Tuesday, December 02, 2008

சில விளம்பரங்கள் - ஒரு குயிஜு

நீங்கள் டிவியில் விளம்பரங்கள் பார்க்கும் பழக்கமுள்ளவரா? அப்படியானால் இந்த குயிஜு உங்களுக்கு தான். ஒரு பொருளை விளம்பரபடுத்த எப்படி யுக்திகள், மாடல்கள் முக்யமோ அதைவிட முக்யம் கேச்சிங்கான வரிகள்/பாடல்கள். மக்கள் மனதில் பச்சக்குனு ஒட்டிக்கற மாதிரி வரிகளை ஜிங்கில்ஸ் என விளம்பரதுறையில் குறிப்பிடுவார்கள்.

புது காரு! புது வீடு! கலக்கறே சந்துரு! என்றால் நமக்கு ஏஷியன் பெயின்ட்ஸ் நினைவுக்கு வருகிறது இல்லையா? அது தான் ஜிங்கில்ஸின் மாயம். திரைப்பட பாடல் வரிகளை விட சில விளம்பர பட வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது என நான் சொன்னால் அது மிகையில்லை. பாடல் வரிகள் என்று இல்லை, சில தீம் மியூசிக், அல்லது பிஜிஎம் உதாரணமாக டைட்டன் வாட்ச்சுக்க்கான தீம் மியூசிக்கை கொஞ்சம் அசை போடுங்கள் பார்க்கலாம், சரி வேணாம்! லேட்டஸ்ட் ஹிட்டான ஏர் டெல் பிஜிஎம் நினைவுக்கு வருதா? அதான் அவ்ளோவே தான்.

சில பிரபல வரிகளை கீழே குடுத்துள்ளேன், எந்த பொருள்? என நீங்கள் சொல்லனும். சிம்பிள் தானே? ரொம்பவே எளிமையாக தான் கேள்விகள் இருக்கு என நம்புகிறேன். எல்லாம் போன தடவை பட்ட அனுபவம் தான்.

1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்.

2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு!

3) வெண்மையின் புது மந்திரம்!

4) மனைவி பேச்ச கேளுங்க!

5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன்.

6) தாய் வீட்டு சீதனம்.

7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். (i miss you so much, it hurts).

8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ!

9) தி டேஸ்ட் ஆப் இந்தியா!

10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! (Don't pray! Just spray)

71 comments:

ambi said...

சும்மா ஒரு மைக் டெஸ்டிங்க்!

Anil Menon said...

very interesting....
Keep it up..... Quizmaster

கைப்புள்ள said...

எனக்கு தெரிஞ்சதுல சில

1)தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - போத்தீஸ்

2) ஸ்வீட்ட எடு! கொண்டாடு! - காட்பரீஸ்

3) வெண்மையின் புது மந்திரம்!

4) மனைவி பேச்ச கேளுங்க!

5) நான் என் மனம் சொல்வதை கேட்டேன் - டாட்டா இண்டிகாம்

6) தாய் வீட்டு சீதனம் - ஆச்சி மசாலா

7) ஐ மிஸ் யூ ஸோ மச்! இட் ஹர்ட்ஸ். (i miss you so much, it hurts) - ஏர்டெல்

8) எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ! - சரவணா ஸ்டோர்ஸ்

9) தி டேஸ்ட் ஆப் இந்தியா! - அமுல்

10) டோண்ட் ப்ரே! ஜஸ்ட் ஸ்ப்ரே! (Don't pray! Just spray) - ஆக்ஸ் டியோ??

தாரணி பிரியா said...

1) Kumaran Silks

2) Cadburys Five star

3) Power soap

4)

5) Tata indicom

6) Achi Masala

7)

8)Saravana Stores

9) Amul

10)


இதுல எத்தனை கரெக்டோ ? :)

சென்ஷி said...

