Saturday, August 26, 2006
மாபெரும் வெற்றி பெற்ற நெல்லை பிளாக்கர்கள் மாநாடு!
நெல்லை பிளாகர்கள் மாநாட்டுக்கு பக்காவா பிளான் பண்ணி வைத்து இருந்த நேரத்தில், நம்ம ஆபிஸ்ல மேனேஜர், "அம்பி! லீவு இப்ப கிடையாது!"னு டமால்னு ஒரு குண்டை தூக்கி போட்டார். ஆஹா! இப்பவே எதிர் கட்சியின் சதி தொடங்கி விட்டதா?னு ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். அத தொடர்ந்து என் உடன்பிறப்புடன் அவசர ஆலோசனை நடத்தி, பயண திட்டத்தை மாற்றி விட்டேன். முந்தய நாளில் எனது அருமை அண்ணன் டுபுக்கு போனில் அழைத்து நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.
அப்புறம் என்ன? "எலெய்! எடுறா வண்டிய!"னு கிளம்பி விட்டேன். நெல்லைக்கு சரியாக 65 கிலோமீட்டர் தொலைவில் வரும் போது பஸ் டயர் பஞ்சர். சே! இப்படி ஒரு சோதனையா? "எத்தனை சதி வந்தாலும் முறியடிப்போம்! இப்படை தோற்பின் எப்படை வெல்லும்?"னு நமது தொண்டர்களின் உற்சாக குரல் கேட்டு சிலிர்த்து விட்டேன்.
பெங்க்ளுரில் இருந்து புறப்படும் போதே எனக்கு சிறிது உடல் நல குறைவு, ஜல தோஷம், இருமல் எல்லாம் இருந்தது. இருந்தாலும், கொள்கை பெரிதா? நமது உடல் நலம் பெரிதா? வீடு பெரிதா? நாடு பெரிதா? என்ற தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்திட, பிடரிகள் சிலிர்க்க, கர்ஜனை புரிந்து, தோள் தட்டி,அதோ தெரிகிறது பார் இமயம்! என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்தேன் கல்லிடை.
வந்து விட்டான் எங்கள் யசோதை இளஞ்சிங்கம்! என்று அன்னையின் ஆனந்த கண்ணீர் ஒருபுறம், ஆபிஸ்ல ஒழுங்கா வேலை எல்லாம் செய்றியா?னு தந்தையின் அன்பான விசாரிப்புகள் ஒரு பக்கம் என்றால், "என்ன மாப்ளே! பெங்க்ளுரில் இருந்து தனியா தான் வந்தியா? சே! சப்புனு போச்சே!"னு நண்பர்களின் வழக்கமான வாரல்கள் மறுபுறம் என்று கச்சேரி ஆரம்பமே களை கட்ட தொடங்கியது.
2 வாரமாக துவைக்காத டிஷர்ட் நாலு, துவைத்து 2 மாதமே ஆன(ஹி,ஹி) 2 ஜீன்ஸ்களை என் பையில் இருந்து என் அம்மா கைப்பற்றினார்கள்.
உடல் நிலை சரி இல்லாததால் அம்மா தாமிர பரணி நதியில் குளிக்க 144 தடை உத்தரவு பிறப்பித்தார்கள். பின் நான் கொஞ்சம் அழுது அடம் பிடித்து, உருண்டு புரண்டதில், 30 நிமிடம் மட்டும் சென்று வர அனுமதி கிடைத்தது. ஆனால் நான் 1 மணி நேரம் ஜலக்ரீடை நடத்தி விட்டு தான் வந்தேன்! அதன் பலனாக நிமிட்டாம்பழம் ஒன்று கூட கிடைத்தது,அது வேறு விஷயம்.
பின் வழக்கம் போல தட்டில் மல்லிகை பூக்கள்(தமிழ்நாட்டில்,இட்லினு பொதுவாக சொல்வார்கள்) தக்காளி சட்னியுடன், சுட சுட பறிமாறப்பட்டன.
