Friday, September 12, 2008

நயன் தாராவுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கு காந்தி ஜெயந்தி நியாபகம் இருக்கா? காந்தி தெரியும்! யாரது ஜெயந்தி?னு எல்லாம் கலாய்க்க கூடாது. காந்தி ஜெயந்தியன்று எல்லா டாஸ்மார்க் கடைகளுக்கும் லீவு விட்டாலும் சில ஊர்களில் கடைக்கு பின்னாடியோ, இல்ல அரை ஷட்டர் திறந்து வெச்சோ வியாபாரம் ஆகுமாமே. அத மாதிரி ஆகி போச்சு என் நிலைமை.

வீட்லயும், ஆபிஸ்லயும் ஓயாத வேலை...வேலை...வேலை. சுத்தமா ஏறக்குறைய ஒரு மாசம், இந்த பக்கமே வர முடியலை. இருந்தும் சைலண்டா சில பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போட முடியாம இருந்து வந்தேன்.

ஓணமும் அதுவுமா ஒரு வாழ்த்து பதிவு போடலைனா ஆபிஸ்ல இருக்கற ஓமனக் குட்டி கோச்சுக்காதோ? அதான் இதோ தட்டியாச்சு.

காலைல டிபன் சாப்டற நேரத்துல தற்செயலா( நிஜ்ஜம்மா) சூர்யா டிவிய திருப்பினா யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!னு என்னை மறந்து ஆட்டத்தை மட்டும் ரசித்து கொண்டிருந்த எனக்கு பக்கத்தில் தங்கமணி வந்தது கூட தெரியவில்லை.

அடடா! அவங்கள பாரேன்! ஓணம்னா கரக்ட்டா அது சம்பந்தமா தான் புரோகிராம் போடறான். நம்மூர்ல தான் பிள்ளையார் சதுர்த்திக்கு நமீதா பேட்டிய போடறான். இதை பாத்தாவது நம்மாளுங்க திருந்தனும். அப்ப தான் இத மாதிரி அரிய கலைகள் எல்லாம் அழியாம நாளைக்கு வர போற சந்ததியினருக்கு நாம தர முடியும். நீ என்ன நினைக்கிற இத பத்தி?னு ரொம்ப சீரியசா முகத்தை வெச்சுண்டு நான் கேட்டதை, ஒரு நிமிஷம் (ஒரு நிமிஷம் தான்) உண்மைனு நம்பி, பின் வழக்கம் போல இதெல்லாம் ஒரு பொழப்பு?னு புகழாரம் கிடைத்தது. எனக்கு டிபனும் செமித்தது.


கேரள சமையலில் தேங்காய் அதிகம் இருக்கும். நெல்லைகாரர்களின் சமையலிலும் அந்த தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அவியல், ஓலன், அடபிரதமன், பச்சடி, கிச்சடின்னு சமையல் அட்டகாசமாக இருக்கும்.



என்ன தான் அவங்க நமக்கு முல்லை பெரியாரில் தண்ணி தர மறுத்தாலும், நாம அவங்களை மதிக்க தான் செய்யரோம். அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா? :)

பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே, அதுக்கே ஒரு ஓ! போடலாம். (கொஞ்சம் ஓவரா தான் போறேனோ?)


சரி மறுபடியும் என் ஓணம் நல் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.

42 comments:

G3 said...

1st commentu after a lonnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnng time :))

G3 said...

என் ஓணம் நல் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன் :))

Kavinaya said...

படமெல்லாம் எங்கே பிடிச்சீங்க. நல்லாருக்கு :) ஓணம் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!

என்ன ரொம்ப நாளாக ஆளையே காணோம். மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் பதிவுகளையும் காணோம்..எனக் கேட்கலாம்னு வந்தால் ஆரம்பமே..:))!

நெல்லைக்காரங்க தேங்காய்ப் பாலிலேயே ஒரு குழம்பு வைப்போம் பாருங்கள் 'சொதி'ன்னு. நானானி அவர்களின் பதிவில் செய்முறையே இருக்கு.

Anonymous said...

Onam article rommpa naana irukku.

இலவசக்கொத்தனார் said...

ഓണം ആസംസകള്!

இலவசக்கொத்தனார் said...

அம்பி

இந்த படம் எல்லாம் எங்க சுட்டது? இதே படங்களோட இன்னிக்கு இன்னும் ஒரு பதிவு பார்த்தேன்! :(

http://kadaisipakkam.blogspot.com/2008/09/blog-post_12.html

Sridhar Narayanan said...

ஓணம் வாழ்த்துகள்.

மதங்கள் கடந்த ஒரு திருநாள் இது என்பதில் ஓணத்திற்கு ஒரு ஸ்பெஷல் அந்தஸ்து உண்டு. நம்ம பொங்கலும் அந்த மாதிரிதானே. :-)

இலவசக்கொத்தனார் said...

ஸ்ரீதர், என்ன சொல்ல வரீங்க? கேரளத்தில் ஒரு சாரர் ஓணம் கொண்டாடக்கூடாது என புதுசா ரூல் எதாவது வந்திருக்கா? இல்லை, பொங்கலோட கம்பேர் பண்ணறீங்களே அதான் சந்தேகம்.

