Tuesday, August 19, 2008

கஷ்டமர் கேர்

நீங்க எப்பவாவது வங்கிகளின் கஷ்டமர் கேரை அணுகி இருக்கீங்களா? அப்ப தொடர்ந்து படிங்க.

என்னது அணுகியதேயில்லையா? என்னனு தெரிஞ்சுக்கனும் இல்ல, அதனால நீங்களும் தொடர்ந்து படிங்க. :)


சென்னையிலிருந்து பெங்களூர் வந்து பிறகு, அங்க இருந்த வங்கி அக்கவுண்டை தொடவேயில்லை, ஏன்னா இங்கயுள்ள கமபனி வேற ஒரு வங்கில கணக்கு தொடங்கி குடுத்துடுச்சு. ஒரு வருடம் கழிச்சு கல்யாணம் ஆகி, தங்கமணி வந்துபிறகு நிதி நிர்வாக கணக்குகள் எல்லாம் முறைப்படி ஒப்படைக்கிறப்ப தான், இந்த வங்கி கணக்கு பத்தி பேச்சு வந்தது.

சரி, அந்த கணக்கை இங்க உள்ள கிளைக்கு மாத்தி விடலாம்னு தங்க்ஸை நேர்ல கூட்டிட்டு வங்கிக்கு போயாச்சு. அம்மணியும் நானும் அவங்க குடுத்த பேப்பர்ல எல்லாம் என் வீட்டு நம்பர், தெரு பெயர், எத்தனாவது சந்து, என் பிளாக் அட்ரஸ் எல்லாம் ரொப்பி குடுத்துட்டு வந்தாச்சு. அவங்களும் பொறுப்பா உங்க புதிய அக்கவுண்ட் நம்பர் இது தான்!னு பத்து நாள் கழிச்சு கொரியர் அனுப்பிட்டாங்க.

இணைய வங்கி சேவைக்கு பாஸ்வெர்டு அனுப்புங்க!னு அதுக்கு ஒரு விண்ணப்பம் குடுக்க, அந்த பிரஹஸ்பதி அனுப்பிய பாஸ்வேர்டு வெச்சு திறந்திடு சிசேம்!னு என் அக்கவுண்டை திறக்க முடியலை. இப்ப தான் ஒரு சிக்கல். என் பழைய ATM (அழகிய தமிழ்மகன் இல்லை) கார்டு காலாவதி ஆகிடுச்சு. அத்தோடு நானும் மறந்திட்டேன், தங்கமணியும் மறந்தாச்சு (அதிசயம் தான்!).


இப்ப தீடிர்னு தங்க்ஸ்க்கு நியாபகம் வந்து, வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க, ஒழுங்கா அந்த வேலைய முடிங்க!னு அன்பா சொல்ல, ஓடு! அந்த பேங்குக்கு!னு போயாச்சு. அங்க இருந்த ஒரு கஷ்டமர் கேர் அம்மணியை உதவி கேட்டேன். சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம். அவங்களும் போன்ல பேசுங்க!னு நம்பர் போட்டு குடுத்தாங்க. ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. ஒரு பயலும் அந்த பக்கம் எடுக்க மாட்டேங்கறான். அவங்களும் நம்ம மாதிரி ஆபிஸ்ல பிளாக் எழுதறாங்க போலிருக்கு.

நீயே பாரு தாயி! உங்காளுக வேலை செய்யற லட்சணத்த!னு அவங்களவிட்டே டயல் பண்ண வெச்சேன். வெண்டகாய்க்கு ஏன் லேடிஸ் பிங்கர்!னு வெள்ளகாரன் பேரு வெச்சான்?னு அப்ப தான் புரிஞ்சது. சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீஸ்காரன். அந்த அம்மணியும் ரொம்ப நேரம் ட்ரை பண்ணி கடைசியா ஒரு ஆளை லைன்ல புடிச்சுடுச்சு. போன் இப்ப என் கைக்கு வந்தது.

எதிர்முனை, "உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க பாப்போம்".

சொன்னேன்.

நீங்க பிறந்த தேதி..? (பர்த்டே கேக் அனுப்ப போறாங்களா? அட செக் பண்றாங்களாம்!)

