போன வாரம் எங்க ஆபிஸ்ல இருக்கற கலை குழுவுக்கு திடீர்னு தங்கள் தெறமைய எல்லார் முன்னாடியும் காட்டிடனும்னு ஆசை வந்திடுச்சு. உடனே கூட்றா பஞ்சாயத்த!னு மளமளனு ஒரு தேதி குறிச்சு இந்த நாளுல நாங்க எல்லாம் என்பதுகளில் வந்த பாடல்களை பாட போறோம்! நீங்க எல்லாரும் வந்து கைதட்டனும்!னு மெயில் அனுப்பிட்டாங்க. சரி, காசா பணமா?ன்னு நாங்களும் பாட்டு கேக்க போயிட்டோம்.
பக்க வாத்யமா வழக்கமான கிதார், கீபோர்ட் தபேலா நாலு ஸ்பீக்கர் ரெண்டு மைக். கச்சேரி ஆரம்பிச்சிட்டாங்க. நாம கேள்வியே படாத ஏதோ பாடல்கள் எல்லாம் வரிசையா பாடினாங்க. 'ரூப் தேரா மஸ்தானா' என்ற ஒரே ஒரு பாட்டு மட்டும் தான் கேட்ட மாதிரி இருந்தது. அதையும் பாடின ஆளுக்கு மூக்கடைப்பு போல. சுருதி சேரவே இல்லை. சுருதின்னா கமல ஹாசன் பொண்ணு இல்லை.
சரி எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை.
நான் இருக்கறது பெங்களூர் கிளை. எங்க ஆபிஸ்ல அனேகமா எல்லா மொழி ஆளுகளும் வேலை பாக்கறாங்க. என்பதுகளில் எல்லா மொழிலயும் படங்கள் பாடல்கள் வந்ருக்கும் தானே! அது என்னங்க இவங்களே ஹிந்தி பாடல்களை மட்டும் கணக்குல எடுத்துகிட்டாங்க? இதை நாம கேட்டோம்னா மதராஸி எப்பவுமே பிரச்சனை செய்வாங்க!னு ஈசியா கேசை மூடிடுவாங்க. நெல்லை/மதுரைகாரங்களும் அவங்களை பொறுத்தவரை மதராஸி தான். ஹிந்திய ஒரு மொழியா எடுத்து படிச்சதனால எனக்கு ஹிந்தில ஓரளவு பேச, எழுத தெரியும்.
சரி, இப்ப இதே சீனை சென்னையில இருந்து பாப்போம். அங்கயும் இதே மாதிரி ஒரு ஆபிஸ், இதே மாதிரி ஒரு பாடல் கலை நிகழ்ச்சி நடக்குது. என்பதுகளில் வந்த இளைய ராஜா இசையில நம்மாளுக மைக் மோகன் கணக்கா சீன் போட்டு பாடுவாங்கன்னு நான் சொல்லவே வேணாம். நாம ஹிந்தி பாடலோ, தெலுங்கோ, கன்னடமோ பாடி இருப்போமா? மிஞ்சி போன சுராங்கனி மாலு கண்ணா மால் மட்டும் பாடி இருப்போம், அதுவும் ஏதாவது டூர் போகும் போது பஸ்ல தான் அந்த பாட்டு பாடுவாங்க. அந்த நாலு வரிக்கு மேல அதுவும் நகராது.
சரி தான், இப்ப நீ என்ன தான் சொல்ல வர?ன்னு நீங்க கேப்பீங்க.
நான் ஒன்னும் சொல்ல வரலை, சில கேள்விகள் கேள்விகளாகவே இருக்கறது தான் நல்லது. தமிழ்நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்கன்னு இப்ப தெரியுது. :))
இந்த நிகழ்வை மனசுல வெச்சு ஒரு ஹைக்கூ தோணிச்சு (உங்களை அவ்ளோ லேசுல விடறதா இல்லை நானு!)
தமிழக
சட்டமன்றம்
கூடியது.
ஆளுனர் உரை
இந்தியில்.
55 comments:
me the 1st:)
தமிழக
சட்டமன்றம்
கூடியது.
ஆளுனர் உரை
இந்தியில்.
கவுஜ சூப்பர்:)
ரித்தீஷ் மன்ற ஆளூங்கதான் இப்பல்லாம் மீத ப்ர்ஸ்டா...? :)
ஹை ஹைக்கூ.. :)
\\சரி, இப்ப இதே சீனை சென்னையில இருந்து பாப்போம். அங்கயும் இதே மாதிரி ஒரு ஆபிஸ், இதே மாதிரி ஒரு பாடல் கலை நிகழ்ச்சி நடக்குது. என்பதுகளில் வந்த இளைய ராஜா இசையில நம்மாளுக மைக் மோகன் கணக்கா சீன் போட்டு பாடுவாங்கன்னு நான் சொல்லவே வேணாம்//
யார் சொன்னா? இங்கக்கூட ஹிந்தி தான் பாடுவாங்க. பாடுறவன்/ள் ஏக் காவ் மேன் கேஸாக தான் இருக்கும். ஆனாலும் எப்படியாவது ஒரு ஹிந்தி பாட்ட உஷார் பண்ணி வச்சிருப்பாங்க:)
ரூப் தேரா பாடிவிட்டு
ரூமுக்குப் போன சிங்
பிடித்தார் ஒரு பிடி
இட்லி வடே சாம்பார்!
