Monday, November 24, 2008

வானரம் ஆயிரம்

சூர்யா நடித்த படங்கள் என்றாலே தங்கமணிக்கு விசில் அடிக்க தெரியாவிட்டாலும் வெறுங் காத்தாவது வாயால விடுவாங்க. போன தடவை வேல் என்ற மொக்கை படத்துக்கே அவ்ளோ பில்டப் குடுத்து பாத்து முடிஞ்சபிறகு, நான் ஓட்டின ஒட்டுல மேடம் கடுப்பாகி, சாம்பார்ல உப்பை கட் பண்ணி தன் கோபத்தை அறவழியில் காட்டினாங்க. அதனால் இந்த தடவை நான் ரெம்ப உசாரா வாயவே தொறக்கலை. இந்த பதிவும் ரெம்ப கவனமாவே எழுதப்பட்டு இருக்குன்னு மேற்படி சமூகத்துக்கு அறிவிச்சுக்கறேன்.

பொதுவா பசங்க எல்லாம் எஸ்கர்ஷன் போறதுக்கு பெர்மிஷன்லேந்து பெயிலான ரேங்க கார்டை காட்றது வரைக்கும் அம்மா! அம்மா!ன்னு(ஜெஜெ இல்லப்பா, பெற்றெடுத்த தாயார்) எல்லா விசயத்தையும் அம்மாகிட்ட தான் சொல்வாங்க. பொண்ணுங்க எல்லாம் எங்க அப்பா தான் நல்லவரு! வல்லவரு!னு அப்பாகிட்ட தான் செல்லம் கொஞ்சுவாங்க. ஆனா இந்த படத்துல ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை சொல்ல முயற்சித்து இருக்காரு கெளதம் மேனன்.

ஸ்கூல் பையனா வரும்போதும் சரி, காலேஜ் பையனா வரும்போதும் சரி பாடி லாங்வேஜ்ஜை ரொம்ப அழகா வெளிபடுத்தி இருக்காரு சூர்யா.

குழந்தைகளுக்கு என்னிக்குமே தங்கள் தந்தை தான் ஹீரோ! என்ற ஸ்டோரி லைனை சின்ன சின்ன காட்சிகள் மூலம் வெளிபடுத்தி இருக்காங்க. அதே போல தந்தைகளின் கடமை என்ன?னும் அழகா சொல்லப்பட்டு இருக்கு. நாம என்ன செய்யறோமோ/பேசறோமோ அதே தான் நம் குழந்தைகள் பின்பற்றும்ங்கறது முற்றிலும் உண்மை.

விஜய்யை எப்படி தமிழ் மக்கள் போக போக ஏத்துகிட்டாங்களோ அதே மாதிரி இந்த படத்துல ஹிரோயினா வர சமீரா ரெட்டியும் படம் போக போக ஓகே ஆகி விடுகிறார். குத்து ரம்யாவா இது? மேடம், பெங்க்ளூர்ல நிறைய பிட்னஸ் ஜிம்ஸ் இருக்கு. அட்ரஸ் வேணும்னா நான் குடுக்கறேன். கார்னியர் ப்ராடக்ட்ஸ் கூட நிறையா இருக்கு. சொல்றதை சொல்லிட்டேன். அம்புட்டு தான்.

அப்பாவா வர சூர்யா தன் பையன் என்ன கேட்டாலும் ஒத்துக்கறாரு. முதல்ல சமீரா ரெட்டிய புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா, சரிப்பா, வீட்டுக்கு கூட்டிட்டு வா!ன்னு சொல்றாரு. அப்புறம் பாத்தா, பக்கத்து வீட்டு குத்து ரம்யாவையும் எனக்கு புடிச்சுருக்கு டாடி!னு சொன்னா வெரிகுட் சாய்ஸ்னு சொல்றாரு.

எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)

படத்தில் சில துக்கடாக்கள்:

90களில் வரும் காட்சி என காட்ட, பாட்டு சீனில் பேக்ரவுன்டில் சாலிட்டர் டிவியின் விளம்பரம் காட்டப்படுகிறது.

சமீரா ரெட்டி சென்னையில் இருக்கும் காட்சிகளில் அம்மணி சுடிதார் போட்டு பின் குத்தி ஷாலில்(வலது புறம் ) வளைய வருகிறார்.

கிதார் வாசிக்க தெரிந்த எவரும் கண்டிப்பாக பாடும் பாடல் 'என் இனிய பொன் நிலாவே' தேர்தெடுத்தது சூப்பர்.

ஆள் கடத்தல்(Extortion) இல்லாமல் தனக்கு படம் எடுக்கத் தெரியாது என்பதை மறுபடியும் கெளதம் நிரூபித்து உள்ளார்.

ராணுவம் ஆள் கடத்தல் மீட்பு நடவடிக்கையில் இறங்கும் போது, மிஷின் கன் பயன்படுத்த மாட்டார்கள், சைலன்சர் பொருத்திய ரிவால்வர் தான்.வீணான அப்பாவி உயிர்ச் சேதத்தை தவிர்க்கத் தான் இந்த ஏற்பாடு. 'ஷூட் அட் புல்' என குறிப்பிட்டு பெரும்பாலும் கடத்தியவர் தலையில் சுட முயற்சிப்பார்கள். நுணுக்கமான இந்த விசயத்தை நோட் பண்ணியிருக்காங்க. சூப்பர்.

இப்படத்தின் எடிட்டரான ஆன்டனிக்கு சம்பள பாக்கி போல. கத்திரியை பயன்படுத்தவே இல்லை. 'லைஃப் ஹேஸ் டு கோ ஆன்!' என சூர்யா சொல்வதை எடிட்டர், 'பிலிம் ஹேஸ் டு கோ ஆன்!'ன்னு தப்பா புரிஞ்சுகிட்டாரு போல. :)

பாடல்கள் எல்லாம் தாமரை. எளிய வரிகள், மேடம்! நேஷனல் அவார்டு எல்லாம் உங்க வரிகளுக்கு ஜுஜுபி. தாமரையின் வரிகளை தம் இசை கொண்டு அமுக்க விரும்பவில்லை ஹாரிஸ். பதமா வாசிச்சு இருக்காரு.

வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப்.
எ.கா: உங்கள மாதிரி பொண்ணுங்க இங்க படிச்சு, அங்க போய் எம்எஸ் பண்ணி, வேலை பாத்து, அங்க டாக்ஸ் கட்டுவீங்க, அதுக்கு பதில் இங்கயே வேலை பாத்து, டாக்ஸ் கட்டினா என்ன மாதிரி பையன்களும் நல்லா இருப்பாங்க இல்ல!

சிக்ஸ் பேக்குக்கு குடுத்த பில்டப்புக்கு இன்னும் கொஞ்சம் காட்சி அமைச்சு இருக்க வேணாமோ? சல்மான் கானை பாருங்க, எப்பவுமே குளிக்க போற மாதிரி தான் பாடல் காட்சிகளில் வர்ராரு.

ஏதாவது ஒரு காட்சியில் பார்வையாளர்கள் தம் அப்பாவை நினைத்து கொள்வார்கள். புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)

பி.கு: பதிவு ஒழுங்கா தான் எழுதி இருக்கேன், தலைப்புல தான் என் வேலைய காட்டிட்டேன் போல. :)

51 comments:

rapp said...

me the 1ST:):):)

ambi said...

அதானே ராப்பா கொக்கா? :))

ராமலக்ஷ்மி said...

// தலைப்புல தான் என் வேலைய காட்டிட்டேன் போல. :)//

வே(வா)லையே கா(ஆ)ட்டாம உங்களுக்கு பதிவு போட முடியாது என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்ததாயிற்றே:))!

ராமலக்ஷ்மி said...

