Thursday, November 06, 2008

மெட்ராஸ் aka சென்னை

தீபாவளி மற்றும் தி.ரா.ச. அவர்கள் வீட்டு திருமணத்தை சாக்காக வைத்து ஒரு வாரம் லீவு எடுத்து கொண்டு சென்னையில் டேரா போட்டாச்சு. நாங்கள் வருகிறோம் என தெரிந்தோ என்னவோ இரண்டு நாட்களுக்கு முன்பே மழை பெய்து ஒய்ந்து விட்டிருந்தது.

ஒரு சில மாதங்கள் கழித்து வருபவர்களுக்கு கூட சென்னை பல திடிக்கிடும் மாற்றங்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து காட்சியளிக்கிறது.

சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்.
மியுச்சுவல் பண்ட், ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டு விட்டு தேவுடு காப்பவர்கள், ரெண்டு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுங்கள். பணத்துக்கு சென்னை கியாரண்டி.

அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-)



டூ வீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டை மடியில் வைத்து கொண்டு சிக்னலில் மட்டும் தலையில் அணிகிறார்கள். வாழ்க்கையில் இப்படியா பிடிப்பு இல்லாம இருப்பாங்க..?



திரும்பின பக்கம் எல்லாம் காஃபி டே கடைகளூம், பெட்ரோல் பங்குகளில் கூட பிட்சா கார்னரும் இருக்கு. ஞாயிறுகளில் மக்கள் வீட்டில் சமைக்காமல் கூட்டம் கூட்டமா ரெஸ்டாரண்ட் போய் மொய் எழுதுகிறார்கள்.
மக்கள் பிராண்டட் உடைகளையே விரும்பி அணிகிறார்கள். இந்தியா ஒளிர்கிறது?

தடுக்கி விழுந்தா ரிலையன்ஸ் ப்ரேஷ், தாவி எழுந்தா நில்கிரீஸ் என காய்கறிகளை அழகா நறுக்கியே பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)

புஸ்வாணம், மத்தாப்பு எல்லாம் காலாவதியாகி இப்போ வானத்திலேயே மத்தாப்பு கொட்ற வெடிகள் தான் மக்கள் வெடிக்கிறார்கள். அப்ப தான் ஓசோனில் சீக்ரம் ஓட்டை விழும் பாருங்க.



காய்கறி விலை பெண்களூருவை விட அதிகமா இருக்கு. (பீன்ஸ் கிலோ என்பது ரூபாய், தக்காளி கிலோ அறுபது ரூபாய், கத்ரிகாய் கிலோ நாப்பது ரூபாய்). சரி விடுங்க, அரிசி கிலோ ஒரு ரூபாய் தானே? :-)



முக்ய ஏரியாக்களில் (அடையாறு, பாண்டி பஜார், வேளசேரி) நாயுடு ஹால் விரிவாக்கம் செய்து உள்ளது. சொல்ல மறந்துட்டேனே, நாயுடு ஹாலில் இப்போ பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கிறது.



நாரத கான சபாவில் எஸ்.வி.சேகரின் மகாபாரததில் மங்காத்தா நாடகத்துக்கு வழக்கம் போல எட்டுக்கல் மூக்குத்தி, ஆரணி புடவை சகிதம் என்.ஆர்.ஐ மாமிகள் வந்து, "திஸ் கை இஸ் டூ ஃபன்னி யூ நோ" என கமண்டுகிறார்கள். இதையே தான் புரட்சி தலைவியும் சொல்றாங்க போல. :-)



நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வாரமும் ஒரு மணி நேரம் கூட கரண்ட் கட்டாகவில்லை. ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்.



கலர் கலரான பெயர் பலகைகள் மறைந்து நியான் விளக்குகளில் வணிக வளாகங்களின் பெயர்கள் இரவு பத்து பதினோரு மணி வரையிலும் ஒளிருகின்றன. இதை கட்டுபடுத்தினால் ஒரு வேளை நிறைய மின்சாரம் மிச்சம் ஆகுமோ?


