Friday, November 16, 2007

ஓம் ஷாந்தி ஓம்!

இப்ப எங்க டீம்ல இருக்கற எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஈ ஓட்டிட்டு இருக்கறதுனால, என்ன பண்ணலாம்?னு கான்பிரன்ஸ் ரூம் புக் பண்ணி யோசிச்சோம். அப்ப தான் ஒரு சப்பாத்திக்கு இப்ப ரிலீஸ் ஆகியிருக்கற இந்த படம் போகலாம்னு பல்பு எறிய, மடமடனு மானேஜரையும் ஆட்டத்துக்கு சேர்த்து, ஒரு முக்யமான மீட்டிங்க் இருக்கு, லேட்டா வருவேன்!னு தங்கமணிக்கும் தகவல்(அல்வா) குடுத்து டிக்கட் புக் பண்ணியாச்சு.

சரி, படத்தின் பெயரை பாத்தால் எதோ தியானம், மன அமைதி, உம்மாச்சி வர பக்தி படம்னு பாத்தா கதை என்னவோ நம் தமிழில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக அரைத்த மறுஜென்மம் மாவு தான் என்றாலும், இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க.
பொதுவா ஹாரூக் படம் எல்லாம் எனக்கு போகோ சானல் பாக்கற மாதிரி காமடியா இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான். எழுபதுகளில் வாழ்ந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ஷாரூக் வருகிறார். பெரிய காலருடன் கலர் கலர் சட்டை, பெல்பாட்டம் பெண்ட் அணிந்து தன் நண்பனுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது.


பிலிம் பேர் அவார்டுக்கு டகால்டி பண்ணி ஹாலுக்கு உள்ளே நுழையும் காட்சி டாப் என்றால் தன் உள்ளங்கவர் நடிகையை கவர தமிழ் ஹீரோ மாதிரி சண்டையிடும் ஹூட்டிங்க் காட்சி விவிசி.


ஹீரோயின் புதுமுகம் தீபிகா படுகோனே - பிரபல பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேவின் மகள். அம்மணிக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்து இருக்கு. ஷாரூக் படத்தில் ஹீரோயின்(கள்) எல்லாம் எம்டிஆர் ஆவக்காய் ஊறுகாய் கணக்கா சும்மா தொட்டு கொள்ள வந்து போவார்கள். இதில் தலை கீழ். அம்மணிக்கு நடிப்பதற்க்கு செம வாய்ப்பு. அழகாய் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
வர வர கலி முத்தி விட்டது. பின்ன என்ன, சல்மான் தான் சட்டை இல்லாமல் பாடல் காட்சியில் வலம் வருவார் என்றால் இந்த ஷாரூக் கூட சட்டை இல்லாமல் ஐட்டம் சாங்க் ஆடுகிறார்.
காமிரா நம்ம ஊர் மணிகண்டன். படம் முழுக்க கண்ணை உறுத்தாத வகையில் காமிரா கோணங்கள். கலை சாபு சிரில்.படத்தில் வரும் பிரமாண்ட ஸ்டுடியோ செட்கள் சும்மா அதிருது.


ரெண்டு பாட்டு முணுமுணுக்க வைக்குது.
ஒரு பாட்டுக்கு ஹிந்தி படவுலகே திரண்டு வந்து ஷாரூக்கோடு ஆட்டம் போடுகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்திய மீஜிக் டைரக்டர் பாட்டுகளை சும்மா காத்தாட விட்டு விட்டார்.
ரெண்டாம் பாதி கொஞ்சம் ஜவ்வா இழுக்குது. முடிவு எல்லாம் நாம் அதுவும் தமிழர்கள் ஈசியா யூகிக்க கூடியது தான். நெஞ்சம் மறப்பதில்லை!னு ஆரம்பிச்சு, நானே வருவேன்! வரைக்கும் எத்தனை தமிழ் படம் பாத்து இருப்போம்.
சும்மா உங்க பிரண்ட்ஸோடு ஜாலியா போயிட்டு வாங்க. படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
ஷாரூக் சொந்த காசை போட்டு படம் எடுத்ருக்கார்.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாம். கல்லா களை கட்டியாச்சாம்.

