ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த திரை வைபவத்துல என்னையும் எழுத்து விட்ட புண்ணியவதி ராப் மற்றும் உஷாஜி அவர்களுக்கும் முதலில் நன்றி.
1) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
தூர்தர்ஷன் வாரம் ஒரு படம் போட ஆரம்பிச்சதும்னு நினைக்கிறேன். சாந்த சக்குபாய்னு ஒரு படம், தேவர் மகன்ல ரேவதி வாய தொறந்தா வெறுங்காத்துதேங் வருது!னு சொல்வாங்க. ஆனா இந்த படத்துல நடிச்ச அந்த அம்மா வாய தொறந்தா ஒரே பாட்டா கொட்டுது. செம கொத்து கொத்திட்டாங்க. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேனே!
அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படம். எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார். அதுல வர ஒரு காட்சிய தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.
2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)
3) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இந்த கே டிவில நைட் போடற படத்த தான் பாக்கறது. கடைசியா பாத்தது தமிழ் செல்வன். இப்ப எல்லாம் கவர்மெண்டுக்கு எதிரா மக்கள் பொங்கி எழுற மாதிரி படங்களா போட்டு தாக்கறாங்க. என்ன நுண்ணரசியல்டா சாமி! மீடியான்னா சும்மாவா? மஞ்சள் மகிமை, மானாட மயிலாடன்னு ஆடிட்டு இருந்தா டப்பா டான்ஸ் ஆடிரும்.
4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
(கமல் நடித்த) நாயகன், சின்ன வயசுல தென்பாண்டி சீமையிலே! கேக்கும் போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதுக்கப்புறம் 'தாரே சமீன் பர்' படத்துல அமீர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் பேசிட்டு வெளிய வருவாரு, அப்ப அந்த குழந்தைய காட்டுவாங்க, பொல பொலன்னு கண்ணீர் வந்ருச்சு. சே! தங்கஸ் பாத்தா நக்கல் வுடுவாங்களேன்னு நைசா துடச்சுகிட்டு அங்க பாத்தா, அம்மணியும் கண்ண கசக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை அமீர்? :)
5a) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
இருவர். அவரு கணக்கு கேட்டதும், இவரும் பேசாம, "மாநாட்டுக்கு வந்த மன்னார்சாமி அளித்த நன்கொடை நூறுபாய்ய்ய்!"னு கணக்கு காட்டிருந்தார்னா ப்ரச்சனையே வந்ருக்காதோ? சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. என்ன சொல்றீங்க?
5b) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கஜேந்திரா!ன்னு ஆஸ்காருக்கு தேர்வாக வேண்டிய ஒரு கேப்டன் படம். அதுல போலிஸா வர ராதாரவிக்கு கஜா எப்போ கேட்டாலும் ஒரு கோடாலிய தூக்கி வீச வேண்டியது ஒன்னு தான் பொறுப்பு. ஒரு சீன்ல நடு ஏரியிலிருந்து கிட்டதட்ட ரெண்டு கிமீ இருக்கும். கஜா இந்தா பிடி!னு கரையிலிருந்து நம்ம ராதாரவி கோடலிய வீசுவாரு பாருங்க! அடடா என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)
சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல?
6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஸ்கூல் படிக்கும் போது வாரமலர்ல வர சினிமா பொன்னய்யா "இந்த காரை சொப்பன சுந்தரி வச்ருந்தாக!" போன்ற கிசுகிசு படிச்ச நியாபகம். இப்ப சுத்தமா இல்லை. ஆமா, விஷாலுக்கும் நயனுக்கும் ஏதோ கிசுகிசுவாமே! நிசமா? ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்.
7) தமிழ்ச்சினிமா இசை?
கேட்பது உண்டு. பெரிய்ய்ய ஈடுபாடுன்னு ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. காலை ஏதும் ஒரு பாட்டை ஹம் பண்ண ஆரம்பிச்சா நைட்டு ஜுனியரை தூங்க வைக்கற வரைக்கும் அதே லைனை பாடறது பழக்கமா போச்சு.
