Friday, November 03, 2006

சொர்க்கமே! என்றாலும்....ஒரு வழியா தீபாவளி முடிஞ்சு மறுபடி வந்தாச்சு! திட்டமிட்டபடி முதலில் மதுரைக்கு போய் டிரஸ் எல்லாம் அங்கே எடுத்துண்டு போகலாம்!னு சொல்லி நம்ப சேக்காளி ஒருத்தனையும் கூட கூட்டிண்டு கடை வீதிக்கும் போயாச்சு. முதலில் அம்மாவுக்கு புடவை எடுத்துடலாம்!னு முடிவு பண்ணி புடவை கடைக்கு நுழைஞ்சா ஆண்களை அதுவும் பால் வடியும் முகம் கொண்ட என்ன மாதிரி குழந்தைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டா! போலிருக்கு.

தம்பி! வீட்டுலேருந்து விவரம் தெரிஞ்ச யாரும் வரலையா?னு நக்கல் விடறான் கடைக்காரன்.
அப்புறம் போனா போகுது!னு ரெண்டே ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து போட்டு செலக்ட் பண்ணூங்க!னு மிரட்றான்.

சரி, இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்!னு முடிவு பண்ணிட்டு, கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன்.

அதுக்கபுறமா அவன் வாயவே தொறக்கலை.

பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு முக்கால் மணி நேரம், 4 அலமாரிய காலி பண்ணி கடைசியா நான் கேட்ட ஷேடுல (பார்டர் கலர் மட்டும் வேற) ஒரு புடவை கிடைத்து, கிடைதே விட்டது. என்னை விட, அந்த சேல்ஸ்மேனுக்கு ரொம்ப சந்தோஷம்.

அதுக்கபுறமா, பக்கத்து கடையில எனக்கு ஒரு ஜீன்ஸ், ஷர்ட், அப்பா/தம்பிக்கு ஒரு ஷர்ட் வெறும் பத்து நிமிடத்தில் கிடைத்து விட்டது.

இரவே மதுரையிலிருந்து கல்லிடை வந்தாச்சு! தொடர்ந்து மழை பெய்ததால் இந்த தடவை தாமிரபரணிக்கு போக அம்மா 144 தடை உத்தரவு போட்டு விட்டார்கள்.

சரி, வந்ததுக்கு ஒரு வெங்காய சாம்பார் நம் கையால் செய்வோம்!னு வெங்கல கடையில் யானை நுழைந்தது போல கிச்சனை அத களபடுத்தியாச்சு!


நல்லா 4 நாள் அம்மா சமையலை வெட்டியதில், புதுசாக வாங்கி வந்த ஜீன்ஸை அணிய தீபாவளி அன்று சிறிது சிரமப் படவேண்டி இருந்தது. எங்கள் வீட்டில் வாங்கிய நெல்லை அல்வா, பக்கத்து மாமியாத்து தேங்காய் பர்பி, எதிர் வீட்டு மாமி குடுத்த மாலாடு, அத்தையாத்து பாதுஷா, பெரியப்பா வீட்டு மைசூர் பாகு என்று கணக்கு வழக்கில்லாமல் ரைஸ்மில் டபுள் டியூட்டி பார்த்தது.தீபாவளி இஞ்சி லேகியம் வேறு தன் வேலையை காட்ட தொடங்க கார்க் புடுங்கி கொள்ளும் அறிகுறி வேறு பிரகாசமாக தெரிந்தது.

தீபாவளி அன்று, ஸ்வீட் என்ன வேணும்? சேமியா பாயசமா? ரவ கேசரியா?னு அம்மா கேட்க, ஹிஹி, எல்லார் ஓட்டையும் பெற்று தனிபெறும் மெஜாரிட்டியில் எப்போழுதும் போல ரவா கேசரியே வந்தது. (இல்லைனா நடக்கறதே வேற!)


கிலோ கணக்கில் லிஸ்ட் போட்டு வாங்கி வந்த திருனெல்வேலி அல்வாவை ஆபிஸ்ல எல்லோருக்கும் பங்கு வெச்சு குடுத்தது போக எனக்கும், உடன்பிறப்புக்கும் ஆளுக்கு கால் கிலோ தான் தேறியது.