சீரியஸா எடுத்துக்க மாட்டீங்கதானே:)!

ambi said...

வாங்க ரா.லட்சுமி அக்கா.

//சீரியஸா எடுத்துக்க மாட்டீங்கதானே//

சீரியசா நானா? சரியா போச்சு போங்க. கைப்புள்ளை போல நாங்க. எவ்ளோ ஓட்டினாலும் தாங்குவோம். :))

உங்கள் கருத்துக்களை தைரியமா தெரிவியுங்க.

rapp said...

//90களில் வரும் காட்சி என காட்ட, பாட்டு சீனில் பேக்ரவுன்டில் சாலிட்டர் டிவியின் விளம்பரம் காட்டப்படுகிறது.

சமீரா ரெட்டி சென்னையில் இருக்கும் காட்சிகளில் அம்மணி சுடிதார் போட்டு பின் குத்தி ஷாலில்(வலது புறம் ) வளைய வருகிறார்.

கிதார் வாசிக்க தெரிந்த எவரும் கண்டிப்பாக பாடும் பாடல் 'என் இனிய பொன் நிலாவே' தேர்தெடுத்தது சூப்பர்.

ஆள் கடத்தல்(Extortion) இல்லாமல் தனக்கு படம் எடுக்கத் தெரியாது என்பதை மறுபடியும் கெளதம் நிரூபித்து உள்ளார்.

ராணுவம் ஆள் கடத்தல் மீட்பு நடவடிக்கையில் இறங்கும் போது, மிஷின் கன் பயன்படுத்த மாட்டார்கள், சைலன்சர் பொருத்திய ரிவால்வர் தான்.வீணான அப்பாவி உயிர்ச் சேதத்தை தவிர்க்கத் தான் இந்த ஏற்பாடு. 'ஷூட் அட் புல்' என குறிப்பிட்டு பெரும்பாலும் கடத்தியவர் தலையில் சுட முயற்சிப்பார்கள். நுணுக்கமான இந்த விசயத்தை நோட் பண்ணியிருக்காங்க. சூப்பர்.
//


ஆஹா படத்துல இவ்ளோ நல்ல விஷயம் இருக்கா? இப்போ புரியுது எங்க மாமியாருக்கு நான் செய்ற எதுவும் பிட்க்களைன்னு:):):) மருமக உடைச்சா பொன்குடம்தான:):):)

ராமலக்ஷ்மி said...

அப்ப சரி:))))!

கீதா சாம்பசிவம் said...

//எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)//

கல்லிடைக்குறிச்சிக்கு விஷயம் போயிடுச்சு! :P

அதுசரி, ராப் ங்கற பேரிலேயும் நீங்களேவா கமெண்டிக்கறது??

@ராமலட்சுமி, அதெல்லாம் அம்பி சீர்யஸா எடுத்துக்க மாட்டார், சும்மா வெளுத்துவாங்குங்க, பார்க்கணும், ரொம்ப நாளாச்சு, ஆசையா இருக்கு, அம்பி வாங்கிக் கட்டிக்கிறதைப் பார்க்க! :P:P:P:P

rapp said...

//சிக்ஸ் பேக்குக்கு குடுத்த பில்டப்புக்கு இன்னும் கொஞ்சம் காட்சி அமைச்சு இருக்க வேணாமோ? சல்மான் கானை பாருங்க, எப்பவுமே குளிக்க போற மாதிரி தான் பாடல் காட்சிகளில் வர்ராரு.
//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.

rapp said...

//எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)//

என்னமோ இதுக்கெல்லாம் அசந்துட்டா மாதிரி பேசுறீங்களே அண்ணே:):):)

rapp said...

//அதுசரி, ராப் ங்கற பேரிலேயும் நீங்களேவா கமெண்டிக்கறது??//ஆஆஆஆஆஆவ், அப்போ சாம்பாருக்கு பயந்து இன்னொரு பேர்ல இதே படத்தைத் திட்டி எழுதிருக்காருன்னு சொல்றீங்களா:):):)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கென்னவோ பதிவைவிட தலைப்புதான் பிடிச்சுது :)

ராமலக்ஷ்மி said...

