Monday, October 08, 2007

2007 - அல்வா அவார்டுகள்

இந்த வருடத்தில் மிகச் சிறப்பாக அல்வா கிண்டி கொடுத்தவர்கள் யார் யார்? என முதலில் பார்ப்போம். அவர்களில் மிகச்சிறந்த போட்டியாளரை 2007 - சிறப்பாக அல்வா கொடுத்தவராக தேர்ந்தெடுக்கபடுவார்.

போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்

கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!

போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்

நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!

போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி

அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!

போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு

விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.

எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.

அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)

41 comments:

Anonymous said...

Dear ambi,
Neenga sonnengalae nu sincere a yarai select pannalan nu yosichundae blog ai padithal,
அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10
சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :

Ippadi oru comment sonnadhal,

Alwa Awardugal ku - NEENGALAE 100% THAGUDHIYANAVAR ENRU SOLLI KOLLA VIRUMBUGIREN.......
(Alwa kodukaradhu - Yarai patri yar solradhu nu illama pochu....hmm)

With Love,
Usha Sankar.

Karthik Sriram said...

best alwa, in my opinion is from Maran bros only.....

LKS

Dreamzz said...

ஹிஹி! யாருக்கு கொடுக்கனு தெரியல. எல்லார்க்கும் பிரிச்சு கொடுப்பமா?

பாலராஜன்கீதா said...

உங்களுக்கே அல்வா கொடுத்த உங்கள் in-laws அவர்களைப் போட்டியில் சேர்க்காததை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். ;-)

CVR said...

idhula anni ungalukku kodutha (kodutthukkondirukkira) alwas and vice versa add pannalaya?? :P
as usual ROFL post!!

Rock on!! :-D

KK said...

Musharaf'ku than naan vote poduren Uncle :)

//நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!ன//
Veetukku veedu vasapadiya?? :(

Appaavi said...

My Vote is for தேவ கவுடா & குமாரசாமி..... :-)

மங்களூர் சிவா said...

என் ஓட்டும்
தேவ்கவுடா குமாரசாமிக்கு தான்

திரும்ப எலக்சனா இல்ல காங்கிரசோட கூட்டணியா

என்ன நடக்கப்போகுதுன்னும் தெரியல

ம்.... பாப்போம்

வித்யா கலைவாணி said...

என் ஓட்டும்
தேவ்கவுடா குமாரசாமிக்கு தான்

நாகை சிவா said...

சொம்பு வருவது எல்லாம் ஒரு புரோகிராம்னு மதிச்சு நாங்க எல்லாம் என்னிக்குமே பார்ப்பது இல்லை.. அதுனால் சொம்பு போட்டிக்கு தகுதியே கிடையாது. அவங்க அப்பானா அதை விட ஒரு சிறந்த காமெடி ஷோ இதும் இருக்காது என்று விரும்பி பாப்போம் என்பது தனி கதை...

முசாரப்... கண்டிப்பா அல்வா கொடுப்பார் என்பது தெரிந்த செய்தி தான்... சோ.. அவர் ஆரம்ப சுற்றில் காலி....

Marutham said...

Vanakkam ambi :)

ROTFL. Ipdilaam unmaya kuduka mudinja nala irukum. irukradhulaye ROTFL'O'ROFTL enanaa...
//அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! //

WHAT KODUMAI SARU!!!!!! :P

But thamizh cinema'ku idhuvum venum inum venum :P

Semma funny post & manikavum for missing out some posts & for disappearing. :D hehee... Echoose elaam valid dhan :) It isn't that i dnt but could be regular to blogs past few weeks. :) Post'la velakama potruken - padikrahduku munadiye advance'a tea kuduthudren- epdiyum neenga padikrapo mayakam vandhu kepeenga..theriyume :P hehee....

PS: Surprise song apdinu onu upload paniruken adha katayam ketu thititu ponga ;)

நாகை சிவா said...

குமார சாமி & தேவ கவுடா கிண்டி கொடுத்தாலும் சரி வேற யாரு கிண்டி கொடுத்தாலும் சரி இந்த ஆட்சி பகிர்வு விசயத்தில் என்றுமே அல்வா வாங்குவது பி.ஜே.பி க்கு கை வந்த கலை... அதுனால் இவங்க கஷ்டப்பட்ட கிண்டி கொடுத்த போதிலும் போதிய அளவுக்கு மக்களை அடையாதால் வெற்றி வாய்ப்பை தவற விடுகிறார்கள்.

