha!!...Ms.c,mapillai saaruku kalyanam pothu kandipa marudhani vechi vidunga..
ada steps ennura palakam namakum ondu..
mimicry
keep it up!!
-Hema
//யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு//
ரசமே பழசுதான்...தூக்கி ஏன் கொட்டனும்னு உன் கிட்ட குடுத்து இருக்காங்க...பழைய சாம்பார்,ரசம் சாப்பிடும் போதே உனக்கு இந்த லொல்லு இருந்தா பிரஷ்ஷா கொடுத்தா என்ன பண்ணுவ :-)
@TRC Sir:
//அடுத்த தடவை வரும்போது உள்ளே விடலாமான்னு வேண்டமான்னு யோஜனை பண்ணவேண்டியதாக இருக்கு. //
ungalukku ippodhaan thonudha? Yenakku yeppovae thonni pochu.Pavam neenga.:)
//தர தரனு இழுத்துண்டு போயிட்டா ஒருத்தி//
பஞ்சாப் இல்லாம இன்னொன்னு வேற இருந்து இருக்கா....:-)
//சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு//
இனிமே உனக்கு குளிக்க செங்கல் தான் வாங்கி தரனும் :-)
வந்த வேலை முடிஞ்சுது...பொற்கொடிக்கு குடுத்த மாதிரி பஞ்சாப் கோதுமை ஹல்வா குடுத்தீன்னா நானும் கெளம்பிடுவேன் :-)
@Priya:
//எனக்கு தெரிஞ்சி பசங்க யாரும் மருதாணிலாம் வைச்சிக்க மாட்டாங்க..//
udambula tatoo venam nu ninaikira pasangalukku "marudhani" oru varam.
Ippo Kaalam mari pochu vera vidhathula.;)
நான் ஏறின நேரம், கரக்ட்டா உயரத்துக்கு போனதும் மெஷினில் ஏதோ கசமுசா ஆகி வீல் நின்று விட்டது.
ஆஹா! அதோ பாருடா மீனாக்ஷி கோவில் கோபுரம், கன்னத்துல போட்டுக்கோ! போற வழில புண்ணியம் கிடைக்கும்னு ஒருத்தி சொல்ல, யப்பா! அதுக்கப்புறம் ஜயண்ட் வீல் இருக்கற ஏரியா பக்கமே போகறது இல்லை
Ungalin indha varthaigal - Oru camera angle il - feel panna vaithadhu.Azhagana varnanai - Paditha enaku Gaint wheel il andharathil nirpadhu pol oru feelings.......
Soap eppo saptel? eppo niruthitel? Konjam cleara solli irukalam.Edho ippavum ungaluku soap dhan pidikum enbadhu pol ungalai ellam solrangalae?
OC rasam, kozhambu tharavaalum ungaluku SOAP podhum nu nenachuka pora!!! Be careful.......
With Love,
Usha Sankar.
@Porkodi,
//priya, pesama hotel thorakalama nu paakren //
H1 kidaikkalana adha pannidunga. Nalla sambadhikkalam :)
// north indians na kekkave vendaam. endha vizhanalum mehendhi undu. /
ama, northyskku ellathukkum mehendhi undu. Namma pasanga kuttiya irukkum podhu dhan vachi pathurukken. Ambi kuzhandhai dhane..
@SKM,
//Ippo Kaalam mari pochu vera vidhathula//
adhuvum sari dhan.
இதெல்லாம் ஒரு பொழப்பா?
