Friday, October 06, 2006

சென்னை மாநாட்டு செய்திகள்!நெல்லையில் நடந்த பிளாக்கர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இதை தொடர்ந்து நமது கழக கண்மணி குவைத்தில் நமது புகழை பரப்பி வரும் பக்கா திருடன்! சே! பக்கா தமிழன் தாம் சென்னைக்கு வருவதாகவும், சென்னையில் ஒரு மா பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து எதிர் கட்சிகளுக்கு நமது பலத்தை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தை எடுத்து சொல்லவும், 'ஆகட்டும் பார்க்கலாம்!" என்று சொல்லி இருந்தோம்.

தொண்டர்கள் விருப்பம் தான் நமக்கு முக்கியம்! என கருதி, சென்னைக்கு பயணபட்டோம். சென்னைக்கு வந்தால் தமது குடிலில் தான் தங்க வேண்டும்! என
TRC சார் அடம் பிடிக்கவே, அவரது விருப்பத்தை ஏற்று கொண்டோம்.

தனி விமானத்தில் வந்தால் நம்மால் பொது மக்களுக்கு இடையூறாக அமையுமே! என்று இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்.

காலை சிறிது ஷாப்பிங்க் எல்லாம் செய்து விட்டு, கரெக்ட்டா சாப்பாடு போடும் வேளையில் சார் வீட்டுக்கு போய் கதவை தட்டினோம். 25 - 29 வயதே மதிக்கதக்க ஒருவர்(கீதா மேடம் கவனிக்கவும்) என்னை வரவேற்றார். எதிரே நிற்பது TRC சாரின் பேரனா? இளைய மகனா?னு என் மனதில் சாலமன் பாப்பையா தலமையில் ஒரு குட்டி பட்டி மன்றமே நடந்தது. "நான் தான் TRC சார்!" என்று சொல்லவே நான் அவர் வீட்டு சோபாவில் மயங்கி சரிந்தேன்.

பின் அருமையான மதிய உண்வை அமுக்கினேன். (நல்ல வேளை கத்திரிகாய் கறி செய்யவில்லை.)

மாலை நாங்கள் இருவரும் பாப நாசம் சிவன் அவர்களின் 116 -வது பிறந்த நாள் சிறப்பு கச்சேரிக்கு நாரத கான சபாவுக்கு கிளம்பினோம். பாகவதர் கால ஜிப்பா, மற்றும் கரை வேஷ்டி கட்டிய மாமாக்களும், வைர மூக்குத்தி அணிந்த மாமிகளும் "இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பது போல டி-ஷர்ட், டெனிம் நீல ஜீன்ஸில் வந்த எங்கள் இருவரையும் பார்த்தனர். கச்சேரி படு அமர்களம். அதை பற்றி விலாவரியாக சார் எழுதுவார்.

முக்கியமாக, "நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு!" என்ற வரி வரும் போது என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா அவரது மாமியை பார்த்து ரொமான்ஸ் லுக் விட்டு "ரம்பா!" என்று அழைக்க, பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்.

அடுத்த நாள் தான் சென்னை பொது கூட்டம் என்று முடிவாகி இருந்தது. ஏற்கனவே சொன்ன இடம் சின்னதாக இருந்ததால், சார் அவரது மனதை போலவே பெரியதான அவரது வீட்டுக்கே மாற்றப்பட்டது.

"கழக கண்மணி! டகால்டி ராணி! எம்முடன் ஒரு கொடியில் பிறந்த இரு மலரான போர்கோடி!" சே! பொற்கொடி முன்னதாகவே வந்து மாநாட்டு பந்தல் முகப்பில் காத்திருந்தார். "வாழ்வளித்த தெய்வம்!"
வேதா(ளம்) தமது சுண்டல் கலக்க்ஷன் பணியை கூட விட்டு விட்டு பொது கூட்டத்துக்கு வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் எமக்கு பேச்சே வர வில்லை...

தொண்டர்களை பிக்-கப் செய்ய எதிர்கட்சிகள் லாரி தான் ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நாங்கள் சொகுசு காரில் அனைவரையும் அழைத்து வந்தோம். இதற்கிடையில் பக்கா தமிழனும் வந்து சேர்ந்தார். டிநகர் பிரசாரத்தில் தான் மும்முரமாக இருப்பதால் கூட்டதில் கலந்து கொள்ள முடியாமைக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சசிபிரபா அவர்கள். (சசி, சென்னை சில்க்ஸ்ல அன்று புடவை செம விற்பனையாமே? உண்மையா?)

