Friday, October 22, 2010

ப்ளே ஸ்கூல்

குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதா?னு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன். எங்க ஏரியாவில் அடுத்த தெருவில் இப்படி ஒன்னு இருக்கு. ஜூனியரை அங்க சேர்த்து பாக்கலாமா?னு தங்க்ஸ் கேட்க, சரி பாக்கலாம்னு சொல்லியாச்சு.

அந்த சுப தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமா? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்பு?னு பேசாம இருந்துட்டேன்.

முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், ஒரு ஸ்வீட் பண்ணிக்கோ!னு என் பங்குக்கு ஒரு பிளேட் கேசரிக்கு ஒரு பிட்டை போட்டு வைத்தேன்.

ஜூனியர் வயத்தில் இருந்த போது, தங்க்ஸ் ரெண்டு தடவை வசூல் ராஜா டிவிடி பாத்ததின் விளைவோ என்னவோ புதுசா எந்த குழந்தைகளை பாத்தாலும் ஜூனியர் முதலில் ஒரு கட்டிபுடி வைத்தியம் செய்து விடுவான். அதன்பின் "மை நேம் இஸ் சூர்யா!"னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்! என கூறி கைகுலுக்கி விடுவான்.

ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? புது டிரஸ் எல்லாம் போட்டு சாமி கும்பிட்டு போதாகுறைக்கு எங்கள் காலிலும் விழ " நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"னு உணர்ச்சிவசப்பட்டு ஆசிர்வாதம் செஞ்சேன்.

சுவரெங்கும் வண்ண வண்ண கார்டூன்கள், பஞ்ச தந்திர கதை சித்திரங்கள்(சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் படங்கள் மிஸ்ஸிங்), சறுக்கு மரம், சீஸா, நிறைய்ய கலர்-கலர் பிளாஸ்டிக் பந்துகள், புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.

ஜூனியர் மிஸ்ஸிடம் வழக்கம் போல தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு சாப்டாச்சா? என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்தான். முதல் வாரத்தில் ஒரு மணி நேரம் தான் வைத்துக் கொள்வார்களாம். சில ஸ்கூலில் சிடி போட்டு டீச்சரும் பாட்டு பாடிக் கொண்டே டான்ஸ் எல்லாம் ஆடுவாங்களாமே..? இந்த மிஸ்ஸும் ஆடுவாங்களா? என தங்க்ஸிடம் டவுட் கேட்டு வாங்கி கட்டி கொண்டேன். ஜூனியர் புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம்.

ஒரு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்த ஜூனியரிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,

அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.

ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.

74 comments:

எல் கே said...

//ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்///

அப்பா மாதிரியே பையன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தூள்!

துளசி கோபால் said...

அப்பனுக்குப்பிள்ளைத் தப்பாமப் பொறந்துருக்கு:-)))

ஞாயித்துக்கிழமை பொறை ஏறித்தா?

கேசரி செஞ்சேன், நிறைய முந்திரிப்பருப்பு போட்டு!!!!!

sriram said...

//ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.//

விதைத்ததுதானே விளையும்.. அப்பா டீச்சருக்கு ரூட் விட்டா புள்ள கூட படிக்கறதுங்கள ரூட் விடுது.
மொதல்ல உங்கள All Men Organization க்கு மாத்தணும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சென்ஷி said...

சூப்பர் :))

இலவசக்கொத்தனார் said...

அடி வாங்கப் போற.

சேர்ப்பதற்க்குன்னு எழுதினா அற்பப்பதரேன்னு திட்டுவேன்.

ற் போட்டா அதுக்குப் பின்னாடி மெய்யெழுத்து வராது.

முதலில் இங்க போய் படி -

http://www.tamilpaper.net/?cat=24

மங்களூர் சிவா said...

very nice ambi
:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
ஒரு விசயம் தெரியுமா ? ப்ளே ஸ்கூல் அப்பாக்கள் அம்மாக்கள் அழாம எல்கேஜியில் கொண்டுபோய் பிள்ளையை விடறதுக்கு பழக்கப்படுத்தவும் தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் பையன் சும்ம உக்காந்திருந்தா கூட பொண் குழந்தை எல்லாம் வந்து சபரீஈஈஈ ன்னு கன்னத்தை கிள்ளிட்டு போகுது .. அவன் தான் அய்யோ பாவமா உக்காந்திருக்கான்..

