Saturday, November 11, 2006

ரெடி! ஷ்டார்ட்! ஒன்..டூ..த்ரி...!



கதை, கவிதை!னு பட்டய கிளப்பும் பவித்ரா சிஸ்டர் நம்மை எழுத சொன்ன பதிவு இது!

3 Smells I love:

என்ன தான் நாம் ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு சர்க்கரை பொங்கல் செய்தாலும், அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே! அந்த தெய்வீக நறுமணம்.

சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.

முல்லைப்பூ அல்லது பிச்சிப்பூ (இரண்டும் ஒன்று தானா?) வாசனை. அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர். (ஹிஹி)



3 Smells I hate:

பீடி சிகரெட் வாடை. சே! குமட்டிக்கொண்டு வரும். இந்த கருமத்தை எப்படி தான் ஊதறாங்களோ?

பான் பராக் வாடை - இந்த ஜிலேபி தேசத்தில் எல்லார் வாயிலும் பான் பராக் தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் கண்ட இடத்தில் புளிச்!னு துப்பும் அந்த ஜந்துக்களை பார்க்கும் போது நான் மெய்யாலுமே சில வினாடிகளுக்கு அன்னியனாக மாறி விடுகிறேன்.

கொய்யா/பலாப்பழ வாசனை - அது என்னவோ சின்ன வயசுல இருந்தே இந்த ரெண்டு பழங்களோட வாசனைனா அலர்ஜி.

3 Jobs that I have had in my life:

முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.

சென்னையில் பார்த்த சாப்ட்வேர் வேலை.

இப்போ பாக்ற வேலை. (நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)

3 Movies that I could watch over and over:

தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.

காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்.

3 Fond memories:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி. ரெண்டே நாள் தான், அப்புறம் நம்ப வால்தனத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம் இல்ல?

என் முதல் கம்பெனியின் கடைசி நாள். நான் கிளம்பும் போது அங்கே இருந்த ஆபிஸ் பாய் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகள். "இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு சொன்ன அவரின் வார்த்தைகள். ஒரே பீலீங்க்ஸ் ஆப் இந்தியாவா போச்சு!

ஒரு மாதம் முன்னாடி எங்க மேனேஜர், "தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"னு சொல்லி டீம் மீடிங்க்ல ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. ரூமை விட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல பஞ்சாபி தட்டி பறிச்சுடுச்சு! :(

3 Jobs I would love to have:
மறுபடி கல்லூரி வேலை. நம்மால முடிஞ்ச அளவு சமூகத்தில நாலு நல்லது செய்யனும்.அவ்ளோ தான்!

3 Things I like to do:

சின்ன குழந்தைகளோடு என் பொழுதை இனிமையாக கழிப்பது.

நேரம் கிடைக்கும் போது இந்த பிளாக் எல்லாம் படிக்கறது,(இத தானே முழு நேரமும் செய்யறது!னு குத்தி காட்ட வேண்டாம்.)

என் உடன்பிறப்புடன் தினமும் ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி அரட்டை அடிப்பது.

3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.

3 Places I would like to be right now:

நெல்லை அகத்தியர் அருவி, பாண தீர்த்த அருவிக் கரைகள்,

மதுரையில் அமைதியான என் தாத்தா வீடு, கடை வீதிகள்.

எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்.(டச் பண்ணிட்டேன் இல்ல?).

3 Things that make me cry:

உண்மையானவர்கள்!னு நான் நம்பியவர்கள் புரியும் நம்பிக்கை துரோகங்கள். நான் அதிகம் கண்ணீர் சிந்துவதில்லை.

சரி, மூனு பேரை இழுத்து விட்ருவோம் இந்த தடவை.

1)SKM - எழுத ஒன்னும் இல்லை!னு சொன்னீங்க இல்ல? நல்ல ஹோம்வொர்க், ம்ம் ம்ம், ஒழுங்கா எழுதுங்க.

2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு, ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்.

3)கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க.

40 comments:

Unknown said...

naane firstu.. enakku treatu! :D

Unknown said...

//முதலில் ஒரு வருடம் பார்த்த லெக்சரர் வேலை. மிகவும் போர் அடிக்கும் சப்ஜக்ட்ஸை கூட பையன்களுக்கு எப்படி சுவாரசியமாக எடுக்கலாம்?னு தினமும் யோசிச்சு புதுசு புதுசா பல டெக்னிக்குகளை(டகால்டிகளை) பயன்படுத்திய காலங்கள்.//

haiyoo.... innum konja naala ennayum Oru paper U.G.ku handle panna solliduvaanga.... orey bayama keedhu ba.... konjam tips kudungalen! :)

Unknown said...

