ரொம்ப நாளாவே சாரு பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தான் நேரம் கிடைச்சது.
இந்த அம்பி அப்படி என்னடா சாரு பத்தி எழுத போறான்?னு உங்களுக்கு இருக்கற ஆர்வம் ரொம்ப நியாயம் தான். தப்பு!னு எல்லாம் சொல்ல மாட்டேன்.
சாதகம் பண்ணியவர்களுக்கு சாரு ஒரு கைக்குழந்தை. மத்தவர்களுக்கு ஒரு முரட்டு பிள்ளை. ஆமாம்! சாருவை கேட்பவர் அப்படியே பரவச நிலைக்கு ஆட்பட்டுவிடுவார்னு பரவலா பேச்சு இருக்கு.
எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராக அமைப்பில் சாரு இருபத்திஆறாவது மேளகர்த்தாவா வராரு. சாரு ஒரு சம்பூர்ணம் ராகம். எப்படின்னா ஏழு ஸ்வரங்களும்(ச ரி க ம ப த நி) சாருவில் வருது. சாருவை தழுவி வந்தவங்களை ஜன்ய ராகம்னு சொல்லுவோம். தரங்கிணி, மாரவி, பூர்வதன்யாசி, சிவமனோஹரினு ஒரு லிஸ்டே இருக்குங்க.
திரைபடங்களில் இந்த சாரு ரொம்பவே வந்து போயிருக்காரு. வரிசையா நான் பாடல்களை சொன்னா அட ஆமாம்!னு சொல்வீங்க.
1) பீமா படத்துல வர ரகசிய கனவுகள் ஜல் ஜல். இந்த பாட்டுல த்ரிஷாவ பாக்காம கண்ண மூடிட்டு கேட்டு பாருங்க, சாரு தெரிவாரு.
2) வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே! பாட்டு நியாபகம் இருக்கா? என்ன படம் சொல்லுங்க பாப்போம்..? அதுவும் சாரு தான்.
3) ஆடல் கலையே தேவன் தந்தது! - ரஜினி நிஜமாவே நடிச்ச ராகவேந்திரா படத்திலும் சாரு தான்.
4) காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே - தம்பிக்கு எந்த ஊரு? இங்கயும் சாரு தான்.
5) ஏதோ ஏதோ - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.
6) கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?னு சாமில கேட்டதும் சாரு தான்.
பி.கு: சொல்ல மறந்துட்டேனே, எனக்கு சாருன்னா சாருகேசி ராகம் தான் நினைவுக்கு வரும். உங்களுக்கு எப்படி..?
46 comments:
ஹி..ஹி.. எனக்கு சாருன்னா, பெங்களூர்க்காரங்க செய்ற ரசம் தான் ஞாபகத்துக்கு வருது.. சாரு எப்புடி செய்யுறதுன்னு சமையல் குறிப்பு குடுத்துருக்கீகளோன்னு வந்தா...
:))
//5) ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.
//
இதில் பிழை உள்ளது... இப்பாடல் லேசா..லேசா படப்பாடல்..
சாருன்னு சொன்னதும் ஏதாவது பிகர்ன்னு நினைச்சா .இப்படி சொதப்பிட்டிங்க பாஸ் , 5வது பாடல் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் உள்ள பாடல் இல்ல லேசா லேசா படத்தில் உள்ளது .
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் - இந்தப் பாட்டு வந்த படம் "லேசா லேசா"
@ all நறுக்குனு குட்டிய நக்கீரர்களுக்கு,
தவறை பொறுத்தருளுக. உனக்கு 18 எனக்கு 20 படத்தில் வரும் ஏதோ! என்ற பாடல் தான் சாருகேசி ராகம்.
படத்தின் பெயரை மாத்தி போட்டு விட்டேன். ஐம் சாரி, இப்போ சரி பண்ணியாச்சு!