நான் புதுசா நிக்கான் டிஜிட்டல் கேமரா வாங்கி இருக்கேன்!னு உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)

எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது.


எங்கள் வீட்டிலிருந்து தாமிர பரணிக்கு போகும் வழியில் உள்ள நெல்வயல்கள்.(இப்போ அறுவடை ஆகி விட்டது.) "என் இனிய தமிழ் மக்களே"!னு எத்தனை பாரதி ராஜா, K.S.ரவிக்குமார் படங்களில் பார்த்திருப்பீர்கள்?


அதோ கிழக்கால தெரியுதே! அந்த வாழைத்தோப்புலிருந்து, மேற்கால தெரியற மாந்தோப்பு வரை எல்லாம் நம்மது தான்! அப்படினு நான் இங்கே அள்ளி விட்டா தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)


பி.கு: கல்லிடையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள தவறாமல் படியுங்கள் TRC சார் பிளாக்கை. (ஏற்கனவே நாலு போஸ்ட் போட்டுட்டார்!) சீக்கிரம்! சீக்கிரம்! இன்னுமா லேட்டு?

(TRC சார்! குடுத்த காசுக்கு அதிகமாவே கூவியாச்சு! அடுத்த தடவை பஜ்ஜி வேணும்!)

48 comments:

கீதா சாம்பசிவம் said...

பெண்கள் கூடச் சீக்கிரம் புடவை எடுத்துட்டு வெளியே வந்துடுவோம். நீங்க ஒரு நாள் பூரா புடவை எடுத்திருக்கீங்க, அது என்ன எல்லா ஸ்வீட்டும் வெளியிலே இருந்து வந்திருக்கு? உங்க அம்மா ரவா கேசரி மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்டாங்க போல் இருக்கு. படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.

Deekshanya said...

super! kallidai fotos -- nostalgic.. athu antha thamirabarani thanni kudichavangallukku than theriyum antha arumai...
hmm epdiyo kalaki irukinga diwali-ya.. good good..

G3 said...

//கார்டன் புடவைகளின் ... போடுய்யா! //
Kanna kattudhu pa.. Indha pakkam oru soda plz.. :)

//பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய//
Appadiya?

//ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய //
Idha idha perfecta nambaren :D

Usha said...

un samayal sapdaradhukaga pudavai bribe-a ammaku?? Paavam avanga :( *Sigh*

அனுசுயா said...

///கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா///

அம்பி முடியிலபா ஒரு புடவைல இத்தன இருக்கா. அதையும் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க பாருங்க கிரேட். எனக்கு தெரிஞ்சு கடைல அம்மா எத எடுத்து நல்லாயிருக்கானு கேட்டாலும் தலயதலய ஆட்டி இதுதான் சூப்பர்னு சொல்லி சீக்கிரமா எஸ்கேப் ஆயிடுவேன். ரொம்ப பொறுமைசாலிதான் போங்க.

Priya said...

// கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!//

பெண்களுக்கு கூட இவ்ளோ தெரியாது புடவைகள பத்தி (சத்தியமா எனக்கு தெரியாது). உங்கள மாதிரி 4 பேர் இருந்தா போதும் கடைல இருக்கறவங்களாம் வேலைய விட்டு போய்டுவாங்க.

குடுத்து வச்சவங்க உங்கம்மா. ஆனா அவ்ளோ கஷடப்பட்டு select பண்ணின உங்கம்மா புடவைய photo எடுத்து போடாம விட்டுட்டிங்களே!

அது என்ன பெங்களூரு-லேருந்து மதுரைல போய் pant-shirt லாம் வாங்கியிருக்கிங்க? (மதுரை காரங்க யாரும் படிக்கலயே?)

pictures எல்லாம் கலக்கல். congrats on your new Nikon.
வெண்கல பாத்திரத்துல வெங்காய சாம்பார் - பாக்கவே ஆசையா இருக்கு.

மொத்தத்துல அமர்க்களமா தீபாவளி கொண்டாடி இருக்கிங்க. அடுத்த தீபாவளி மாமியார் வீட்ல தானே?

Bala.G said...

ambi, looks like u have enjoyed Diwali well....but me no :(

கீதா சாம்பசிவம் said...

