Friday, November 28, 2008

மும்பை - மாரல் ஆப் தி ஸ்டோரி

முதலாம் நூற்றாண்டு

கோவலனா கள்வன்? தவறான நீதி வழங்கிய நானே கள்வன்! நானே கள்வன்! - பாண்டியன் நெடுஞ்செழியன் தம் உயிரை விடுகிறான்.

மாரல்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்(எமனாகும்).

இருபதாம் நூற்றாண்டு - 1919 AD

ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்ய காரணகர்த்தாவாய் திகழ்ந்த ஜெனரல் டயர் சாகும் தருவாயில் சொன்னது, ""but I don’t want to get better. Some say I did right, while others say I did wrong. I only want to die... and know of my maker whether I did right or wrong" .


இருபதாம் நூற்றாண்டு - 1956


நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தம் மத்திய ரயில்வே மந்திரி பதவியை நேரு மிகவும் வேண்டி கேட்டும் ராஜினாமா செய்தார்.

மாரல்: சில நேரங்களில் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டு - 2006 AD

மும்பை புற நகர் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 200 அப்பாவி பொது மக்கள் பலி.

2008 AD

பெங்களூர், ஐதராபாத், அஹமதாபாத், டெல்லி, புனே, மீண்டும் மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடித்து மீண்டும் அப்பாவி மக்கள் பலி (இறந்தவர் எண்ணிக்கை தெரியல, மேலும் நான் கணக்குல வீக்கு)

சோனியா, மற்றும் பிரதமர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து, "அச்சசோ அடி பட்டுச்சா? தெண்பாண்டி சீமையிலே! தேரோடும் வீதியிலே! மான் போல வந்தவனே! யாரடிச்சாரோ!" என பாடி விட்டு வந்தனர்.

சிவராஜ் பாட்டீல் நீல கலர் கோட்டா? கருப்பு கலர் கோட்டா?னு குழம்பி, அவர் மனைவி முடிவு சொல்லி, இறுதியாக கருப்பு கோட் அணிந்து "தீவிரவாதிகளை கண்டு இந்த அரசு பயப்படாது! இரும்பு கரம் கொண்டு அடக்க (ஒருவழியா) முடிவு எடுக்கலாமா?ன்னு காரிய கமிட்டி கூடி விவாதித்து, முடிவு எடுத்துகிட்டே இருப்போம்" என நாசமா போன CNN, நாறிட்டு இருக்கும் NDடிவிக்கு பேட்டி குடுத்தார்.

மாரல்: இடுக்கண் வருங்கால் நகுக! :(

டேய்! உங்களுக்கு வெக்கமே கிடையாதா டா? ஆசை வெக்கமறியாதோ? வேணாம், நெல்லை தமிழ்ல ஏதாவது திட்டிட போறேன்.

Wednesday, November 26, 2008

நண்பர்களுக்கு நன்றி-1


இந்த பதிவை ஆரம்பிக்கும் நேரம் (26/11/2008 காலை 10.30Hrs IST ) ஹிட் கவுண்டர் 99891 காண்பிக்கிறது. ஒரு லட்சத்துக்கான எண்ணிக்கையுடன் கவுன்டவுனை ஆரம்பிக்கிறேன். 25,000 50,000 ஹிட் வந்த நேரம் காலம் எல்லாம் நோட் பண்ணலை. பிளாக் ஆரம்பித்து ஆறு மாதம் கழிந்த பின்னரே இந்த ஹிட் கவுண்டர் சேர்க்கப்பட்டது. ஏன்னா முதல் ஆறு மாதங்கள் ஈ ஒட்டிக் கொண்டிருந்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.


இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால் நான் லாக்-இன் செய்யும் போதும் கணக்கில் எடுத்து கொண்டு விடும். ஆக அதுவே ஒரு 25,000 ஹிட் தேறி விட்டது. இந்த ஆதரவுக்காக என் நலன் விரும்பிகளுக்கும், கமண்டு போடாமல் கமுக்கமாக படிக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.


பஞ்சாபி பதிவு, ஆதலால் பிளாக் எழுதுவீர் ஆகிய பதிவுகளின் உபயத்தால் சில நாட்கள் ஆயிரக்கணக்கில் ஹிட்கள் குவிந்தன. இந்த காலகட்டத்தில் கேள்வி பதில்கள் எல்லாம் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தாலும் "நீங்க வெறும் தாஸா? இல்ல லாடு லபக்தாஸா?" போன்ற கேள்விகள் தான் நமக்கு வரும் என நன்கு உணர்ந்து இருந்ததால் கம்முனு இருந்தேன்.


