Tuesday, November 06, 2007

தல தீபாவளிலூசா இருக்கும் டிராயரை அடிக்கடி தூக்கி விட்டு கொண்டு, காமராஜர் மாதிரி முழங்கை வரைக்கும் சட்டை போட்டு கொண்டு, ஓடி ஓடி பிஜிலி வெடி போட்டு, பொதிகை டிவில ரஜினி, கமல் புது பட டிரெயிலர் பார்த்து பெருமூச்சு விட்டு, அம்மா செஞ்சு வெச்ச கேசரில ஆரம்பிச்சு, பக்கத்து வீட்டு ஆன்டி குடுத்த கல்கோனா (மைசூர் பாகுனு அவங்க சொல்லிக்குவாங்க) வரை உள்ளே தள்ளி, அடுத்த நாளே கார்க் புடுங்கி தீபாவளி கொண்டாடிய நாட்கள் போய், பத்து நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் லீவுக்காக மேனேஜர் கேபினுக்கு காவடி எடுத்து, டிரேயின் எல்லாம் கோட்டை விட்டு, பாடவதி பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக ஊருக்கு போய், பாத்து பாத்து வாங்கிய புடவையை அம்மாக்கு குடுத்து அவர்கள் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒளிர்ந்து மறையும் புன்னகையை பாத்து சந்தோஷப்பட்டு, தீபாவளி கொண்டாடிய காலமும் கடந்து போய்,புடவை எல்லாம் இந்த பெங்களூரில் ஒன்னும் சரியா அமையாது! எல்லாம் சென்னைல பாத்து, கேட்டு உனக்கு எடுத்து தரேன், இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.

தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?

ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம். இப்ப எந்த ரங்குவாவது வாய் திறந்து கேட்க முடியுமா? இல்ல, நினைக்க தான் முடியுமா? பின்னி பிரிய கழட்டிடுவாங்க இல்ல? :)

சென்னைல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது. இதுல எங்க போய் வெடி வெடிக்க? அப்படியே வெடிச்சாலும், எல்லாம் புஸ்ஸுனு தான் போக போகுது. அதனால பேசாம, மாமியார் செஞ்ச மிகசரோட சோபாவுல செட்டில் ஆயிட்டோம்னா நமீதாவோட சேர்ந்து நாமளும் தீபாவளி கொண்டாடிடலாம்.

என்னை போலவே தல தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ் ஆகிய எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் தல தீபாவளி கொண்டாட ரெடியாக இருக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்.

42 comments:

Marutham said...

Hayaaaaaaa :P
me comingsssssssss first :D

Marutham said...

namba mudiya villaaaaaaaaaaai :D

Ok ok..Mudhala ungalukum ammanikum
"INIYA THALAI DEEPAVALI VAAZHTHUKKAL"
Romba nalaku apram unga blog'ku vandha mari iruku :D hehe

May god bless you with all the best in the world ;)

PS: Pic- adhukena..podunga podunga..
nala dhan iruku :P


Hehe

Cheers,
Marutham.

மு.கார்த்திகேயன் said...

தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்பி!

பதிவு போட்டு மழுப்பினதெல்லாம் சரி.. எவ்ளோ கறந்தீங்க மாமனரிடமிருந்து.

Anonymous said...

happy thalai deepavalivazhtukkal sir ambi ungalukuu and unga thangamanikku.mamiyar mamanar gavanippula diwali sweet ellam sapittu innum 10 kilo weight erra innum advance wishes.
nivi.

Anonymous said...

romba azhaga ezhithi irukeenga diwali mun/pin avasthaiya.diwali budget evallo.50000 kuranjju pattu edukallanaa unga mariyadha ennavardhu?? happy shopping in kumarans/pothys/saravanas/nallis/chennai silks/yappa idha solradukke moochu muttudhu!!!!!!!.
nivi.

Anonymous said...

thangamani madam ,ponnagai vennamma unpunnagaiye podhummnu ambi emathidiporaru.amma sollitten.
nivi.

Anonymous said...

idha ellam vida deepa oliyana innannalil ungai vazhvil ella nalamum petru ungal vazhvil oli minna iraivanai vendukiren.
nivi.

Anonymous said...

idha ellam vida deepa oliyana innannalil ungai vazhvil ella nalamum petru ungal vazhvil oli minna iraivanai vendukiren.
nivi.

Kittu said...

Thalai deepavali vaazthukkal to you and thangamani.

//தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?

unga kitta naanga kekka pora kelvi vera ?
//தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? Thangamaa Vairamaa :) ??

Kittu said...

இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.

enna pudavai pathi pesareenga ? unga thangamani neenga vaira necklace vaangi thara poradha oor fulla solitrukaanga ! theriyadhaa :)
-K maami

Kittu said...

பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்


awwwwwwwwwwwwwwwww....
Birilliant neenga.

-K mam(i)

இலவசக்கொத்தனார் said...

லிஸ்டில் இருக்கும் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Arunkumar said...

thala deepavali kondaadum engal thala vaazhga vaazhga !!!

Arunkumar said...

APPY THALA DEEPAVALI to ALL thalai's :)

Arunkumar said...

APPY THALA DEEPAVALI to ALL thalai's :)

Arunkumar said...

//
50000 kuranjju pattu edukallanaa unga mariyadha ennavardhu??
//
@nivi
thala mela en ungalukku indha kolaveri? nalla irunga :)

துளசி கோபால் said...

த(ல)லைதீபாவளிக்கு வாழ்த்து(க்)கள்.

அம்மாவுக்குப் புடவை.....பார்த்துப்பார்த்தா.....?

ம்ம்ம்ம்ம்ம் யாரைப்பார்த்து? :-))))

பரம்பராப் பட்டு போதுமுன்ஞு பட்டுனு சொல்லிட்டாங்களா உங்க தங்கmoney?

cheena (சீனா) said...

துளசி, பாத்துப் பாத்து புடவை அம்மாக்கு வாங்கினது அந்தக்கால தீபாவளிக்கு. இப்போ தான் தங்கமணியையே டீல்லே விட்டுட்டாரே !! அம்மாக்கு ஏது பரம்பரா பட்டு.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அம்மாஞ்சி, தல தீவாளிக்கு மாமனாரை ஒரு வழி பண்றது கீதா பாட்டி (??) காலத்துலே மட்டுமில்லெ - இப்போவும் தொடர்ரது. விடாதீங்கண்ணா !

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணனுக்கும் அண்ணிக்கும், தலை தீபாவளி வாழ்த்துக்கள். :-)

Anonymous said...

vaazthukkal ! :)

and namma thala ajith padatha pottathukku thanks :)

ambi said...

//May god bless you with all the best in the world ;//
@marutham, நன்றி ஹை!

//nala dhan iruku //
அதானே! பாத்து, ஷாலினி அண்ணி சண்டைக்கு வர போறாங்க.

//எவ்ளோ கறந்தீங்க மாமனரிடமிருந்து.
//
@karthik, அவரோட நன்மதிப்பை. பாசத்தை, நம்பிக்கையை, மரியாதையை. என்ன இது போதுமா? :))

//50000 kuranjju pattu edukallanaa unga mariyadha ennavardhu?? //
@நிவி அக்கா/அண்ணா, நல்லா வெச்சீங்க வேட்டு எனக்கு. :p

//ponnagai vennamma unpunnagaiye podhummnu ambi emathidiporaru.//
ஆஹா! இது வேறயா? அந்த பாச்சா எல்லாம் இப்ப பலிப்பதில்லை. அவங்களும் வெவரமாயிட்டாங்க. :))

//ungai vazhvil ella nalamum petru ungal vazhvil oli minna iraivanai vendukiren.
//
தங்கள் அன்பை பெற்று தன்யனானேன். நானும் பிரார்த்திக்கறேன். :)

//Thangamaa Vairamaa //
@k-mama, என் தங்கமே! வைரமே!னு வேணா கூப்டுறேன். :p

//neenga vaira necklace vaangi thara poradha oor fulla solitrukaanga ! theriyadhaa //

k-mami, என் பதிவு மூலாமா கிட்டு மாமாகிட்ட மெசேஜ் சொல்லியாச்சு போலிருக்கே! :p


//லிஸ்டில் இருக்கும் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
//

@koths, லிஸ்டுல என் பெயர் இல்லையே! அப்ப எனக்கு? :p

//thala deepavali kondaadum engal thala vaazhga vaazhga !!!
//
@arun, தல எல்லாம் வேணாம்பா! ரெம்ப கூச்சமா இருக்கு. :))

//அம்மாவுக்குப் புடவை.....பார்த்துப்பார்த்தா.....?

ம்ம்ம்ம்ம்ம் யாரைப்பார்த்து?//
@thulasi teacher, ஹிஹி, டீச்சர், கரக்ட்டா காதை திருகறாங்க பா! :p

//பரம்பராப் பட்டு போதுமுன்ஞு பட்டுனு சொல்லிட்டாங்களா உங்க தங்கmoney?
//
அது கூட பரவாயில்ல, நகாசு பட்டு கேக்காம இருந்தா சரி. :))


//இப்போ தான் தங்கமணியையே டீல்லே விட்டுட்டாரே !! அம்மாக்கு ஏது பரம்பரா பட்டு.
//
//கீதா பாட்டி (??) காலத்துலே மட்டுமில்லெ - இப்போவும் தொடர்ரது. விடாதீங்கண்ணா !
//
@cheena, நல்லா கோர்த்து விடறீங்க பா! :p

@my friend, நன்றி ஹை! :))

mgnithi said...