பாருங்க, இதெல்லாம் அமைச்சர் யோசிக்க வேண்டியது, நான் யோசிச்சுட்டு இருக்கேன். என்ன செய்ய, ஏதாவது நல்லது நடக்காதா?னு மனசு கிடந்து அடிச்சுகுதே.



சென்னையில் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் ஜீன்ஸ் கலாசாரம் வந்தாலும், இன்னமும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு கடையில் ஐந்தரை மீட்டருக்கு கட்டம் போட்ட காட்டன் சுடிதார் மெட்டிரீயல் வாங்கி ஒரு மணி நேரத்தில் பட்யாலா ஸ்டெயிலில் தைத்து ஆறரை மீட்டருக்கு துப்பட்டா வாங்கி இரண்டு பக்கமும் பின் போட்டு அணிந்து செல்கிறார்கள். வாழ்க சென்னைவாழ் மக்கள்.



பி.கு: உங்களுக்கு நேரம் இருந்தால் இங்க போய் ஈசியான ஒரு புதிருல கலந்துக்குங்க.

58 comments:

rapp said...

me the first:):):)

ஷைலஜா said...

//.சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்//

மகாகுறும்பு!

//அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா//


அவசியம் தெரிஞ்சாகணுமோ?:)

/சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)

///

இக்கரை -அக்கரை!!!

// நாடகத்துக்கு வழக்கம் போல எட்டுக்கல் மூக்குத்தி, ஆரணி புடவை சகிதம் என்.ஆர்.ஐ மாமிகள் வந்து, "திஸ் கை இஸ் டூ ஃபன்னி யூ நோ" என கமண்டுகிறார்கள். இதையே தான் புரட்சி தலைவியும் சொல்றாங்க போல. :-)

///

ஹலோ ஓவர் இதெல்லாம்..மாமீஸ் சண்டைக்கு வருவா(நானும் ஒரு மாமி)

//கட்டம் போட்ட காட்டன் சுடிதார் மெட்டிரீயல் வாங்கி ஒரு மணி நேரத்தில் பட்யாலா ஸ்டெயிலில் தைத்து ஆறரை மீட்டருக்கு துப்பட்டா வாங்கி இரண்டு பக்கமும் பின் போட்டு அணிந்து செல்கிறார்கள். வாழ்க சென்னைவாழ் மக்கள்.

///
அப்பாடி தொலைநோக்குப்பார்வைதான் அம்பிக்கு:)

கலக்கல்ஸ் வழக்கம்போல!

ambi said...

@rapp, உங்களை தவிர வேற யாரு பஷ்ட்டு வர முடியும் ராப்? :p

@ஷைலக்கா, பதிவை இப்படி பிரிச்சு மேஞ்சிட்டீங்களே, ஸ்டார் பதிவர் வருகைக்கு நன்னி. :)

Anonymous said...

சூப்பரோ சூப்பர் எழுத்து நடை அம்பி! கலக்குங்க:-))

ஆமா ராப் வந்தாச்சா முதல் ஆளா, "வெறி" குட்!!! கண்ணு பட போகுது புள்ளைக்கு சுத்தி போட சொல்லுங்க

இப்படிக்கு
அபிஅப்பா

ambi said...

@அபி அப்பா, உங்க பிளாக்கர் ஐடி என்னாச்சு? வேற யாரும் என்னை வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே?

//கண்ணு பட போகுது புள்ளைக்கு சுத்தி போட சொல்லுங்க
//

அது என் குழந்தை போட்டோ இல்ல, நான் தான், சட்டை கலரை மாத்திட்டேன். ஹிஹி. :))

கைப்புள்ள said...

//சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்.
மியுச்சுவல் பண்ட், ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டு விட்டு தேவுடு காப்பவர்கள், ரெண்டு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுங்கள். பணத்துக்கு சென்னை கியாரண்டி.

அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-)//

ஹி...ஹி...வழக்கம் போல அங்கங்கே அம்பி டச்சு அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கு. ஜாலியா இருந்துச்சு படிக்கறதுக்கு.
:)

ராமலக்ஷ்மி said...

ஷைலஜா said... //கலக்கல்ஸ் வழக்கம்போல!//

சிரி மொழிகிறேன்:)))!

