Friday, September 01, 2006

உமையொரு பாகன்!கடவுளின் விசித்ரமான படைப்புகளில் அரவாணைகளும் அடங்குவர். உருவத்தால் பெண் போலவும், குரலில் ஆணாகவும், சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே எனக்கு தோன்றும். இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது.

மகாபாரத போர் துவங்குமுன், களபலியாக அர்ஜுனன் மகன் அரவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, களபலி ஆவான். அவனையே தங்கள் கணவனாக வரித்து, இந்த அரவாணைகள் சித்திரை மாத பவுணர்மி அன்று கூத்தாண்டவர் கோவிலில் (விழுப்புரம் அருகில் உள்ளது) தங்களுக்கு தானே தாலி கட்டி கொண்டு, அடுத்த நாள் அவன் இறந்ததாக பாவித்து, அந்த தாலியை அறுத்தெறிந்து அழுது புலம்புவது ஒரு சடங்காக உள்ளது.

வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..

மும்பையில் அதிரடியாக, ஸ்கார்பியோ காரில் வலம் வரும் ஒரு பிரபல தாதா ஒரு அரவாணை. பின்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக கேள்வி!
அவனை மையமாக வைத்து தான் அப்பு என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு அரவாணையாக நடித்திருப்பார்.

எத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது? என்று நான் பலமுறை வியந்தது உண்டு.

பெறும்பாலும் பல அரவாணைகள் தங்கள் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடோடியாக திரிகிறார்கள்.
இந்த சமூகமும் இவர்களை ஏளனமாகவும், ஒரு வித வேற்று கிரக ஜந்துவை போலவும் தான் நடத்துகிறது.
சினிமாவில் காமடி டிராக்கில் இவர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். பெறும்பாலும் நமது ஹீரோக்களை கலாய்க்க, பாட்டுக்கு நடுவில் ஏடாகூட வசனம் பேச இவர்களை தான் பயன்படுத்துவார்கள்.

ஒரு வாரமாக இந்த ஜிலேபி தேசத்தில் ஒரு கூத்தை பார்த்து வருகிறேன். முக்கியமான டிராபிக் சிக்னல்களில் வண்டிகள் குறைந்த பட்சம் 5 - 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. அப்பொழுது, குபீரென ஒரு அரவாணை கூட்டம் கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்கள் வழக்கப்படி கைகளை தட்டி,அனைவரது தலைகளிலும் இலவசமாக ஆசிர்வாதம் செய்து, காசு குடு! என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும்? என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தான் ஒரு நாள் மாலை அதிசயமாக கொஞ்சம் சீக்கிரமாக 6.30 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பி எம்.ஜி.ரோட்டில் வரும் போது, வசமாக ஒரு அரவாணையிடம் மாட்டிக் கொண்டேன். நாம தான் தர்ம மகா பிரபு ஆச்சே! 5 ரூபாய் குடுத்தால், முடியாது! 10 ரூபாய் தான் வேண்டும்! என்று அடம். அடுத்த கட்ட கொரில்லா தாக்குதல் நடக்குமுன் நான் சுதாரித்து கொண்டேன்.

"ஒரு காரணம்! ஒரெ ஒரு காரணம் சொல்! உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும்? என்று எனது "ஏக் காவ் மேம் ஏக் கிஸான்" இந்தியில், புருவத்தை உயர்த்தி குரலில் கோபம் தெறிக்க கேப்டன் போல கேட்டேன்.
சில சமயங்களில் ரெளத்ரம் பழக வேண்டி இருக்கிறது. என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்தார்(ள்). "ஒரு பத்து ரூபாய் குடுக்க கூடாதா?" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியலை. குடுத்து விட்டு நகர்ந்தேன்.

சரி, எனக்குள் சில கேள்விகள்:
1) அரசாங்கம் இவர்களை கண்டு கொண்டுள்ளதா? ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா? இவர்களுடைய நிலை என்ன? என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்துமா?
இவர்களை "Physically Challenged Category"ல் சேர்த்தால் ரிசர்வேஷன் கோட்டா கிடைக்க வழி உண்டே!

இவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இருந்தால் நமது கரை வேட்டிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்க மாட்டார்கள்? அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம்!னு தான் சொல்லி இருப்பார்கள், அது வேற விஷயம்!
வாக்குறுதி அள்ளி வீசுவதில் எல்லா X.மு.க. கட்சிகளும் ஒன்னு தான். (X = You pple fill up the blanks)

2) இவர்களும், தங்கள் தன்மானத்தை ஏன் விட்டு கொடுத்து, இப்படி திரிய வேண்டும்? படங்களில் தங்களை கேவலமாக சித்தரித்துக் கொள்ள வேண்டும்?

3) நேர்மையாக பிழைக்க எத்தனையோ வழிகள் உள்ளதே! சுய உதவி குழுக்கள் உதவியை நாடலாமே!

பண்டைய தமிழகத்தில் அந்தப்புர காவலில்(ஹி,ஹி, நம்மூர் ராஜாக்கள் ரொம்ப தான் உஷாரு!) அரவாணைகள் இருந்ததாக படித்து உள்ளேன்.
தனியார் செக்யூரிட்டி சர்வீஸ்களில் இவர்களை ஏன் சேர்க்க கூடாது? இவர்கள் ஏன் சேர கூடாது?

ம்ம்ம், இந்த 33% சதவீத ஒதுக்கீட்டுக்கே துப்பை காணோம்! ம்ம்ம்ம்! யானைக்கு யார் Snuggy pad கட்டுகிறார்கள்?னு பார்ப்போம்!பூனைக்கு யார் மணி கட்டுகிறார்கள் என்ற டயலாக்கையே எத்தனை நாளைக்கு சொல்வது? :)

பி.கு: அடுத்த பதிவு "கடவுள் பாதி! மிருகம் பாதி!"

59 comments:

Kamal said...

Rombha nalla post Ambhi.Govt has to take some neccesary steps to improve their standards.Aana avangalukkulla adichukkave neram illa idhula Aravanigalai pathi kavalaipada neram yedhu.

indianangel said...

ambi,
Romba nalla ezhudirukeenga! ivangalukkum suya thannarva kuzukkal edhavadhu thodangi pannadhaan undu - govt'a edhuvum pannadhu! :(

Usha said...

edho mudhal thadavaya nalla post ezhudi iruka, sorry 2 or 3rd time..kudos. The very reason that these people are not respected in our country is because of the way they degrade themselves like this. But there are places where this group is supported to do suyathozhil, adhu madhiri 90% aravanigal pantangana munneriduvanga.

gils said...

oru nimisham ambiyoda blog thaananu URL chk paninen..!!! serious topic kooda ithila varuma..wow..nice writeup...
( sonna mathiri nallatha naalu vaartha potuten...amt...acct trnsfr panidavum) :)
jokes apart...ivangalukkaga...there are lot of NGO's...but pity their reach is very less...lot of these folks are under the custody of gundas n rowdies who use them to fatten their bank accounts...india todayla oru full edition ivangala pathi potrunthaanga....they are supposedly stronger than average male or female...maybe tts y rajas used them as securities...

Vicky Goes Crazy... said...

hey nalla oru thirai kathai ... nicely edited n drafted ;) :D ..

hmm .. to b frank .. first ellam i just to frown at them ... romba oru madiri aruverupupa irukum avangaley partha .. but enga appa always used to tell me "avanga pavam da ... nammaley madiri normal illai avanga ... athuvum oru vidhamana unnam than ... avanag athaium miri vazhuranga ... avangalum humans than .. man with female char " ..

appuram than ennaku strike aachu nan evulavu thappa think pannen nu ... rite .. they are poor pppl .. avangaluku semma urimai kudukanum ..

recently etho oru state ley oru aravani than got selected as
MP r MLA i think .. not sure ..

but ennaku onnu avanga kittey pudikaley ... y do they beg ?? apidi irukurathu naaley .. y do they dress badly ??? neenga sollurey madiri they can do some kutti kutti buisness na ..

its a real pity tat gov doesnt consider them into any cateogory ... avangalum humans than nu gov must realize ...

ellathalaiyum illainalum . atleast basic education ley aavuthu ..athuku mela avnga samarthiyam :) ...

mumbai to madras nan chinna paiyana irukum pothu .. niraya parthu iruken avangaley .. silent ah parpen avangaley .. sound than pesuvanga .. konjam adavadi ya act pannuvanga .. but avanga thapu illai ... namma makkal panna thappui ... namma parvai mathanum ..avagalum maranum ..they also can do some better job than begging nu they should realize ... appo than things will change :) ..

lets c ... namma kuzhanthailuku solli kudupom that those are also humans give respect nu :) may next 50yrs ley ethavuthu changes varalam :) ...