சரி கீதா மேடம் சொன்னதற்காகவே கொஞ்சமா வெளுத்துட்டுப் போறேன்:)!

//வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப்.
எ.கா: உங்கள மாதிரி பொண்ணுங்க இங்க படிச்சு, அங்க போய் எம்எஸ் பண்ணி, வேலை பாத்து, அங்க டாக்ஸ் கட்டுவீங்க, அதுக்கு பதில் இங்கயே வேலை பாத்து, டாக்ஸ் கட்டினா என்ன மாதிரி பையன்களும் நல்லா இருப்பாங்க இல்ல!//

படத்தில ரொம்பப் பிடித்த வசனமா:)!

என்னதான் சொல்ல வர்றீங்க? ஆக நீங்க நல்லா இருக்கீங்க! அப்படித்தானே:)?

//புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)//

நீங்க எத்தனைப் பக்கத்துக்கு நோட்ஸ் எடுத்தீங்க?

[உங்கள் பதில்: ”நான் எங்கெங்கே நோட்ஸ் எடுக்கிறது. சூர்யா படம் பார்க்கிற ஜோரில தங்கமணி எங்க சூர்யாவை என் கிட்ட விட்டுட்டாங்களா? தியேட்டரிலே புட்டியிலே பாலைக் கலக்கறதுக்கும் கொடுக்கறதுக்குமே சரியா இருந்தது!”]

rapp said...

//
//வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப்.
எ.கா: உங்கள மாதிரி பொண்ணுங்க இங்க படிச்சு, அங்க போய் எம்எஸ் பண்ணி, வேலை பாத்து, அங்க டாக்ஸ் கட்டுவீங்க, அதுக்கு பதில் இங்கயே வேலை பாத்து, டாக்ஸ் கட்டினா என்ன மாதிரி பையன்களும் நல்லா இருப்பாங்க இல்ல!//

படத்தில ரொம்பப் பிடித்த வசனமா:)!

என்னதான் சொல்ல வர்றீங்க? ஆக நீங்க நல்லா இருக்கீங்க! அப்படித்தானே:)?

//புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)//

நீங்க எத்தனைப் பக்கத்துக்கு நோட்ஸ் எடுத்தீங்க?

[உங்கள் பதில்: ”நான் எங்கெங்கே நோட்ஸ் எடுக்கிறது. சூர்யா படம் பார்க்கிற ஜோரில தங்கமணி எங்க சூர்யாவை என் கிட்ட விட்டுட்டாங்களா? தியேட்டரிலே புட்டியிலே பாலைக் கலக்கறதுக்கும் கொடுக்கறதுக்குமே சரியா இருந்தது!”]//


கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

rapp said...

me the 15th:):):)

ambi said...

//மருமக உடைச்சா பொன்குடம்தான//

ராப், ஆகா, செம உள்குத்து இருக்கு போல. :))


//அதுசரி, ராப் ங்கற பேரிலேயும் நீங்களேவா கமெண்டிக்கறது??
//

ராபை தெரியாதா? இப்படி எல்லாம் வலைய விரிச்சா ராப் உங்க பதிவுக்கு வருவாங்கன்னு மட்டும் நினைக்க வேணாம். :D

//சும்மா வெளுத்துவாங்குங்க, பார்க்கணும், ரொம்ப நாளாச்சு, ஆசையா இருக்கு, //

அதானே, உங்க நல்ல எண்ணம் எனக்கு தெரியாதா? :p

//எனக்கென்னவோ பதிவைவிட தலைப்புதான் பிடிச்சுது //

வாங்க சுந்தர், வந்த வேலைய கரக்ட்டா செஞ்சுடீங்க போலிருக்கே! :))

//என்னதான் சொல்ல வர்றீங்க? ஆக நீங்க நல்லா இருக்கீங்க! அப்படித்தானே:)//

@ரா.ல, நான் எங்க அப்படி சொல்லி இருக்கேன்?

நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்லி இருக்கேன். :))

ambi said...

//என்னமோ இதுக்கெல்லாம் அசந்துட்டா மாதிரி பேசுறீங்களே அண்ணே//

@rapp, சரி, என் ஊழலை எல்லாம் இப்போ கிளறனுமா?


@ரா.ல, ஒரு வார்த்தை சொன்னாலும் சொன்னேன், நல்லாவே வெளுத்து வாங்கிட்டீங்க, இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன். :))

கைப்புள்ள said...

//சீரியசா நானா? சரியா போச்சு போங்க. கைப்புள்ளை போல நாங்க. எவ்ளோ ஓட்டினாலும் தாங்குவோம். :))//

Objection your honour :(

//"வானரம் ஆயிரம்"//

இந்த தலைப்புல யாராச்சும் எழுதுவாங்கன்னு நெனச்சிட்டே இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகலை :)

//எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)///

அம்பி டச் :)))

//பாடல்கள் எல்லாம் தாமரை. எளிய வரிகள், மேடம்! நேஷனல் அவார்டு எல்லாம் உங்க வரிகளுக்கு ஜுஜுபி. தாமரையின் வரிகளை தம் இசை கொண்டு அமுக்க விரும்பவில்லை ஹாரிஸ். பதமா வாசிச்சு இருக்காரு.//

இந்த படத்து பாடல்களை எல்லாம் கேட்டப்புறம் தாமரை மேல இன்னும் மரியாதை கூடிடுச்சு.

"என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்" - சிம்பிளான, அழகான, ரசிக்கத்தக்க கற்பனை. தாமரைக்குப் போன வருஷம் தனி போஸ்டே போட்ட நீங்களும் நோட் பண்ணிருப்பீங்கன்னு நம்பறேன்.
:)

கைப்புள்ள said...

////புதிதாக அப்பாவாகி இருக்கும் கைப்புள்ளை, வெட்டி பாலாஜி போன்றோர் கையில் நோட்டு புக், பேனாவுடன் படம் பார்க்க செல்லவும். :)//

என் பொண்ணு பதிவெழுத ஆரம்பிச்சா "பிதாமகள்"னு எழுதுவான்னு நெனைக்கிறேன்.

இதை பாருங்க.

http://kaipullai.blogspot.com/2008/11/well.html

நாகை சிவா said...

:))

குத்து ரம்யா திவ்யா வாக மாறி ரொம்ப நாள் ஆச்சு அண்ணாத்த...

பேரை எல்லாம் சரியா சொல்லுறது இல்லையா... சம்சாரி ஆனா இப்படி தான்....

இருந்தாலும் அம்மணியை நீங்கள் கிண்டல் அடிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

ambi said...

நீங்க object பண்ணாலும் அதான் உண்மை, ஹிஹி.

அட, நீங்களும் இந்த தலைப்பை யோசிச்சீங்களா? 'கிரேட் மென் திங்க் அலைக்!'னு சோக்கா சொல்லி இருக்கான்யா தொரை.

ஆமா ரெம்ப ரசிச்சேன், மொத்த பாடலையும். தாமரைக்கு 2006ல பதிவு போட்டேன் தல.

ராமலக்ஷ்மி said...

கைப்புள்ள said…

//சீரியசா நானா? சரியா போச்சு போங்க. கைப்புள்ளை போல நாங்க. எவ்ளோ ஓட்டினாலும் தாங்குவோம். :))//

Objection your honour :(//

@ கைப்புள்ள

Please note your honour, அம்பி ‘புள்ளை’ன்னுதான் சொல்லியிருக்கார். Not 'புள்ள’!

மங்களூர் சிவா said...