[அட.. நீங்கதான கேக்க சொன்னீங்க? :-P]
//இந்த பழக்கம், உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!னு ஒரு புக்கில் படிச்சதும் பெருமை தாங்க முடியலை. அட! என்ன நீங்களும் ஷ்டார்ட் பண்ணியாச்சா?//
என்ன ஒரு லூசுத்தனமான வேலை.. இதை நாங்க வேற செய்யனுமா? இங்கே கீழே பார்த்து ஒவ்வொரு ஸ்டெப்பும் என்றதுக்குள்ள நாந்தான் கீழே இருப்பேன். மத்தவங்க நடக்குற வேகத்துக்கு என்னை தள்ளி விட்டிருப்பாங்க.. சரி கீழே பார்க்காம எண்ணுணா எனக்குதான் ஞாபக மறதியாச்சே!!! 10 வரைக்கும் எண்ணிட்டு, எந்த நம்பர்ன்னு நானே மறந்துடுவேண்.. :-P
//மோகம் மேலும் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சம சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(//
பாவம் வீட்டூல சாப்பாடு போடலை போலிருக்கு.. :-P
Ambi,
Kalakareenga... I enjoyed the soap. How is that you have not learnt cooking. Why are you borrowing Rasa podi, Sambar podi. You are getting married and try to learn before your marriage. Don't you want to get good name from Thangamani and family? Did they not ask you when they came to see you. Be careful and pick up all the cooking tips from the men in your family. Avalavuthan... yetho rendu nalla advice pannitane... illaina... kalam poora... hmmm. antha kodumaiya naan solla koodathu.. Naan yen solanum... Sola koodathu...
//இதெல்லாம் ஒரு பொழப்பா?//
@மை பிரண்ட்,
வாங்குன காசுக்கு கரெக்ட்டா கூவிட்டீங்க...வெரி குட்...இன்னும் நிறையா ஆர்டர் இருக்கு :-)
sooper taggu thala.... :)) me too soap like ;) vootla orey sandai...appalikaa dhaan istop.. :)
sandhadi saakula Doc DD rasam seriyilla'nu solliteenga....inime rasathukku enna panna poreengalo :)
//யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு!//
Idhellaam overu!!!
Gaint wheel na bhayama?!?!?! ha ha ha
ipo enna soap saapadareenga???
hyyyyaaa... naanum steps eh ennuven :)
40!!!
sari, naa enna pannanum?
ennoda 5 weird vishayangala sollanuma?
ayyo soappa!learn how to cook.now you are going to get married, your wife will appreciate you.rasapodi, too much.
அம்பி! இருந்தாலுல் நீங்க விசித்திர குப்தர் தான்!
//யக்கா! ரசப்பொடி கொஞ்சம் பழைய ஸ்டாக்கோ? நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு/
இதுல நக்கல் வேற sideல!
//தர தரனு இழுத்துண்டு போயிட்டா ****ஒருத்தி****//
இதுல note பண்ண வேண்டியது - ஒருத்தி - ஒருத்தன் கூப்பிட்டிருந்தா போயிருப்பீங்க்க ;)
//அப்புறமா நாங்க மார்கோ சோப்புக்கு(சே என்ன கசப்பு) மாறிட்டோம்//
சோப் எல்லாம் விலை ஏறினதுக்கு நீங்க தான் காரணமா?
//டேக் பண்ணுங்க! வேணாம்னு சொல்லலை! ஆனா ரெண்டாம் தடவ எல்லாம் ரொம்ப ஒவரு! சொல்லிட்டேன் ஆமா!//..idhe dhaane naanum solren....tag tholla thaanga mudiyala :(
//சோப்பை சாப்டற அளவுக்கு ஆகி போச்சு.(மைசூர் சாண்டல் என் பேவரட்)
//....idhu weird-in uctha kattam pola...oru nimisham neenga soap saapdura andha azhaga nenachi paathen....che indha soap-la uppu konjam korachala irukunu solreenga :)
//என் அம்மா அவங்க கைல வெச்சுண்டா கூட பிடிக்காது//...paavam unga thangamani :)
//உங்களுடைய கான்ஸன்ட்ரேஷனை அதிகரிக்க உதவும்!//....dho start panren :)
oru small half :)
Hahaha...Marudhani pudikatha :P Enna ithu! :)
Giant wheel'na bayama....Ayayo...Hehehe..Shame shame! :P
You talked to me in the previous jenmam only. Still remembering it? You never talked to me in this piravi? How do you know to mimicry me? No kidding others. grrrrrrrrrrrrr
@ mathurayaimbathbi, Ambikku Always o.c sappadu than pidikkumaam. His mother told me. :p
loose, loose loose, looseee thaan Neenga. Aha, I am very happy now. Will sleep peacefully.