Priya said...

Its not just the government, its the entire society (you and me) that is responsible for their pitiable status. Why do you recommend them security services? They are as capable as any of us to do any kind of job.. They can be software engineers like us. If the society stops odding them out and looking at them as aliens, they will be able to go to schools and colleges and will have the mental strength to fight for their rights. Most of them are forced to run away from society because of its cruel approach and they prefer to be in their own groups, many of whom are unfortunately denied any dignified job.
There is better awareness now a days and hopefully they will able to lead normal life shortly.

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by a blog administrator.
தி. ரா. ச.(T.R.C.) said...

எத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது? என்று நான் பலமுறை வியந்தது உண்டு
உண்மைதான் அம்பி.இவர்கள் உமை ஒரு பாகன் மட்டும் அல்ல ஊமை ஒரு பாகம்.
ஒரு நல்ல பதிவு வரத்துக்கு எவ்வளவு மொக்கை பதிவு போட வேண்டியிருக்கு பாத்தியா!
என்ன இன்னிக்கி இன்னும் உன் உடன்பிறப்புகளை காணோம்.

Raji said...

very thoughtful post.. how true!
I just keep wondering why I dont see them in these western society as much as I see them In India..

பொற்கொடி said...

ninga livingsmile valaipoo ku poirkingla? yarum avangluku tevai illada publicity taren nu sonalum parva illa - livingsmile.blogspot.com

பொற்கொடி said...

avanga sollum vishayangal silaruku pidikum silaruku pidikama pogum.. but avanga anubavangala solla oru valaipoo torandu irukradu nichayam nalla vishayam thane :)

வேதா said...

ஒரு நல்ல சமூக சிந்தனையுள்ள ஒரு பதிவு அம்பி. நானும் இவர்களைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியுள்ளேன். எப்பொழுது தான் ஒரு தனிப்பட்ட பிறவி என ஒரு திருநங்கை(அரவாணிக்கு பதில் இப்பொழுது இதைத் தான் உபயோகிக்கிறார்கள்)தெரிந்துக் கொள்கிறாரோ அப்பொழுதே அவர்கள் போராட்டம் தொடங்கி விடுகிறது. அந்த அறியா வயதில் தன் தேகத்திலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயந்து யாரிடம் சொல்வது என்றறியாமலே இவர்களில் பல பேர் வழி தவறி போய் விடுகிறார்கள். சமூகம் இவர்களை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்தம் குடும்பம் தான் அவர்களை ஆதரிக்க வேண்டும். அரசாங்கமும் இவர்களுக்காக கவுன்சலிங் மையங்கள் திறக்கலாம், சில தன்னார்வ நிறுவனங்கள் இருக்கின்றன எனக் கேள்விப்பட்டேன். இதை விட முக்கியம், நாம் எப்படி இவர்களை நடத்துகிறோம் என்பது தான். தாங்கள் குறிப்பிட்டுள்ள கூவாகத் திருவிழாவில் சமீப காலங்களில் இவர்கள் மேல் பாலியல் வன்முறைகளும், கேலி கிண்டல்களும் அதிகரித்துள்ளன என செய்திகள் வந்துள்ளன. எனவே நாம் ஒவ்வொருவரும் திருநங்கைகளின் வாழ்வுக்கு போராடவில்லையென்றாலும், குறைந்த பட்சம் அவர்களையும் மனிதர்களாக மதித்தாலே போதும். பொற்கொடி சொல்லியுள்ள வலைப்பூவிற்கு சென்று பாருங்கள், இவர்களின் வலிகளையும், அனுபவங்களையும் அங்கே படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

வேதா said...

ரொம்ப நாள் கழித்து ஒரு நீளமான பின்னூட்டம் போட வைத்து விட்டீர்கள்:)

ambi said...

@kamal, danQ, U r correct.

@indianangel, danks, they shud turn the attention of gvt towards them atleast.

@usha, 2 or 3 times..? ellam neram thaan! your points are 100 correct.thappu!nu sonna enna thokki pottu midhuchura maatta nee? :)

@gils, he hee, yow! already serious topics ellam ezhuthi iruken ya! enna thakaali adichruvaangaloo?nu oru bayam! (acid adichutaangana enna panrathu?) a/c transferaa? echoose me who are U? :)
and as U said, they are very mighty.