//காய்கறி விலை பெண்களூருவை விட அதிகமா இருக்கு.//
நேற்றைய Times of India பக்கம் 2 பார்க்கலயா? கத்திரி கிலோ ரூ 60, தக்காளி கிலோ ரூ 40.

அதிருக்கட்டும் பெங்களூருவை ///'பெண்'களூரு//ன்னுதான் சொல்வீங்களா:))?

Raghav said...

ஒரு நிமிஷம் ஆடிட்டேன்(தனியா தான்).. மெட்ராஸ் (Akka) சென்னைன்னு படிச்சுட்டு எப்புடி சென்னை மெட்ராஸ்க்கு அக்கா ஆக முடியும்னு...

rapp said...

ஹா ஹா ஹா சூப்பரோ சூப்பர்:):):)

rapp said...

// தீபாவளி மற்றும் தி.ரா.ச. அவர்கள் வீட்டு திருமணத்தை சாக்காக வைத்து ஒரு வாரம் லீவு எடுத்து கொண்டு சென்னையில் டேரா போட்டாச்சு//

யாருக்கு காது குத்தறீங்க, மானாட மயிலாட பைனல்சை லைவ்வா பாக்கறத்துக்கு சென்னை போயிட்டு, பேச்சப்பாரு அண்ணனுக்கு:):):)

rapp said...

//ஒரு சில மாதங்கள் கழித்து வருபவர்களுக்கு கூட சென்னை பல திடிக்கிடும் மாற்றங்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து காட்சியளிக்கிறது//

ஹி ஹி என்னைத்தவிர எல்லாரும் அப்டி சொல்றீங்க. நான் இந்த வருஷம் சென்னை வந்தப்ப எனக்கு ஒரு மாற்றமும் தெரியல. இவருதான் இதப்பாரு அதப்பாருன்னு கொடாஞ்சிக்கிட்டிருந்தார்:):):)

rapp said...

//மியுச்சுவல் பண்ட், ஷேர் மார்கெட்டில் பணத்தை போட்டு விட்டு தேவுடு காப்பவர்கள், ரெண்டு ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடுங்கள். பணத்துக்கு சென்னை கியாரண்டி//

சேட்டங்கில்சும், போலீஸ் மாமாக்களும் எல்லாத்தையும் வாங்கி பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தா, நீங்க அவங்களுக்கு போட்டியாளர்களையா உருவாக்கப்பக்கறீங்க:):):)

ambi said...

வாங்க கைப்பு தல, நீங்களும் அங்க தான் டேரா போல. பாராட்டுக்கு நன்னி ஹை. :))


வாங்க ராமலக்ஷ்மி, அப்படியா? நாங்க கால் கிலோ தான் வாங்கறது.

கத்ரிகாய் பிடிக்காது, அதுனால கண்டுக்கல. இப்ப பெங்களூரை(bangalore) பெண்களூரூன்னு(bengaloru) தான் கூப்டறாங்க. :))

மத்தபடி எந்த உள்நோக்கமும் இல்லனு நான் சொன்னா நீங்க நம்பவா போறிங்க? :p

@raagav, நீங்க பிரம்மசாரின்னு தெரிஞ்சவுடனே நான் கூட ஆடிட்டேன்(தனியா இல்ல) ராகவ் அண்ணே! :))

rapp said...

//மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா?//

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, நீங்க அந்த நிகழ்ச்சிய ம்யூட்ல வெச்சு அண்ணிக்கு தெரியாம பாக்கறீங்கன்னு. ஏன்னா கலா மாஸ்டர் அந்த நிகழ்ச்சியில அடிக்கடி ஏவிஎம் ஸ்டுடியோவில் நிகழ்ச்சி ஷூட்டிங் நடக்குதுன்னு சொல்லுவாங்க:):):)

rapp said...

me the 15th:):):)

Raghav said...

//அறிவாலயத்தில் முன்னாடி சன் டிவினு இருந்த போர்டு இப்போ கலைஞர் டிவினு சொல்லுது. மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-) //

எதிர்காலத்தில், ஸ்டாலின் டீ.வி அல்லது அழகிரி டீ.வி வரலாம். :)

rapp said...