இப்படியாக சார் வீட்டில் கசேரி களை கட்டியது. பிளாக்கர்கள் சந்திப்புக்கும் போண்டாவுக்கும் என்ன சம்பந்தமோ? இங்கேயும் போண்டா தான்! கூடவே சமோஸாவும் ஏலக்காய் டீயும்! உமா மேடத்தின் (சாரின் பிரதம மந்திரி) நல்ல மனம் போல டீயும் இனித்தது.விருந்தோம்பலில் தமிழர்கள் தலை சிறந்தவர்கள்! என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் சார்.

வெறும் இரண்டு பேரை வைத்து நெல்லையில் மாநாடா? என்று கை தட்டி கொக்கரித்த கூட்டமே! இன்று என்ன சொல்ல போகிறீர்கள்?

இரண்டு ஐந்தானது! நாளை ஐநூறு ஆகும்.
இன்று சென்னையில் மாநாடு நடத்தி விட்டோம்,
நாளை டெல்லியில் நடத்துவோம்.
பின் நாளை மறு நாள் அமெரிக்கவில் ஐ. நா சபையில் கோபி அன்னன் தலைமையில் நடத்துவோம்.

(ஹி,ஹி உஷா, இது அந்த
கோபி இல்லைமா! அண்ணாவை கோச்சுக்காத!)

போனா போகுது, வயதில் பெரியவர்கள்!னு சொல்லி கீதா மேடத்துக்கு(யாருப்பா அது? பாட்டி!னு வாசிக்கறது?) செல் பேசினால் மொபைலை அணைத்து விட்டார்கள். சரி! பாவம், பயண களைப்பு! மேலும் குதிரையில் இருந்து வேறு கீழே விழுந்து மூக்கில் அடி பட்டு கட்டு போட்டிருப்பதாக கேள்வி! எனவே தொந்தரவு செய்யவில்லை.

"ஒசில போண்டா தறாங்க!"னு விஷயம் வெளியே தெரிந்தால் மிக பெரிய கூட்டமே கூடி விடும் என்ற பயம் கருதி கட்சி உயர்மட்ட குழு மீட்டிங்க் போல இது ரகசிய கூட்டமாகவே நடத்தப்பட்டது. உடனே இதை கட்-காப்பி-பேஷ்ட் பண்ணி
"கீரை கடைக்கு எதிர்கடையா? உனக்கு பிடிச்சது தயிர் வடையா?"னு ஒரு பில்டப் குடுத்து மீள்பதிவு போட்டு விட வேண்டாம்.

இது பிரியாணி பொட்டலம் குடுத்து சேர்த்த கூட்டமல்ல, அன்பால் தானாகவே (போண்டாவுக்கு) சேர்ந்த கூட்டம்.

இது மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு முறை மூத்த பிளாகர் கீதா மேடம் தலை(மை)யில் நடத்தலாம் என்றும், அப்போழுது சுட சுட வாழைக்காய் பஜ்ஜியும், கொத்தமல்லி சட்னியும் பறிமாறப்படும்! என்ற வரலற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றப்பட்டது. இதனால் மேலும் பலர் ஜோதியில் ஐக்கியமாவர்கள்! என்று உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பி.கு: இது ஒரு வெள்ளோட்டம் தான். பலரது ஈ.மெயில் முகவரி தெரியவில்லை. நானும் தனி போஸ்ட் போட்டு தெரியபடுத்த வில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம். என்ன மக்களே! சரி தானே? இதுகேல்லாம் அழ கூடாது! :)

51 comments:

மு.கார்த்திகேயன் said...

நான் சென்னையில் இருக்கும்போது இப்படி நடத்தாம இப்போ பட்டாசை கிளம்புறது நல்லாவே இல்லை அம்பி..

மு.கார்த்திகேயன் said...

எப்படியோ நல்லா நடத்துனீங்களே அதுவே சந்தோசம்.. சீக்கிரம் நட்டாமை தலைமைல நாங்களும் அமெரிக்கவுல நடத்துறோம் பாருங்க மாநாடு.. சும்மா அமெரிக்கவே கும்மாளம் போட..

என்ன நாட்டாமை சொல்றீங்க.. ப்ரியா, பரணி என்ன சொல்றீங்கபா

வேதா said...