சொன்னேன்.

கடைசியா நீங்க பண்ண ஒரு மூணு டிரான்ஸாக்ஷன் என்னனு சொல்லுங்க பாப்போம்?

கடைசியா எழுதின மூணு பதிவை கேட்டா சொல்லி இருப்பேன். இருந்தும் தட்டு தடுமாறி சொல்லிட்டேன்.

இல்லயே அம்பி! தகவல் ஓரளவு தான் கரக்ட்டா இருக்கு. சரி, கார்டு நம்பர் சொல்லுங்க.

அதுக்கு தான் கண்ணு நான் போன் பண்ணி இருக்கேன். புது கார்டு வேணும்.

அடடா! நாங்க அதெல்லாம் கவனிக்கறதில்லை. நீங்க பேங்குலயே ஒரு விண்ணப்பம் குடுங்க. வேற ஏதேனும் வேணுமா?

ஆமா! இன்னும் டிபன் சாப்டலை. ஒரு மசால் தோசை கிடைக்குமா?

எதிர்முனை சிரிப்பு சத்ததுடன் தூண்டிக்கப்பட்டது. நான் மறுபடி பாவனாவிடம் சென்று முறையிட, அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது. மறுபடி ஒரு விண்ணப்பம் எழுதி குடுத்தாச்சு! பத்து நாளைக்குள்ள உங்களுக்கு தபால் வரலைன்னா என் பெயரை நயன் தாரானு மாத்தி வெசுக்கறேன்னு பாவனா சூளூரைக்க, மெய் சிலிர்த்து விட்டது எனக்கு.

சொன்ன மாதிரியே நாலாவது நாளில் தபால் வந்து விட, ஐந்தாம் நாள் பாவனாவே செல்பேசி உறுதி செய்ய, நான் இருக்கறது இந்தியாவில் தானா?னு ஆச்சர்யம் தாங்க முடியலை. அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ணினா இரு நூற்றி இருபதைந்து ரூபாய் பாவனா பேரை சொல்லி அந்த பேங்குக்கு மொய் எழுதப்பட்டு இருந்தது. அட பாவிகளா! இந்த சேவை ஓசி!னு இல்ல நான் நினைச்சேன். இப்ப கார்டு வந்தாச்சு, ஆனா இணைய சேவைக்கு பாஸ்வேர்டு வரலை.

திக்கற்றவர்க்கு பாவனாவே கதி!னு மறுபடி படையெடுக்க இந்த தடவை போன்லேயே விண்ணப்பம் பெற்று கொண்டனர். இந்த தடவையும் மொய் எழுதனுமா?னு கேக்க, இல்ல, இது இலவசம் தான்!னு அம்மணி திருவாய் மலர்தருளினாங்க.

சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)

43 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேபிள் நல்லாருக்கு..
பதிவை எப்படியும் படிக்கத்தான் போறோம்.. புதுசா படிக்கறவங்களையும் அங்கயிங்க போயிடாம பிடிச்சு இழுத்து படிக்க வைக்க முதல் ரெண்டு வரியும் நல்ல டெக்னிக்.

pudugaithendral said...

அட பாவிகளா! இந்த சேவை ஓசி!னு இல்ல நான் நினைச்சேன். இப்ப கார்டு வந்தாச்சு, ஆனா இணைய சேவைக்கு பாஸ்வேர்டு வரலை//

ஆரம்பமே இப்பாத்தான்னு நினைப்போம் அப்படின்னு பாடிக்கிட்டு இருங்க. இது நிஜமாவெ கஷ்டமர் கேர்தான். இது மாதிரி நிறைய பாத்து நொந்து நூலாகி வெந்து வெர்மிசலி ஆகிப் போய் கிடக்கேன். :(

gils said...

//வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க, ஒழுங்கா அந்த வேலைய முடிங்க!னு அன்பா சொல்ல//

!!! thudapamum kaiyuma otatada thatrennu ungala naalu thatinathuku ipdi oru view point iruko? vantage point padam mari oru situationku neria views iruku pola..thappilai :)


//சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம்//

postoda reasonay ithu thaangara matter first linelay therinju poachu..

