Saturday, September 30, 2006
சொல்லுக்கடங்காதே! பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்!
இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!
1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.
இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.
எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.
மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.
சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.
துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.
நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.
தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.
நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.
இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.
ஆனால் மறு நாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.
Pic courtasy: www.starsai.com
போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.
ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.
போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.
போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!
தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.
இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
Nice post !! Well written.
Me first ;-)
Pavithra.. Innikkum naan secondaa..
Ambi Romba alaga solli irukkeenga 9in sirappu, 3 shakthi, navaratri, Dhairiya lakshmi, palathadavai padichi irundhaalum, unga writingsla ellame pudhusa, theliva irukku. Nice write up.. Photos ellam nalla choose panni irukkenga. Adhuvum first photo irukke.. Ungalukku indha kolam gyabagam varumna, enakku Mahishanai konnu ukkirama Mahishasura mardhiniya Erumai kedai thalai mela nikkira roopam gyabagam varum.. En bakthi inge innum perugiyadhu.. Andha punniyam ungalukku.
me 4th!! ningalum bhakti paravasama?? lakshmi kadatcham kidaikatum!!
என்ன ஒரே பக்தி வா............ரம இருக்கே. இதைத்தான் சேரிடம் அறிந்து சேர் என்றார்கள்.எப்படி பாத்தியா என்னை பாத்து ஒரு 2 நாள் இருந்ததுக்கே எப்படி நல்லவனா ஆகி ஒரு சூப்பர் போஸ்ட் போட்டாச்சு பாரு.ஆனா இதிலே கொஞ்சம் ச்ரினி வாடை அடிக்கறதே,இந்த ஸ்ரி. வித்யா சமாசாரம் எல்லாம் தம்பியோட உதவியா.நவம் என்றால் ஒன்பதுன்னும் சொல்லாம் புதியதுன்னும் சொல்லலாம்.நவ இந்தியான்னு சொல்லறாமாதிரி.அதனால் தான் புதிய விஷயங்களை நவராத்திரியில் ஆரம்பிக்கறோம்.
ஒன்பதாம் நெம்பர் இருக்கே அது ரொம்ப ஸ்டெடியா இருக்கும், வகுத்தாலும் ,பெருக்கினாலும்,கழித்தாலும் கூட்டினாலும் மாறவே மாறாது,கூட்டு எண்கள் விடை 9 தாகவே வரும்.அதுமாதிரி 9ஆம் தேதியில் பிறந்தவர்கள் புத்தியும் கட்டுகோப்பா மாறாமல் இருக்கும்.
வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்.
ambi, arumaiyaan padhivu romba nalla ezhudiirukeenga!
கும்புட்டுக்கறேனுங்க...கொயிலுக்குள்ள போன எபக்டு...சரி சுண்டல் குடுத்தீனா வாங்கிட்டு கிளம்பறேன் :-)
Ambi nalla padhivu....ellorukkum lakshmi-in arul kidaikattum
nalla padhivu ambi....appoappo ippidi oru posta pottu kalakkareenga...very nice....
*1st i thought i entered a rong ambi's blog...apparam mattha post paathodana dhaan confirm panninen*
naa mattum salaichavanaa enna...enakkum sundal venum... :)))
ஒரு உருப்படியான பதிவை முதல் முதலில் இந்த வலைப்பக்கத்தில் பார்க்கிறேன். உண்மையிலேயே நன்றாக எழுதப் பட்டுள்ளது. கருத்து யார்? தம்பியா? இல்லாட்டி அம்பிக்கு எழுத வராதே? :D
@ geetha: நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க! இத நான் சொன்னா மட்டும் அம்பி என்னை கோபித்துக்கொள்கிறார்! :)
anna, en anna ipadilam bakthi muthi poi ezhudi ananda kaneer vara vaikareenga??? Thanga mudiyala...*ananda kaneeer*
LOL!
nicely written
aanaa TRC sonna maathiri Saamiyar vaadai romba adikuthe...Cheeni...asathita raasaa
dei appidiyeee
oru carnatic paatu lyricsaiyum poottu (makkala) impress panna try pannuvanu parthen..???
;P
அடங்கப்பா, குருவே என்ன நடக்குது இங்க? பக்தி முக்தினாப்ல தெரியுது? எல்லாத்துக்கும் நீங்க சொன்ன *அவுங்க* தான் காரனமா?:D
@pavithra, thanx, enna sundal venum..? :D
@sasi, danks alot. ennakum antha pic romba pidikum, actually i searched that pic only in web. :)
@veda, thanx for the aditional info on no:9.