@vicky, danq, danq, ore peelings of indiava irukku..? :)

@priya, ohh! i'm sorry, yes, deserving pple can fit for any job.
sutti(kutti) kaatinathuku nandri hai! :)

//ஒரு நல்ல பதிவு வரத்துக்கு எவ்வளவு மொக்கை பதிவு போட வேண்டியிருக்கு பாத்தியா//
@TRC sir, sari, sari, sabaiyila solli kaatanumaa? viji kochuka poraa parungo! :D

@raji, danq hai! is it so..?

@porkodi, danks porgodi, read and moved my heart for a while.

@veda, danq, danq!
//ரொம்ப நாள் கழித்து ஒரு நீளமான பின்னூட்டம் போட வைத்து விட்டீர்கள்//
he hee, vashishtar vaayala brahma rishi pattam vaangitten! polirukku! :)

Syam said...

மக்கா அப்போ அப்போ இப்படி ஒரு டச்சிங் போஸ்ட் போட்டு அசத்தரேயேப்பா...பொற்கொடி சொன்ன மாதிரி இவங்களும் நல்ல முறையில் வாழ முடியும் என்பதற்க்கு லிவிங் ஸ்மைல் வித்யா ஒரு அருமையான உதாரணம் :-)

Sandai-Kozhi said...

ambi blog aa idhunnu malaichu poitten.First time commenting.eppavum kundakka mandakka ezhudharvar Indha topic romba azhaga ezhudirkeenga.Well done!ATB!--SKM

Known Stranger said...

i had been to thailand regularly.
and ofcourse roam around pattaya and phuket on mid night to have a glamerous look of nigt and gals..

do you know they are jsut not like indians - damn beautiful and govt helps them a lot.

Marutham said...

Aha...A very good question raised!! :)

Naan oru comedy sollava- Enga college munaadi oru naal car varatum wait panitrundhapo-(Non-Pesti drink) Apple fruit drink small pet bottle vaangi kudikalaamnu vechrundhen.As mentioned in some of my posts - i dont carry big money with me to college-Appa drops me&picks me.So emergncyku paiyil konjam kaasu vechruppen.Purse'la 50 or less...Iniki purse full empty-xerox,drink adhu idhunu...
I saw a little girl with another too little baby approached me- Ayayo!!

She dint speak - started crying and kept showing her baby's mouth- signalling she needs food. ENNA INSULTING situation!!!I told her i dont have any money!! :( Yaaru nambuvaa- nala dress paniktu periya college munadi-Naan ela kasum thudachuttenu solla mudiyuma!Then i kept telling her to go away! In the mean time i looked at the baby in her hands (So CUTE & Adorable!) Wonder if its hers! Obviously she wont have change for my EMERGENCY 100rs in BAG!
Then she almost mugged me- she critically grabbed the drink and showed her baby! Then i said- ok u can have this drink... and offered!
Then she walked away- after sometime a bunch of small girls like her came to me asking for money!! ADI PAVEE- ipdi humiliate pantiye dee.... I cant show every1 my empty purse...SO i literally had to RUN away from these girls!!! Collge munnadi vandhu ipdi pichai edukradha- managementum kandukala, police'um kandukala!!!
Ini thaagama irundha- orama campus ulaye ninni Drink'a kudichutu varanum... !!!

golmaalgopal said...

hmmmm this set me thinking....you know they've been fighting for long for upheavement of their community but still...neenga keta maadhiriye dhaan....yaanaikku yaar 'snuggy' kattaradhu...only in mumbai they are at ease that too because some thousands of ppl live together in d same area...

gils said...

has anyone read "KAAGITHA POOKAL" by N.Kamarasan....college sec year tamizhla padicha nyabagam....athila oru super line varum..."Sandhipp pizhai ponra Sandhadhipp pizhai naangal"nu..this post reminds me of those lines....chorry...tamizh fontla try panen..workout aagala..so solpa adjust madi...

ambi said...

@syam, danQ, நான் தான் சொன்னேனே! எங்கள் குருகுலம் is Well Balanced!nu :)
U r rite, she is a living example!

@sandai-kozhi, DanQ! danQ! serious topics ezhuthinaa romba controversy aaguthu! சமூக அக்கறை எனக்கு மிகவும் உண்டு! எனக்குள்ளே ஒரு சிங்கம் உறங்குகிறது! சமயத்தில் விழித்தெழும்! :) btw, Meera jasmin unga relativeaa? LOL :)

@known Stranger, Our Gvt has to make it clear from their side!