//கடைசியா எழுதின மூணு பதிவை கேட்டா சொல்லி இருப்பேன்//

ROTFL..vitta gmaila account vachirukarathuku passbook kepeenga polarukay :D


//அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது//

machhamaiya umakku...imbutu sonele..entha banknu solalaye :(

gils said...

oru matter thieryuma..sila banklam avanga premise porathuaky bankvisiting fee solitu 100 roova bokka potruvanunga..athuku education cess kanda karumathiayum tax poatu thalichiduvanga :(

ராமலக்ஷ்மி said...

நானும் வெந்த வெர்மஸிலிதான்:(! என்ன உங்களை மாதிரி மசாலா தோசை கேட்காததுதான் குறை:)!

Aruna said...

kashtamda saamy!!!
anbudan aruNa

ஜோசப் பால்ராஜ் said...

பாவனாவ பார்த்த சந்தோஷம், பதிவோட ஒவ்வொரு வார்த்தையில‌யும் தெரியுது.

இப்ப‌ இருக்க‌ த‌னியார் வ‌ங்கிங்க‌ எல்லாம் வாடிக்கையாள‌ர் சேவையில‌ ரொம்ப‌ ந‌ல்லாத்தான் இருக்காங்க‌. ஆனா ந‌ம்ம‌ அர‌சுட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ங்கிங்க‌தான் இன்னும் திருந்த‌வேயில்ல‌.

ஐ சி ஐ சி ஐ வங்கியின் சேவை மூலமா நான் க‌ட‌ந்த‌ ஞாயிற‌ன்று சிங்கையிலிருந்து இந்தியாவுக்கு ப‌ண‌ம் அனுப்பிய‌ போது, திங்க‌ள‌ன்று இந்திய‌ நேர‌ம் 10.30 ம‌ணிக்கெல்லாம் என‌து அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு உறுதிசெய்துகொண்டு ப‌ண‌த்தை அனுப்பினார்க‌ள்.

அதே பார‌த‌ ஸ்டேட் வ‌ங்கியில் க‌ண‌க்கு வைத்திருக்கும் என‌க்கு இணைய‌ வ‌ழிச் சேவைக்கான‌ ப‌ய‌னாள‌ர் க‌ண‌க்கும், க‌ட‌வுச் சொல்லும் அனுப்புமாறு ப‌ல‌ முறை மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியும் இதுவ‌ரை ஒரு ப‌தில்கூட‌ அவ‌ர்க‌ளிட‌மிருந்து வ‌ர‌வில்லை.

மங்களூர் சிவா said...

முத்தக்கா மாத்தி சொல்லீட்டாங்க

/
சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)
/

கடைசி இந்த ரெண்டு வரிதான் டாப்பு!
:)))

Kavinaya said...

கஷ்டமர் கேர் பதிவா, பாவனா கேர் பதிவா? :))) நல்லா எழுதியிருக்கீங்க :D

மங்களூர் சிவா said...

/
gils said...

சந்தன கீத்து எல்லாம் வெச்சு பாக்க பாவனா மாதிரி நல்லா இருந்தாங்க, ஆனா லிப்ஸ்டிக் தான் கொஞ்சம் ஓவர்! என்பதெல்லாம் இந்த பதிவுக்கு அவசியமில்லாத விஷயம்//

postoda reasonay ithu thaangara matter first linelay therinju poachu..
//

கன்னாபின்னான்னு ரிப்பீட்டு
:)))

மங்களூர் சிவா said...

/
ஜோசப் பால்ராஜ் said...

பாவனாவ பார்த்த சந்தோஷம், பதிவோட ஒவ்வொரு வார்த்தையில‌யும் தெரியுது.
/

இதுக்கும் ஒரு ரிப்பீட்டு

அந்த பேங்க் பேர் , ப்ரான்ச் பேர் தெரிவிக்காததற்கு கடும் கண்டனங்கள்!

:))

மங்களூர் சிவா said...

/
தங்கமணியும் மறந்தாச்சு (அதிசயம் தான்!).
/

பயங்கர குத்தா இருக்கே ராத்திரி சாப்பாடு ஆப்பீஸ் கேண்டீன்லயேவா???

மங்களூர் சிவா said...