கோக்க கோலா ப்ரவுனு கலருடா!
என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்.
ஒரு ஜப்பனிய மொழி படம், 1942 ல அமெரிக்க விமானம் ஜப்பான்ல குண்டு போட பறந்து போகும். அந்த விமானி பட்டனை அமுக்கறத்துக்கு ஒரு நிமிஷம் முன்னடி தான் அவருக்கு நியூயார்க்குல குழந்தை பொறந்ருக்கு!னு நடுவானத்துல போன் வரும். இந்த நொடில போய் இப்படி ஒரு கொலபாதக செயல் செய்யனுமா?னு மனபோராட்டத்துல தவிப்பாரு. ஆனா கடைசில கடமை தான் பெரிசு!னு பட்டனை அமுக்கிடுவாரு. குண்டு நேரே ஒரு ஜப்பானிய பிரசவ ஆஸ்பத்திரில போய் விழும். ஒரு சோகமான ஜப்பானிய மொழி பாடல் பேக்ரவுண்டு மியூசிக்கோட படத்தை முடிச்சுடுவாங்க.
- மேலே சொன்ன மாதிரியெல்லாம் அள்ளி விட்டு லெவல் காட்டனும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா? :)
என்ன செய்ய, என் உலதரம் எல்லாம் போன வாரம் போட்ட அனகோண்டா(ஆத்தாடி, எம்மாம் பெரிய்ய பாம்பு), முந்தின வாரம் போட்ட ஸ்பைடர்மேனோட தான் இன்னும் இருக்கு.
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
ஜென்டில்மேன் பட ஹுட்டிங்குக்கு நான் பத்தாவது படிக்கும் போது ஷங்கர் வந்தாரு.முதன் முறையா அப்ப தான் ஒரு படபிடிப்பை நேர்ல பாத்தேன். பாரதி படத்துல என் தம்பி ஒரு கேரக்டர் ரோல் செஞ்சான். மூனு நாள் படபிடிப்புக்கு மொட்டை எல்லாம் போட்டுகிட்டான். என் தூரத்து சொந்தகாரர் ஒருவர் வடபழனில துணை நடிகர் ஏஜண்டா இருக்கறதா அம்மா சொல்வாங்க. அவ்ளோ தான் நம்ம தொடர்பு.
துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, "கும்படறேன் எஜமான்!" போன்ற நாலு பக்க வசனம் பேசி, நயந்தாரா கூட நடிக்க நான் தயாரா தான் இருக்கேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கரான். இதுனால சினிமா துறை முன்னேறாதா என்ன?
10a) தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவலைகிடமா இருக்கு. இப்படியே பார்முலா படங்களும், "என் பின்னாடி டோட்டல் தமிழகமே இருக்கு!" போன்ற வசனங்களுமா வந்தா மக்கள் டிவிடில கூட படம் பாக்க பயப்படுவாங்க. நடக்கறத தான் காட்டுறோம்!னு சப்ப கட்டு எல்லாம் இனி செல்லாது. தமிழக டெக்னீசியன்கள் மூளகாரங்க. திரு, ரவிசந்திரன், சாபு சிரில், போன்றோரை வீணடிக்கற மாதிரி மொக்கை படங்கள் எடுக்ககூடாது.
10b) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப நல்லா இருக்கும். வாரம் மூனு பட விமர்சன பதிவுகளுக்கு பதில் கோலங்கள் அபியின் பேத்திக்கு காதுகுத்து!னு சிலர் பதிவு எழுதலாம். ஆனா துணை நடிகர்கள் எல்லாம் என்ன செய்வாங்களோ? அவங்களுக்கு எல்லாம் தினப்படி சம்பளம், பேட்டாவாமே! :(
எனக்கு தெரிஞ்சு எல்லா மக்களும் இந்த சங்கிலிய இழுத்தாச்சு.அதனால தமிழ்மண நிர்வாகிகளை இந்த டேக்கை எழுத கூப்ட்டுக்கறேன்.
