Tuesday, September 23, 2008

உங்களுக்கு சாருவை தெரியுமா?

ரொம்ப நாளாவே சாரு பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தான் நேரம் கிடைச்சது.

இந்த அம்பி அப்படி என்னடா சாரு பத்தி எழுத போறான்?னு உங்களுக்கு இருக்கற ஆர்வம் ரொம்ப நியாயம் தான். தப்பு!னு எல்லாம் சொல்ல மாட்டேன்.

சாதகம் பண்ணியவர்களுக்கு சாரு ஒரு கைக்குழந்தை. மத்தவர்களுக்கு ஒரு முரட்டு பிள்ளை. ஆமாம்! சாருவை கேட்பவர் அப்படியே பரவச நிலைக்கு ஆட்பட்டுவிடுவார்னு பரவலா பேச்சு இருக்கு.

எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராக அமைப்பில் சாரு இருபத்திஆறாவது மேளகர்த்தாவா வராரு. சாரு ஒரு சம்பூர்ணம் ராகம். எப்படின்னா ஏழு ஸ்வரங்களும்(ச ரி க ம ப த நி) சாருவில் வருது. சாருவை தழுவி வந்தவங்களை ஜன்ய ராகம்னு சொல்லுவோம். தரங்கிணி, மாரவி, பூர்வதன்யாசி, சிவமனோஹரினு ஒரு லிஸ்டே இருக்குங்க.

திரைபடங்களில் இந்த சாரு ரொம்பவே வந்து போயிருக்காரு. வரிசையா நான் பாடல்களை சொன்னா அட ஆமாம்!னு சொல்வீங்க.


1) பீமா படத்துல வர ரகசிய கனவுகள் ஜல் ஜல். இந்த பாட்டுல த்ரிஷாவ பாக்காம கண்ண மூடிட்டு கேட்டு பாருங்க, சாரு தெரிவாரு.


2) வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே! பாட்டு நியாபகம் இருக்கா? என்ன படம் சொல்லுங்க பாப்போம்..? அதுவும் சாரு தான்.


3) ஆடல் கலையே தேவன் தந்தது! - ரஜினி நிஜமாவே நடிச்ச ராகவேந்திரா படத்திலும் சாரு தான்.


4) காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே - தம்பிக்கு எந்த ஊரு? இங்கயும் சாரு தான்.


5) ஏதோ ஏதோ - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.


6) கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?னு சாமில கேட்டதும் சாரு தான்.


பி.கு: சொல்ல மறந்துட்டேனே, எனக்கு சாருன்னா சாருகேசி ராகம் தான் நினைவுக்கு வரும். உங்களுக்கு எப்படி..?

Friday, September 12, 2008

நயன் தாராவுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கு காந்தி ஜெயந்தி நியாபகம் இருக்கா? காந்தி தெரியும்! யாரது ஜெயந்தி?னு எல்லாம் கலாய்க்க கூடாது. காந்தி ஜெயந்தியன்று எல்லா டாஸ்மார்க் கடைகளுக்கும் லீவு விட்டாலும் சில ஊர்களில் கடைக்கு பின்னாடியோ, இல்ல அரை ஷட்டர் திறந்து வெச்சோ வியாபாரம் ஆகுமாமே. அத மாதிரி ஆகி போச்சு என் நிலைமை.

வீட்லயும், ஆபிஸ்லயும் ஓயாத வேலை...வேலை...வேலை. சுத்தமா ஏறக்குறைய ஒரு மாசம், இந்த பக்கமே வர முடியலை. இருந்தும் சைலண்டா சில பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட முடியாம இருந்து வந்தேன்.

ஓணமும் அதுவுமா ஒரு வாழ்த்து பதிவு போடலைனா ஆபிஸ்ல இருக்கற ஓமனக் குட்டி கோச்சுக்காதோ? அதான் இதோ தட்டியாச்சு.

காலைல டிபன் சாப்டற நேரத்துல தற்செயலா( நிஜ்ஜம்மா) சூர்யா டிவிய திருப்பினா யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!னு என்னை மறந்து ஆட்டத்தை மட்டும் ரசித்து கொண்டிருந்த எனக்கு பக்கத்தில் தங்கமணி வந்தது கூட தெரியவில்லை.

அடடா! அவங்கள பாரேன்! ஓணம்னா கரக்ட்டா அது சம்பந்தமா தான் புரோகிராம் போடறான். நம்மூர்ல தான் பிள்ளையார் சதுர்த்திக்கு நமீதா பேட்டிய போடறான். இதை பாத்தாவது நம்மாளுங்க திருந்தனும். அப்ப தான் இத மாதிரி அரிய கலைகள் எல்லாம் அழியாம நாளைக்கு வர போற சந்ததியினருக்கு நாம தர முடியும். நீ என்ன நினைக்கிற இத பத்தி?னு ரொம்ப சீரியசா முகத்தை வெச்சுண்டு நான் கேட்டதை, ஒரு நிமிஷம் (ஒரு நிமிஷம் தான்) உண்மைனு நம்பி, பின் வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பு?னு புகழாரம் கிடைத்தது. எனக்கு டிபனும் செமித்தது.


கேரள சமையலில் தேங்காய் அதிகம் இருக்கும். நெல்லைகாரர்களின் சமையலிலும் அந்த தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அவியல், ஓலன், அடபிரதமன், பச்சடி, கிச்சடின்னு சமையல் அட்டகாசமாக இருக்கும்.என்ன தான் அவங்க நமக்கு முல்லை பெரியாரில் தண்ணி தர மறுத்தாலும், நாம அவங்களை மதிக்க தான் செய்யரோம். அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா? :)

பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே, அதுக்கே ஒரு ஓ! போடலாம். (கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?)


சரி மறுபடியும் என் ஓணம் நல் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.