/
ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு.
/

அதுக்கப்புறம் நம்பர் எதும் சொன்னா 'அமுக்க'றதுக்கு நம்பர் இல்லையோ?

oh sad
:))

மங்களூர் சிவா said...

/
வெண்டகாய்க்கு ஏன் லேடிஸ் பிங்கர்!னு வெள்ளகாரன் பேரு வெச்சான்?னு அப்ப தான் புரிஞ்சது. சோக்கா சொல்லி இருக்கான்யா இங்க்லீஸ்காரன்.
/

அதனாலதான் அவன் இங்க்லீஸ்காரன்
:)))

மங்களூர் சிவா said...

/
எதிர்முனை சிரிப்பு சத்ததுடன் தூண்டிக்கப்பட்டது. நான் மறுபடி பாவனாவிடம் சென்று முறையிட, அடடா!னு ஒரு உச்சு கொட்டி பக்கத்து சீட்டில் இருந்த ரீமா சென்னிடம் உதவி கேட்டது. மறுபடி ஒரு விண்ணப்பம் எழுதி குடுத்தாச்சு! பத்து நாளைக்குள்ள உங்களுக்கு தபால் வரலைன்னா என் பெயரை நயன் தாரானு மாத்தி வெசுக்கறேன்னு பாவனா சூளூரைக்க, மெய் சிலிர்த்து விட்டது எனக்கு.
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
திக்கற்றவர்க்கு பாவனாவே கதி!
/

:))))))))

Arunkumar said...

//
சொல்ல மறந்துட்டேனே! இந்த தடவை லிப்ஸ்ட்க் அளவா போட்டிருந்தாங்க. :)
//

idhu thaan AMBI touch...


as usual , super post thala :-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா!!!, இந்த கொடுமையை அனுபவிக்காதவங்க இருக்க முடியுமா?...

இதைக்கூட இவ்வளவு சுவாரஸ்யமா எழுத உங்களாலதான் முடியும்.. சூப்பர்.

Ramya Ramani said...

ஹா ஹா ஹா.. பாவம் ரொம்பவே நொந்துட்டீங்க போல ஆனா பாவனா ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்காங்க ஹிம்ம்ம்ம் நடத்துங்க..

பாவனாவோட தரிசனத்துல உ சர்வீஸ் ப்ரீயான்னு கேக்க விட்டுடீங்களா??

\\ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. \\

ROTFL :)

Sridhar Narayanan said...

சந்தன கீத்து பாவனா - ICICI வங்கியா? அது என்னப்பா அங்க மட்டும் சேச்சிங்க மொத்த குத்தகை?

இங்கிலீஷ்காரன விட ஃப்ரெஞ்சுக்காரன் இன்னமும் சோக்குப் பேர்வழி தெரியுமா? :-))

சென்ஷி said...

:))

சத்தியமா சிரிப்ப அடக்க முடியல... உங்களுக்கு இப்படில்லாம் கஷ்டம் கொடுத்த அந்த பொண்ண ரெண்டு திட்டு திட்டுனாத்தான் என் மனசு ஆறும் இல்லைன்னா எட்டும்ன்னு வச்சுக்குங்க. எக்ச்சூச் மீ... பாவனா போன் நம்பர் ப்ளீஸ்....

Anonymous said...

பாவனா பேரை இத்தனை தடவை use செய்து இருப்பதை "தம்பி கதிர்" சார்பாக கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம்.


Kathir.

கயல்விழி said...

பாவனா, நயந்தாரா, ரீமா சென் எல்லாம் வங்கியில் வேலை செய்கிறார்கள் என்ற அரிய தகவல்களைத்தெரிந்துக்கொண்டேன்.

Anonymous said...

indha madhiri kassshhhtamar carekku ungallukku kovamla varanum.bavana,reemasen ellam parthadhilla kovame poiduchu.inga sila private bank adiikira koothula edhirka asine vandhalum naalu appalamannu athiram varudhu.neenga ennadannna!!!!!!!!!
nivi.

R-ambam said...

soolurai.....
sooper pa!

திவாண்ணா said...

அம்பி, பாஸ்வேர்ட் டைப் பண்ணூம் முன்னாலே விசைப்பலகை இங்க்லீஷுக்கு மாத்தினீங்களா இல்லையா?