பாவம்! தமிழ்மண நிர்வாகிகளை பாண்டிசேரி வாசக கண்மணிகள் கூட கூப்டலை. :)
45 comments:
me the first:):):)
//சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல//
athile Kamalullu dupe pottathu Riyazkhan. theriyumillai? appuram enna paarattu vendi kidakku??
pokuthu, nallave unmaiyai ezuthi irukinga! :P:P:P:P:P
Santha Sakkubai kalathile piranthutenu othukitingale, athuve perisu! :P:P:P
//குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)//
பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி, இன்னைக்கு அண்ணன் வீட்ல அம்மாஞ்சி பஜ்ஜி:):):)
//அதுல வர ஒரு காட்சிய தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.
//
அதை மட்டுமா, புதிய பறவை, சிட்டுக்குருவி பாட்டயும்கூட சூப்பரா கலாச்சிருப்பாங்கலே, வாயத் தொடச்சிக்கிட்டு:):):)
//ஆமா, விஷாலுக்கும் நயனுக்கும் ஏதோ கிசுகிசுவாமே! நிசமா? ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்//
அத திரிஷா பக்கம் திருப்பிவிட்டு ரொம்ப நாளாகுதுண்ணே.
//கோக்க கோலா ப்ரவுனு கலருடா!
என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்
//
அக்கா இல்லேங்குற தைரியத்துல இப்படில்லாம் பாடறீங்க:):):) எங்க அக்காப் பையன் கூட 'சரக்கு வெச்சிருகேன்' பாட்ட கேட்டுத்தான் தூங்கினான்:):):)
//என்ன செய்ய, என் உலதரம் எல்லாம் போன வாரம் போட்ட அனகோண்டா(ஆத்தாடி, எம்மாம் பெரிய்ய பாம்பு), //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உலக சினிமாதான், உலகத்தரம் வேண்டாமே:):):)
உவ்வே, எனக்கு அந்த அனகோண்டா பாம்பை பாக்க பிடிக்கலை:(:(:( ஒடனே, நரசிம்மா முழுசா பாக்க முடிஞ்சிதான்னேல்லாம் கேக்கக்கூடாது சொல்லிட்டேன்:):):)
//பாரதி படத்துல என் தம்பி ஒரு கேரக்டர் ரோல் செஞ்சான். //
முழுசா சொல்லுங்க
துண்டை கக்கத்தில் வைத்து கொண்டு, "கும்படறேன் எஜமான்!" போன்ற நாலு பக்க வசனம் பேசி, நயந்தாரா கூட நடிக்க நான் தயாரா தான் இருக்கேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கரான்//
அண்ணியும் நானும் சேர்ந்து ஒரு படம் எடுக்கறோம், அப்ப உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும். என்ன சூரியா தான்(உங்க சூரியாண்ணே)பைனான்ஸ் பண்ணுவான், அப்போ நயன்தாரா வயசென்ன இருக்கும்னு கூட்டி கழிச்சி கணக்குப் போட்டுக்கங்க:):):)
//பாவம்! தமிழ்மண நிர்வாகிகளை பாண்டிசேரி வாசக கண்மணிகள் கூட கூப்டலை//
சாமி, எனக்கொரு விஷயம் தெரிஞ்சாகனும், யார் அந்த பாண்டிச்சேரி பதிவர்கள்? எப்போ பார்த்தாலும் எல்லாரும் ரவுண்டிக் கட்டி கலாய்க்கறீங்க:):):)
//சீரியசா பதில் சொல்லனும்னா, ஆளவந்தான்ல ரெண்டு கமலுக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் பைட் தான். ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு. எந்த ஆங்கில படத்திலிருந்து சுட்டிருந்தாலும் அத அப்படியே இங்க காட்டற திறமை வேணுமில்ல//
super.அப்போ அந்தப் படத்தை முழுசா பாத்தீங்களா?