எதுகேட்டாலும் "மை நே இஸ் சூர்யா ஷேக்கன்" ஆகா சமாளிச்சிப்பான் பையன்.. :)

வாழ்த்துக்கள் சூர்யா.. படிச்சு பெரியாளா வந்து
அம்மா அப்பாக்கு
பெருமை தேடித்தா..

RAJA RAJA RAJAN said...

நல்லாருக்கு...

இளங்கோ said...

//அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.//
:)

பாலராஜன்கீதா said...

//அபிராமி, மம்தா, ப்ரஜக்தா, எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க பா.//
அவையெல்லாம் அந்த மிஸ்ஸுங்க பேர்தானே ?
:-)

திவாண்ணா said...

//நிறைய்ய கலர்-கலர் பிளாஸ்டிக் பந்துகள், புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.//

இருக்காது பின்னே? கலர் கலர் ... ;-)

BalajiVenkat said...

//////ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? அவ்வ்வ்வ்வ்.///////

நூல போல சேலை தாய போல பிள்ளை அப்டின்னு தான் கேள்வி பட்ருக்கேன் இங்க தந்தையை போன்ற பையன பார்க்கிறேன் .... nice ....

சந்தடி சாக்குல கேசரிக்கும் பிட்டப் போட்டது .... என்னத்த சொல்றது.... :P

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது//
எப்படி இப்படி எல்லாம் தோணுது? எதாச்சும் ஸ்பெஷல் கோச்சிங் எடுக்கறீங்களா?

//முத முதலா ஸ்கூல் போறான், ஒரு ஸ்வீட் பண்ணிக்கோ!னு என் பங்குக்கு ஒரு பிளேட் கேசரிக்கு ஒரு பிட்டை போட்டு வைத்தேன்//
அதான பாத்தேன்... போஸ்ட் தொடங்கி பத்து வரி ஓடியாச்சே இன்னும் விஷயம் வரலயேனு

//(சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் படங்கள் மிஸ்ஸிங்)//
//புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ்//
உங்க போஸ்ட் எல்லாம் தங்க்ஸ் படிக்கறதில்லையா... சும்மா கேட்டேன்

//என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம்//
பொய் சொல்றதுக்கு உங்க ஊர்ல அளவெல்லாம் இல்லையா

//ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..? //
"எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்.." ஐயோ நான் ஒண்ணும் சொல்லலைங்க... இந்த பாட்டு இப்ப டிவில ஓடுதுன்னு சொல்ல வந்தேன்...

மீ எஸ்கேப்...

மாதேவி said...

:)

வாழ்த்துகள்.

கௌதமன் said...

அட! எல்லா வர்ணனைகளும், என் பேரன் படிக்கின்ற பிளே ஸ்கூலுக்கும் ஒத்து வருகின்றதே!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், ஆகக் கூடிக் குழந்தையை இப்போவே பெரியவனாக்கத் திட்டம் போட்டாச்சா??? :(((((((( என்ன இருந்தாலும் இது ரொம்பவே சீக்கிரம் இல்லையோ??? கேசரிக்கு ஆசைப்பட்டுக் குழந்தையைப் படுத்தியாறது! :P:P:P:P
வெள்ளிக்கிழமை சுபா வந்தன்னிக்கு நிறைய நெய் விட்டு, (வீட்டிலே காய்ச்சின புத்துருக்கு நெய்யாக்கும் 100% ஒரிஜினல்) மு.ப. போட்டுக் கேசரிதான்! இந்த சுபாவானும் ஒரு போட்டோ எடுத்திருக்கக் கூடாதோ! பேசிண்டே மறந்தாச்சு, அப்புறம் யாரெல்லாமோ வந்தாங்களா! நானும் மறந்து தொலைச்சிட்டேன். இருக்கட்டும், இன்னும் 2 நாளிலே மறுபடி கேசரி பண்ணி படம் காட்டுவோமில்ல!

Unknown said...

//குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்// அபிராமி, மம்தா, ப்ரஜக்தா எல்லாம் மிஸ் பேரு மாதிரியே இருக்கு.

//நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்// அம்பாசிடர் கார் தானா, பென்ஸ்னு உணர்ச்சி வசப்படக் கூடாதா?

Sridhar Narayanan said...

//அடி வாங்கப் போற.

சேர்ப்பதற்க்குன்னு எழுதினா அற்பப்பதரேன்னு திட்டுவேன்.
//

ஹை... நம்ம போஸ்டுக்கு வாத்தி வேல பாக்கறவர்க்கே வாத்தியார் வந்து பெண்டு எடுக்கிறாரே.

வாங்கிய அடியில் ’வலி மிகுந்ததா’ இல்லையான்னு இப்ப சொல்லுங்க பாக்கலாம் :)

mightymaverick said...

இதுக்கே இவ்வளவு பெரிய பதிவுன்னா... அவனை கிண்டர் கார்டனில் சேர்க்கும் போது உன்னோட தலையில இருக்க முடியை எல்லாம் பிச்சுக்க வேண்டியது தான்... ஒரு ஒன்றரை லட்சம் இப்போவே ரெடி பண்ணி வச்சுக்கோ... எல்லோரும் கோயமுத்தூர்காரங்களை தான் குசும்புன்னு சொல்லுவாங்க... இது திருநெல்வேலி குசும்பு... பையனும் அப்பாவும் ஒரே மாதிரி...

Philosophy Prabhakaran said...

இதுவரை படிக்கவில்லை... எப்படியாவது வாங்கிவிடுகிறேன்... முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

Li. said...

BackGround Music Please ~!Thananaana naa naa naaa.... Thana Naaana naa naa naa...~!

"My name is Surya, Shaken" oda serthu innum oru 3 words solli kuduthirunga, paiyanukku helpful-a irukkum... ;-)

Subhashini said...

play schoolukay ivaalavu super postaa. Kalakkal ambi
Subha
P.S. You missed Geetha patti's kesari:((

Un saarbulay naan poi nalla kotindane:)))

Geetha Sambasivam said...

P.S. You missed Geetha patti's kesari:((//

சுபா, பச்சைதுரோகி, கேசரியே கொடுத்திருக்கக் கூடாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பார்க்க வச்சுட்டு நானே சாப்பிட்டிருக்கணும்! :P

Subhashini said...

நல்லா தானே சொல்லி இருக்கேன். ஹி ஹி பாட்டினு சொல்லிட்டனே னு கோவமா அம்பிக்கு அப்படி சொன்னா தான் தெரியும்

Subha

Geetha Sambasivam said...

நல்லா தானே சொல்லி இருக்கேன். ஹி ஹி பாட்டினு சொல்லிட்டனே னு கோவமா அம்பிக்கு அப்படி சொன்னா தான் தெரியும்

Subha //

ப்ரூட்டஸ் சுபாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

super அம்மாஞ்சி!!!

//அடி வாங்கப் போற.

சேர்ப்பதற்க்குன்னு எழுதினா அற்பப்பதரேன்னு திட்டுவேன்.

ற் போட்டா அதுக்குப் பின்னாடி மெய்யெழுத்து வராது.

முதலில் இங்க போய் படி -

http://www.tamilpaper.net/?cat=24//

long live teacher "elavasam"

ராமலக்ஷ்மி said...

//" நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"//

இருபது வருடத்துக் கடமையை இப்படி ரெண்டே நிமிஷத்து ‘லல்லல்லா’ பாட்டுல நிறைவேற்றக் கனவு காணக் கூடாது:))!

சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

kutti suryavukku en vazhthukkal.neenga edhukkum lkg,ukg admission testukku ippave thayar(thaayar illa)aagunga!!!admn fee kku ippallerndhu semicha dhhan undu!!!
nivi.

அபி அப்பா said...

ஆகா இதை படிக்க மிஸ் பண்ணிட்டனே! சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள்!