//திரும்பின பக்கம் எல்லாம் காஃபி டே கடைகளூம், பெட்ரோல் பங்குகளில் கூட பிட்சா கார்னரும் இருக்கு. ஞாயிறுகளில் மக்கள் வீட்டில் சமைக்காமல் கூட்டம் கூட்டமா ரெஸ்டாரண்ட் போய் மொய் எழுதுகிறார்கள்.
மக்கள் பிராண்டட் உடைகளையே விரும்பி அணிகிறார்கள். இந்தியா ஒளிர்கிறது?//

அருமை அருமை அருமை:):):) அது வேறொன்னுமில்லை, மும்பை நியூயாக்கா மாற ஆரம்பிச்சப்போ என்ன ஆச்சோ, பெங்களுர் மும்பையா மாத்திக்க ஆரம்பிச்சப்போ என்ன ஆச்சோ, அதுதான் இப்போ சென்னைக்கும்:):):)

Raghav said...

//பாருங்க, இதெல்லாம் அமைச்சர் யோசிக்க வேண்டியது, நான் யோசிச்சுட்டு இருக்கேன். என்ன செய்ய, ஏதாவது நல்லது நடக்காதா?னு மனசு கிடந்து அடிச்சுகுதே. //

இப்போ பெங்களூர்லயும் கரண்ட் கட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. என்ன பண்ணுறது.. ஆமா பெங்களூர் மின்சாரத் துறை அமைச்சர் யாருங்கோ ??

rapp said...

//எதிர்காலத்தில், ஸ்டாலின் டீ.வி அல்லது அழகிரி டீ.வி வரலாம். :)//
தப்பு ஸ்டாலின் டிவி, அழகிரி டிவி அண்ட் கனிமொழி டிவி எல்லாம் வரும்:):):)

rapp said...

me the 20th

rapp said...

//தடுக்கி விழுந்தா ரிலையன்ஸ் ப்ரேஷ், தாவி எழுந்தா நில்கிரீஸ் என காய்கறிகளை அழகா நறுக்கியே பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும்//

இதெல்லாம் சென்னைக்கு முன்னயே பெங்களூருக்கு வந்திடிச்சே,

rapp said...

//அப்ப தான் ஓசோனில் சீக்ரம் ஓட்டை விழும் பாருங்க.
//

:):):)

//முக்ய ஏரியாக்களில் (அடையாறு, பாண்டி பஜார், வேளசேரி) நாயுடு ஹால் விரிவாக்கம் செய்து உள்ளது. சொல்ல மறந்துட்டேனே, நாயுடு ஹாலில் இப்போ பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கிறது.
//
எப்டியும் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு கெடயாது, அப்புறம் ஏன் இந்த பில்டப்:):):)

rapp said...

//நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வாரமும் ஒரு மணி நேரம் கூட கரண்ட் கட்டாகவில்லை. ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்//

இதெல்லாம் ஓவரு. கரண்ட கண்டுபிடிச்சுட்டாங்களாங்கர ரேஞ்சில் பெங்களூரில் மின்துறை அமைச்சர் பூந்து விளையாடறதா என் கசின் சொல்றா:):):)

rapp said...

//நாங்கள் சென்னையில் இருந்த ஒரு வாரமும் ஒரு மணி நேரம் கூட கரண்ட் கட்டாகவில்லை. ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்//

இதெல்லாம் ஓவரு. கரண்ட கண்டுபிடிச்சுட்டாங்களாங்கர ரேஞ்சில் பெங்களூரில் மின்துறை அமைச்சர் பூந்து விளையாடறதா என் கசின் சொல்றா:):):)

rapp said...

me the 25TH:):):)

rapp said...

//
பி.கு: உங்களுக்கு நேரம் இருந்தால் இங்க போய் ஈசியான ஒரு புதிருல கலந்துக்குங்க//
ஹையா இதுல நான் ஆயிரத்துக்கு ஆயிரம் வாங்கிட்டேனே:):):)

Blogeswari said...

Oiii ambi-gaaru! nee ennamo US la 20 varusham irunduttu madras vandu peela-udara aasaminga madiri pesara?

மெளலி (மதுரையம்பதி) said...

