Saturday, August 19, 2006
தீராத விளையாட்டு பிள்ளை...!
இது கொஞ்சம் விவகாரமான பதிவு. எழுதலாமா? வேண்டாமா?னு ஒரே யோசனை. இப்ப நம்ம பிலாக்குக்கு TRC சார் நடேசன் சார் போன்ற மகானுபாவர்களும் கீதா மேடம் போன்ற வயசானவாளும்(ஹி,ஹி) வரா! இருந்தாலும் அம்பியின் குழந்தை மனசை எல்லாரும் புரிஞ்சுப்பா!னு நம்பி களம் இறங்கறேன்.
சரி இனி மேட்டருக்கு போவோம். 2 நாளா ஆபிச்ல ஒரு டிரைனிங்குக்கு என்னை அனுப்பி என் மேனேஜர் நன்னா பழி வாங்கிட்டா. சாதாரணமாவே தொடர்ந்து 2 மீட்டிங்க்ல கலந்துண்டாலே எனக்கு தூக்கம்,தூக்கமா வரும். அதுவும் மதிய வேளைனா கேக்கவே வேண்டாம்.
இந்த பிரோக்ராம் 2 நாளைக்கு நடந்தது.காலை 9 க்கு ஆரம்பிச்சு மாலை 6 மணி வரை. ஒரே பவர்பாய்ண்ட் பிரசேன்டேஷன்ஸ். என்னையும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டோம். பேசின பாதி பேர் சும்மா கொத்து கொத்துனு கொத்தி எடுத்துட்டா. எல்லார் காதுலயும் ஒரே பிளட்.
"காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது!"ங்கறது மாதிரி சில புண்ணியாவான்கள் கேள்வி எல்லாம் கேட்டா. எங்களுக்கு புரிஞ்சதா? இல்லையா?னு டெஸ்டிங்காம். அதனால வழக்கம் போல தூங்க கூட முடியலை. மானம் போயிடுமே!(எங்க இருக்கு? போறதுக்கு).
ஒரு நல்ல காரியம், என்னனா இந்த பிரோக்ராமை ஒரு நல்ல ஓட்டலில் ஹால் புக் பண்ணி ஏதோ பார்ட்டி மாதிரி ரவுண்ட், ரவுண்டா டேபிள் எல்லாம் போட்டு நடத்தினா. என் டேபிளில் ஒரு 5 பேர் வந்து உக்காச்சுண்டா. புதுசா ஒரு பஞ்சாபி குதிரை எங்க ஆபிஸ்ல வந்து இருக்கு. சொல்லி வெச்ச மாதிரி கரெக்ட்டா என் டேபிளில் தான் அதுக்கு சீட் போட பட்டிருந்தது. கரெக்ட்டா சீட்டு போட்ட புண்ணியவான் வாழ்க!னு நான் மனதுக்குள் வாழ்த்தவேயில்லை. ப்ளீஸ் நம்புங்கோ!
லக்னத்துக்கு பதினோறாம் இடதுல கால் மேல கால் போட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் சுக்ரன் வேலையை காட்ட ஆரம்பித்தார். இதுல என்னை யாரும் குத்தம் சொல்லப் படாது!
"அங்கிள்! அங்கிள்!னு நன்னா மிங்கிள் ஆறாளே டா!"னு விவேக் எதோ ஒரு படத்தில் சொன்ன மாதிரி, குதிரை முதல் நாளில் இருந்தே நமது திறமை, புலமைய பார்த்து நன்னா மிங்கிள் ஆயிட்டா. என் டேபிளில் இருந்த மீதி பேரும் "குருவே! எப்படி இதெல்லாம்? உங்க கூட போட்டி போட முடியாது பா சாமி!"னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டா.
ரெண்டவது நாள் தான் இந்த பதிவோட ஹைலேட்டே!
இந்த நிகழ்சியை நடத்தின ரசகுல்லாவை கூப்பிட்டு, "கொஞ்சம் போர் அடிக்குது! அப்பப்ப சில கேம்ஸ் எல்லாம் நடத்து!"னு பொறுப்பு சிகாமணியா நான் சொன்னது தான் எனக்கே வினையா போச்சு!