இது எப்படி இருக்கு?
\\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
ரித்தீஷ் மன்ற ஆளூங்கதான் இப்பல்லாம் மீத ப்ர்ஸ்டா...? :)
\\
ஆஹா என்ன ஒரு recognition??
Because of that only reason i also oppose hindi.If hindi made into a subject in our studies, particular tamil people, even though their mother tongue is tamil, would like to talk in hindi with tamil people.I experienced this many times when i was in outside of tamilnadu.Mearly knowing hindi or english would't fetch a job in UP or London. I learned hindi only when i was posted outside of tamilnadu.
"தமிழக
சட்டமன்றம்
கூடியது.
ஆளுனர் உரை
இந்தியில்."
wah wah wah
to avoid these.... i suggest guys to sing in sign language... its a international aspected one.
only thing is tht its diff to understand.
///தமிழ்நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்கன்னு இப்ப தெரியுது. :))///
கரெக்ட் அதேதான்!
:-)))...
நீங்க நல்லா பாடுவீங்களா???
:-)))...
நல்லாத்தான் எழுதியிருக்கீங்கன்னு சொல்லலாம்னு பாத்தா.. ஐயோ, கடைசில மறுபடியும் ஹைகூவா! மீ த எஸ்கேப் :)
வித்யா நீங்க ராப்பின் பினாமியா? நீங்க தான் பஷ்ட்டு. :)
ஆமா, நம்மாளுக அச்சா பச்சான்னு அடிச்சு ஆடிடுவாங்க. ஆனா சப்பாத்தி பசங்களுக்கு தமிழ்ல ஒரு வரி வாய்ல வராது, :D
நல்லா கேளுங்க முத்தக்கா, ஒரு க்ரூப்பா தான் கெளம்பி இருக்காங்க.
இத கவுஜன்னு வித்யா சொல்லிட்டாங்க பாருங்க. :D
ஆஹா, ராமலக்ஷ்மி, நீங்களுமா? நடத்துங்க. :p
நீங்க சொல்றது ரெம்ப கரக்ட்டுங்க அனானி, அடுத்த தடவ உங்க பெயர் போடுங்க. :)
மேவீ, உங்க யோசனை நல்லா இருக்கு. அதுக்கு தான் சன்டே 1.30க்கு ஒரு நியூஜே போடறாங்களே. :)
வருகைக்கு மிக்க நன்னி மோகன்.
விஜய் ஆனந்த், நான் பாடுவேன், ஆனா நல்லா இருக்குமா?னு எனக்கு தெரியாது. :))
//ஐயோ, கடைசில மறுபடியும் ஹைகூவா! மீ த எஸ்கேப் //
சுந்தர், ஆனாலும் ஒரு மனுசனுக்கு இவ்ளோ குசும்பு ஆகாது. :)))
கவுஜ சூப்பர்:)
இந்தியை எதிர்க்கவில்லை...
இந்தி திணிப்பைத்தான் எதிர்தார்கள்...
இந்தியை அம்பிகள் ஒரு பாடமாக எடுத்து படித்ததில் ஆச்சர்யமில்லை.., காரணம் சமஸ்கிருதம் அவர்களது தாய் மொழி...
ஆனால் தமிழர்கள் அனைவரும் இந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று திணித்ததை தான் எதிர்த்தார்கள் !!!!
இந்தி ஒரு இனிமையான மொழிதான்...அற்புதமான பாடல்கள் இருக்கின்றன...
இருந்தாலும் சைனீஸ் கூடத்தான் இனிமையான மொழி...
அதனால் கோடம்பாக்கம் அ.உ.து.பள்ளியில் சைனீஸ் படித்தால் தான் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புக்கு செல்ல முடியும் என்று சீனாக்காரன் சொன்னால் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்ன ?
தம்பி
ஹைக்கூன்னா என்னமோ பொண்ணு பேரு போலன்னு நினைச்சு நீயும் சுத்தி சுத்தி வர. அது இல்லைடா கண்ணா. ஹைக்கூ பாவம் விட்டுடு.
அப்புறம் ஹிந்தி பாடல் எரிச்சல். எனக்கும் உண்டு!
**********கோடம்பாக்கம் அ.உ.து.பள்ளியில் சைனீஸ் படித்தால் தான் ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புக்கு செல்ல முடியும் என்று சீனாக்காரன் சொன்னால் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்ன ?*********
சீனாக்காரன் சொல்லட்டும். அப்புறம் யோசிக்கலாம் செந்தமிழ் !
******இந்தி ஒரு இனிமையான மொழிதான்...அற்புதமான பாடல்கள் இருக்கின்றன*******
ஓஹோ ! அப்படியா ?
