Tuesday, December 09, 2008

மரபு கவிதை Vs ஹைக்கூ

கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும். ஏன்னா கவிதைக்கு அழகு வார்த்தைச் சுருக்கம். அது நம்ம கேசுல கிடையாது. சில சமயம், ஈசியா சொல்ல வேண்டிய ஒரு விசயத்தை ஏன்டா இந்த கவிதை ஆளுங்க இப்படி தலையை சுத்தி மூக்கை தொடறாங்க?னு நினைச்சு இருக்கேன்.
ஸ்கூல படிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்துல கவிதை எழுதறேன் பேர்வழின்னு வானம்-வெண்ணிலா, மழை-மண் ஈரம், தென்றல், இப்படி ஏதோ ட்ரை பண்ணி எனக்கே அது செம மொக்கையா தெரிய அத்தோடு என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது.

காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது. உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். அதுல டைட்டில் போடும் போது அந்த எபிசோடுக்கு ஏத்த மாதிரி நாலஞ்சு லைன்ல ஹஸ்கி வாய்ஸ்ல சித்தர் பாடல்கள் ரேஞ்சுல ஒன்னு வாசிப்பாங்க. எனக்கு அது ரொம்ப புடிக்கும். அதை மனசுல வெச்சு நான் பிளாக் ஆரம்பிச்ச புதுசுல இந்த புதிர்க் கவிதையை(?) எழுதினேன். யார்னு கண்டுபிடிக்க முடியுதா?னு பாருங்க.

மாமுனி மந்திரம்
ஓர்முறை சோதிக்க
பேரொளி வீசும்
பரிதியின் மைந்தனாய்
நீர் நிலை தவழ்ந்து
சாரதி புதல்வனாய்
சீர் பெற வளர்ந்து
தடக்கை சிவக்க
கொடை பல அளித்து
கூடா நட்பால்
சோதரன் இல்லாளை
பொல்லாப்பழி செய்து
சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்! வலையுலக
வள்ளல்களே! என் பெயர்
நவின்றிடுவீர், அம்பியின்
பின்னூட்டத்தில்!"

இந்த ஹைக்கூ கவிதைகள்ன்னு ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல) இருக்கே! ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஹைக்கூ கவிதைகள் வாமன அவதாரம் மாதிரி. மூனு அடி மண் கேட்டு கடைசில கொடுத்தவனுக்கே ஒரு ஷாக் கொடுப்பாரே, அது போல இந்த ஹைக்கூஸ் நச்சுனு நாலு வரில ஒரு கதையே சொல்லிடும். நேத்து எனக்கு ஒரு ஹைக்கூ தோணிச்சு(இது வேறயா?)

எப்படி இருக்கு?னு சொல்லுங்க.

"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"

இதை போல(இத விட பெட்டரா) இன்னும் சில ஹைகூஸ் ட்ரை பண்லாமா?னு ஒரு யோசனை. அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்.

நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)

39 comments:

நிலாக்காலம் said...

கர்ணன்.. :-)

சென்ஷி said...

முதல் கவிதைக்கு விடை கர்ணன்..

ஹைக்கூ ஓக்கே.. அடுத்த டிரை எப்ப.. :))


கவுஜயப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலன்னா நம்ம கவுஜாயினி ராப் சும்மா விட மாட்டாங்களே அம்பி :))))

gils said...

karnan :) incubator haiku soober :) marabu kavithai atha vida soober :) ipdilam usupethina inum naalu kavuja extra poduvelono

ambi said...

வாங்க நிலா, சரியா சொல்லிட்டீங்க.

யப்பா! பின் நவீனத்துவ புலி சென்ஷியே ஹைக்கூ ஓகே சொல்ல்ட்டாரு பா! அடுத்த ட்ரை சீக்ரமே!

பேசிட்டு இருக்கும் போதே எதுக்கு ராப் சிங்கத்தை எல்லாம் கூப்டறீங்க? அவங்க இதுக்கு எதிர் கவிஜ போட்டுட போறாங்க.