நாளை தான் ஒரு லட்சத்தை தொடும்! என நினைக்கிறேன். அப்படியே தொடலைனாலும் நானே ரிப்ரிஷ் செய்து விடுவேன்னு உங்களுக்கே தெரியும். ஆகவே ஒழுங்கா நீங்களே ஆக வேண்டிய காரியத்தை பண்ணி விடவும். இப்போ 11.12 மணிக்கு( நடுவுல டீ குடிக்க போனேன்பா!) 99,914 ஹிட்டுக்கள்(அதுல ஒன்னு என்னது). தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 86, 85, 84.....


அட எண்ணிக்கையில என்ன இருக்குப்பா? பத்து பேர் மனசுல நான் இடம் பெற்றிருந்தால், ஏதாவது மகிழ்ச்சியான தருணங்களில் இந்த அம்பியை நீங்கள் நினைத்து கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

டிஸ்கி 1: இந்த பதிவில் கவுண்டர் என்ற வார்த்தை ஹிட் கவுண்டரை மட்டுமே குறிக்கும். சாதிப் பெயர் இல்லை. :)))

டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் அந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!னு நான் சொன்னா நீங்க நம்பித் தான் ஆகனும்.

Monday, November 24, 2008

வானரம் ஆயிரம்

சூர்யா நடித்த படங்கள் என்றாலே தங்கமணிக்கு விசில் அடிக்க தெரியாவிட்டாலும் வெறுங் காத்தாவது வாயால விடுவாங்க. போன தடவை வேல் என்ற மொக்கை படத்துக்கே அவ்ளோ பில்டப் குடுத்து பாத்து முடிஞ்சபிறகு, நான் ஓட்டின ஒட்டுல மேடம் கடுப்பாகி, சாம்பார்ல உப்பை கட் பண்ணி தன் கோபத்தை அறவழியில் காட்டினாங்க. அதனால் இந்த தடவை நான் ரெம்ப உசாரா வாயவே தொறக்கலை. இந்த பதிவும் ரெம்ப கவனமாவே எழுதப்பட்டு இருக்குன்னு மேற்படி சமூகத்துக்கு அறிவிச்சுக்கறேன்.

பொதுவா பசங்க எல்லாம் எஸ்கர்ஷன் போறதுக்கு பெர்மிஷன்லேந்து பெயிலான ரேங்க கார்டை காட்றது வரைக்கும் அம்மா! அம்மா!ன்னு(ஜெஜெ இல்லப்பா, பெற்றெடுத்த தாயார்) எல்லா விசயத்தையும் அம்மாகிட்ட தான் சொல்வாங்க. பொண்ணுங்க எல்லாம் எங்க அப்பா தான் நல்லவரு! வல்லவரு!னு அப்பாகிட்ட தான் செல்லம் கொஞ்சுவாங்க. ஆனா இந்த படத்துல ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்ல முயற்சித்து இருக்காரு கெளதம் மேனன்.

ஸ்கூல் பையனா வரும்போதும் சரி, காலேஜ் பையனா வரும்போதும் சரி பாடி லாங்வேஜ்ஜை ரொம்ப அழகா வெளிபடுத்தி இருக்காரு சூர்யா.

குழந்தைகளுக்கு என்னிக்குமே தங்கள் தந்தை தான் ஹீரோ! என்ற ஸ்டோரி லைனை சின்ன சின்ன காட்சிகள் மூலம் வெளிபடுத்தி இருக்காங்க. அதே போல தந்தைகளின் கடமை என்ன?னும் அழகா சொல்லப்பட்டு இருக்கு. நாம என்ன செய்யறோமோ/பேசறோமோ அதே தான் நம் குழந்தைகள் பின்பற்றும்ங்கறது முற்றிலும் உண்மை.

விஜய்யை எப்படி தமிழ் மக்கள் போக போக ஏத்துகிட்டாங்களோ அதே மாதிரி இந்த படத்துல ஹிரோயினா வர சமீரா ரெட்டியும் படம் போக போக ஓகே ஆகி விடுகிறார். குத்து ரம்யாவா இது? மேடம், பெங்க்ளூர்ல நிறைய பிட்னஸ் ஜிம்ஸ் இருக்கு. அட்ரஸ் வேணும்னா நான் குடுக்கறேன். கார்னியர் ப்ராடக்ட்ஸ் கூட நிறையா இருக்கு. சொல்றதை சொல்லிட்டேன். அம்புட்டு தான்.