:):):)
2nd konjam weird dhaanga..
Ipa enna soap vangureenga?
5th nambalukkum andha pazhkkam undunga...
//பக்கத்து வீட்டு சாம்பாருக்கும் மணம் உண்டு//
Puthiya thathuvam 10158...
Nalla irukkae...
ஹாய் அம்பி,
//நேத்து ரசம் கொஞ்சம் சப்புனு இருந்துச்சு! )//
தானம் குடுத்த மாட்ட பல்லு பிடிச்சு பாக்கறீங்களா?
//அட, அட என்ன பொறுப்பு, ஒசில வர்ர ரசம்-குழம்புக்கு நல்லா மரியாதை தருகிறீர்கள்..//
@m'pathi, ஹிஹி, நீங்க தான் கரக்ட்டா பாயிண்ட புடிச்சீங்க. :)
//idhula nanum unga katchi.://
@SKM, hiyaa jolly. :p
//karumam!
//
evloo tastaa irukkum theriyuma? :p
//பிறகு வந்து ஆப்புகள் வழங்கப்படும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் நக்கீரரே//
@veda,அடடா! இதுவல்லவோ கடமையுணர்ச்சி! :)
//Enaku romba pidikum, ongalayum vidradhaa illai //
@Ms.C, we will sit and discuss and come out for an optimum solution. he hee :)
//An, enna sonna nu keteenga appo iruku diwali //
thaniya nadakkum pothu than me count! :)
//nalla velai thirupi ennaiye tagama vittingle!! indhaanga adhukku punjab kodhumai alwa!//
@kodi, initially i thought of tagging U :p
வெறும் அல்வா!னு சொன்னா போதாதா? Grrrrrrr :p
//அண்ணன் தம்பி ரெண்டு பேரும் .....//
@TRC sir, தமிழ் புத்தாண்டுக்கு உங்க வீட்டுல தான் டேரா! அது மனசுல இருக்கட்டும். ;)
//இது என்னங்க பிரச்சனை.. சோப் சாப்பிட்டு பசியாறுங்க //
@ACE, இப்ப அந்த பழக்கம் இல்லையே! ;(
//இன்ந்ததரம் நீவரும்போது விம் பார் சோப்புதான் உனக்கு சாப்பாடு.
//
@TRC sir, Vim soapaaa? Grrrrrrrr :)
btw, where is your cheque book..? :)
//நாட்டாமை தண்ணி அடிக்கும் போது எத்தனை க்ளாஸ் அடிக்கறோம்னு எண்ணுவார்
//
@ACE, என்ன கிளாஸ்?னு குறச்சு சொல்லிட்ட. எத்தனை பாட்டில்?னு சொல்லு.
அதுக்கப்புறமா அவங்க தங்கமணி கிட்ட தன்னோட அப்பாக்கு எத்தனை அடி கிடைக்கிறது?னு குட்டி பையன் முகில் எண்ணுவான். :p
//அட, என்ன இப்பலாம் அடிக்கடி போஸ்ட்?
அட, என்ன இப்பலாம் அடிக்கடி போஸ்ட்?
அட, என்ன இப்பலாம் அடிக்கடி போஸ்ட்?
//அட, என்ன இப்பலாம் அடிக்கடி போஸ்ட்?
//
@priya, ஆபிஸ்ல கொஞ்சம் வெட்டி. அதான். ஒரு மாசம் கழிச்சு கடைய மூட போறோம் இல்ல! அதுக்கும் சேர்த்து தான்! :)
//அதுல யாருக்கும் சந்தேகமே இல்ல.. //
Grrrrr. எங்கடா சான்ஸ்?னு பாப்பீங்களே! :)
//அம்பி, ரசப்பொடி பழைய ஸ்டாக் இல்லயாம். ரசமே பழைய ஸ்டாக் தானாம். போன வாரம் பண்ணினதாம்.//
@priya, DD-அக்கா ரங்குவும் இதையே தான் சொல்றார். :p
//எனக்கு roller coaster லாம் அல்வா சாப்டற மாதிரி //
@priya, முருகா! ப்ரியாவின் ரங்குவுக்கு ரோலர் கோஸ்டர்!னா அலர்ஜியா இருக்கனும். இது மட்டும் நிறைவேறினா நான் ஷ்யாமுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்தி தேர் இழுக்க வைக்கிறேன் முருகா!