//"இனிமே எங்கிட்ட எல்லாம் யார் சார் பேசுவாங்க?"னு //

enakkum idhey madhri experience irukku ba..

Unknown said...

//3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.
//

appo moonithiyum enakku parcel pannunga paakalam...yaenna naan dhaane first commenter! ;)

Unknown said...

//3 Of my favorite foods:

Butter scotch Ice Cream
தக்காளி சாதம், தயிர் சாதம்
ஹிஹி, கேசரி.
//

appo moonithiyum enakku parcel pannunga paakalam...yaenna naan dhaane first commenter! ;)

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, போன பதிவுக்குப் போனேனா? அங்கே யாரோ கேட்டிருக்காங்க சரியான மெயில் ஐ.டி. போட்டிருக்கியான்னு. அது கண்ணில் பட்டதும் கண்ணை மூடிக்கொண்டு விட்டேனே, நான் பார்க்கவே இல்லை, யார் கிட்டேயும் சொல்லவும் இல்லை. அது சரி, இப்படி எத்தனை tag பதிவு போடுவீங்க, பாவம் SKM புதுசு,என்ன பண்ணப் போறாங்களோ தெரியலையே!

@SKM, இன்னும் மிச்சம் இருக்கு பேசறதுக்கு. ஒரு வாரம் இங்கேயே பேசிக்கலாம், வர்ட்டா?

Porkodi (பொற்கொடி) said...

அப்புறம் பஞ்சாப் எல்லாம் எப்படி இருக்கு? என்ன ஞாபகம் இருக்க்கும்னு நினைக்கறேன் :)

Porkodi (பொற்கொடி) said...

லெக்சரரா! ஐயோ பாவம் பசங்க எத்தன பேரு பாஸ் பண்ணாங்க...

மு.கார்த்திகேயன் said...

அம்பி..என்ன இது எல்லோரும் சம்பந்தம் இல்லாம மிஸ்.கேரளா தீபா படத்தை போட ஆரம்பிச்சுட்டீங்க

மு.கார்த்திகேயன் said...

//சிறு குழந்தைகளை குளிப்பாடி, அதன் மேல் ஜான்ஸன் பவுடர் எல்லாம் போட்டாலும், அந்த பவுடரை மீறி ஒரு வாசனை வருமே! அது சூப்பர்.
//

ithu super smell :-))

//கார்த்திக் - இந்த போஸ்ட்டை நீங்க படிச்சு முடிக்கறத்துக்கு முன்னாடி கார்த்திக், என் டேகை எழுதி போஸ்டா போட்ருப்பார் பாருங்க//

நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி அம்பி.. நேற்று ரொம்ப அசதியா இருந்ததால தூங்கிட்டேன் பா.. விரைவில் எழுதிடுறேன்

Bharani said...

நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே//....correct-ba :)

//இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர்//...Ambi...andha figure-kaga yerkanave sandhai nadanthu kitu iruku...neenga naduvula varama irukaradhu better :))

Ravi said...

Ambi, tag-ai kooda interesting-a ezhudha mudiyum-nu unga indha padhivum oru eduthukaattu (nichiyama ungala vechu comedy ellam pannala ;-)). Teacher's profession is one of my favourite professions too. Eppada indha software thozhilai vidivom-nu irukku but dhairiyam (innum) varalai.

EarthlyTraveler said...

Syam ku adutha pavi neengathan.
ezhudha onnum illanna Tag a ezhudhanuma?indha varam oru kutti kadhai,adutha varam mudinja your Tag.enakku pidicha 3 padathaiyum neengalae solliachu.nan enna solla.
Thillumullu is always #1,even for my kids.Thambi kooda nambadha alavukku velai pannreenga.
Very interesting.you have done this tag very well.--SKM

EarthlyTraveler said...

@Geetha:
yup.vanga vanga,namakku ennaikku pechu illama irukku,niraya irukku.
indha idam dhan E ottitu irukku.;P
--SKM

Geetha Sambasivam said...