இவங்க எல்லாத்துக்கு மேல... பல வருடங்கள் பல பேருக்கு அல்வா கிண்டி கொடுத்துக்கிட்டு இருந்த உலக தமிழ் இன காவலருக்கே அல்வா கிண்டி கொடுத்தாங்க பாருங்க நம்ம மாறன் சன்ஸ்... அவங்க தான் இந்த வருடத்தின் வெற்றியாளர்கள் என்பது என் முடிவு...

இதுக்காக அப்பால ஆப்பு வாங்கியது எல்லாம் தனி கதை.... அது எதுக்கு இப்போ...

Thambi said...

Dai anna,
//எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது//- maavu pechayarthu yaarunnu onnoda manasa thottu sollu,pattram cleaning mattum nee attha nan otthukkaren.....:)

Regards,
Ganeshan

ambi said...

@usha shankar, அடடா வாங்க அக்கா வாங்க! ரொம்ப நாளா ஆளையே கானோம்? பையனோட நீங்களும் +2 படிக்கறீங்களா? :p

என்னைய வாரறதுக்கு உங்களை விட்டா யாரு இருக்கா? :))

@LKS, உண்மை! உண்மை! :)

@dreamz, அல்வாவை பிரிக்க கூடாது! முழுதாக சாப்பிட்டால் தான் ருசியாக இருக்கும். :)

//உங்களுக்கே அல்வா கொடுத்த உங்கள் in-laws அவர்களைப் போட்டியில் சேர்க்காததை//

@balarajan geetha, ஏன்? ஏன் இந்த வில்லதனம்? கொளுத்தி போட்டாச்சா? இன்னிக்கு இங்க ஷ்டார்ட் மிஜிக் தான். :)

@CVR, அதெல்லாம் சகஜமான அல்வா, உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு. :p

//Musharaf'ku than naan vote poduren Uncle //

@KK, சரிங்க அத்திம்பேர். :p
உனக்கும் இருக்குடி ஒரு நாளைக்கு. :p

@appavi & mangalore shiva, சரிங்க, உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்டது. :)

@vidya kalaivaani, சரிங்க, என் ஓட்டும் அவங்களுக்கு தான்! :)

//ஒரு புரோகிராம்னு மதிச்சு நாங்க எல்லாம் என்னிக்குமே பார்ப்பது இல்லை//

@nagai siva, தெளிவு தான் நீங்க. ரகஸ்யா வந்ருக்காக!னு நாங்க பார்த்தோம், ஹிஹி, நம்பிக்கை வீண் போகலை. என்ன நாலு பூரி கட்டை அடி எக்ஸ்ட்ரா. :p

ஒரு திறனாய்வே நடத்தீட்டீங்க போல, இதுக்கு தான் படிச்சவங்கள பக்கதுல வெச்சுகனும்!னு சொல்றது. :p

@marutham, வாம்மா மின்னல், சந்தடி சாக்குல உன் போஸ்ட்டுக்கு பப்ளிசிட்டி பண்ணிட்டு போயிட்ட, இதோ வதுட்டேன். :)))

ramachandranusha(உஷா) said...

பாலராஜன் கீதா சார், ஊருக்கே பலன் சொல்லுமாம் பல்லி, தானே விழுமாம் கழனி பானையிலே :-)))))
(வார்த்தைகள் சரியா இருக்கா?)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,

இதெல்லாம் ஒரு பெரிய டிராமானு தெரியாம,
இன்னும் நம்ம ஊரில குடியரசுனு நினைக்க வச்சு இருக்காங்க இல்லையா,
அத்னால இவங்க எல்லோருக்கும் அல்வா சகோதர, குடும்பம்னு பட்டம் கொடுக்கலாம்.:)))

mgnithi said...

Deve gowda and Kuamrasamy Rock.. Adada enna oru thiramai..

Irukkara aatchiya kavuthutu kootani arasu amaikkalamnu sonna pothe bjp ku mandaila oru bulb yerinjirukkanum.. Aana etho congressa kavuthite santhoshathula iruntha 20 months kalichu vachanga paaru aapu.. Etho batting gauge adichitu bowling poda maatenu chinna pasanga sollara maathiri irunthuchu...

Best Alwa athu thaan...

mgnithi said...

//சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)//

Nallavan maathirye nadichu neenga kudukara alwa competitionla kidayathaa?

mgnithi said...
This comment has been removed by the author.
mgnithi said...