/
வேல் என்ற மொக்கை படத்துக்கே அவ்ளோ பில்டப் குடுத்து பாத்து முடிஞ்சபிறகு, நான் ஓட்டின ஒட்டுல மேடம் கடுப்பாகி, சாம்பார்ல உப்பை கட் பண்ணி தன் கோபத்தை அறவழியில் காட்டினாங்க.
/

ஸ்ஸப்ப்பா இந்த பொம்மணாட்டிங்களே இப்படித்தானா
:))

மங்களூர் சிவா said...

/
மேடம், பெங்க்ளூர்ல நிறைய பிட்னஸ் ஜிம்ஸ் இருக்கு. அட்ரஸ் வேணும்னா நான் குடுக்கறேன்.
/
நிறைய தெரியுமோ
:)))

/
கார்னியர் ப்ராடக்ட்ஸ் கூட நிறையா இருக்கு.
/
:)))

மங்களூர் சிவா said...

/
எனக்கும் தான் பக்கத்து வீட்ல பிகர் இருந்தது, என் அப்பா கிட்ட மூச்சு விட்ருப்பேனா? அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன? :)
/

உச்சிமீது வானிடிந்து.............

என்ன அம்பி மிஸ் பண்ணீட்டீங்களோ !?!?

மங்களூர் சிவா said...

/
ஆள் கடத்தல்(Extortion) இல்லாமல் தனக்கு படம் எடுக்கத் தெரியாது என்பதை மறுபடியும் கெளதம் நிரூபித்து உள்ளார்.
/

ஹா ஹா
இது சூப்பர்!

மங்களூர் சிவா said...

/

பாடல்கள் எல்லாம் தாமரை. எளிய வரிகள், மேடம்! நேஷனல் அவார்டு எல்லாம் உங்க வரிகளுக்கு ஜுஜுபி.
/

யெஸ்ஸு

கைப்புள்ள said...

//அட, நீங்களும் இந்த தலைப்பை யோசிச்சீங்களா? 'கிரேட் மென் திங்க் அலைக்!'னு சோக்கா சொல்லி இருக்கான்யா தொரை//

ஹி...ஹி...இன்னும் கூட ஒன்னு யோசிச்சேன். சொன்னா உங்க ரசிகைகள் எல்லாம் அடிப்பாங்க...இருந்தாலும் யோசிச்சது வேஸ்டா போயிடக் கூடாது பாருங்க...

அம்பி பாசுரம் தான்...ஹி...ஹி...

"வானரம் ஆயிரம் சூழ வலம் செய்து
கல்லிடை அம்பி நடக்கின்றான்"

:))

mgnithi said...

//'லைஃப் ஹேஸ் டு கோ ஆன்!' என சூர்யா சொல்வதை எடிட்டர், 'பிலிம் ஹேஸ் டு கோ ஆன்!'ன்னு தப்பா புரிஞ்சுகிட்டாரு போல. :)//
en friends ellarum kooda ithaye thaan solraanga. naan innum padam paarkala. Deiva kutham aayidathu illa

mgnithi said...

//சாம்பார்ல உப்பை கட் பண்ணி தன் கோபத்தை அறவழியில் காட்டினாங்க. அதனால் இந்த தடவை நான் ரெம்ப உசாரா வாயவே தொறக்கலை//

Lessons learnt.

மங்களூர் சிவா said...

//
mgnithi said...

//சாம்பார்ல உப்பை கட் பண்ணி தன் கோபத்தை அறவழியில் காட்டினாங்க. அதனால் இந்த தடவை நான் ரெம்ப உசாரா வாயவே தொறக்கலை//

Lessons learnt.
//

ஆஹா
மொதல்ல வீட்டுல 'நெட்'டை கட் பண்ணனும் நம்ப வீட்டம்மிணியும் அம்பி பதிவை படிக்கிறவங்களாச்சே :((

ambi said...