திராச சார் வீட்டுக்கு அம்பி போன மர்மம் என்ன தெரியுமா மக்களே, அவர் வீட்டு பக்கத்தில் இருக்கும் ரேஸ் கோர்ஸில் பஞ்சாப் குதிரை வரும் என்ற ரகசிய தகவலை உளவு துறை மூலம் தெரிந்துக் கொண்டதால் தான்:)

//இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்.//
பஸ்ஸுல புட்போர்ட்ல தொங்கிக் கொண்டு வந்ததுக்கு இத்தனை பில்டப்பா:)


இது தலைவிக்கு:
தலைவி இல்லாத கூட்டமெல்லாம் ஒரு கூட்டமா நான் வரமாட்டேன் என்பதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் எனக்கு மெயில் அனுப்பி கண்டிப்பாக வர வேண்டும் என்று என்னை மிரட்டி வர வைத்தார்:)

indianangel said...

kalakkala ezhudiyirukeenga ambi!
idha thavira solradhukku vera edhvum illa!

Bala.G said...

Ambi, kookathuku apuram rendu naal saapidave ilayaame...unmayava?
Kootathuku rendu naal munnadi saapdadha vishayam ellarukum theriyum :)

Karthikeyan, ennayum kootathula serthukonga....

indianangel said...

@ ambi: appadiye neenga ellarum serndhu poru photova eduthu padhivula potrkalaamilla! mugam theriyaadha nanbargale ungalai naanga paathurpom! miss panniteenga ambi! :)

Nila said...

Poonkappa...Kathula pokaiyaa varuthu..

Namba uuru namba uuru thaan :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

" இரவு நேரம் பயணப்பட்டு ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தோம்."
பண்னுவதெல்லாம் தில்லு முல்லு, பின்ன என்ன பகல் நேரத்திலேயா வர முடியும்

""பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்"

மாமி சொன்னது என்னமோ சரிதான்.ஆனால் சொன்னதிசை அதுதானா?

"சரி! பாவம், பயண களைப்பு! மேலும் குதிரையில் இருந்து வேறு கீழே விழுந்து மூக்கில் அடி பட்டு கட்டு போட்டிருப்பதாக கேள்வி! எனவே தொந்தரவு செய்யவில்லை.

அம்பி சரியா விசாரிச்சயா மூக்கில் அடிக்கு அதுதான் காரணமா என்று . நான் வேறு விதமாக கேள்விப்பட்டேன்.மோத வந்து சண்டை போட்டு மூக்கறுந்து போனா......

இந்தப் பதிவில் கூட்டத்தில் பேசப்பட்ட பாட்டியின் சே பார்ட்டியின் நடவடிக்கை பற்றி ஒன்றுமே காணோம்.இரண்டாவது மொக்கை பதிவு சே சீரியலுக்கு கூட முடுயும் போது வாகன ஓட்டுனர் பேரெல்லாம் போடும்போது நமது வாகன ஓட்டியின் அதுவும் பி.ஈ.(ஈ.சி.ஈ) பற்றி ஒரு வார்த்தை இல்லை.மூன்றாவது, பொற்கொடியின் ஆவேசபேச்சைப் பற்றியோ பயத்தைப்பற்றியோ ஒரு வார்த்தை இலை
மிக முக்கியமாக அம்பியின் சென்னை விஜயத்தின் முக்கிய காரணமான பெண்பார்த்து பிறகு நடக்கப்போகும் நிச்சியதார்த்தை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.சாரி அம்பி எதுலதான் விளையாட்டுன்னு ஒரு வரை முறை வேண்டாம்

Gopalan Ramasubbu said...

//பெண்பார்த்து பிறகு நடக்கப்போகும் நிச்சியதார்த்தை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.//

பஞ்சாபும் கல்லிடைக் குறிச்சியும் பக்கத்துல வந்தா சரி :D

அம்பி குருவே, நீங்க சொன்ன பாகிஸ்தான் பஞ்சாப் என்ன ஆச்சு? ;)

பொற்கொடி said...

ஹாஹாஹா.. சூப்பர் உங்கள எதுக்காக எழுதச் சொன்னோமோ அத சரியா செஞ்சுட்டீங்க :) லேட்டானாலும், லேட்டஸ்டா? தி.ரா.ச ஐயா கிட்ட இருந்து நல்லத மட்டும் எடுத்துக்கற உங்கள பாராட்ட வார்த்தையே இல்ல :D

ஆமா என்ன சார், நிச்சயதார்த்தம் என்னவோ சொல்லறாரு.. என்ன நடக்குது எனக்கு தெரியாம? பிச்சிப்புடுவேன் பிச்சு!

பொற்கொடி said...

