அடக்கத்தின் திருவுருவம்,ஆன்மீக செம்மல், இளிச்ச சாரி சிரித்த முகம், ஈகை குணம், உரத்த சிந்தனை, ஊக்கமிகுந்த மனம், எளிய நடை, ஏற்றமிகு செயல்கள், ஐய்யமில்லா மனம் என நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்து, பந்தல் போட்டு பாசுரம் பாடுபவரும், சுப்ரபாதம் பாடி, முருகனருளில் காவடி எடுத்து, சிவன் பாட்டில் தேவாரம் ஓதி, கந்தனுக்கு அலங்காரம் செய்து கண்ணனுக்கும் பாட்டு பாடி, மறக்காமல் ஆச்சார்யருக்கு தலை வணங்குபவருமான கேஆரெஸ் என அன்புடன் அழைக்கபடும் கண்ணபிரான் ரவிசங்கருக்கு இன்று(9th aug) பிறந்த நாள்.
இது நாள் வரை நமக்கு வாழைப் பந்தல் தான் தெரியும். ஆனால் இந்த மனுஷன் வந்த பிறகு மாதவி பந்தல்னு ஒன்னு இருக்கு!னு தெரிய வந்தது.
அண்ணனுக்கு இத்தனை பிளாக்கா?னு நீங்கள் எண்ணும் போதே பிள்ளையாருக்கு ஒரு பிளாக், அனுமாருக்கு ஒரு பிளாக்னு அண்ணன் ஆரம்பிக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம். அதனால் சீக்ரம் வாழ்த்திட்டு, சக்ர பொங்கல் வாங்கிகுங்க.
மறக்காம புளியோதரையும் வாங்கிகுங்க.
இது ஸ்பெஷலா கேஆரெஸ் அண்ணனுக்கு ஜிரா அண்ணன் தர சொன்னது:
பழனி பஞ்சாமிர்தம். :-)
(picture source: www.palanitemples.com)
24 comments:
பி.நா.வா கேஆரெஸ்!
சக்கரை பொங்கல் -டயாபெடீஸ் அதனால் வேணாம். புளீயோதரை பாத்தாலே கலக்குது. காரம் ஒரு மி.கி கூட ஒத்துக்காது. வேணாம்.
அப்பாடா பஞ்சாமிர்தம் கொஞ்சம் எடுத்துக்கலாம்ன்னா அது கேஆரெஸ்ஸுக்காம் இல்லே!
ஹும். கடேசிலே ஒண்ணும் தேரலே!
:-))
சூப்பர் !
நானும் தம்பிக்கு வாழ்த்துச் சொல்லிக்கிறேன் !
எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என்றென்றும் அண்ணன் கே ஆர் எஸ்-க்கு உரித்தாகுக :-)
பதிவுல படம் சரியா போட்டிருக்கீங்களா? அங்க புல்தரையில் உருண்டுகிட்டு இருக்கற பாலகன்தானா இங்க காருக்குள்ளேர்ந்து வில்லத்தனமா எட்டிப் பாக்குறாரு? :-)) சரி சரி.. ஒரு எட்ச்ட்ரா சக்கரைப் பொங்கள் இப்படிக்கா தள்ளிவிடுங்க.
:-)
நல்லா இருக்கு. :-)
கே.ஆர்.எஸுக்கு வாழ்த்துக்கள்....
நல்லா எழுதியிருக்கீங்க அம்பி...ரசித்தேன்... :)
முருகனருளில் தரவேண்டிய சக்கரைப் பொங்கலும், கண்ணன் பாடலில் கிடைக்காத புளியோதரையும் இங்கதான் கிடைத்தது....வாழ்க நீ எம்மான்...வையத்து நாட்டிலெல்லாம் :)
வாழ்க வளமுடன் இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்.
பொதுவா ஆப்புச் சூடி பாடும் அம்பி,
இன்னிக்கி ஆத்திச் சூடி பாடி இருக்காரு-ன்னு கேள்விப்பட்டு ஓடியாந்தேன்! :))
அ-ஐ வரைக்கும் சொன்னவரு, ஒ, ஓ, ஓள மட்டும் விட்டுட்டாரு! அதுனால நான் தப்பிச்சேன்! :)
திவா சார், திராச ஐயா
ஆசிக்கு நன்றி!