அதன் பின் அம்மாவுடன் துணைக்கு சமையல் செய்து கொண்டே(சும்மா வறுத்தல், கிண்டுதல் தான்) ஆபிஸ் கதை, சில மாஹானுபாவுலு பிளாக்கர்கள் பற்றி எல்லாம் கதையடித்து விட்டு மாலை மாநாடுக்கு செல்ல தயார் ஆனேன். எல்லா மாவட்டத்திலிருந்தும் கூட்டம் வந்திருப்பதால் கூட்டம் பெரிய திடலுக்கு மாற்றபட்டதாக என் அண்ணாச்சி தகவல் சொன்னார்.
மாவட்ட வாரியாக வண்டி கட்டிக் கொண்டு "உடல் மண்ணுக்கு! உயிர் பிளாக்குக்கு!
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!"னு வந்திருக்கும் கூட்டதின் ஒரு பகுதி தான் இது!
மாலை ஆனதும், என் அண்ணாச்சியின் காரை பின் தொடர்ந்து ராமரை தொடரும் இளவலை போல நான் மக்கள் கூட்டதில் நீந்தி செல்லும் காட்சியை பாரீர்.
மாநாட்டின் முக்கிய ஹைலேட்டே அம்பி தலைமையில் நடந்த சைக்கிள் பேரணி தான்!
"சிங்கமொன்று புறப்பட்டதே!
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!"னு குழாய் மைக் செட்டில் பாடல் ஒலிபரப்ப பட்டது.
"முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.
நமக்கு கொள்கை தானே முக்கியம்!
பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது.
"ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. மீண்டும், அவையிரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே?"
(ஆடு எங்கடா பேசும்?னு கமண்ட் போட கூடாது! சொல்லிட்டேன் ஆமா!)
3 வருடம் கழித்து இருவரும் சந்தித்து கொள்கிறோம். அந்த சந்திப்பு, வராலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சந்திப்பு. நதி கடலை சேருவது போன்றது.
"நாம் இருவரும் சேரும் சமயம்! நம் கைகளில் வரும் இமயம்!"
தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்).
இதயமும், இதயமும் அங்கு பேசி கொண்டன. எனவே வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. (செமத்தியா என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டினார்!னு உண்மையை இங்கு சொல்லவா முடியும்?).
மாநாட்டிற்க்கு வந்திருந்த மழலை பிளாக்கர்கள் படை(என்னையும் சேர்த்து தான்)
சித்தப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டால்
இதற்கு தானே செல்லம் 600 கிலோமீட்டர் தாண்டி வந்தேன்!
பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) பதிவில் முதல் கமண்ட் போடுபவர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், ரவா லட்டு, பால் திரட்டி பால் என தாராளமாக குகிள்.காம் வழங்க வேண்டும்.
2)மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம், தனது சொந்த செலவில் தங்க கங்கணம் வழங்குவார்.
பிளாக் ஸ்பாட்டை தடை செய்ததற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் இயற்றப் பட்டது.
1) ஆட்சியாளர்கள் 108 தோப்பு கரணம் போட வேண்டும். இல்லாவிட்டால், மாதம் ஒரு போஸ்ட் போடும் ஒரு குழந்தை, இனி வருடம் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்து விடும்.
2) "தினம் ஒரு போஸ்ட்" புகழ் சுபா இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொக்கை போஸ்ட் போட ஆரம்பித்து விடுவார்கள்.
3) பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் இந்த தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் வீட்டிலும் இனி புளியோதரை கேட்க ஆரம்பித்து விடுவார்.
வந்திருந்த அத்தனை பேருக்கும்(இதை படிப்பவர்களுக்கும் சேர்த்து தான்) நெல்லை அல்வா கிண்டி கொடுக்கப்பட்டது. இவ்வாறு நெல்லை மாநாடு இனிதே நிறைவுற்றது.