28 comments:

Dreamzz said...

அம்பி, இன்னும் படம் பாக்கல! நீங்க சொல்றத பாத்தா ரொம்ப logicallaana padam pola :D

Blogeswari said...

hey ambi,

Anda "rascal-aa" tamizh cinema spoof scene la director-a act pandradudaan cameraman Manikandan.. Inda Sappaati maavu aalungalukku, oru Soueeth Indian-a galatta pannalainna tookam varraadu pola irukke

btw this actor manojkumar is planning to file a suit against Saaruk and co. because he was 'insulted' in the film.
Aaana sooraj barjatya has kinda taken it cool-aam avaroda spoof-a

Oops, ennoda review kku save pannadellam unoda comment box la pottutenne... paravalla appavaavadu unakku gilli/ desipundit pondravargalin arul kedaikkatum

Anbudan

Thangachee

Anonymous said...

blogeswari,
Blogkut'la எல்லாம் ஓம் சாந்தி ஓம்னு எழுதி கிழிச்சுட்டாங்க.. இன்னும் நீங்க எழுதலையா? இல்லே blogkut பத்தி தெரியாதா?

மதுரையம்பதி said...

//மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?//

இது, இது....எப்படிப்பா இப்படியெல்லாம் முத்திரை பதிக்கற?

நாகை சிவா said...

நமக்கு இந்தி படம்னாலே அலர்ஜி. இருந்தாலும் இந்த படம் பாக்கலாம் என்று இருக்கேன்...எல்லாம் தீபிகா வுக்காக தான் :)

G.Ragavan said...

ஐயோ! என்னங்க இப்பிடி விமர்சனம் எழுதீட்டீங்க!!!! நானும் இந்தப் படத்தப் பாத்தேன். தொடக்கக் காட்சிகள் நல்லாருந்தாலும்.... போகப் போக ஒரே கழுத்தறுப்பு.

Singing in the rain படத்துல இருந்து எக்கச்சக்கமா சுட்டிருக்காங்க டைரடக்டரு அம்மணி. ஆனா ரொம்பவே கொழம்பீருக்காங்க. காமெடியாக் கொண்டு போறதா சீரியசா கொண்டு போறதான்னு நெறைய டவுட்டு இருந்திருக்குன்னு நெனைக்கிறேன். Spoofன்னு சிரிச்சிக்கிட்டேயிருக்கவும் முடியலை...சீரியஸ்னும் இருக்க முடியலை.

வில்லனா நடிச்சவரும் கதாநாயகியா நடிச்சவங்களும் கதாநாயகனுக்கு அம்மாவா நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. என்னது ஷாருக்கானா...அவரு இருக்காரா படத்துல...ஆமா...ஒருத்தர் அடிக்கடி எரிச்சல் படுத்தீட்டே இருந்தாரு. அவர்தான.

manipayal said...

"மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?"

As Usual சூப்பர் அம்பி

Anonymous said...

padam innum parkala.inime thaan.message,cellphone humour nalla irundhucchu.kalyana annale humour sense jaasthi ayidum pola.
nivi.

Anonymous said...

neenga padam pakka ponadhu nalla kadhainno illa shahrukhkagova illa, deepika akka pakka thana-unmaiya othkkanum,illana ummachi kanna kuthum aama solliten.message irundha enna kadhai irundhha enna.thangmani sakshiya unmai sollunga parpom!!!!!!!!!!
nivi.

mgnithi said...

//படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
//
L.O.L

Intha weekend thaan porathukku plan pannanum...

