Showing posts with label quiz. Show all posts
Showing posts with label quiz. Show all posts

Tuesday, December 23, 2008

பாத்ரூமில் சினிமா பாட்டு பாடுபவரா? ஒரு குவிஜு


நீங்கள் ஒரு மிகச் சிறந்த பாத்ரூம் சிங்கரா? அப்ப இந்த குவிஜு உங்களுக்கு தான். இது ரொம்ப சிம்பிள் (அத நாங்க சொல்லனும்). உங்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பாடல்களின் முதல் வரியை அதாவது பல்லவியை( நடிகை இல்லப்பா) சில படங்களாய் இங்க குடுத்ருக்கேன். படங்களை வெச்சு முதல் வரியை கண்டுபிடிக்கனும். அவ்ளோ தான்.

உதாரணமா இந்த படத்தை பாருங்க:

பல்லாங்குழி இருக்கு, ஒரு ரூபாய் நாணயம் இருக்கு. என்ன பாட்டு? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.

இப்ப புரிஞ்சதா?

நீங்க அந்த பாடலின் பல்லவியை மட்டும் சொன்னா போதுமானது. படம் பேரு தெரிஞ்சா சொல்லலாம் ஆனா அவசியமில்லை. சமீபத்தில் 1965ல வந்தது, அப்ப நான் வால் டிராயர் அணிந்து அந்த படத்தை பார்த்தேன்! அப்படின்னு கொசுவர்த்தியும் சுத்தலாம் தப்பில்லை.

படங்கள் க்ளூ போதவில்லைன்னு நீங்க பீல் பண்ணிணா உங்களுக்கு எக்ஸ்ட்ரா குறிப்புகள்:

1) ஜே.கே ரீத்தீஷ் கூட என்ன பாட்டுனு சொல்லிடுவாரு.

2) இந்த குவிஜுல மொத்தம் அஞ்சு கேள்வி இருக்கு. ஆனா பதி நாலு படங்கள் இருக்கு. இந்த பதிவுல மொத்தம் 156 வார்த்தைகள் இருக்கு.

3) க்ளூ கிடையாது. அதான் படமே பாட்டு பாடுதே!



4) டாக்டர்களுக்கு பிடிக்காத படத்திலிருந்து ஒரு பாடல்.





5) ரெண்டு வரிகளுக்கு நாலு படம் குடுத்து இருக்கேன், ஆகவே நோ குறிப்பு. தெரியலைன்னா ஏடிஎம் போய் பணம் எடுத்து எனக்கு அனுப்புங்க.


Tuesday, December 16, 2008

நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரரா? - குவிஜு பதில்கள்

புரபசர் ரொம்பவே சீரியசா இன்ஷுரன்ஸ் பற்றி பாடம் எடுத்து கொண்டு இருந்தார். திடீரென எல்.ஐ.சி பற்றி பேச்சு வந்தது. ஒரு மாணவன் தடாலென எழுந்து, எல்.ஐ.சிக்கு எதுக்கு அப்படி ஒரு லோகோ வெச்சுருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா சார்? என கொக்கி போட்டான்.

புரபசரும் ரொம்பவே ஆர்வமா, உனக்கு தெரிஞ்சா சொல்லுப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்!னு அவன் வலையில் விழுந்தார்.

ரொம்ப சிம்பிள், ப்ரீமியம் கட்டினவன் மண்டைய போட்டு அவன் தலமாட்டுல வெளக்கு வைக்கும்போது தான் இன்ஷுரன்ஸ் பணத்தை குடுப்போம்!னு சிம்பாலிக்கா சொல்றாங்க, அதான் அந்த லோகோவுக்கு அர்த்தம்!னு பையன் சிரிக்காம கலாய்க்க அந்த புரபசர் முகம் போன போக்கை பாக்கனுமே!

அப்புறம் அந்த பையன் புரபசர்கிட்ட மன்னிப்பு கேட்டுகிடான். வகுப்பும் தூங்கி வழியாம கலகலப்பா போச்சு.