1. குமரன் சில்க்ஸ்

2. காட்பரீஸ்

3. ஆலா(வா)

4. சாரி! நான் பிரம்மச்சாரி :(

5. ரஜினி பட டயலாக்கு :)

6. அதான் முன்னாடியே சொன்னேனே.. எனக்கு கல்யாணமாகலைன்னு :((

7. ஒருவேளை காதலா இருக்குமோ :)

8. எது பட்டுப்புடவையா.. நமக்குத் தெரிஞ்ச அண்ணாச்சி ஆசிப்புதான்.
விளம்பர துறை அண்ணாச்சி அந்த ரங்கநாதன் தெருக்காரரா?

9. அல்வா

10. செண்ட் பாட்டில் (அ) டியோடரண்ட்

சென்ஷி said...

அது பதில் தெரியுதோ இல்லையோ கடமைய செஞ்சாகணும் இல்லையா. நாங்கல்ல்லாம் கடமை தவறாத வீரர்கள் :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

1, பரம்பரா பட்டு
2, கேட்பரீஸ்
7, வாய்ஸ் எஸ் எம் எஸ் ஆனா ஏர்டெல்?
8, சரவணா ட்ரஸஸ்

ambi said...

@கைப்பு, 1, 2, 5, 6, 7, 8(பாதி கரக்டு), 9 கரக்டு

மீதியும் ட்ரை மாடி :)

ambi said...

@தாரணி ப்ரியா,

1 தப்பு.
2,3,5,6,8,9 ரைட்டு
8 பாதி கரக்ட்டு.

4 & 10...? :))

ambi said...

@முத்தக்கா, 2, 7 ரைட்டு, 8 பாதி ரைட்டு.

மீதி எல்லாம் எப்போ?

பட்டுல தப்பு வுடலாமா? :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

6. எதோ மசாலா பொடி..ஆச்சி?
10. மூவ் மாதிரி எதோ ஆயிட்மெண்ட்டோ மற்ந்துடுச்சு..

ambi said...

சென்ஷி,

1, 2 ரைட்டு

3 தப்பு.

மீதி எல்லாத்துக்கும் இப்படி லொள்ளு பதில் குடுத்தா நான் ஆபிஸ்ல சிரிச்சுடுவேன். :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

1. போத்தீஸா அப்ப..

பட்டு அவ்வளவா பிடிக்காதே..
9. அமுல் பட்டர்

கைப்புள்ள said...

//3) வெண்மையின் புது மந்திரம்! - பவர் டிடெர்ஜெண்ட்

4) மனைவி பேச்ச கேளுங்க! - ஹாக்கின்ஸ் குக்கர்//

ambi said...

கைப்பு, ஒரு சின்ன திருத்தம்!

1 தப்பு. :(

ஒன்னாம் கேள்விக்கு தாரணி ப்ரியா நீங்க சொன்ன பதில் தான் கரக்டு! :))

சென்ஷி said...

ஹைய்யா... நான் ரெண்டு பதில் கரெக்டா சொல்லியிருக்கேன்..

ஹை ஜாலி.. ஸ்வீட் எடு கொண்டாடு :))

கீதா சாம்பசிவம் said...

1. ராஜ் மஹால் பட்டு

2.காட்பரீஸ் சாக்லேட்

3.டைட் டிடெர்ஜெண்ட்

6. ஆச்சி மசாலா

8, சரவணா ஸ்டோர்ஸ்

9, கோகா கோலா

மத்ததுக்கு அப்புறமா வரேன். இன்னும் கொஞ்சம் வெரிஃபை பண்ணிட்டு.

ambi said...

ஹைய்யா! சென்ஷி அண்ணன் ஸ்வீட் தராரு, எல்லாரும் ஓடியாங்க. :))

கைப்புள்ள said...

1. ஆர்.எம்.கே.வி
8. சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ்

சென்ஷி said...

//ambi said...
ஹைய்யா! சென்ஷி அண்ணன் ஸ்வீட் தராரு, எல்லாரும் ஓடியாங்க. :))
//

ஆமா. ஆனா செலவு மாத்திரம் அம்பியோடது :))

ambi said...

