Friday, October 27, 2006
வீர வேல்! வெற்றி வேல்! ஷக்தி வேல்! எமை ஆளும் வஜ்ரவேல்!
தேவர் படை ஒரு புறம், அசுரர் படை மறு புறம். சூரபத்மன் மனம் போல திருச்செந்தூர் கடலும் பொங்கியது. அவனின் மனதில் தோன்றிய எண்ண அலைகள் போல கடலில் தோன்றிய அலைகளும் ஆர்பரித்தது.
"யார் இந்த பாலகன்? பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் இவனா என் அசுரர் படையை அழித்தவன்?
சிங்கமுகனை இவன் தான் கொன்றான்! என செய்தி வந்ததே? உண்மையா என்ன? அவனை வெல்ல இந்த உலகில் ஒருவரும் இல்லையே?
சரி, தாரகன் கதி..? இந்திரனையே மண்டியிட செய்தவன் ஆயிற்றே?
இந்த பாலகனை என்னால் எதிரியாகவே பார்க்க முடியவில்லையே? கையேடுத்து வணங்க மனம் துடிக்கிறதே? எங்கே போனது எனது ஆக்ரோஷம்?
சே! நான் கோழை ஆகி விட்டேனா? இவன் யார்? யக்ஷனா? தேவனா? கிங்கரனா? கந்தர்வனா? அற்ப மானிட பதரா?"
குமரன் திருவாய் மலர்ந்தான்,"என்ன அசுரர் தலைவனே! மவுனம் ஏன்? தன்னெஞ்சே தன்னை சுடுகிறதா?
பேராசை பட்டாய், நான் என்ற அகங்காரம் கொண்டாய்! தர்மத்தை மறந்தாய்! தன்னடக்கத்தை துறந்தாய்! அடாத செயல்கள் செய்தாய்! அனுபவிக்கிறாய்!
இப்பவும் ஒன்றும் கெட்டு போகவில்லை. உன் தவறுக்கு வருந்து. தப்பு செய்தமைக்கு மன்னிப்பு கேள்".
"வினாஷ காலே விபரீத புத்தி!" விதி யாரை விட்டது?
"பச்சிளம் பாலகனே! மாயைகள் கற்றவனே! என் தம்பி மார்களை கொன்றாய்! இந்த ஒரு காரணம் போதும்! உன்னை தண்டிக்க. ஆனாலும், இந்த சூரபத்மன் ஒரு பாலகனை கொன்றான்! என்ற பழி வேண்டாம், மன்னிப்பு கேள்! உயிர்பிச்சை அளிக்கிறேன்!" பாவம் ஆணவம் கொக்கரித்தது.
கோபமும், ஆணவமும் தலையெடுத்து விட்டால் அங்கு புத்திக்கு ஏது இடம்?
நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்.
சூரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!
சூரனை இரண்டாய் பிளந்து, மயிலும், சேவற் கொடியுமாய் மாற்றி எப்போழுதும் தன்னோடு இருக்குமாறு செய்து விட்டானே! அவனது கருணையே கருணை.
நாளை கந்த சஷ்டி திருவிழா!
நான் உடல் வருத்தி, பட்னி எல்லாம் இருந்து, பெரியதாக எந்த விரதமும் இருந்தது இல்லை.
"உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"
என்று இருந்து வந்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் மிகுந்த கஷ்ட தசையில் இருந்த போது, "முருகா! என் வினையை களைவாய்! என மனமுறுகி ஷஷ்டி விரதம் இருந்தேன். அதுவும் சூரசம்காரம் அன்று மட்டும் தான்!
இதோ இப்பவும் 6 நாட்கள் முருகன் சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். என் மனம் எல்லாம் திருசெந்தூரில் நாளை நடக்க இருக்கும் சூரசம்காரத்தில் தான் உள்ளது.
நான் குழந்தையாக இருந்த போது எங்கள் ஊரில் முருகன் காவடி வரும். எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.
இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.
கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?
பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
en appan murugan postukku, first comment :-))
//இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும். //
கந்தன் கைவேல் நொறுக்கட்டும் ambi
//முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும்//
padikkaamal pottathu un muthal comment.. Anal murukanukkaka ithuvum cheyya ready ambi..
Ambi..Naanum murugan piththan thaan.. unga post padichchu iNtha shasti muzhuchaachchu..
They say that Shasti viradham is very powerful.Here also some of my friends do this vradham.
Kadavul yella nalladhum thangaluuk arulvar.--SKM
super ambi...sashti nerathula aanmiga vasanaiyoda oru post...
//பால் மனம் மாறாது, மந்தகாச புன்னகையுடன், கண்களில் குறும்பு தெறிக்க, காதில் மகர குழைகள் ஆட, சிவப்பு பட்டாடை உடுத்தி, கழுத்தில் முத்து மாலைகள் அசைய, கைகளில் ரத்ன கங்கணம் மின்ன, பாதங்களில் பொற்சிலம்புகள் ஒலி எழுப்ப, ஆயிரம் கோடி சூரியனை போல பிரகாசத்துடன் ஒளி பொருந்திய முகத்துடன், எழுத்தாணி பிடிக்க வேண்டிய வயதில்,கையில் வேலுடன் இருக்கும் //
padame vendaam...umaachhiya nerla paathaa maadhiri oru feeling...
ஆஹா. இந்த சின்ன (!) வயசுலயே சஷ்டி விரதம்லாம் இருக்கீங்களா? Very good, very good.
நான் கூட தினமும் கந்தர் சஷ்ரி கவசம் சொல்லுவேன்.
//இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும். //
நானும் அதையே வேண்டுகிறேன்.
ஹா ஹா.. கார்த்திக் படிக்காம first comment போட்டுட்டு எப்டி சமாளிக்கறார் பாருங்க.. விடாதிங்க அவர. எங்க அலகு குத்த போறீங்க?
Konjam padichi sirikalaamnu vanthaa (unga annaatha vera kaanaama poittaar), ipdi, Vel, viratham, Alagu kuthuveyn-nnu thaakareenga.
Happy Kantha Sashti !!!(ithukku vera enna solrathu?)
Cheers
SLN (sin illanga)
naanum indha maadhiri viradhamlam irundhadhu illa ambi! kadavul bhakthi undu aana rombalam kedayadhu! vazhakkam pola ezhuthu polamai padhivu muzhudum palich! :)
எலேய் என்னாது இது...முருகா உன்ன சொல்ல சாமீ இந்த அம்பிய சொன்னேன்...முருகா நீ மட்டும் எப்படிய்யா ரெண்டு பிகர் செட் பண்ண நானும் ட்ரை...சரி வேண்டாம் விடு..அம்பி ஷ்டைல்லயே சொல்றேன் உனக்கு பல் இருக்கு... :-)
உடலை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே - namma policy nalla policy.
edha apadiyae maintain pannikanga..
btw enna eppa ellam blog padikarcha oru vitalacharyar padam pakara effect kodukareenga.. :p
நல்லா எழுதி இருக்கீங்க, கந்த சஷ்டி நாளில். முருகன் உங்களுக்கு எல்லா நலமும் தருவார். எங்கே போனாலும் எனக்குக் கந்த சஷ்டி கவசம் தான் துணை. அதனால் எனக்கு ஏற்பட்ட பலன்களும் நிறைய.
@karthik, happy that U too enjoyed
murugan arul.
//Anal murukanukkaka ithuvum cheyya ready ambi..//
சரி, எலேய் எடுஙகல அந்த 6 அடி வேலை! :)
//They say that Shasti viradham is very powerful.//
@SKM, yeeh, it's very powerful one. thanks for the Asigal. :)
//சரி தலைவருக்கு அலகு குத்தியாச்சா? //
@veda, ada daa, neenga than unmaiyana katchi thondan. :)
//umaachhiya nerla paathaa maadhiri oru feeling... //
yeeh, naanum apdiye en manasula muruganai paaathu varnichen!