சரி, இப்ப நாம் விடைகளை பாப்போமா?
1. Columbia pictures
2. Red hat
3. Cadburys
4. Red bulls
5. Bacardi
6. Dunlop
7. Puma
8. Tata
9. SBI
10. Ing vysya
11. Wikipedia
12. Mercedes benz

இந்த தடவை நிறைய பேரு சரியான விடைகளை சொல்லி இருக்கீங்க, ரொம்ப சந்தோசம்.
ப்ரியன், எம்ஜி நிதி, கப்பி பய, கைபுள்ள, நாகை சிவா, ரவி, சரவண குமரன், மெட்ராஸ்காரன், ஸ்ரீன்னு இந்த லிஸ்ட் ரொம்ப நீளாமாவே இருக்கு. (யார் பேராவது விட்டு போச்சா?)
மீண்டும் ஒரு சுவாரசியமான குவிஜுடன் உங்களை சந்திக்கிறேன்.
பி.கு: அந்த காலேஜ் பையன் நானில்லை, என் உடன்பிறப்பு. :)

Thursday, December 11, 2008

நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரரா? - ஒரு குவிஜு

இந்தியாவில் அனேகமாக முக்கால் வாசி பேர் எல்ஐசில தான் பாலிசி போட்டு இருப்பாங்க அல்லது போடவைக்கப்பட்டு இருப்பாங்க. :)

எதுக்காக பாலிசி போடறாங்கன்னு பாத்தா ஒன்னு டாக்ஸ் சேவிங்க்ஸா இருக்கும், இல்லாட்டி முன்னெச்சரிக்கை முனுசாமியா தன் வாரிசுகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடா இருக்கும். சரி, இந்த பதிவு அதை பற்றியது அல்ல.

எல்ஐசியின் லோகோ (சின்னம்) எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுக்கு என்ன அர்த்தம்?னு என்னிக்காவது யோசிச்சு பாத்ருப்போமா? அடுத்த பதிவுல இதுக்கு விளக்கம் சொல்றேன். :)


ஒவ்வொரு கம்பனிக்கும் தனக்குனு ஒரு லோகோ உருவாக்கி அதுக்கு காப்பிரைட் எல்லாம் வாங்கி வெச்சு இருப்ப்பங்க. இப்ப இந்த லோகோ வெச்சு ஒரு குவிஜு. என்ன மக்கள்ஸ், ரெடியா?

சரி குவிஜுக்கு போகலாம்.

மேலே உள்ள படத்தை பாருங்க, இடமிருந்து வலமாக எந்த லோகோ எந்த கம்பனிக்கு?னு சொல்லுங்க. எது இடது? எது வலது?னு காமெடி எல்லாம் பண்ணபடாது. உங்க வசதிக்காக நம்பர் கூட போட்டு இருக்கேன். ரொம்ம்ப்ப ஈசியான கேள்விகள் தான் கேட்டு இருக்கேன். அதனால சும்மா புகுந்து விளையாடுங்க.

பி.கு: உங்கள் ஆதரவை பொறுத்து இதை விட கொஞ்சம் கடினமான குவிஜு ரெடி பண்றேன்.

Friday, December 05, 2008

சன் டிவி தொகுப்பாளினிகளும் ஒரு குவிஜும்


சன் டிவி தொகுப்பாளினி: நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன், அதுக்கு கரக்ட்டான விடை தரனும். சரியா?

நேயர்: சரி.

இந்தியாவின் முதல் பிரதமர் யாரு?

ரொம்ப கஷ்டமா இருக்கே! ஒரு க்ளூ குடுங்க ப்ளீஸ்!

சரி, அவருக்கு ரோஜான்னா ரெம்ப பிடிக்கும்.

எனக்கு தெரிஞ்சு போச்சு! செல்வமணி தானே விடை?

இல்லீங்க, அவருக்கு குழந்தைங்கனா கூட ரெம்ப பிடிக்கும்.

கண்டுபிடிச்சிட்டேன்! அப்துல் கலாம்.

இல்லீங்க, இன்னொரு க்ளூ தரேன். முதல் எழுத்து நே. கடைசி எழுத்து ரு. முத எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் நடுவுல ஒரு எழுத்தும் கிடையாது.

நேயர்: ஐயோ! இது ஒரு க்ளூவா? இன்னும் கொஞ்சம் க்ளூ ப்ளீஸ்!

கம்பியர்: (கடுப்புடன்) நேரு என்ற சரியான விடையை நீங்க யோசிச்சிடீங்கன்னு எனக்கு தெரியுது. வெரி குட். நாம இப்ப ஒரு நல்ல பாடலை பாக்கலாமா?
*******************************************************************
இப்படி ஒரு துணுக்கு க்ரேசி மோகன் டிராமாவில் பார்த்த நியாபகம். இதுக்கும் இந்த குவிஜுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என நான் சொன்னால் நீங்க நம்ப போவதில்லை. :)

அடுத்ததா ஸ்ரீதர் சொன்ன மாதிரி, 'ஐ லவ் யூ ரஸ்னா!' அல்லது 'ஐயம் ஏ காம்ப்ளான் பாய்!' டைப்பில் குவிஜு நடத்தலாமா?னு யோசிச்சுட்டு இருக்கேன்.