@marutham, yeeh, encouraging beggery is an offense.(this is purely my view) :) sometimes they will make us humilitated.

@G-gopal, Unity is strength? naah..?:)

@gils, good line indeed! i'ven't read that book. danks.

வேதா said...

@கில்ஸ்,
காகிதப் பூக்கள் நான் படிச்சிருக்கேன், கல்லூரியில் தமிழ் பாடத்தில் வந்ததுண்டு அருமையான புத்தகம்.

Pavithra said...

Excellent post !! Once, during Diwali, I gave 10 rs to her(him) and s(he) extended her(his) hand to greet me. I felt so much pity on them. May be, that's the maximum I can do. Govt. won't do anything as long as it is with the "X.M.K's".

Balaji S Rajan said...

Ambi,

A thoughtful one. For long time I was thinking about a post based on my personal experience. Probably I may post one in the future. I have always wondered. Veda has commented whatever I wanted to comment. They too are into this due to the social fear, and they live with a complex. As Vicky's father has said to him, this is also a disability. I do not know why it is so much in our place when compared to western world. The Governments should do a lot. Again, there are plenty of problems in our country, and we need thoughtful people in the centre to do such social acts.

Sasiprabha said...

Ambi, i was moved.. I read a document about them in a magazine.. Avangalukkunnu oru thiruvila varume.. Aravaananai kanavanaa nenaichu ellarum thaali kattikittu, appuram aravaanan setha odane thaaliya aruthuttu nenjila adichikkittu aluvaangalaam.. Eppidi ungalala ippadi ala mudiudhunnu keta, indha samudhayathula naanga padara vedhanaiya oru nimisham nenaichaa adhu thannaala varum.. oru varusham theki vecha vedhanaiya ellaam naanga inga vandhu ippadi kotturom, appidinnu sonnaangalaam.. I didnt find anyone in my life.. Ennoda anni solli irukkaanga.. Enga oor pakkam irukkira aravaanaigal biriyaani nalla seivaanalaam.. Oru biriyani stall vechu anga fullaa avangalathaan post pannanumnu.. If someone come forward to lead them to good position, avangaloda inferiority complex konjam maarum.

rnateshan. said...

different thinking ambi!!
ithellaam sangku uuthiya kathaithaan!
soorry for englich.

Ravi said...

Ambi, agreed that we also should be humane towards them but on the other hand, these enuchs should also come out of their "conventional" behaviour. Once people shun their fears of such 'aravaanis', they can get good employment. They have the talent of a woman and also the physical strength of a man - so imagine the kind of jobs they can generate! But sad that most (99%) of them resort to cheap antics and begging.

Known Stranger said...

yappa unga group sallai thanga mudiyalla paa orrutha orruthar kalla varathulla naradaraa minjiduvinga poolla

ambi said...

@veda, Ms.Thamizh thurai padikaatha booku undaa enna? :) LOL

@pavithra, danQ! Hope things will change in future. :)

@balaji, well said. intha veda ellar commentaiyum fill up pannitaa. Ms. peelings of India! :)
neengalum post panungoo, padikaroom! :)

@sasiprabha, The event U mentioned is really heart moving. i also saw a documentry.

@nateshan, eppayaachum kekkum ella sanga naatham?. sorry ellam sollitu, siru pilla thanama? me also putting comment in thanglish!(somberi thanam thaan) :)

@Ravi, All are valid points your honor! Long time no see. :)

@KStranger, Yow! enna post potta nee enna commentu podara?. :)

Ravi said...

Ambi, naan regular-a vandhittu dhaan irukken. But comment post pannaadhanaala en varugai ungalukku theriyavillai :-)

கைப்புள்ள said...

நல்ல பதிவு அம்பி. அப்பப்போ நல்ல பதிவுகளையும் போட்டு உங்க சமூக அக்கறையையும் வெளிப்படுத்துறீங்க. வாழ்க.

Ponnarasi Kothandaraman said...

Hahaha Nice post ;) Sirichitey irukka vendiyathuthaan

Syam said...

//எனக்குள்ளே ஒரு சிங்கம் உறங்குகிறது! சமயத்தில் விழித்தெழும்//

போன சமயம் அது எப்போது விழிந்தெழுந்தது :-)

ambi said...

@ravi, ahaa! ippadi yellam sadhi nadakuthaa? :)

@kaipullai, Dhanyan annanen prabhoo! :)

@ponnarasi, Yow! sirichutee think pannuyaa! grrrr..