******* இந்தியை அம்பிகள் ஒரு பாடமாக எடுத்து படித்ததில் ஆச்சர்யமில்லை.., காரணம் சமஸ்கிருதம் அவர்களது தாய் மொழி ******
ரவி, நீங்க ஆராய்ச்சி செஞ்சி உண்மையை கண்டுபிடிப்பதில் கில்லாடி போல ! கலக்கறீங்க போங்க.
சுந்தர், நீங்க எல்லா இடத்துலயும் தப்பிச்சி ஓடறீங்க ! இது நல்லா இல்ல.
///சீனாக்காரன் சொல்லட்டும். அப்புறம் யோசிக்கலாம் செந்தமிழ் !///
மொதல்ல ஹிந்திக்காரன் சொன்னானே மணி...
அதான் ஆப்பு வெச்சு அனுப்பினோம்...
இந்தியால் தமிழனுக்கு என்ன பயன் மணி ? கொஞ்சம் சொல்லமுடியுமா ?
///ரவி, நீங்க ஆராய்ச்சி செஞ்சி உண்மையை கண்டுபிடிப்பதில் கில்லாடி போல ! கலக்கறீங்க போங்க.//
நான் ஒன்னும் கண்டுபிடிக்கவில்லை மணி...
ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்கள் ( துக்ளக் சோ, ஆனந்தவிகடன் மதன் உட்பட) இதனை சொல்லிவிட்டார்கள்...
****** இந்தியால் தமிழனுக்கு என்ன பயன் மணி ? கொஞ்சம் சொல்லமுடியுமா ******
ரவி, இந்த பதிவுகள நகைச்சுவையோட படிக்க வரும் மக்கள் தான் அதிகம். அதுல இது தேவை இல்ல.
ஆனா, உங்க கேள்விக்கு பதில் :- ஒரு பயனும் கிடையாது. ****** இந்தியால் தமிழனுக்கு என்ன பயன் மணி ? கொஞ்சம் சொல்லமுடியுமா ******
ரவி, இந்த பதிவுகள நகைச்சுவைக்காக படிக்க வரும் மக்கள் தான் அதிகம். அதுல இது தேவை இல்ல.
ஆனா, உங்க கேள்விக்கு பதில் :- ஒரு பயனும் கிடையாது.
///ரவி, இந்த பதிவுகள நகைச்சுவையோட படிக்க வரும் மக்கள் தான் அதிகம். அதுல இது தேவை இல்ல.///
இப்படி ஒதுங்கி ஒதுங்கி போய் தான் வெளங்காமட்டையாக மாறுகிறான் தமிழன்...
****** நான் ஒன்னும் கண்டுபிடிக்கவில்லை மணி...
ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்கள் ( துக்ளக் சோ, ஆனந்தவிகடன் மதன் உட்பட) இதனை சொல்லிவிட்டார்கள்...
******
இன்னொருத்தர் சொன்னத மறுபடியும் சொல்லுவது தான் எனக்கு தெரிந்த ஆராய்ச்சி.
neenga hindi down down sonthunalyo enavo..intha page loaday agala..so me the anony here...
//ஆமா, நம்மாளுக அச்சா பச்சான்னு அடிச்சு ஆடிடுவாங்க. ஆனா சப்பாத்தி பசங்களுக்கு தமிழ்ல ஒரு வரி வாய்ல வராது, :D//
udit narayan oruthar irukar teriyumo :D avar vaaiala muthamizhum muthamidum :))
enga entha paatu paadina ena..keka nallaruka ilaya..athaan mater..ingayum indi patula thaan oduthu..nallarukara song enga entha languagea iruntha ena..ketu nsoy panna vendiathay...ithukum hindi edirpukum no relation..aana oru paatasu factory mela beedia patha vachi potutel vambi mama...
At Fri Dec 19, 04:34:00 PM, Blogger மோகன் கந்தசாமி said…
///தமிழ்நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்கன்னு இப்ப தெரியுது. :))///
கரெக்ட் அதேதான்!
//
கரெக்ட் அதேதான்!
தமிழக
சட்டமன்றம்
கூடியது.
ஆளுனர் உரை
இந்தியில்.
ஏன் எல்லா வரியையும் உடைச்சு உடைச்சு போட்டு எழுதியிருக்கிங்க? நெசமாவே கவிதைன்னு நினச்சிட்டிங்களா?
//ஹைக்கூன்னா என்னமோ பொண்ணு பேரு போலன்னு நினைச்சு நீயும் சுத்தி சுத்தி வர. அது இல்லைடா கண்ணா. ஹைக்கூ பாவம் விட்டுடு. //
அடப்பாவமே! அப்படியா?
ஹிந்தியை எதிர்த்தது அப்போ மட்டுமே.
அப்ப, இப்போ?
எல்லாம் குச் காம் கோ ஆயேகாதான்.
காம் பி ஹோகயா:-))))
அவங்க இந்திப்பாட்டை பாடினதுக்கு காரணம் கன்னடப்பாட்டை அவங்களாலயே கேக்க முடியாது. அவ்வளோ கடியா இருக்கும். ஆனா தமிழ்ப்பாட்டெல்லாம் அப்படியா, காப்பினாலும் கேக்க சூப்பரா இருக்கும்.