வாய்யா கில்ஸ், உங்க பாராட்டுக்கு நன்னி.

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம்ம் நேரம்!! :P:P:P:P

ambi said...

//ம்ம்ம்ம்ம்ம் நேரம்!! //

@Geetha madam,

நேரம்:Tue Dec 09, 01:58:00 PM :)))

ராமலக்ஷ்மி said...

//அந்த எபிசோடுக்கு ஏத்த மாதிரி நாலஞ்சு லைன்ல ஹஸ்கி வாய்ஸ்ல சித்தர் பாடல்கள் ரேஞ்சுல ஒன்னு வாசிப்பாங்க.//

ஆமாம். ஒரு த்ரில் ஏற்படுத்தும் குரல். கற்பனையில் அதே வாய்ஸில் உங்க கவிதைய வாசிச்சுப் பாத்துக்கிட்டேன். நல்லாயிருந்தது. [அப்படி வாசிச்சதைச் சொல்லவில்லை, உங்க கவிதையைச் சொன்னேன்:)]! விடை எல்லோரும் சொல்லியாச்சு.

//இப்படி தலையை சுத்தி மூக்கை தொடறாங்க?//

என்னைப் போன்ற ஆசாமிங்க:))! சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது எனக்கு என்றைக்கும் கை வராத கலையா போச்சு:(! அதனாலென்ன நீங்க சொல்ற மாதிரி படிக்கவோ சாத்தவோ ஆட்கள் இருக்கும் வரை கவலையில்ல:)!

சரி, அடுக்கடுக்காய் அடுத்தடுத்து வரவிருக்கும் உங்கள் ஹைக்கூகளுக்காக வெயிட்டிங்.

Anonymous said...

//காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது.//
அந்த சீரியல் நான் ஸ்கூல் படிக்கும் போது வந்தது..
அப்ப நீங்க எனக்கு அங்கிள் ஆ????
;)))

//சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"//

ஹைகூ நல்லா இருக்கு.

//நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)//

இது எப்படி இருக்கு பாருங்க.....

"கஷ்டப்பட்டு செஞ்சு
வானலியில் கேசரி...
கையில் பிளேட்டுடன்
காத்து நிற்க்கும் அம்பி!!"

:))))))

Kathir.

ambi said...

//கற்பனையில் அதே வாய்ஸில் உங்க கவிதைய வாசிச்சுப் பாத்துக்கிட்டேன். //

ஹைய்யோ, கரக்ட்டா பாயிண்டை புடிச்சீங்க ராம லக்ஷ்மி, நானும் அதே வாய்ஸை மனசுல வெச்சு தான் அந்த கவிதையை இயற்றினேன், நானும் அப்படிதான் படிச்சு பாத்தேன்.
நீங்க பெரிய கவிதாயினி, என்ன சொல்ல போறிங்களோ?ன்னு பயத்தோட தான் பதிஞ்சேன். ரெம்ப நன்னிங்க. :))

@கதிர், இப்படி ஒப்பன் மேடையில என் வயசை போட்டு உடைக்கனுமா? நல்லா இருங்கடே! :))

உங்க ஹைக்கூ படிச்சுட்டு ஆபிஸ்ல கொல்லுனு சிரிச்சேன். ரொம்ப நன்னிங்க கதிர். :)))

இலவசக்கொத்தனார் said...

அம்பி, ரெண்டு கையும் நீட்டு. பளார் பளார். கவுஜ எழுதாதே கவுஜ எழுதாதேன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன். அவ்வளவு சொல்லியும் கேட்காம கவுஜயா எழுதற உன்னை. பளார் பளார். இனிமே கவுஜ எழுதுவ. எழுதுன கையை முறிச்சு அடுப்பில் வெச்சுருவேன். பளார்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ, தெரியாம உள்ள வந்துட்டேன்.. என்னை மன்னிச்சு விட்ருங்க :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்புறம், சுஜாதா மாதிரி சொல்லணும்னா, நீங்க எழுதியிருக்கறது ஹைகூ இல்ல, பொய்கூ :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆனாலும், தொடர்ந்து டிரை பண்ணுங்க... எங்களுக்கும் பொழுது போகணும்ல :)

கே.ரவிஷங்கர் said...

