Friday, December 05, 2008

சன் டிவி தொகுப்பாளினிகளும் ஒரு குவிஜும்


சன் டிவி தொகுப்பாளினி: நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேப்பேன், அதுக்கு கரக்ட்டான விடை தரனும். சரியா?

நேயர்: சரி.

இந்தியாவின் முதல் பிரதமர் யாரு?

ரொம்ப கஷ்டமா இருக்கே! ஒரு க்ளூ குடுங்க ப்ளீஸ்!

சரி, அவருக்கு ரோஜான்னா ரெம்ப பிடிக்கும்.

எனக்கு தெரிஞ்சு போச்சு! செல்வமணி தானே விடை?

இல்லீங்க, அவருக்கு குழந்தைங்கனா கூட ரெம்ப பிடிக்கும்.

கண்டுபிடிச்சிட்டேன்! அப்துல் கலாம்.

இல்லீங்க, இன்னொரு க்ளூ தரேன். முதல் எழுத்து நே. கடைசி எழுத்து ரு. முத எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் நடுவுல ஒரு எழுத்தும் கிடையாது.

நேயர்: ஐயோ! இது ஒரு க்ளூவா? இன்னும் கொஞ்சம் க்ளூ ப்ளீஸ்!

கம்பியர்: (கடுப்புடன்) நேரு என்ற சரியான விடையை நீங்க யோசிச்சிடீங்கன்னு எனக்கு தெரியுது. வெரி குட். நாம இப்ப ஒரு நல்ல பாடலை பாக்கலாமா?
*******************************************************************
இப்படி ஒரு துணுக்கு க்ரேசி மோகன் டிராமாவில் பார்த்த நியாபகம். இதுக்கும் இந்த குவிஜுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என நான் சொன்னால் நீங்க நம்ப போவதில்லை. :)

அடுத்ததா ஸ்ரீதர் சொன்ன மாதிரி, 'ஐ லவ் யூ ரஸ்னா!' அல்லது 'ஐயம் ஏ காம்ப்ளான் பாய்!' டைப்பில் குவிஜு நடத்தலாமா?னு யோசிச்சுட்டு இருக்கேன்.

இப்போ விடைகளை பார்க்கலாம்:

1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - போத்தீஸ் அல்லது ராஜ் மகால் (ஆமா, ரெண்டுமே சரி தான்)
2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு! - காட்பரீஸ்

3) வெண்மையின் புது மந்திரம்! - பவர் சோப்

4) மனைவி பேச்ச கேளுங்க! - கோடக் Securities
5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன். - டாட்டா இன்டிகாம்
6) தாய் வீட்டு சீதனம். - ஆச்சி மசாலா
7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். - ஏர்டெல் voice mail
8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ! - சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ்.
9) தி டேஸ்ட் ஆப் இந்தியா - அமுல் products
10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! - ஸ்ப்ரேமின்ட்(மவுத் ப்ரெஷ்னர்)

நிலா மற்றும் வித்யா எல்லா விடைகளும் கரக்ட்டா சொல்லி இருக்காங்க. வாழ்த்துக்கள்.


மற்றவர்கள் எத்தனை ரைட்டு?னு அவங்களுக்கே இப்போ தெரியும்னு நினைக்கிறேன். கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் என் நெஞ்சார்ந்த நன்றி! (சே! ஏதோ பொது மேடை பேச்சு மாதிரி என் பிளாக் ஆயிட்டு வருதோ?)


இந்த குவிஜு ஒரு வகையில் சர்வே மாதிரின்னு சொல்லலாம். தமிழகத்தில் மட்டும் காட்டப்படும் விளம்பரங்களை பலரும் சரியாக கண்டுபிடித்து விட்டார்கள். இந்தியா முழுதும் விற்கப்படும் பொருட்களை, சேவைகளை கண்டுபிடிப்பதில் பலரும் சிறிது சிரமப்பட்டு உள்ளார்கள். பலர் எந்த பொருள்? இதுவா? அதுவா? என குழம்பி உள்ளார்கள்.