Nijama neenga ezhudhinadha haikoo? romba supera irukku :D
தமிழ் நாட்டுல ஏன் ஹிந்திய எதிர்த்தாங்க?//
சும்மா ஒரு டைம் பாஸ்க்கு:)))
இப்படிக்கு
பதிவின் தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
இங்க எழுதியிருக்கிற விஷயங்கள் ரொம்ப interestஆதான் இருக்குது. நானும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஏன் ரெண்டு வருஷத்துக்கு முன்னால கூட, இப்படியெல்லாந்தான் யோசிச்சிட்டிருப்பேன். கொஞ்ச கொஞ்சமா ஏனோ எம்மனசு மாறிடிச்சு. 2 வருஷம் Bareillyல அப்புறம் 3 வருஷம் கலிபோர்னியாவுல பல தரப்பட்ட மக்களோட பழகின பிறகு, எனக்கென்னமோ தமிழ்நாட்டுல நமக்கெல்லாம் அதிகமா தமிழ்ப்பால் ஊட்டிட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப கூட அப்பப்ப ஏதாவது functionல ஹிந்தி பாட்டா பாடும்போது காதுல ரத்தம் வரத்தான் செய்யுது. இருந்தாலும் ஒரு விதமான சகிப்புத்தன்மை வந்துடிச்சு...ஏன்? இங்க அமெரிக்காவுல இருந்து பாக்கும்போது "இந்தியா" ஒரே நாடா தெரிய ஆரம்பிக்குது. ஒரு நாள் எனக்கும், என் bengali room-mateக்கும் ஒரே வாக்குவாதம்.....அதெப்படி ஹிந்திய திணிக்கலாம்?னு எனக்கு கிட்டத்தட்ட கோபம் தலைக்கேறிடிச்சு. அன்னைக்கு nightஏ internetல ஒரு அலசு அலச ஆரம்பிச்சதில் கத்துகிட்ட + அதுக்கப்புறமும் யோசிச்சு + விவாதிச்சு + படிச்சு புரிஞ்சுகிட்ட சில விஷயங்கள இங்க பகிர்ந்துக்கலாமுன்னு நினைக்கிறேன்.
1928ல - மோதிலால் நேரு தலைமையில ஒரு அறிக்கை ready பன்னாங்க - ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாகயிருக்க தகுதியான மொழி - இத இப்பக்கூட northல அங்கங்க எழுதி வச்சிருக்காங்க - படிக்கும்போதே பத்திகிட்டு வரும். நாம இங்க ஒரு விஷயத்த புரிஞ்சுக்கனும்.. அப்ப இந்தியாங்றது.. இப்பத்திய இந்தியா+பாகிஸ்தான்+Bangladesh. அப்ப ஒரு வேல இந்திக்கு ஓரளுவுக்கு majority இருந்திருக்கலாம். ஆனா சுதந்தரம் வாங்கும்போது நேரு ஒரு வாக்குறுதி கொடுத்தாரு: தென்னிந்திய மக்களா பாத்து எப்போ அவங்களுக்கு இந்தி வேணும்னு சொல்றாங்களோ அப்பதான் தென்னிந்தியாவுல இந்தி ஒரு கட்டாய பாடமா தென்னிந்தியாவுல ஆக்கப்படும். ஆனா 1950ல நம்ம constitution form பன்னப்ப என்ன எழுதிட்டாங்கன்னா, 15 வருஷத்துக்கப்புறம், English official language statusல நீடிக்குமா இல்லையான்னு ஒரு முடிவுக்கு வந்தாகனும்னு எழுதிட்டாங்க...அதனால 1960 நெருங்கும்போது இந்த பிரச்சினை கொஞ்ச கொஞ்சமா புகைய ஆரம்பிச்சிடுச்சி. நேரு சிவனேன்னு போயி சேந்துட்டாரு. லால் பகதூர் சாஸ்திரி ஆட்சிக்கு வந்தாரு - மனுஷன் தென்னிந்தியாவ பத்தி ஒன்னுமே புரியாதவராயிருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். தாம்பாட்டுக்கு, சுதந்தரம் வாங்கி 15 வருஷத்துக்கு மேல ஆகுது, இன்னும் English நம்மோட official languageஆ இருக்கிறது அசிங்கமாயிருக்கு...சீக்கிரம் ஹிந்திய official language ஆக்கனும் அப்படி இப்படின்னு பரபரப்பா Shantiniketanல பேசிட்டாரு...அது மட்டுமா..அடுத்த வருஷத்துலயிருந்து ஹிந்தி/englishலதான் UPSC examன்னு புரளி வேற. எல்லாரும் Government வேலைய நம்பியிருந்த காலம் அது...Globalization+Privatization எல்லாம் 1985க்கு அப்புறந்தான. தமிழ் ரத்தத்த பத்திதான் நமக்கெல்லாம் தெரியுமே...கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி இல்லையா...(குடின்ன உடனே quarter பத்தி யோசிக்காத கோவிந்தா) அண்ணா வேற DMKவ பயங்கரமா வளத்துகிட்டிருக்காரு...காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுல ஆளுங்கட்சி..லால் பகதூர் சாஸ்திரியும் காங்கிரஸ். தமிழ்நாட்டு மக்களெல்லாருக்கும் சாஸ்திரியோட பேச்சினால பயங்கர மனக்கஷ்டம். DMK பாத்துச்சி - இதுதான்டா சமயம் ஆட்சிய புடிக்க...ஓடும் ரயிலில் தலை வைத்து தமிழ் உயிரை காத்த கூட்டமிதுன்னு கிளம்பிட்டாங்க...60 பேருக்கு மேல செத்தாங்கன்னு படிக்கும்போது மனசு வேகுது. காங்கிரஸால ஒன்னும் பன்ன முடியல..அடுத்த electionla கவுந்த காங்கிரஸ் இன்னும் தமிழ்நாட்டுல எந்திரிக்கவேயில்ல.