பி.கு: மேல சொன்ன மாதிரி எல்லாம் மாநாடு நடத்த எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனால் நானும், என் அண்ணனும் அவர்கள் மாமியார் வீட்டு (சே! சே! லாக்கப் எல்லாம் இல்லை) ஹாலில் சுட சுட வாழைக்காய், உருளைகிழங்கு பஜ்ஜி, கெட்டி சட்னியுடன் பிளாக்கர்கள் மாநாட்டை கொண்டாடினோம். ஒரு சின்ன வருத்தம், வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
66 comments:
grrrrrr..........ஆப்பு அம்பி,
மூத்த பதிவாளர் நானா? எனக்கு முன்னாலே எல்லாரையும் மொக்கைப் பதிவாலே ரம்பம் போடும் ஆப்பு அம்பியா? தங்கக் கங்கணம் வேணுமா? வெறும் நூலில் கூடக் கிடையாது.. உங்க பதிவுக்குப் பின்னூட்டமே ஜாஸ்தி! நான் முதல் பின்னூட்டம் கொடுத்திருக்கிறதாலே ஸ்வீட் எல்லாம் எனக்குத் தான். உடனே அனுப்பி வைங்க! :D
மொத்தத்தில் மாநாடு மாநாடு பூச்சி காமிச்சு,ஆபிஸுக்கு அல்வா கொடுத்து எங்களுக்கு படம் காண்பிச்சதுதான் மிச்சம்.ஆனாலும் உருப்படியா எழுதினது இந்த வரிகள் தான்
மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம் .
adappavi.. april masam poda vendiyadha ippa potturukka. anyways, nalla yeludhi, nalla thiruppumunai koduthu irukka. wishes!!
"வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது." - he he he ... rombo sirippu vandhudhu (vaayla dhaan)
chitappakku mutham kudkkara chittu rombo sweeta irukku.
adhu yenna geetha madam mela ivvlo kaduppu unakku?? postku post thakkara??
pona post nan nerathukku padichitten (th)ambi. adhukku poruthama kalaikkara madhiri comment yeludhanumnu yosichi yosichi(?) marandhutten, sorry.
அம்பி நடு ராத்திரீனு கூட பார்க்காமல் இதோ உங்க அண்ணா வூட்டூக்கு கிளம்பறேன்.. அவருக்கு இரண்டு அடி போட்டுட்டு.. அப்புறம்.. உங்களுக்கு ரெண்டு கொரியர்ல அனுப்பறேன்... வாங்கிக்கங்க...ப்ளீஸ்....
thoooo, ippadilam scene unaku thevaiya? Add this to ur kolgai list, indha madhiri scene podubavargaluku Usha (a) anniyai vandhu pranavadhai seiva...grrrr
Ambi ji...ungala paatha en friend anna nyaabagam varadu. Avar saayal irukku :-)
Semaya enjoy panni irukeenga pola?
Ambi,
romba nalla interesting'a ezhudirukeenga post'la oru vari kooda orupadiya illanallum :) nalla svarasiyamaagave irundhadhu
ச்சூப்பர் மாநாடு!!
"பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது. "
Indril irunthu engal ambiku blog ulaga VAIKO endru peyar sutukiren..
Blog ulaga Vaiko avargalae, ungal blog manadu, cheguvara nadathiya manadau pol varalatru sirapu mika manadu..
Andru fidel castro americar-kalai ethirthu pala theermanangalai eduthathu pol indru nee palana (oops sry) pala theermanagal eduthu vitaiyada kanmani :D..
En ila singame, ellam vivarama eluthinaaye, toilet ponnathey mattun ellutha vilayada en kanmani?? andru mukiyama kolai purathuku ponniya pa?? ROTFL
verungaiyala muzham podurathunnu kelvi pattu irukken..ippo thaan padikkeren eppa saami..
etho oru oorla nitela koLLai adikka poravan maathiri poyittu, athukku cyce peraninnu oru peru vera.. rounds vantha police kitta round katti adi vanginathai naan vera yaarukum solla matten ambi.. yerkanave udambu punnu ithula manasulaiyuma..
adivangittu office pona piraku, punjabi kuthirai vanthu etti paththuchcha illai etti mithichchatha
ithukke intha built-up na.. punjabi kuthirai kathaiyai ninachchu paththen..
thalainagaram padathula vadivelu trishavai ninachchu kanavu kaangira mathiri illai irukku...
Hey very sweet!! :)
Konja naal indha Blog pakkam varala- Romba miss panniten pola. Enn tag pakala pola! :)
Genrly, Chithapaas are spl - I love my chithapaa! Enanu/Yennu solla therila...
mr.aaapu ambi..kiss adikara kutti paapa sri sutti...one big poosanikaai vaangi dristhi suthi podungo...junior vikatanla MDMK rally pathi article padicha effect....