எப்படித்தான் மாயவரமா ஆனாலும் பெங்களூரா ஆனாலும் டெல்லியா ஆனாலும் ஆண்குழந்தைகளை மாத்திரம் இந்த பெண் குழந்தைகள் வந்து மொய்க்குதோ தெரியலை. அம்பி டேக் கேர் ஆஃப் சூர்யா. ஆம்பள குழந்தைய பெத்து வச்சுட்டு ஸ்கூல் அனுப்பி படிக்க வச்சு ஒரு வேலைக்கு அனுப்புவதுக்குள்ள வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்க வேண்டி இருக்கு. "நீயெல்லாம் அண்ணன் தம்னியோட பிறக்கலையா?" போன்ற டெம்பிளேட் வசனம் எல்லாம் சூர்யாவுக்கு சொல்லு தரனும் சரியா அம்பி! ஸ்கூல் பேக்ல பிளேடு, மிலகாய் பொடி, பெப்பர் ஸ்பிரே எல்லாம் போட்டு அனுப்பவும். டேக் கேர் ஆஃப் சூர்யா அம்பி! என்னவோ போங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.

அபி அப்பா said...

ஆகா முதல் பின்னூட்டம் ஏகப்பட்ட எழுத்து பிழை! பார்த்து படிங்க, தடுக்கி விழுந்துடபோறீங்க மக்கா!

Vidhya Chandrasekaran said...

\\" நல்லா படிச்சு விக்ரமன் படத்துல வர மாதிரி நாளைக்கே நீ கலெக்டராகி அம்பாசிடர் கார்ல வந்து இறங்கனும்!"னு உணர்ச்சிவசப்பட்டு ஆசிர்வாதம் செஞ்சேன்.\\

அப்ப நீங்கதான் விஜயகாந்த்/சரத்குமார். ரைட்டா??

என் பையன் ப்ரெண்ட்ஸ் பேர் லிஸ்ட் தெரியுமோ? கவிதா, லயா, லத்தீகேஸ்வரி, சாய் அக்‌ஷரா, சரண். அப்பாடா ஒரு பையன் பேராவது இருக்கேங்கற சந்தோஷப்பட்டா அது சரண்யாவோட ஷார்ட் ஃபார்மாம்:(

தி. ரா. ச.(T.R.C.) said...

புடவை கட்டி பன் கொண்டை போட்ட ஒரு மிஸ், சுடிதார் அணிந்து, லிப்ஸ்டிக் அடித்து, குதிரை வால் கொண்டை போட்ட இன்னொரு மிஸ் என கலக்கலாய் இருந்தது ப்ளே ஸ்கூல்.
It is quite evident that you have intensionally alone not withstanding applakattai

Geetha Sambasivam said...

It is quite evident that you have intensionally alone not withstanding applakattai //

joooooperuuuuuuu! :))))))))))

SKM said...

:D :D :D
vadaimalai padichuttu adhaidhan pottu irukeengalo _nu vandha Ingae paiyan appa polavae ippovae color parka aarambichuttan_nu subha news illa pottu ieukeenga.
Vazhuthukkal.vazhuthukkal.

Jayashree said...

View this!!அம்பி

http://vimeo.com/14242270
Little Stars of Bethlehem promo 2010
Have Fun daddy yo!!
Play chool!!!!!!

Adorable age:)) Snap shot expressions.... Teachable moments Ever lasting memories நம்மை பஃபூனாக்கி அசடு வழிய வைக்கும் நம் செல்வங்களின் இளமைக்காலம்!!
hello cat! you need a Hat வாசிக்க துடங்கியாச்சா?:)))))))))))))))

ambi said...

வாங்க வடை ஸ்பெஷலிஸ்ட் எல்கே. :)

நன்றி சுந்தர்ஜி. :)

டீச்சர், வசிஷ்டர் வாயால... கேசரி நீங்க சாப்டா நான் சாப்ட மாதிரி (இப்படி தான் சொல்லி தேத்திக்கனும்).. :))

பாஸ்டன், வேணாம் அளுதுடுவேன். :D

நன்றி சென்ஷி, மங் சிங்.. :)

கொத்ஸ், அடடா, இந்த கிளாஸ் நடத்தும் போது நான் லீவு. இதோ மாத்திடறேன். அந்த வரிக்கு அப்புறமா பதிவ படிச்சீங்களா..? :P

சரியா சொன்னீங்க முத்தக்கா, என்ன ஆகுமோ? ஏது ஆகுமோன்னு எனக்கு பிபி எகிறிடுச்சு. இப்பவே ஒரு மாமியார் மாதிரி எவ்ளோ அழகா பேசறீங்க.. :))

நன்றி ராஜ ராஜ ராஜன், இளங்கோ. :)

சத்யமா குழந்தைங்க பேரு தான் பாகீ. மிஸ் பேரு கேட்டு வாடான்னு சொல்லி விட்ருக்கேன். :))

அதே அதே திவாண்ணா. :))

ambi said...