SKM, என்னோட பதிவிலே வீடு படம் போட்டிருக்கேன், வந்து பாருங்க, அப்புறம் இன்னிக்குக் கேசரி செய்யப் போறேன். முடிஞ்சா படம் எடுத்து வைக்கறேன், பதிவிலே போடறதுக்கு, நாளைக்கு மிச்சத்தைப் பேசுவோம், வர்ட்டா? :-)

KC! said...

Punjabi izhukkama iruka mudiyala? Onnu pannu, adutha post-la avangaloda cut out onnu perusa pottu palabishegam pannidalama? ;)

அனுசுயா said...

//தில்லானா மோஹனாம்பாள் - "அடேங்கப்பா! ஆட்டம் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கே!"னு பாலையா நக்கல் விடுவாரே! அப்படி ஒரு படம் இப்ப எல்லாம் சான்ஸே இல்லை.///

அப்புறம் ஜில்ல விட்டுட்டீங்களே. மனோரமா நடிப்பு சிவாஜியவே மிஞ்சுமே இந்த படத்துல. :)

.

G3 said...

Aaha.. kalakkal Tag :)

//தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"//

enna sandhegamnu sollavae illayae :P

//எனக்கு ப்ரியமானவர்கள் இதயத்தில் எப்பொழுதும்//
Overa touchiteenga ponga :)

Vicky Goes Crazy... said...

murugan avaiyarey parthu solluvar ..enga ennai ondru rendu moondru endru varusai padithi padu nu ...antah madiri suya puranam ezuthi irukinga pola sir :D ..

ha ha good one ...

btw service boy neenga pogum pothu .. kai pullai poita engaley ellarum yaru joker nu solli azuthu irupan ..neenga unarchi vasa pada vendam

vendam ambi ..yen antha pasaganaley kodumai paduthunum ..pavam ...avangal aachu nalla badiya padichu mun eratum :D

gayathri said...

thillu mullu padam is worth watching any number of times. :)

Deekshanya said...

//அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே//
TRUE TRUE - enakum antha thiruneeru kalantha pongal romba ishtamana smell!


//தில்லுமுல்லு - தேங்காய் சீனிவாசன் ரஜினியை இன்டர்வியூ பண்ணூம் சீன், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.//

..அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்.(ஊர் பேர் மறந்திருச்சு) simply superb scene - both super star's face reactions and thengai srinivasan's innocent but strict look --- TOO GOOD.


//மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எனது முதல் நாள். நெல்லையில் படித்த எனக்கு அந்த கல்லூரியின் பிரமாண்டம், பழமை, மக்கள் எல்லாரையும் பார்த்து ஒரு வித மலைப்பு, பிரமிப்பு, படபடப்பு. பட்டிகாட்டான் யானையை பார்த்த மாதிரி.// American college-ஓட சிறப்பே அந்த அழகான campus தான்!!

'A' CLASS POST!!

Priya said...

சூப்பர் போஸ்ட்..

//அதுவும் இந்த பூச்சரங்கள் இருக்க வேண்டிய தலையில் இருந்தால், டாப்பு டக்கர்.//
வாசனைய கேட்டா எங்கயோ போய்ட்டீங்க.

தில்லு முல்லு நானும் நிறைய தடவை பாத்திருக்கேன். இப்ப பாக்க சொன்னாலும் பாப்பேன்.

//"தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஒரு சந்தேகததை, இந்த அம்பி தீர்த்து வெச்சுபுட்டான்!"//
என்ன சந்தேகமோ அது?

//மறுபடி கல்லூரி வேலை.//
பாவம் பசங்க. Free யா விடுங்களேன்.

Anonymous said...

//அது கோவிலில் நைவேத்யம் ஆகி, சுட சுட நம் கையில் வரும் போது வித்யாசமாக ஒரு நறுமணம் வீசுமே!//

Yes, அது எப்படி செய்றாங்கனு நான் நிறைய நாள் ஆராய்ச்சியே பன்னி இருக்கேன். ஆனா, முடியல..

//காதலிக்க நேரமில்லை(படம் பெயரை தான் சொன்னேன்) - இங்கேயும் பாலையா தான் பட்டய கிளப்புவார்//

எனக்கும்...


ரொம்ம நாளா உங்க பிளாக் படிச்சாலும் இது தான் நான் பதிவு பன்ற முதல் பின்னூட்டம்....

i enjoyed all your posts..

கைப்புள்ள said...