அம்பி,
நீஙகள் எழுதினது மரப்புதுஹைகூ.


"ஹைகூ" உண்மையான விதிகள் வேறு. Sesaon பற்றித்தான் உண்மையான ஹைகூவில் படித்துள்ளேன்.

நாம் (என்னையும் சேர்த்துதான்) எழுதிக்கொண்டிருக்கும் ஹைகூவெல்லாம் பொய்கூ

நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது:

ஜப்பானிய ஹைகூ என்பது ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற குட்டி கவிதை வடிவம்.

சிறிய வரிகளில் "சடக்" என்று ஒரு கற்பனையைப் பிடித்து நிறுத்தி, படித்ததும் "அட" என்று சொல்ல வைக்கும்

உவமை/உருவகம் இருக்க கூடாது. மூன்று வரிகள்தான்.

அதாவது Long shot, midshot, close up என்று மூன்று வரிகள்.

கடைசிவரி அல்ல்து க்ளோஸ் அப் அல்லது ஸூம்மில் ஒரு காட்சி உறைதல்/ ஆச்சரியம்/திகில் /திருப்பம் வேண்டும்

நான் எழுதியது அல்ல எங்கோ படித்தது

விழுந்த மலர் திரும்ப
கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!

மாதத்தில் ஒருநாள்
போர்த்துகிறான் பொன்னாடை
சலூன்காரன்

நான் எழுதியது:-

குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்

அம்பி மீதிய படிக்க என் வலைக்கு
ஒரு வாட்டி வாங்கோளேன்.
அஙக் வந்து 1-12-02008/30-11-2008/7-11-2008 பதிவுகளை படிங்கோ!

உங்க அபிப்பிராயத்த மறக்காம சொல்லுங்கோ! நாகேஷ பார்த்துண்டே
பதிவ போடறேன்.அதான் அவா பாஷை!

Ravi said...

Kavidhai sooper Ambi. Romba porumaiyaa padichu, "Karnan"-nu vidai yosichu vandhu paarthaa, mudhal comment-leye vidai irukku! I thought you would've enabled comment moderation ;-) Good one Ambi. Btw, andha haikoo kavidhaikku (uL)artham puriyala.

ILA said...

ஹை
க்
கூ!

ஒன்னுங்கீழ் ஒன்னு,ஆச்சர்ய குறி. இதுவும் ஹைக்கூதான், விவேக் சொன்ன மாதிரி கவிதைதான்.

ஹைக்கூ கேட்டான்
வரவில்லை வார்த்தைகள்
போடா என்றேன்!
போய்விட்டான்.
மனது வலித்தது,
ஹைக்கூ வரவில்லை
கண்ணீர் மட்டும் கண்களில்.


இதுவும் ஹைக்கூதான் :)
நம்புங்கப்ப்பா

rapp said...

அண்ணே, நாம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒண்ணுன்னே, இப்டி நீங்க எனக்குப் போட்டியா வரலாமா?:):):)

rapp said...

லுங்கிக் கட்டும்
தம்பி உள்ள
அம்பி அண்ணே
வம்பு செய்ய
தும்பி தேவை


எப்டி என் கவுஜ?:):):)

rapp said...

நாங்கெல்லாம் டெர்ரர்ல:):):)

rapp said...

me the 20th:):):)

Sridhar Narayanan said...

////காலேஜ் படிக்கறப்ப மர்ம தேசம்னு ஒரு சீரியல் இந்திரா செளந்தர்ராஜன் எழுதினது டிவில வந்தது.//
அந்த சீரியல் நான் ஸ்கூல் படிக்கும் போது வந்தது..
அப்ப நீங்க எனக்கு அங்கிள் ஆ????
;)))//

அந்த சீரியல் வரும்போது நான் பொறக்கவே இல்லை. அப்ப நீங்க எல்லாரும் எனக்கு அங்கிள் ஆ?