எப்பவும் போல போட்டுத் தாக்கிட்டீங்க :).

சபாவுக்கு வரும் மாமிகள் மட்டுந்தானா அப்படி?, கல்யாணத்துக்கு வந்த/வரும் மாமிகள்? :-)

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
எப்பவும் போல போட்டுத் தாக்கிட்டீங்க :).

சபாவுக்கு வரும் மாமிகள் மட்டுந்தானா அப்படி?, கல்யாணத்துக்கு வந்த/வரும் மாமிகள்? :-)

Thu Nov 06, 05
>>>>>மதுர! அம்பிய மிஞ்சிட்டீங்க நீங்க!!! :)

ஆமா அம்பி ஒரு ஈடு இட்லிசட்னி செய்துமுடிச்சி இங்க வரதுக்குள்ள 26பின்னூட்டமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (நாங்களும் சொல்லலாம்தானே?:))))

மங்களூர் சிவா said...

kalakkals

Geetha Sambasivam said...

@அம்பி, ஆரம்பிச்சாச்சா??? நடத்துங்க!

//சபாவுக்கு வரும் மாமிகள் மட்டுந்தானா அப்படி?, கல்யாணத்துக்கு வந்த/வரும் மாமிகள்? :-)//


@மெளலி, இதிலே என்ன உ.கு.???

வல்லிசிம்ஹன் said...

அதானே கீதா, மாமிகளாம்:)
அதுவும் எஸ்வி சேகரைப் பார்த்து.!!

எட்டுக்கல் பேசரி பட்டுமாமிக்கப்புறம் யாருகிட்டேயும் நான் பார்கலை.அம்பி குசும்பு தாங்கலியே.

ரொம்ப தான்க்ஸ் அம்பி, சென்னையில் இவ்வளவு முன்னேற்ற ஏழு மாசத்தில நடந்திருக்குன்னா அதுக்கு ஒரே காரணம்தான்:)
என்னான்னு அப்புறமா சொல்றேன்.

Sridhar Narayanan said...

//, நாயுடு ஹாலில் இப்போ பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகள் கிடைக்கிறது//

அது என்ன 'இப்போ'? அதெல்லா எஸ்வி சேகர் / கிரேசி மோகன் ஜோக்ல மட்டும்தான் நாயுடு ஹால் லேடிஸ் ஸ்பெஷல். எனக்கு தெரிஞ்சு 20 வருசமா அது எப்பவுமே பேமில் ட்ரெஸ் கடைதான் :-)

உங்க பதிவை விட 'ராப்' செம ஷார்ப்பா இருக்காங்களே :-)

Anonymous said...

அம்பி, நானும் இந்த ராப்புக்கு முன்னாடி , யாரோடவாது பதிவுல மீ த பர்ஸ்ட் போடணும்னு பாக்கறேன். அக்கா எல்லாரும் எப்ப பதிவு போடுவாங்கன்னு கண் கொத்தி பாம்பா பாப்பங்க போல இருக்கு. பதிவ படிச்சிட்டு அப்பறமா வர்றேன்

ambi said...

@ராப், ஆமா, சில பாட்டுகளை, நிகழ்ச்சிகளை மியூட்ல வெச்சு தான் பாக்கறது. வீட்டுக்கு வீடு வாசப்படி சரி தானே? :))

@ராப் & ராகவ், ஏன் உதய நிதி டிவி வரக்கூடாதா? :p

ராகவ், ஆமா, இங்கயும் கரண்ட் போகுது. ஏதோ பவர் பேக்கப் இருக்கறதால ஆறுதலா இருக்கு. ஆனா இங்க தான் ஊருக்கே ஏசி போட்ருக்காங்களே. ரேவன்னா தான் energy மினிஸ்டர். :))

@rapp,அந்த குவிஜுல நீங்க சென்சுரி அடிப்பீங்கனு எனக்கு தெரியுமே. :)

வாங்க பிளாக் அக்கா, நீங்க மும்பைல இருக்கற ரெஸ்டாரண்ட் பத்தி ரேட்டிங்க் குடுக்கலாம், நாங்க சென்னை பத்தி எழுத கூடாதா? :))

@மதுரை அண்ணா, கல்யாணத்துக்கு வந்த மாமிகள் முத்து மாலை எல்லாம் போட்டு கலக்கிருந்தாங்க!னு நான் சொல்லவும் வேணுமா? :p

ambi said...