அப்பாவா வர சூர்யா தன் பையன் என்ன கேட்டாலும் ஒத்துக்கறாரு. முதல்ல சமீரா ரெட்டிய புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா, சரிப்பா, வீட்டுக்கு கூட்டிட்டு வா!ன்னு சொல்றாரு. அப்புறம் பாத்தா, பக்கத்து வீட்டு குத்து ரம்யாவையும் எனக்கு புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா வெரிகுட் சாய்ஸ்னு சொல்றாரு.

எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)

படத்தில் சில துக்கடாக்கள்:

90களில் வரும் காட்சி என காட்ட, பாட்டு சீனில் பேக்ரவுன்டில் சாலிட்டர் டிவியின் விளம்பரம் காட்டப்படுகிறது.

சமீரா ரெட்டி சென்னையில் இருக்கும் காட்சிகளில் அம்மணி சுடிதார் போட்டு பின் குத்தி ஷாலில்(வலது புறம் ) வளைய வருகிறார்.

கிதார் வாசிக்க தெரிந்த எவரும் கண்டிப்பாக பாடும் பாடல் 'என் இனிய பொன் நிலாவே' தேர்தெடுத்தது சூப்பர்.

ஆள் கடத்தல்(Extortion) இல்லாமல் தனக்கு படம் எடுக்கத் தெரியாது என்பதை மறுபடியும் கெளதம் நிரூபித்து உள்ளார்.

ராணுவம் ஆள் கடத்தல் மீட்பு நடவடிக்கையில் இறங்கும் போது, மிஷின் கன் பயன்படுத்த மாட்டார்கள், சைலன்சர் பொருத்திய ரிவால்வர் தான்.வீணான அப்பாவி உயிர்ச் சேதத்தை தவிர்க்கத் தான் இந்த ஏற்பாடு. 'ஷூட் அட் புல்' என குறிப்பிட்டு பெரும்பாலும் கடத்தியவர் தலையில் சுட முயற்சிப்பார்கள். நுணுக்கமான இந்த விசயத்தை நோட் பண்ணியிருக்காங்க. சூப்பர்.

இப்படத்தின் எடிட்டரான ஆன்டனிக்கு சம்பள பாக்கி போல. கத்திரியை பயன்படுத்தவே இல்லை. 'லைஃப் ஹேஸ் டு கோ ஆன்!' என சூர்யா சொல்வதை எடிட்டர், 'பிலிம் ஹேஸ் டு கோ ஆன்!'ன்னு தப்பா புரிஞ்சுகிட்டாரு போல. :)

பாடல்கள் எல்லாம் தாமரை. எளிய வரிகள், மேடம்! நேஷனல் அவார்டு எல்லாம் உங்க வரிகளுக்கு ஜுஜுபி. தாமரையின் வரிகளை தம் இசை கொண்டு அமுக்க விரும்பவில்லை ஹாரிஸ். பதமா வாசிச்சு இருக்காரு.

வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப்.
எ.கா: உங்கள மாதிரி பொண்ணுங்க இங்க படிச்சு, அங்க போய் எம்எஸ் பண்ணி, வேலை பாத்து, அங்க டாக்ஸ் கட்டுவீங்க, அதுக்கு பதில் இங்கயே வேலை பாத்து, டாக்ஸ் கட்டினா என்ன மாதிரி பையன்களும் நல்லா இருப்பாங்க இல்ல!

சிக்ஸ் பேக்குக்கு குடுத்த பில்டப்புக்கு இன்னும் கொஞ்சம் காட்சி அமைச்சு இருக்க வேணாமோ? சல்மான் கானை பாருங்க, எப்பவுமே குளிக்க போற மாதிரி தான் பாடல் காட்சிகளில் வர்ராரு.