@கீதா மேடம்,

2, 6, 8(பாதி தான் ரைட்டு) மட்டும் தான் ரைட்டு, மீதி எல்லாம் தப்பு. :))

எதை பாத்து வெரிஃபை பண்ண போறீங்க?

பெரியபுராணமா?
கம்ப ராமாயணமா? :p

ambi said...

@முத்தக்கா, இப்போ 6, 9 ரைட்டு. :)

@கைப்பு, 3, 8 இப்போ ரைட்டு.

ஹாகிங்க்ஸ் குக்கர் எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க அதுல தான் சமைக்கறீங்களா தல? :p

கீதா சாம்பசிவம் said...

1.ம்ம்ம்ம்ம்ம் முதல்லேயே நினைச்சேன், சென்னை சில்க்ஸ் தான்னு, அதுவா?? 1.

3. சர்ப் எக்ஸெல்
8.சரவணா செல்வரத்தினமா??


mmm??? Bhagavatham parthu verify pannaren. OK???? :P:P:P:P:P:P

ambi said...

//ஆமா. ஆனா செலவு மாத்திரம் அம்பியோடது //

ஆமா, நான் செலவழிக்கறத்துக்கு முன்னாடி, என் அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செஞ்சுடுவாரு சென்ஷி. :))

ambi said...

@கீதா மேடம், இப்பவும் 1 & 3 புட்டுகிச்சு. :))

8 மட்டும் எப்படியோ ரைட்டு. :)

சாம்பு மாமா தான் சொல்லி இருப்பாரு. :p

மங்களூர் சிவா said...

1. ஆரெம்கேவி
2.
3. பவர் ஸோப்
(நம்ம டிபார்ட்மெண்ட் ஆச்சே அதனால இது கண்டிப்பா ரைட்டுதான்னு எனக்கு நல்லாவே தெரியும்)
9. அமுல்

நிலாக்காலம் said...

1) ராஜ்மஹால் சில்க்ஸ், மதுரை
2) கேட்பரீஸ் டெய்ரி மில்க்
3) பவர் சோப்
4) கோட்டக் மஹிந்த்ரா
5) டாட்டா இண்டிகாம்
6) ஆச்சி மசாலா
7) ஏர்டெல் வாய்ஸ் எஸ்.எம்.எஸ்.
8) சரவணா செல்வரத்தினம் டெக்ஸ்டைல்ஸ், சென்னை
9) அமுல்
10) ஸ்ப்ரேமிண்ட்

rapp said...

ஹி ஹி, நாங்கெல்லாம் ட்ரூலி பாரினாகிட்டதாலே இந்த மாதிரி லோக்கல் விளம்பரங்கல்லாம் பாக்கறதில்லை:):):) ஒன்லி இண்டர்நேஷனல்:):):)

rapp said...

யப்பா இப்டி சமாளிக்கரத்துக்கு, அப்பப்போ விளம்பரங்கள பாஸ்ட் பார்வேட் பண்ணாம ஒழுங்கா பாத்திருக்கலாம்:):):)

rapp said...

இதென்ன இப்டி சின்னபுள்ளத்தனமா இருக்கு, என்கிட்டே நாசா பத்தில்லாம் கேளுங்க, சும்மா அதிரடியா கெளம்பிடுவோம்ல(பதிவிலருந்து):):):)

நாகை சிவா said...

விளம்பரமா... நமக்கு ரொம்ப பிடிச்ச மேட்டரு ஆச்சே... இதோ வந்தேன் ஆட்டத்துக்கு

நாகை சிவா said...

1, ஆர்.எம்.கே.வி
2, கேட்பரீஸ் டைரி மில்க்
7, ஏர்டெல்
8, சரவணா ஸ்டார்ஸ்
9, அமுல்

ஊர் பக்கம் விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சா.. அதான்... பாதியோட தடுமாறுது.. வெயிட் யா.. வில் கம்.. பேக்க்

Kamal said...

