Friday, December 26, 2008

ஏ வெட்னெஸ்டே

சில படங்கள் தான் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது நம் நினைவை விட்டு அகலாமல் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை, நான் குருவி வகையறாக்களை பற்றி இங்கு பேசவில்லை. அந்த வகையில் வெட்னெஸ் டே குறிப்பிடதகுந்த படம். என் பதிவுக்கு தவறாமல் வரும் நிவி அக்கா சிபாரிசு செய்திருந்ததாலும், பல ஊடகங்களில் பாரட்டபெற்றதால் ஒரு வித எதிர்பார்ப்போடு இந்த படத்தை அணுகினேன்.

நயந்தாராவின் அபரிதமான நடிப்பால் தான் தமிழில் கஜினி கன்னாபின்னாவென ஓடியதாக்கும்! என்று அள்ளிவிட்டு என் டீமில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் வெட்னெஸ் டே டிவிடியை பண்டமாற்றம் செய்து விட்டேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.

இந்தியாவின் நிர்வாக உள்கட்டமைப்பு, முக்ய முடிவுகள் எடுக்கும் திறன், தீவிரவாத தடுப்பு மற்றும் நீதி விசாரணை, தண்டனைகளின் தாக்கம் இவற்றை கொஞ்சம் கூட தயவுதாட்சண்யமின்றி உள்ளது உள்ளபடி காட்சிகளாக்கிய இயக்குனரின் தைரியத்தை எண்ணி நான் பிரமித்து நிற்கிறேன்.

ஒரு இந்தி படத்தில் ஸ்கர்ட் அணிந்த நாயகி கிடையாது, டைட் பனியனும், ரேபான் கிளாஸ் அணிந்த நாயகனும் இல்லை, ஏ.கே 56 ரக துப்பாக்கி, சாட்டிலைட் போன் வசதி கொண்ட வில்லனும் இல்லை.


பின்ன என்ன தான்யா இருக்கு இந்த படத்துல?


கதை இருக்கு, திரைக்கதை இருக்கு, உண்மைகளை டமால்னு போட்டுடைக்கும் தைரியம் மட்டும் இருக்கு.

ஒரு சாமான்யன் மனதில் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படி இருக்கும்? அதை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதை இதைவிட சிறப்பாக யாரும் காட்டமுடியாது. வசனங்கள் பல இடங்களில் பச்ச மிளகாய் ரகம்.
ஒரு மைக், வோடோபோன் நாய்குட்டி போல பின் தொடரும் கேமிராமேன் சகிதம் இன்று இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் பேட்டி எடுக்கும் அரை டிக்கெட்டு ஜர்னலிஸ்ட்டுகளை செமையா கலாசி இருக்கிறார் இயக்குனர். ஆனாலும் மும்பை குண்டுவெடிப்பில் இந்த அரை டிக்கட்டுகளின் அட்டகாசத்தை நாடு நன்கு அறியும்.

Spoofing என்று சொல்லபடும் பகடி பண்ணுதல் எப்படி? என்பதை இந்த படத்தை பார்த்து உதவி இயக்குனர்கள் கற்று கொள்ளலாம்.

ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தமக்கு வரும் கொலை மிரட்டலுக்கு பயந்து போலிஸ் கமிஷனரிடன் உதவி கேட்கும் போது தான் ஒரு மைனாரிட்டி, எனவே தனக்கு பாதுகாப்பு வேணும்! என சொல்லும் காட்சி தூள்.

ஒரு வலுவான, துரிதமான திரைகதை எப்படி இருக்க வேண்டும்? எனபதற்க்கு இந்த படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. படத்தில் நஸ்ரூதீன் ஷாவும், அனுபம் கேரும் மிக இயல்பாக நடித்து உள்ளனர். "ஏய்ய்ய், நான் பாக்கத் தான் சுள்ளான், சூடானா சூரியன்" என கத்தும் நம்மூர் பஞ்ச் பரமசிவன்கள் அவசியம் இந்த இருவரின் நடிப்பையும் பார்க்க வேணும்.

எனக்கிருக்கும் ஒரே கவலையெல்லாம் எக்காரணம் கொண்டும் இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)

மொத்தத்தில் 'ஏ வெட்னெஸ் டே' இந்தியாவின் மெத்தன போக்குக்கு ஒரு சவுக்கடி.

43 comments:

சின்னப் பையன் said...

மீ த பஷ்ட்?

சின்னப் பையன் said...

அருமையான விமர்சனம்... நான் இன்னும் இந்த படத்தை பாக்கலே... தேடறேன்....

ISR Selvakumar said...

உங்க எழுத்து படத்தை பார்க்கத் தூண்டுது.

Voice on Wings said...

கொஞ்சம் ஆபத்தான கருத்தியலைக் கொண்ட படம். விரிவா எழுதறேன்.

