Thursday, November 15, 2007

வேல்


முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின் மறுப்ரதியாகவே கருதபடுகிறது. முருகனடியார்கள் வேலை தம் இல்லத்தில் வைத்து வணங்குவது வழக்கம். திருபரங்குன்றத்தில் கூட வேலுக்கு தான் சகல விதமான அபிஷேகங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.(தகவல் தவறாயிருப்பின், வலிக்காமல் குட்டி திருத்தவும்).

கந்த சஷ்டி கவசத்தில் முருகனை பாதாதிகேசம் அழகாக வர்ணித்த பால தேவராயர், முருகன் கை வேலை அடியவர் தம் அனைத்து அவயங்களையும் காக்க வருமாறு அழைக்கிறார். பக்தர்தம் துன்பத்தை போக்க, எப்படி விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் விரைந்து வருமோ அதை போல முருகன் வருமுன் அவனது கைவேல் விரைந்து வந்து விடுமாம்.

பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான். அது மலேசியாவாகட்டும், சிங்கப்பூர், லன்டன், அமெரிக்கா என முருகனடியார்கள் அவனது திருபுகழை பாடி பரவசமடைகிறார்கள். இதனால் தானோ என்னவோ அம்பிகையை பாடி வந்த ஆதிசங்கரர் திருசெந்தூரில் குடி கொண்டிருக்கும் முருகனை சுப்ரமண்ய புஜங்கம் பாடி வழிபட்டார்.
சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.

இன்று கந்த சஷ்டி. திருசெந்தூரில் மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி நிற்கும். அகங்காரம் அழித்து, பகைவருக்கும் அருள் புரிந்து நிற்பான் கந்தன்.
சரவண பவ! என வள்ளி கணவனை காவடி சிந்து பாடி, கூவி அழைத்தால் கண்டிப்பாக குரல் குடுப்பான்.


பி.கு: தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
சென்ற வருட பதிவு இங்கே

12 comments:

ரசிகன் said...

அல்வாவுக்கு மாற்று பஞ்சாமிர்தமா?..சூப்பர்..

எனக்கென்னவோ..படையப்பா படத்துல ரஜினி வேல வைச்சி காட்டுன வித்த தா ஞாபகத்துக்கு வருது..
// பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான்.//
அதனாலதான் தமிழ்க்கடவுள்ங்கராங்க...(முருகரும் ,அகத்தியரும் டிஸ்கஸ் பண்ணித்தேன் தமிழுக்கு கிராமர் வகுத்தாங்கன்னு கூட சொல்லுவாங்க.(.இது தப்பாயிருந்தாக்கா. வலிக்கற மாதிரியே..கொட்டலாம்....... அம்பியை..)

cheena (சீனா) said...

சஷ்டி தினங்களில் வேலைப் பற்றி ஒரு பதிவு. உண்மை. வேல் சக்தியின் அம்சம் தான். வேலை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் வேலுக்கு அபிஷேகம் செய்வது உண்மை. தகவல் உண்மை.

தவறில்லை எனினும் அழுத்திக் குட்டி பாராட்டுகளித் தெரிவிக்கலாமே - தெரிவிக்கிறேன்

மு.கார்த்திகேயன் said...

எதற்கு பதிவு இடவில்லையென்றாலும் முருகனின் திரு தினத்தன்று சரியாக அவனை பற்றி இட்டு விடுகிறாய் அம்பி! ஆனந்தம்.. இன்றைய நாளில் அவனை பற்றி படிக்கின்ற ஒவ்வொரு வாசகமும் திருவாசகம் தான்.. ஹ்ம்ம்.. திருநெல்வேலிக்காரன் என்பதை சரியாக நிரூபிக்கிறாய் அம்பி.. வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டவர் தானே கட்டபொம்மன்..

Dreamzz said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvv!

ippadiya aapu veikarutu!