//கஜேந்திரா!ன்னு ஆஸ்காருக்கு தேர்வாக வேண்டிய ஒரு கேப்டன் படம். அதுல போலிஸா வர ராதாரவிக்கு கஜா எப்போ கேட்டாலும் ஒரு கோடாலிய தூக்கி வீச வேண்டியது ஒன்னு தான் பொறுப்பு. ஒரு சீன்ல நடு ஏரியிலிருந்து கிட்டதட்ட ரெண்டு கிமீ இருக்கும். கஜா இந்தா பிடி!னு கரையிலிருந்து நம்ம ராதாரவி கோடலிய வீசுவாரு பாருங்க! அடடா என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)
//
அண்ணே, நீங்க நரசிம்மா பாக்கலையா? எப்போதான் அறியாமை இருளுல இருந்து வெளிய வர்றதா உத்தேசம்:):):)
எத்தனை நாளுக்கப்புறம் என்ன பதிவு எழுதினாலும் அதே கலக்கல் தான்...
\\
தேவர் மகன்ல ரேவதி வாய தொறந்தா வெறுங்காத்துதேங் வருது!னு சொல்வாங்க. ஆனா இந்த படத்துல நடிச்ச அந்த அம்மா வாய தொறந்தா ஒரே பாட்டா கொட்டுது. செம கொத்து கொத்திட்டாங்க. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேனே!
\\
முதல் அனுபவம் ரொம்ப நல்லா இருந்திருக்கும் போல...;)
\\
தெனாலில ஜோ-தேவயானி-கமல் வெச்சு செமையா கலாய்ச்சு இருப்பாங்க.
\\
ஆமா...:)
\\
கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு
\\
இது சூப்பரு...:))
எனக்கும்தான் இதுவரைக்கும் ஷ்ரேயாவை நான் வேறெந்தப்படத்துலயும் இவ்வளவு நடிச்சு பாத்ததில்லை...;)
\\
அண்ணே, நீங்க நரசிம்மா பாக்கலையா? எப்போதான் அறியாமை இருளுல இருந்து வெளிய வர்றதா உத்தேசம்:):):)
\\
இந்தப்படத்துக்கப்புறம் நான் விஜகாந்த் என்கிற நடிகரையே மறந்துட்டேன்...:)
அம்பி,
உங்க பாணியில் நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.
//அதுக்கப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படம். எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார். //
:)))
//குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு//
ootaanda poga singa paathaiye select panna vambi maamaku je..
//நாயகன், சின்ன வயசுல தென்பாண்டி சீமையிலே! கேக்கும் போது என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.//
meeku ipo antha songa ketalaum eyela water kammings
//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கஜேந்திரா//
elo..2011 mudhalvaraye nakkal adikareengala..autolam ilaannan meesaiye thattiye mattera mudichiruvaru..usaaar
//ஜென்டில்மேன் பட ஹுட்டிங்குக்கு நான் பத்தாவது படிக்கும் போது ஷங்கர் வந்தாரு//
ithula intha 7vai,seyapaduporul, vaakiyam maaridicha..ila neenga pathavathu padikara scene gentlemanla varatha paaka shankar vanthara??? :D :D
LOL. neenga kalaaikkunga(kalaaichitte kalakkunga )!
//- மேலே சொன்ன மாதிரியெல்லாம் அள்ளி விட்டு லெவல் காட்டனும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா? :)//
இந்த ஒரு வரி போதும்டா!! :))
ரொம்ப ரசிச்சேன்: //எம்ஜிஆர் பட்டய கிளப்பி, லவங்கத்தை லவட்டி, சோம்பை சுவைத்திருப்பார்// அம்பி டச்சு! (ஏன் இந்தியன் இல்லயான்னு கேக்க வேண்டாம்).