//ஒரு ஈடு இட்லிசட்னி செய்துமுடிச்சி இங்க வரதுக்குள்ள 26பின்னூட்டமா? //

@shylaja, இது மேட்டர். என்ன சட்னியோ..?

வாங்க மாப்ளை சிவா. :)

அட வாங்க கீதா மேடம். மெளலி அண்ணா கலக்கறார் இல்ல. :p

@வல்லி மேடம், ஒரு தரம் நாரத கான சபா வாங்க, நிறைய பாக்கலாம். என்ன காரணம்?னு சீக்ரம் சொல்லுங்க. :)

வாங்க ஸ்ரீதர், நானும் ரெம்ப நாளா அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன். :)

ஆமா ராப் ரெம்ப ஷார்ப். :p

@சின்ன அம்மனி, ராப்புக்கு முன்னாடியா? கூகிள்காரன் கிட்ட எதுக்கும் ஒரு டீல் போடுங்க. வாங்க, நிதானமா வந்து படிங்க. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

@ராப் நீ தான் இப்ப அடி வாங்கப்போற .. ஏன்னா எங்க ஷூட்டிங்க் நடக்குதுன்னு நீ தகவல் தந்திருக்க..

gils said...

////.சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்////

over nakkal :D nikara autola nallatha pathu unga veetuku neengalay anupikunga :D


//ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)//

rangu ultava padichalum oray artham than varuthu :D

//எட்டுக்கல் மூக்குத்தி, ஆரணி புடவை சகிதம் என்.ஆர்.ஐ மாமிகள் //

mangathaa paaka pona edathula madisara patthutrukel polarukay..irunaga unga thangsku inoru poorikattai gift wrap panni tharom..pazhasu thenju poachu nenakren :D

Geetha Sambasivam said...

//@shylaja, இது மேட்டர். என்ன சட்னியோ..?//

இது கேள்வி, சந்தேகமே இல்லாமல் பருத்திக் கொட்டை சட்னிதான்! அம்பி ஸ்பெஷல்!! :P:P:P:P

Cable சங்கர் said...

//சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்.//

:) :) சூப்பர்

Anonymous said...

//ஆற்காட்டாருக்கு நல்ல புத்தி வந்து விட்டதா?னு ஆச்சர்யமாக பேப்பர் பாத்தா தீபாவளி முன்னிட்டு கரண்ட் கட் ஒரு வாரத்துக்கு மட்டும் இல்லையாம். அதானே பாத்தேன்.//

nethi adi!
ROTFL...

ILA (a) இளா said...

அங்கங்கே அம்பி டச்சு அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கு.

Unknown said...

//அதிருக்கட்டும் பெங்களூருவை ///'பெண்'களூரு//ன்னுதான் சொல்வீங்களா:))?// அதானே! சென்னையிலே கமெண்டினெதல்லாம் பெண்கள் பத்தி!

//இன்னமும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு கடை// இது எந்த கடையின்னு சொன்னால், எங்க வீட்டு ரங்குவுக்கு வசதியா இருக்கும்.

மத்தபடி, பதிவுல பக்கோடா தூளா அம்பி டச்.

Anonymous said...

me the lastttttttu :)))

Anonymous said...

"ஒரு மணி நேரத்தில் பட்யாலா ஸ்டெயிலில் "

kalakureenga ponga amman adhu ena patyala style enaku theriyatheeeeee!!!!!!!!!

Anonymous said...

"தடுக்கி விழுந்தா ரிலையன்ஸ் ப்ரேஷ், தாவி எழுந்தா நில்கிரீஸ் என காய்கறிகளை அழகா நறுக்கியே பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள்."

idhellam munadiye bangalore food world kidaikum ambi.

rangamani kankalendhu thani varakudathu nu thangamanihal senja poratathin korikayai yetru food world le china vengayathe kuda urichu packet senchu vachirunthanga
evlo nallavanga nanga mmmmmmmmm :)

Anonymous said...