@geetha, உங்களுக்கு ஷுகர், அதனால ஸ்வீட் எல்லாம் கிடையாது! ஹி, ஹி. :)
@veda, வாழ்வளித்த தெய்வம் வேதாவுக்கு ரவா லட்டு பார்ஸல்ல்ல்ல்ல். :)
//ஆனாலும் உருப்படியா எழுதினது இந்த வரிகள் தான்//
@TRC sir, ஒரு வார்த்தைனாலும் திருவார்த்தையா சொன்னீங்க போங்கோ! ஹி, ஹி.
@shree, he hee, danku danku! i know that U'll ensoii in that line. :)
yeeh, she is chooo sweet. btw chithappavum smart! nu solli irukalaam, paravayilla.
adipaavi, oru comment podarathuku unakuu enna kollai? :)
@balaji, he hee, semaya unga kitta build-up kuduthaara? nalla naalu podungka. btw, unga parcel vanthuduchu! :)
@usha, he hee, sari, sari, enniki thaan nee thupaama irunthruka? :)
@harish, is it? ulagathula 7 per ore maathiri irupaangalaame! :) danks, yeeh enjoyeed very much.
@indianangel, he hee, orupadiya illaiyaa? grrrr. :)
@nateshan, danku, danku! pona post padichella? i've quoted U! :)
//cheguvara nadathiya manadau pol varalatru sirapu mika manadu//
@arjuna, nanba, i'm flattened. mudiyalai paa ennala. btw, pattam ellam vendaam. :)
@karthik, he hee, ithellam kandukka padathu! nee innum antha panjabi kuthiraiya marakalaiyaa? but athu kathayalla nijam. :)
@marutham, danks, danks, yeeh, U've absconded for along time. today i will check out your tag. :)
@gils, ohh danks, Uk la poosani kay kidaikumaa?nu theriyalai. :)
ஆஹா! என்ன ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மாநாடு? லாகூர் தீர்மானம் மாதிரி என்ன ஒரு ப்ளாக் உலகையே மாற்ற இருக்கும் தீர்மானம். வரலாற்று ஏடுகளில் இடம் பெற வேண்டிய அருமையான புகைப்படங்கள்.
படத்தை எல்லாம் போட்டுட்டீங்க. இனிமே "வீ வாண்ட் அம்பி, வீ வாண்ட் அம்பி"ன்னு பொண்ணுங்க எல்லாம் லைன்ல நிக்க போறாங்க. ஆனா யாரு அம்பி, யாரு அண்ணாத்த டுபுக்குன்னு தெளிவா எழுதிடுங்க. இல்லன்னா "ராங் கால்" போயிடப் போவுது? ஏன் சொல்றேன்னா ஏற்கனவே அகர்வால், பஞ்சாபி தொல்லை அண்ணாத்தேக்கு உண்டு போல...அதோட தமிழ் நாட்டுத் தொல்லையையும் சேர்த்து ஏற்படுத்திக் கொடுத்த பாவம் உங்களுக்கு வேணாம்.
:)
ambi, photo-ku nalla pose tharel....veetla ponnu paaka solla vendiyadhu thaane?? en ivlo varutham??
Idhe rangela yaar veetlayaavadhu sojji saapittu chennai maanataium mudikkira ideavaa.. Nellai maanaatai paatha appuram, chennai maanatai pathi nenachaale ennamo pannudhu.. Beachla maanatta potu sundal poriyoda mudichidura idea edhum irukkaa.. Nejamma Alwa kudukkaradhu Alwa kudukkaradhunnu kelvi pattu irukken.. Tirunelveli Idhu dhaan alwa kudukkaradhunnu proof panni kanbichteenga.. Usha thuppinadhu thappe illa... Ennatha thuppi, namakkellaam oraikkavaa pogudhu.. Appuram geetha madam utpada silara anusarichi vechukkonga.. Illanna samaythula romba kastam aagidum.. Karthikku andha punjab horse blog padichadila irundhu unga mela ore gaandu pola irukku.. Romba nalla vaangirukkapdi.. Ennamo ponga.