@பிரியா,
மதுரையிலே போய்த் துணி எடுக்கறது மட்டமா என்ன? அங்கே இல்லாததா உங்க பங்களூரிலே இருக்கு? மதுரைக்காரங்கங்கிறதாலே தான் பெருமையுடன் & பொறுமையுடன் பேசாம இருந்தேன். இப்படிக் கேட்டதும் பதில் சொல்லலைன்னா எப்படி? :D

தி. ரா. ச.(T.R.C.) said...

கலக்கிட்ட அம்பி. அம்மாவுக்காக கடையில் தூள் கிளப்பி ஒரு நல்ல புடவை வாங்கியதை பாராட்டாம கிண்டலா அடிக்கிறாங்க.எப்படியும் இது சீக்கிரம் உனக்கு கைகொடுக்கும்.எதோ கேசரியை போட்டோவிலாவது காணச்செய்த உன் காமிராவுக்கு நன்றி.மதுரையில் ஜவுளிக்கடல் கடை இருக்குன்னும் மதுரை சுங்கிடிச்சேலை பிரசித்தம் பற்றி எல்லோருக்கும் தெரியுமா? ஆனால் மனேஜருக்கு காஸ்டுயும் ஐடியா தினமும்மா?
சரி சரி நீசொன்ன மாதிரியே ஆறு பதிவு போட்டாச்சு இன்னும் சொன்னா மதிரி பணம் வந்து சேரலே.அனுப்பிடு.
ஆமாம் ஒரு கிலோ மைதவும், ஒடு கிலோ கடலைமாவும் உள்ளே போனா கார்க் என்ன டேங்கே பிச்சுக்கும்.தீபாவளி மருந்து போறது. கடைப்பாரையை முழுங்கிட்டு கஷாயம் குடித்தாமாரிதான்

கைப்புள்ள said...

//பின்ன என்ன, 4 வருஷமா எங்க அம்மாவுக்கு பார்த்து பார்த்து புடவை எடுக்கற இந்த அம்பிய, ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்?//

ஏன்பா இதெல்லாம் மேனேஜர் அம்மா ஆத்துக்காரருக்குத் தெரியுமா? ஏம்பா குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணறே?
:)

படங்கள் எல்லாம் சூப்பர். புது நிகானுக்கு வாழ்த்துகள். என் இனிய தமிழ்மக்களே மாதிரி சீனரி எல்லாம் உங்க வூட்டாண்டேயேவா? சூப்பர்.

Priya said...

@Geetha Madam,
//மதுரையிலே போய்த் துணி எடுக்கறது மட்டமா என்ன? அங்கே இல்லாததா உங்க பங்களூரிலே இருக்கு? மதுரைக்காரங்கங்கிறதாலே தான் பெருமையுடன் &
பொறுமையுடன் பேசாம இருந்தேன்.//

naan mattamnalam onnum sollalaye Ma'am. Amma pudavai en madurai la vanginarnum kekkala. Kandippa Madurai ai vida, en cheannai ai vidave, Bangalore la wester outfits la variety adhigam irukkum. The simple reason is: consumers anga jaasthi.
Idhula mattam, usathinellam onnum illa. Neenga porumaya izhakka vendiya avasiyamum illa :)

Sandai-Kozhi said...

//கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பார்டர்........ ஒரு புடவை எடுத்து போடுய்யா! பார்ப்போம்!னு சொன்னேன். //
aahaaa!unga kitta nan padam kathu kitten.Ambi pozhachuppe.
Ithanai vidhama sweet sapteengala?
yengala ninavu vaichuttu sapteengala?ungal giramam azhagu.
--SKM

Sandai-Kozhi said...

@geetha:
appdi podunga.Madurai karanga romba porumaiyanaga.:)
Madurai madhiri varuma?Mada vedhigalil mallipoo katradhai vedikkai pathukittu ....adadaa!Iam missing it.--SKM

Sandai-Kozhi said...