//2) கைப்புள்ளை - தல! நீங்க இந்த அடியவன் வீட்டுக்கு வரதே பெரிசு//
அம்பி...இதெல்லாம் ஒங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை? :)

//ஹிஹி, அதான் ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யம்//
இதுக்கு நாலு அடி அடிச்சிருக்கலாம். எப்படிப்பா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க. இப்ப புடிச்ச மூணு ஸ்மெல்லுக்கு எங்கேயிருந்து நான் பீலா ரெடி பண்ணறது? :(
ஏற்கனவே தீக்ஷன்யா எழுத சொன்ன பெஸ்ட் டேக் எழுதாம அப்படியே கெடக்குது. நான் எழுதலியேன்னு கோச்சிக்கிட்டு அவங்க நம்ம வூட்டுப் பக்கமே இப்பல்லாம் வர்றதில்லை :)
இப்ப இன்னொரு டேக்கா? ஒன் ஒடம்பு தாங்கும் என் ஒடம்பு தாங்குமா...அம்மாஞ்சி...அம்மாஞ்சி!!

கைப்புள்ள said...

என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு கூப்பிட்டுருக்கீங்க...தலையை அடமானம் வச்சாவது எப்படியாச்சும் எழுதிடறேன்.
(கிட்டத்தட்ட இப்படி தான் பெஸ்ட் டேக்குக்கும் சொன்ன ஞாபகம் :( )

ambi said...

@karthik.b.s, r u lec now..? me the gr8 escapu! romba simple, payanga heart beat correctaa pudicha pothum, aprom enna sonnalum kepaanga. ok, get your fvte food items. :D

//பாவம் SKM புதுசு,என்ன பண்ணப் போறாங்களோ தெரியலையே!
//
@getha madam, thoda! avanga superaa thaan ezhuthuvaanga. :p

//என்ன ஞாபகம் இருக்க்கும்னு நினைக்கறேன்//
@kodi, itha naanga sollanum. My subject all pass theriyumaa? 100% result. :)

//சம்பந்தம் இல்லாம மிஸ்.கேரளா தீபா படத்தை போட ஆரம்பிச்சுட்டீங்க //
@karthik, athaan thalila poo irukku illa. eppudi..? :D

//neenga naduvula varama irukaradhu better//
@bharani, ithuvarai antha idea illai, konjam yosikaren. :)
but kalathula erangitta, ellarum gaali, solliten. :)

//tag-ai kooda interesting-a ezhudha mudiyum-nu unga indha padhivum oru eduthukaattu //
@ravi, danq ravi, nenja thotitenga.
yeeh, me too longing for that job, but dabbu..? :)

//enakku pidicha 3 padathaiyum neengalae solliachu.nan enna solla.
//
@SKM, it's ok, Great pple think alike!nu sollunga.
//indha idam dhan E ottitu irukku//
neenga Geetha madam siteaa thaane solrenga? :)

ambi said...

//adutha post-la avangaloda cut out onnu perusa pottu palabishegam pannidalama//
@usha, ada daa! nee solli enniki naan thatti iruken? palabishegathuku sponser panriya? :D

//மனோரமா நடிப்பு சிவாஜியவே மிஞ்சுமே இந்த படத்துல//
@anusuya, correct, correct! :)

@g3, he hee, that's a tech doubt.(nambunga). :)

@vicky, :)

@gayathri, yeeh, thatz my fvte movie. same pinch. :)

@veda, yeeh, rendum ovraa aaduthu! ethavathu pannanum! :)

@deek, ooru peru Aiyanpettai! danQ sis. :)

//ரொம்ம நாளா உங்க பிளாக் படிச்சாலும் இது தான் நான் பதிவு பன்ற முதல் பின்னூட்டம்//
@mani, ahaa! ithu verayaaa? nadathunga sir, nadathunga. :)

ambi said...

//இதுக்கு நாலு அடி அடிச்சிருக்கலாம். எப்படிப்பா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க//

ஹிஹி, தல! உங்கள போய் அடிப்பேனா?

//இப்ப புடிச்ச மூணு ஸ்மெல்லுக்கு எங்கேயிருந்து நான் பீலா ரெடி பண்ணறது? //

நீங்க ராஜஸ்தான்ல 6 மாசமா குளிக்காம இருந்தீங்களே அப்ப ஒரு நறுமணம் வந்ததாமே! அத பத்தி எழுதுங்க. :p

//தலையை அடமானம் வச்சாவது எப்படியாச்சும் எழுதிடறேன்.
//
இல்லைனா, தலைய வாங்கிட மாட்டோம்? :D

Balaji S Rajan said...