இப்போ விடைகளை பார்க்கலாம்:

1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - போத்தீஸ் அல்லது ராஜ் மகால் (ஆமா, ரெண்டுமே சரி தான்)
2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு! - காட்பரீஸ்

3) வெண்மையின் புது மந்திரம்! - பவர் சோப்

4) மனைவி பேச்ச கேளுங்க! - கோடக் Securities
5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன். - டாட்டா இன்டிகாம்
6) தாய் வீட்டு சீதனம். - ஆச்சி மசாலா
7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். - ஏர்டெல் voice mail
8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ! - சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ்.
9) தி டேஸ்ட் ஆப் இந்தியா - அமுல் products
10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! - ஸ்ப்ரேமின்ட்(மவுத் ப்ரெஷ்னர்)

நிலா மற்றும் வித்யா எல்லா விடைகளும் கரக்ட்டா சொல்லி இருக்காங்க. வாழ்த்துக்கள்.


மற்றவர்கள் எத்தனை ரைட்டு?னு அவங்களுக்கே இப்போ தெரியும்னு நினைக்கிறேன். கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் என் நெஞ்சார்ந்த நன்றி! (சே! ஏதோ பொது மேடை பேச்சு மாதிரி என் பிளாக் ஆயிட்டு வருதோ?)


இந்த குவிஜு ஒரு வகையில் சர்வே மாதிரின்னு சொல்லலாம். தமிழகத்தில் மட்டும் காட்டப்படும் விளம்பரங்களை பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள். இந்தியா முழுதும் விற்கப்படும் பொருட்களை, சேவைகளை கண்டுபிடிப்பதில் பலரும் சிறிது சிரமப்பட்டு உள்ளார்கள். பலர் எந்த பொருள்? இதுவா? அதுவா? என குழம்பி உள்ளார்கள்.


இவை எல்லாம் அடுத்த குவிஜில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (என்னது அடுத்ததா? நீ அடங்கவே மாட்டியா?னு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்களோ?)

பி.கு: பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இருக்கு தானே? :)

Tuesday, December 02, 2008

சில விளம்பரங்கள் - ஒரு குயிஜு

நீங்கள் டிவியில் விளம்பரங்கள் பார்க்கும் பழக்கமுள்ளவரா? அப்படியானால் இந்த குயிஜு உங்களுக்கு தான். ஒரு பொருளை விளம்பரபடுத்த எப்படி யுக்திகள், மாடல்கள் முக்யமோ அதைவிட முக்யம் கேச்சிங்கான வரிகள்/பாடல்கள். மக்கள் மனதில் பச்சக்குனு ஒட்டிக்கற மாதிரி வரிகளை ஜிங்கில்ஸ் என விளம்பரதுறையில் குறிப்பிடுவார்கள்.

புது காரு! புது வீடு! கலக்கறே சந்துரு! என்றால் நமக்கு ஏஷியன் பெயின்ட்ஸ் நினைவுக்கு வருகிறது இல்லையா? அது தான் ஜிங்கில்ஸின் மாயம். திரைப்பட பாடல் வரிகளை விட சில விளம்பர பட வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என நான் சொன்னால் அது மிகையில்லை. பாடல் வரிகள் என்று இல்லை, சில தீம் மியூசிக், அல்லது பிஜிஎம் உதாரணமாக டைட்டன் வாட்ச்சுக்க்கான தீம் மியூசிக்கை கொஞ்சம் அசை போடுங்கள் பார்க்கலாம், சரி வேணாம்! லேட்டஸ்ட் ஹிட்டான ஏர் டெல் பிஜிஎம் நினைவுக்கு வருதா? அதான் அவ்ளோவே தான்.

சில பிரபல வரிகளை கீழே குடுத்துள்ளேன், எந்த பொருள்? என நீங்கள் சொல்லனும். சிம்பிள் தானே? ரொம்பவே எளிமையாக தான் கேள்விகள் இருக்கு என நம்புகிறேன். எல்லாம் போன தடவை பட்ட அனுபவம் தான்.

1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்.

2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு!

3) வெண்மையின் புது மந்திரம்!

4) மனைவி பேச்ச கேளுங்க!

5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன்.

6) தாய் வீட்டு சீதனம்.

7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். (i miss you so much, it hurts).

8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!

9) தி டேஸ்ட் ஆப் இந்தியா!

