காட்சி#1: பொதுவாக நம்மூர் பிரதம மந்திரிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்யும் போது, தம் விமான பயணத்தில் போர் அடிக்காமல் இருக்க, "ஆமா! ஆமா! பெரியய்யா! ஆமா! ஆமா! சின்னய்யா!" என கே. எஸ். ரவிகுமார் படங்களில், கையது கட்டி, வாயது பொத்தி வரும் சில கேரக்டர்களை போல, சில பேமஸ்(?) பத்திரிகையாளர்களை தம்முடன் அழைத்து செல்வது வழக்கம். அவங்களும் ஓசில விமானத்திலும் கூட பஜ்ஜி போண்டா கிடைக்குதேன்னு பிரதமர் கிட்ட, "நீங்க பள்ளி படிக்கும் போது டாவடித்த அனுபவம் உண்டா? நாக்கு முக்க சாங்க் கேட்டாச்சா?"னு எல்லாம் மொக்கை போட்டு வருவார்கள்.
அது போல தற்போதைய பிரதமர் என அழைக்கப்படும் மன்மோகன் சிங்க்ஜியுடனும் ஒரு ஜால்ரா கோஷ்டி விமானம் ஏறி அமெரிக்கா, பிரான்ஸ்(ராப்பை பாத்தீங்களாப்பா?) சுத்தி பாத்து வந்தார்களாம். நடு வானில் நம்ம பிரதமரும் பொறுப்பா பேட்டி குடுக்கறத டிவியில காட்னாங்க. ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகாவிலும் நடந்த கலவரங்கள் தான் தம் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தபட வைத்த நிகழ்வுகள்னு நம்மாளு ஒரு பிட்டை போட்டாரு. அப்ப பெங்களுர், ஐதரபாத், அஹமதபாத், டில்லினு பொட்டலம் பொட்டலம் வெச்சாங்களே அதெல்லாம் உப்பு பெறாத விஷயங்களா?
'பொருளாதார நிபுணர்' மன்மோகன் சிங்கை கூட அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே!னு முதல்வன் படத்து வசனம் தான் நினைவுக்கு வந்தது.
காட்சி#2: டில்லியில கனாட் ப்ளேஸ் என்ற முக்ய இடத்துல நீங்கள் நடந்து போகும் போது "என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை! என் தங்கமணிக்கு சுளுக்கு"னு அழகா வெள்ளகார துரை கணக்கா இங்கிலிபீசுல நைச்சியமா பேசி பணத்தை கறந்ருவாங்களாம். சில கொடாகொண்டர்கள், சரி வா! நானே அந்த மருந்தை வாங்கி தரேன்!னு சொல்லி மருந்தகத்துக்கு கூட்டி போனாலும், இந்த லகுடுபாண்டிகள் அசருவதில்லையாம். ஏன்னா அந்த கடைகாரர் கூட இந்த பயலுவ ஏற்கனவே ஒரு டீல் போட்ருப்பாங்களாம். சில ஏமாந்த வெள்ளகார துரைங்க ஏடிஎம்ல பணம் டிராப் பண்ணி எல்லாம் குடுத்து ஏமாந்து போயிருகாங்களாம். மேலும் தெரிஞ்சுக்க இக்கட சூடுங்க.