ஏற்கெனவே கொத்தனா, ஜ்யோவ்ராம் எல்லா வந்து மரியாதை செஞ்சுட்டதினால அவங்க எல்லாருக்கும் ஒரு ‘ரிப்பீட்டேய்’ போட்டுட்டு நான் ‘அப்பீட்டேய்’.

G3 said...

//அதான் படிக்க/ நாலு சாத்து சாத்த நீங்க இருக்கீங்களே, அந்த தைரியம் தான்.//

Onnum soldradhukkilla..

Kuthunga esamaan kuthunga :P

G3 said...

//நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)//

enakku "Unnala naan ketten.. ennala nee ketta" pazhamozhi nyaabagamae varala :P

MayVee said...

"கவிதை எழுதறவங்களை பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும்"

i too have the same feeling since am not good in any of the language under the sky
.
"ஸ்கூல படிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வத்துல கவிதை எழுதறேன் பேர்வழின்னு வானம்-வெண்ணிலா, மழை-மண் ஈரம், தென்றல், இப்படி ஏதோ ட்ரை பண்ணி எனக்கே அது செம மொக்கையா தெரிய அத்தோடு என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது."
i dont admit that my poems are mokkai but my friends say like that. still i have confidence tht i will write a good poem before my death ( positive thinking).

" சேரா இடம் சேர்ந்து
கான்டீபன் அம்பினில்
விண்ணுலகு புகுந்து
செங்கமலன் தாழ்
எய்தினேன்!"
i think one comes mahabharath in a scene mother of pandavas cries and admitts tht she mother of karnan too.

"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"

cant get the meaning... can u explain pls...

"நீங்க எழுதின ஹைக்கூகளையும் சொல்லுங்க, பதில் மரியாதை பண்ண ரொம்ப ஆவலோட இருக்கேன். :)"

sorry... i tried once writing during school days.. when i showed it to my tamil teacher, he asked me not to try like this anymore and also asked not to show tht poem to anyone.

ambi said...

@கொத்ஸ், யோவ், கையை நீட்ட சொல்லிட்டு எதுக்குய்யா கன்னத்துல பளார் பளர்னு அடிக்கிறீர்? :))

ரோட்டுக்கு அந்த பக்கம் இருக்கறவுகளே இப்படி தான் போல. :p

உமக்கு கவிதை புடிக்காது!னு எனக்கு இந்த பதிவை போடும் போதே தெரியும், இருந்தாலும் என்ன தான் நடக்க போகுது பாத்த்ருவோம்னு தான் பதிஞ்சேன். ஹிஹி. :)))


வாங்க சுந்தர், நீங்க இவ்ளோ பீல் பண்ணுவீங்கன்னு தெரியாம போச்சு. :)

பொய்க்கூவா? சரி விடுங்க, ஏதோ ஒரு கூ! :D

நாங்க அசர மாட்டோம் இல்ல, நிஜமாவே ஒரு ஹைக்கூ எழுதற வரைக்கும் உங்களை விடறதா இல்லை. :))

ambi said...

ஒரு Constructive comment போட்டதுக்காக ரொம்ப நன்னி ரவி ஷங்கர். :))

இதோ உங்க வூட்டுக்கு தொபக்கடீர்ன்னு வந்து குதிக்கிறேன். :D

சுஜாதா சொல்லிய வரிகளை நானும் ஆவில படிச்ச நியாபகம். நீங்க எந்த பாஷைல பேசினாலும் ரொம்பவே மீனிங்க்புஃல்லா இருக்கு. :))

ambi said...

@ரவி, நீங்க கர்ணன்னு கண்டுபுடிச்சுடுவீங்கன்னு எனக்கு தெரியும். சரி விடுங்க, அடுத்த குவிஜுல அடிச்சு ஆடுங்க. :)

நான் எழுதினது பொய்க்கூ!

மீனீங்கா?