//என்ன டெக்னாலஜி? என்ன கிராபிக்ஸ்? :)// எங்கள் அண்ணன் படத்தை கேலி செய்ததற்கு போராட்டம் தொடங்கப் போகிறோம். முதற்கண், நயந்தாரா, விஷால் சேர்ந்தெடுத்த படங்கள் ரிலீஸ்.
//மூனு நாள் படபிடிப்புக்கு மொட்டை எல்லாம் போட்டுகிட்டான். என் தூரத்து சொந்தகாரர் ஒருவர் வடபழனில துணை நடிகர் ஏஜண்டா இருக்கறதா அம்மா சொல்வாங்க// வடபழனி, மொட்டை கனெக்ஷன்?
//எனக்கு தெரிஞ்சு எல்லா மக்களும் இந்த சங்கிலிய இழுத்தாச்சு// இத்தனை வருடங்களாக வெற்றிகரமா சங்கிலியில மாட்டிக்காத என்னையவே... அவ்வ்வ்வ்!
அம்பி சினிமாவத்தவிர வேற எல்லாம் நல்லா கவனிச்ச மாதிரி இருக்கு. பையனுக்குப் பேரு வேற சூர்யா.
இதில் சினிமாப்பாட்டு பாடி தூங்க வைக்கிறதா. தங்ஸ் என்ன செய்யறாங்அ கண்டுக்காம:)
அதென்ன தம்பி ரோல்??விளக்கமச் சொல்லக்கூடாதோ.
வழக்கம்போல கலக்கல் :)
//பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன்.//
உணர்ச்சி கொப்பளிச்சதோ இல்லீயோ, இன்னிக்கி உனக்கு வேற ஏதோ கொப்பளிக்கப் போகுது ராசா! :)
ஆஸ்கர் விருதுக்குரிய தமிழ்ப்படங்கள் சிலவற்றையாவது குறிப்பிட்டு இருக்கலாம்! கடமை தவறி விட்டாய் அம்பி! :)
//பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன்.//
வாய் கொப்பளிக்கிறது கேள்விப் பட்டிருக்கேன். எப்படிய்யா உணர்ச்சியை கொப்புளிக்கிறது? :-))
ஹைய்யோ ஹைய்யோ...
அம்பி,
குழந்தைக்குப் பாடற தாலாட்டா இது?
இதைகேட்டுத் தூங்கும் ஜூனியர்....
அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமப் பொறந்துருக்கு:-)))))
நயனுக்கு அம்மா ரோல் எனக்குக் கிடைக்குமான்னு கேட்டுப்பாருங்க. அப்ப நீங்க அங்கே வந்து 'கும்புடறேம்மா'ன்னு டயலாக் பேசலாம்:-)))
//கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)//
LOL
நல்ல பதிவு
//சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது தான் நல்லது. //
சான்ஸே இல்ல அம்பி!
ரொம்ப ரசிச்சேன்!
//எத்தனை நாளுக்கப்புறம் என்ன பதிவு எழுதினாலும் அதே கலக்கல் தான்...//
எந்தவித மறுப்பும் இல்லாம க.பி.வ.மொ!
//கோக்க கோலா ப்ரவுனு கலருடா!
என் அக்கா பொண்ணும் அதே கலருடா!னு நேத்து பாடி ஜுனியரை தூங்க வெச்சேன்.
///
இதுக்கு தங்கமணியோட ரெஸ்பான்ஸு என்ன???????
(அனேகமா குக்கர் மூடி பறந்திருக்கும் !)
வழக்கம் போல கலக்கல் அண்ணாச்சி :))
//ஏன் தான் என் வயிதெறிச்சலை கொட்டிகாறானோ இந்த விஷால்.///
ரொம்பவே கொட்டிக்கரானுவோ!???
வாரா வாரம் திக்திக்குன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிது இந்த வாரம் என்ன சேதின்னு??
