Friday, April 27, 2007

நரசிம்ம ஜெயந்தி

எங்கேடா உன் ஹரி? ஹிரண்ய கசிபுவின் குரல் அந்த பரந்த மண்டபத்தில் இடி போல எதிரொலித்தது.

அந்த குரலில் தான் எத்தனை ஆணவம், இறுமாப்பு கோபம்!
பின்ன இருக்காதா? மூவுலகிலும் தேவரால், அசுரர்களால், மனிதர்களால், யக்ஷர்களால், கிங்கரர்களால், பஞ்ச பூதங்களால், எந்த வகை ஆயுதங்களால், அஸ்த்ர சஸ்த்ரங்களால், காலை-மதியம்-இரவு வேளைகளில் தனக்கு இறப்பு வர கூடாது! என வரம் வாங்கிய புத்திசாலி அரக்கன் அல்லவா?
அப்பா! என்னுடைய ஹரி எங்கும் இருக்கிறான். இந்த தூணிலும் உள்ளான், அந்த துரும்பிலும் உள்ளான். என் மனதிலும் உள்ளான், தேடுங்கள் உங்கள் மனதிலும் வந்து அமருவான்!
- ஆணவத்திற்க்கு அடக்கம் பதிலளித்தது பிரஹலாதன் என்று தன்னை சொல்லிக் கொண்டு.

இந்த தூணில் இருக்கானாடா உன் ஹரி? அரக்கனுக்கு சந்தேகம்!

இன்னுமா உங்களுக்கு சந்தேகம் தந்தையே?

இதோ தொலைத்து விடுகிறேன் உன் ஹரியை! - தனது கதாயுததால் ஓங்கி அடித்தான் அந்த தூணை.
பக்தருக்கு தன் மோஹன புன்னைகையாலே அருள் பாலிக்கும் அந்த ஹரி எங்கே?

"ஹே! ஆதிமூலமே! அனாதரக்க்ஷகா! ஆபத்பாந்தவா!" என கதறிய கஜேந்ர யானையின் குரலுக்கு பதறியடித்து கொண்டு கருடாழ்வார் மேல் வந்தால் நேரமாகும்! என மனோ வேகத்தில் வந்த அந்த ஹரி எங்கே?

அண்டம் கிடுகிடுக்க, அலைகள் ஆர்பரிக்க, அடித்த தூண் இரண்டாக பிளக்க, இடியோசையுடன், மின்னலென்ன கோடி சூரிய பிரகாசத்துடன், எரிமலையென சீறி, ஆஜானுபாகுவாய், சிங்க முகமும் மனித உடலுடன் கோர பற்களும் கூரிய நகங்களுமாய்,பயங்கரமாக கர்ஜனை புரிந்து கொண்டு ரெள்த்ரமாக வெளி வரும் இந்த நரசிம்ஹனா அந்த ஹரி?
என்ன செய்வது? அரக்கன் வாங்கிய வரத்தை உடைக்க வேண்டுமே? மிருகமும் இல்லை, மனிதனும் இல்லை, கையில் எந்த அஸ்த்ரமும் இல்லை, வந்த பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை) வேளை தான்.
அரக்கனுக்கு ஒரு நொடி நேரம் கூட குடுக்க வில்லை நரசிங்கம். காட்டாறு போல பாய்ந்து, அலேக்காக தலைக்கு மேல் தூக்கி விடுவிடுவென வீடும் இல்லை, வெளியிலும் இல்லாத மனையின் வாயிற்படியில் சாவகாசமாக அமர்ந்து, அந்த சுதர்சன சக்ரமே கூரிய நகங்களாய் வர, அரக்கனின் வயிற்றை கிழித்து குடலை உருவி மாலயாய் அணிந்து செங்குருதி முகத்தில் தெளிக்க அந்த தாயாரும் அருகில் வர அச்சப்பட்டு தள்ளி நிற்க பக்தனான பிரகலாதனுக்கு மட்டும் கருணை கடலாக காட்சி அளிக்கிறான் என் நரசிங்கம்! அவன் ஒரு உக்ர சிங்கம்.
ஏப்ரல் 30 - நரசிம்ம ஜெயந்தி!
ஹே சிம்ம பிரபு! இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே!
எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன். ஒரு முறை வந்து விடு, இந்த பூமியின் பாரத்தை குறைத்து விடு!"

37 comments:

மு.கார்த்திகேயன் said...

First..

மு.கார்த்திகேயன் said...

எப்பா இந்த முதல் இடத்தை பிடிக்கிறதுகுல்ல அல்லு சில்லு ஆகிடுது.. இப்போ போய் படிச்சிட்டு வர்றேன் அம்பி

Padma said...

3rd.. AVP..

Anonymous said...

ippovae vandhuttaarnaa unga kalyaanam enpi nadakkum? vara vendiya nerathula dhaan varuvaar.
Vee

dubukudisciple said...

nalla postu thaan..ana narasimhar thaan varanamnu illa... namale narasimhara maridavendyathu thaan

Arunkumar said...

konjam out of syllabus-a irundaalum padikka nalla irundahu ambi...

CVR said...

//.....பொழுதும் காலையும் இரவும் கலக்கும் சந்தியா(நடிகை இல்லை)//

இவ்வளவு சீரியஸான மேட்ட்ர் சொல்லும்போது இந்த பிட்டு தேவையா?? :-P

இறைவனின் எண்ணங்களையும் செயல்களையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு அறிவு கிடையாது. அதனால் அவனை வா வா என்று தொந்தரவு செய்வதை விட,நம்மால் இயன்றவரை நம்மை சுற்றி உள்ள தீமைகளை நீக்க பாடுபடுவோம்!! :-)

கீதா சாம்பசிவம் said...

tell my thanks to Ganesan, who wrote this article. a nice one really. Thanks to Ganesan.