Kalakiteenga Ambi. Ippo thaan pazhaiya ambiyai parka mudiyarathu. Tag was very humourous. Yennai Bangalore pathi ippadi pottu thakareenga. Athu yenna jilebi thesama... Inga vandha yenna solveenga...

ambi said...

//வாசனைய கேட்டா எங்கயோ போய்ட்டீங்க.
//
@priya, ஹிஹி, இதெல்லாம் கண்டுக்கப்படாது!

//இப்ப பாக்க சொன்னாலும் பாப்பேன். //
yeeh, me too. i dono how many times i had seen that movie. but still it looks new. awsome! :)

//என்ன சந்தேகமோ அது?//
That is a technical issue. nejamaave tech issue thaan! :D

//மறுபடி கல்லூரி வேலை.//
பாவம் பசங்க. Free யா விடுங்களேன்.//
உத்தரவு எஜமான்! :p
P.S: sorry, yest i missed to reply your comment. echoose me.

நாகை சிவா said...

நட்பு, நீ ஏகப்பட்ட மேட்டர் சொல்லி இருந்தாலும், அந்த மல்லி மேட்டர் மட்டும் தான் மனசில் நிக்குது.....

:-))))))))

ambi said...

//Ippo thaan pazhaiya ambiyai parka mudiyarathu.//

@balaji, oh! danks. enna panrathu, konjam adakki thaan vasikka vendi irukku! :D

yeeh, for me, all kannada letters are like pichu potta jilabi pieces. :)

//அந்த மல்லி மேட்டர் மட்டும் தான் மனசில் நிக்குது.....
//
@siva, he hee, athuku thaane padam pottu vilakki irukoom! :)

Geetha Sambasivam said...

SKM, I will meet you here tomorrow, if possible. Please drop some matter for me. We use this blog as our meeting place. OK. Tag matter overaa? I will come tomorrow and see your blog. Here it is raining, and the Kesari was Super. Varttaa?

கைப்புள்ள said...

//SKM, I will meet you here tomorrow, if possible. Please drop some matter for me. We use this blog as our meeting place. OK//

அம்பி! என்ன நடக்குது இங்கே? அல்டிமேட் காமெடி இது.
:))

கைப்புள்ள said...

அன்புள்ள பாஞ்சாலிக்கு,
நான் நலம். நீ நலமா. நாளை இதே கிழக்கே போகும் ரயிலில் சந்திப்போம்.

இப்படிக்கு
பரஞ்சோதி

பி.கு:ஐடியா குடுத்த தலைவி கீதா மேடத்தை கும்பிட்டுக்க தாயீ

Syam said...

என்ன என்னமோ சொல்லி இருக்கப்பா..பங்கு சொன்னா மாதிரி நீ என்ன சொல்லி இருந்தாலும் அந்த மல்லிகப்பூ படம் தான் அப்படியே மனசெல்லாம்... :-)

ambi said...

//அம்பி! என்ன நடக்குது இங்கே? அல்டிமேட் காமெடி இது.//

@kaipullai, பாருங்க கைபுள்ள, நீஙக்ளே உங்க சங்கத்தின் தலை(வலி)வியின் காமெடியை பாருங்க. :D

//இதே கிழக்கே போகும் ரயிலில் சந்திப்போம்.//

சும்மா சொல்ல கூடாது, நல்லாவே நக்கல் வுட்டு இருக்கீங்க, இதுக்கு தான் தல வேணும்!னு சொல்றது.

@syam, தெரியும்டி, உன்னை எல்லாம் மனசுல வெச்சுண்டு தான் அந்த படமே போட்டேன். :)

Pavithra said...

Very well written..could not distinguish whether it was a tag or another of ur post !! All points were interesting..aana malligai poovukku unga Amma photo potu irukalaam..;-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

ambi, gumm post
ungal blogai ippodhaan kandaen.
sila postil vizundhaen. ungal post ellam daan enakku inspiration

naanum oru blog thoovi ullaen
kittu-mama-solraan.blogspot.com

ungal karuthai pagirndhu kollavum
marubadi ungal blogai paarkkum varai,

kittu

Dreamzz said...

unga kadai pakkam ithu thaan mudhal murai endraalum, ahaa.. nammala madhiriye taste ungalukku!


/(நான் ஆபிஸ்ல நிஜமாலுமே வேலை எல்லாம் செய்றேன்!னு என் தம்பி கூட நம்ப மாட்டேங்கறான்.)
//
same feelings!