பி.கு போட்டீங்க பாருங்க.. இவ்ளோ பயந்த குழந்தையா நீங்க.. :) பயப்படாதீங்க, கீதா பாட்டி நம்மள ஒண்ணும் செய்ய மாட்டா, நல்ல பாட்டி:D

அப்புறம் உங்க ஆபீச்ல படம் தெரியாதுனா என்ன வெளில வந்து பாருங்க, இத எல்லாம் சாக்கா வெச்சு ஒரு கமெண்ட்டோட நிறுத்திக்க முடியாது!

golmaalgopal said...

vazhakkam pola sooberah ezhudhirkeenga... :))

adutha vaati bajjiya??? idho kelambiteeeeeeennnnnnnnn

aamaa idha vaati eppovum vidra maadhiri bagirangamma arikka edhuvum illaye???kootathula inna pesinenga???

Deekshanya said...

wow! kalakitinga ponga. Nice round up on all that happened.. aana ipdi solama kolama vachutingala.. Oray oor, oray family la irunthitu sisterku solama oditinga illa... hmm parthukarain!

Pavithra said...

As usual, Nice narration. But neraiya censor panniteenga pola irukku? ;-)

வேதா said...

//மிக முக்கியமாக அம்பியின் சென்னை விஜயத்தின் முக்கிய காரணமான பெண்பார்த்து பிறகு நடக்கப்போகும் நிச்சியதார்த்தை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.//
போற போக்கை பார்த்தா, அடுத்த முறை மாநாடு போடறேன்னு வந்துட்டு கல்யாணமே பண்ணிண்டு போய்டுவார் போலிருக்கே:)

Shuba said...

nalla enjoy paneenga ala gud gud

மு.கார்த்திகேயன் said...

//போற போக்கை பார்த்தா, அடுத்த முறை மாநாடு போடறேன்னு வந்துட்டு கல்யாணமே பண்ணிண்டு போய்டுவார் போலிருக்கே//

correctaa sonneenga vetha.. ambi appadi panninaalum pannuvaar

Priya said...

//25- 29 வயதே மதிக்கதக்க ஒருவர்//
ஒரு வேளை சாப்பாடு போட்டதுக்கு TRC sir க்கு இவ்ளோ மஸ்க்காவா?

//கரை வேஷ்டி கட்டிய மாமாக்களும், வைர மூக்குத்தி அணிந்த மாமிகளும் "இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?" என்பது போல டி-ஷர்ட், டெனிம் நீல ஜீன்ஸில் வந்த எங்கள் இருவரையும் பார்த்தனர்.//
ROFTL :)

//அம்பியின் சென்னை விஜயத்தின் முக்கிய காரணமான பெண்பார்த்து பிறகு நடக்கப்போகும் நிச்சியதார்த்தை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.//
அது தான் matter ஆ? அதை சொல்ல மாட்டேங்கறீங்களே!

Priya said...

@karthik,
//சீக்கிரம் நட்டாமை தலைமைல நாங்களும் அமெரிக்கவுல நடத்துறோம் பாருங்க மாநாடு.. சும்மா அமெரிக்கவே கும்மாளம் போட..
என்ன நாட்டாமை சொல்றீங்க.. ப்ரியா, பரணி என்ன சொல்றீங்கபா//
நட்டாமை தன்னோட white house லயே நடத்திடுவார்.

Sandai-Kozhi said...

Ambi,Asusual kalakkal.so v.bajji,malli chutney venumnna geetha patti geetha madam agaitanga ungalukku.Thalaivi idhellam correcta kandupidichu nalla Mulaga bajji kodukka poranga.

meetingla bloggers count 5,500 aagum.kandippa aagum,mudhal muyarchikku vazhuthukkal.

yenna,TRC sir vera edho kadhai sollraru.Niraya abimanigal unga badhilukkaga kathrukkanga.seekiram clear all the doubts.--SKM

மு.கார்த்திகேயன் said...

//நட்டாமை தன்னோட white house லயே நடத்திடுவார்.//

senjalum seivaar.. avar onnum solla mattengiraare, priyaa

Bharani said...

ambi...ivlo saapdura items vachikitu...enna koopidave illaye....idhai naan vanmayaga kandikaren....adhutha mandala maanatuku kandipa koopudareenga....vandhu oru vettu vetren parunga :)

ambi said...

@karthik, enna pa seyya? i scheduled as per pakka tamilan's travelling dates. unnai miss panninome!nu enakku ore peelings of India.