Unknown said...

செம சூப்பரான படம் இது....
இந்த படத்தை இப்போ நம்ம கமல் ரீமேக் செய்ய போறாராம்....
மம்முட்டி இல்ல மோகன்லால் நடிப்பாங்களாம் பேசிக்கிறாங்க

Anonymous said...

Hi

very nice this film story line

I wish to watch this movie if you know any online link??

puduvai siva

Unknown said...

அம்பி,

இந்த மாதிரி Paralel cinema ஹிந்தியில் திடீர்ன்னு வந்து கலக்கும்.
ஆனா திருப்பி மசாலாவுக்கு போய்டுவாங்க.

கமல் ரைட்ஸ் வாங்கியிருக்கிறதா ஒரு நீயுஸ்.கமல்-மோகன்லால் நடிப்பு.

//[Photo] ஆக்ஸ்போர்டு .... அடிப்படை நியூட்டன் விதிகளை //

எழுத்தில் சுஜாதா நெடி அடிக்கறதே. அம்பி.

gils said...

echuseme..adien raamanujadaasannu pona padathula sound uta oru party..mammootyoda team katti intha padatha tamila edukaporatha talk going...now that wud be a movie no one wud miss :)

RAMASUBRAMANIA SHARMA said...

"NALLA VIMARSANAM"...FOR A WONDERFUL FILM...THESE TYPE OF FILM & SUPPORTING ARTICLES, WILL REALLY IMPROVE THE IMAGE OF THE INDIAN CINEMA...AND WILL BRING THE AUDIENCE TO THEATRES...BY CHANCE, TAMIL REMAKE COMES...IT WILL BE ANOTHER DIAMOND...IN THE THROWN OF "A WEDNESDAY"....HOPE, ONLY THE STALWARTS OF TAMIL CINEMA IS GOING TO REMAKE THE FILM...NO DOUBT, THAT TOO WILL BE A GOOD FILM...ADVANCE WISHES...KEEP WRTING SUCH ARTICLES...

RAMASUBRAMANIA SHARMA said...

anupunkoooo...!!!!

Sridhar Narayanan said...

//ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை //

எப்படி அம்பி? எப்படி இப்படி எல்லாம்? அவ்வ்வ்வ்வ்....

இந்தப் படம் நம்ம லிஸ்ட்ல இருக்கு. இன்னமும் நேரம் வரலை. சீக்கிரமா பாத்திடுவோம்.

தமிழ்ல கமல்-மோகன்லாலோட வரப் போகுதாம் (ஓ! ஏற்கெனவே சொல்லிட்டாங்களோ)

மேவி... said...

சூப்பர் படம். nasurendin shah கலக்கி இருப்பார். இன் தமிழ் சத்யராஜ் இல்லாட்டி பிரகாஷ்ராஜ் இருந்தால் நல்ல இருக்கும். என் தோழி தன் மொழி பெயர்த்து வசனத்தை சொன்னாள்.என்னா நமக்கு ஹிந்தி செம வீக்

Anonymous said...

arumaiyana vimarsanam sir,endha
allavukku enna badhichiddo andha allavukku appadi nijamave unmai nilayai vilakkka oru 3 mani neram law and order kaiyil edukka anumadhikka mudiyuma ???nnu ketka vaitha padam. anna commercial crapirrku madhiyil idu oru landmark padam.kamal matrum mammotty kaiyil innum padam miliralam."shaurya" hindi padam.aanal silaperin nadippirkkaga ,padathin(army storyline matrum (theevirathirkkana) famous padam.konjam different type.neram
kidaithal parungalen.
nivi.

Anonymous said...

arumaiyana vimarsanam sir,endha
allavukku enna badhichiddo andha allavukku appadi nijamave unmai nilayai vilakkka oru 3 mani neram law and order kaiyil edukka anumadhikka mudiyuma ???nnu ketka vaitha padam. anna commercial crapirrku madhiyil idu oru landmark padam.kamal matrum mammotty kaiyil innum padam miliralam."shaurya" hindi padam.aanal silaperin nadippirkkaga ,padathin(army storyline matrum (theevirathirkkana) famous padam.konjam different type.neram
kidaithal parungalen.
nivi.

ambi said...

ஆமா, சின்ன பையன் நீங்க தான் பஷ்ட்டு. கண்டிப்பா தேடுங்க, நல்ல படம். :)


பாராட்டுக்கு மிக்க நன்னி செல்வகுமார், அந்த நல்ல படம் தான் என்னை எழுத தூண்டியது.

வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ், உங்க விரிவான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கறேன் சார். :)

கமல், தகவலுக்கு மிக்க நன்னி.

@புதுவை சிவா, அண்ணா, தியேட்டர்ல்ல போயி பாருங்க, இல்லாட்டி ஒரிஜினல் டிவிடி ஓசி வாங்கி பாருங்க. :)

ambi said...