10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! (Don't pray! Just spray)

Friday, November 21, 2008

குவிஜு விடைகள்


ஜார்ஜ் புஷ்ஷே! மன்னிப்பு கேள்! ஓபாமா உனக்கு புடிச்சது உப்புமாவா? போன்ற உணர்ச்சி குவியலாய் தமிழ்மணத்தில் எழுதபடும் பதிவுகளில் இருந்து உங்களுக்கு தற்கால விடுதலை அளிக்கவே இம்மாதிரி குவிஜை அறிமுகப்படுத்தினேன். வேற எதுவும் காரணம் இல்லை.

முதல்ல இந்த குவிஜுக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
இந்த குவிஜை எப்படி அணுகனும்?னு நான் வழிமுறை எல்லாம் உதாரணத்தோட போட்டு இருந்தும், பல பேர் கண்ண மூடிகிட்டு தொபக்கடீர்னு போட்டில குதிச்சு இருக்கீங்க. உங்க ஆர்வத்தை நினைச்சா எனக்கு புல்லரிக்கிது. :)

நான் ரொம்ப தெளிவா சொல்லியிருக்கேன்:

1) எல்லா கேள்விகளும் குறிபிட்ட ஆட்களை பத்தி தான்.
2) எல்லா குறிப்புகளும் நேரிடையாகவோ மறைமுகமாவோ ஆட்களை தான் குறிக்கும்.

சரி விடுங்க, அடுத்த தடவை நான் இன்னும் கொஞ்சம் கவனமா முடிஞ்சா உங்க வீட்டுக்கே வந்து பிட் நோட்டீஸ் குடுக்க முடியுமா?னு ட்ரை பண்றேன். அதோட இல்ல, இந்த வகை குவிஜை இன்னும் எளிமையாக, 'நாலுல ஒன்ன தொடுங்க பாப்போம்!' ரேஞ்சுல நடத்த முடியுமா?னு சிந்திக்கிறேன்.


இப்போ விடைகளை பாப்போம்.


1) ஒரு வீணை, திருவள்ளுவர் சிலை இதானே படங்கள். வள்ளுவர் வீணை வாசிச்சா ஒரு இசை கலைஞர் வருவார்னு சொல்லிட்டேன்.

வெரி சிம்பிள்: பாலசந்தரின் கவிதாலயாவின் லோகோ என்ன? வள்ளுவர். ஆக விடை விணை பாலசந்தர்.
(என்ன இப்பவே கண்ண கட்டுதா?)

2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்ன சம்பந்தம்? இதானே குறிப்பு. பீர்னாலே விஜய் மல்லயா தான். கிரிகெட்டுல 20-20ல கைய சுட்டுகிட்டாரே.

ஸ்ரீதர் கவுதம் கம்பீர்னு சொல்லி இருக்கார். சரி அதுக்கும் மார்க் குடுத்து இருக்கேன். ஆக விடை விஜய் மல்லய்யா.


3) இங்க்லீஷ் எழுத்துக்கள்(A to Z) மற்றும் கிருஷ்ணர் பேமிலி (கிருஷ்ணர்+பாமா+ருக்மணி)படம். அதாவது ஓ+பாமா=ஓபாமா.
(யாருப்பா அது? கல்ல விட்டு எறியறது?)


4) டாலர் படம் + சில ரத்னங்கள் படம். அத ஏன் டாலரா பாக்கறீங்க? 'மணி'யா(Money) பாருங்க பா. ஆக மனிரத்னம். குறிப்பை வாசிங்க, மனிரத்னம் பட வசனம் மாதிரி இருக்கா? :)


5) இது ரொம்ப சிம்பிள். பல்லாங்க்குழியின் வட்டத்தை பாத்து ஒத்தை நாணயம்னு பாடின சினேகா தான் விடை. சிலருக்கு அந்த பாட்டுல வேலை பாத்த லைட்பாய்ஸ் பேர் கூட தெரிஞ்சு இருக்கலாம். சொல்லுங்க, சந்தோஷமா நானும் தெரிஞ்சுக்கறேன். :D


6) ஒரு சுவர் படம் + ஒரு ஆமை படம். 'தி வால்'னு(The Wall) ராகுல் டிராவிட்டை ஒரு காலத்துல சொல்லிட்டு இருந்தாங்க. அண்ணன் 20-20 கிரிகெட்டையே டெஸ்ட் ரேஞ்சுக்கு ஆமை வேகத்துல ஆடறதுல கில்லாடி.


7) சுட சுட ஈமெயில் அதாவது ஹாட்மெயில். அதை ஆரம்பிச்சது யாரு? சமீர் பாட்டியா. கொஞ்சம் கூகிள் ஆண்டவரை கேட்டு தான் பாருங்களேன்.


