Friday, November 02, 2007

விளம்பரங்கள் - II

part- I

ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.

1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.

2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.

3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.

இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.

வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.

நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.

ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!

இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)

சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.

சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.

அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?

கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)

நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.

31 comments:

mgnithi said...

Firstu attendance

mgnithi said...

//வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன்//

ithai solrathukku thaan evalo periya posta .. :-)

mgnithi said...

//அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம்//
naan panagal park side pogum pothu latesta enna change pannirukaanu paarpen..

dubukudisciple said...

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன்//
adu thaane ennada idu ambi vilambaram pathi ellam ezhutharennenu parthen

dubukudisciple said...

அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம்///
one linerla advertisement poda ivangala adichika ale kidayathu..

dubukudisciple said...

appa me the secondu.. 5th comment vera potachu

Sumathi. said...

ஹாய் அம்பி,

//குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.//

ஆஹா, அந்த குழந்தை முகத்தை பார்த்தாலே என்ன ஒரு அழகு. அதுவும் அந்த உண்டியலை கூடவே வச்சிகிட்டு அது படுத்தும் பாடு கொள்ளை அழகு தான்.

//என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க,..//

அட தங்கமணிய எதிர்க்கற அளவுக்கு தைரியம் வந்தாச்சா?


//மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.//

படு சூப்ப்பர்.

//அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம்.//

இத அடுச்சிக்க இப்பவும் ஆளே கிடையாது...

மு.கார்த்திகேயன் said...

kadaichi varikalai padichittu adi vizhunthirukkanume ambi

மு.கார்த்திகேயன் said...

sila advts curiosity raise panni, makkalai attract pannum. Like pulli raajavukku aids varumaa, arjun ammaa yaaru, sundayna rendu..

மங்களூர் சிவா said...

//
வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்
//
செம காமெடி அம்பி
:-))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே, இப்போவெல்லாம் விளம்பரம் ஜாஸ்தியா இருக்கே? ;-)

நாகை சிவா said...

விளம்பரம் பதிவில் நமக்கு ஒரு விளம்பரமா? நன்றி அண்ணாத்த :)

ஸ்பேன்சர் சிக்னல் எதிரில் அமுல் விளம்பரம் வரும். நல்லா இருக்கும். அதே போல் அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே இறக்கும் போது ஒரு சட்டைக்கான விளம்பரம் அதுவும் சூப்பரா இருக்கும். அப்பால அண்ணாநகர் ரவுண்டா எதிரிலும் ஒரு விளம்பர பலகை. ITC யோட அதுவும் சூப்பரா இருக்கும். :)

கீதா சாம்பசிவம் said...

ரேஸிலே ரெண்டாவதா வர பையன் சாப்பிடற குலாப்ஜாமூன் விளம்பரமும் தான் சூப்பரா இருக்கும்! உங்களுக்கு அதெல்லாம் எங்கே ரசிக்கத் தெரியும்? ஆடறது கோபிகாவா, ஸ்நேகாவா, மாளவிகாவா? ஸ்ரேயாவானு பார்த்துட்டு இருந்தாப் போதும்!:P

வேதா said...

என்ன வெளம்பரம் ரொம்ப அதிகமா இருக்கே :D

எனக்கு கூட சென்னை சில்க்ஸ் விளம்பரம் ரொம்ப பிடிக்கும், அதிலும் அதுல வர்ர குட்டீஸ் எல்லாம் நல்லா இருக்கும், அந்த பாட்டும் ரொம்ப சூப்பர் என் அண்ணா அந்த விளம்பரத்தை பார்த்துட்டு சென்னை சில்க்ஸுல தான் தீபாவளிக்கு துணி எடுக்கனும் ஒரே அடம் :)

அமுல் விளம்பரங்கள் கூட அருமையா இருக்கும். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரமும் அண்ணாசாலையில் சிக்னல் பக்கத்துல அவங்க வைக்கற விளம்பர பலகைய பார்க்கறதுக்குன்னே போவோம் நச்சுன்னு இருக்கும் :)

வேதா said...

போன கமெண்டுல ஒரு திருத்தம் அண்ணா பொண்ணு தான் சென்னை சில்க்ஸ் போகனும்னு ஒரே அடம். இப்ப போனா அடுத்த தீபாவளிக்கு தான் வெளில வர முடியும் அப்டின்னு சொல்லி தடுத்துட்டோம் :)

Anonymous said...

good one. neenga sollramadhiri amul no 1.avangaloda samayochidamana oneliners supero super.saint gobain glass ads ennakku romba pudichathu.adhuvum clean panna water splash panna,inge ivangga azhaga duck pannuvanga.
nivi.

Anonymous said...

naukri.com hari sadu kuda kallakkal ad.jhonsons ads,gundu gundu papa ayyo ethannai azhagu.ippadi niraya sollite pogalam,creative makkaloda thangachurangamnnu sollalam.highly competitive field .
nivi.