ஆப்பு அம்பி,
கலியுக நாரதர் அம்பி,
ப்ளாக் உலக வைகோ,
எதுவுமே சரியா சொல்லத் தெரியலை. வேதா சொல்றது சரிதான். Aappu Ambi is always wrong. என் வயசு உட்பட. யாரும் நம்பாதீங்க. ஸ்வீட் நானே வாங்கி நானே சாப்பிட்டுக்கறேன், கஞ்சூஸ் அம்பி. :D
@தி.ரா.ச. சார், இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை. அம்பியைத் தூண்டி விடறீங்க? :D
inna build up ba...naane paravaala pola irukke...
//தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்)//
ROTFL...
adhellaam irukkatum...alwa enga??? :)
//படத்தை எல்லாம் போட்டுட்டீங்க. இனிமே "வீ வாண்ட் அம்பி, வீ வாண்ட் அம்பி"ன்னு பொண்ணுங்க எல்லாம் லைன்ல நிக்க போறாங்க. //
@kaipullai, ஹி, ஹி, போங்க அண்ணே! உங்களுக்கு எப்பவும் தமாசு தான்! (இது எல்லாம் நமது ஒப்பந்தப்படி தானே?)
//ஆனா யாரு அம்பி, யாரு அண்ணாத்த டுபுக்குன்னு தெளிவா எழுதிடுங்க. இல்லன்னா "ராங் கால்" போயிடப் போவுது?//
ஹி, ஹி, அதுக்கு தான் சித்தப்பா படம். ராங்க் கால் போனா அங்கே எங்க மன்னி இருக்காங்க, சும்மா, பூரி கட்டை பறக்கும்.
@bala.g, he he, danku! danku! me no varutham at all. :)
@veda, annanukku eppovume thamaasu thaan! :)
@sasi, alva epdi irukku? chuppeer illa? sari, sari, chennai meet kalakkiruvoom. ok vaa? :)
//என் வயசு உட்பட. யாரும் நம்பாதீங்க. ஸ்வீட் நானே வாங்கி நானே சாப்பிட்டுக்கறேன், கஞ்சூஸ் அம்பி.//
@geetha, ஹி, ஹி, உங்களுக்கு எப்பவும் தமாசு தான்! என்ன நைஸா வயசையும் சேக்கறீங்க? :)
//@veda, annanukku eppovume thamaasu thaan! :)//
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"ன்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பில்டப்பு குடுத்து வேதா பிராட்டியாருக்குப் பதில் குடுக்கலாம்னு பாத்தா அவசரப் பட்டு இப்பிடி கவுத்துட்டியே சப்பாணி!
:)
// உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்//
thala, kalaseeeteenga ponga...
unga narration yaaarukku varum?
first 2photos nalla matching..
btw, neenga rendu peru mattum thaaana bloggers meet'la?
dubbuku unga brother'a?
kalyanathukku poitu moi vaikaama venumnaalum varuvaan unga sisyan, but unga blog'a padichitu comment eludhaama povena? (hutch)
ystdy comment site open aaagavey illa, thts why i maild u.....
mr.ambi..did i told u tt u r deadringer for my friend...chanceless resemblance..avanuku link anupi paaka sonen..asanthutanfotova paathu...hmm.onna vachey meikka mudila inonu veraya :) apdinu palar pulambuvathu em seviyil vizhugirathu
sooper..... adutha varusham naan India vanthaa chennai maanaadu onnu nadathalaam pola irukke ithe maathiri :-)
-(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.
ம்ம் ஜாதகம் சாதகமா இருந்திருக்காது!!ஒரு வேளை கீதா மேடத்திடமும் தம்பியப் பத்தி சாரி அம்பியப் பத்திக் கேட்டிருப்பாங்களா!!
-(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.
ம்ம் ஜாதகம் சாதகமா இருந்திருக்காது!!ஒரு வேளை கீதா மேடத்திடமும் தம்பியப் பத்தி சாரி அம்பியப் பத்திக் கேட்டிருப்பாங்களா!!
சொஜ்ஜி பஜ்ஜி கொடுத்துட்டு பொண்ணைக் காட்டலேன்னு சொல்றீங்களே தம்பி சாரி அம்பி !!இந்த கீதா மேடம் ஜாதகம் சாதகமா இல்லைன்னு ஏதாவது சூழ்ச்சி பண்ணியுருப்பாங்களா!!