"அம்பி சொன்னா அப்பீலே கிடையாது!"னு அதுவும் முடிவு பண்ணி மதியம் நல்ல தூக்கம் வர 2.45 - 3.15 வேளையில ஒரு கேமை நடத்தியது.
எல்லா டீமுக்கும் ஒரு தினசரி பேப்பரை குடுத்து அதை தரையில் போட்டு டீமில் இருக்கும் எல்லோரும் தங்கள் ஒரு காலை மட்டும் அந்த பேப்பர் மேல வைத்து கொண்டு நிக்கனும். "இது என்ன ஜுஜுபி!"னு முதலில் எல்லாரும் நின்று விட்டோம். (எங்கள் டீமில் 6 பேர்). அதுக்கு அப்புறமா அதே பேப்பரை ரெண்டாக மடித்து அதன் மேல் டீமில் உள்ள எல்லாரும் நிக்கனும். சரி நின்னாச்சு!
நாலாக மடித்து நில்லு!னு சொன்னா. காலில் உள்ள ஷுவை கழற்றி எப்படியோ சமளிச்சு நின்னாச்சு!
எட்டாக மடித்து நில்லு!
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஒரே விரலில் பேலன்ஸ் பண்ணி நின்னாச்சு!
பதினாறாக மடித்து நில்லு!
என் டீம்ல இருக்கற குதிரை அசரவேயில்லை. அழகா, என் கழுத்தை வளைத்து பிடிச்சுண்டு பேலன்ஸ் பண்ணி விட்டது. மூக்கில் மோப்பம் பிடித்து இந்த பிராண்ட் செண்ட் தான் யூஸ் பண்றியா? எனக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட்!னு சர்டிபிகேட் வேற. "டாமி கேள் செண்ட் தான் நீ யூஸ் பண்றியா?னு பதிலுக்கு நான் அவளிடம் கேக்கவேயில்லை.
மத்த டீம்ல இருக்கற பசங்க எல்லாம் "எச்சூஸ்மி! அம்பி! எனி ஹெல்ப்?"னு நக்கல் விட ஆரம்பிச்சுட்டா. அடடா! அடடா! ஜேம்ஸ்பாண்ட் படம் பாக்ற மாதிரியே இருக்கே!னு ஒரு தடியன் கமண்ட் அடிக்கறான். என்னாடா இது வம்பா போச்சு? ஒரு குழந்தை மனம் கொண்ட நல்ல உள்ளத்துக்கு இப்படி ஒரு சோதனையா?
இதுக்கு நடுவுல 3 டீம் போட்டியில் அவுட் ஆகி விட்டது!
கடைசியாக அந்த பேப்பரை மேலும் ஒரு தடவை மடித்து நிக்கற டீமுக்கு தான் பரிசு!னு ரசகுல்லா அறிவிக்க, மேலும் 2 டீம்கள் தாமாகவே விலகி கொண்டன.
இப்ப தான், குதிரை ஒரு யோசனை சொன்னது! "பேசாம அலாக்கா என்னை தூக்கிக்கோ! நீ மட்டும் பேப்பர் மேல நில்லு!"
சரி தான்! நான் என்ன அன்பே வா! எம்.ஜி.ஆரா? "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!"னு பாடிண்டு அவளை தூக்கிகறத்துக்கு? சே! ஒரு ஹனுமார் பக்தனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?
அட! நம்ம மனசு கள்ளம், கபடம் இல்லாத என் நண்பன் அர்ஜுனாவை போல வெள்ளை உள்ளம்.
விகல்பம் இல்லாம, ஒரு வேளை தூக்கிகலாம்!னு வெச்சுக்குவோம். ஆனா அந்த குதிரை, கர்ணம் மல்லேஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓர்படி பொண்ணு மாதிரி ஆஜானுபாகுவா இருக்கு. பஞ்சாப் கோதுமையின் மகிமையை பற்றி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் பாக்கறேன். வீட்ல பொண்ணு வளர்க்க சொன்னா புளி மூட்டைய வளர்த்துருக்கா!