1) பீமா படத்துல வர ரகசிய கனவுகள் ஜல் ஜல். இந்த பாட்டுல த்ரிஷாவ பாக்காம கண்ண மூடிட்டு கேட்டு பாருங்க, சாரு தெரிவாரு.//ஏய்யா உன் குசும்புகளுக்கு ஒரு அளவே இலலையா :-) இனி கண்ணை திறந்துக் கிட்டுப் பார்த்தாலும் சாருதான் தெரிவாரு :-)))))))))))))
ஹி ஹி...ராகமா..:))?
ஆஹா.. எங்கேயோ போயிட்டீங்கண்ணா. :-)))
சாருன்ன உடனே எனக்கு எங்க கணக்கு சாரு தான் ஞாபகத்துக்கு வந்தார்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............................அண்ணே எனக்கு நேத்திக்கே பட்சி சொல்லுச்சி. அதான் கேட்டேன், நான் நெனச்ச மாதிரியே உங்க வேலையக் காமிச்சிட்டீங்க:):):)
/
Raghav said...
ஹி..ஹி.. எனக்கு சாருன்னா, பெங்களூர்க்காரங்க செய்ற ரசம் தான் ஞாபகத்துக்கு வருது.. சாரு எப்புடி செய்யுறதுன்னு சமையல் குறிப்பு குடுத்துருக்கீகளோன்னு வந்தா...
/
ரிப்பீட்டு
சாருன்னா என்னமோ சின்ன வயசு டாவைப் பத்தி சொல்லப் போறேன்னு வந்தேன். கவுத்திட்டியே!!
சூப்பரு...ஏன்ன தின்னவேலிக்காரவுகளுக்கு சாரு மேல இம்புட்டு அன்பு... :)
கலக்கிபுட்டீங்களே அம்பி....:))
இப்படி ஒவ்வொரு ராகமா போட்டுக்கிட்டு வாங்க...நல்ல கலெக்ஷன் கிடைக்கும். பின்னர் இசையின்பம் பதிவுல இந்த பாட்டுக்களை போடலாம் :))
////5) ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் - உனக்கு 18 எனக்கு 20. வேற யாரு சாரு தான்.
//
இதில் பிழை உள்ளது... இப்பாடல் லேசா..லேசா படப்பாடல்..//
ithu pizhai illai
"உனக்கு 18 எனக்கு 20" padathulla "ஏதோ ஏதோ ஒன்று" paatu irukku. venicela eduthu irupaanga. boatla paadikittu povaanga. :)
தலைப்பை பார்த்தப்பவே லேசா டவுட் வந்தது........
:))
Kathir.
:)
காதலின் தீபம் ஒன்று... அருமையான் பாடல்!
ஆடல் கலையே தேவன் தந்தது...
அந்தப் பாட்டிலேயே சாருகேசி ராகத்தைச் சொல்லி அம்பிகாவை அபிநயிக்க முடியாம அசந்துபோகச் செய்வாரு!
சாருன்னா அப்பேர்ப்பட்ட ஸ்பெஷல்தான்!
அம்மாஞ்சி,
உங்களுக்கு ஐ டி (IT) - ஐ தெரியுமா?
இதுதான் என்னோட அடுத்த பதிவு ! !
எதிர்வினை மாதிரி . . .
//எழுபத்திரெண்டு மேளகர்த்தா ராக அமைப்பில் சாரு இருபத்திஆறாவது மேளகர்த்தாவா வராரு. சாரு ஒரு சம்பூர்ணம் ராகம். எப்படின்னா ஏழு ஸ்வரங்களும்(ச ரி க ம ப த நி) சாருவில் வருது. சாருவை தழுவி வந்தவங்களை ஜன்ய ராகம்னு சொல்லுவோம். தரங்கிணி, மாரவி, பூர்வதன்யாசி, சிவமனோஹரினு ஒரு லிஸ்டே இருக்குங்க.//
ஹ்ம்ம்... இவ்ளோ மேட்டர்லாம் ஜாஸ்தி. ரெண்டு பாக்கெட் வேலி முட்டி அடிச்சிட்டுத்தான் படிக்கனும் உம்ம பதிவை.
இது வரைக்கும் தெரியாம இருந்தது, இப்ப தெரிஞ்சுடுச்சு!