போன பதிவு பார்த்தேனே!!கோதுமை சக்தியை சரியா புரிஞ்சினு கீரே தம்பியோ!!
அலைகடலென திரண்டு இருந்த கூட்டத்த பார்த்து ஆடி போய்டேன்...
யப்பா நான் முன்னாடியே சொன்ன மாதிரி கரெக்டா 2 பேர் தான்....
//பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் //
ROTFL :-)
அதுயாரு Mr.டுபுக்கு kids ah too cute :-)
மாநாடு நல்ல படியா முடிஞ்சதுக்கு உங்க அண்ணாருக்கும் வாழ்த்து சொல்லீருபா... :-)
Hehehe Nice post Nice photos :D
ini than konjam regularaa blogpodalaamnu mudivu kattinen!!athukulla kannu potaachu!!!...eppaaaa build up kudukrathula ungala minjaa aaalillaaai1
//adhellaam irukkatum...alwa enga??? //
@golmaalgopal, he hee, intha postu thaan alwaa. :)
//"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"ன்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பில்டப்பு குடுத்து //
@kaipullai, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு கைபுள்ள! (வாழ்க பஞ்சாப்!) :)
//unga narration yaaarukku varum?//
@sachin, hutch, hutch, airtel! :)
yeeh, i'm his cousin brother. pullarichu pochu un commentu paathu. :)
//did i told u tt u r deadringer for my friend...//
@gils, yow, ethanai peru pa kilambi irukeenga ipdi? harish vera solli irukkaan. if possible send your frnd's pic to my id.
@nateshan, he hee, cha! cha! geetha madam nallavanga, vallavanga, naalum therinjavanga, vayasula periyavanga! :)
//அதுயாரு Mr.டுபுக்கு kids ah//
@syam, yeeh, yeeh, me thaan chithappa! enna pathi onnume sollaliyee? he hee :)
@subha, kannu ellam podalai, 200 vayasu magaraasiyaa nee irunthu post podanum ma en thangachi! :) LOL
haha. funny post ambi... the kids are soooooooo cute. unga jaadaye illa. hehe. ;) annanoda nalla koothadichingala... aanalum 2 per meet pannadhukku ivlo build up'a? btw, udan pirappu srini oda photo ve illa inga?
புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)
டேய் இன்னமா அல்லுவிட்டிருக்கடா....சைக்கிள் போட்டோவ ரொம்ப டீசன்டா சமாளிச்சிருக்க...
//வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.//
-ரொம்ப ஓவர் இல்ல இது? :)
ambi.... ooru ambaiya????
cute kids :)
ஆப்பு அம்பி,
நான் வரதுக்குள்ளே பொண்ணு பார்த்து வச்சிடாதீங்க! நான் வந்து ஓ,கே. சொல்லணும்.. முக்கியமா உங்களுக்கு நல்லா ஆப்பு வைப்பாளானு தெரிஞ்சுக்கணும். வெயிட் பண்ணுங்க! Bye! Bye!
அம்பி...
கொஞ்சம் பிஸியா இருந்தேன்... சோ பிளாக் பக்கமே வரமுடியல...
ஆமா என்ன இது... இல்ல தெரியாமதான் கேட்கிறேன்... யார இம்பிரஸ் பண்ண இப்போ இப்படி ஒரு பில்டப்போட போட்டா எல்லாம்??
""முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.""
தோடா... இருக்குறது என்னவோ பேட்டரி போன வாக்மேன் மாதிரி... ஆனா பில்டப் மட்டும் ஹை பை ஸ்டீரியோ ரேஞ்சுக்கு கொடுக்கிறீங்க...
நெல்லை கண்மணிகளுக்கு கண் அவிஞ்சு போச்சா என்ன?? :P
"சின்ன வருத்தம்..... ஒரு பொண்ணையும் காட்ட வில்லை."..