"சத்தியமா என்னால முடியாது தாயி!"னு சொல்லிட்டேன்.
"அப்ப நான் உன்னை தூக்கறேன்!"னு கையை பிடிச்சுண்டா. ஆள விடுமா தாயே!னு நான் எஸ்கேப் ஆகி விட்டேன். இதுக்காக, "கைய பிடிச்சு இழுத்தியா?"னு ஊர் நாட்டாமைய வெச்சா பஞ்சாயத்து பண்ண முடியும்?
போட்டிய நடத்தின அந்த புண்ணியவதியும் சரி, இதுவே போதும்!னு தீர்ப்பு சொல்லிட்டா. "உனக்கு தாண்டா பம்பர் பரிசு!"னு சில சத்ருக்கள் நக்கல் விட்டா! இப்படி எல்லாம் போட்டி நடத்தினா, யாருக்காவது தூக்கம் வருமா என்ன?
பி.கு: ஒழுங்கா நடந்த கதைய உள்ளது உள்ளபடி சொல்லு!னு யாரும் இந்த குழந்தைய (நான் தான்) டார்ச்சர் பண்ணப் படாது!
அடுத்த பதிவு நெல்லை மாநாட்டு செய்திகள். (இன்னும் போட்டோக்கள் லண்டனில் இருந்து வரவில்லை)
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
யோவ்.... உன்ன எல்லாம்....
நல்லா இருய்யா. வேற என்ன சொல்லது......
//ஆனா அந்த குதிரை, கர்ணம் மல்லேஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓர்படி பொண்ணு மாதிரி ஆஜானுபாகுவா இருக்கு. பஞ்சாப் கோதுமையின் மகிமையை பற்றி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் பாக்கறேன். வீட்ல பொண்ணு வளர்க்க சொன்னா புளி மூட்டைய வளர்த்துருக்கா// ROTFL
aaga...enna scene ba....enga aapicela indha maadhiri gameslam nadathuvaalaa nu theriyalaye...cha irundhaalum kozhandhaiya ippidilaam sodhikkapdadhu... :)
ambi ..from today un kuda kaa .. :( .. nee mattum nalla ensoi panni irukey ... ambi entha company nu sollupa ..nanum inga paper pottu anga vanthuduren :D ...
sari ithu ellam as usual un karpanai thaney .. unamai sollu da raasa ... ipidi ellam solli en manasey kedukathey da pa :D
(again ithey viji parkamey irukuma ?? illaina solli vacha madiri en manathey vanguva :D ) ..
sari one thing ..kuthirai vendam pen inathey romba kevala paduthurey madiri iruku .. ponnu or pen nu sollu .. konjam govurama irukum
// ஒரு ஹனுமார் பக்தனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?//
yen ipdi unnoda leelaikalukku avara thonaikku kooptukura...katta premacharippa...pavam avar..(avarukkum kalyanam aachu nnu oru sila per kelappi viduraa...athu vera vishayam :)) )
அம்பி,
முடியலை... தாங்க முடியலை...(வடிவேலு ஸ்டைல்)....
நல்லா இருப்பா... நல்லா இரு.. (சிவாஜி ஸ்டைல்).... ஆத்துல ஒரு கால் கட்டு போட சொல்ல வேண்டியது தான். அது சரி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும்... கனவில வேற என்ன நடந்தது... ஆமாம் அது என்ன திருனெல்வேலியில நிறைய ப்ளாஸ்த்ரி, பர்னால்... எல்லாம் வாங்கிண்டு போனீங்களாமே.....உபயோகம் ஆகுதா?
poramaila blog posungi poachu...aanalum umakku machamaiya..intha game nalla iruku...details kudutha unga prantha mansauku nanri...