1.ராஜ்மஹால் சில்க்ஸ் மதுரை
2.Dairy Milk
3.Power Soap
4.Pass
5.Tata Indicom
6.Pass
7.Airtel Voice SMS
8.Saravana Selvarathinam
9.Amul
10.Pass.

Ravi said...

Ambi, ippodhaikku ivvalavu dhaan. Meedhiya naalaikku solren :)

1) Pothy's
2)
3)
4)
5)
6) Aachi
7) Airtel
8) Saravana Selvarathinam Stores
9) Amul
10) Spraymintt Mouth Freshner

gils said...

1)rmkv
2)dairy milk
3)power soap
4)edho insurance/mutual fund
6)aachi masala
7)airtel
8)saravana selvaratnam
9)amul

gils said...

5 bike ad

ILA said...

ஆத்தா ஈஸ்வரி இங்கேயும் வந்தாச்சா?

G3 said...

1. Pothy's parambara pattu
2. Cadburry's Dairy milk
3.
4.
5. Tata indicom
6. Aachi masala
7.
8. Saravana stores
9. Amul
10.

Ippodhaikku imbuttu dhaan takkunu thonuchu.. meedhi 2 naal leavela poitu vandhu paakaren :D

Vijay said...

ஹே ராப்,

வாட் திஸ் யா? அம்பி லூஸ்யா? வீ நோ சீ தமிள் ஆDயா. ஒன்லி இங்லீஸ் ஆDயா. சீ யூ யா. ஐ கோ யா. பை யா. (எஸ்....... ..........கேஏஏஏஏஎப்)

Vijay said...

//ambi said...
@கைப்பு, 1, 2, 5, 6, 7, 8(பாதி கரக்டு), 9 கரக்டு//

//ambi said...
@தாரணி ப்ரியா,

1 தப்பு.//

//ambi said...
கைப்பு, ஒரு சின்ன திருத்தம்!

1 தப்பு. :(

ஒன்னாம் கேள்விக்கு தாரணி ப்ரியா நீங்க சொன்ன பதில் தான் கரக்டு! :))//

இப்படி மாத்தி மாத்தி பேசும் அம்பிய நம்பி எப்பிடி பதில சொலறது. அவரு இப்பிடி எல்லாத்தையுமே நம்ப கிட்ட இருந்து கத்துக்க பாக்கறதை வண்மையா(அட ரெண்டு சுழிதாம்பா, ஆனா அழுத்தமா சொல்லணூம்ல. அதான் முணூ சுழி) இந்த குவிஜ விட்டு நான் வெளிநடப்பு செய்கிறேன். (ஸ்ஸ்..... அப்பாடா.... தப்பிக்க எவ்ளோ டகாலடி வேல எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.... பாரேன்.)

Vijay said...

அம்பி அவர்களே,

ஏனக்கு இதில் ஒன்பது கேள்விகளூக்கு பதில் தெரிந்தும், பத்தாவதாக(ஏம்பா, பத்து கேள்விதானே கேட்ட?....ஸ்ஸ்...இப்பவே கண்ணை கட்டுதே..... ம்ம்... ) ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியாது என்ற ஒரே காரணத்தினாலே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை என்பதை, என் பதிலுக்காகவே காத்து கிடக்கும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய, ஆப்ரிக்க மற்றும் அண்டார்டிக(ஆளுங்க இருக்குறாங்க இல்ல?)மக்களுக்கு சொல்லி விடை பெருகிறேன். நன்றி. வணக்கம். (சரி, ...சரி... கல்ல கீழ போடுப்பா... படாத எடத்துல பட்ர போவுது..அய்ய...எய்..ஏய்....)

Sridhar Narayanan said...