இவை எல்லாம் அடுத்த குவிஜில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (என்னது அடுத்ததா? நீ அடங்கவே மாட்டியா?னு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்களோ?)

பி.கு: பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இருக்கு தானே? :)

24 comments:

பரிசல்காரன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என்று அழுதுவிட்டு நான் வெளியேறுகிறேன்!!!

Sridhar Narayanan said...

நயந்தாரா போட்டோவும் அப்பளக் குழவியும் போட்டு கூடவே பதமாக் இட்லிக்கு மாவாட்டும் ரெசிப்பி போட்டுக் கொண்டிருந்த அம்பி இப்போ வெவ்வேற விதத்தில் ‘லெவல்’ காட்டுவதைப் பார்க்கும் போது....

என்னத்த சொல்ல. தொடர்ந்து நடத்துங்கள் என்று பாராட்டி விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த கிரேசி மோகன் ஜோக் அவரோட வேற ஒரு நாடகத்துல வேற மாதிரி வரும்.. எப்பவோ கேட்டிருக்கேன் (ஆமா, இது ரொம்ப முக்கியம்.. குவிஸ்ஸுக்குப் பதில் சொல்லாம!)

Sridhar Narayanan said...

முன்னேப் போட்டிருந்த பின்னூட்டம் ஊக்கத்திற்கானது என்று சொல்லிக் கொள்ள ஒரு பின்னூட்டம். சிரிப்பான் விட்டுப் போச்சுப் பாருங்க :-))))

கோவி.கண்ணன் said...

அம்பி கலக்கல் ! :)

வெண்மையின் நிறம் என்ன ?

இது எவ்ளோ கஷ்டமான கேள்வி ?

:)

சென்ஷி said...

:))

ambi said...

எதுக்கு அழறீங்க பரிசல்? :p

@ஸ்ரீதர், லெவல் காட்றோமா? என்ன வெச்சு காமடி பண்றீங்கன்னு மட்டும் தெரியுது. :)

ஸ்மைலி போடலைன்னாலும் நான் லைட்டா தான் எடுத்துப்பேன். (எவ்ளோ அடி வாங்கிருக்கோம் நாம?)

சரியா சொன்னீங்க சுந்தர், அந்த துணுக்கை நான் கொஞ்சம் டச்சப் செய்து விட்டேன். :))

@கோவி அண்ணே, வெண்மையின் புது மந்திரம்ன்னு தானே நான் கேட்டு இருக்கேன். உங்க வரிகளும் சூப்பரா இருக்கு, லக்கிகிட்ட சான்ஸ் கேட்டு பாருங்க. :))

@senshe, மூத்த பதிவர் ஆனதுக்கு வாழ்த்துக்கள். :)))

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர் பாதிக்கு மேலே கரெக்டா சொல்லி இருந்தேன், எல்லாத்தையும் எடிட் பண்ணி இருக்கீங்க, க்ர்ர்ர்ர்ர் நறநறநறநற ராஜ் மஹால் முதல்லேயே சொல்லி இருந்தேன், அப்புறம் அமுல் ப்ராடக்டும் சொல்லி இருந்தேன், நான் வரலை உங்க போண்டி ஆட்டைக்கு! :P:P:P:P:P:P:P:P

தாரணி பிரியா said...

ஹீம் அடுத்த ஆட்டத்தில பார்க்கலாம். எத்தினி கரெக்ட் ஆன்சர் சொல்லறேன்னு :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மசாலான்னு ஞாபகம் வருது .. ப்ராண்ட் பேரு வரலை..

ஒண்ணு கார்டூன் ஓடும் இல்லன்னா விளம்பர நேரத்துல தான் அடுத்தடுத்த சேனல் ஓடுவோம்ன்னு.. இருக்கறதால சில நேரம் பதியறதுல்ல ப்ராண்ட் நேம்..

மங்களூர் சிவா said...

/
Sridhar Narayanan said...

