Monday, October 15, 2007

விளம்பரங்கள்

அது என்னவோ தெரியல, சின்ன குழந்தையில இருந்தே எனக்கு டிவில வரும் விளம்பரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு. முதலில் பாடல்கள், மியூசிக், என வளர்ந்த அந்த ஆர்வம், பின் அந்த விளம்பரத்தை படமாக்கிய விதம், ஒளி அமைப்பு, சொல்லிய விதம், தேர்ந்தெடுத்த நடிகர்கள் என நோண்டி பார்க்க வைத்தது.

ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.

டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.

காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.

பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!

எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.

"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.

போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"

சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.

எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)

பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.

31 comments:

கீதா சாம்பசிவம் said...

விளம்பரம் கொடுத்ததினால் தானே, அதுவும் நல்லா இருந்ததால் தானே என்னோட பதிவுக்கு வந்து பாராட்டுத் தெரிவிச்சுட்டுப் போயிருக்கீங்க? டாங்ஸு, டாங்ஸு, நன்றி, நன்னி!

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, நான் ஃபர்ஸ்டு! எனக்கு காட்பரீஸ் சாக்லேட்டு வேணும்!

ambi said...

@geetha madam, உங்களுக்கு ஷுகராமே! அதனால சாக்லேட் கிடையாது. பாகற்காய் ஜூஸ் வேணா தரேன் :p

Sumathi. said...

ஹாய் அம்பி,

//போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார்.//

ஹா ஹா ஹா ஹா....

ஆமாம் சொம்பு அழுதது கூட ஒரு விளம்பரத்துகாக தானே...

mgnithi said...

Technically secondu..
//அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.
//
ha ha..

Sumathi. said...

ஹாய் அம்பி,

//மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர்.//

சரி போட்டும் 3ஷா குடிக்கற ஃபாண்டா குடிச்சு ஒரு வழியா சமாதானமாக வேண்டியது தானே...

mgnithi said...

//சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார்//
enakku therinju oru varushama avar ithu mattum thaan pannitu irukkar...

Blogeswari said...

Thanks ambi :)

Anonymous said...

mgnithi said...
//சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார்//
enakku therinju oru varushama avar ithu mattum thaan pannitu irukkar...

@ mginithi
APPURAM AEPADI AVARUKKU KUZHANTHAI POARANTHUCHCHAM???CHUMMA AETHAVATHU SOLLANUM NU SOLLA KOODATHU AAMA....

நாகை சிவா said...

விளம்பரம் பாக்க தான் நாங்க எல்லாம் சிரியலே பாப்போம்... சிலது பக்காவா இருக்கும்.. சிலது படு மொக்கையா இருக்கும்... தற்சமயம் எனக்கு தெரிஞ்சு படு மொக்கை... Indiatimes & Mirinda...

நாகை சிவா said...

ஆல் டைம் பேவரைட்

கேட்பரீஸ்(பழயது) மற்றும் ஹமாரா பஜாஜ் தான்... :)

மங்களூர் சிவா said...

//அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.
//
good comedy

Dreamzz said...

wow! nalla analysis!

Anonymous said...

ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!

Idhu dhanae ambi... Snehavai sollalaiyae...

Enaku migavum pidicha add - Ahsirwad MILAGAI Thool - V.V.V. Nice.

Oru Bank add - Name gavanikalai.Thatha Peranuku undiyal kodupar.Thatha solli irukar = eppavum vittudadhae nu..Peran pora idam ellam eduthundu pogum.
Manadhai thodum add.

Perana nadicha kid rombavae nalla panni irukum - innocent face udan..

With Love,
Usha Sankar.

Anonymous said...

Geetha ku than sugar - Pagakai juice

Naan first vandhadharku enaku enna?
Navarathri sundalavadhu unda???
Sundal tharen nu sonna - nijama authuku vandhuduven... he he he...

With Love,
Usha Sankar.

k4karthik said...

சூப்பர் போஸ்ட் அம்பி!

உங்களுக்கு மட்டுமில்ல.. விளம்பரங்களின் தாக்கம் கண்டிப்பா எல்லா தரப்பட்ட மக்களையும் ஈர்க்கும்... சினிமா மாதிரி தான் விளம்பரம்னாலும், சொல்ல வர்ற விசயத்த சார்ட் & ஸ்வீட்டா சொல்றதுனாலயும், & நல்லா டெக்னிக்கலா இருக்கிறதுனாலயும், விளம்பரத்துக்கு மேல நமக்கு எப்பவும் ஒரு ஈர்ப்பு இருந்துக்கிட்டே இருக்கு..