Story Teller said...

excellent... comedya eludhanumna ippadi dhan eludhanum... i liked it a lot

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
இப்படி பாவனா,நயந்தாரான்னு எல்லோரும் உங்களுக்கு சேவை செய்யறது,தங்ஸுக்குத் தெரியுமா.
நான் சொல்லிடட்டுமா.
அப்புறம் பாப்பாவைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அவங்களே பாங்க் வேலையெல்லாம் முடிச்சுடுவாங்களே.!!!!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

==)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரசித்துப் படித்தேன்... :)

Anonymous said...

//ஒன்று! ரெண்டு!னு அவ்வையார் முருகனை வரிசைபடுத்தி பாடின மாதிரி போன்ல அந்தம்மா சொன்ன எல்லா நம்பரையும் அமுக்கியாச்சு. ஒரு பயலும் அந்த பக்கம் எடுக்க மாட்டேங்கறான்.//

Very Nice..!! Perfect touch of a pink..!!

he he ingeeleesu...!!

//thangs @ thangamani//
Eppa irunthu, thangamani-ndra chella perai thang's-nu mathineenga ???

//Bavana Lipstick //
indha blog-la orey malayala chechi nedi ???

Thangamani Pls USHAR!!!

Thangs-oda boorikattaiku velai vanthuduchu..!!!

Anonymous said...

ambi, I have copied your blog and published in my blog. hope you wont mind. since am a new blogger need this kind of work to get some audience..!!

please check www.kuttikarthi.blogspot.com

danks..!!!

Anonymous said...

ambi, I have copied your blog and published in my blog. hope you wont mind. since am a new blogger need this kind of work to get some audience..!!

please check www.kuttikarthi.blogspot.com

danks..!!!

ambi said...

//முதல் ரெண்டு வரியும் நல்ல டெக்னிக்.
//

ஹிஹி, கண்டுபிடிச்சுட்டீங்களா முத்தக்கா, நீங்க புத்திஷாலி. :D


//நிறைய பாத்து நொந்து நூலாகி வெந்து வெர்மிசலி ஆகிப் போய் கிடக்கேன்//

@புதுகை தென்றல், நீங்களுமா..? அட பாவமே!

@gils, வாய்யா கில்ஸ், எந்த பிராஞ்சுனு சொன்னா மட்டும்...

@ராலக்ஷ்மி, அட இது பெரிய கூட்டணியா இருக்கே!

@aruna, வருகைக்கு நன்னி அருணா!

@ஜோசப், தனியார் சேவை நல்லா இருக்கு, என்ன பில்லு தான் வெயிட்டா தீட்டறாங்க.

@மங்களூர் சிவா, கரக்ட்டா பாயிண்டை புடிச்சான்யா!

@kavinaya, ரெண்டும் தான் கவியக்கா.

M-siva, ரெண்டு வேளை கேண்டீன், நைட்டு சொந்த சமையல், அதனால் நோ கவலை. :p

@arun, நன்றி அருண், போனும் கையுமா இருப்பீங்க, நேரம் கிடைச்சு படிக்க வந்ததே பெருசு. :D

ambi said...

வாங்க மெளலி அண்ணா, நீண்க்க ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல.

@ramya, ஆமா, பாவனா தான் ரொம்ப ஹெல்ப்.

@sridhar, நீங்க FBIல வேலை பாக்கறீங்களா? கரக்ட்டா மோப்பம் புடிச்சுட்டீங்களே! சூப்பர். :))பிரஞ்சுகாரன் என்ன சொல்லி இருக்கான்? பதிவா போடுங்களேன் பாப்போம்.

@சென்ஷி, நன்றி சென்ஷி,

என்னது நம்பரா?