இன்குபெட்டரில் குழந்தை இருக்குன்னா என்ன அர்த்தம்? அது குறை மாசத்துல பிறந்து இருக்கு அதுவும் சிசேரியன் பண்ணி. மெகா சீரியல்களில் எல்லாம் எப்ப பார்த்தாலும் மாமியார் மருமவ சண்டை தான். அதான் ஒரு மாமியார் சர்காஸ்டிக்கா(sarcastic comment) இப்படி சொல்றாங்கன்னு சொல்லி இருக்கேன். :))

ambi said...

@இளா, நீங்க எழுதி இருக்கறது புதுக்கூ. ஆனாலும் நல்லா இருக்கு. :))

@ராப், ஐய்யயோ! தெரியாம கவிதை எழுதிட்டேன். என்னை மன்னிச்சு விட்ரும்மா. உன் கவிஜையை படிச்சிட்டு என் தம்பி கொல்ன்னு சிரிச்சிட்டான். :))

வாங்க ஸ்ரீதர், ஆமா கொத்ஸ் செம டேமேஜ் பண்ணிட்டாரு.

@ஜி3, நீங்க கூட கவிஜ எழுதுவீங்க இல்ல, இப்ப நியாபகம் வருது. :p

@மேவீ, கர்ணன் தான் சரியான பதில். உங்க தன்னம்பிக்கைய பாராட்டறேன்.என்னோட பொய்க்கூவுக்கு நானே மீனிங்க் சொல்லி இருக்கேன் பாருங்க ரவிக்கு, அத படிங்க. :))

Anonymous said...

unga post padichadilirindhu kavidah,kavidha nnu lady kamal kannaka suttriyadhil irandu dhadavai karikai karugiyathu,kuzhambu vatriyadhu,saapadirkku vettu vaitha ambi vazhga!!
(idhai specialaa solla sonnaru enga veetu rengamani).by the way haikku pidithadhu.
nivi.

Anonymous said...

"kavidaikka kuttikaranam
aditthen,koda kodavenru vizundadhu
kavidhaiyalla,
kattiyavarin
kuthu."idhu ennoda haikku.cha,idukku dhan solren ambi,
summa irundha sanga oodhi kedukka koodathunnu.
nivi.

ambi said...

//karikai karugiyathu,kuzhambu vatriyadhu,saapadirkku vettu vaitha ambi vazhga!!
(idhai specialaa solla sonnaru enga veetu rengamani).//

@நிவி, ஆக இன்னிக்கு உங்க வீட்டு ரங்கமணி கேன்டீன்ல சாப்பிட போறாரா? சரி விடுங்க, ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு சாப்டட்டும். (ச்சும்மா) :))

நீங்களும் இந்த ராப் கூட சேர்ந்துட்டீங்க போல! :p

நாகை சிவா said...

சூ..சூ..

ambi said...

@புலி சொ செ சூ..? :D

கே.ரவிஷங்கர் said...

அம்பி,

ரொம்ப நன்றி.நீங்க 1-12-2008 மட்டும்தான் படிச்சீங்க.இது ரெண்டும் படிச்சி சொல்லுங்க(30-11-2008/7-11-2008)

நன்றி

Ravi said...

Ambi, viLakkathirkku NandrigaL!!

ambi said...

Thanks alot Ravishankar and Ravi :)

இளைய பல்லவன் said...

//ஒரு சமாச்சாரம் (சம்சாரம் இல்ல)//

உங்களுக்குத்தான் எதப் பாத்தாலும் சம்சாரமாவே தெரியுது போலிருக்கே.

//
என் கவிஜை ஆர்வம் மூட்டை கட்டப்பட்டது. /

அது கவிஜை இல்ல கவுஜ

//
"சிசேரியன் செய்து
இன்குபேட்டரில் குழந்தை
மருமகளுக்கு சுகப் பிரசவம்
சந்தோஷமாய் சிரிக்கும்
மெகாசீரியல் மாமியார்!"
//

இது ஹைக்கூவா பின் நவீனத்துவக் கவுஜயா? இதுல எங்கய்யா சுகப் ப்ரசவம்:(

indianangel said...

Ambi -
Naan ezhudhina Haikoo post some time back.
http://indianrhythm.blogspot.com/2008/07/81.html

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信