:))))
i dont know where i came across this tag. recently i came across reading this tag in blog world. After a long time in your page. i like your occupation describtion. i used to call my IT frineds - pothan thatra vella pakura pasangala. you had used it differently but liked that also
//குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.//
ஜுக்கு ஜுக்கு ஜூன்னு அடிப்பட்ட நாய் கால இழுத்து இழுத்து நடப்பது போல் பின் பக்கத்த ஆட்டி ஆட்டி போவாங்களே அதுக்கு?:))))
(இதுக்குமேலயும் ஸ்ரேயா உங்களுக்கு புடிக்கும்?))
//அம்மணியும் கண்ண கசக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை அமீர்? :)//
உங்களால செய்ய முடியாத்தை அமீர் செஞ்சு இருக்கார் :) விடுங்க பாஸ்!
எத்தனை நாள் உங்கள் அழவிட்டு இருப்பாங்க!!!
//ஒரு பைப்பை வெச்சுகிட்டு நந்து கமல் ரேஞ்ச் காட்டுவாரு.//
செல் போனை வெச்சுக்கிட்டு தான் ரேஞ்ச் பாக்க முடியும் பைப்பை வெச்சுக்கிட்டும் பாக்க முடியுமா?
//கடைசியா தங்கமணியுடன் சென்னை சத்யத்துல பாத்த சிவாஜி. பக்கத்துல தங்கமணி இருந்ததால ஷ்ரேயாவின் உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பை வாய்/மனம் எல்லாம் திறந்து பாராட்ட முடியாத துர்பாக்கியசாலி ஆயிட்டேன். குறிப்பா வாஜி! வாஜி! பாட்டுல ஒரு கட்டத்துல வாஜிஜிஜிய்ய்ய்!னு இழுப்பாங்க பாருங்க, அதுக்கே டிக்கட் காசு சரியா போச்சு.(இன்னிக்கு செமையா இருக்கு எனக்கு). :)//
அம்பி! அப்ப படம் ஓடு ஓடுன்னு ஒடினதுக்கு இதுதான் காரணமோ?
vaajiikku unga veetula paathiram ellam pala dhisaigalla parandhirkanume.adipadama thappichhingla??? junior ambikku naaku mukka paatu pudikallaya?aana adhe madhiri dance adiikitte thoonga vekkardhu konjam kashtam try pannunga...taare zameen par padam madhiri endha padaathukkum ippadi theatrea azhuthu naan parthadhilla.worth many an oscars for the sensitive portrayal.cinemannadhum a wednesdaynnu oru padam konjam serious movie pathuttu sollunga!!!!
nivi.
வாங்க ராப், நீங்க தான் பஷ்ட்டு (வேற யாராவது வர முடியுமா என்ன?)
பஜ்ஜியா..? நல்லா கொளுத்தி போடறீங்க பா! :))
ராப், எனக்கும் யாரு அந்த பாண்டி பதிவர்கள்?னு தெரிஞ்சே ஆவனும். அதான் சீண்டி விடறேன். :p
@கீதா மேடம், நல்லா படிங்க, சாந்த சக்குபாய் டிடில போட்டாங்க!னு தான் சொல்லி இருக்கேன்.
வாங்க தமிழன்(கறுப்பி), உங்கள் பாராட்டுக்கு நன்னி.