இந்தப் படு மொக்கையான பதிவுக்கு என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களோட ஆதர வு கிடையாது! கர்மம், கர்மம், கல்லிடைக்குறிச்சிக்குத் தந்தி போயிருக்கு! :D
அம்பி,
பொய் சொல்லாமல் கூறும்! இது ஜெயம் ரவி, காம்னா ஜெத்மலானி( இந்த நேரம் பார்த்து படம் பேர் மறந்து போனதுதான் கொடுமை!) நடிச்ச படத்துல வற சீன்தானே! அதை நீர் உமக்கு நடந்தது போல பில்டப் விடறீர்! :)
அம்பி,
மொதல்ல அப்படி ஒரு பிகர நீங்க குதிரைன்னு சொன்னது அந்த பஞ்சாப் சிட்டுக்குத் தெரிஞ்ச அப்போ தெரியும் "Horse Power"ங்குற வார்த்தைக்கு சரியான அர்த்தம்!!! :P
அது எப்படி அம்பி இப்படி ஒரு பில்டப்?? யார கரெட்க் பண்ணி அந்த பொண்ண உங்க டேபிள்'ல உட்கார வெச்சீங்க???
இதுல "உங்க" கூட நல்ல மிங்கிள் ஆனாங்களா அவங்க?? இது அவங்களுக்கு தெரியுமா?? ஏன்னா பொதுவா எதுத்த மாதிரி உட்காந்து இருக்குற ஒரு சின்னப் பையன் ஓவர ஜொள்ளு விட்டுகிட்டு இருந்தா அய்யோ பாவமேன்னு சில பொண்ணுங்க கொஞ்சம் எண்டர்டெயின் பண்ணிவாங்க... அப்படி ஏதாவது பண்ணினாங்களோ என்னவோ.... இப்படி அவங்களும் பிளாக் எழுதினா அதை படிச்சாதான் தெரியும்... :P
சரி சரி விடுங்க... மத்த பசங்கள கொஞ்சம் உசுப்பேத்த உங்கள பத்தி கொஞ்சம் ஓவரா பில்டப் கொடுத்து இருக்கீங்க... புரியுது!!!
இங்கு கமெண்ட் போட்டு இருக்கும் மிச்ச மீது ஆண்கள்... அட பசங்களா... இதுக்கே இப்படி புகையுறீங்க... கஷ்டம்டா சாமி!!! இதுல இது கற்பனைதானேன்னு ஒரு போனஸ் ஆறுதல் வேற....
ஏதோ உங்க சந்தோஷம் ... அனுபவீங்க.... அம்பி... நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா உங்க மனைவிக்கு இந்த போஸ்ட கண்டிப்பா காட்டனும் சரியா??? :P
அம்பி கவலையேபடாதே.இந்தப் பதிவை ஒரு காபி எடுத்துண்டு. நான் கல்லிடைகுரிச்சிக்கு கிளம்பியாச்சு . பாவி நீ பன்னற அக்கிரமத்துக்கு என்னை வேறு ஐஸ்லேண்டில் எறக்கிவிட்டுட்டே.உங்க அம்மா அப்பா என்னைப் பத்தி நல்லபடியா நினைச்சுண்டு இருக்கா.முதல்ல சீனுவை உங்கிட்டேயிருந்து தோகா அனுப்பனும்.பாவம் அவன் நல்ல பையன்(கீதவைப்பொறுத்தவரை குண்டர் படை தலைவன்) பஞ்சாபி கோதுமை.... புளியமூட்டையா....
வா வா வெச்சுஇருக்கேன். மூட்டை முடிச்சோட கிளம்ப ரெடியா இரு கல்லிடைகுறுச்சிக்கு.
இதைப் பார்த்தவுடன் கீதாமேடம் முகத்தில் என்ன ஒரு ஆனந்தம். இனிமே ஆனந்த நடமாடுவார் தில்லை........ தான்
//சமத்தா பீலா வுடறதுக்கு கூட சில பெரியவாளுடைய ஆசிர்வாதம் வாங்கியிருக்க பாரு அது தான்://
யாருங்க அந்த பெரியவங்க?
அம்பி நல்லவ்ருங்கோ.. வல்லவருங்கோ. தங்கம்ங்கோ.. கோல்டுங்கோ.. டையமன்டுங்கோ..
எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா, எல்லாம் இருக்கு அதுனால இத பார்த்து எல்லாம் பொறாமை பட மாட்டோம்...இருந்தாலும் காதுல மட்டும் புகை வருது :-)
ayyyoda.....en ippdi family imagea damage panringa...ippolaam naan too ushar..jaadagam vanthovudana....lagnathula eleventh house la sukran irukkarannuu than first check,,,,,ellam ungalayum arjunayum paathu bayanthu poitten!
ha ha ha, nalla eludhi irrukeeenga thala...
koduthadhellam koduthaan, avan yaaarukaaga koduthaan.......
(thala, idhu ungalukay kay kay nalla irrukaa?)
kannu pattuda pogudhu...poi phastu dhisti suthi podunga...
@veda:-// உன்னை பத்தி சரியா தெரியலை தெரிஞ்சுருந்தா உன்னய தூக்கி போட்டு மிதிச்சுருக்கும்.
appadi enna unmai? ungalukku therinchadhu?
//நடத்து ராசா நடத்து.//
potti'nu vandhuta enga thala oru singam...adhu theriaaama,pala peru avara vaarureeenga.... thala pesikuvaar michathai.....
வேதா ஏதோ அவன் தான் பேரை போட்டான்னா நீங்க வெறே கன்ப்ர்ம் பண்ணனுமா. இது சிறியோர்களால் நிச்சியக்கப்பட்டது.நடேசன் சார் நீங்க வெறே அமைதியக இருக்கிறீர்கல்.
நாகை சிவா நீங்க வேறு இதை ஊதி பெருசு பண்ணனுமா. கொஞ்சம் அடக்கி வாசிக்க கூடாதா
அம்மி உன்னலே எவ்வள்வு கஷ்டம்.கல்லடை பஸ் ஸ்டேண்டுலிருந்து பேசரேன் தெரு பேரு சொல்லு.
@nagai siva, ஹி, ஹி, என்ன புலி சூடான்ல ரொம்ப காஞ்சு போயி இருக்க போலிருக்கு? :)
@ggopal, he hee, neenga than unga Aapichla eduthu sollanum ithellam. :)
@vicky, ha haa, i know that U r searching for GF. intha nerathula naan ithai ezhuthi irukka koodathu.
//sari ithu ellam as usual un karpanai thaney .. //
ithu kathai alla nijam! nijam! nijame! pic vera podalaamnu thaan nenachen, aprom unga vaytherichal summa vudumaa? :)
viji ku ellam bayapadathaa!
@Ram, cha! naanum atha thaan solla vanthen. naane oru hanumaar bakthan, enakku poi ipdi oru sothanaiya? :)
@balaji, he hee, LOL on your comment. nejama ithu unmai thanungoo! :)
//சமத்தா பீலா வுடறதுக்கு கூட சில பெரியவாளுடைய ஆசிர்வாதம் வாங்கியிருக்க பாரு அது தான்//
@veda, he hee, peela ellam illai. deivamee! naama(ungalaiyum serthu thaan) buthishaaligal.
@gils, vaytherichalukku gelusil kudinga anna! :)
//என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களோட ஆதர வு கிடையாது! //
@மொக்கை பதிவாளர் கீதா அவர்களே! இத பாருடா! அதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு இல்ல? வேதா இதெல்லாம் கேட்கறது இல்லையா? :)
@indianangel, is it? i'ven't watched any tamil movie for the past 3 months. i think you're referring to ithaya thirudan? :)
//யார கரெட்க் பண்ணி அந்த பொண்ண உங்க டேபிள்'ல உட்கார வெச்சீங்க???//
@kanya, வா மா ஜில்லு! antha rasagulla namakku romba dosthu! :)
naan antha horsea paathu jollu ellam vudala, it seems athu thaan overaa vazhinchufying.
//நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா உங்க மனைவிக்கு இந்த போஸ்ட கண்டிப்பா காட்டனும் சரியா??? //
கல்யாணதுக்கு முன்னாடியே நாங்க நல்லவங்க தான்!னு சொல்லுவோம் இல்ல? :) me and arjuna are like thamira ilai thaneer pola otti ottamal iruppom intha ulaga vaazhvil. so these things never affect our kozhanthai manasu! :)
//இந்தப் பதிவை ஒரு காபி எடுத்துண்டு. நான் கல்லிடைகுரிச்சிக்கு கிளம்பியாச்சு//
@TRC sir, i already made a call to my mom and told this funny event. she knows me very well and laughed.