முத்துலட்சுமியக்கா உஷாரா இருந்துகுங்க. உங்களுக்கு இளகிய மனசு. :)
காட்சி#3: இளங்கோவன் "காமராஜர் ஆட்சி அமைப்போம்"னு உதாரா பேட்டி குடுக்கறத டிவில பாத்தேன். இதையே தங்கபாலு அணியினரும் சொல்றாங்க, ஜி.கே.வாசன் அணியும் சொல்றாங்க. (வேற ஏதாவது அணி இருந்தா (கண்டிப்பா இருக்கும்) பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)
சத்யமூர்த்தி பவனில் உள்ள டாய்லெட்டில் காணாம போன சொம்பு(சிம்பு இல்ல) பத்தி விசாரிக்கறத்துக்கே டெல்லியிலிருந்து மேலிட பார்வையாளர் வர வேண்டி இருக்கு. இதுல என்னத்த ஜெயிச்சு? என்னத்த அமைச்சு?என்னது? சத்யமூர்த்தி பவனில் டாய்லெட்டே கிடையாதா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி. :)
காட்சி#4: அக்டோபர் 2 முதல் பொது இடங்களில் தம்மடிக்க தடைன்னு எங்க ஆபிஸ்ல கூட மெயில் அனுப்பினாங்க. ஏன்னா சிட்டிக்கு நடுவுல எம்ஜி ரோட்டில் தான் எங்க ஆபிஸ். அதனால ஆபிஸ்ல இருக்கற பல பிகர்கள், ஹாயா பில்டர் பிடித்து கொண்டே அமெரிக்க பொருளாதாரம் பத்தி கதையடிக்கும். இதுனாலேயே பல கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது. இனிமே.....ஹிஹி, அன்புமணி அய்யாவுக்கு நன்றி ஹை!
பொது இடம்னா இது, இது, இவங்க எல்லாம் ஃபைன் வசூலிக்கலாம்!னு சொல்லி இருக்காங்க. ரோட்ல குடிக்ககூடாது! பஸ் ஸ்டாப்புல குடிக்க கூடாதுன்னா நாங்க எங்க தான்யா குடிக்கறது? எங்களை கட்டுபடுத்த நாங்க என்ன ஆடுமாடா?னு புகை வண்டிகள் எல்லாம் போர்குரல் குடுத்து இருக்காங்க. :)
ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)
28 comments:
naan dhan firstaa
:)))
Kathir.
//அது போல தற்போதைய பிரதமர் என அழைக்கப்படும் மன்மோகன்//
:)))
Kathir
ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்) //
தங்கமணி எப்படிச் சாப்பிட்டாங்க, அந்த வெண்டைக்காயை! தலையில் அடிச்சுக்கணும் போலிருக்கு! :P :P:P
/(ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்) //
அனுபவத்தைச் சொல்லுங்க. வெயிட்டிங்! :)
வாங்க அம்பி அப்பா,
நுண்ணரசியல் கலந்து சும்ம பின்றீங்கப் போங்க.
சத்யமூர்த்தி பவனுக்குள்ள எல்லாம் சுத்தறீங்களே, அரசியல் பயிற்சி எதுவும் எடுத்துகறீங்களா? வடிவேலு கூட தேடிட்டிருக்ககராம் அறிக்கை எழுதிக் கொடுக்கிறதுக்கு நல்ல ஆளா :-))
இட்லி மாவுலேந்து வெண்டைக்காய்க்கு பிரமோஷன் ஆயிருக்கீங்கப் போல சீக்கிரமா பருப்பு உசிலி, மோர்க் குழம்பு, அக்கார வடிசல்ல்னு பிரமோஷன் வாங்க வாழ்த்துகள் :-))
//வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். //
basic_kae theriyadha kuzhandhai!! yappa!! venumnae saidhu irupeenga neenga sir.pavam thangamani nilamai.:D
innum Vaiko interview parkalaiyo!
//ஒரு சட்டம் போடும் போது, தெள்ளத்தெளிவாக வரைமுறைகளை வகுத்து விட வேண்டும். இல்லாட்டி இப்படித் தான் வெண்டைகாயை நறுக்கி விட்டு தண்ணீரில் கழுவின மாதிரி ஆயிடும். (ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)//
நல்ல உதாரணம். எனக்கும் உண்டு இந்த அனுபவம் :)
அம்பி, அந்த வெண்டைக்காய் கறி எனக்கு இந்திய அரசிலையையே நினைவுறுத்துகிறது.
சரியான உதாரணம் தான்.
ஆனால் உங்களால சாப்பிட முடிந்ததோ:)
அம்பி எனக்கு இளகிய மனது இருந்து என்ன செய்ய? இப்படி ப்ரச்சனையில் நான் மாட்டிக்க வழியே இல்லை.. எங்கவீட்டு நிதி அமைச்சர் மணி "மணி" மேட்டர்ல கெட்டியாக்கும் ..