//இந்த சின்ன (!) வயசுலயே சஷ்டி விரதம்லாம் இருக்கீங்களா? //
yeeh, coz i realised his blessings three years before.
//நான் கூட தினமும் கந்தர் சஷ்ரி கவசம் சொல்லுவேன்.
//
same pinch, pls do continue.
//first comment போட்டுட்டு எப்டி சமாளிக்கறார் பாருங்க.. விடாதிங்க அவர. எங்க அலகு குத்த போறீங்க?
//
நாக்குல ஒரு 3 அடி வேல் குத்தி, முதுகுல ஒரு அலகு குத்தி சின்னதா ஒரு தேரை இழுக்க வைப்போம், நம்ப கட்சி நலனுக்காக. சரி தானே ப்ரியா? :)
//Happy Kantha Sashti //
@SLN, same to U. eppavum sirichunde irukka kudaathu, konjcha ummachiya kumdanum! :)
//vazhakkam pola ezhuthu polamai padhivu muzhudum palich!//
@IA, ellaam murugan karunai. me just an Arpa pathar! :)
//swamimalai ke poitu vantha madiri irundudu.
//
@Umagopu, All by his grace.
//inda kalathileyum ipdi oor paian ,aha ambi nalla paian ok va //
ஆகா! உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி, இது வஞ்ச புகழ்ச்சி இல்லையே? ;)
//முருகா நீ மட்டும் எப்படிய்யா ரெண்டு பிகர் செட் பண்ண நானும் ட்ரை...//
@syam, எலேய், ஒரு தடவையாவது வாழ்க்கைல திருந்து. அந்த வேல் வந்து உன்னை குத்த போகுது பாரு! :)
//enna eppa ellam blog padikarcha oru vitalacharyar padam pakara effect kodukareenga//
@gayathri, he hee, i love those kind of movies. athaan vela parakka vitten. :)
//கந்த சஷ்டி நாளில். முருகன் உங்களுக்கு எல்லா நலமும் தருவார்.//
@geetha madam, எல்லாம் உங்கள மாதிரி பெரியவர்களின்(!) ஆசிர்வாதம். :D
சபாஷ்டா கணேஷா பிச்சிப்பிட்டே. அம்பி எங்கே ஒளிச்சுவெச்சுருந்தே இவ்வளவு நாளா இந்த திறமையெல்லாம்.அதுவும் கந்தசஷ்டியன்று அப்படியே ஆவேசம் வந்தா மாதிரி அழகா,அலங்காராமா வார்த்தை ஜாலம் வாணவேடிக்கையா சரம் சரமா வந்து விழுகிறது.அதுவும் பால முருகனை விவரிக்கறவிதம் பேஷ் பேஷ்.காசு செலவு இல்லாமே திருசெந்தூருக்கு போய் முருகனை தரிசனம் பண்ணவெச்சத்துக்கு நன்றி.கடைசியில் நம்ப மனோஹர் ட்ரமாலே டிர்க் ஷாட் வருமே அதுமாதிரி சுற்றி நில்லாதே போ துள்ளி வருகுது வேல்.குருவின் பெயரை காப்பாத்திட்டே போ.
Hehehe..
Thought provoking post!
Was 2 gud :)
அம்பி!
அப்படி கூப்பிடவே மனம் நடுங்குகிறது!
கை உதறுகிறது!
என்ன ஒரு வீரிய எழுத்து!
உங்களை திராச பதிவில் அறிவேன்.
இத்தனை நாள் பார்க்காதது குறித்து வெட்கப் படுகிறேன்.
உங்கள் பதிவு மிகவும் அற்புதம்.