Anonymous said...

kanavvu kanna neriya urimai irukku ambi sir.sneha,jo,yanaguptha ellarkudayum nadikkiradha kanavu kandennnu unga ammani kitta solliparunga.thagamani sense of humour than romba famous acche!!!!!!!
nivi.

Kittu said...

வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன்//

neengal venumnaa Band-Aid vilambarathukku nadikalaam. yenna idha kettu thangamani oru podu potrupaangale, so realisticaa irukkum.

cheena (சீனா) said...

பூக்கடைக்குக் கூட விளம்பரம் தேவைப்படுகிற காலம் இது. என் செய்வது.

Dreamzz said...

அடடா! சூப்பர் தொடர்!

Dreamzz said...

22

ambi said...

//ithai solrathukku thaan evalo periya posta .. //
@mgnithi, அடடா! கரக்ட்டா பாயிண்ட புடிச்சுட்டியே பா! :)

//one linerla advertisement poda ivangala adichika ale kidayathu..//

@DD, very true.

//அட தங்கமணிய எதிர்க்கற அளவுக்கு தைரியம் வந்தாச்சா?
//
@suamthi, இப்டியேல்லாம் கோர்த்து விட்டு வேடிக்கை பாக்கபடாது :p

@karthi, ஆங்கிலத்தில் போட்ட கமண்டை ஏத்துக்க மாட்டோம். :p

@mangalore siva, நன்றி ஹை! :)

//இப்போவெல்லாம் விளம்பரம் ஜாஸ்தியா இருக்கே?//
@my friend, நம்ம பாப்பா சங்கத்துக்கு ஒரு விளம்பரம் ரெடி பண்ணிடுவோமா? கொஞ்சம் செலவாகும். என்ன சொல்ற?
:))

//நமக்கு ஒரு விளம்பரமா? நன்றி அண்ணாத்த//
@puli, நன்றி எல்லாம் எதுக்குப்பா? அக்கவுண்ட் டிரான்ஸ்பர் பண்ணிடு. :p


//உங்களுக்கு அதெல்லாம் எங்கே ரசிக்கத் தெரியும்? //
@geetha paati, பாட்டேழுதி பெயர் வாங்கும் புலவர்கள் உள்ளனர். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் சில புலவர்கள் உள்ளனர். அதில் நீங்கள் எந்த வகை?னு நான் சொல்லவும் வேணுமோ? :p


//அவங்க வைக்கற விளம்பர பலகைய பார்க்கறதுக்குன்னே போவோம் நச்சுன்னு இருக்கும் //
@veda, மொத்ததுல காலேஜுக்கு கட் அடிச்சு இருக்கீங்க. அதானே? :p


@nivi, செயிண்ட் கோபின் எனக்கும் ரெம்ப பிடிக்கும். :)

//kanavu kandennnu unga ammani kitta solliparunga//
@nivi akka/anna, அதானே, என்னை மாட்டி விடலைனா உங்களுக்கு சாப்பாடு ஜீரணம் ஆகாதே? :)

//Band-Aid vilambarathukku nadikalaam//
@k-mama, சொந்த அனுபவம் மாதிரி இருக்கே? :p

//பூக்கடைக்குக் கூட விளம்பரம் தேவைப்படுகிற காலம் இது.//
@cheena, வாஸ்தவமான பேச்சு! :)

@dreamz, நன்றி ஹை! :)

Arunkumar said...

indha vijay tv thaan sombhu-va alavachi velambaram panraanunga.. adha solla vittuteengale :)

தி. ரா. ச.(T.R.C.) said...

) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி
நம்ப வீட்டிலே ப்ரூ காபியா ஜமாய் ராஜா!

மதுரையம்பதி said...

இன்னிக்குத்தான் படித்தேன் இந்த பதிவினை.....

ஆமாம் அம்பி, குழந்தைகளை நன்றாக அட்ராக்ட் செய்யறாங்க...

என் பெண்ணே சென்னை சில்க்ஸ் அட்வடைஸ்மெண்ட்ல வருகிற குழந்தைகளை பாத்திட்டு கேட்கிறாள் அந்த மாதிரி 2 பாவடை வேணும்ன்னு....

Hameed said...

Hello Ambi,

I have sent u a personal mail to renghabhai@gmail.com. Is that ur id.
If so please go through the mail and reply or if it's the wrong one please provide me ur current email id.

Hameed

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரைட்டு.. எனக்கு குழந்தைகள் நடிக்கிற விளம்பரம்ன்னா ரசிச்சு பார்ப்பேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

(இது ஏற்கனவே படிச்ச போஸ்ட்டு.. இருந்தாலும் ஒரு ஃப்லோல வர்றதுனால திரும்ப படிச்சது.. எல்லாம் ஒரு விளம்பரந்தாங்..) ;-)

Sabarinathan TA said...

Uncle "naan kolanthiya irrukeyela amma athaithaan koduthaa" idhu varave illai.

-TSN

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信