இப்படி அடிக்கடி கிச்சன் அனுபவத்தை எழுதி பலபேருக்கு கிச்சன் டிப்ஸ் குடுக்கறீங்க.. :)
"அப்ப பெங்களுர், ஐதரபாத், அஹமதபாத், டில்லினு பொட்டலம் பொட்டலம் வெச்சாங்களே அதெல்லாம் உப்பு பெறாத விஷயங்களா? "
இந்த மாதிரி கேள்வி கேட்டா உங்களை இந்து தீவிரவாதி அப்படின்னு சொல்லிடுவாங்க"
அம்பி, புது பிசினஸ் வாய்ப்பு! சென்னைல ஆக்ஸிஜன் சுவாசிக்கன்னு ஒரு கடை திறந்தாங்க. அந்த மாதிரி ஒரு இடம் தொறக்கலாம் - புகைவண்டிகளுக்கு!
enakku a.mani amaichar perlla kobangal irundhalum indha vishayathil punniyathai katti kondar.neenga solra madhiri clearaa sollidanum illana indha kuzhapathaye sadhagamakki kolvargal pughai vandigal.a.mani ayyaa!!!!seivadhi thirundha (pugaivandikkum)seiyungal.ungalai pala ullangal vazhttum.
nivi.
ayyo vara vara delhiiyyil shopping poga kooda bayamayirukku.cp,sarojini nagar,greater kailash ,gaffarmarket elllam peak shopping destinations.why kill innocent people in the name of religion?endha kadavulum idhai virumba mattar.my heart bleeds when i see those victims.
ambi,congrats for getting promoted to bhindi.seekiram sanjiv kappoor madhiri book podareengla.
nivi.
enakku a.mani amaichar perlla kobangal irundhalum indha vishayathil punniyathai katti kondar.neenga solra madhiri clearaa sollidanum illana indha kuzhapathaye sadhagamakki kolvargal pughai vandigal.a.mani ayyaa!!!!seivadhi thirundha (pugaivandikkum)seiyungal.ungalai pala ullangal vazhttum.
nivi.
Ambi,
Regarding beggars:
This problem exists in every other city. I have seen many in Chennai
வாங்க கதிர், நீங்க தான் பஷ்ட்டு.
கீதா மேடம், தங்கமணி வீட்ல இல்லாத நேரம் தான் இந்த கூத்து எல்லாம். :p
கொத்ஸ், உங்களுக்கு இல்லாத அனுபவமா? :))
வாங்க Sridhar, நுண்ணாரசியலா? அப்படி எதுவும் இல்லையே?(இருந்தாலும் சொல்ல மாட்டோம்ல நாங்க). அக்கார அடிசல் உங்க பேவரிட் போல. :))
எஸ்கேஎம், வேணும்னு எல்லாம் செய்யலை.
வருகைக்கு நன்னி நசரேயன்.(உங்க பெயருக்கு என்ன அர்த்தம்..?)
மது, அதானே, புத்திசாலிதனமா செய்யறதா நினைச்சு கையை சுட்டுகிட்ட அனுபவம் ஆச்சே! :))
வாங்க வல்லி மேடம், ஒரு வழியா வதக்கி சாப்டாச்சு. :))
முத்தக்கா, இப்படி எல்லாம் நீங்க சொன்னா நாங்க நம்மிடுவோமாக்கும்? :p
ஏன் பாபு, ஏன் இந்த வெறி? நீங்களே பாயிண்ட் எடுத்து குடுப்பீங்க போல..? :)))
இது கூட நல்ல ஐடியாவா இருக்கே திவாண்ணா. :)
வாங்க நிவி, உங்களுக்கு டெல்லியா..? பல தடவை, பாவம் இந்த டெல்லி மக்கள்!னு பீல் பண்ணீ இருக்கேன்.
என்னது புக்கா? சரி தான். :D
சுவாமி நாதன், நீங்க சொல்றது ரொம்ப சரி. இங்கயும் இருக்காங்க.