இதுல பிரச்சினைன்னு பாத்தா...நாம ஹிந்திய ஒரு extra மொழியா படிக்க வேண்டி வந்தது..அத நாம தடுத்துட்டோம்..சரி. அதுனால நமக்கு என்னாச்சு? இந்தியாவுல தமிழ்நாட்டுக்காரன்னா அந்நியன்னு பாக்கிற அளவுக்கு ஆயிடுச்சி (அந்நியன்னவுடனே Remo கிமோன்னு இங்க யாரும் காலர தூக்கி விட வேணாம்). சரி நாம ஹிந்தியையும் படிச்சிருந்தா குறஞ்சா போயிருப்போம்? இல்லையே.. (in fact ரெண்டு north indian பிகரை கரெக்ட் பன்ன வசதியாயிருந்திருக்கும்...ஹி..ஹி..ஹி..அப்படி போடு அரிவாள) நமக்கும் இந்த மாதிரி கச்சேரியில காது பஞ்சராகாமயிருந்திருக்கும்..என்ன சொல்றீங்க? இந்த ஹிந்தி பிரச்சினைய பத்தி எவ்வளவோ சொல்லிகிட்டே போகலாம். ஒரு கட்டத்துல ஒரு முடிவுக்கு வரனுமில்லையா..நான் வந்துட்டேன்..நானும் ஹிந்தி கத்துக்க போறேன்..atleast anti-hindi slogan சொல்ல மாட்டேன். அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்திய நாடு என் நாடு..இந்தியனென்பது என் பேரு...
மாம்ஸ்...
ஹிந்திய படிங்க...
பஞ்சம் வந்தா மத்திய பிரதேசம் போய் சோன் பப்டி வித்து பொழைச்சுக்கலாம்...!!!
adutha haikkuvirkkaga waiting hai.hindinnala evvalvo advantage illana namitha,kangana,mallika ellam namakkku kidachirppangla??thamizhnaala avangalukku hemamalini,sridevi,ippa asin varakkum kidachirkkanga...ippadiellam yosikka mattengaranga!!!!idhellam evvalvu peria vishayam!!!
nivi.
அரசியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
sorry, although you said not to be serious I am going to be serious.
prakash,
stop trivializing the language issue.
nagai siva,
it is not just politics.
Nothing wrong in learning a language if a person wishes to do that.
but in a country,where many languages are spoken , if only ,one language is made national language and other people are forced to learn that language,there is something fundamentally wrong there ,other language speakers automatically become second class citizens and the hindi speakers become some what special and superior than others
I think this is more dangerous to the unity of India.real federalism means power sharing between different people and every one being treated equal.not just one group of people becoming the dominant important people.
every major language spoken in india should become national languages.
some of my bihari bojpury workmates are in fact more opposed to hindi than some tamils.
he said that the statistics which says that 40% of indian people speak hindi is a fabrication. he said it is fabricated to make hindi the dominant language by putting lot of languages under hindi as it's dialects .true there are similarities between these languages Like similarities between tamil and malayalam but if we call malayalam as a dialect of tamil and not a separate language all the keralites will come and beat us..
I also a see people poo pooing tamil,telugu.bengali.marathi and other language cinemas as regional cinema.For them indian cinema means Bollywood-Hindi cinema.Again this tendency is not healthy.there are more population in tamil nadu, maharashtra,and andhra than all the european countries in the European union except for Germany.,but our northern friends call our cinema as mere regional cinema and these cinemas don't get any recognition in the international arena or function when India is represented.