ஒரே ஒரு கருத்து!
இது என்னுடைய கருத்து மட்டுமே!
சூரன் பாலகனைக் கண்டான்!
மனம் வியந்தான்!
இதுவே தன் முடிவென அறிந்தான்.
முருகன் மன்னிப்பு கேட்க வாய்ப்பளித்தான்.
சூரன் மறுத்தான்.
அதை ஆணவம் என்றும், மனம் பேதலித்ததால் என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.
நான் அப்படி கருதவில்லை.
மன்னிப்பு கேட்டு, மற்றவர்களை விடுவித்திருந்தால்,
சூரன் பிழைத்திருப்பான்.
சேவலும் கொடியுமாய் ஆகியிருக்க மாட்டான்.
நாமும் இன்றும் நமக்குள்ளே இருக்கும் ஆணவத்தை ஒழிக்க எண்ணவும் மாட்டோம்.
முருகனை வணங்கும் போது சூரனையும், நமக்குள்ளே இருக்கும் ஆணவத்தையும் சேர்த்து வணங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுவே கந்தன் கருணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"
கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.
கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ
முருகனருள் முன்னிற்கும்!!
//நான் அப்படி தான் இருப்பேன்! மாற மாட்டேன்! என்னை மிஞ்ச யாரும் இல்லை! எனக்கு யாரும் புத்திமதி அளிக்க வேண்டாம்! என மனம் ஆர்ப்பாட்டம் செய்யும். இதுவரை இனிமையாக பழகியவரும், பகைவராய் தெரிவர்//
சூரன் point of view என்று அருமையாகக் காட்டி உள்ளீர்கள்!
//ஆனாலும், நமது கந்தன், கடம்பன், குமரன், வேலன், முருகன், அழகன், கார்த்திகேயன், பகைவருக்கும் அருள்வானே!//
"முத்தமிழால் அங்கு வைதாரையும் (திட்டியவரையும்) வாழ வைப்பான்" முருகப்பெருமான் என்றால், வையத்துள் வைய்யாதாரை வாகாக வைத்துக் காப்பானும் அவனே! நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் அம்பி!!
//எங்கள் வீட்டு முன்னால் என் அப்பா முருகன் மேல் மனமுருகி காவடிசிந்து பாட, அழகாக முருகனடியவர் காவடி ஆடுவர். நான் அவர்களுக்கு தாகம் தணிய மோர் அளிப்பேன்.//
அந்தக் காவடிச்சிந்து பாடல்களை முடிந்தால் பதிவாக வலையேற்றலாமே?
!!!sathama padicha saami vanthirum pola iruku...enna ambi oray bakthi mayam..punjabi vepala adichirucha
//இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும்.
கூவி அழைத்தால், குரல் குடுக்காமல் இருப்பானோ அந்த மால் மருகன்?//
அம்பி!
மிக அழகா எழுதிருக்கீங்க. அம்பியிடம் இருக்கும் ஆன்மீகப் பார்வையையும் இன்னிக்குத் தெரிஞ்சிக்கிட்டேன்.
//பி.கு: முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும். :)//
யாருங்க அந்த பத்து அதிர்ஷ்டசாலிகள்?
:)
//கடைசியில் நம்ப மனோஹர் ட்ரமாலே டிர்க் ஷாட் வருமே அதுமாதிரி சுற்றி நில்லாதே போ துள்ளி வருகுது வேல்//
@TRC sir, அப்படியா? நான் பார்த்தது இல்லை.
//குருவின் பெயரை காப்பாத்திட்டே போ.//
அதானே பார்த்தேன்! :)
@ponnarasi, happy that Your thought is porovoked :)
//அம்பி!
அப்படி கூப்பிடவே மனம் நடுங்குகிறது!