இப்போ எல்லாம் மீடியா ஸ்டடீஸ் ஜாஸ்தி வந்துருச்சு.. அதனாலயே நிறைய திறமையான மக்கள் விளம்பரபிரிவுக்கு வந்துட்டு இருக்காங்க.. இப்போ இருக்குற முன்னேறமான தரத்துக்கு அதுவும் முக்கிய காரணம்..

நம்ம ராஜீவ் மேனன் ஒரு விளம்பரத்துக்கு வாங்குற காச வச்சி ராதாமோகன் மாதிரி டைரக்டர் ஒரு படத்தை எடுத்து முடிச்சிடலாம்... அம்புட்டு காசு இந்த பிஸினஸுக்கு ஆகுது...

என்ன.. மீடியாவுக்கு வந்துடுறீங்களா??

k4karthik said...

அடுத்த போஸ்ட்ட சீக்கிரமா போடுங்க...

அந்த லிங்குக்கு நன்றி ஹேய்!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

சரி சரி. நாங்க நேரா ப்ளாகேஸ்வரி ப்ளாகுக்கு போறோம். :-)

G3 said...

Indha posta vida periyyyyyyyyyyyyya vilambaratha naan paathadhilla :P

வேதா said...

இப்ப வர்ர நிகழ்ச்சிகளை விட விளம்பரங்கள் தான் நல்லா இருக்கு, அதுவும் இப்ப தீபாவளி சீசன் ஆரம்பிச்சுடுச்சு என்னமா விளம்பரங்கள் வருது தெரியுமா சூப்பரா கலர்புல்லா இருக்கு :) (நான் கலர்புல்னு சொன்னது புடவை கலர்களை தான் நீங்க வேற ஏதாவது நினைச்சுக்கிட்டு ஜொள்ளு விட்டு பூரிக்கட்டையால அடிவாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்ல அம்பி;))

rohini said...

புதிதாக பிளாக் உலகத்தில் நுழைந்திருக்கிறேன் ...கொஞ்சம் என் ஏடு வள்ளுவத்தைப் புரட்டிப் பாருங்களேன்.கொஞ்சம் வேதாந்தம் கொஞ்சம் நக்கல் ,கொஞ்சம் ஆன்மீகம் என்று காணலாம்.

Sudhakar said...

Nice post.Unmai than ippo ellam padathoda vilambaram than pudichirukku.2 nimitattila oru kadai pattudalame.

ரூபஸ் said...

//போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்//

ஆமாங்க.. சொம்பு செய்தது சரியா ? தவறா ன்னு தனியா ஒரு புரோகிராம் போட்டு கொல்றானுங்க...

இலவசக்கொத்தனார் said...

என்னதான் வசதி இருந்தாலும் இன்னிக்கும் சில விளம்பரங்களைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு, என்ன செய்ய! :))

Pulliraja said...

பெண் ஒரு ஆணைப் பார்த்து : என்னை நீ வெற்றிகொள்ள முன் உன் வாளை உறையிலிடு"


ஹி.ஹி இது ஒரு நீரோத் விளம்பரம்.

Pulliraja said...

பெண் ஒரு ஆணைப் பார்த்து : என்னை நீ வெற்றிகொள்ள முன் உன் வாளை உறையிலிடு"


ஹி.ஹி இது ஒரு நீரோத் விளம்பரம்.

துளசி கோபால் said...

ஆஹா.....கோபால் பல்பொடி......
நினைச்சாலெ 'பல்'லரிக்குது:-))))

விளம்பரங்களுக்கு இருக்கும் 'மவுஸ்'தனியாத்தான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

கீதா என்ன விளம்பரம் கொடுத்தீங்க???
லேட் லத்திஃப் நான்.லேட்டஸ்டா
இப்போ அம்பிக்கு விளம்பரம் தேவை இல்லை:))
பூக்கடையாச்சே:)))
ஒன்லி விமல் மறக்க முடியுமா..வஜ்ரதந்தில வர பூர்ண சுதேசின்ற வார்த்தை புரியாமல்யே ரேடியோல கேட்ட ஞாபகம் வரது.

அப்படி பார்க்கப் போனா இப்ப வர பின்னூட்டங்களின் நம்பரே ஒரு விளம்பரம்தானே.
அம்பி வந்து கமெண்ட் போட்டா மனசுல சந்தோஷம்தான்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த பதிவை இப்போத்தான் படித்தேன் என்பதற்க்கு ஆதாரமாக இந்த பின்னூட்டம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லாம் ஒரு விளம்பரந்தாங்.... ;-)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信