பிரதமரும், கமல்நாத்தும் கலந்துக்கிட்ட ஒரு நிகழ்ச்சியல அவங்க ஆடாம அசையாம இருந்தத வெச்சு மூணு நாலு நிகழ்ச்சிகளில் இங்க கலாய் கலாய்ன்னு கலாச்சிட்டாங்க. அதுவும் கமல்நாத் சேன்சே இல்ல:):):)
//ராப்பை பாத்தீங்களாப்பா//
நீங்க வேற, நான் என்னமா பிசியா இருக்கேன்?!?!?! இவங்களை சந்திக்கறதுக்கெல்லாம் நான் அப்பாயின்மென்ட் கொடுக்கறதில்லை, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................
//நான் தேய்த்து குளிக்கும் ஹமாம் சோப்(நேர்மையான சோப் யு நோ..?) போல நாளும், வாரங்களும் கரைவதே தெரிவதில்லை//
இதுக்குப் பேர்தான் சந்துல சிந்து பாடுவதா? நீங்க குளிக்கறேன்னு சொல்றதை நாங்க நம்பணும்னு இவ்வளவு முயற்சி எடுத்த அண்ணன் வாழ்க, வாழ்க:):):)
// இதுனாலேயே பல கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது//
தனியொருவனுக்கு கடலை வருக்க முடியவில்லையெனில், தம்மையே அழித்திடுவோம்:):):)
//எங்களை கட்டுபடுத்த நாங்க என்ன ஆடுமாடா//
எனக்கு அது சீரியஸா எழுதப்பட்டிருக்கான்னே சந்தேகம், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கிட்டத்தட்ட முக்காவாசி வளர்ந்த நாடுகளில் இந்தத் தடை ஏற்கனவே அமுலுக்கு வந்தாச்சு. இதன் காரணமாத்தான் இங்க நாங்கெல்லாம் நிம்மதியா குளிர்கால இரவுகளிலும் சாப்பிட உணவகங்களுக்கு செல்ல முடியுது. இதுக்கு ஏன் இந்த சீன் போடறாங்கன்னே புரியல:):):)
//(ஒரு தடவை முயன்று பாருங்களேன், என் அனுபவத்தில் சொல்கிறேன்)//
:):):)
nalla flowla ezhuthi irukka...good one kudos.
வாங்க ராப், என்னடா ஆளை காணோம்னு பாத்தேன், ஒரு வேளை உங்க மாமியார் வீட்டுக்கு போயிட்டீங்களோன்னு நினைச்சேன். :p
அவங்க ரெண்டு பேரையும் அங்கயும் கலாய்ச்சாங்களா? அது பத்தி முடிஞ்சா ஒரு பதிவு போடுங்க. :))
வளர்ந்த நாடுகளில் இந்த சட்டம் ஏற்கனவே இருக்கா? வெரிகுட். இங்க என்ன நடக்க போகுது?னு பொறுத்திருந்து பாப்போம்.
@டுபுக்கு அண்ணே, வாங்க, ஏது ரொம்ப தூரம், அதுவும் ஒரே பீட்டரா இருக்கு..? :p
இந்த பொது இடங்களில் புகைக்க தடை சட்டம் சில வருடங்கள் முன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லையா? இப்போது மீண்டுமா?
enna vambi..anti congressa irukay post poora..ena matter..paal dubba enthara kai..politicsum adikuthay!!//கடலை மகசூலில் நான் கலந்து கொள்ள முடியாத அவல நிலை இருந்து வந்தது. இனிமே.....ஹிஹி, அன்புமணி அய்யாவுக்கு நன்றி ஹை!//
paathu saami..anbumaniku vs thangamani..no competion :))
கயலக்கா, சில வருடங்கள் முன்னாடியேவா? எனக்கு தெரியலை. அது பொது இடங்களில் அசுத்தம் செய்ய/துப்ப தடைன்னு நினைக்கிறேன்.
கில்ஸ், வாய்யா கில்ஸ், நல்லா கோர்த்து விடற நீயி. நாளைக்கு ஆயுத பூஜை வேற. :p
:)))
some 3 years back, I think there was a rule that you cannot smoke in public places like TShops, Roads, and Parks. This rule was in general.
I think this rule gives an insight view of places to smoke (Or cannot smoke).
Post a Comment