:)
//சோப் சாப்பிடறது செம லூஸுத்தனம்..
//
yeeh, now i gave up. பாவம் குழந்தைக்கு(me only) என்ன தெரியும்? :)
//எனக்கு படி ஏறும் போது எண்ணும் பழக்கம் உண்டு//
ஆறு மாடி படியும் எண்ணுவீங்களா? மொத்தம் எத்தனை படிகள் இருக்கு சொல்லுங்க பார்ப்போம். :p
//priya, pesama hotel thorakalama nu paakren //
@kodi, kadai peru enna pointersaa? :p
//Ms.c,mapillai saaruku kalyanam pothu kandipa marudhani vechi vidunga..
//
@hema, Grrrr :) venaam. azhuthuduven! :p
//பழைய சாம்பார்,ரசம் சாப்பிடும் போதே உனக்கு இந்த லொல்லு இருந்தா பிரஷ்ஷா கொடுத்தா என்ன பண்ணுவ//
@syam, வாய்யா வா! எங்கடா எனக்கு ஆப்பு அடிக்கலாம்?னு பாப்பியே? :p
//ungalukku ippodhaan thonudha? Yenakku yeppovae thonni pochu.Pavam neenga.:)
//
@skm, enna aatam romba jaasthiyaa irukku..? :)
//பஞ்சாப் இல்லாம இன்னொன்னு வேற இருந்து இருக்கா//
@syam, உன் கண்ணுல அது மட்டும் கரக்ட்டா தெரியுமே? :p
//பொற்கொடிக்கு குடுத்த மாதிரி பஞ்சாப் கோதுமை ஹல்வா குடுத்தீன்னா நானும் கெளம்பிடுவேன் //
@syam, வந்த வேலை முடிஞ்சுது! Grrr.
//Ungalin indha varthaigal - Oru camera angle il - feel panna vaithadhu.Azhagana varnanai - Paditha enaku Gaint wheel il andharathil nirpadhu pol oru feelings.//
@usha shankar, மிக்க நன்றி. நிஜமாவே நான் ரொம்ப அனுபவித்து எழுதிய வரிகள் அது!. இந்த வாங்க! போங்க மரியாதை எல்லாம் வேண்டாமே! நான் ரொம்ப்ப சின்ன பையன். ஹிஹி.
சோப்பேல்லாம் இப்ப விட்டாச்சு. don't worry. R u from chennai..? :)
//Namma pasanga kuttiya irukkum podhu dhan vachi pathurukken. Ambi kuzhandhai dhane..//
@priya, Grrrrrr.
//என்ன ஒரு லூசுத்தனமான வேலை.. இதை நாங்க வேற செய்யனுமா?//
@myfriend, இல்ல, இது உண்மை தான்! டிரை பண்ணி பாருங்க.
உங்க நியாபக சக்தி தான் எங்களுக்கு நல்லா தெரியுமே! :p
//How is that you have not learnt cooking. Why are you borrowing Rasa podi, Sambar podi.//
@balaji, no balaji, i started learning cooking. in the week days, i'm little bit tired and feel lazy to do all these sambar/rasam. that's y. weekendsla we used to cook. all your advices are sooo sweet. experiance speaks isn't...? :p
//me too soap like ;) vootla orey sandai...appalikaa dhaan istop//
@golmaal, அப்பாடா! துணைக்கு ஒரு ஆளு இருக்கு எனக்கு. :)
//sandhadi saakula Doc DD rasam seriyilla'nu solliteenga//
yabba, nee vera point eduthu kudukaatha pa! :)
//ipo enna soap saapadareenga???
hyyyyaaa...