Anonymous said...

murugaa...naan kadavul muruganai sonnen :P

//தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
//
singapore ku oru parcel annupidunga ambi

G3 said...

//avvvvvvvvvvvvvvvvvvvvvvv!
ippadiya aapu veikarutu!//

ரிப்பீட்டே :)

////தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
//
singapore ku oru parcel annupidunga ambi//

சென்னைக்கும் ஒரு 4 பார்சல் ப்ளீஸ் :)

ambi said...

//முருகரும் ,அகத்தியரும் டிஸ்கஸ் பண்ணித்தேன் தமிழுக்கு கிராமர் வகுத்தாங்கன்னு கூட சொல்லுவாங்க//

@rasigan, எனக்கு சரியா தெரியலை. :(

//இது தப்பாயிருந்தாக்கா. வலிக்கற மாதிரியே..கொட்டலாம்....... அம்பியை..)//

யோவ், அள்ளி விட்டது நீ, கொட்டு வாங்கறது நானா? :)))

//வேலுக்கு அபிஷேகம் செய்வது உண்மை. தகவல் உண்மை.
//
@cheena sir, யப்பா! என் வயத்துல பாலை வார்த்தீங்க சார். :)

//தவறில்லை எனினும் அழுத்திக் குட்டி பாராட்டுகளித் தெரிவிக்கலாமே - தெரிவிக்கிறேன்
//
குட்டி இல்ல, முதுகுல தட்டி ஹிஹி! :p

//முருகனின் திரு தினத்தன்று சரியாக அவனை பற்றி இட்டு விடுகிறாய் அம்பி! //
@karthik, அவன் எழுத வைக்கிறான். இந்த அடியவன் கிறுக்குகிறான். :))

//ippadiya aapu veikarutu!
//
@dreamz, ஆப்பா! அப்படினா என்ன? :p

//singapore ku oru parcel annupidunga ambi
//
@durga, done. :)

//சென்னைக்கும் ஒரு 4 பார்சல் ப்ளீஸ் :)
//
@g3 akka, உங்க ரேஞ்சுக்கு நாலு போதுமா? :p

@veda, அனுப்பி வைச்சாச்சு, :))

மெளலி (மதுரையம்பதி) said...

தம்பி (கணேசன் தனியா பதிவுகள் போடும்வரையில் நீங்க எழுதுவதை அதுவும் ஆன்மீகம் எழுதுவதை நான் நம்பப்போவதில்லை :) ),

ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் எழுதக் காராணம் அந்த சமயத்தில் அவருக்கு சில ரோகங்கள் இருந்ததாகவும், சுப்ரமண்யனே பன்னீர் இலையில் மருந்திட்டதாகவும் படித்த நினைவு....

அகாலங்களில் பக்தர்கள் தரும் பால்/பன்னீர் போன்றவற்றை, பக்தர்கள் மனம் கோணாமல் வேலுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கிறார்கள்...மற்றபடி கால பூஜைகளெல்லாம் குடைவரை மூர்த்திக்கே. அதிலும் அங்குள்ள ஈசனுக்குத்தான் முதல் பூஜை.

சக்திவேல் முருகனுக்கு அரோகரா...

Anonymous said...

thankyou for the info ambi.nice one,
nive.

ரசிகன் said...

// யோவ், அள்ளி விட்டது நீ, கொட்டு வாங்கறது நானா? :)))//

ஆனாக்கா..ஆரம்பிச்சி வைச்சது அம்பிதான?..அதுக்குத்தேன்..ஹிஹி..

நாகை சிவா said...

வெற்றிவேல் வீர வேல்...

அந்த வேல் வாங்க கந்தன் சிக்கலுக்கு வந்து தான் ஆகனும்...

இந்த வேல் பாக்க இந்த தடவை குடுத்து வைக்கல அதனால் அந்த வேல் பாத்தாச்சு... :)

தி. ரா. ச.(T.R.C.) said...

சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.
நீங்க விரதம் இருந்தீங்களா அண்ணா?