Thalai diwali vaazthukal Dude..

G3 said...

இனிய தலை தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க தங்கமணிக்கும் + இனிய தீபாவளி வாழ்த்துக்கள் எல்லா ப்ளாக் மக்களுக்கும் :)

கைப்புள்ள said...

அடடா! என்னையும் ஞாபகம் வச்சிருந்து வாழ்த்து சொல்லிருக்கும் தனுர் லக்ன தெய்வக் குழந்தை அம்பிக்கு ஒரு ஜே!

உங்களுக்கும் இனிய தலை தீபாவளி வாழ்த்துகள்.

டிசம்பர் ஒன்னாம் தேதி திரும்பவும் வருவேன்.
:))

கைப்புள்ள said...

//தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்பி!//

கார்த்திகேயன்,
ரொம்ப நாளாச்சு. உங்க புது ப்ரொஃபைல் படத்தைப் பாக்கும் போது அசப்புல மெட்டி ஒலி, சிவாஜி புகழ் "போஸ் வெங்கட்" மாதிரியே இருக்குங்க.
:)

வேதா said...

உங்களுக்கும் உங்க தங்கமணிக்கும் தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்பி :)

Ponnarasi Kothandaraman said...

Wow! :) Happy Diwali...Photo punchuuuuu! :D

ரசிகன் said...

அம்பிக்கு என் பங்கு.மனங்கனிந்த. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

CVR said...

thalai deepavali vaazthukkal thala!! :-D
and for anni too!! ;)

நாகை சிவா said...

இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

நீங்க பயப்படாம தைரியமா டிமாண்ட் பண்ணுங்க அண்ணாத்த... உங்க திறமை உங்களுக்கு தெரியாது ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம்

அவுங்க பாட்டுக்கு (சாம்ப)சிவமேன்னு அம்பத்தூஊஊஊர்ல இருக்காங்க.எதுக்கு சீண்டனும்?

கீதா சாம்பசிவம் said...

எல்லாரும் என் மண்டையை நான் இல்லாதப்போ உருட்டியாச்சா? சரி, சரி, அம்பி, வரும்போது வாங்கிட்டு வரச் சொன்னேனே, அதை எல்லாம் நீங்க வர முடியாட்டியும் திராச, சார் வீட்டிலே கொடுத்துட்டா நான் போய் கலெக்ட் பண்ணிக்குவேன், அப்புறம், இந்தச் சிண்டு முடியற நாரதர் வேலை ஃபோனிலே கூட ஆரம்பிச்சதும், மாமனார் வீட்டிலே சமையல் செய்யறது, பாத்திரம் தேய்க்கிறதுனு எல்லாம் வெளியே வரும்! எல்லாம்னா எல்லாமே தான்! :P :P பாட்டியா நானு? எல்லாரையும் கிளப்பியா விடறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Kittu said...

ambi,
thalai deepavali..ennada thiruppi solraennu ninaikka vaendaam...neenga solraa maadhiri unga padhivhu ellam kittu mami rss feed vaziya vandhu saerndhudum

about this post- excellent writing. moochu vidaadha paadal maadhiri moochu vidaadha uranadai adahula konjam siruppu vedi vechu original deepavali effect...

Ranguvo konguvo, mothathula namakku eppavum sombu dhaan ponga...thangamanikkum wishes sollidunga...OK vaa

Anonymous said...

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

மங்களூர் சிவா said...

தீவாளில்லாம் நன்னா ஆச்சா?
belated wishes

Dreamzz said...

Belated Happy Diwali!

Raji said...

Belated thala Diwali vazhuthukkal to u n ur thangamani :)

Raji said...

Thala thala dhaan :P

Raj said...

ayya ambi,

blogkku puthu aal naan.
ungkal matterlaam padichen naina.
summary yaa paarththa ...athanga mothama paartha !!!- ayya neengka office vitta thollaikatchiyila utkaarnthu pathmapriyala irunthu
paravai muniyamma varaikkum paarrrrrrrthukkkitteeeeeeeeee
irukkurathu thaan velai polirukku...thangamani kitta solli ungka oorukke cable cut panna solla vendiyathu thaan...

athu oru side irukkattumppa...unga blogs super...nanri..

Anonymous said...

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信