வாங்க நாகை புலி, திவ்யான்னு அவங்க பேரை மாத்தினாலும் நமக்கு குத்து ரம்யா தான்.

அப்புறம் நீங்களும் சம்சாரி ஆக போறதா பேச்சு வந்தது.

பாயிண்ட் எடுத்து குடுத்த ரா.லக்ஷ்மி அக்கா வாழ்க.

அடடே! வாங்க சிவா மாப்பி,

//ஸ்ஸப்ப்பா இந்த பொம்மணாட்டிங்களே இப்படித்தானா
//


இத தான் நாங்க அப்பவே சொன்னோம், நீங்க கேட்டா தானே? :p

ஆமா, நிறைய மிஸ் பண்ணிட்டோம்ல.

என்னது என் பதிவையும் உங்க வீட்ல படிப்பாங்களா? இது பரவாயில்ல, புதுகை தென்றல் அக்கா பதிவை படிக்காம பாத்துகுங்க மாப்பி. :))

ஏன் கைப்பு, இப்படி பழி வாங்கறீங்க? நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.

வாங்க எம்ஜிநிதி, இன்னும் நீங்க கத்துக்க வேண்டியது நிறைய்ய. கற்றது பிளாக் அளவு, கல்லாதது தமிழ்மணம் அளவு.

gils said...

!!over nightla oru postay rombidichay :D vambi maama..gums reviwe..viaktan nirubar kanakka points potrukel parungo..athaaniyum top.

மீரா ரெட்டி சென்னையில் இருக்கும் காட்சிகளில் அம்மணி சுடிதார் போட்டு பின் குத்தி ஷாலில்(வலது புறம் ) வளைய வருகிறார்.//

ivlo thulliyama (valathu puram)..jollu utrukel :D athuvum unga thangs kooda irukarachayvay..neer thaan oi enga elarukum guru :D

துளசி கோபால் said...

இன்னொரு வானரம் வந்துச்சுப்போல இருக்கே:-)))))

நான் பதிவின் தலைப்பில் வந்துருக்குன்னு சொல்லவந்தேன்.

நான் பதிவை இப்போப் படிக்கமாட்டேன்.

நான் பார்த்தபிறகுதான்.

ambi said...

//ivlo thulliyama (valathu puram)..jollu utrukel :D athuvum unga thangs kooda irukarachayvay//

பாராட்ற மாதிரி பாராட்டி நைசா பத்த வெச்சியே கில்ஸ்.

@துளசி டீச்சர், ஹிஹி, நீங்க தலைப்பை தான் சொல்லி இருப்பீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன? :D

படம் பாத்திட்டு வந்து படிங்க டீச்சர். :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\என்னமோ இதுக்கெல்லாம் அசந்துட்டா மாதிரி பேசுறீங்களே அண்ணே:):):)//
புத்திசாலி ராப் நீ.. சரியா கேட்டே..

அம்பி ஒரு பெரிய நன்றி..ராப்புக்கு படத்துல சில நல்லவிசயம் இருக்குன்னு நீங்க சொல்லித்தான்புரிஞ்சது அதுக்குத்தான்..

ambi said...

என்ன முத்தக்கா, ரெண்டாவது ரவுண்டா? :))

ராப் உலக சினிமா பாத்து பாத்து ரொம்ப கெட்டு போயிட்டாங்க. லோக்கல் சினிமாவும் அப்பப்ப பாக்க சொல்லுங்க. :p

Sridhar Narayanan said...

// கைப்புள்ள said...
ஹி...ஹி...இன்னும் கூட ஒன்னு யோசிச்சேன். சொன்னா உங்க ரசிகைகள் எல்லாம் அடிப்பாங்க...

"வானரம் ஆயிரம் சூழ வலம் செய்து
கல்லிடை அம்பி நடக்கின்றான்"
//

அம்பி சார்! எப்படி இப்படியெல்லாம்? ரொம்ப செலவாயிருக்கும் போல... :-)

நீர் நடத்தும். நடத்தும். நான் இப்படிக்கா ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கிறேன். :))

ambi said...