Us la try pannunga, *ahem* chinnatha oru visa, business classla to & fro Air ticket mattum enakku anupunga ellarum sernthu! :D

//புட்போர்ட்ல தொங்கிக் கொண்டு வந்ததுக்கு இத்தனை பில்டப்பா//
@veda, that's pakka tamilan only. romba pavam avan! :(


//எனக்கு மெயில் அனுப்பி கண்டிப்பாக வர வேண்டும் என்று என்னை மிரட்டி வர வைத்தார்//
ரொம்ப பேசினா அந்த மெயிலையும் போஸ்டா போட்ருவேன்! :D

@indian angel, danQ, romba pugayuthu polirukku! :D

@bala.g, yeeh, TRC sir veetu samayal superrappu! nalla 3 velaiyum, 2 naalaikkuma oru vettu veetinen. :)

//appadiye neenga ellarum serndhu poru photova eduthu padhivula potrkalaamilla//
@Indian angel, he hee, engalukku ellam vilambaremee pudikaathu. so no poto! illamaa porkodi..? :D

//Namba uuru namba uuru thaan //
@nila, welcome here for d pashtu time. correctta sonnenga ammani! :)

//மாமி சொன்னது என்னமோ சரிதான்.ஆனால் சொன்னதிசை அதுதானா?
//
@TRc sir, பின்ன என்ன உங்களை பார்த்தா சொன்னாங்க? ஆசை தோசை அப்பளம் வடை! உமா மேடம் கிட்ட சொல்லி குடுத்ருவேன்! ஆமா!

//பொற்கொடியின் ஆவேசபேச்சைப் பற்றியோ பயத்தைப்பற்றியோ ஒரு வார்த்தை இலை//
he hee, ennama porkodi, singatha seendrar. athaiyum postaa potruvoomaa? :D


//அம்பியின் சென்னை விஜயத்தின் முக்கிய காரணமான பெண்பார்த்து பிறகு நடக்கப்போகும் நிச்சியதார்த்தை பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.//

நாரதர் வேலை நல்லா பாக்கறீங்க சார்.


//பஞ்சாபும் கல்லிடைக் குறிச்சியும் பக்கத்துல வந்தா சரி //
@gops, ஏற்கனவே பக்கதுல தான் இருக்கு. சமாளிக்கவே முடியலை. :D

ambi said...

//தி.ரா.ச ஐயா கிட்ட இருந்து நல்லத மட்டும் எடுத்துக்கற உங்கள பாராட்ட வார்த்தையே இல்ல //
@porkodi, DanQ! DanQ! ஹிஹி, இதுக்கு பேரு தான் உள்குத்தா? :)

//என்ன நடக்குது எனக்கு தெரியாம? பிச்சிப்புடுவேன் பிச்சு!//

சும்மா! சும்மா! அவரு கிண்டி விடறாரு. யாரு வந்தாலும் நீ தான் நாத்தனார்.(னீ மட்டுமா, பிளக்குல எத்தனை தங்கைகளடா அம்பி உனக்கு?) உன் பதவிக்கு ஒரு ஆபாத்தும் இல்லை. என்னய நம்பு! (with Avin paal looku!)

//adutha vaati bajjiya??? //
@gopal, amaaa, kesariyum poduvaanga, oru ponnaiyum kaatuvaanga. :D LOL
No arikais this time.

//Oray oor, oray family la irunthitu sisterku solama oditinga illa.//
@deeksh, sorry sister. i dono your mail-Id. nestu time kalakkiruvoom! :)

//But neraiya censor panniteenga pola irukku? //
@pavi, vaangka ma vaanga! TRC sir pecha ellam namabtheenga. Me shtill innocentu! :)

//அடுத்த முறை மாநாடு போடறேன்னு வந்துட்டு கல்யாணமே பண்ணிண்டு போய்டுவார் போலிருக்கே//
@veda, no. no, nestu time Honey moon thaan! LOL :)

@subha, thanks.

@karthik, see reply to veda.

//ஒரு வேளை சாப்பாடு போட்டதுக்கு TRC sir க்கு இவ்ளோ மஸ்க்காவா?//
@priya, cha! 3 velai pottaar. veetu saapadu vera. but neenga buthishaaali! :)

//அது தான் matter ஆ? அதை சொல்ல மாட்டேங்கறீங்களே! //
@priya, cha! athellam onnum illai, avaru kindi vidaraaru! :D

//seekiram clear all the doubts//
will put a disclaimer. :)

//ivlo saapdura items vachikitu...enna koopidave illaye.//
@bharani, he hee, i think U r in US rite..? anyway will invite U nestu time. but don't ask air tickets. :)

ambi said...