Wow Thanks for the Information .
Kalakkarel Ambi Anna :)
saaru appadinna kannada la KUZHAMBU nnu artham
saaru vai ippadi kalaicchuteenga.
சாரு தானே??? நல்லாவே தெரியுமே, எங்க உறவுக்க்காரப் பெண் தான், கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாலேயே தெரியும்! :P :P :P :P :P
Charu (Sambhar) patri comment. Beeing in blore, I thought something about that ....
நீங்களுமா? நடத்துங்க..
கலக்கல்.
ஆடல் கலையே பாட்டு கானக்கந்தர்வனின் குரலில் சும்மா இழஞ்சு இருக்கும்.
ரெண்டுமே ஓரளவுதான் தெரியும்!
எனக்குச் சாருவை அவ்வளவாகத் தெரியாது (இது தலைப்பிற்கான பதில்!).
charunnathum charunivedithavoda writings pathi ezhudhi irukkeengalonnu ninachen.neenga solra charu romba azhagana,nalinamana charu.charukesi kalakkal ragam, mathapadi charuniveditha writings controversial.ennaku ennathukku sami vambu!!!!.vera charu telugula charunnna rasam.ulava charunnu oru vagai kuzhambu.ambi,charu azhagana ungal thozhiyin peyaro!!!!!!
nivi.
ungalukku pathil theriyaama kaekreengalonnu nenaichein.
gud post..!
BTW enakku charuhaasan thaan theriyum.
title pathtu ungala than yaro (read thangamani)sakkaiya saaru pulinjitaangalonu nenachen..aprum..sarunivethitava nakkaladichi potrukeengalonum thonithu..rendumila kadisila
amsamaaa saaru puzinju irukkeenga. parvaalayae, raaga lahari ellam solli kalakareenga...
naan modhaala sarunna udanae yaedo namba chaaru haasan pathi solreenga nenachaen..
ella paatumae dhool paatunga.
kittu mama
Un thangamaniyum paiyanum unnai saaru puliyama ,saru pathi post podra alavirkku unnai free_a vidrangala? mmmm...nadathu!nadathu!
@Syam:
blog close saidhuttu visiting & commenting mattumdhana ippo velai Naatamaikku? How are you doing? How is Mughil?
hello hello, idhellam unake over-a therila?? Indha sathan vedam odaradhu-nra phrase indha blog-ku porundhumo? ;)
yenaku charuhasan than gyabagam varum
http://anbudansheik.blogspot.com/
வாங்க ராகவ், உங்களுக்கு தெரியாத சாருவா? குறிப்பா?
இந்த புன்னகை என்ன விலை முத்தக்கா..?
பாலா, என்னது பிகரா? ஹிஹி, நல்லா கோர்த்து விடறீங்க பாஸ்.
திருத்தியமைக்கு ரொம்ப நன்னி யோசிப்பவரே.
வாங்க உஷாஜி, உங்களுக்கும் சாரு தெரியறாரா?
ராகமே தான் ராமலக்ஷ்மி மேடம்.
எங்கயும் போகலை, பெங்களூர்ல தான் இருக்கேன் மாரியாத்தா.
நையாண்டி நைனா,கணக்கு சாரா? ரொம்ப மாத்து வாங்கி இருப்பீங்க போல?
ராப், பட்சி சொல்லிச்சா? என்ன பட்சி மா?
வாங்க சிவா மாப்ளே! எப்படி இருக்கீங்க?
கொத்ஸ், நம்ம ஊர்ல எங்க சாருன்னு எல்லாம் பெயர் வைக்கறாங்க? உங்க டாவு பேரு என்னா?
மதுரையம்பதி அண்ணா, கலக்ஷன் போடும் எண்ணம் இருக்கு. பாப்போம்.
வாங்க நாதஸ், நீங்க தான் நம்ம செட்டு.
நன்னி விக்னேஸ்வரன்.