8) சாமான்யனுக்கும் விமான பயணம் கிட்டனும்னு ஆசை பட்டவரு டெக்கான் ஏர்லைன்ஸ் ஓனர் கேப்டன் கோபி நாத். சிலர் இதுக்கு விஜய் மல்லயானு சொல்லி இருக்காங்க. சாரி, அவரு சல்லிசா ஷேர் தான் வாங்கினாரு. விடை கேப்டன் கோபி நாத் தான்.


9) ஒரு பாங்க்ரா டான்ஸ்(பஞ்சாபி)+ ஒரு கதகளி டான்ஸ் போட்டோ. நயன்தாரா உங்களுக்கு(எனக்கும் தான்) புடிக்கும் தான். ஆனா குறிப்பையும் படிங்கண்ணே. பளார்னு ஒரு அறை விட்டது யாரு? ஹர்பஜன் சிங்க் தானே? சிலர் ஸ்ரீசந்த்னும் சொல்லி இருக்காங்க. சரின்னு மார்க் குடுத்து இருக்கேன்.


10) அரை வேக்காட்டு பிட்சாவை மட்டுமல்ல சோனியாகாந்தியையும் நமக்கு அறிமுகப்படுத்தியது யாரு? இத்தாலி. காந்தி படமும் போட்டு இருக்கேன். ஆக விடை சோனியா காந்தி.


ரொம்பவே கஷ்டமா இந்த குவிஜை நான் அமைச்சு இருந்தததா நீங்க கருதினா, நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன். சத்தம் போடாம பதிவை படிச்சிட்டு குவிஜை ட்ரை பண்ணியவங்களுக்கும் மிக்க நன்னி.

சரியான விடை சொன்னவர்கள் விபரம்:

ரவி: 7/10
ஸ்ரீதர் நாராயணன்: 6/10
எம்ஜி நிதி: 5/10
கில்ஸ்: 4/10
ராப்: 5/10
கெக்கேபிக்குணி அக்கா: 3/10
வல்லி சிம்ஹன்: 3/10

(மார்க் தப்பா இருந்தா சொல்லுங்க திருதிடறேன். )

Tuesday, November 18, 2008

குவி குவி குவிஜு

சும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).

ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)
1) ஒரு ஆளு ஒரு தடவை தான் மெயிலனும்.
2) ஆபிஸ்ல பக்கத்து சீட்டு பிகர்கிட்ட எல்லாம் கேக்க கூடாது.(ஹிஹி, பாம்பின் கால் பாம்பறியும்).
3) ஒரு கேள்விக்கு ஒரு மார்க் தான். அரை/கால் மார்க் எல்லாம் கேட்கபடாது. 4) யாரு முழுசா கரக்ட்டோ அவங்க மார்க்கோட விடைகள் எல்லாம் வெள்ளிகிழமை தான் வெளிவரும். சீக்ரம் வேணும்னா என் ஆபிஸ் வேலைய நீங்க முடிச்சு குடுங்க. :)

படங்கள் நேரிடையாகவோ, உருவகமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்கும். எல்லா கேள்விகளுமே குறிப்பிட்ட ஆட்களை பத்தி தான்.
எடுத்துகாட்டு:

இந்த படத்தை பாத்ததும் உங்கள் நினைவுக்கு வரும் நடிகர்? விடை: விஜய்.

இப்போ புரிஞ்சதா?
இப்போ ஆட்டைக்கு போவலாமா?

1) திருவள்ளுவர் வீணை வாசித்தால் இந்த இசை கலைஞர் வருவாரே!


2) கிரிகெட்டுக்கும் பீருக்கும் என்னய்யா சம்பந்தம்?

3) கிருஷ்ணர் பேமிலிக்கும் இங்க்லீபீசுக்கும் என்ன சம்பந்தம்?


4) இருக்கு.
சம்பந்தம் இருக்கு,
ரெண்டு படத்துக்கும்
சம்பந்தம் இருக்கு.
5) பாத்தவுடனே என்ன பாட்டு தோணுதுனு சொல்லுங்க பாப்போம்.


6) மெதுவா மெதுவா சுவத்துல ஏறலாமா? ஏறலாமா?


7) சுடச் சுட சுடச் சுட இ-மெயில்.

8) உசிலம்பட்டிக்கு ஒரு பிளைட் டிக்கட் போடுங்கண்ணே!


9) என்னது?இன்னும் தெரியலையா? கன்னத்துல ஒரு அறை வாங்க போறீங்க என்கிட்ட. :))

10) அஹிம்சை வழில பிட்சா சாப்டுவோம் வாங்க.


பி.கு: இந்த தலைப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு தந்துதவிய எங்கள் தல கைபுள்ளைக்கு மிக்க நன்னி ஹை!