பாலாஜி வெங்கட், எல்லாம் ஜீன்ஸுங்க.. :)

அப்பாவி த-ம, எப்பவாச்சும் திடீர்னு தோணிச்சுனா என் பதிவை படிப்பாங்க. அன்னிக்கு தான் தீவாளி. :))

நன்றி மாதேவி.

வாங்க கெளதமன் சார்.

கீதா பாட்டி, ரெண்டரை வயசு ஆச்சு. சும்மா போயிட்டு வரான் அவ்ளோ தான். முதல்ல கேசரி படத்தை காட்டுங்க, அப்புறம் பேசலாம். :))

கெபி, இந்தியாவுல கலெக்டர் எல்லாம் அம்பாசிடர் கார்ல தான் வருவாங்க. :))

ஸ்ரீதர், இப்போ ரெம்ப சந்தோஷமா இருக்குமே... :P

வி.கடவுள், ஆமா கிண்டர் கார்டன் ரெம்ப காஸ்ட்லி இங்க. :)

நன்றி பிலாசபி பிரபாகரன்.

Li, அவ்வ்வ்வ், ரொம்ப அட்வான்ஸா போறீங்க. :)

சுபா, அந்த கேசரி அவங்க பக்கத்து வீட்டு டீக்கடையில... சரி விடுங்க.. :P

வாங்க சரவண குமரன்.

கீதா பாட்டி, கேசரி ஊட்டி வளத்த கிளி... ஹிஹி...

வாங்க பாலகுமாரன், பாருங்க இலவசம் பின்னி எடுக்கறார். :D

ரா ல, ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும். :)

வாங்க நிவி, ஆமா அத நினச்சா தான் கவலையா இருக்கு. :)

ஹிஹி, அபி அப்பா, ஒரு ஆண் குழந்தையோட அப்பாவுக்கு தான் இன்னொரு ஆ.கு.அப்பாவின் கஷ்டம் புரியும். ரெம்ப நன்றிங்க. :))

வித்யா, எனக்கென்னவோ உங்க பையர் தான் சரண்னு செல்லமா கூப்டறார்னு தோணுது. :P

Kavinaya said...

குட்டி ஹீரோவுக்கு வாழ்த்துகள் :)

பரிசல்காரன் said...

//நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடாது?//


கலக்கல்ஸ்!

Porkodi (பொற்கொடி) said...

Happy b'day ambi uncle!!!! Hope Surya gives you another memorable budday!!! =)

Dubukku said...

அம்பி - பிறந்த நாள் வாழ்த்துகள் !!!

ராமலக்ஷ்மி said...

// Dubukku said...
அம்பி - பிறந்த நாள் வாழ்த்துகள் !!!//

இன்றைக்கா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்பி:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அம்பி
வாழ்க வளமுடன் :)

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள், அம்பி!! ஜூனியர், தங்கமணியைப் படுத்தாமல் சமத்தாகக் கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறோம்.

டுபுக்கு வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்றாரே? அப்ப நீங்களும் டுபுக்குவும் ஒரே ஆள் இல்லையா? ;-)

Porkodi (பொற்கொடி) said...

//அப்ப நீங்களும் டுபுக்குவும் ஒரே ஆள் இல்லையா? ;-)//

Kekke pikkuni, peruku etha maadhiri kelvi kekringle.. :)))

மணிகண்டன் said...

new post please :)- otherwise, three hour fasting in front of your home - or else, 3 hour non stop eating kesari in front of you !

மணிகண்டன் said...

அஸ்க்கு புஸ்க்கு - உங்களுக்கு கிடையாது கேசரி.

vgr said...

ப்ரஜக்தா nu oru pera? edo "project a" madiri iruku.

Thakkudu edo ore pen kuzhandaigal photos a podarada pathu nan edo ellam niece nu nenachuten...payan nu ipo than theriyardu...