@TRC Sir:
//மதுரையில் ஜவுளிக்கடல் கடை இருக்குன்னும் மதுரை சுங்கிடிச்சேலை பிரசித்தம் பற்றி எல்லோருக்கும் தெரியுமா?//
sariya sonnenga.yen manasu ippovae poi Thevangar chathiram poi sungudi pudavai pakka arambichuduchu.kadavulae,enakku homesick kodukireengalae yellorum.Niyayama?--SKM

வேதா said...

தீபாவளிக்கும் கேசரியா? நாங்கெல்லாம் அது சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போய் ரவான்னு ஆரம்பிச்சாலே காத தூரம் ஓடி போய்டுவோம்,பின்ன வெள்ளிகிழமையானா போதும் உடனே எங்க வீட்டுல கேசரி தான்:)

/எங்கள் வீட்டு மேல் மாடியிலிருந்து தொங்கியபடியே மேற்கு தொடர்ச்சி மலையை ஜூம் பண்ணி எடுத்தது./
உங்க வீட்டை சுத்தி ஒரே பசுமை காட்சிகளா? ஹும் கொடுத்து வைத்தவர்(நான் செடி,கொடி மரத்தை தான் சொன்னேன்,நீங்க வேற ஏதாவது நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பில்லை)எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தா மலை தொடர்ச்சியா தெரியும்? ஒரே கட்டிட தொடர்ச்சி மலை தான்.

Karthik B.S. said...

eppa evalo periya postu!

nalla samaipingalo? ;)

gayathri said...

pudavai kadaila erundha name board ellathayum sethu padichu katiteenga pola.. :p
unga veetlendhu super sight seeing, kanaga & ramarajan dhan missing.. ;)

Sundari said...

//கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்)போட்டு ஒரு புடவை//

புடவைல இவ்வளவு வகையா....???
நெஜமா எனக்கு தெரியாதுங்க...

so diwali aa சூப்பரா கொண்டாடி இருக்கீங்க....

Madhu said...

different types of pudavai ellam solreenga.. Pudavai nna pudikkomo ?

Vicky Goes Crazy... said...

enna ambi ... how r u pa ... long time since i blogged :D ... today than konjam time kidaichathu...sari konjam neram blog pannalam nu vanthen ...

so un blog padichen ... mudiyaley ...ennaley mudiyaley :D ... nee pant shirt edukurathu' oda saree than nalla edupey pola :D ... romba experience pesutho :D .. manager gent ah lady ha ... avangaluku saree selection ley mattum advice pannurey nu namburen :D ..

un vittuley irunthu site view super po :D ..(entha site ley irunthu eduthey antha pics ellam ;)) ha ha ...

ambi said...

//பெண்கள் கூடச் சீக்கிரம் புடவை எடுத்துட்டு வெளியே வந்துடுவோம்//
@Geetha, Best Joke of the YEar :)

//அது என்ன எல்லா ஸ்வீட்டும் வெளியிலே இருந்து வந்திருக்கு?//
அப்பாவுக்கு ஷுகர். அதனால வீட்டுல ஸ்வீட்டுக்கு தடா. :)

@deeksh, yeeh, it's really super. danQ sister. :)

//Appadiya?.... Idha idha perfecta nambaren //
@G3, வேணாம்! ரொம்ப வலிக்குது! :D


//un samayal sapdaradhukaga pudavai bribe-a ammaku??//
@usha, Grrrrr. paravayillaye, en blog ellam varathuku kooda unakku time irukkaa...? :p


//தலயதலய ஆட்டி இதுதான் சூப்பர்னு சொல்லி சீக்கிரமா எஸ்கேப் ஆயிடுவேன். ரொம்ப பொறுமைசாலிதான் போங்க. //
@anusuya, ஹிஹி, ROTFL :)
ஆமா! ஆமா! இதுல மட்டும் தான் நான் பொறுமையா இருப்பேன். :)

//அவ்ளோ கஷடப்பட்டு select பண்ணின உங்கம்மா புடவைய photo எடுத்து போடாம விட்டுட்டிங்களே!
//
@priya, ம்ம்ம். திருஷ்ட்டி பட்டுரும் இல்ல, அதான்! :p

//பெங்களூரு-லேருந்து மதுரைல போய் pant-shirt லாம் வாங்கியிருக்கிங்க? //
Bnglre has alot of variety, but due to this ticket sothappal, i was little upset. :(
coming B'day ku bnglela thaan dress edukka poren. :)

//வெண்கல பாத்திரத்துல வெங்காய சாம்பார் //
சே! இப்படி இன்சல்ட் பண்ணிடீங்களே! அது கேசரி, எங்கம்மா சூடா கிண்டும் போது நான் ஆர்வமா எடுத்த படம். :p

//அடுத்த தீபாவளி மாமியார் வீட்ல தானே?
//
obviously... உங்களுக்கும் அப்படி தானே? :p

ambi said...