@padma, now i'm not.
//naanum steps eh ennuven //
very good. keep it up.
yes, U need to write it up! :)
//learn how to cook.now you are going to get married, your wife will appreciate you.rasapodi, too much.//
@anony, சரிங்க எஜமான்! is it Devi..? :)
//இதுல note பண்ண வேண்டியது - ஒருத்தி - ஒருத்தன் கூப்பிட்டிருந்தா போயிருப்பீங்க்க //
@dreamz, பத்த வெச்சியே பரட்ட!
//idhu weird-in uctha kattam pola...oru nimisham neenga soap saapdura andha azhaga nenachi paathen....//
@bharani, ஹிஹி, கண்ணன் வெண்ணெய் உண்டது போலவா? :)
//Giant wheel'na bayama....Ayayo...Hehehe..Shame shame!//
@ponnarasi, he hee, yeeh, yeeh, shame shame ambi shame! ;)
Giant wheel :O
OH sameee blood...
Naan solla solla oru murai en cousin ethitu poga... THAT WAS HIS WORSHTUUUUUUUUUU EXPERIENCE IN THE WHEEL :P LOL
Enaku edho naan parandhuduven'nu oru imagination vera :P ....ME never in GW again!!
Marudhani..?? :O
Hm...
Interesting tag ;)
Irundhalum en ungaluku bayam :P >?? Veeran sooran'nu iruka vendaam :P
"வயத்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருளை எல்லாம் உருள ஆரம்பித்து விட்டது"
Eppadi thalaiva ippadi ellam think panna thondradu.....
//தங்கமணி ஜயண்ட் வீல் ஏற ஆசைபட்டா ஏதாவது சொல்லி சமாளிக்கனும். நல்ல ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன//
Giant wheela yerathukku naan enna gianta nu kettu escape aayidunga.. Intha mokkai thaanga mudiyama ungalai mannichu vittuduvaanga..
//டிடி யக்கா, ஹோம்வுர்க் எழுதியாச்சு, ஒழுங்கா சாம்பார் வந்துரும் இல்ல இன்னிக்கு?//
Sambhar kidachutha?
hmm.. hmm..
avanvunna adhu enna aringanar anna:P.. pavum edha ketta avaru marupadi serthu podiduvar:).. neenga sollitele kandippa after thrusday ezhuduren.. eppo naan konjam busyakkem;)..
@geetha madam, யூஸ் போய் இங்கலீஸ் எல்லாம் பொளந்து கட்றீங்க? :p
//2nd konjam weird dhaanga..
Ipa enna soap vangureenga?
//
@raji, yes. now santoor. nalla vasanai. but eating soap no pappa! :)
//தானம் குடுத்த மாட்ட பல்லு பிடிச்சு பாக்கறீங்களா?
//
@sumathi. yes madam. :p
//Enaku edho naan parandhuduven'nu oru imagination vera :P ....ME never in GW again//
@marutham, he hee, me too same blood. same pinch! no back pinch :p
//Eppadi thalaiva ippadi ellam think panna thondradu.....
//
@harish, sari, vidu thaana varuthu! :)
//Intha mokkai thaanga mudiyama ungalai mannichu vittuduvaanga//
@mgnithi, neey vera, mudha velai ungala giant wheela ethittu thaan maru velai!nu ph vanthuchu! :)
//Sambhar kidachutha?
//
kidachathu! :)
@padma, thursdayaa? *ukkum, intha jambathuku onnum korachal illa! :p
Ambi!
Idhellam too much!! sambar rasam ellam tharradhe perusu.. adha ippadi comment vera pandreengala!!
Gaintwheelna bayama?? naanum unga katchi dhan :D
soap saapiduveengala!! really this is wierd!!
KK page'la naaradichiteengalla... Gavanichikren! :((
மைசூர் சாண்டல் புடிக்க இந்த கதையுல வர்ற மாதிரி ஏதாவது காரணம் இருக்கா? :-)))
http://appaavi.hikanyakumari.com/?p=35
Post a Comment