Disclaimer:
நான் நிச்சயதார்தத்துக்கு சென்னை வந்தது என்னவோ உண்மை தான். ஆனா அது என்னோட நிச்சயம் இல்லை.
யப்பா! கொஞ்சம் விட்டா அம்பி தன்னோட குழந்தைய ஸ்கூலில் சேர்க்க தான் விஜயதசமிக்கு சென்னை வந்தான்!னு சொல்லிடுவாங்க போலிருக்கு! :D

indianangel said...

@ AMBI:
//@indian angel, danQ, romba pugayuthu polirukku! :D

appadinna enna artham enakku unga alavukku thamizh pulamai kedayadhu!
adhe maadhiri diski diski'nnu solreengale adhukkum enna artham?

மு.கார்த்திகேயன் said...

\\குழந்தைய ஸ்கூலில் சேர்க்க தான் விஜயதசமிக்கு சென்னை வந்தான்\\

Oh..appadiyaa chethi.. ambi chollave illa..

Sasiprabha said...

Ambi kadaisikku ennoda purchase mattum RMKVkku poiduchu... Chennai silksla onnum therala.. RMKVla adhuvum eduthu pota 2nd sareeye.. Naan ore oru Reversible Saree dhaan keten.. Yaarume eduthu kudukka maatenutaanga.. Appurma andha saree display panni irundha idathukku poi ninnu, Chee chee indha saree nalla illa appidinnu sollittu kelambitten.. Ennoda purchase motham 12 minutes.. Mathavangadhaan... Kadaila velai seiyiravangala vaangura sambalathukku mela alaya vittu.. Paavam andha samoogam..

Sasiprabha said...

Oru valiyaa naan illaama maanaadu nadathittinga.. Va.Vaa. Thalaivi muraiya arikkai vittu, kalaga kanmanigalukku ellaam muraiyaa arivippu koduthu, namma adutha maanaatai sirappa nadathanum..

Yaaro sidela americavula ellaam nadathuraangalaame.. Agila ulaga maanatukku India, adhuvum chennai dhaan thalamai idamaa irukkanum. Ambi idhai namma kalaga kurippula sethukkunga..

கீதா சாம்பசிவம் said...

grrrrrrrrrrrrrr.............. எனக்குத் தெரியாம மாநாடு நடத்திச் சங்கத்திலே டுபுக்குவைச் சேர்க்கச் சதி? அம்பி, யாரந்தத் துரோகி? நான் கஷ்டப்பட்டுச் சங்கப் பணி, அதுவும் களப்பணி ஆற்றப் போயிருக்கும் வேளையில் என் முதுகில் குத்திய அந்தத் துரோகி யார்?
வேதா(ள்), பாராட்டுகிறேன், உங்கள் விஸ்வாமித்திரரை, சீச்சீ, விச்வாசத்தை.
பொற்கொடி, முன்னேயே வந்து உட்கார்ந்து தலைமைக்குத் துரோகமா? ஊருக்குப் போகும் அவசரத்தில் தலைவியிடம் அனுமதி வாங்கி உள்ளே நுழைந்து இப்போ தலைவிக்கே துரோகமா? பாட்டி, பாட்டி என்பர் அவரே பாட்டி என்பார். இது அறியாயோ நீவிர்,
தி.ரா.ச. சார், ரொம்ப டாங்ஸு, இப்படி நாரதர் வேலையும் பார்க்கிறதுக்கு. எல்லாம் சகவாச தோஷம் தான். ரொம்ப நல்ல மனுஷன், இந்த அம்பி சகவாசத்திலே மாறிட்டார். :D :D :D

இதெல்லாம் ஒரு பதிவு, சரியான மொக்கைகைகைகைகைகைகைகை.

கைப்புள்ள said...

அம்ப்ரீ,
சூப்பரா எழுதிருக்கீங்க. நல்லா சிரிக்க வச்சது உங்கப் பதிவு. பல எடங்கள்ல சிரிப்பு என்னையும் அறியாமல் பீறிக் கொண்டு கிளம்பியதால் எதை quote-unquote பண்ணுவது என்று புரியவில்லை. அப்படி நீங்க எழுதுனதுல பீற வச்ச ஒரு எடம்...
//முக்கியமாக, "நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு!" என்ற வரி வரும் போது என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா அவரது மாமியை பார்த்து ரொமான்ஸ் லுக் விட்டு "ரம்பா!" என்று அழைக்க, பதிலுக்கு மாமியும் "ஸ்வாமி!"னு திருப்பி போட்டு தாக்க, அட்ரா சக்கை! அட்ரா சக்கை! ம்ம்ஹ்ம்ம்//

தலைவியின் வீரதீர பிரதாபங்களையும் நாம் மெச்சினோம் என்று சொல்லவும் வேண்டுமோ? அவங்க ஆல்வேஸ் சூப்பர் ஸ்டார்.
:)

Ponnarasi Kothandaraman said...