@syam, he hee, un commentukku thaan avala waited. jelusil saapdu kanna!
//ellam ungalayum arjunayum paathu bayanthu poitten!//
@subha, cha! cha! that is a good thing subha, don't ignore those horos. On a serious note,they are very open type, always admire the beauty, never betrays their spouse when they got engaged.
//potti'nu vandhuta enga thala oru singam//
@mydays, he hee, apdi sollu pa en thangakame! drishti suthi poda solidaren. nee sonna sari thaan!
//அம்பி உன்னலே எவ்வள்வு கஷ்டம்.கல்லடை பஸ் ஸ்டேண்டுலிருந்து பேசரேன் தெரு பேரு சொல்லு.//
@TRC sir, ஒழுங்கா எல்லாரும் TRC சாரை "பெரியவங்க!"னு ஒத்துகுங்க பா! சார்! நீங்க மெயிலுல சொன்ன மாதிரியே சொல்லிட்டேன். :)
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
(வேறென்ன? பெருமூச்சு தான்)
:)
ஆப்பு அம்பி, எம்.எஸ்.(மொக்கை ஸ்பெஷலிஸ்ட்), என்னோட பதிவு மொக்கையா? ம்ஹும், அங்கங்கே என்னோட பதிவைப் படிச்சுட்டு எப்படி எல்லாம் பின்னூட்டம் விடறாங்க? பின்னூட்டம் வாங்கறதுக்காக இப்படி எல்லாமா பதிவு போடறது?வேதா, தி.ரா.ச. நாகை சிவா, ச்யாம் எல்லாரும் இப்போ என் பக்கம் வந்தாச்சு.
@தி.ரா.ச. சார், தெருப் பேரு எனக்குத் தெரியும், நான் அனுப்பிச்சுடறேன். பதிலும் வாங்கிப் போடறேன் ஒரு பதிவாவே
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Kathai super !! Kanavu kaanrathuku enna..ensoi ;-)
//வேதா, தி.ரா.ச. நாகை சிவா, ச்யாம் எல்லாரும் இப்போ என் பக்கம் வந்தாச்சு. //
கீதா மேடம், மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் என்றுமே நியாயத்தின் பக்கம் தான். :)))
//ஹி, ஹி, என்ன புலி சூடான்ல ரொம்ப காஞ்சு போயி இருக்க போலிருக்கு? :)//
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் போல வருமா. சொல்லு :)
@சிவா, ரொம்ப டாங்ஸு, என் பக்கம்னு சொன்னதுக்கு, என்ன இருந்தாலும் புலி புலிதான்.
@தி.ரா.ச. சார், நடேசன் சார் ஊரிலேயே இல்லை,அவர் உதவிக்கு வரமாட்டார்.வந்தாலும் என் பக்கம்தான் பேசுவார். ஆகவே ஆப்பு அம்பியும், வேதாவும் ஜகா வாங்கிக்குங்க.
adangkoka makka!!!
yow inga oru jigadi kuda kidayathu!!kadupa iruku - yow unnaku engayo (???) macham iruku!!! ithuku thaan company-la poi velai parkanumnum :( - en neram university-la ukanthutu iruken!! yow yannaiku oru kaalam vantha intha elai poonaikum oru kaalam varamala pogum! ini vanthu enna piryojanam! too late!!hmmmmmmmmmmm :D LOL
yow ambi - en valkaila ithu varaikum oru ponnu kuda naan pesinathu kooda kedayathu :((..nenaicha alugaiya varuthu ambi :((..
அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள்கள்.உங்க போஸ்ட படிச்சதும் இந்த பழமொழிதான் நியாபகத்துக்கு வந்துச்சு.;)
Ambi,
anyaayam.....akkiramam...idhu adukumaa...
appadinu mathavaa soluva, engirunthaalum nallaa iru- nu nan solren :)
//வேறென்ன? பெருமூச்சு தான்//
@kaipullai, விடுங்க கைபுள்ள, இது வாலிப வயசு! :D
@kamal, sari, sari, puriyuthu! :)
@pavithra, pic kooda potrupen, but ithuke inga ivloo pugaichal. :)
//அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் போல வருமா. சொல்லு //
@nagai siva, apdinu solli manasa thethikoo! sudanla varathugal ellaam discovery channela thaan varum! :)
//நீங்க வாங்குறீங்களே உங்க பதிவுல அது தான?:) //
@veda, athaa thaan! santhegame illai. :)
@arjuna, ROTFL on your comment.
//inga oru jigadi kuda kidayathu//
jigidi illa oril kudi irukka vendaam!nu avaiyaar solli irukaanga pa! LOL.
//ini vanthu enna piryojanam! too late!!//
athaan march maasam final verdict solla poraangale! LOL.
//en valkaila ithu varaikum oru ponnu kuda naan pesinathu kooda kedayathu //
nanba, itha ennai namba solriyaa? i'm flattened, pls somebody splash water on my face. :D
//அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அரிவாள்கள்.//
@gops, puriyuthu shishya, enna panrathu, Un guru rombaa nallavaru! ithoo pogaiyara maathiri theriyuthee? :D
@prabhu, romba danks paa! nee oruthanaavathu support panriyee! :D
Enna idhellaam... Ennappaa.. Seri Seri.. lifela idhellaam oralavukku irukkathaan venum...
@வேதா,
நான் எங்கே என் பதிவுலே ஜகா வாங்கறேன். அம்பி தான் பங்களூர் மீட்டிங் பத்தி எழுதிடுவேன், எழுதிடுவேன்னு பூச்சாண்டி காட்டறாரே அது மாதிரியா? நான் வந்ததுமே எழுதிட்டேனே! இனிமேல் பாருங்க இருக்கு உங்க எல்லாருக்கும். :D
@அம்பி, ஆப்பு அம்பி,
வேதா எனக்கு மெயிலில் அம்பியைப் பத்திக் கொடுத்த certificate-ஐ forward பண்ணறேன் பார்க்கவும். :D
Ambi - Thirai Kadal Odiyum Jigadikalai Thedunu avaiyaar(??) sollirukeerar pa :D LOL
Annaaa...ambi anna...kaalangaarthaala kaadhulerundu pugai vara vittutiyae...
Enkitta solli irunda inga ennadi ma...unnai punjab varaikkum thookittu poren nu solli iruppenae??
Hmmmmmm...enagayo machcham ya umakku...
Amma kitta solren vaa unnai pathi!! Punjab kuthiraiya thookariya rasa nee...appadiye oru print out eduthu unga amma-ku anuppi vaikaren, unnoda amma anegama oru paper kaila koduthu adhulaye iru, veetuku varadha-nduva he he
vishayam kai meeri porathukkulla aathula sollanum pola irukke!! sari illiye!!
hey ambi promise ah poramai pada matten :D ... poto podu da mams :D
//lifela idhellaam oralavukku irukkathaan venum//
@sasi, he hee, danku danku! :)
//வேதா எனக்கு மெயிலில் அம்பியைப் பத்திக் கொடுத்த certificate-ஐ forward பண்ணறேன் பார்க்கவும்.//
@geetha, i'ven't got any mail from U yet. apdiyee veda ethaavathu solli irunthaalum, avanga nallavanga, vaazhvu thantha theyvam, solla urimai irukku. intha sindu mudiyara velai ellam ambita vendaam. naangale periya dakaldi ithula! :)
@arjuna, he hee ROTFL on your comment. :)
//Amma kitta solren vaa unnai pathi!! //
@usha, amma ta ellam solli kudukaatha, nimitaampazham tharuva. me romba paavam! :)
//inga ennadi ma...unnai punjab varaikkum thookittu poren nu solli iruppenae??