வல்லிசிம்ஹன் said...

rascal-aa" tamizh cinema spoof scene la director-a act pandradudaan cameraman Manikandan..//
நம்ம தமிழ்ப் படத்தை யூஸ் செய்து சந்தோஷப்படட்டும்:((
மத்தபடி இந்த டிரைலர்ல எல்லா ஸ்டார்ஸும் டான்ஸ் ஆடறாங்களே.
அதெல்லாம் எப்படி?
சட்டை இல்லாத ஷருக் கானா.
சாமி !!! முடியாது.
பார்க்கமுடியாது.
பழைய மைக்கேல் ஜாக்ஸன் சாயல் வந்து பயமுறுத்தும்:)))

Arunkumar said...

//
மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
//
ungalukku mattum thaan varum :)

வேதா said...

நேத்து தான் இந்த படத்தை பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி மெசேஜ், லாஜிக் இதெல்லாம் எதிர்ப்பார்க்காம பார்த்தா பொழுதுபோக்குக்கு நல்ல உத்தரவாதம் :) 70ல வர்ர ஷாருக்கான் காமெடியெல்லாம் நல்லா இருந்தது அதுவும் நம்ம தமிழ் பட கதாநாயகர்களை வச்சு நல்லா காமெடி பண்ணிட்டாங்க :) dard-e-disco பாட்டை கண்ண மூடிக்கிட்டு கேட்டா நல்லா இருக்கும்(ஷாருக்கானுக்கு வயசாகிடுச்சுன்னு யாராவது நினைவுப்படுத்துங்கப்பா :))

வேதா said...

சொல்ல மறந்துட்டேனே தீபிகா ரொம்ப அழகா இருக்காங்க :) முதல் பாதியில அழகா காமிச்சுட்டு அடுத்த பாதியில உரிச்ச கோழியாக்கிட்டாங்க :(

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், இது ஒண்ணு தான் சொந்த எழுத்துனு புரியுது!!!! :P :P

Dubukku said...

இனிமே தான் பார்க்கனும். தனியாவா போன? என்ன நடக்குது அங்க??? வர்றேன் வீட்டுலேர்ந்து கால் பண்ண சொல்றேன் :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

படம் நல்லா இல்லை.. யாம் பெற்ற துன்பம் இவ்வையகமும் பெறுகன்னு சொல்ற மாதிரியே இருக்குண்ணே.. அதானே? :-)

ambi said...

@dreamz,படம் ஒரு தரம் பாக்கலாம்.

@b'wari, யக்கா! பட ரிவியூல உங்கள அடிச்சுக்க முடியுமா? :p

@M'pathi, முத்திரையா? இது காமடி தானே? :))

@puli, அது! என்னடா புலி திருந்திடுச்சோனு பாத்தேன். :p

@வாங்க ஜி.ரா, ஒரு தரம் பாக்கலாம்!ணு தானே எழுதி இருக்கேன்.

@m'payal,நன்றி ஹை.

@nivi, ஏற்கனவே நிறைய மண்டகபடி கிடைச்சது. நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாச்சாதீங்க. :)))

@mgnithi, படம் பாத்தாச்சா?

@valli simhan, கரக்ட்டா சொன்னீங்க மா!

@அருண், அட பிளாக் பக்கம் எல்லாம் கூட வறீயா? :))

ambi said...

@veda, தீபிகா எப்படி இருந்தாலும் அழகு தான்! :p

@geetha paati, புரிஞ்சதா? ரெம்ப சந்தோஷம்.