காலையில் திராச ஐயாவின் குரல் கேட்டதும் ஒரு இன்பம்!
கோவி அண்ணா, ஸ்ரீதர் அண்ணாச்சி, மெளலி அண்ணா, குமரன் - dankees :))
//காருக்குள்ளேர்ந்து வில்லத்தனமா எட்டிப் பாக்குறாரு? :-))//
ஒரு க்ரீன் பேபியை ப்ளாக் வில்லானாக்கியது தனி கதை அண்ணாச்சி!
மலேசிய மாரியாத்தா மைஃபிரெண்டும், பாசமிகு-மோசமிகு தங்கை துர்காவும் செய்த கூட்டுச் சதி! :))
வாழ்த்துக்கள் கேஆரெஸ். நன்றிகள் அம்பி. நீடுடி வாழ்க பல்லாண்டு.
அடக்கத்தின் திருவுருவம்,ஆன்மீக செம்மல், இளிச்ச சாரி சிரித்த முகம், ஈகை குணம், உரத்த சிந்தனை, ஊக்கமிகுந்த மனம், எளிய நடை, ஏற்றமிகு செயல்கள், ஐய்யமில்லா மனம் என நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்து, பந்தல் போட்டு பாசுரம் பாடுபவரும், சுப்ரபாதம் பாடி, முருகனருளில் காவடி எடுத்து, சிவன் பாட்டில் தேவாரம் ஓதி, கந்தனுக்கு அலங்காரம் செய்து கண்ணனுக்கும் பாட்டு பாடி, மறக்காமல் ஆச்சார்யருக்கு தலை வணங்குபவருமான...
அண்ணன் கேஆர்எஸ் வாழ்க...!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்...
லேட்டா சொனாலும் லேட்டஸ்டா சொல்லிக்கிறேன் கேயாரெஸ் அண்ணாச்சிக்கு எனது மன்ம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை....வாழ்க பல்லாண்டு.....
கேயாரெஸ்ஸுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் KRS Sir!!!
விஜய், தமிழன் அண்ணாச்சி, தமிழ்ப்பறவை, ச்சின்னப்பையரே, ரம்யா-dankees dankess:))
//முருகனருளில் தரவேண்டிய சக்கரைப் பொங்கலும், கண்ணன் பாடலில் கிடைக்காத புளியோதரையும் இங்கதான் கிடைத்தது....வாழ்க நீ எம்மான்...வையத்து நாட்டிலெல்லாம் :)//
ரிப்பீட்டேய்!!
இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணா!
Happy Birthday KRS. too busy???? athan mailukku pathile illai polirukku?? :P
கவி அக்கா - நன்றி!
கீதாம்மா...dankees, dankees!
unga mail-kku innikku reply chesthenu! oppice-id kku anupcheenga pola!
சரி, அம்பத்தூர் ஆவி பறக்கும் இட்லி வரவே இல்ல?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ். :))
எல்லாருக்கும் கேஆரெஸ் அண்ணனே பதில் சொல்லி விட்டபடியால் என் ஜோலி மிச்சம்.
@krs, அம்பத்தூர்ல அந்த இட்லி கடை லீவாம். :p
//@krs, அம்பத்தூர்ல அந்த இட்லி கடை லீவாம். :p//
@அம்பி, என்ன ரொம்பவே ஆட்டம் அதிகமா இருக்கு போலிருக்கு??கணேசன் அரைச்சு, இட்லியும், தோசையும், அடையுமாப் பண்ணிப் போட்டா ஏன் பேச மாட்டீங்க?? :P :P :P :P
Over Kurumbu! Sakkara pongal, Puliyothorai, was a good treat for eyes. Athu yenna pavam panjamirtham verai... Seri kadisiya laddu kuduthu mudipeengannu paarthane... LOL...
ambi anna, entha idli kadai???
Me too living in ambattur, wanna try that idli's !!!!
:-)
Post a Comment