ம்ம்... ரொம்ப நாளாச்சு டிவி பாத்து. இருந்தாலும் அம்பி போடற போட்டியாச்சுதே. ஏற்கெனவே கொத்ஸோட குறுக்கெழுத்து போடலைன்னு அவர் குறுக்குல மிதிக்கிறார். இதோ நமது முயற்சிகள் -

1. போத்தீஸ் (இல்லைன்னா RMKV இல்லைன்னா சென்னை சில்க்ஸ் ஹிஹிஹி)

2. Dairy Milk

3. power soap

8. saravana stores

அம்புட்டுதான்பா. இன்னமும் ஈஸியா ’ஐ லவ் யூ ரஸ்னா’ போல கேள்விகள் வச்சிருக்கலாம்.

mgnithi said...

1. RMKV
2. Dairy milk
3. Power soap
4. Gold winner
5. Tata indicom
6. Aachi masala
7. Airtel voice sms
8. Saravana stores
9. Amul
10. Avvvvvvvvvvvvv... theriyalaye pa.

மெட்ராஸ்காரன் said...

1. RMKV
2. Cadburys
3. Power Soap
4.
5.
6. Sakthi Masala
7. Airtel Voice SMS
8. Saravan Selvaratnam (Note the point your houbour, Saravan stores illa)
9. Amul
10.

Therinja varaikkum answer panniten...parisil ethavathu kuraithu kondavathu vazhangavum....

Karthik said...

Jeikiravangaluku edaavaadhu prize irukka annatha???

Karthik said...

1.POTHYS

2. DAIRY MILK

3.POTHYS

4.BAJAJ ALLIANCE

5.TATA INDICOM

6.Aachi

7.AIRTEL

8.SARAVANA SELVARATHINAM ANNACHI KADAI

9.AMUL

10.SprayMintt Mouth Freshener

Karthik said...

ennanga.. padil kareeta???

ambi said...

@ஜி3 அக்கா,

1,2, 5, 6, 8,9 ரைட்டு. மீதி எல்லாம் கல்யாண சாப்பாட்டுக்கு அப்புறமா வந்து சொல்லுங்க. :))

ambi said...

@ம-சிவா,

3, 9 மட்டும் ரைட்டு. மீதி ட்ரை மாடி. :p

ambi said...

@நிலாக்காலம், எல்லா விடைகளும் ரைட்டு. வாழ்த்துக்கள். :)))

என்னது பரிச எங்க வந்து வாங்கிக்கனுமா?

என்ன போட்டி?
என்ன பரிசு?
முதல்ல நீங்க யாரு? :)))

ambi said...

@ராப், உங்க அளும்பு தாங்க முடியல.

இருங்க, அடுத்த தடவ ஹாலிவுட் ரேஞ்சுல கேள்வி கேக்கறேன். :))

ambi said...

@கமல்,

சொன்ன விடைகள் all ரைட்டு.

4,6,10 மட்டும் இன்னும் ட்ரை பண்ணுங்க.

ambi said...

@ரவி சொன்ன விடைகள் எல்லாம் ரைட்டு,

மீதி...? :))

ambi said...

@கில்ஸ், 4,5,10க்கு மறுபடி ட்ரை மாடி.

மீதி எல்லாம் ரைட்டு.

ambi said...

@இளா, இருங்க அக்காகிட்ட சொல்லி குடுக்கறேன். வந்து சாமியாட போறாங்க. :))

யோவ், விடைய சொல்லாம இப்படி டபாய்க்கறது தப்பு. :))

ambi said...

@விஜய், ராப் கூட சேராத. அவ்ளோ தான் சொல்லுவேன். :p

முதல் கேள்விக்கு பதில் கொஞ்சம் குழப்பமா இருக்கு. மக்கள் வேற குழப்பி வுட்டாங்க. ப்ரீயா விடுப்பா. :))

விஜய், இன்னுமா உன்னை இந்த ஊர் நம்பிட்டு இருக்கு? :))

ambi said...