@porkodi, 4 th ku ellam sundalaa? sari, pasamalarayitta! vaangikoo! :)
@TRC sir, enakkum ஸ்ரி. வித்யா சமாசாரம் ellam konjam theriyum. Avan mantra roopamaai deviyai vanguvaan. naan thanthra roobamaai deviyai worshipping. :D
@indian angel, thanks alot. :)
@syam, vaapa vaa! mudhalla nalla buthiya kudu!nu vendikoo ammanai! aprom sundal vaangalaam. LOL :)
@bala.g, Un vaaku balikkatum. :D
@G'gopal, cha! nallathuke kaalam illa. danks pa :)
//ஒரு உருப்படியான பதிவை முதல் முதலில் இந்த வலைப்பக்கத்தில் பார்க்கிறேன்.//
@@geetha paati, paavam, vayasaana kaalam illa, athaan paarvai konjam mangi vittathu. :D
also, naan veru, srini veru illai. he is my soul. :)
//ananda kaneeer//
@usha, Un kannil neer vadinthaal, ushalu, en nenjil uthiram kottuthadi. LOL :D
@dubukku, Yow! sontha sarakku yaa! post potathuku aprom thaan srini kitta sonnen.
//oru carnatic paatu lyricsaiyum poottu (makkala) impress panna try pannuvanu parthen//
good idea, but music online blocked. reel anthu pochu anna! :D
*ukkum* intha Lolluku onnum korachal illa! :D
//எல்லாத்துக்கும் நீங்க சொன்ன *அவுங்க* தான் காரனமா?://
@gops, shishya, yaaru?nu thelivaa sollupa! naradhar velaiya gurukittaye kaatriyee? :)
என்னோட வலை உலக வாழ்க்கையிலேயே நான் அம்பியின் பதிவில் பார்த்த உருப்படியான விஷயம்னு சொல்லி சந்தோஷப்பட்டா, நான் பாட்டியா? எத்தனை முறை பாட்டின்னாலும், பாட்டி ஆகிவிடுவேனா என்ன? நறநறநறநற கட்டாயம் அது குண்டர் படைத் தலைவர் வேலைதான். வேறு யாராலும் (அம்பியால் கூட)இப்படி எழுத முடியாது. தமிழே தடவல். :D
ஆன்மீக அம்பி ஷோக்கா கீது ராசா!!வூட்டுல இருக்கவங்களுக்கு காமிச்சியா!!ஹேப்பியா கீது!!
அப்பா. ஒரே பக்தி ரசம் சொட்டுது. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. ஆமா, தைரிய லக்ஷ்மி கூட இல்லாட்டா நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்த கூட ஒழுங்கா பண்ண முடியாது.
Adadaa!Arpudham!Ambiya idhu!!
Well done!
Amman arul poornamaga kittatum anaivarukkum.--SKM
enna orey pen thevaimku ice ah pottu thakurey nee ?? alreayd gokulathil kannan ... ippo kadavulum vittu vaikaliya ambi nee ;) ha ha ..
enna than intha post ley solla vara nee final ah ;) .. vijaykanth dialog madiri poitey iruku ;) ..
ha ha ..
chumma jokin pa :D .. nalla post .. nan now days work konjam irukurathu naley ... not checkin this freq :) i got to get back to form .. unnaku office ley niraiya vellaiyo ;) daily basis ley ezuthurey ambi :D ha ha ..
keep blogging :D
//எத்தனை முறை பாட்டின்னாலும், பாட்டி ஆகிவிடுவேனா என்ன?//
@geetha, ipdi ellam solli samalikka vendaam. aprom kollu paatti!nu koopda vendi irukkum. epdi vasathi..? :D
@nateshan sir, dankQ! vutula en blog ellam padikka mattanga. :(
//தைரிய லக்ஷ்மி கூட இல்லாட்டா நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயத்த கூட ஒழுங்கா பண்ண முடியாது.
//
200% true. that's why i asked her to stay in all of our mind. dankQ. :D
//Ambiya idhu//
@SKM, yeeh, yeeh, ambiye thaan! enakkum nalla buthi vanthruchu illa! :D
//enna than intha post ley solla vara nee final ah //
@appo postee padikalaiyaa neey? ada paavi! correctta ending kuduthrukene?
//daily basis ley ezuthurey ambi //
Just chk out my blog, the freq of my posting. weekly oru post podarathuke perum paada irukku!unakku 1, 2 enna theriyum illa? ha haa :D
//இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக//
நன்றி அம்பி.. புல்லரிக்குதே..
உண்மையிலே நல்ல பதிவு..படங்களும் ரொம்ப நல்ல வந்திருக்கு..
//கும்புட்டுக்கறேனுங்க...கொயிலுக்குள்ள போன எபக்டு...சரி சுண்டல் குடுத்தீனா வாங்கிட்டு கிளம்பறேன்//
shyam..eppadi enga ponalum oru comedy touchoda kalakureenga
A very nice post, supplemented with great pictures!