Shyam annathe treat kudukarennu aasai kaati G3kku juice vaangi kuduthu escape aanare... Athu thaan best of 2007 nu naan ninaikkaren...makkale neenga enna solreenga?

சிங்கம்லே ACE !! said...

//என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்//

இது என்ன அநியாயம். ஒரு 2 மாசம் ப்ளாக் பக்கம் வரலனா காணாம போயிட்டதா முடிவு கட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன். :D

.:: மை ஃபிரண்ட் ::. said...

குத்துங்கைய்யா ஓட்டு.. அம்பி சின்னத்தை பார்த்து. :-)))))))))

Sumathi. said...

ஹாய் அம்பி,

Dai anna,
//maavu pechayarthu yaarunnu onnoda manasa thottu sollu,pattram cleaning mattum nee attha nan otthukkaren.....:)
Regards,
Ganeshan.//

அம்பி, நீங்க வீட்டுக்கு வெளில அல்வா குடுக்கறவங்களைப் பத்தி சர்வே
எடுக்கறீங்க, ஆனா உங்க வீட்டுலயே ஒரு அல்வா குடுக்கற கேசு இருக்கே அது எப்படி? சும்மா அதிருதில்ல!!!?

(summaa thaan oru thamaasukku)

dubukudisciple said...

சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்!///
ippadi ellam pooti vaithu engaludaiya ponna nerathai veenadikkum ungalai naan vanmaiyaga kandikiren

dubukudisciple said...

vanthathuku 25

வேதா said...

ithilenna santhegam 1st candidate thaan alwa koduthathil first :)

வேதா said...

அது சரி உங்க தம்பி அடிக்கடி இப்டி உண்மைய பப்ளிக்கா உடைச்சுட்டு போறாரே அத பத்தி தங்கள் கருத்து என்னவோ? :)

Sasiprabha said...

Indha alwa kodukkum perumaiyellaam Nellai aatkalukke kodukka mudivedukka padugiradhu..

Ponnarasi Kothandaraman said...

Maran bro's alwa than family' preparation ;) alwa'ney theriyama sapidalam!

Arunkumar said...

thala ennoda votu
thavamai thavamirundhu-ku thaan

asatha povadhu yaara minjura alavukku kaamadi panraainga blore-la...

Arunkumar said...

//
"உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு
//
kalakkals :P
ROTFL-O-ROTFL

Arunkumar said...

//
மலேசிய மாரியாத்தா
//
hehe.. LOL
epdi ipdilaan :)

Arunkumar said...

//நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!ன//
Veetukku veedu vasapadiya?? :(


LOL :)

aiyo KK saga neengaluma?

aruma perumaya valathene.. ipdi chapathi pesaya vachitaangale.. :(((((((9

துளசி கோபால் said...

அல்வாவை கர்நாடகாவுக்கே அனுப்பிருங்க.

பல்லிக்கு ஒரு ரைமிங் வரணுமே.....

கழனிப்பானையில் விழுமாம் துள்ளி.

தி. ரா. ச.(T.R.C.) said...

கல்லிடைகுறுச்சிக்கு வாங்கோ உங்களுக்கு அல்வா வாங்கித்தறேன் சொல்லி கொடுக்காம அல்வா கொடுத்தவருக்குத்தான் என் வோட்டு

SKM said...

idhukkudhaan alava TV parkkanumnu sollradhu. Neenga alwa kodukiradhu pathalainu, ivanga yaaru nalla alwa kodukiranga nu test vera?

TRC sir dhan sariya solli irukkar.
atleast yennaku vangi kodutha sandwich aavadhu koduthu irukkalam.;)

Usha said...

ooooi, vantomla!! chappati panna sonna unakedhuku indha velai ellam?? Kekardhuku aale illaya? ;) seri seri, ennai pathi yosichen-nellam dakaldi vidadha ;)

k4karthik said...

adhan neengaley correcta varisaibadi potuteengaley....

Blogeswari said...

ha ha ha.. that babloo-sombu was too much.. I think the award should go to them
////யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!////
please add... aprom 20 varusham kazhicchi.. 9-ayeee(nayan-ayee) correct pannineenaakum!

And listen, why don't we suggest to our "dear" friend to have this as part of his next Mini-Thirai quiz.
"how many times did Bablloo say "adaveeee illai.." and how many times did Sombu say "adaveee illai"

cheena (சீனா) said...

குமாரசாமி சிற்ந்த அல்வா கொடுப்பவர்.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信