@ஸ்ரீதர்,

2 3, 8(பாதி ரைட்டு)

ஒன்னாம் கேள்விக்கான பதிலுக்கு உங்களுக்கு மட்டும் நெகடிவ் மார்க் குடுக்கலாமா?னு மீ திங்கிங்க். :))

முட்டாள் பெட்டியையும் பாருங்க பா. :p

ambi said...

@எம்ஜிநிதி,

1 4 10 தப்பு. மீதி எல்லாம் ரைட்டு.

என்ன எம்ஜிநிதி, இப்பவே முக்யமான கேள்விகளுக்கு தப்பா விடை சொல்ற, என்ன நிலமைக்கு ஆளாக போறியோ? கவலையா இருக்கு. :))

ambi said...

@கார்த்திக்,

பரிசா?

நிலாகாலம் அவங்களுக்கு குடுத்ருக்கற பதிலை பாக்கவும். :p

3, 4 தவிர மீதி எல்லாம் ரைட்டு. :))

ILA said...

//யோவ், விடைய சொல்லாம இப்படி டபாய்க்கறது தப்பு. :))//
தமிழ்லபொட்டி பார்ர்கிறதே இல்லே. ஆன்லைனுல வெளம்பரம் இல்லாம சரியா கட் பண்ணி போட்டுறாங்க. ஆத்தா ஈஸ்வரி பதிவுக்கே கண்ணா முழியெல்லாம் வெளியே வந்துருச்சு. அதாச்சும் படம்.இங்கே?

Ravi said...

Ambi, Here are my final answers:

1) Pothy's
2) Cadbury's
3) Power Soap
4) Max NewYork Life Insurance (??)
5) Tata Indicom
6) Aachi
7) AirTel
8) Saravana Selvarathinam Stores
9) Amul
10) Spraymintt mouth freshner

Nila said...
This comment has been removed by the author.
வித்யா said...

1. ராஜ்மஹால்
2.dairy milk
3. power soap
4.kotak securities
5. tata indicom
6. aachi masala
7. airtel
8. saravana selvarathnam stores
9. amul
10. spray mint

Karthik said...

3. Power detergent soap

4.Kotak insurance!!!

ambi said...

@இளா, யுஎஸ் காரன் நானு! அதனால தமிழ் பொட்டி எல்லாம் இப்ப பாக்கறதே இல்ல!ன்னு சொல்ல வறிங்களா? (எப்படியோ கோர்த்து விட்டாச்சு) :))


போன தடவை ஒ'பாமா' படமா தானே கேள்வி கேட்டேன். :p


சரி, அடுத்த தடவை படம் காட்டறேன். :))

ambi said...

@வித்யா, எல்லா விடைகளும் கரக்ட்டு, சூப்பரப்பு. :))

@கார்த்திக், 3, 4 இப்ப ரைட்டு.

@ஸ்ரீ, 4, 5, 10 தப்பு. Rest all are correct.
எட்டு பாதி தான் ரைட்டு. :))

மெட்ராஸ்காரன் said...

Ambi Anna,

What about my answers???? I hope you have received them well...:(

ambi said...

@மெட்ராஸ்காரன், நீங்க குடுத்த விடைகளில் 1,4,5,10 தவிர மீதி எல்லாம் ரைட்டு. :))


உங்க மெயிலை மிஸ் பண்ணிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். :)

சகாதேவன் said...

1. போத்திஸ்: அதுவும் இப்போ பத்திரிகையில் "பாரம்பரியம் மிக்க வடக்கு ரத வீதி" என்று தான் வருகிறது. ஆர்.எம்.கே.வி வண்ணார்பேட்டைக்கு டிவிஎஸ் அருகில் சென்று விட்டதால்.
நான் டிவியில் விளம்பரம் வரும்போது வேறு சானலில் என்ன என்று பார்க்க போய்விடுவேன். அதனால் மற்றதெல்லாம் தெரியாது.
சகாதாவன்

மெட்ராஸ்காரன் said...

Ambi Anna,

Manippu ellam periya vaarthai...Just oru anxiety..avvalalu thaan :)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信