//
@harish, he hee ROTFl :) ne solli iruppa, ok na thukiyum iruppa! :)
@kutti, yow! Aal aaluku miraataatheenga, already en thambi miratittu irukkan :)
@vicky, thoda, already my image sarinjufying, pic verayaa? grrrrr.
antha horse paartha, aprom horse power ennanu kaatiduvaa! :)
ambi post padikum bodhu ore siripu thaan....SJ.Surya padam maadhiri iruku :-)
@usha
//unga amma-ku anuppi vaikaren, unnoda amma anegama oru paper kaila koduthu adhulaye iru, veetuku varadha-nduva he he
//
haha..chancela KC....unga autosignature enna typiclly ursa?? :D
LOL.. enjoyed this post...
aanalum ippadi fellow bloggers ai pugaiya vechuteengalae:-)
//இப்ப நீ கூட தான் என் பதிவை பத்தி அவங்களுக்கு மெயில் அனுப்பி போட்டு கொடுத்த இதெல்லாம் நான் கண்டுக்கிட்டேனா, சரி விடு வயசாயிடுச்சில்ல //
@veda, sari, sari, santhadi saakula kuthi kaatanumaa? :) athu yaaro oru ariyaa kozhanthai (nan than) theriyaama senjuttan. periya manasu pannunga ejamaan! LOL :)
@bala.g, danks and happy that U enjoyed. but i don't like s.j.surya as an actor. naan romba nalla payan pa! this happened just like that. :)
@gils, enna sirippu? siru pilla thanama illa irukku! :)
@raji, he hee danks akka. avanga ellam itha digest panra alavukku pakuva padalai. small boys! :)
அடப்பாவி அம்பி.. இப்படி ஒரு பதிவை போட்டு எல்லோருடைய வயிதெரிச்சலை கொட்டிகிட்டியா.. போதும் போதும்.. இப்பவே கண்ணை கட்டுதே..
மேல சொன்ன மாதிரி எல்லாம் நான் சொல்வேன்னு மட்டும் நினைக்காத..அம்பி..ஏன்னா உன் கூட விளையாண்டது பஞ்சாபி குதிரை இல்லை.. அது பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரிங்கிற செய்தி எப்பவோ எனக்கு வந்திடுச்சு.. அது இப்படி ஒரு பில்டப்பா.. அடப் போப்பா!
ambi.ushavachum paravala...unga veetla solli paperuku recommned panuvaanga...enga veetlalaam paper kooda kidyathu...best..punjabi kathuka vendi thaan :D
btw...ambi unga patta peyar sooper...ammanchi postuku badila...AAPU AMBI psotnu mahirunga..supera iruku..
courtsey:
geetha samabasivam
@ambi...
yappa AC... kuliru thaangala... adutha kadi eppo??
seekiram post pannu rasa!!!
//ஏன்னா உன் கூட விளையாண்டது பஞ்சாபி குதிரை இல்லை.. அது பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரிங்கிற செய்தி எப்பவோ எனக்கு வந்திடுச்சு.. //
@karthik, he hee, un pugachal enakku theriyuthu, ennapa panrathu, en raasi apdi, chapathis kooda thaan kummi adikka vendi irukku! :)LOL.
//enga veetlalaam paper kooda kidyathu...best..punjabi kathuka vendi thaan //
@gils, ahaa, ipdi oru aasaiya unakku? avangalukku saapattu theeni pottu mudiyaathu paa! yosichukoo. :)
//AAPU AMBI psotnu mahirunga..supera iruku..//
@gils, cha! intha geetha madam total damage panraanga, seekram avangalukku oru post podanum. Grrrr.
@kanya, seekram post podaren yekka, Aapichla ekka chakka worku! :)
AAPPU AMBI, I am very happy and going to drink PAL PAYASAM. KNOW WHY? hi hi hi hi hi sirippu thangaliyee! :D :D ;D ;D
oru husband wife (maama maami) kalandhunda trainingla indha game panna poga, maama groupla oru punjabi gudirai - avar tholla thonga, maami inoru groulendhu muraikka - indha game ala kudumba kalagame nadandu irukku ... enzoy
Post a Comment