@bala.g, Don't worry, next year U'll make it Up! :)

//மதுரைக்காரங்கங்கிறதாலே தான் பெருமையுடன் & பொறுமையுடன் பேசாம இருந்தேன்.//
@Geetha, அடடா! வந்துட்டாங்க பா தாய் மண்ணை காக்க வந்த தானைத் தலைவி! :p

//ஒரு நல்ல புடவை வாங்கியதை பாராட்டாம கிண்டலா அடிக்கிறாங்க.எப்படியும் இது சீக்கிரம் உனக்கு கைகொடுக்கும்//
@TRC sir, he hee, yeeh! yeeh! :D

//மனேஜருக்கு காஸ்டுயும் ஐடியா தினமும்மா?//
On special occasions only! :)

//நீசொன்ன மாதிரியே ஆறு பதிவு போட்டாச்சு //
இதோ வந்து பாக்றேன்! :)

//இதெல்லாம் மேனேஜர் அம்மா ஆத்துக்காரருக்குத் தெரியுமா? ஏம்பா குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணறே?
//
@kaipullai, தல, மேனேஜரே ஒரு அம்மணி தான்! இது எப்படி இருக்கு? :) DanQ for your wishes.

@priya, well justified your honor! :)

//yengala ninavu vaichuttu sapteengala//
@SKM, Unga jaangiriya marakka mudiyumaa? :)
//Thevangar chathiram poi sungudi pudavai //
Ohh! enga amma kooda anga thaan podavai edupaanga. :)

//பின்ன வெள்ளிகிழமையானா போதும் உடனே எங்க வீட்டுல கேசரி தான்//
@Veda, (with Jollu) அப்படியா? :)
//உங்க வீட்டை சுத்தி ஒரே பசுமை காட்சிகளா? //
ஆமா! கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியா இருக்கும். (நான் எல்லாத்தையும் சேர்த்து தான் சொல்றேன்.) :)

ambi said...

//nalla samaipingalo?//
@karthik, sumaara. :)

//name board ellathayum sethu padichu katiteenga pola//
@gayathri, nakkalu..? :p

//kanaga & ramarajan dhan missing..//
ROTFL :)

//புடவைல இவ்வளவு வகையா....???//
@sundari, இன்னும் நிறைய இருக்கு.
Danks for d pashtu time visit. :)

//Pudavai nna pudikkomo ?
//
@madhu, புடவையும் பிடுக்கும். :D

//romba experience pesutho :D .. manager gent ah lady ha //
@vicky, vaaya vaa! yeeh, 4 yrs of exp. manager is a lady. :)

//entha site ley irunthu eduthey antha pics ellam//
nee entha site nenachayoo, antha site viewla irunthu thaan! ha haa :)

மு.கார்த்திகேயன் said...

eppadiyO sontha oorla diwali kondaatiyaachchu..

ama..samakireengala..illa pOs mattum thaanaa ambi..

Arjuna_Speaks said...

un samayal arayil nee uppa sakaraiya? :P lol

கீதா சாம்பசிவம் said...

@ப்ரியா,
Sorry, :-) போடலைன்னு இப்போ தான் பார்த்தேன். ஆனால் மதுரைக்காகக் குரல் கொடுக்க ஒரு தோழி, அதான் சண்டைக்கோழி கிடைச்சது உங்க தயவிலே தான். ரொம்ப நன்றி. உண்மையிலேயே நான் புடவைக்கடையிலே எல்லாம் நேரம் செலவழிக்கிறதில்லை. hihihi,கடைசிலே பெரிசா இளிச்சிருக்கேனே? பார்க்கலை? :D

My days(Gops) said...

ha ha ha,


//இன்னிக்கு இவனை சோடா குடிக்க வெச்சுபுடனும்//

innum neeenga indha soda'va vudala?
sare sare, namakku irrrkum orey aayudham idhu thaaaney thala...

//ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய //

*cough cough* Nivaran 90 engappaa?


//உங்க கிட்ட சொல்லாம(பீத்தாம) வேற யாருகிட்ட போய் சொல்லுவேன்?(பீத்துவேன்?)//
adhuvum sare thaaaan., ivanga kitta illama vera yaar kitta?


//தோப்புக்கு சொந்தக்காரங்க என்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க! :)
//
ha ha romba thaaan lollu thala..

btw, photos ellam super... onion saambar'a saaapteeengala? illa photo'ku mattum thaana?
he he

Priya said...

/சே! இப்படி இன்சல்ட் பண்ணிடீங்களே! அது கேசரி, எங்கம்மா சூடா கிண்டும் போது நான் ஆர்வமா எடுத்த படம்//

பாருங்க. இங்க ஒண்ணும் கிடைக்காம படற கஷ்டத்துல கேசரிக்கும், சாம்பார்க்கும் வித்தியாசம் தெரியல..

//obviously... உங்களுக்கும் அப்படி தானே?//
இல்ல. தலை தீபாவளி பொண்ணு வீட்ல தானே..

@Geetha Madam,
/Sorry, :-) போடலைன்னு இப்போ தான் பார்த்தேன்.//
no problem. உங்க & SKM மோட ஊர் பாசத்த பாத்து புல்லரிச்சு போச்சு.

Sandai-Kozhi said...

@Priya:
achoo Priya, ungala nan onnum sollala.pavam ungalukku eppdi MDU pathi theriyum?Please donot take it seriously.

@geetha: namma oora vittu kodukka mudiyuma?;))))ore yaekkama irukku.
--SKM

Priya said...

@SKM,

//Please donot take it seriously.
என்ன நீங்க பெரிய வார்தைலாம் சொல்றீங்க?

நான் நிறைய தடவை மதுரை போயிருக்கேன். அம்மா கூட சுங்கடி புடவை வாங்கியிருக்காங்க. மீனாட்சியம்மன் கோவில் மாதிரி வருமா? உலக அதிசயங்கள் poll ல கூட இருந்ததே. மதுரை மக்கள் வெள்ளை மன்சுக் காரங்க, ரொம்ப பாசமானவங்கனு கேள்விப் பட்டிருக்கேன்.


நான் MDU பத்தி சொன்னத நீங்க & கீதா மேடம் - don't take it seriously.

Arunkumar said...

selai matter super :)

diwali attagaasama kondaidirkinga pola theriyudu.. kalakkunga :)

@Priya
//. மதுரை மக்கள் வெள்ளை மன்சுக் காரங்க, ரொம்ப பாசமானவங்கனு கேள்விப் பட்டிருக்கேன். //

unmai unmai... enna paathadukku approm koodava ungalukku inda sandegam :)

Syam said...

//ஆபிஸ்ல இருக்கற மேனேஜர் மேடத்துக்கே காஸ்டியூம் ஐடியா குடுக்கற இந்த அம்பிய பார்த்து ரெண்டு புடவையில ஒண்ண செலக்ட் பண்ணு!னு சொன்னா என்ன அர்த்தம்//

இந்த லிஸ்டுல பஞ்சாப் வரவே இல்லயே :-)

Balaji S Rajan said...

Ambi,

Super Deepavali bit. So you are getting trained for next year thalai deepavalliyah.... illai Deepa Valli yah... OK...OK... Oh... your village super ya.... So you are the young boy always in a mini dress (decent pa) and running with a stick in most of the Tamil Grammathu films....eh... Superunga...

Honestly your photos by your new Nikon Digital camera... (Parunga yeppadi kandu pidichom... Scotland yard..ya...) is good. Truly it is giving us a kick... not donkey's kick.... the photo kick... all greenery... the place is very scenic.

Please let us know about your marriage in advance.

ambi said...