Prakash
I don't think to prove themselves as indians people should study hindi.If you want to study hindi just as a language like studying swedish ,icelandic or korean that is fine.
sorry for being long winded
குமரன்,
அருமையாக சொன்னீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் நான் சொல்ல நினைத்தது போலே இருக்கிறது. //but in a country,where many languages are spoken , if only ,one language is made national language and other people are forced to learn that language,there is something fundamentally wrong there// இந்த வரி முதற்கொண்டு
//but our northern friends call our cinema as mere regional cinema and these cinemas don't get any recognition in the international arena or function when India is represented.//
இந்த வரி வரை
உங்களுடைய feelings எனக்கு நல்லாவே புரியுது - Kumaran & உமையணன். இருந்தாலும் எவ்வளவு காலந்தான் இப்படியே போயிட்டிருக்க முடியும். ஒரு solution வேணுமில்ல. நானும் ஒத்துக்கிறேன் ஹிந்திய கத்துக்கிறதுனால பெருசா ஒன்னுத்தையும் சாதிக்க முடியாது, ஆனா ஒரு விஷயம் முடியும் - இந்தியாவுக்குள்ள ஒரு ஒத்துமைய உண்டாக்க முடியும். ஒரு நாள்(atleast ஒரு அம்பது வருஷத்துக்கு அப்புறம்) இந்தியாவுக்கு பிரதமரா ஒரு தமிழன் உட்கார முடியும். Sure..ஹிந்தி தெரிஞ்சாதான் இந்தியன் அப்படின்னா, முதல்ல நான் out of the game. ஆனா நீங்க சொன்ன மாதிரி icelandic, korean அப்படின்னு நினைச்சு படிச்சா என்ன தப்புங்கிறேன். யாராச்சும் விட்டுக்கொடுக்கணுமில்லே...ஹந்திக்காரன் மடையன்...விட்டுக்கொடுக்க தெரியாது, நாம பெருந்தன்மையா நடந்துப்போம். இது முதுகெலும்பில்லாதவன் பேச்சு, புடைவை கட்டிக்கொண்டிருக்கும் புத்திசாலியின் பேச்சு அப்படின்னு தோணலாம். எனக்கு கூட முன்னெல்லாம் அப்படித்தான் தோணும். ஹிந்தி திணிப்பு தப்புதான். அப்படின்னு பாத்தா Historyல எவ்வளவோ தப்புகள் இருக்கத்தானே செய்யுது...சில சமயங்கள்ல தப்பு செஞ்சவன் மன்னிப்பு கேக்கிறான். பல சமயங்கள்ல தப்போட வாழ பழகிக்கிறாங்க. Chinaக்காரன் ரொம்ப வேகமா வளந்துகிட்டே போறான். இந்தியாவும் அதே வேகத்துல வளர முடியும். இந்த மாதிரி மொழி, இன, மத, ஜாதி பிரச்சினையெல்லாமில்லாம இருந்தா. அப்துல் கலாம் ஒரு தமிழன், ஆனா அவருக்கு இந்தியா முழுக்க நல்ல பேரு கிடச்சது..பல காரணங்கள் சொல்லலாம்...ஆயிரத்தோட ஆயிரத்தியொன்னா நான் நினைக்கிறது..அவருக்கு ஹிந்தியும் தெரியும். நானும் பாத்திருக்கேன், பெரும்பாலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு (இங்க நான் எந்த மத பிரச்சினையையும் உருவாக்க நினைக்கல) உருது, ஹிந்தி தெரியரதனால, அவங்களுக்கு north indians கூட பழகுறதுல மொழி வாரியான பிரச்சினை வர்ரதில்ல. பாரதி கூட "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" அப்படின்னு ஹிந்திய தெரிஞ்சுகிட்டுதான் சொன்னாரு. நாமளும் தெரிஞ்சிப்போம். திணிக்கப்படுதுங்கிற காரணுத்துனாலயில்ல. ஒரு விவேகத்தோட. ஹிந்திய திணிக்கனும்னு நினைக்கிறவங்கல்லாம், ஹிந்தியும் தெரிந்த தமிழ் மக்களுடன் போட்டியிட முடியாம தவிக்கட்டும். தமிழ் நாட்டுலயிருந்து நாராயண மூர்த்தி மட்டுமில்லாம, TATA, Reliance, Bajaj, Hindustan Lever, Godrej மாதிரியான நிறுவனுங்களுக்கு நிகரா அகில இந்திய தொழில் நிறுவனங்கள் உருவாகனும் அப்படிங்கிற ஒரு long-term விவேகத்துடன் ஹிந்திய கத்துப்போம். ஹிந்திய தெரிஞ்சுகிட்டா உடனே TATAவாயிடலாம்னு சொல்லல. ஆனா ஒரு தமிழனுக்கு ஹிந்தியும் தெரியிதுன்னு வச்சுக்கங்க, பல Stateலயிருந்து வர்ற மக்களோட, easyயா mingleஆக முடியும். அதனால, இந்த anti-hindi image ஒழியும். நாளைக்கு TATAவோ அல்லது CSIR மாதிரியான ஆராய்ச்சி நிறுவனமோ ஒரு branch ஆரம்பிக்க நாலு state பத்தி யோசிக்கும்போது, anti-hindi அப்படிங்கிற ஒரு காரணத்துக்காக தமிழ்நாட்ட ஒதுக்க முடியாது. Manufacturing sector பெருசா வளர்ந்தாதான் இந்தியா வல்லரசாக ஆக முடியும். அதுக்கு நம்மலால முடிஞ்க ஒரு சின்ன/பெரிய(இது அவங்கவுங்கள பொருத்தது) விட்டு கொடுத்தல் அவ்வளவுதான். 50 வருஷத்துக்கப்புறம், ஹிந்தி பிரச்சினையா- அப்படின்னா என்ன? அப்படின்னு கேக்கிற அளவுக்க ஆனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. என்ன சொல்றீங்க?