"சென்னை வாழ் ரங்கமணிகள் சந்தோஷமாக வாங்கி செல்கிறார்கள். ஒரு ரங்குவின் கஷ்டம் இன்னொரு ரங்குவுக்கு தானே தெரியும். :-)"

adhu enavo unmai than

Anonymous said...

"ஒரு சில மாதங்கள் கழித்து வருபவர்களுக்கு கூட சென்னை பல திடிக்கிடும் மாற்றங்களுடன் அசுர வேகத்தில் வளர்ந்து காட்சியளிக்கிறது"

unmai unmai amothikiren

Anonymous said...

"சென்ட்ரலில் நிறைய ஆட்டோக்கள் விற்பனைக்கு உள்ளது. ஆமா! ஆட்டோ வருமா?னு கேட்டால் ஆட்டோ விலையை தான் சொல்கிறார்கள்"

adhuvum ninga bangalore lendhu vareenganu therinja metre podrennu solli comedy panuvarhal

Anonymous said...

me the 50th.

nalla ezhuthirukinga ambi. jodi no 1 judges solra mathiri "ithu nalla package", "hats off" seri unmaiya nallatha sollanum na serious ana vishayatha kuda nalla humour oda ezhuthareenga Mr.cho mathiri

Karthikeyan Ganesan said...

Anna, Maami ellam vambukku ilukatheenga na.

you will get hurt.

Kavinaya said...

என்னா வெலாவாரியான கவனிப்பு+விவரிப்பு. நல்ல சிரிப்பு :)

ambi said...

வாங்க முத்தக்கா, கரக்ட்டா பாயிண்டை புடிச்சீங்க. :)

என்ன கில்ஸ், ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே! :p

வருகைக்கு நன்னி கேபிள் சங்கர், வெங்கி ராஜா & இளா. :)

வாங்க கெ.கே.பி, அந்த கடை பெயர் மறந்து விட்டது. ஆமா, அது என்ன உங்க ரங்குவுக்கு..? :p

வாங்க உத்ரா, நீங்க மானஸ்த்தி ஒத்துக்கறேன். :))

இப்படி போட்டு தாக்கிட்டீங்க? ரெம்ப நன்னி, ஹிஹி. :))

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னி கார்திக் & கவிநயா அக்கா.

mgnithi said...

Ambi,

Unga katallaikku inanga attendance. neenga post potta annaike padichiten.. Aana attendance podarathukulla damager oru meeting koooptutaar.. so the missing.. Inime kareeta attendance podaren..

திவாண்ணா said...

//ரொம்ப தான்க்ஸ் அம்பி, சென்னையில் இவ்வளவு முன்னேற்ற ஏழு மாசத்தில நடந்திருக்குன்னா அதுக்கு ஒரே காரணம்தான்:)
என்னான்னு அப்புறமா சொல்றேன்.//

எல்லாம் சூரியன் உதிச்ச வேளை அப்படித்தானே?

SKM said...

:D :D Ippdiyellam yosikka Unnal mattum mudiyum thambi.

aama ippdi ponnugalai mattum parka, yosikka yellam yeppdi thangs and junior ungalukku time koduthanga? appo avalo vettiya irukeenga!idhula "rangs pavam"nu vera.

Karthik said...

//மானாட மயிலாட சூட்டிங்க் எல்லாம் இங்க தான் நடக்குதா? :-)//

Namitha machan poi imbha Rambha!!!

//இதையே தான் புரட்சி தலைவியும் சொல்றாங்க போல. :-)//

Lol!!
//பாருங்க, இதெல்லாம் அமைச்சர் யோசிக்க வேண்டியது, நான் யோசிச்சுட்டு இருக்கேன். //

venumna election nillunga.. en vote ungaluku thaan :)

ambi said...

வாங்க எம்ஜிநிதி, நீங்க வந்தது நான் செய்த பாக்யம். :))

திவாண்ணா, ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி இருக்கே? :p

எஸ்கேஎம், நான் பத்வு போடறதே ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் தான், அது உங்க கண்ண உறுத்துதா? :))

வாங்க கார்திக், பாராட்டுக்கு ரெம்ப நன்னி ஹை.