Hahaha tht was awesome writeup!
Gr8 work both organisng and writing it up! :)

பொற்கொடி said...

அம்பி, பாட்டி அப்பப்போ க்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு உறுமியே பல்லு எல்லாம் கொட்டி போச்சாம் :( நாம ஒரு செட் வாங்கித் தரலாமா? :)

Usha said...

idhellam UN range-ku escalate panni meelpadhivu adhu idhu-nu podaradhellam over.

வேதா said...

//nestu time Honey moon thaan! //
பாஸ் செம ஸ்பீடூல போறார் போல:) பாத்து வழுக்கிட போகுது:)

ambi said...

//romba pugayuthu //
@Indian angel, mean You're getting jealous. :D

//diski diski'nnu solreengale adhukkum enna artham? //
Mean Disclaimer. Pandiya manna! theernthatha santhegam? olunga edu 1000 porkasugal. :)

@karthik, nee US poi romba theritta. :D

//India, adhuvum chennai dhaan thalamai idamaa irukkanum.//
@sasi, sethuduvoom!
ipdi RMKV employees pavatha kottika vendaam. :D

//நான் கஷ்டப்பட்டுச் சங்கப் பணி, அதுவும் களப்பணி ஆற்றப் போயிருக்கும் வேளையில் //
@Geetha madam, ithu thaan Ultimate Comedy rather than my post!
அடுத்த மீட் உங்க வீட்டுல தான். ஒழுங்கா பஜ்ஜி ரெடி பண்ணுங்க. கூடவே கேசரியும். என்ன புரிஞ்சதா? :D

//என்னையும் அறியாமல் பீறிக் கொண்டு கிளம்பியதால் எதை quote-unquote பண்ணுவது என்று புரியவில்லை//
@kaipullai, தன்யன் ஆனேன் பிரபு. மஹாபாக்யம் தாங்கள் வந்தது! அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சவுக்கியமா? :D

//தலைவியின் வீரதீர பிரதாபங்களையும் நாம் மெச்சினோம் என்று சொல்லவும் வேண்டுமோ?//

@kaipu,வஞ்ச புகழ்ச்சி அணியில உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல தல! :)

@ponnarasi, danQ, nestu time neenga varuveengalaa? :)
//நாம ஒரு செட் வாங்கித் தரலாமா?//

@porkodi, வேணாம்! எத்தனை செட் வாங்கி குடுக்கறது? ஏற்கனவே நான் பெங்க்ளுரில் ஒன்னு வாங்கி குடுத்தேன்.

@usha, yeeh, நான் எல்லாம் ஒரு அற்ப பதர்! :D

//பாத்து வழுக்கிட போகுது//
@veda(lam), வழுக்கி விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாது! :D

zeno said...

medhu vada kudukkura blog manadu chennaila nadantha marakkama sollunga

kuttichuvaru said...

ambi.... ithu maathiri oru periya vizhaava naan varumbothu nadathanum!! eppo-nnu koodiya seekiram solren!! thalaimai thaangidunga!!

நாகை சிவா said...

ஆக மொத்ததில் ஐம்பெரும் மாநாடு போல......

அது எல்லாம் சரியா, எதுக்கு கோபி அன்னனை வம்புக்கு இழுக்குறீங்க. அந்த ஆளே நம்மள வீட்டுக்கு அனுப்ப போறாங்களே நொந்து போயி இருக்காரு. பாவம்ய்யா அவரு ;)

Syam said...

ஒரு போண்டா ஓசில சாப்டதுக்கு இத்தன பில்டப்பா...இதுவே TRC அண்ணன் சாப்பாடு போடலனா நீ புட்போர்டுல தொங்கிட்டு சென்னை வரைக்கும் போய்ருப்பியா...:-)

அண்ணனும் தங்கயும்(போற்கொடி) ரவுண்டு கட்டி போண்டா சாப்பிட்டதா சன் நியூஸ்ல சொன்னாங்க :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@ பொற்கொடி தி.ரா.ச ஐயா கிட்ட இருந்து நல்லத மட்டும் எடுத்துக்கற உங்கள பாராட்ட வார்த்தையே இல்ல :D

அம்மணி தாங்கள் தங்கி இருந்த 2 மணி நேரத்தில் என்னிடத்தில் தாங்கள் கண்ட கெடுதல் என்ன வென்று அறிவித்தால் தங்கள் பதிவை ஒரு காப்பி எடுத்து மியாவுக்கு அனுப்புவேன்.சமோசாவையும் போண்டவையும் நல்ல அமுக்கிவிட்டு இதுவும் சொல்லுவீங்க இதுக்குமேலேயும் சொல்லிவீங்க.