கை உதறுகிறது!//
@SK sir, அய்யா! எனக்கு இப்பவே கண்ண கட்டுது! நான் ரொம்ப ரொம்ப சின்ன பையன். பச்சிளம் பாலகன் :)
//உங்களை திராச பதிவில் அறிவேன்.
இத்தனை நாள் பார்க்காதது குறித்து வெட்கப் படுகிறேன்.//
எனக்கே சில சமயம் நல்ல புத்தி வந்து, இப்படி உணர்ச்சி மயமா பதிவு போடுவேன். நல்ல வேளை என் முந்தய பதிவுக்கு எல்லாம் நீங்கள் வரலை. வந்துருந்தா தெரியும் சங்கதி! :)
//மன்னிப்பு கேட்டு, மற்றவர்களை விடுவித்திருந்தால்,
சூரன் பிழைத்திருப்பான்.
சேவலும் கொடியுமாய் ஆகியிருக்க மாட்டான்.
//
ஆணவம் அழிந்தபின் முருகன் தாள் சேரலாம்! என்று எடுத்து கொள்ளலாமா?
தங்கள் வரவால், சிறப்பான விளக்கத்தால், என் கந்த ஷஷ்டி விரதம் முழுமை அடைந்தது. எல்லாம் முருகன் அருள்.
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி கண்ணபிரான்!
//அந்தக் காவடிச்சிந்து பாடல்களை முடிந்தால் பதிவாக வலையேற்றலாமே? //
@kannan, நல்ல யோசனை. என் அப்பாவிடம் எழுதி வாங்கி வருகிறேன். இதுக்கு தன் படிச்சவங்கள பக்கதுல வச்சுக்கனும்!னு சொல்றது! :)
//punjabi vepala adichirucha
//
@Gils, yoW! atha ennya nyabaga paduthara? ummachi kanna kuthidum. :)
//அம்பியிடம் இருக்கும் ஆன்மீகப் பார்வையையும் இன்னிக்குத் தெரிஞ்சிக்கிட்டேன்.//
@kaipullai, ஹிஹி, இன்னும் பல பல பார்வைகள் இருக்கு கைப்பு!
குலுக்கல் முறையில உங்க பேரும் வந்துருக்கு. எப்படி வசதி? எலேய்! எடுங்கடா அந்த 6 அடி வேலை, தல ஆசைப்பட்டு கேக்கறாரு, என்ன லேட்டு பண்ணிட்டு! :)
Nice post !! Nalla ezhuthi irukeenga ;-).
"இப்பவும் நம்மிடையே தலை தூக்கும் அசுரர்களான, நான்! என்ற அகந்தை, ஈகோ, கோபம், பேராசை, உலக இச்சைகள், சோம்பேறித்தனம், எல்லாவற்றையும் அந்த கந்தன் கைவேல் நொறுக்கட்டும். "
Unmayana vishayam . Idhukku oru soora samharam poradhu..( Kamal padatha sollala ) .. Pala Pala venum
ரொம்ப நல்ல பதிவு. அழகாக இருந்தது.முருகனருள் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் - எப்பவுமே என் favourite கூட.
அம்பி,
ஒரே
முருகனாப் பாக்கிறேன்.
அப்படி முருகன் பதிவுகள்.
தி.ரா.ச எனக்கு ஒருமையுடன் உனது திருவடி பாட்டு, கேட்பதற்காக அனுப்பினார்.
இன்னிக்கு உங்க பதிவு. பின்னூட்டங்களில் எஸ்கே சார், திராச,கீதா எல்லோருடைய எழுத்துகளையும் படிப்பதும் சுவாரஸ்யம்.
Uruvai Aruvai Ulathai Ilathai Maruvai Malarai Maniyai Oliyai
Karuvai Uyirai Kathiyai Vithiyai
Guruvai Varuvai Arulvai Guhane..