///பஞ்சம் வந்தா மத்திய பிரதேசம் போய் சோன் பப்டி வித்து பொழைச்சுக்கலாம்...!!!///
செந்தழல் ரவி: AR RAHMAN பஞ்சம் பொழைக்கவா hindi படத்துக்கு music போடறாரு? மணி ரத்னம் ஏன் "Guru"படத்த ஹிந்தியில எடுத்து தமிழ்ல dubb பன்னாரு? யோசிங்க Boss. தமிழ்நாட்டுல இருந்து Finance Minster ஆக முடியுது, ஆனா Prime minister ஆக முடியல. ஏன்? தமிழ் நாட்ல ஒரு national partyயும் ஆட்சிக்கு வரமுடியாதுன்னு ஆனப்புறம் எப்படி நாம central governmentல பெரிய ஆளா ஆவுறது?. காவிரி பிரச்சினையினால பஞ்சம் தமிழ்நாட்லதான் வருது Boss. நம்மலால தட்டி கேக்க முடியலயே ஏன்? SriLankaவுல தமிழன அடிக்கிறான்னா, central governmentஅ நாம பதவி விலகுவோம்னு மிரட்டிதான் நமக்கு சாதகமா செயல்பட வைக்க வேண்டியிருக்கு...குதர்க்கமா பேசினா மட்டும் போதாது..
இரசிக்க வைத்த பதிவு.
ஹிந்தி தொடர்பாக நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
வாழ்த்துக்கள்!!
நன்றி ம - சிவா. :)
@கொத்ஸ், ஹைக்கூன்னா ஏதோ சப்பான் பொண்ணு பேருன்னு சொல்லிகிட்டாங்க, அதான் ஒரு ட்ரை பண்ணூவோமேன்னு தான்... :p
நீங்களும் ஆட்டைக்கு வாங்கண்ணே. :D
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி மணிகன்டன், குடுகுப்பை, & இராம்.
:))
யோவ் கில்ஸ், சென்னைல இருக்கற தைரியமா? நேர்ல வந்து அடிப்பேன். :p
@ஸ்ரீதர், ஆமா இந்த வரிகளை எப்படி உடைக்கறதுன்னு முழிச்சேன். இப்படி போட்டு உடைக்கனுமா? :))
@துளசிஜி, ஆப் நே சஹி கஹா. குச் லோக் மான் த்தே நஹி, க்யா கரும் ஹாய், குச் குச் ஹோத்தா ஹை! :))
//ஆனா தமிழ்ப்பாட்டெல்லாம் அப்படியா, காப்பினாலும் கேக்க சூப்பரா இருக்கும்.
//
சின்ன அம்மினி, மிகவும் ரசித்தேன். அடிச்சிட்டு அஞ்சு ரூபா குடுக்கறீங்க போல. :))
@ஜி3, நானே நானே தான் எழுதினேன். மண்டபத்துல யாரோவா எழுதி குடுத்தாங்க? கர்ர்ர்ர்ர். :))
@குசும்பன் அவனா நீயி? :)))
@பிரகாஷ், உங்களின் விரிவான கருத்து செரிவுள்ள பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. Thanks for spending your precious time here.
//in fact ரெண்டு north indian பிகரை கரெக்ட் பன்ன வசதியாயிருந்திருக்கும்...ஹி..ஹி..ஹி..அப்படி போடு அரிவாள//
அதான் அதே தான். :)))
@நிவி, ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க போங்க. ஆமா அது யாருங்க கங்கனா? கொஞ்சம் தகவல் ப்ளீஸ். :)
@நாகை சிவா, அதெல்லாம் இல்லப்பா, நான் ஏதோ பொலம்பினேன் அவ்ளோ தான். :))
@kumaran & prakash, i could understand your feelings, Anything forced is always hated. As you said people can learn any language including hindi but should not be forced. IF it is forced, how good an language may be, it's naturally protested. That 's human tendancy.