ஏதாவது ஒரு காட்சியில் பார்வையாளர்கள் தம் அப்பாவை நினைத்து கொள்வார்கள். புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)

பி.கு: பதிவு ஒழுங்கா தான் எழுதி இருக்கேன், தலைப்புல தான் என் வேலைய காட்டிட்டேன் போல. :)

Friday, November 21, 2008

குவிஜு விடைகள்


ஜார்ஜ் புஷ்ஷே! மன்னிப்பு கேள்! ஓபாமா உனக்கு புடிச்சது உப்புமாவா? போன்ற உணர்ச்சி குவியலாய் தமிழ்மணத்தில் எழுதபடும் பதிவுகளில் இருந்து உங்களுக்கு தற்கால விடுதலை அளிக்கவே இம்மாதிரி குவிஜை அறிமுகப்படுத்தினேன். வேற எதுவும் காரணம் இல்லை.

முதல்ல இந்த குவிஜுக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
இந்த குவிஜை எப்படி அணுகனும்?னு நான் வழிமுறை எல்லாம் உதாரணத்தோட போட்டு இருந்தும், பல பேர் கண்ண மூடிகிட்டு தொபக்கடீர்னு போட்டில குதிச்சு இருக்கீங்க. உங்க ஆர்வத்தை நினைச்சா எனக்கு புல்லரிக்கிது. :)

நான் ரொம்ப தெளிவா சொல்லியிருக்கேன்:

1) எல்லா கேள்விகளும் குறிபிட்ட ஆட்களை பத்தி தான்.
2) எல்லா குறிப்புகளும் நேரிடையாகவோ மறைமுகமாவோ ஆட்களை தான் குறிக்கும்.

சரி விடுங்க, அடுத்த தடவை நான் இன்னும் கொஞ்சம் கவனமா முடிஞ்சா உங்க வீட்டுக்கே வந்து பிட் நோட்டீஸ் குடுக்க முடியுமா?னு ட்ரை பண்றேன். அதோட இல்ல, இந்த வகை குவிஜை இன்னும் எளிமையாக, 'நாலுல ஒன்ன தொடுங்க பாப்போம்!' ரேஞ்சுல நடத்த முடியுமா?னு சிந்திக்கிறேன்.


இப்போ விடைகளை பாப்போம்.


1) ஒரு வீணை, திருவள்ளுவர் சிலை இதானே படங்கள். வள்ளுவர் வீணை வாசிச்சா ஒரு இசை கலைஞர் வருவார்னு சொல்லிட்டேன்.

வெரி சிம்பிள்: பாலசந்தரின் கவிதாலயாவின் லோகோ என்ன? வள்ளுவர். ஆக விடை விணை பாலசந்தர்.
(என்ன இப்பவே கண்ண கட்டுதா?)

2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்ன சம்பந்தம்? இதானே குறிப்பு. பீர்னாலே விஜய் மல்லயா தான். கிரிகெட்டுல 20-20ல கைய சுட்டுகிட்டாரே.

ஸ்ரீதர் கவுதம் கம்பீர்னு சொல்லி இருக்கார். சரி அதுக்கும் மார்க் குடுத்து இருக்கேன். ஆக விடை விஜய் மல்லய்யா.


3) இங்க்லீஷ் எழுத்துக்கள்(A to Z) மற்றும் கிருஷ்ணர் பேமிலி (கிருஷ்ணர்+பாமா+ருக்மணி)படம். அதாவது ஓ+பாமா=ஓபாமா.
(யாருப்பா அது? கல்ல விட்டு எறியறது?)


4) டாலர் படம் + சில ரத்னங்கள் படம். அத ஏன் டாலரா பாக்கறீங்க? 'மணி'யா(Money) பாருங்க பா. ஆக மனிரத்னம். குறிப்பை வாசிங்க, மனிரத்னம் பட வசனம் மாதிரி இருக்கா? :)


5) இது ரொம்ப சிம்பிள். பல்லாங்க்குழியின் வட்டத்தை பாத்து ஒத்தை நாணயம்னு பாடின சினேகா தான் விடை. சிலருக்கு அந்த பாட்டுல வேலை பாத்த லைட்பாய்ஸ் பேர் கூட தெரிஞ்சு இருக்கலாம். சொல்லுங்க, சந்தோஷமா நானும் தெரிஞ்சுக்கறேன். :D


6) ஒரு சுவர் படம் + ஒரு ஆமை படம். 'தி வால்'னு(The Wall) ராகுல் டிராவிட்டை ஒரு காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க. அண்ணன் 20-20 கிரிகெட்டையே டெஸ்ட் ரேஞ்சுக்கு ஆமை வேகத்துல ஆடறதுல கில்லாடி.


7) சுட சுட ஈமெயில் அதாவது ஹாட்மெயில். அதை ஆரம்பிச்சது யாரு? சமீர் பாட்டியா. கொஞ்சம் கூகிள் ஆண்டவரை கேட்டு தான் பாருங்களேன்.