//samakireengala..illa pOs mattum thaanaa ambi..
//

@karthi, he hee, rendum thaan. :)

@arjuna, nee epavume sarkarai thaan nanbaa! :)

//innum neeenga indha soda'va vudala?//
@sachin(gops), patha vechiyee paratta! :D

//onion saambar'a saaapteeengala? illa photo'ku mattum thaana?//
he hee, mudhalla thambiya test panna vechen, aprom thaan me tasted. naanga eppavume thelivu illa! :)


//இங்க ஒண்ணும் கிடைக்காம படற கஷ்டத்துல கேசரிக்கும், சாம்பார்க்கும் வித்தியாசம் தெரியல//
@priya, அச்சோ! பாவம் குழந்தை!(நீங்க தான்). :D

//தலை தீபாவளி பொண்ணு வீட்ல தானே..//
ஓ! ஆமா! அப்ப அடுத்த வருஷம் உங்க வீட்லயா? :p


//என்ன நீங்க பெரிய வார்தைலாம் சொல்றீங்க?//

//உங்க & SKM மோட ஊர் பாசத்த பாத்து புல்லரிச்சு போச்சு.//

@priya, ஒன்னும் கண்டுக்காதீங்க, ரெண்டும்(SKM & Geetha madam) ஓவரா சீன் போடுது! :p


//மதுரை மக்கள் வெள்ளை மன்சுக் காரங்க, ரொம்ப பாசமானவங்கனு கேள்விப் பட்டிருக்கேன்.//

போதும் ப்ரியா! என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு கூச்சமா இருக்கு. :p

@arunkumar, danQ! DanQ! neenga epdi celebrated..?

//இந்த லிஸ்டுல பஞ்சாப் வரவே இல்லயே //
@syam, கண்டுபிடிச்சிட்டியா? அதுக்கும் சேர்த்து தான்! சபைல சொல்ல வேண்டாம், ஏற்கனவே மக்கள் என்னை ரவுண்டு கட்டி அடிக்கறாங்களே!னு அடக்கி வாசிச்சேன். உனக்கு பொறுக்காதே? :p

//So you are the young boy always in a mini dress //
@balaji, romba thaan lollu ungalukku! :D

//Truly it is giving us a kick//
danQ, i'ma kathukutty photographer, yet to explore alot. nextu time parunga, pinni pedal edukaren. :D

//Please let us know about your marriage in advance.//

உங்களுக்கு சொல்லமலா? எங்க டுபுக்கு அண்ணாச்சி மூலம் mail அனுப்பிடுவோம். or pls send your mail id to me.(my id available in my profile)
*ahem* மொய் எழுத (அதுவும் பவுண்டுல) இவ்வளவு ஆசையா? :p

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, வாங்க வாங்க அருண்குமார், மண்ணின் மைந்தரை எங்கே காணோமேன்னு நினைச்சேன்,
@SKM, இப்போ தேவாங்கர் சத்திரத்தைப் புடவைக் கடைகள் காலி செய்து ஒரு வருஷம் ஆச்சு. போன வருஷம் மதுரை போனப்போ சுந்தரம் கடை தேவாங்கர் சத்திரத்துக்கு எதிர் சாரியில் கடை போட்டுட்டாங்க. இனிமேல் இங்கேதான் வரணும்னு சொன்னாங்க. நீங்க மதுரை போய் நாளாச்சுன்னு புரிஞ்சுது. ஏக்கமாத்தான் இருக்கும்.

Sandai-Kozhi said...

@geetha:
//இப்போ தேவாங்கர் சத்திரத்தைப் புடவைக் கடைகள் காலி செய்து ஒரு வருஷம் ஆச்சு. //
இந்த விஷயம் இப்போதான் தெரியும். உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் மூலையில் இருந்தக் கடைதானெங்கள் Favourite.4வருஷம் ஆச்சுங்க அதுக்குள்ளே எவ்வளோ மாற்றங்கள்.
Thanks for letting me know.--SKM

ambi said...

@Geetha madam & SKM,

நீங்க ரெண்டு பேரும் என் சைட்டுல வந்து பேச(வம்பளக்க) தலைக்கு 5 டாலர் என் bank accountல போடுங்க.
:))

shree said...

yendappa.. yedho shrinidhi thoongara timela net meyalamnu vandha ivvlo periya posta poduva? un posting padikkaradhukkulla ava yelundhutta! :(

கீதா சாம்பசிவம் said...