Hope i didn't sounded in offending tone. Thanks for dropping here spenidng your golden time :)
//Historyல எவ்வளவோ தப்புகள் இருக்கத்தானே செய்யுது...சில சமயங்கள்ல தப்பு செஞ்சவன் மன்னிப்பு கேக்கிறான்.//
@பிரகாஷ், நிறையா பேரு தப்புன்னு தெரிஞ்சு இருந்தும் ஒத்துக்க மாட்டாங்க. ஏன்னு சொல்லுங்க பாப்போம்? :))
@வீரன் தமிழ், ரசித்ததுக்கு ரெம்ப நன்றி ஹை. நேரம் கிடைக்கும் போது உங்க பதிவை இன்னிக்கே வந்து படிக்கறேன். :))
day, enna blog valiya kalavaram panra, nallala solten. but seriously india should be seen as one. from history days, separating indians based on several things like caste, creed, region, language, keeps happening and it is like "oor rendu patta koothadikku kondattam". it is high time we realise this. when looking at majority, hindi is the most popular one, so why not adopt it as a common language? tamilnadu thandina thadhinginathom dhan-ngra nelamai edhukku. yen namma ooru ponnungalalam rombo easya emathi bombaykku kootittu poranga? pora vazhila avanga enna pesaranganu mattum purinja, evvlo nalladhu?? hindi en ivvlo sekram munerithu? bcoz like english, it also welcomed words from several sources - sanskrit, english, urudu, tamil, etc. inga nama 'ja' vara edathula ellam 'sa/cha' pottutu irukkom. but adhukkaga tamil nalla pesa therinja 2 ponnunga venumne 'are vo ladka... ye picture...' nu illana 'we dont see tamil pictures, we see only english pictures' (ada andha kalathulaye ipdi alaturadhu rombo fashion, courtesy: kadhilka neramillai) nu sollradhu ellam ROMBO OVer. americala engayavadhu rendu varthai tamil kettudhuna udane oru sahodhara pasam vandhadhu unmai. adha vida indiansa parthave sandhosham vandhadhum unmai. but kodumai yennana, north indians ellam south indiansa oru elana parvai pathadhu dhan. badhillukku namalum apdi parthuttu vandhomnu vainga. idhukkum language oru karanam dhan. adhukkum mela color oru mukya karanam. ok, am deviating.
thanks ambi, rombo nal kalichu en blog pakkam vandha. epdi table tennisa marakka mudiyum. nane kashta pattu semi finals varaikkum vandha ore game adhu dhan :) thanks, i relished it today.
//day, enna blog valiya kalavaram panra, nallala solten.//
@ஸ்ரீ யக்கா, அமைதி, அமைதி, இப்படி சோடா பாட்டில் வீசினா நான் என்ன செய்வேன்? :))
நீங்க சொல்றது எல்லாம் நியாயமான காரணங்கள் தான்.
உங்க டேபிள் டென்னிஸ் மேட்சை நான் கலாய்ச்ச போஸ்ட் கூட இப்ப நியாபகத்துக்கு வந்து இருக்குமே! :p
shree,
What are you trying to say ,man.
don't twist the historical facts.
Even under gupta and asoka empires,India was never a one unified land.south india,tamil nadu were not part of these empires.
when british came to India,it was a collection of many principalities and kingdoms.British united all these sections and called it india.
Although india is called a country,it has about 30 nation states with different languages and cultures.
I say that all the languages and cultures should be respected not ,just one language and one group of people.
You talk about common language and northern people not respecting tamil nadu.
first, we talk about common language .Hindi is spoken by about 30% of indian population.that means for 70% of people it is not the mother tongue.
If you take the whole world,out of 6 billion people,1 billion people have mandarin Chinese as their mother tongue.
why can't we all learn mandarin Chinese.
after all ,America is loosing it's influence as the world super power and china might emerge as the future world super power .
English might lose it's status as the international language in the future.
Let us all learn mandarin Chinese.
You say when people leave the tamil nadu border,tamil is nothing.yes it is right.
yes if you leave bengal border ,bengali is nothing .if you leave poland border ,polish language is nothing. if you leave kenya swahili language is nothig.
likewise if you leave khyber pass Hindi is nothing.
you say northern people don't respect tamil people .
big deal!so what!
are you saying we should all stop talking in tamil and start talking in hindi so that these northern people will respect us?
this slavish mentality is ingrained in you people .come out of this mentality and start respecting yourself.
In Fact if you look at the statistics,
southern regions are economically doing better than the hindi speaking states. another statistics says that growth state is low in the south than the north.
That means in the future there is going to be more unemployment in the hindi states than the southern states.
because northerners are breeding more people. they are going to come to our states to find jobs,in addition to that,we are going to pay more taxes to support their population.
If we go to another state, we should learn their local language
like that if they come to our states they should learn our language.
Hindi are speakers nothing special ,they are just like any other language speakers of india.
”நீங்களுமா” என்றால்:))? எல்லோரும் எழுதுறீங்களே, எனக்கும் வருதான்னு ஒரு அல்ப ஆசை. ஆனா சரி வரலை:))! சரி அதை விடுங்க. இங்கே Prakash மற்றும் shree ஆகியோரின் கருத்தை ஒட்டி மும்மொழித் திட்டத்துக்கு ஜே போட்டு [வழக்கம் போல] கல்லூரி ஆண்டு மலரில் [22 yrs back:)] எழுதின நீண்ட கவிதை கைவசம் இருக்கு. எதிர்ப் பதிவா போடுவமான்னு யோசிச்சுட்டு அப்புறம் இங்கே நடக்கிற விவாதங்களைப் பார்த்து ஜகா வாங்கிட்டேன்:))!
you people talking about hindi domination.. am working in an ad agency in chennai and most of the employees are from salem, madurai and pucca madras people.. but do you know what song they like to hear / sing??? UNDER MY UMBRELLA ILA ILA ILA.. AND ITS THE PARTY ... ennatha solrathu ennatha seiyarathu.. veettukku pona naanum en dhanya kuttikku rhymes solli kodukkarathukku bathila under my umbrella sollren
Post a Comment