@கைப்ஸ், பாருங்க, ஸ்ரீதர் ரொம்ப பீல் பண்றார், அவரு பேரையும் போட்டு விடுங்க. :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ரெண்டவது ரவுண்டான்னு கேட்டதும் முதல்லயே கமெண்ட் போட்டேனான்னு தேடிப்பார்த்தேன்..போடலையே..ஆனா படிச்சிட்டு கமெண்ட் போட நேரமில்லாம முன்னாடி ஒரு தடவை போனதெல்லாம் கவுண்ட் பண்ணிவச்சிருக்கீங்களா.. :)

shree said...

//அப்படியே சொல்லியிருந்தாலும் எங்கப்பா என் முதுகுல தோரணம் ஆயிரம் கட்டியிருப்பார்ன்னு எனக்கு தெரியாதா என்ன//

hayyoo... vay vittu sirichittirundhen, pakkathula boss varadha pathum kooda adakka mudila. nalla velai avarukku tamil theriyadhu. i am also planning to update my blog about varanam ayiram

ambi said...

முத்தக்கா, அடடே! போன பதிவுல நீங்க பஷ்ட்டு வந்ததை குழப்பிகிட்டேன் போல. சரி, என்னை மன்னிச்சு விட்டுடுங்க.

@ஸ்ரீ, பாராட்டுக்கு நன்னி ஹை, :)மறுபடி வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சா? வெரி குட். ஸ்ரீநிதிய யாரு பாத்துக்கறாங்க? :p

இதோ உன் பக்கத்துக்கு படிக்க வந்துட்டே இருக்கேன்.

Anonymous said...

paravaiyillaye,junior ambiyai vaithukondu padam fulla paarthingla !!!!paiyan avanga amma jadaiyile samathu polirukku!!!!! enna thulliyama gavanichurukkeenga sameera reddyiya,nappy matharathukku naduvulla, karumamae kanaayinara vandha velaiya propera seithirukkum ungalalin kadamai unarchikku oru salam...ambi,sameera akkkavukku romba vayasana madhiri oru look irupathaga enakku thonrukiradhu,what say???
nivi.

ambi said...

//sameera akkkavukku romba vayasana madhiri oru look irupathaga enakku thonrukiradhu,what say???
//

சரியா சொன்னீங்க நிவி. போன வாரம் விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன் season 3 கூட வந்தாக, யப்பா சகிக்கலை. :)

Anonymous said...

//கிதார் வாசிக்க தெரிந்த எவரும் கண்டிப்பாக பாடும் பாடல் 'என் இனிய பொன் நிலாவே' தேர்தெடுத்தது சூப்பர்//

இளைய நிலா பொழிகிறது பாட்டு கூட படத்துல வந்ததா ஞாபகம்

சாணக்கியன் said...

my review of the same :-)

http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

rapp said...

//சரியா சொன்னீங்க நிவி. போன வாரம் விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன் season 3 கூட வந்தாக, யப்பா சகிக்கலை. :)//

யப்பா அண்ணே, அதுக்காகவா அவங்களை இப்டி பாலோ பண்றீங்க:):):)

rapp said...

//"வானரம் ஆயிரம் சூழ வலம் செய்து
கல்லிடை அம்பி நடக்கின்றான்"
//
கைப்புள்ள இன்னொரு கவுஜ இன்னைக்குள்ள ரெடி பண்ணிற வேண்டியதுதான் போல:):):)

rapp said...

//
மேடம், பெங்க்ளூர்ல நிறைய பிட்னஸ் ஜிம்ஸ் இருக்கு. அட்ரஸ் வேணும்னா நான் குடுக்கறேன்.
//
நெறைய குஸ்தி கோர்ஸ் கத்துத் தர்ற இடமாப் பார்த்து கொடுங்க:):):)

rapp said...

me the 50TH:):):)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信