@SKM, நல்ல வசதியான இடமாக் கிடைச்சிருக்கு, ஒரு வாரத்துக்கு ஒரு மொக்கைப்பதிவு போட்டாலே பெரிசு, அதனாலே நாம் இங்கேயே மீட் பண்ணலாம், நாளை பார்க்கிறேன், வர்ட்டா?

Ponnarasi Kothandaraman said...

Hahaha! Samayal ellam jore'a irukum pola irukey ;)

Phots were gud :)

Pudavai...Someting fishy :P?????????

Sandai-Kozhi said...

கீதா,சரியா சொன்னீங்க.இங்கேதான் நாம அரட்டை அடிக்க வசதியா இருக்கு.5பைசா கூட கேட்காம, நாம பேசும் போது கேசரிக் கிண்டிக் கொடுப்பார் அம்பி.நம்மால அவருக்கான சின்ன உதவி. comments அதிகம் ஆகும்.என்னங்க மழை ஜாஸ்தியா பொழியுதுன்னு நியூஸ் கேட்டேன்.எப்படி சமாளிக்கிறீங்க?மதுரையில் கேட்க வேண்டாம்.மாட வீதிகளில் நீச்சல்தான் சின்ன மழைக்கே. இப்போ?தாமிரவருணி,வைகை எல்லாம் நிரம்பி வழிகிறதாமே?மிச்சத்தை நாளை பேசலாம்.வரட்டா. --SKM

ambi said...

@ponnarasi, danQ! fishy ellam onnum illai, me the innocentu! :D


@SKM & Geetha madam,
என்ன இது? சிறுபில்லத் தனமா இல்ல இருக்கு? வம்பளக்க கேசரி வேறயா? SKM உங்களுக்கு ஓகே! கீதா மேடமுக்கு ஷுகர். ஹிஹி.

ambi said...

@shree, ha haaaa, srinidhi nalla unga kannula virala vittu aatralla? very gud! :)

கீதா சாம்பசிவம் said...

மதுரையிலே ஏது மாடவீதி? பேரையே மாத்தறீங்களே SKM, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி, மற்றும் வெளி வீதிகள்தான் இருக்கு. ஒருவேளை மாரட்டு வீதியைச் சொல்றீங்களோ என்னமோ?கடைசியிலே நல்ல இடமாக் கண்டு பிடிச்சாச்சு பாருங்க பேசறதுக்கு, ரொம்ப வசதியா இருக்கு இல்லை? அம்பி கேசரி தரவே வேண்டாம், நானே கொண்டு வரேன், அம்பி கண்ணிலே காட்ட வேண்டாம். வர்ட்டா? :D

Usha said...

can you send me the mail again? I didnt get ur mail at all with the details. Correct id dhan type panniya nee?

Divya said...

\"கார்டன் புடவைகளின் குவாலிடியில, மெட்டல் ஷிபான் வகை பளபளப்போட, பூனம் சில்க்ஸ் புடவை மாதிரி லேசா, பீக்காக் சில்க்ஸ் மாதிரி பார்டர் டிஸைன் போட்டு மைசூர் சில்க்ஸ் மாதிரி, பகல ஒரு ஷேடு, நைட்ல ஒரு ஷேடு காட்ற மாதிரி டபுள் ஷேடோட இருக்கற மாதிரி காப்பர் சல்பேட் ப்ளூ அல்லது நல்ல மெரூன் ரெட் ஆலிவ் க்ரீன் கலர் பார்டர் (சிங்கிள் சைடு மட்டும்"/

அடேங்கப்பா.........சேலை எடுப்பதில் பெண்களுக்கு இவ்வளவு விபரம் தெரியுமா என்பது சந்தேகமே, [ எனக்கு சத்யமா தெரியாதுங்க]

Mighty Maverick said...

எல்லாம் புருடா... அது சாம்பார் இல்ல... அது ரங்கமணிக்கு பிடிச்ச மசாலா தேநீர்... கிட்டத்தட்ட பத்து வருசத்துக்கு முன்ன எடுத்தது... நான் சொன்னா யார் கேக்கிறா...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信