நயந்தாரா போட்டோவும் அப்பளக் குழவியும் போட்டு கூடவே பதமாக் இட்லிக்கு மாவாட்டும் ரெசிப்பி போட்டுக் கொண்டிருந்த அம்பி இப்போ வெவ்வேற விதத்தில் ‘லெவல்’ காட்டுவதைப் பார்க்கும் போது....
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:((((((((((

ambi said...

ஹலோ கீதா மேடம், நீங்க குடுத்த எல்லா மொக்க பதிலையும் பப்ளிஷ் பண்ணீயாச்சு. :p :p

அமுல் உங்க பதிலில் இல்லவே இல்லை, கோக்க கோலான்னு இருக்கு, முந்தின பதிவின் கமண்ட் செக்க்ஷன் போயி பாத்து கொள்ளவும். :))


@தாரணி ப்ரியா, இந்த உற்சாகத்தை தான் 'வெரி குட்! கீப் இட் அப்!'ன்னு சோக்கா சொல்லி இருக்கான் வெள்ளகாரன். :))

@முத்தக்கா, வீட்ல சமையல் எல்லாம் மாமியாரா? :p

அவங்க கரக்ட்டா பிராண்ட் நேம் சொல்லி இருப்பாங்களோ? :)))

இன்னும் எங்க வீட்ல கார்டூன் சேனல் ஓட ஆரம்பிக்கல. :))

பாரு ம-சிவா, நீயே நியாயத்தை கேளு இந்த ஸ்ரீதர் கிட்ட.

Satish (a.k.a) Bhaashaa said...

தங்களின் வலைப்பூவை ஏதேதோ வலைப்பூக்களின் நடுவிலிருந்து பறித்து எடுத்தேன், தங்களின் அனுமதியுடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை எனது வலைப்பூவில் "நான் படிக்கும் ப்ளாகர்கள்" பத்தியில் சேர்த்துக்கொள்ள ஆசை படுகிறேன்.

உங்களின் எழுத்துக்கள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. தங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது வலைப்பூவை கிளிக்குங்கள்

http://www.iyerpaiyan.com

வித்யா said...

எல்லா புகழும் என் மகனுக்கே ஒருவனுக்கே:)

நிலாக்காலம் said...

ஹி ஹி.. மிக்க நன்றி.. :D

செல்வேந்திரன் said...

இல்லீங்க, இன்னொரு க்ளூ தரேன். முதல் எழுத்து நே. கடைசி எழுத்து ரு. முத எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் நடுவுல ஒரு எழுத்தும் கிடையாது. //

அந்த கிரேஸி மோகன் நாடகத்தில் இதற்கு பதிலாக 'நேர்மாரு'ன்னு ஒரு கதாபாத்திரம் பதில் சொல்லும். காதலிக்காக வம்படியாக வினாடி வினாவில் தோற்கும் காட்சி என்று ஞாபகம் வருகிறது. எல்லாம் வல்லாரை மகிமை.

rapp said...

அகாக, இதெல்லாம் எனக்கொரு மேட்டரே இல்லேண்ணே, நானெல்லாம் ட்ரூலி பீட்டர். ஒன்லி இண்டர்நேஷனல் சேனல்ச வாட்சோ வாட்சுன்னு வாட்சிங்:):):) இனிமேலாச்சும் எங்களைமாதிரி ஆளுங்களை அனுசரிச்சுப்போற சன் டிவி தொகுப்பாளினியாட்டம் கருணையுள்ளத்தோட இருங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

Vijay said...

ஹேய்ய்ய்ய் ராப்,

வாட் நான்சென்ஸ்யா? டோண்ட் ஓரியா, "ஐ வைப்"யா. அம்பி ஆஸ்கிங், வீ டபாச்சிங்.தட்ஸ் ஆல்யா.நே பீள்ங்க்ஸ்யா. பீ டுரு பாரின்யா. ஐ கோயா. பை யா!!!
ராப்,ச்ச்சசும்ம்மாஆஆ, கண்டுகாதீங்கபா!!!:(((

Vijay said...