@pavithra, dank U! Dank U! :)
//Idhukku oru soora samharam poradhu..( Kamal padatha sollala ) .. Pala Pala venum
//
@madhu, unmai, unmai! :)
//முருகனருள் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் - எப்பவுமே என் favourite கூட. //
@deekshanya, Thank U sister. is it..? same pinch! :)
@vallisimhan, தங்கள் வரவால் மிகவும் மகிழ்ச்சி.
//ஒரே
முருகனாப் பாக்கிறேன்.
அப்படி முருகன் பதிவுகள்.
//
எங்கும் முருகன் வியாபித்து இருக்கிறான், அதான்! ;)
@arjuna, nanba, azhagana paattai un mazhalai(!) mozhiyila ketpatharku nan enna dhavam seytheeno? lol :)
ennai aachchu thalai unakku
Indha bloga padichittu comment podaama pona ennai andha paavam summa vidaadhu Ambi..
"Unnarulaale naan uirodu irukkindren"
"Muruga Murgavendre moochellaam vittiduven..
Ullum puramum oru murganaiye kaanben.." - Kandha guru kavasam
Manasu layikka sashti kavasam solli endha kastathai vechaalum namakku vimochanam irukku..
Romba naal kalichu, India trip ellam mudichitu unga blog pakkam vandhaen, ore bakthi paravasama irukku.
Nice post
appppa, last comment poduravangalukku?
yenna ambi, ore bakthi mayamave pogudhu ippolam??
//முதல் கமண்ட் போடுபவர்களுக்கு, முருகன் பேரை சொல்லி அலகு குத்தி விடப்படும்// - adappavi!!!
@harish, he hee, ithellam kandukkapadathu! will come back to form soon. :)
@sasi, danQ! DanQ! U also.? same pinch. :)
@raji, danQ! ohh! india vantheengala? how is pranav..? :D
//appppa, last comment poduravangalukku? //
@sachin, kavadi thaan! :D
@shree, vaanga akka vaanga! ellaam kadavul kanna thorakanum!nu thaan! :)
how is my marumagal, srinithi..?
yov..enga aalay kaanum...enga post pakalma varathey illa ipolaam..bc with punjabi anni or with the new recruits? ;))
aaama..namma maanadu nadanthuchay..enga antha fotoslaam kaanum??!!
அம்பி,
ப்ளிஸ்..... சொல்லுங்க.... இது எல்லாம் எப்படிங்க..... பிறந்ததிலிருந்தே.. நீங்க இப்படி தானா... தாங்க முடியலை சாமி....
Ambi,
Welcome back! Unmayileye I was missing your posts for a week. So how was Diwali at home?
I can see that some are 'kalasifying' you for this post. But I am really amazed. Semma funny posts, and very interesting (nenjai thodum) posts like this, maari maari kudukureenga, really unga posts-kku 3 cheers. Please do continue this mix.
nalla post ambi...yaamum oru murugan adiyen
//enga post pakalma varathey illa ipolaam..//
@gils, un postuku comment poda mudiyalai, beta versionaa? officela pkblogs.com block pannitanga. :(
//bc with punjabi anni or with the new recruits?////
thoda, new recruits inum join pannalai. btw, photos ellam kanya kitta kelu. it's not with me. :)
//பிறந்ததிலிருந்தே.. நீங்க இப்படி தானா... தாங்க முடியலை சாமி//
@balaji, U too Balaji..? :D
//Semma funny posts, and very interesting (nenjai thodum) posts like this, maari maari kudukureenga,//
@Ravi, welcome back, danQ! danQ! neengalaavathu ennai purinju vechureekengale! (with innocent looku)
btw, ennai vechu comedy, kemady ethuvum pannalaiye? :)
@bala.g, is it..? gud! almost most of the vrichiga raasi pple are murugan devotees as Muruga is the Raasi Lord! Do U know that..? :)
btw, ennai vechu comedy, kemady ethuvum pannalaiye? :)
Ambi I laughed for your commentsukku comments.... ha..ha....idhu allavo humour!
Post a Comment