@syam, eppo?nu ellam solla maatten, appo appo ezhum! :) LOL

வேதா said...

yow nee mattum peel pani post podalam, naanga peel panni comment poda koodatho? ithu enna aniyayama iruku, che nalathukey kaalam illa:)

Raji said...

Ambi annachi,
enna neengalum arai sadhathuku waiting a?

Arjuna_Speaks said...

rasathi rasan varandi varan :) - I just remember that song now :)..

Its sad - its the worst thing that could happen - I guess.

ambi said...

@veda, post potta commentu!nu oru post neenga podalaama? mathavungalukum chance kudukanum peel panna! avvvvvvvvvvv :)

@raji, cha! cha! athellam illa akka, aapichla bisssyyy. vaari vaari kudukaraanga velai. :)

@arjuna, YoW! ennatha solla..? :)

மு.கார்த்திகேயன் said...

அம்பி ரொம்ப உருப்படியான பதிவு.. எனது எண்ணங்கள் அப்படியே இந்த பதிவில் பதியபட்டுள்ளது.. ஆனால் என்னிக்கும் இவர்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள்.. இந்த மாதிரி வசூல் வேட்டை செய்யாமல் இவர்களும் ஏதேனும் செய்யலாமே.. தமிழ்மணத்தில் ஸ்மைல் பிலீஸ் வித்யா என்பவர் பதிவுகள் எழுதி வருகிறார்..அவரும் ஒரு அரவானியே..

மு.கார்த்திகேயன் said...

நன்றி வேதா.. அரவாணி என்பவர்களுக்கு இப்போது திருநங்கை என்று உங்கள் பின்னூட்டம் மூலம் தெரிந்துகொண்டேன்

shree said...

good post. touchwood, i was about to write about this. ne mundhikitta, so nan ippo yosiching what to write!
but opena sollunga, ippo indha madhiri oruthar namma veetlayae irundha how many of us have a heart to accept?

Syam said...

//Ambi annachi,
enna neengalum arai sadhathuku waiting a?//

@raji,
irundhaalum irukum...makkale yellorum aaluku innoru comment podunga pls...ambi puthu post poduvan :-)

ambi said...

@karthik, dankq, Danq!
athu enna urupadiyaana pathivu!nu oru punch..? mine ellame urupadiyaana pathivu thaan therinjukoo.(with a porud looku) :)

@shree, vaanga yekka, ippa thaan vazhi therinjathaa ungalukku..? oh is it..? U too thought of same topic..?
paarthayaa udanpirappe! naam oru kodiyil pootha iru malargal! enbathai intha ulagu ippovaavathu therinthu kollattam!

cha! oru vaarthai solli iruntha naan ezhuthi irukka maatten illa.
paravayilla, neeyum ezhuthu.
Your qstn is really thought provoking.

@syam, yow! inga work manadai kaayuthu. 50 ellam naan expect panrathe kidayaathu!
(ithoda 43 aachu! tdy epdiyaavathu 7 commentu varanum murugaa!! apdi vanthaa intha syamuku mottai adichu alagu kuthren murugaa!!!) LOL :)

smiley said...

Why is it that often a person's worth is felt only after they're gone?


how true...
how many times have i felt that i had got balloons for my son from the balloon guy before he had left... so that i could have some peaceful time to read and write blogs :)

smiley said...

ஏக் காவ் மேம் ஏக் கிஸான்"

ma'am - madam hindi 'ill appadithaan koopudiveergala? but sometime avargal thollaoi thanga mudiyathu... plus there are stories that they get young boys and make them like that too.. good post, govt should take a step fwd

dinesh said...

Organized thoughts. I liked the structure and the tone of the write up. You are right, they should be recognized and given a better living. Anaa, like somebody said, avanga political agendas kke time pathale pa namma ooru politicians kku. Appparam enga nalla kaariyathukkellam ! Adhulerndhu edhavadhu political mileage, vote bank illena, ange attention pogave pogaadhu !

Syam said...

//yow! inga work manadai kaayuthu//

yaaru illanu sonna....athu velai seiyaravangaluku unaku ennaba :-)

Harish said...

Ambi nna. Media has been also mainly responsible for this negative portrayal apart from their own actions.Neenga solra maadhiri..yaaniki yaatru Snuggy pad katradu :-)

ambi said...