Porkodi (பொற்கொடி) said...

ஹனுமன் ஜெயந்திக்கு போஸ்ட் இல்லையா?

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அப்ப நீங்களும் டுபுக்குவும் ஒரே ஆள் இல்லையா? ;-)//

adapaavame...ivar ennai vida peria appaviyaa iruppar pola irukke...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த ப்ளே ஸ்கூல் சமாச்சாரம்ங்கிறது என்னைப் பொறுத்தவரை வளரும் பயிருக்கு வைக்கிற வீர்ய மருந்து!!

Vijay said...

அடுத்த போஸ்ட் பையன் காலேஜ் போன பிறகுதானா? :P

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,
பையன் இப்போ கிண்டர்கார்டன் போக ஆரம்பிச்சுருப்பான்னு நினைக்கிறேன்..

என்ன,விஜய் கேட்ட மாதிரி பையன் காலேஜ் போகும் போதுதான் அடுத்த பதிவா?

இல்ல,ப்ளே ஸ்கூல் டீச்சர்ஸ் பத்தி எழுதுனதனால விளைந்த வீட்டு மாமி' எஃபக்ட் பயங்கரமா இருந்த காரணமா?

அப்புறம் தக்குடு உங்க தம்பியா என்ன?

இன்னக்கு ஒரு பதிவுல உங்கள அண்ணான்னு சொல்றாரு..

Porkodi (பொற்கொடி) said...

Happy anniversary Ambi & Thangamanni!

Porkodi (பொற்கொடி) said...

தங்கமன்னிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

sri said...

appuram ambi, innikku thethiyil sooryavukku ethanai friends?

Anonymous said...

Thala...Post pottu oru varusham aachu theriyuma...

PUTHIYATHENRAL said...

http://www.sinthikkavum.net/2011/11/blog-post_16.html

எங்கே தேடுவேன்! தமிழனை எங்கே தேடுவேன்!
எங்கேதேடுவேன்..
தமிழனை எங்கே தேடுவேன்..
முள்ளி வாய்க்காலில் முடிந்துபோனாயோ..
குண்டடிக்கு தப்பி ஐரோப்பா சென்றாயோ..
குடும்பத்தோடு அகதியானாயோ..
மானங்கெட்ட தமிழ்அரசியல்வாதிப் பேச்சில் மயங்கிப்போனாயோ..
போன இடத்தில் தமிழீழம் மறந்து
செட்டில் ஆன தமிழா..

Anonymous said...

When is your next post?

Anonymous said...

When is your next post?

Anonymous said...

When is your next post?

Anonymous said...

நடைய சாத்திட்டேளா?

விக்னேஸ்வரி சுரேஷ் said...

அருமையான நடை..தொடர்ந்து எழுதலாமே?

Anonymous said...

இன்னுமா யோசனை..? மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை கவனிங்க! :)

arul said...

superb post about junior

வடுவூர் குமார் said...

செம!

Li. said...

நல்லா இருக்கீங்களா?

Li. said...

6 வருடங்கள் ஓடி விட்டன....

blackmagicvashikaranmantra.com said...

Aghori baba ji is in India as well as Pt. Aditya Samrat ji who is the best aghori baba and tantrik baba. He can do every aghori rituals and remedies which people are want to get in their life for their problems solution. Aghori baba has vashikaran and tantra mantra powers which help him to solve all problems of life. Vashikaran is an elaborate set of methods established in the ancient times by our sages which can be used to fulfill wishes and impact or even handle other people by utilizing hypnotic powers. Vashikaran is an unavowed science to attract and keep grip the man or woman you wish.

The term vashikaran is based on Sanskrit words and phrases vashi and karan, which means that the method of managing other people. Vashikaran determines huge powers with the combination of Mantra and Yantra. Vashikaran puja is a kind of spell that helps you to bring the man or woman you cherish in your life. Vashikaran puja can be useful for success and also prosperity in your business, money and lifestyle. This puja is performed in tantric procedures. This has been utilized since thousands of years in our country by sages and Tantriks.
| aghori baba ji in nashik | aghori baba ji rohtak | aghori baba ji in visakhapatnam | aghori baba ji in tamil nadu
|

Anonymous said...

ASFSAFFFFFFF