Dreamzz said...

//எங்களுக்கு நிதானமாக வரும் கல்கி வேண்டாம். கூவி அழைத்தவுடன் வரும் சிம்மமே! மீண்டும் வருவாயா? இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன்//
WOW! supera solli irukeenga! naanum avara alaikiren :)

Dreamzz said...

neenga supera pottu irukeenga :)

Sudharshan said...

Jai Narasimha

Marutham said...

:) Ullen ayya....

Padichukrenunga.. :) Etalanaalum


Sundal?? :D

Marutham said...

Kesari also plz :P

Hehe...

Anonymous said...

aniyayangalai kandu pongi ezhum narasimham varuvarraa enru manam engugirathu.koopitttal varuvarengira nambikkai ennakku irukkiradhu,neeye charanam bagavaane....
nivi.

Anonymous said...

sindhanaiai thoondum post,thodarandhu ezhuthungal.ungal karuthai erkiren.
nivi.

Anonymous said...

hello sandhya enge vandhanga?enga idhellam konjam adhigama theriyala?MS.C,Idhellam kekka mattingla????????

Anonymous said...

on the lighter side narasimha jayanthikku unga avangallukku enna vangikodutheenga?enna ippediyellam vanginathhan undu.ippa ketta edhu venna vagikodupeergal thaane?
MS.C note down.
nivi

Sudharshan said...

Alagana samanyamana open bhakti posting... Adiyen.
Srimad Bhagavatham says, Kalki avatharam will be more fierce than Narasimha Avatharam. In Kalki avatharam, there will be umpteen Samharams. But Narasimha avatharam always relishes every Bhakta, even to the level to Mukthi just by smruthi.

Great post Mr.Ambi.

Bharani said...

innoru vishayam pathi therinjikiten ambi...thanks :)

Bharani said...

//குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத//....appadiye 'ambi' dialog maadhiri iruke :)

Padmapriya said...

Nice post :)

Padmapriya said...

yedhavadhu viratham irukkanuma anniku?

Padmapriya said...

finishing arumaiya pannirkeenga na

Anonymous said...

naraimsha jayanthi, raamanavami ipdilaam postu potta neenga punjab kudhiraiyai paathada manni marandhuruvaangla? ;-)

-kodi

Anonymous said...

narasimhar ukkiramana kadavul... adnala vera oru commentum illai namaskaaram thavira :-)

-kodi

Sumathi said...

haai ambi,

//இன்றும் இந்த கலியுகத்தில் பல ஹிரண்ய கசிபுக்கள் வலம் வருகிறார்களே. பிஞ்சு குழந்தைகளை படிக்கவிடாமல் கடின வேலைக்கு அனுப்புகிறவர்கள், மக்கள் உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்கள், பெண்கள் மீது பாலின வன்முறை செய்பவர்கள், தன்னலத்திற்காக பஞ்சமா பாதகங்கள் செய்ய தயங்காத பதவி வெறி பிடித்த மிருகங்கள் என பட்டியல் நீள்கிறதே! //

iduku ellam oru Narasimar poodaadu, pala pala Narasimar veenum.

Kanya said...

Hello Ambi...

Narasimhar'a ivlo sexy'a oru photo'la thedi kodutha ennakku oru courtesy kooda poodala!!!!!!!!!!

sari illa... Narasimhaaa ithai mothalla gavani!!!

Anonymous said...

Geetha madam,
Intha post anna yaluthenathuthan,thanks annavukke sollungo.

Ganeshen

Harish said...

Address maari vandutena?

வேதா said...

அம்பி ஏன் உங்களுக்கு இந்த வேலை நீங்களே அனானி கமெண்டெல்லாம் போட்டுக்கறீங்க இப்ப தான் சந்தேகம் இன்னும் அதிகமாகுது இந்த அழகான பதிவை நீங்க எழுதினதா இல்ல உங்க சகோதரர் எழுதியதா? :)

Ganeshan said...

ithu enga anna thaan ezhuthinaar. geetha madam thaan Google paathu copy pashte panni ezhuthuvaanga. :p

enna veda madam? Jing jak soundu romba jaasthiyaa irukku? :p

வேதா said...

hallo ganeshan enra peyaril ezhuthum ambiye geetha madam solli thaan ithellam theriyanuma namaku thaan ambiye athavathu ungala nalla theriyumey :)

Delhi_Tamilan said...

Great post as usual.. the pic you have selected is top class... I wonder where you got it... great one...

My days(Gops) said...

// இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன்//

naan sollikiren => இந்த குழந்தையும் பக்தியுடன் அழைக்கிறேன்..

super post thala.....idhelam enga irrundhu ====>
(therinchadha? ila padichadha?)

ராஜி said...

I dont know abt the function..Nice info for me...

Epdinga ivalavu seriousaana vishyaththaiyum nadavula unga nakkals oda pottu irukkeenga ...Good ...

கீதா சாம்பசிவம் said...

@ambi, thariyama nerile pathil sollalame? en ippadi anony perile ellam olinjuttu? innikku yathechaiya vanthen, partha ippadi oru anony perile pathil kodukiringale? avlo payama? :-)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信