8) சாமான்யனுக்கும் விமான பயணம் கிட்டனும்னு ஆசை பட்டவரு டெக்கான் ஏர்லைன்ஸ் ஓனர் கேப்டன் கோபி நாத். சிலர் இதுக்கு விஜய் மல்லயானு சொல்லி இருக்காங்க. சாரி, அவரு சல்லிசா ஷேர் தான் வாங்கினாரு. விடை கேப்டன் கோபி நாத் தான்.


9) ஒரு பாங்க்ரா டான்ஸ்(பஞ்சாபி)+ ஒரு கதகளி டான்ஸ் போட்டோ. நயன்தாரா உங்களுக்கு(எனக்கும் தான்) புடிக்கும் தான். ஆனா குறிப்பையும் படிங்கண்ணே. பளார்னு ஒரு அறை விட்டது யாரு? ஹர்பஜன் சிங்க் தானே? சிலர் ஸ்ரீசந்த்னும் சொல்லி இருக்காங்க. சரின்னு மார்க் குடுத்து இருக்கேன்.


10) அரை வேக்காட்டு பிட்சாவை மட்டுமல்ல சோனியாகாந்தியையும் நமக்கு அறிமுகப்படுத்தியது யாரு? இத்தாலி. காந்தி படமும் போட்டு இருக்கேன். ஆக விடை சோனியா காந்தி.


ரொம்பவே கஷ்டமா இந்த குவிஜை நான் அமைச்சு இருந்தததா நீங்க கருதினா, நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன். சத்தம் போடாம பதிவை படிச்சிட்டு குவிஜை ட்ரை பண்ணியவங்களுக்கும் மிக்க நன்னி.

சரியான விடை சொன்னவர்கள் விபரம்:

ரவி: 7/10
ஸ்ரீதர் நாராயணன்: 6/10
எம்ஜி நிதி: 5/10
கில்ஸ்: 4/10
ராப்: 5/10
கெக்கேபிக்குணி அக்கா: 3/10
வல்லி சிம்ஹன்: 3/10

(மார்க் தப்பா இருந்தா சொல்லுங்க திருதிடறேன். )

Tuesday, November 18, 2008

குவி குவி குவிஜு

சும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).

ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)
1) ஒரு ஆளு ஒரு தடவை தான் மெயிலனும்.
2) ஆபிஸ்ல பக்கத்து சீட்டு பிகர்கிட்ட எல்லாம் கேக்க கூடாது.(ஹிஹி, பாம்பின் கால் பாம்பறியும்).
3) ஒரு கேள்விக்கு ஒரு மார்க் தான். அரை/கால் மார்க் எல்லாம் கேட்கபடாது. 4) யாரு முழுசா கரக்ட்டோ அவங்க மார்க்கோட விடைகள் எல்லாம் வெள்ளிகிழமை தான் வெளிவரும். சீக்ரம் வேணும்னா என் ஆபிஸ் வேலைய நீங்க முடிச்சு குடுங்க. :)

படங்கள் நேரிடையாகவோ, உருவகமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்கும். எல்லா கேள்விகளுமே குறிப்பிட்ட ஆட்களை பத்தி தான்.
எடுத்துகாட்டு:

இந்த படத்தை பாத்ததும் உங்கள் நினைவுக்கு வரும் நடிகர்? விடை: விஜய்.

இப்போ புரிஞ்சதா?
இப்போ ஆட்டைக்கு போவலாமா?

1) திருவள்ளுவர் வீணை வாசித்தால் இந்த இசை கலைஞர் வருவாரே!


2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்னய்யா சம்பந்தம்?

3) கிருஷ்ணர் பேமிலிக்கும் இங்க்லீபீசுக்கும் என்ன சம்பந்தம்?


4) இருக்கு.
சம்பந்தம் இருக்கு,
ரெண்டு படத்துக்கும்
சம்பந்தம் இருக்கு.
5) பாத்தவுடனே என்ன பாட்டு தோணுதுனு சொல்லுங்க பாப்போம்.


6) மெதுவா மெதுவா சுவத்துல ஏறலாமா? ஏறலாமா?


7) சுடச் சுட சுடச் சுட இ-மெயில்.

8) உசிலம்பட்டிக்கு ஒரு பிளைட் டிக்கட் போடுங்கண்ணே!