@smiley, perplexed with your baloon guy comment. btw, danQ for your comment.

@dinesh, ohh felt honored for your elite comments. welcome here. :)

@syam, thoda! oru naal inga vanthu work panni paaru, theriyum! :)

ambi said...

@harish, intha media va muthalla sari pannanum. btw, anna ellam sollatha. me small kid only! kwa! kwa! :D

hiyaaa, hatrick 50 adichutoom illa! yappa! thupaatheenga pa!

(muruga! sonna maathiri en venduthala neravithudaren muruga! syam naan ready! neenga readyaa?)

gils said...

@veda:
oh...neengalum padichurukeengala...ennada..ekku thappa college..padipsnu podroamay...ambi ANNA (hehe) kovichupparnu ninachen..company iruku :D

கீதா சாம்பசிவம் said...

அம்பி ஒரு நல்ல பதிவு போட்டுப் பேர் வாங்கறது எவ்வளவு கஷ்டம் தெரிஞ்சுதா? இதுக்காக நான் டெல்லி, கைலாஷ், மானசரோவர், நேபாள் எல்லாம் போய் வர வேண்டி இருக்கு. அப்பாடி இப்பவாவது புத்தி வந்ததே?

Anonymous said...

Neeenga kaipullaiye beat panneeteenga .
Ungaludaya ezhthil oru Aalam therikirathu..
Ennudaiya mugavari itsmeselva82@gmail.com.

Oru mail panninall adiyen endrum ungal visiriyai iruppen ..

Illavittal thitti theerpen (ketta ketta vaarthaiyil)

Anonymous said...

Good day, sun shines!
There have been times of hardship when I didn't know about opportunities of getting high yields on investments. I was a dump and downright stupid person.
I have never thought that there weren't any need in large starting capital.
Nowadays, I feel good, I begin take up real income.
It gets down to select a correct partner who uses your funds in a right way - that is incorporate it in real deals, parts and divides the profit with me.

You may ask, if there are such firms? I'm obliged to answer the truth, YES, there are. Please be informed of one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

Anonymous said...

Good day!

For sure you didn’t here about me yet,
friends call me James F. Collins.
Generally I’m a venturesome analyst. all my life I’m carried away by online-casino and poker.
Not long time ago I started my own blog, where I describe my virtual adventures.
Probably, it will be interesting for you to find out my particular opinion on famous gambling projects.
Please visit my diary. http://allbestcasino.com I’ll be interested on your opinion..

Anonymous said...

minolta cell phone software http://freshoemsoftware.com/de/product-14690/Bar-Code-Pro-6-0-Mac filemaker pro free manage software database easy solutions data students [url=http://freshoemsoftware.com/category-100-111/product-19019/Easeus-Data-Recovery-Wizard-Professional-4-3]Easeus Data Recovery Wizard Professional 4 3[/url]
TechnoRiverStudio Pro Edition 6.0 http://freshoemsoftware.com/category-100-112/product-14669/AccessAble-Help-Desk-Pro-Edition-2-5 family origins software [url=http://freshoemsoftware.com/es/category-100-111/product-19236/Effective-File-Search-5-5]difference between browser and server software[/url]
cai computer assisted learning in nursing software http://freshoemsoftware.com/fr/manufacturer-8/product-10294/3DALiENS-GLU3D-1-3-FOR-MAYA-7-0 cell phone tracking software [url=http://freshoemsoftware.com/it/category-200-208/product-17963/Mellel-2-2-Mac]Mellel 2 2 Mac[/url]
software life cycle model for leather http://freshoemsoftware.com/de/category-100-113/product-19174/Melomania free landscape design software [url=http://freshoemsoftware.com/de/category-100-112/PC-Windows/Multimedia-and-Unterhaltung]Davis Business Systems BS1 Enterprise with Manufacturing 2009.2[/url]
welcome to ecotech software http://freshoemsoftware.com/it/category-200-212/product-17961/SuperDuper-2-1-Mac Adobe Photoshop CS4 Extended [url=http://freshoemsoftware.com/category-100-111/product-10335/Benutec-RamCleaner-v6-1]Benutec RamCleaner v6 1[/url]
social skills software http://freshoemsoftware.com/fr/category-12/product-16936/Word-Spring-5-3 microsoft anti spyware software [url=http://freshoemsoftware.com/category-100-108/product-16175/QuarkXPress-8-0-Multilanguage]live update bvrp software[/url]

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信