மிக்க நன்னி கோவி அண்ணா. :)
என்னா கில்ஸ், ரெம்ப மகிழ்ச்சியா இருக்க போல, எப்போ தல தீவாளி? :p
மிக்க நன்னி ஆ-ரம்பம் (உங்க பேரு படிக்கும் போது மைக்கேல் மதன காமராஜன் பாட்டு தான் நினைவுக்கு வருது) :D
கொத்தண்ணா, ஏதோ விவகாரமா சொல்லி இருக்கற மாதிரி தெரியுது. :)
வாங்க கெக்கேபிக்குணி, வடபழனிக்கும் என் தம்பிக்கும் எந்த கனக்ஷனும் இல்ல. எங்க ஊர்ல ஹூட்டிங்க் வந்தாங்க, அப்ப ஸ்கூலில் என் தம்பியை செலக்ட் பண்ணாங்க. அவ்ளோ தான். :)
வாங்க வல்லிமா, அது ஒரு சின்ன ரோல் தான், ஆனா வசனம் எல்லாம் பேசுவான். கொஞ்சம் எடிட்டிங்க்ல போயிந்தே! :)
மிக்க நன்னி சென்ஷி. :)
கேஆரெஸ், அந்த கணக்கெல்லாம் அன்னிக்கே செட்டில் ஆயிடுச்சு. :)
வாங்க Sridhar, கோபம் கொப்பளிக்க!னு ஒரு சொல்லாடல் கேள்விபட்டு இருப்பீங்க தானே!
பெரிய எழுத்தாளர் உங்களுக்கு தெரியாததையா நான் சொல்ல போறேன்? :)))
துளாசி டீச்சர், ஆமா! என் தங்க்ஸும் கடுப்போட நீங்க சொன்னதையே தான் சொல்ல்றாங்க. என்னது நயனுக்கு நீங்க அம்மா ரோலா? அக்கா ரோல் இல்ல கேப்பீங்கன்னு நினைச்சேன்.
மிக்க நன்னி கயல்விழி.
பாராட்டுக்கு நன்னி பரிசல். உங்க வீட்டுப்பக்கம் தவராம வரேன், ஆனா கமண்டறதில்லை. நீங்க பதிவர் வட்டத்துல சிக்கி இருக்கீங்களா? என்ன சொல்றதுன்னு தெரியலை, அதான். :)))
வாங்க ஆயிலு, குக்கர் மூடி இல்ல, குக்கரே பறந்தது. ஆஹா, நீயும் வயுத்துல நெருப்ப கட்டிட்டு இருக்கியா? :))
மிக்க நன்னி Known stranger, புருனே சுல்தான் சவுக்யமா? :p
என்ன குசும்பா, சமையல் சாப்பாடுன்னு ரெம்ப சந்தோஷமா இருக்க போல, இனிமே தான் இருக்கு உனக்கு தீவாளி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :p
உஷாஜி, இதை பத்தி நான் மேற்கொண்டு வாய தொறக்கறதா இல்லை. (சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடுச்சு) :))
வாங்க நிவி, வாஜிக்கு வீட்ல செம டோஸ் விழுந்தது. :p
நாக்கு முக்க வீட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது. :)
வெட்னஸ்டே படமா? ஓசில டிவிடி கிடைச்சா கண்டிப்பா பாக்கறேன். :)மிக்க நன்னி.
Junior'lam vanthaachu so no nayan :) Vashal'a naan paarthukuren ;)
Ambi,
Super! I think 'Sense of Humour' is available a lot in your family. Athu yeppadeenga ithu mathiri alli kotti yengalai sirikka vaikareenga... Good work! Keep it up! Laughed at many places.. for example your first movie experience.
ingayum indha kootha! nadakattum!
epdi irukeeenga?
@kk, unakkum Junior vanthaachaa? very good very good! :p
@பாலாஜி, ரெம்ப புகழ்றீங்க, கூச்சமா இருக்கு. பாராட்டுக்கு மிக்க நன்னி . :)
வாங்க தினேஷ், எப்படி இருக்கீங்க..?
ambi enachu enga adutha post ethane thada unga blog ku vandhu neenga pudhusa onum podalanu pathu emanthu porathu. "kanden pudhu posti nu nan en rangamanikita solla vendama!!!!!!!!!"
@உத்ரா,
போட்ட பதிவுக்கே உங்க கமண்டை கானோம், :))
சரி கோச்சுகாதீங்க, ஒரு வாரம் vacation. இதோ post போடறேன். :))
mannichukonga ambi inime en comment than firstuuuuuu. ama thaye vitrunu solra varaikum potudren
Post a Comment