ஆப்பு, கத்தரிக்காய் அனுப்பி வச்சிருக்கேன், வந்ததுக்கு மெயில் கொடுங்க, நீங்களாவது, இப்படி எல்லாம் எழுதறதாவது? எழுதினா பஞ்சாப் குதிரை பத்தியும், பங்களூரில் பப்ஸ் பத்தியும், முடி வெட்டிக்கிறதும் தான் எழுதுவீங்க, ஒரு புகழ் தம்பிக்குக் கொடுங்க, பாவம் சொந்த ப்ளாக் கூட இல்லை. :D
aaha, thala pinniteeenga ponga.,
unga naaala ippadium oru post poda mudiudhey........epppadi'pa eppadi?
well written
அம்பி நீ இப்படியெல்லாம் நல்ல விஷயங்களை தம்பி சொல்படி எழுதினாலும் உங்க அப்பாகிட்டே உன்பத்தின உண்மையைச் சொல்லாமல் இருக்கமாட்டேன்.உன்வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் நாள் நெறுங்குகிறது.
@karthik, dankQ! DanQ!.
btw, appavum paru, syam sundalula thaan kanna irukkan! ;D
@viji, Thanks. anonymous perla thaane vazhakkama comment varum..? :P
@geetha, ipdi ellam solli Sriniya blog start panna vaikka mudiyaathu. i've advised him rgding this. ungalukku porraaamai! :D
//unga naaala ippadium oru post poda mudiudhey........epppadi'pa eppadi?
//
@sachin(gops), naan santhosham kondaadum sanyaasi! LOL :)
@TRC sir, ipdi ellam kozhanthaiya miratina sriniya anuppa maatten. :D
ஒம் காளி! ஜெய் காளி!
//@gops, shishya, yaaru?nu thelivaa sollupa! naradhar velaiya gurukittaye kaatriyee? :)//
ஓ!! அப்ப நீங்க சொன்ன அவுங்க இல்லையா? சரி விடுங்க, அப்பறமா எனக்கு மட்டும் சொல்லுங்க.
Aha ambi eppo irunhu asin pathi ellam illama kadavula pathi pathivu poda arambicheenga :)
Nalla post....
Enna dhideernu romba devotional'a ayteenga??
//ஓ!! அப்ப நீங்க சொன்ன அவுங்க இல்லையா? சரி விடுங்க, அப்பறமா எனக்கு மட்டும் சொல்லுங்க//
ஒரு சந்தேகம் பஞ்சாப் பாக்கிஸ்தான் பாடர்ல தான இருக்கு :-)
@Syam://ஒரு சந்தேகம் பஞ்சாப் பாக்கிஸ்தான் பாடர்ல தான இருக்கு :-) //
ஒரு நாட்டாமை பேசற பேச்ச பாரு, கேக்கற கேள்வியை பாரு. பஞ்சாபும் பாக்கிஸ்தானும் ஒட்டினாப்பிடி பக்கத்துல தானுங்ண்ணா இருக்குது :D
@nagai siva, ahaaa! vanthuttan yaa vanthutaan ya!
yele puli! chellam! raaja! kannu! engamaa poirunthaa ithana naala? naanga ellam thavichu poittom theriyumaa? sovkiyamaa kanne sovkiyamaa? :D
//அப்பறமா எனக்கு மட்டும் சொல்லுங்க.//
@gops, shishya, unakku sollama vera yaaruku solla poren? *ahem* enna sollanum..? :D
@anusuya, enakkum thiruntharathuku oru vaaypu kudunga ejamaan! :)
@marutham, ipdi irukaracha naangalum devotional ayiduvoom.
@syam, vaaley vaa! engada vanbu?nu alaiviyee? :D
//பஞ்சாபும் பாக்கிஸ்தானும் ஒட்டினாப்பிடி பக்கத்துல தானுங்ண்ணா இருக்குது//
@gops, pakisthanla kooda oru punjab irukku! but namba punjab maathiri varumaa? :D
naan namba punjab!nu state thaan sonnen! :)
ரொம்ப சவுக்கியம் ராசா.......
ஏன் இம்புட்டு நாளா வரல என்பதை பற்றி ஒரு பதிவே போட்டாச்சு
ரொம்ப தான் நம்ம மேல எல்லாரும் பாசத்தை கொட்டுறீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
kandipaa - inthra soundarrajanunkku pottiya khadai ezhudallam sarakku irrukku
Oh...... I remember having seen that first picture somewhere. Hmmmmmmmmmm definitely not in my house. Why are you scaring us by putting Kali photo ... Idhu yellam konjam over...
Post a Comment