ஆமா ரவிஷங்கர், அது இந்தி சினிமாவுக்கு உள்ள கெட்ட பழக்கம்.

"சுஜாதாவை பிடிக்காதவர்கள் இருக்கலாம், ஆனால் படிக்காதவர்கள் இருக்க முடியுமா?"

இதயத்தில் இருந்து ஆட்டுவிக்கிறார், நான் சில சமயங்களில் ஆடிவிடுகிறேன். அவ்ளோ தான். :))

தகவலுக்கு நன்னி கில்ஸ்.

Bleachingpowder said...

//இந்த படத்தின் தமிழ் உரிமையை நம்மூர் ரீமேக் ராஜாக்களான காப்பி-பேஸ்ட் ரவியோ, விஜய்யோ வாங்கி விட கூடாது. :)//

குத்து பாட்டு இல்லை,டபுள் மீனிங் வசனம் இல்லை எல்லாத்துக்கும் மேல தொப்புள் தொடை காட்டுற ஹிரோயின் இல்லை. இப்படி நல்ல விசியம் எதுவுமே இல்லாத படத்தை வாங்குறதுக்கு இளைய தளபதிக்கும், ஜெராக்ஸ் ரவிக்கும் பைத்தியமா பிடிச்சிருக்கு

ambi said...

@RAMSUBRAMANIA SHARMA,

Thanks alot for your elite comments and i agree with your all points. thanks once again for dropping here. :)


@ஸ்ரீதர், சீக்ரம் பாருங்க. மிஸ் பண்ணிடாதீங்க.

@mayvee, சரியா சொன்னீங்க, நானும் பிரகாஷ்ராஜை தான் நினைச்சேன். ஆனா சில சமயம் அவரு ஒவர் ஆக்ட்டிங்க பண்ணி சொதப்பிடுவார். :))

வாங்க நிவி அக்கா, எனக்கும் அதே எண்ணம் தான் தோணிச்சு.

அடுத்த படம் சொன்னதுக்கு மிக்க நன்னி ஹை. :))

ambi said...

//இப்படி நல்ல விசியம் எதுவுமே இல்லாத படத்தை வாங்குறதுக்கு இளைய தளபதிக்கும், ஜெராக்ஸ் ரவிக்கும் பைத்தியமா பிடிச்சிருக்கு
//

இதெல்லாம் இல்லையேன்னு இவங்க மசாலா மிக்ஸ் பண்ணிடுவாங்களே ப்ளீச்சீங்க் பவுடர். ஏன் இப்படின்னு கேட்டா மெருகேத்தி இருக்கோம்னு அறிக்கை வேற விடுவாங்க. :))

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Ambi Anna,

Review superb! I agree with கே.ரவிஷங்கர்...ennamo Sujatha vimarsanam padicha feel...

ambi said...

//ennamo Sujatha vimarsanam padicha feel...
//

@மெட்ராஸ்காரன், வேணாம், வலிக்குது, அளுதுடுவேன். :))

அவர் எங்க நான் எங்க?

நீங்க என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலீயே? :))

G3 said...

:)) Naanum indha padam paathen.. Neatly taken.. romba pudichirundhudhu.. INOX la paatha 1st movie :D

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா விமரிசனம் பண்ணியிருக்கீங்க....படம் பார்க்கணும் போல இருக்கு.
அன்புடன் அருணா

வல்லிசிம்ஹன் said...

அம்பி படத்தை விட விமரிசனம் ரொம்ப நல்லா இருக்கு. நசிருத்தீன் ஷாவுக்காகைந்தப் படம் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்தார்கள். முடிந்தால் பார்க்கிறேன்.
அப்பாடி ஷாருக்கானையும் சல்மான் கானையும் சொல்லக்கூட ஒரு நேரம் வந்ததே.

நிம்மதியா சந்தோஷமாக இருக்கு.சூப்பர் விமர்சனம்.

G3 said...

Quarter century me adichifying :D

ambi said...

வாங்க ஜி3, ஐனாக்ஸ்ல பாத்தீங்களா? எபஃக்ட் எல்லாம் சூப்பரா இருந்து இருக்கும்ல.? நீங்க தான் குவாட்டர் செஞ்சுரி.

ரொம்ப நன்னி அருணா, கண்டிப்பா பாருங்க.

வரனும் வல்லிம்மா, ஆமா, நஸ்ரூதீன் ஷா அந்த கேரக்டராவே வாழ்ந்து இருப்பார்.

Anonymous said...

//ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்து விட்டு ஒற்றை பையுடன் தனி கிளைடர் விமானத்தில் ஜெய்பூர் அரண்மனை முன் வந்திறங்கி, உச்சா போக கூட ரீட் அண்ட் டெய்லர் சூட் மட்டும் அணிந்து காக்ரா சோளி, சராரா, பாந்தினி சில்க்ஸ் புடவைக்கு கை இல்லாத ரவிக்கையுடன், கார்னியர் லிப்ஸ்டிக் மின்ன "ஓ ஷப்பா, ஹை குடியே" என ஐநூறு பில்ஸ்பெர்ரி சக்கிப்ரேஷ் மைதாமாவு பெண்களுடன் ஆட்டம் போட்டு அதில் வரும் அடுத்தவன் பெண்டாட்டியை டாவடித்து, பின் அவள் தங்கச்சிக்கு தாலி கட்ட குதிரையேறி, முந்தின காதலிக்கு கண்ணீருடன் அல்விதா சொல்லும் ஷாரூக், சல்மான்களுக்கு மட்டுமே கதை பண்ணுவோம் நாங்கள் என்ற அடிப்படை நியூட்டன் விதிகளை தவிடுபொடி ஆக்கி விட்டார் இந்த படத்தின் டைரக்டர் நீரஜ் பாண்டே.
//

கலக்கிட்டீங்க அம்பி :-)

லிஸ்ட்ல எழுதிக்கிட்டேன். இந்த படத்தையும் பார்த்திடறேன்.

ambi said...

கண்டிப்பா பாருங்க சென்ஷி, ரொம்ப நல்லா இருக்கு. :))

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Thala,

Onna vechu comedya???Iruttu kadaike alwa va? Thirupathike mottaiya? Shankarukke filma? Sreeramukke camerava? JK Ritheeshukke mokkaiya? Sathyaraj kittaye lollla?.....thala nee oru thoongura singam on therame onkke theriaythu...Nee Sujathanna naa oru Desikan;)

ambi said...

//thala nee oru thoongura singam on therame onkke theriaythu...Nee Sujathanna naa oru Desikan//

அவ்வ்வ். முடியல. உங்க அன்புக்கு நான் அடிமை.

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

தல...இன்னும் ஒரு சின்ன கேள்வி. பா ராகவன் சார் சைட்டுல பின்னுட்டம் போட்டது நீங்களா?????? discount பதிவுல...

Anonymous said...

//பா ராகவன் சார் சைட்டுல பின்னுட்டம் போட்டது நீங்களா?????? discount பதிவுல...//

NO, could you pls give me the URL for his site...?

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

பா ராகவன் சாரின் வலைத்தளம்:
www.writerpara.net

நான் குறிப்பிட்ட பின்னுட்டம்:
http://www.writerpara.net/archives/381

Anonymous said...

லிங்கியதுக்கு மிக்க நன்னி மெட்ராஸ்,

நான் அவரில்லை. :))

Anonymous said...

You have missed another beautiful one apart from Minority. When a geek comes for hacking, Anupam asks him whether he can do it. He replies "Nope, I can not" to everyone shock and tells to Anupam that these systems are outdated one.

-Arasu

ambi said...

//these systems are outdated one.
//

yeeh, thanks for reminding me a wonderful scene as well as for your visit to my space arasu :)

Anonymous said...

yup. neat...thought provoking movie. I liked it. do watch "slumdog millionaire"...very well picturised movie.lots of -ive vimarsanams are going on about this , but whatever..very good one. Nijathai..we have to accept.--skm

makku plasthri said...

சமீபத்தில் ஹிந்தியில் வந்த படங்களில் இதும் ஒன்று.மற்றொன்று மும்பை மேரி ஜான். இரண்டு படங்களுமே தீவிரவாததிற்கு எதிரானவை.இந்த இரு படங்களும் மும்பையை பின்புலமாக கொண்டதால் மட்டுமே நம்மை பாதித்தன. wednesday சென்னை பின்புலத்தில் எவ்வாறு எடுபடும் என்று தெரியவில்லை.

ambi said...

@skm, yet to watch slamdog. Long time no see...? :))


//wednesday சென்னை பின்புலத்தில் எவ்வாறு எடுபடும் என்று தெரியவில்லை.
//

@plathri, Good question, let us see. :))

Karthikeyan Ganesan said...

Super...!! Ambi. sariyana savukkadi for hindi Cinema.

Me too going to watch the film. Can you write reviews for some books?

try thala.

Anonymous said...

//Can you write reviews for some books?
//

@karthikeyen, Thx karthi. books...? time constraint also don't know what is the latest one in the market..

Any suggested readings from your side...?

rapp said...

நீங்களும் எங்கக்காவும் சொன்னதால பாத்தேன். சூப்பரா இருக்கு. கமல் தமிழ்ல எடுக்கப்போறாராமே,சரி வருமா?

ambi said...

//கமல் தமிழ்ல எடுக்கப்போறாராமே,சரி வருமா?
//

@rapp, சரியா வரும்னு தான் நினைகிறேன்.

ஆமா, கிஸ் சீன் இருக்குமா? :))