ஒத்தைல நகர்வலம் போகுற டியூபு மாட்டின மொக்கையரசனுக்கு எல்லாம் பொண்ண காட்டீட்டாலும்... :P
@viji, danku! i left srini at bnglre itself, so no poto! :)
@porkodi, so far silent readeraa? danks for the invitation and all d best! :)
@dubukku, he hee, cycle photoku ivloo buildup adhigam thaan! overaaa? sari, sari! :)
@smiley, yes, me kallidai only! :)
@geetha, neenga ok sollanumaa? ithellam tooo muchooo much. :)
@kanya, சே! இப்படி தாளிக்கறீங்களே! குத்துங்க எஜமான்! குத்துங்க! :)
onnu sonna thappa nenaka mattingle? ninga anna madriyum unga anna thambi madriyum iruku paaka.. :)
குத்துங்க எஜமான்! குத்துங்க! :)
hey ithenna dialogue??
அடடா குருவே, பிடிங் பாட்டில் பால் குடிமாறக்காத பாலகன் மாதிரி இருக்கீங்க:D
@porkodi, vaama yen paradevathai!
me got tired due to prev day 13 hrs journey, may be thatz d reason. (apdinu samalikaren).
i take your comment as a honor to my brother. avaru ennikum markandeyan.
@gils, that is a famous dialogue from film Dhool used by mayilsaami! (reema sen kooda unde!)paathathu illaya? :)
@gops, shishya, eagerly waiting for your comment!
nee thaanpa correctta sonna. (marupadi nee ethuvum comedy pannaliyee?)
pacha pulla pa naan! innamum naan paal thaanpa kudikaren (feeding bottle illa, tumblerla)
நல்லா கொடுக்குறாங்கய்யா பில்டப்பு!
இப்படி தான் நடக்குமுனு எங்களுக்கு தான் முன்னமே தெரியும்ல.
//"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"ன்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பில்டப்பு குடுத்து வேதா பிராட்டியாருக்குப் பதில் குடுக்கலாம்னு பாத்தா அவசரப் பட்டு இப்பிடி கவுத்துட்டியே சப்பாணி!
:) //
என்னா பண்ணுறது, நாமா வாங்கி வந்த வரம் அப்படி, விடு தல.
dhoolla..reema sen thavira vera ethuvaumaaaaaaaaaayyyyyy nyabgam illingo
@nagai siva, enna puli romba late polirukku? nee kooda officela velai ellam seyya arambichutiyaa? :)
sari, sari, freeya vudu!
@gils, he hee, pesamaa un pera gils!ku bathila Jolls!nu vechu irunthrukalaam! :) LOL
என்ன அண்ணா where is my மன்னி போட்டோ? :))
adappavi ambi... adhu sivappu rojakkal dialogue..
@porkodi, he hee, it's on the pipeline. :)
@viji, ohh! danks for the info! :)
podhuarivila nee puli polirukku? :)
hiyaa! 50 adichutoom illa! :)
(alpam!nu thittatheenga)
Well written. I really thought that there was a bloggers manadu (how innocent of me...)
//@nagai siva, enna puli romba late polirukku? nee kooda officela velai ellam seyya arambichutiyaa? :)
sari, sari, freeya vudu!//
ஆமா நைனா, ரொம்ப தொல்லை பண்ணுறாங்க. த.ம. திறக்க முடியாத அளவுக்குனா பாத்துக்க. கேட்டா அப்ப அப்ப வேல பார்த்தா தான் என்ன வேல செய்றோம் என்பது மறக்காம இருக்கும் சொல்லுறாங்க.....
pipelinela ponnunga fotovai vachundu..naan jolsa...hmm...aanalum...antha padathoda title kaaranam reema sen thaan..hehe
@priya, he hee, danku! yeeh, U r really innocent! LOL :)
@siva, he he, ahaa! unakke ippadi oru sothanaiyaa? :(
@gils, thoda! :)
நீங்க அடுத்த போஸ்ட்டு போடலேனா? நீங்க ரொம்ப பிஸினு நம்பிருவோமா?
@ambi...
kuthuratha... thaanguveengala!!!
illa namma kirubhanadhavaariyar style sollanum'na..
"build-up pottu vazhvaare vazhvar.. illaiyel verum cycle mithichu ooduvar" nu sollanum...
athu sari... inga gils'a jolls'nu sollittu ennoda blog'la comment pootathukke figure kekkureenga??
gils itha konjam ennannu visaarippa!! aniyaayathukku M.Sc padicha enna ... on-duty aaka paakuraaru!! sari illa.. unga veetu number kodungappa... seekiram maati vida sollalaam!!!
thalaiva ippo tha ungalai parkirane.nall thamaasu panreenga..adhu sari nellaiyil endha idam ..nanum nellai pakkam than ..appdiye numma blog pakkam varadhu..ungalai mulusa padichitu innum niraya comments idurane...valthukkal ambi!!!