சரவணகுமரன் said...

கலக்கல்...

ramachandranusha(உஷா) said...

(கொஞ்சம் ஓவரா தான் போறேனோ)இது வேறையா :-))

வல்லிசிம்ஹன் said...

பொன்னோண வாழ்த்துகள் அம்பி. படமெல்லாம் சூப்பர்.
அதென்ன மலையாளத்தில எழுதியிருக்கு கொத்ஸ் சேட்டன்:)

பரிசல்காரன் said...

பதிவின் நடுநடுவே உள்ள கவிதைகள் அருமையோ அருமை!!

பரிசல்காரன் said...

ஏன், பதிவுகள் குறைந்துவிட்டன நண்பரே!

Akila said...

பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே....

ithu thaan punch dialogue..in ambi's style

Anonymous said...

too much da ambi.

priya kuzhantayoda busy a irukkanu ninaikaren.
mama mami kitta pottu kudakkata,
en husbandayum ada vechu than blackmail pannuven.

ur manni.

முகவை மைந்தன் said...

நயன் தாராவிற்கு பொன் ஓண வாழ்த்துகள்.

அவருடைய படம் இடாததற்கு உங்களுக்கு கண்டனங்கள் ;-(

Anonymous said...

Dear ambi,
un blog address thlachutu ipo
dhan kedacahdu....
Ungaloda comments ae oru azhagu dhan..

"காலைல டிபன் சாப்டற நேரத்துல தற்செயலா( நிஜ்ஜம்மா) சூர்யா டிவிய திருப்பினா யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அடடா! கண் கொள்ளா காட்சி"

Surya tv la miss pannina programe ai
nerla partha oru feelings ...
adhu seri.

Idhuku ellam poori katai parakalaiya???
or
poori kattai pazhagi oru vishayama solla
thonaliya???

With Love,
Usha Sankar.

R-ambam said...

Krishna jayanthi vanthathu, Pillayar chathurthi vanthathu athukellaam post poada mudila , pon onam photo photova poattu thalreenga ....too much..!

Vishnu... said...

நல்ல பதிவு... பாராட்டுக்களுடன் ...

Anonymous said...

அடுத்த வருஷம் நயனதாராவுக்கு ****** ல இருந்து நீங்க சொல்ல வாழ்த்தறேன்.

பாலராஜன்கீதா said...

//என்ன தான் அவங்க நமக்கு முல்லை பெரியாரில் தண்ணி தர மறுத்தாலும், நாம அவங்களை மதிக்க தான் செய்யரோம். அசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க ஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா? :)//
நாமே ஜொள்ஆறு ஒடவிடலாம் என்று ஆறு பேரைப் போட்டிருக்கிறீர்களா ?
;-)

திவாண்ணா said...

அப்பா! என்ன கலை உணர்ச்சி!

gils said...

:(( mr.vambi..9* onam wishesnu title poatutu andha kolandha padam podama emaathiputele :(

சென்ஷி said...

மீரா ஜாஸ்மினுக்கு என்னோட ஓணம் விஷஸ்ஸ நயந்தாராகிட்டயே சொல்லி அனுப்பிடு அம்பி :)

Anonymous said...

//பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, //

அம்பி, சைக்கிள் கேப் புல உங்க தங்கமணி க்கு அட்வைஸ் கொடுக்கற மாதிரி இருக்கு........

உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்....

:))))))))

Kathir.

ஆடுமாடு said...

அண்ணே, நயன் கிறிஸ்துவர். அதனால அவங்களுக்கு ஒணம் கிடையாதாம். நான் வாழ்த்து சொல்ல போயி தெரிஞ்சுகிட்ட தகவல். உடனே தலைப்பை மாத்துங்கண்ணே.

Anonymous said...

happy onam to you and ur close friends meera,asin,nayan,kavya.pon onam ashamsaigal correcttaa?padam ennavo nanna than irukku?ore oru padam kuraiyuthe.boori kattai padammum potrukkalam.newton"s law nyabagam varalle!!!!!!thangamani neenga pakatthila vandhadhu kooda theriyama suryavaa,ennavo sariya padala!!!thangamani madam,veera thamizh penn yaarunu kattunga.
nivi.

Geetha Sambasivam said...

a BIG BANG from Ambi??? may be now back to form??? Happy to note this. Welcome for return! :))))))))))

rapp said...

அட, அண்ணே உங்க பொதுச் சேவை சூப்பரண்ணே. அப்படியே இங்க நானும் ப்ரித்விராஜுக்கு இங்கயே ஓணம் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன் :)

rapp said...

//பண்டிகைனாலும் பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குவாங்களே//
ஆனா கூடவே தடி தடியா வளையல், கேரளா ஸ்பெஷல் கம்மல் அது இதுன்னு போட்டு கலக்குவாங்களே, அதை விட்டுட்டீங்களே அண்ணே:):):)

SKM said...

adadaa!nee innum maaravae illaiya? how r ur thangamani and kuttiyum?