@dubukku, தனியா இல்ல, டீம்ல உள்ளாவங்க கூட தான் போனேன். ஏற்கனவே இங்க பத்திட்டு எரியுது. :))

@myfriend, அதே தான்! :p

Kittu said...

namakku indha hindhi padam romba puriyaadhu...yeadho dvd la subtitle irundha appappo paappaen..adhuvum nalla heroine laam vandhutta andha subtitlum eppadi marayudhunnu puriyala

review is good with ambi punch. solraa maadhiri, vara vara item number ellaam ippo hindi namba hero pasanga dhaan romba aadraanunga...verum shirtoda niruthinaa nallathu...

heroine vandha naeram, sadai mudiyoda suthindu irundha namba pullayaanda DHONI ippo trimaa HERO maadhiri irukkaan...eppadi dhaan pudikkaraanungannu theriyavae maataengudhu...hmmm

indha shah rukh khan'a vechi shankar enna panraar paarpom...ROBO nu solli shah rukh khan aniyaayaththukku Robo maadhiri ellam nadandhu namba uyir edukkaamam irundhaa sari

சீனு said...

//btw this actor manojkumar is planning to file a suit against Saaruk and co.//

முகத்த மூடியபடி நடிப்பாரே. அந்த கதாபாத்திரம் தானே? ஏதற்கு முகம் மூடி நடிக்கிறார்? யாருக்காவது தெரியுமா?

கைப்புள்ள said...

//இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க//

தலைவி கீதா மேடம் நம்ம ரெண்டு பேரையும் அடிக்கடி கேப்பாங்களே அது தான் ஞாபகத்துக்கு வருது. நீங்க மட்டும் நல்லா டிரெய்னிங் எடுத்து இட்லி மாவாட்டறது பதமா ஆட்டறது எப்படின்னு கத்துக்குட்டீங்கன்னு தெரியுது. நான் தான் இட்லி மாவுக்கு எவ்வளவு உளுந்து போடனும்னு தெரிஞ்சிக்கிடாததனால டெய்லி அடி வாங்கிக்கிட்டிருக்கேன்.
:(

சரி...Three more days to go. கரெக்டா ஆஜராயிடறேன். மாவரைச்சு இட்லி சுட்டு வைங்க (கடவுளே! மறக்காம இருக்கனுமே!)
:)

தி. ரா. ச.(T.R.C.) said...

படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?

அப்படியெல்லாம் சொல்லமாட்டோம் அம்பி பாக்கற பட்ம் எப்படி இருக்கும்னு தெரியுமே

Blogeswari thangachi said...

Happy birthday ambi!

கீதா சாம்பசிவம் said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி, கொஞ்சம் இல்லை, 2 நாள் தாமதம் ஆயிடுச்சு, என்றாலும் உங்க நட்சத்திரப் பிறந்த நாள் வந்திருக்காது இல்லையா, மறுபடியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Marutham said...

Periya aalu dhan ponga!

ambi said...

//adhuvum nalla heroine laam vandhutta andha subtitlum eppadi marayudhunnu puriyala
//

@kittu mama, அப்படியா சங்கதி? கிட்டு மாமி கவனிச்சுபாங்க மீதியை. :p

//ஏதற்கு முகம் மூடி நடிக்கிறார்? யாருக்காவது தெரியுமா?
//
@cheenu, எனக்கும் தெரியலங்கண்ணா! :)

//நான் தான் இட்லி மாவுக்கு எவ்வளவு உளுந்து போடனும்னு தெரிஞ்சிக்கிடாததனால டெய்லி அடி வாங்கிக்கிட்டிருக்கேன்.
//
@kaipullai, அடடா! தல உங்களுக்கா இந்த நிலம? :p

//அம்பி பாக்கற பட்ம் எப்படி இருக்கும்னு தெரியுமே
//
@TRC sir, அதானே! என்னடா டேமேஜ் பண்ணலையே?னு பார்த்தேன். :))

@b'wari akka, thanks yekka. :)

//கொஞ்சம் இல்லை, 2 நாள் தாமதம் ஆயிடுச்சு,//

@geetha paatti, நோ ப்ராப்ளம். நீண்க்க எப்போ சொன்னாலும் அது புதுசு தான். :p

//Periya aalu dhan ponga!
//
@marutham, புரியலையே?

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信