9) என்னது?இன்னும் தெரியலையா? கன்னத்துல ஒரு அறை வாங்க போறீங்க என்கிட்ட. :))

10) அஹிம்சை வழில பிட்சா சாப்டுவோம் வாங்க.


பி.கு: இந்த தலைப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு தந்துதவிய எங்கள் தல கைபுள்ளைக்கு மிக்க நன்னி ஹை!

Friday, November 14, 2008

கொல்டிகாரு

உங்களுக்கு தெரிந்த ஒரு ஐந்து ஐ.டி கம்பனிகளில் ஒன்னுல தான் என் தங்ஸும் ஒரு பொறுப்பான போஸ்டுல இருக்காங்க. பொதுவா என் ஆபிஸ், வேலை விஷயத்துல தங்கமணி அதிகம் மூக்கை நுழைக்கறதில்லை. நமகெதுக்கு வம்பு?னு நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டுக்க மாட்டேன். தீடிர்னு ஒரு நாள், அவங்க டாமேஜர் ஐதராபாத்லேருந்து போனை போட்டு, ஒரு பய சிக்கி இருக்கான், அவனை டெக்னிகல் இன்டர்வியூ பண்ணி எனக்கு ரிப்போட் அனுப்பிடு!னு சொல்லிட்டாரு.

அம்மணி முத முதலா இப்ப தான் இன்டர்வியூ எடுக்கற அனுபவம். சும்மா தானே(வெட்டியா தானேனும் வாசிக்கலாம்)இருக்காரு ரங்கு!னு என்னை கூப்ட்டு ஏதாவது டிப்ஸ் குடுங்களேன்னு ரெம்ப்ப பவ்யமா கேட்டாங்க.
நமக்கு இது போதாதா?
உள்ளுகுள்ள ரெம்ப சந்தோஷபட்டாலும், வெளிகாட்டாம, இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்.

தங்க்ஸும், இதெல்லாம் கதைக்காவாதுனு முடிவு பண்ணி, சரி, நீங்க போய் நாளைக்கு சமைக்க வேண்டிய காய்கறி என்ன?னு பாத்து கட் பண்ணி வைங்க, அப்படியே வாஷிங்க்மெஷின்ல இருக்கற துணிய காய போட்ருங்க, இடைபட்ட கேப்புல தூங்கற ஜுனியர் எழுந்தா கொஞ்ச நேரம் தூளி ஆட்டுங்க, இல்லாட்டி அவனை தூக்கி வெச்சு ஏதாவது கதை சொல்லுங்க, மறக்காம டயப்பர் மாத்திடுங்க!னு வரிசையா அடுக்கிட்டே போக, எனக்கு அப்பவே கண்ண கட்டிடுச்சி.

சரி, நீ இவ்ளோ கேக்கற, ஹெல்ப் பண்ணாம இருக்க முடியல, போன் போட்டு நீ அந்த கேன்டிடேட் கிட்ட இன்டர்வியூ ஷெட்யூல் பண்ணி கன்பார்ம் பண்ணு. பேசிட்டே இரு. டெக்னிக்கலா ஸ்ட்ராங்கானு பாரு. நானும் கூட இருக்கேன்னு சொல்லி சமாளிசாச்சு.

ஆள் பெயர், ஊர் எல்லாம் என்னனு பாத்தா விஜயவாடாவுலிருந்து ஒரு பக்கா கொல்டி பையன். டக்குனு பல்ராம் நாயுடு இங்க்லீஷ் நினைவுக்கு வர எனக்கும் ஒரு ஆர்வம் தொத்திகிச்சு.

நாலு ரிங்க் போய், நம்மாளு போனை எடுத்து

ஹலோ! எவரண்டி?

நாங்க கெக்ரான் மோக்ரான் கம்பனில இருந்து பேசறோம், நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கு உங்க கூட டெக்னிக்கல் டிஸ்கசன் பண்ண போறோம், ரெடியா இருங்க என்ன?

ஐந்து செகண்டுக்கு எதிர்முனையிலிருந்து பேச்சே வரலை,

மேடம், நீங்க சொன்னதை எனக்கு மெயிலா அனுப்புங்க ப்ளீஸ், அப்ப தான் நான் நம்புவேன். ஏற்கனவே என் பிரண்டு ஒருத்தன் மைக்ரோசாப்டுல இருந்து பேசறோம்!னு சொல்லி ஒரு மணி நேரம் என்னை கலாய்ச்சுட்டான். அவ்வ்வ்வ்வ், தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ். (குசும்பன் வேலையா இது?)