டவுட்டு வந்துச்சா கதிர்? :p
வாங்க தள, இந்த பதிவை எழுதும் போது நீங்க சொன்ன காட்சி தான் நினைவுக்கு வந்தது. பெரிய ரசிகரா இருப்பீங்க போல. :))
இளைய பல்லவன், இதுக்கு எதிர்வினை பதிவா? போடுங்க, படிக்கறேன். :)
வேலி முட்டின்னா என்ன Sridhar?
தெரிந்து கொண்டமைக்கு நன்னி பரிசல்.
You are most welcome Ramya. :)
வாங்க தமிழ் நெஞ்சம். சாருன்னா ரசம், கொழம்பு இல்லன்னு ராகவ் சொல்லி இருக்காரு பாருங்க. சரி விடுங்க, தெளிவா எடுத்தா ரசம், கலக்கி எடுத்தா குழம்பு.
கீதா மேடம், உங்களுக்கு கல்யாணம் ஆகரத்துக்கு முன்னாடியா இல்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகறத்துக்கு முன்னாடியா? :p
சுவாமிநாதன், நீங்க சொன்னபிறகு தான் எனக்கும் தோணிச்சு.
வாங்க தாமிரா.
நன்னி புகை தென்றல், யேசுதாஸ் குரல் இப்பவும் இழையுது. பெரிய ஆச்சர்யம்.
துளசி மேடம், உங்களுக்கே ஓரளவு தான் தெரியுமா? :))
உங்களுக்கே தெரியாதா சுந்தர்? :p
சாருன்னு எனக்கு யாரும் தோழி கிடையாது நிவி. எதுக்கு இந்த நாரதர் வேலை..?
ஆ-ரம்பம், அட ஆமா! சாருஹாசன் இருக்காரே.
வாய்யா கில்ஸ், உனக்கு எப்பவுமே இப்படிதான் தோணும்.
நன்னி கிட்டு மாமா. பாட்டுன உடனே உங்கள தான் நினைச்சேன்.
உண்மை தான், சாரு தான் புழியாறாங்க. உங்களுக்கு எப்படி தெரியும்?
வாம்மா உஷா, அந்த பழமொழி உன் பிளாக்குக்கும் பொருந்துமே. :p
Known stranger, ரொம்ப நாளா ஆளே காணோம்?
நன்னி பார்சா குமாரன்.
சாரு??
ஓ ராகமா.
நல்லவேளையாப் பார்த்து கிண்டல் பதிவு போடறதில அண்ணாக்கும் தம்பிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு:)
@வல்லி மேடம், ஆமா நான் ராகத்தை மட்டும் தான் சொன்னேன். :p
ambi,
Charu - ipadi pathadhum
manasil - azhaga oru malaiyala figure
thonithu enaku....
he he he.
nee nalla paiyan.Samatha ragam nu
eduthu solli puriya vechae...
Thanks ambi....
Thadam puralama iruka = un kite
kathukanam ambi....
With Love,
Usha Sankar.
வணக்கம் அம்பி. சௌதியில் இருந்து வந்த பிறகு இன்னிக்கு தான் உங்க வலையை பார்க்கிறேன்.
சாருகேசியில் இன்னும் பல பாடல்கள் இதோ:
1.மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
2. நடந்தாய் வாழி காவேரி - அகஸ்தியர்
3. நீயே கதி ஈஸ்வரி - அன்னயின் ஆணை
4.சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே - அந்த ஒரு நிமிடம்
5.அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவல்காரன்
6.மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
7.பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள்
8.அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆயிரம்
9.சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
10. நல்லதோர் வீணை செய்தே - மறுபடியும்
11.தூது செல்வதாரடி- சிங்காரவேலன்
12.கடோத்கஜா கலாதரா - பம்மல் சம்பந்தம்(இந்த பாடல் ஆரம்பமே அருமையான
கீர்த்தனை ஆடமோடி ஜலதேரா)
இன்னும் சில பாடல்கள் இருக்கு. டைப் அடிக்க சோம்பேறித்தனம்.
சாருன்னதும் நீங்க என்னமோ சாரு நிவேதிதா பத்தி தான் எழுதி இருக்கீங்களோன்னு நெனச்சேன்.
Post a Comment