புரபசர் ரொம்பவே சீரியசா இன்ஷுரன்ஸ் பற்றி பாடம் எடுத்து கொண்டு இருந்தார். திடீரென எல்.ஐ.சி பற்றி பேச்சு வந்தது. ஒரு மாணவன் தடாலென எழுந்து, எல்.ஐ.சிக்கு எதுக்கு அப்படி ஒரு லோகோ வெச்சுருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா சார்? என கொக்கி போட்டான்.
புரபசரும் ரொம்பவே ஆர்வமா, உனக்கு தெரிஞ்சா சொல்லுப்பா, நானும் தெரிஞ்சுக்கறேன்!னு அவன் வலையில் விழுந்தார்.
ரொம்ப சிம்பிள், ப்ரீமியம் கட்டினவன் மண்டைய போட்டு அவன் தலமாட்டுல வெளக்கு வைக்கும்போது தான் இன்ஷுரன்ஸ் பணத்தை குடுப்போம்!னு சிம்பாலிக்கா சொல்றாங்க, அதான் அந்த லோகோவுக்கு அர்த்தம்!னு பையன் சிரிக்காம கலாய்க்க அந்த புரபசர் முகம் போன போக்கை பாக்கனுமே!
அப்புறம் அந்த பையன் புரபசர்கிட்ட மன்னிப்பு கேட்டுகிடான். வகுப்பும் தூங்கி வழியாம கலகலப்பா போச்சு.
சரி, இப்ப நாம் விடைகளை பாப்போமா?
1. Columbia pictures
2. Red hat
3. Cadburys
4. Red bulls
5. Bacardi
6. Dunlop
7. Puma
8. Tata
9. SBI
10. Ing vysya
11. Wikipedia
12. Mercedes benz
இந்த தடவை நிறைய பேரு சரியான விடைகளை சொல்லி இருக்கீங்க, ரொம்ப சந்தோசம்.
ப்ரியன், எம்ஜி நிதி, கப்பி பய, கைபுள்ள, நாகை சிவா, ரவி, சரவண குமரன், மெட்ராஸ்காரன், ஸ்ரீன்னு இந்த லிஸ்ட் ரொம்ப நீளாமாவே இருக்கு. (யார் பேராவது விட்டு போச்சா?)
மீண்டும் ஒரு சுவாரசியமான குவிஜுடன் உங்களை சந்திக்கிறேன்.
பி.கு: அந்த காலேஜ் பையன் நானில்லை, என் உடன்பிறப்பு. :)
9 comments:
12ல ஒன்னு சரியாச் சொல்லிட்டனே.. அதுக்கு எதுவும் பரிசு கிடையாதா :)
ஹீம் 1க்கு ஏதோ பிக்சர்ஸ் மட்டும் தெரிஞ்சது. அதே மாதிரி விக்கிபீடியா அடிக்கடி பார்க்கறதுதான் ஆனா கொஞ்சம் கூட நினைவுக்கு வரலை. மத்தது எல்லாம் இப்பதான் தெரியும்
சரி சரி 50 % எடுத்தாலும் எங்க ஊருல எல்லாம் பாஸ்தான் அதனால நான் பாஸ்தான் .
(பாஸ்னு சொல்லிடிடுங்களேன்)
//பி.கு: அந்த காலேஜ் பையன் நானில்லை, என் உடன்பிறப்பு. :)//
நம்பறோம்:)
உங்க உடன் பிறப்பு உங்களை மிஞ்சிடுவார் போலிருக்கே:)! அவரும் பதிவரா:)?
அண்ணா, பிரேஸ் எதுவும் கொடுக்க மாட்டீங்களா?
en pera kanum..ithu aniayaym akuramam
oru vazhiya ella answersum correcta solliyachu.. next quiz eppadi irukka poguthonu theriyala..
ambi,
ungalukku oru awarduu waiting in my blogg... please collect it..
"ரொம்ப சிம்பிள், ப்ரீமியம் கட்டினவன் மண்டைய போட்டு அவன் தலமாட்டுல வெளக்கு வைக்கும்போது தான் இன்ஷுரன்ஸ் பணத்தை குடுப்போம்!னு சிம்பாலிக்கா சொல்றாங்க, அதான் அந்த லோகோவுக்கு அர்த்தம்!னு பையன் சிரிக்காம கலாய்க்க அந்த புரபசர் முகம் போன போக்கை பாக்கனுமே!"
he he. anyways i wanted to participate in next one. pls make it simple; since am a back bench student from lkg.
@சுந்தர், 12ல ஒன்னு ரைட்டு, அதுக்கு பரிசா? நான் சென்னை வரும்போது தரேன். :)
@தாரணி ப்ரியா, 50% பாஸ் தான் பாஸ். :)
@ராமலக்ஷ்மி, நல்ல வேளை அவன் இன்னும் பதிவர் ஆகலை. :D
@சரவண குமரன், கண்டிப்பா அடுத்த தடவை குடுத்துடுவோம். :)
@கில்ஸ் உன் பெயரு விட்டு போச்சா? ஐ யம் சாரி.
வருகைக்கும் அவார்டுக்கும் மிக்க நன்னி எம்ஜிநிதி.
@மேவீ, அடுத்த தடவை கொஞ்சம் கஷ்டமா குடுக்க திட்டம் போட்ருக்கேன். :D
Post a Comment