பாவம் ரொம்ப அடி வாங்கி இருக்கான் போல!னு நினைச்சுகிட்டு, சரி! உடனே உங்க மெயில் பொட்டியை பாத்துட்டு எனக்கு பதில் அனுப்புங்க!னு சொல்லி தங்க்ஸ் போனை கட் பண்ணிட்டு டக்குனு ஒரு மெயில் தட்டி விட்டாங்க.

உங்க கம்பனில இன்டர்வியூ வரதெல்லாம் நான் செஞ்ச புண்யம், நளைக்கு ஏழு மணில இருந்தே நான் ரெட்டியா சே! ரெடியா இருக்கேன்.
மேடம், நீங்களும் தெலுகா? நாளைக்கு என்ன படிக்கனும்?னு கொஞ்சம் சொன்னா புண்யமா போகும்னு ரெண்டு நிமிஷத்துல ரிப்ளை வந்தது.

அடங்கொய்யால! பல்ராம் நாயுடு வேலைய இங்கயே காட்றியா? இருடி,உனக்கு நாளைக்கு இருக்கு தீவாளின்னு தங்க்ஸ் கடுப்பாயிட்டாங்க.

அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு போனை போட்டு தங்க்ஸ் ஒரே டெக்னிகல் கேள்விகளா கேட்டு கொடஞ்செடுத்தாங்க. அந்த பையனும் ஓரளவு சரியான பதில்களா சொல்லிட்டான். நான் சைலண்டா எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்ததில் முக்யமான சில துளிகள்:

1) அந்ததந்த மாநில மக்களின் மொழி அக்ஸண்ட் அவங்க பேசர இங்க்லிபிசுல ஒலிக்கிறது.

ஆட்டோ, ஆபிஸ் எல்லாம் சேட்டன்களுக்கு(சேச்சிகளுக்கும் தான்) ஓட்டோ ஓபிஸ் ஆகிறது.
அனேகமாக எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கு பின்னும் தெலுங்குகாரர்கள் லு போட்டும், கன்னடர்கள் உ போட்டும் பேசுகிறார்கள்.
உதா: ஆரக்கல்லு, டேபிலு,டாக்குமெண்டு, கர்சர்ரு, கேபினு.

2) கொல்டிகள் ஐ.டி துறையில் எப்படியாவது ஒரு பெரிய்ய கம்பெனியில் நுழைந்து, அமெரிக்கா ஆன்சைட்டுக்கு போக வேண்டும்! என்பதை ஒரு தவமாகவே கருதுகிறார்கள். நன்றாக கவனிக்கவும் எப்படியாவது!

இங்கு பெரிய்ய கம்பெனி எனபதற்க்கு தகுந்த விளக்கம், அவங்க வட்டத்தில் அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்.

இதன் பின்புலம் என்னனு பாத்தா வெரி சிம்பிள்: எல்லாம் கல்யாணத்துக்கு வரும் வரதட்சணை தான். இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)

இதுவே இந்தியாவில் வேலை என்றால் ஐம்பது முதல் எழுபத்து ஐந்து லட்சம் வரை ரொக்கம், பிற பொருட்கள் மற்றும் ஒரு மணப்பெண்.

நிற்க, மேலே சொன்னதெல்லாம் கொல்டிகள் மற்றும் கன்னடர்களுக்கு மட்டும் தான்.
தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.

சரி டிராக் மாறி விட்டது.

ஓரளவுக்கு அந்த பையன் நல்லாவே பதில் சொல்ல, தங்க்ஸ் இன்டர்வியுவை முடித்து கொள்வதாக அறிவிக்க, அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்.

இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது. ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?

Thursday, November 06, 2008

மெட்ராஸ் aka சென்னை

தீபாவளி மற்றும் தி.ரா.ச. அவர்கள் வீட்டு திருமணத்தை சாக்காக வைத்து ஒரு வாரம் லீவு எடுத்து கொண்டு சென்னையில் டேரா போட்டாச்சு. நாங்கள் வருகிறோம் என தெரிந்தோ என்னவோ இரண்டு நாட்களுக்கு முன்பே மழை பெய்து ஒய்ந்து விட்டிருந்தது.

ஒரு சில மாதங்கள் கழித்து வருபவர்களுக்கு கூட சென்னை பல திடிக்கிடும் மாற்றங்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து காட்சியளிக்கிறது.

சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்.
மியுச்சுவல் பண்ட், ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டு விட்டு தேவுடு காப்பவர்கள், ரெண்டு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுங்கள். பணத்துக்கு சென்னை கியாரண்டி.

அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-)டூ வீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டை மடியில் வைத்து கொண்டு சிக்னலில் மட்டும் தலையில் அணிகிறார்கள். வாழ்க்கையில் இப்படியா பிடிப்பு இல்லாம இருப்பாங்க..?திரும்பின பக்கம் எல்லாம் காஃபி டே கடைகளூம், பெட்ரோல் பங்குகளில் கூட பிட்சா கார்னரும் இருக்கு. ஞாயிறுகளில் மக்கள் வீட்டில் சமைக்காமல் கூட்டம் கூட்டமா ரெஸ்டாரண்ட் போய் மொய் எழுதுகிறார்கள்.
மக்கள் பிராண்டட் உடைகளையே விரும்பி அணிகிறார்கள். இந்தியா ஒளிர்கிறது?

தடுக்கி விழுந்தா ரிலையன்ஸ் ப்ரேஷ், தாவி எழுந்தா நில்கிரீஸ் என காய்கறிகளை அழகா நறுக்கியே பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)

புஸ்வாணம், மத்தாப்பு எல்லாம் காலாவதியாகி இப்போ வானத்திலேயே மத்தாப்பு கொட்ற வெடிகள் தான் மக்கள் வெடிக்கிறார்கள். அப்ப தான் ஓசோனில் சீக்ரம் ஓட்டை விழும் பாருங்க.காய்கறி விலை பெண்களூருவை விட அதிகமா இருக்கு. (பீன்ஸ் கிலோ என்பது ரூபாய், தக்காளி கிலோ அறுபது ரூபாய், கத்ரிகாய் கிலோ நாப்பது ரூபாய்). சரி விடுங்க, அரிசி கிலோ ஒரு ரூபாய் தானே? :-)முக்ய ஏரியாக்களில் (அடையாறு, பாண்டி பஜார், வேளசேரி) நாயுடு ஹால் விரிவாக்கம் செய்து உள்ளது. சொல்ல மறந்துட்டேனே, நாயுடு ஹாலில் இப்போ பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கிறது.நாரத கான சபாவில் எஸ்.வி.சேகரின் மகாபாரததில் மங்காத்தா நாடகத்துக்கு வழக்கம் போல எட்டுக்கல் மூக்குத்தி, ஆரணி புடவை சகிதம் என்.ஆர்.ஐ மாமிகள் வந்து, "திஸ் கை இஸ் டூ ஃபன்னி யூ நோ" என கமண்டுகிறார்கள். இதையே தான் புரட்சி தலைவியும் சொல்றாங்க போல. :-)நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வாரமும் ஒரு மணி நேரம் கூட கரண்ட் கட்டாகவில்லை. ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்.கலர் கலரான பெயர் பலகைகள் மறைந்து நியான் விளக்குகளில் வணிக வளாகங்களின் பெயர்கள் இரவு பத்து பதினோரு மணி வரையிலும் ஒளிருகின்றன. இதை கட்டுபடுத்தினால் ஒரு வேளை நிறைய மின்சாரம் மிச்சம் ஆகுமோ?


பாருங்க, இதெல்லாம் அமைச்சர் யோசிக்க வேண்டியது, நான் யோசிச்சுட்டு இருக்கேன். என்ன செய்ய, ஏதாவது நல்லது நடக்காதா?னு மனசு கிடந்து அடிச்சுகுதே.சென்னையில் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் ஜீன்ஸ் கலாசாரம் வந்தாலும், இன்னமும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு கடையில் ஐந்தரை மீட்டருக்கு கட்டம் போட்ட காட்டன் சுடிதார் மெட்டிரீயல் வாங்கி ஒரு மணி நேரத்தில் பட்யாலா ஸ்டெயிலில் தைத்து ஆறரை மீட்டருக்கு துப்பட்டா வாங்கி இரண்டு பக்கமும் பின் போட்டு அணிந்து செல்கிறார்கள். வாழ்க சென்னைவாழ் மக்கள்.பி.கு: உங்களுக்கு நேரம் இருந்தால் இங்க போய் ஈசியான ஒரு புதிருல கலந்துக்குங்க.