Another humorous narration. Enjoyed it !!
Good to see ur pics..imagination comes to an end. ;-)
Porkodi -
//onnu sonna thappa nenaka mattingle? ninga anna madriyum unga anna thambi madriyum iruku paaka.. //
பொற்கொடி....ஹைய்யோ ரொம்ப டேங்க்ஸ்ங்க...உண்மைய உரக்க சொன்னதுக்கு.
Ambi-
//avaru ennikum markandeyan.//
ஐய்யோ ராசா..தாங்கலயேப்பா...எதுக்கு அடிபோடுறன்னு தெரியலையே...நான் தான் அந்த மேட்டருக்கு ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லிட்டேனே...இன்னமும் எதுக்கு பில்டப் குடுக்கறன்னு தெரியலையேப்பா...எந்தப் பக்கம் அடிக்க போறன்னு தெரியலே...
//ஹைய்யோ ரொம்ப டேங்க்ஸ்ங்க...உண்மைய உரக்க சொன்னதுக்கு. //
@dubukku, he hee, santhoshamaa? cha! ippadi kavuthitiye porkodi!
//நான் தான் அந்த மேட்டருக்கு ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லிட்டேனே//
எந்த மேட்டருக்கு அண்ணாச்சி?(with a innocent looku!)
(நீங்க பாட்டுக்கு கும்மி அடிச்சுட்டு போயிராதீங்க, நல்லா இருப்பீங்க அண்ணா!) LOL :)
@porkodi, today posting the next one :)
//aniyaayathukku M.Sc padicha enna ... on-duty aaka paakuraaru!! //
@kanya, M.sc..? can't understand..
@karthik prabhu, kallidaikurichi is my place. soon will visit your space. enna tharuveenga? :)
@pavithra, danQ, imagination..? he hee, anyway i hope, it's upto the mark. :)
semma commedy panrengaa paa your group.. lollu groupaa irrukkum polla
@ambi...
naan sonnathu ungalukku puriyalaiya... athai naan nambanuma... sari poonga nambiten...
Illa M.Sc padicha enkitta ungalukku figure keteengale.. athukku sonnen... full time match-maker velai koduthuduveenga poola irukkennu.. :P
ithukku kandippa kuththalam!!
@known stranger, yeeh, kalla varara group. pasaakaara makkal :)
@kanya, ohh! u meant in that way? Msc padichaa MMkr aaga koodathaa? :)
ambi sonna correct thaanambi oru maahnubaavar..maha uthamar...motha blorela muthaanavar..sathanavar..ussss.eppa...intha varushathoda poi quota over
passakaara makkalla - kuzhi parrikkara maaaakkkalla irrupanga polla irrukku semma commedy panringa elllarumm
eppadii ambi ithallem eppadi ungallaa mattum mudiyuthuuu
ennamaoo ponggaa nall irrunda serri
two man army-aa nadathi irukeenga.. bloggers maanaadu...
adhuku intha build up konjam over thaan!! :)
வாய்யா....வாய்யா...பெங்களூரில் கலவரம் நடந்த நேரத்துல பஸ்ஸுக்கும் வேனுக்கும் இருந்த கூட்டத்து போட்டோவ இப்படி உல்டா பண்ணியாச்சா? (நம்ம திருநெல்வேலி கலர்-ல எவனுமே இல்லியே அந்த கூட்டத்துல).
உங்க ப்ளாக் "அடைமொழிப் பெயருக்கும்" உங்க போட்டோக்கும் சம்பந்தமே...இல்லை. நல்ல துரு துருன்னு தான் இருக்கீங்க. (உங்க முந்தைய ப்ளாக்-ல ஏதோ பஞ்சாபி பொண்ண பத்தி சொன்னதா ஞாபகம்...நல்லா புடிச்சுக்கோங்க... ரொம்ப நல்ல பொண்ணுங்க... தெரிஞ்சத சொல்லிபுட்டேன் ஆமா..).
Good work...Keep it up..!
Post a Comment