அம்பி அவர்களே,

என்னுடைய ஒன்பது சரியான பதில்களை பாராட்ட மனமில்லாமல்.......(அய்யோ....அய்யோ ....ராசா... கல்லு எற்பாடு பண்ணி வச்சிருக்கேன்னு முன்னாடியே சொல்ல கூடாதா?...பாவி.... ம்ம் ...)

Vijay said...

சரி பிரதர்ஸ் அன்ட் ஸிஸ்டர்ஸ்,

அம்பிக்கு பதிலா நானேஏஏஏஎ(மண்டபத்துல யாரும் எழுதி குடுக்கலபா..அய்ய... ) நம்ப ஸ்ரீதர் சார் கேட்டா மாதிரி, ஈஸி கொச்சன்ஸ் கேக்கறேன். ஒகேவா? ஆன்சர் எல்லாம் அடுத்த பின்னூட்டத்துல செரியா? (பார்ரா.... பின்னூட்டத்தையே பதிவு மாதிரி யூஸ் பண்றான்)

1. "ஹன்ட்ரட் இயர்ஸ் வார்" எவ்ளே காலம் நடந்துச்சி?

2. "பனாமா ஹாட்ஸ்(HATS)" எந்த நாட்டுல செய்ராங்கோ?

3. "அக்டோபர் ரெவல்யூசன்" ரஷ்யால எந்த மாசம் கொண்டாடுராங்கோ?

4. "சைனீஸ் கூஸ்பெரிஸ்" எந்த நாட்டுல இருந்து வருது?

5. "பிளாக் பாக்ஸ்" பயணிகள் விமானத்துல என்ன கலரு?


அவ்ளோதான் பா...:p

மங்களூர் சிவா said...

//
Satish (a.k.a) Bhaashaa said...

தங்களின் வலைப்பூவை ஏதேதோ வலைப்பூக்களின் நடுவிலிருந்து பறித்து எடுத்தேன், தங்களின் அனுமதியுடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை எனது வலைப்பூவில் "நான் படிக்கும் ப்ளாகர்கள்" பத்தியில் சேர்த்துக்கொள்ள ஆசை படுகிறேன்.

உங்களின் எழுத்துக்கள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. தங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது வலைப்பூவை கிளிக்குங்கள்

http://www.iyerpaiyan.com
//

அதுக்கெல்லாம் ரொம்பா செலவாகும் மொதல்ல நம்பகிட்ட பெர்மிசன் வாங்கீட்டுதான் அம்பிகிட்ட பேசவே முடியும் மொதல்ல பொட்டி அனுப்புங்க டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்!!

:))))))))

MayVee said...

:-))

ambi said...

//தங்களின் அனுமதியுடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை எனது வலைப்பூவில் //

@satish, காசா பணமா? சும்மா சேர்த்துகுங்க. நீங்க ரெம்ப நல்லவருங்க.

//உங்களின் எழுத்துக்கள் மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. //

அவ்வ்வ், வேணாம் அளுதுடுவேன். :))

//எல்லா புகழும் என் மகனுக்கே ஒருவனுக்கே//

@vidhya, அப்படியா சங்கதி? உங்க மகன் அவங்க அப்பா மாதிரியே புத்திசாலி போல. :))


உங்களுக்கும் என் நன்றி நிலா.

@செல்வேந்திரன் தகவலுக்கு மிக்க நன்னி. நானும் வல்லாரை சாப்டறேன்.

@ராப், மாமியார் வூட்ல இருந்து அதுகுள்ள ரிலீஸ் ஆயாச்சா? வழக்கம் போல பட்டய கிளப்பிடாங்களா? :))

@விஜய், அடுத்த குவிஜுல பதில் சொல்லாம இப்படி ஜல்லி அடிச்சு பாருங்க, வீட்டுக்கு ஆட்டோ அனுப்பறேன் பாருங்க.

வா ம-சிவா, பாரு இன்னமும் நம்பள இந்த ஊரு நம்பிட்டு இருக்கு. :)

நன்னி மேவீ. :)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信