ஆசை தோசை அப்பளம் வடை. :D

//தம்பி கதிர்" சார்பாக கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம்.
//

@kathir, என்ன ஆச்சர்யம், எழுதும் போதே அவரு தான் எனக்கு நினைவுக்கு வந்தார். :))

@கயலக்கா, ஆமா! இன்னோரு பேங்குல ஐஸ் குட்டி கூட வேல பாக்கறாங்க, ஆனா எனக்கு அந்த பேங்குல அக்கவுண்டு இல்ல. :))

@nivi, கோவம் வருது தான் நிவி, ஆனா என்ன செய்ய, நம்ம பிரஷர் தான் ஏறும். அதான் லைட்டா எடுத்துகிட்டேன். :))

வருகைக்கு நன்னி R-ambam. :)

என்ன சொல்றீங்க திவாண்ணா?, புதசெவி. :D


நன்னி டெல்லி தமிழன்,

@வல்லி மேடம், அதான் முடியாதே, பாப்பா ரெண்டு மணிக்கு ஒரு தரம் அழுவானே! :p

நன்றி சாமான்யன்.


@சுந்தர், வாங்க சுந்தர், அதீதன் சவுக்யமா? :p

@கர்ர்த்திக்கேயன், ஏன்பா கொளுத்தி போடற? நல்லா இரு ராசா. :))

Anonymous said...

ambi ane india le than customer care vela elam tak tak nu nadakum adhaye nama kora solrom

anachi koncham europe pakam vanthu patheenga na arandu poi ipave kana katuthenu nipeenga oru phone connection vangarthuke avangaltha oru masam thonganum. telephono bankleyo edo problem nu customer care phone paneenga na inum super avangale reach panrathuku 1 hr q le phone le wait pananum adhukapram antha moodhevi phone edukum adukapram nama solrathe athunga puriyarthukula pongada neengalum vena unga servicem venana phone thooki erinchiruveenga romba kashtammmmmmmm

Anonymous said...

apa than theriyum nama ur aruma peruma

Anonymous said...

hehehe....ithuke kashta patta eppadi...naanga broadband conenction eduthu iruntha internet service provider kitta naa potta pala sandai kaaranama, en BP eri poi, en purusan bayanthu poi conenctionaye cut panniyachu
ippo kooda recenta oru extra credit card vechu irunthen, atha use pannalenu cancel panna phone panna, last 3 transactions kekuraanga, sonna thaan merkondu naama solrathaye kepaangalam! Ada kadavule, indha card-a naa use panni ethana naal aachu, statement varathe amount-a mattum pathuttu delete panniten...ippo office extensionlenthu osila call adichittu irukken, ippo indha details ellam enge irukunu yaar kandana, atha konda, appa thaan account close, illina odi po. sarinu eduthuttu vantha, antha saniyan pidicha ivra menu, en card number entry-a eduthukaama thirippi thirippi oru naalu thadava main menuke kondu poi vitruchu....veruthu poi kadasiya oru vazhiya line kadacha, put you on hold for a sec-nu holdla pottutaanga. and pathu nimisham kazhichum antha pakkam pechu mooche illa. aparam paatha thaan theriyuthu, line cut aayi 10 nimisham aayachunu. uggghhh!

ambi said...

@உத்ரா, அட அங்க இத விட மோசமா? அட கடவுளே! தகவலுக்கு மிக்க நன்னி.

@sat, அடேங்கப்பா, ரொம்ப அடி பட்ருக்கீங்க போல,
பேசாம நந்துவ லீவு போட சொல்லிட்டு நேர்ல அனுப்புங்க அந்த பேங்குக்கு. :p

Swamy Srinivasan aka Kittu Mama said...

vanakkam ambi. unga blog'a eppa vaenumnaalum nambi varalaam. yaenna adhu dhaan ambi :)

vangi post super. hmm bhavana vukkae ponaa maadhiri irukkae. sari sari adhellam edhukku ippo.

neenga ippa chennai vandhaacha? naanga chennaiku November'la vacation varuvom. neengal angae irundhaal kandippae meet pannalaam. enna solreenga

kittu mama

ambi said...

வாங்க கிட்டு மாமா. நவம்பர்ல நீங்க வர தேதிய ஒரு மெயிலா rengabhai@gmail.com குடுங்க. கண்டிப்பா மீட் பண்ணலாம். ஷ்ரேயா குட்டி எப்படி இருக்கு? :))

Swamy Srinivasan aka Kittu Mama said...

shreya superaa irukka. i mean en ponna sonnaen :)

India trip confirm aachunna, kandippa mail panraen.

kittu mama

Anonymous said...

write more and more..... nice....