@அம்பி பரவயில்லை உண்மையை ஒத்துகொண்டுவிடு இல்லைனா அப்பறம் நீ என்னை உங்க அப்பா அம்மா கிட்டே தூது விட்டு நான் உண்மையா கல்லிடை எதுக்கு போனேன்னு சொல்லவேண்டியிருக்கும்.

அனுசுயா said...

அம்பி வழக்கம் போலவே நல்லா எழுதியிருக்கீங்க. நல்லா சிரிக்க வெச்சிட்டீஙக. அப்புறம் பொண்ணு பாத்த மேட்டர் பத்தி தனி பதிவு எப்ப போட போறீங்க. :)

ambi said...

@zeno, medhuvadaiyaa? sari, pariseelanai pannuvoom! welcome here. :D

@kutti, unakillamaya? kandippa panniduvoom! *ahem* a/c no tharatumaa? :)

@nagai siva, vaapa puli, avara mattuma vambuku ezhuthoom..? :D

//ஒரு போண்டா ஓசில சாப்டதுக்கு இத்தன பில்டப்பா...//
@syam,ஒரு போண்டாவா? சமோசாவை விட்டுடியே? :D

//அண்ணனும் தங்கயும்(போற்கொடி) ரவுண்டு கட்டி போண்டா சாப்பிட்டதா //
இப்படி கண்ணு வெச்சு வெச்சு தான் அவ காய்ச்சல் வந்து கிடக்கறா! முதல்ல ஒரு பூசணிக்காய் எடுத்தி சுத்தி (உன் தலையில) போடனும்! :D

//அப்பறம் நீ என்னை உங்க அப்பா அம்மா கிட்டே தூது விட்டு நான் உண்மையா கல்லிடை எதுக்கு போனேன்னு//
@TRC sir, நீங்க எப்ப எங்க ஊருக்கு போனீங்க சார்? என்ன சொல்றீங்க? உன்னும் புரியலையே? he hee :D

//அப்புறம் பொண்ணு பாத்த மேட்டர் பத்தி தனி பதிவு எப்ப போட போறீங்க//
@anusuya, வாங்க அக்கா வாங்க! நான் மட்டும் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்! ;)

Ponnarasi Kothandaraman said...

Hahaha vaaipum santharpum sari'a amanja vantha pochu ;)

Harish said...

en oi vaiterichala kelapareer....
naan anga irukkumbodu onnumae nadakala...
Umma vandu gavanichukaren :-)

நாகை சிவா said...

யோவ் அம்பி!
கீரைக்கடை மேட்டருல லைட்டா விளையாடி இருக்க போல.
நல்ல அங்கதம் தான்
போட்டு தாக்கு

ambi said...

@pons, ellam unga thanga manasu maathiriye nadakkum :)

@harish, eley! ithuke evloo peru enna banthaaa vittaanga theriyumaa? "i'll be busy!"
"i don't used to indulge this kind of things!"
"I used to meet my school friends only!"nu scenu sinthamaanigal thaan. :)

//கீரைக்கடை மேட்டருல லைட்டா விளையாடி இருக்க போல.//
@nagai siva, ஹிஹி,இப்ப தான் பாத்தியா? தீயினால் சுட்ட புண் இப்ப வடுவா மாறி இருக்கு! :D

smiley said...

இரண்டு ஐந்தானது! நாளை ஐநூறு ஆகும்.
இன்று சென்னையில் மாநாடு நடத்தி விட்டோம்,
நாளை டெல்லியில் நடத்துவோம்....

ithuku melay kootam serthaal yaar thalaivar enru potti vanthu vidum... good u set the ball rolling.. yamum oru nazh thangal kootathil kalanthu kolkiraan :)

Known Stranger said...

yeppadi unnalla matuum mudiyuthu ethellam ennamoo phoo nalla irruntha seri

Balaji S Rajan said...

For two people meeting in Nellai there was so much of build up and photos. Why there are no photos about this meeting. OK...OK... How was your bride seeing incident? When are you going to put a post for that.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信