Syam said...

நல்லா இரு ராசா இவளோ வேலைக்கு நடுவிலும் முகிலோட சித்திக்கு வாழ்த்து சொன்னியே உன்னோட பாசமே பாசம்... :-)

Syam said...

//gils said...
:(( mr.vambi..9* onam wishesnu title poatutu andha kolandha padam podama emaathiputele :(
//

மானஸ்தன் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே?

Syam said...

//SKM said...
adadaa!nee innum maaravae illaiya? how r ur thangamani and kuttiyum?//

மேடம் நீங்க எப்டி இருக்கீங்க...என்ன இப்படி சிறுபுள்ளதனமா கேள்வி கேட்டுட்டு...:-)

Vetirmagal said...

Sir, Those sarees are also pretty expensive, and more expensive to maintain!

ambi said...

வாங்க ஜி3, நீங்க தான் பஷ்ட்டு.

கவி நயா அக்கா, படம் எல்லாம் மெயிலுல வந்தது. கடைசி படம் மட்டும் கேரளா டூரிசம்.

வாங்க ராலக்ஷ்மி, கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு.

நன்னி அனானி நண்பா. பெயர் சொல்லுங்க பாஸ்.


நயன் தாரா வாழ்க!னு மலையாளத்தில் எழுதி இருக்கும் கொத்சின் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது. அந்த படங்கள் எல்லாம் மெயிலில் வந்ததாக்கும்.

@sridhar, கொத்ஸ் ஏதோ கேக்கறார் பாருங்க. பொங்கலுக்கும். ஓணத்துக்கும் முடிச்சு போடுவதை விட தமிழ் வருஷ பிறப்புக்கு முடிச்சு போட்டு இருக்கலாமோ?

நன்றிங்க சரவணகுமரன்.

வாங்க உஷாஜி. உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

ambi said...

நன்னி வல்லி மேடம், நான் சொன்னதை தான் எழுதி இருக்கார்.

காரியத்துல கண்ணா இருக்கீங்க பரிசல். :p

வேலை கொஞ்சம் ஜாஸ்தி, அங்கிள் அட்வைஸை நான் பாலோ பண்ணலாம்னு பாக்கறேன்.

பஞ்ச் எல்லாம் இல்லீங்க அகிலா அக்கா.

@மன்னி, ஆஹா, இப்படியெல்லாம் அனானியா வந்து மிரட்டகூடாது.

வாங்க முகவை மைந்தன், படம் போட்ருந்தா என் கதை கந்தலாகி இருக்கும்.

வாங்க உஷா சங்கர், அட்ரஸ் தொலச்சுட்டீங்களா? அடடா! உங்க பிரவுசர்ல பேவரிட்ஸ் போய் என் அட்ரஸை சேர்த்து விடுங்க. (எப்படி எல்லாம் ஆள் பிடிக்க வேண்டி இருக்கு?)

ஆ-ரம்பம், ஹிஹி, மாற்றான் வீட்டு கேசரிக்கும் மணம் உண்டே.
நன்றிங்க விஷ்ணு.

ஆஹா, உங்க வாக்கு பலிக்கட்டும் சின்ன அம்மணி.

வாங்க பாலராஜன் கீதா சார், பாயிண்டை கரக்ட்டா புடுச்சீங்க.

திவாண்ணா, அதே! அதே!

இந்தா கில்ஸ், நீ என்னை கோர்த்து விட பாக்கறன்னு எனக்கு நல்லா தெரியும்.


சொல்லிடறேன் சென்ஷி அண்ணா.


கதிர், இப்படி Lines எல்லாம் கோட் பண்ணி காட்டனுமா? :))

@ஆ-மா, என்னது? நீங்க நேர்ல வாழ்த்து சொல்ல போனீங்களா? ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா?


நீங்க வேற எடுத்து குடுக்கறீங்களா நிவி? ஏற்கனவே சேதாரம் ஜாஸ்த்தியாயிடுச்சு.

கீதா மேடம், நீண்க்க சொன்னா சரி தான்.

ராப், இருங்க உங்க மாமியார் கிட்ட போட்டு குடுக்கறேன்.

வாங்க எஸ்கேம் அக்கா, மாறுவதா? ஷ்யாமை மாற சொல்லுங்க, நான் மாறறேன்.


ஷ்யாம், முகிலோட சித்திக்கா? சரி தான். முகில் எப்படி இருகான்..?

வெற்றீ மகள், அந்த புடவை விலை எல்லாம் விசாரிச்சுட்டேன். 300 முதல் 700 வரை தான் ஆகுது. மெயின்டன் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான். :)

anantha-krishnan said...

படங்கள் எல்லாம் சூப்பர்
பிளாக் லோகத்தை நீண்டநாள் கழித்து எட்டிப் பார்க்கும் நான்
நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

www.jega-pethal.blogspot.com

Known Stranger said...

onam sadhya sapitu parkanum ammadi sorgam athula than irukvoii

Tech Shankar said...

அருமைங்க

Anonymous said...

в конце концов: отлично.. а82ч