சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை.
"இச்வாகு குலத்தில் பிறந்த நான் என் மனைவியை பிரிந்தேனே!"னு ஷ்ரிராமர் அரற்றுவதை கம்பர் அழகாக பாடி இருப்பார்.
கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்.
"நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.
தலைவனை பிரிந்ததால் உடல் மெலிந்து, அதனால் தனது கை வளையல்கள் கழன்று விட்டதாக ஒரு தலைவி தனது தோழியிம் சொல்வதாக அக நானூறில் பாடலாக வரும்.
"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.
"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.
"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?
"முதல்வனே! என்னை கண் பாராய்!
முத்த நிவாரணம் எனக்கில்லையா?னு அர்ஜுன் மாமாவை நினைத்து கிராபிக்ஸ் உதவியுடன் மனிஷா மாமி உருகியதை நம்மல் மறக்க முடியுமா?
சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?
தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது.
ஒரு வித எதிர்பார்ப்பு, பரபரப்பு, மகிழ்ச்சி, பதட்டம் னு கலவையாய் இருந்தது என் மனம். நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.
அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்.
நான் ஏர்போர்ட் அடைந்த நேரத்தில் நம்ம பிளைட் வந்து விட்டது. செக்கிங்க் முடிந்து வர நேரமாகும் என்று தெரிந்தது.
"காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.
முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.
வரிசையாக பயணியர் வந்து கொண்டே இருந்தனர். பல முகங்களில் எதிர்பார்ப்பு, உறவினர்/ நண்பர்களை எதிர்பார்த்து அலைபாயும் கண்கள், மகிழ்ச்சியில் விரியும் முகங்கள், சில விம்மல்கள், பெருமூச்சுக்கள்.
வெள்ளைகார அம்மணி, குரங்கு குட்டியை சுமப்பது போல தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர.
என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
இதோ! அதோனு ஒரு வழியா தங்கமணி வந்து சேர்ந்தாங்க. வெளியே வந்ததும் தயாரா இருந்த ஃபொக்கேவை குடுத்தேன். (படத்துல வர மாதிரி முட்டி போட்டு எல்லாம் ஒன்னும் குடுக்கலை.)
இருவர் கண்ணும் மகிழ்ச்சியில் ஒரு கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.
அவங்க அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டு உம்மா எல்லாம் குடுத்து மீனம்பாக்கத்துல ஒரே பாச மழை தான். அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க.
என்ன கொடுமை ACE?(ஹிஹி, உன் பேரு சரவணன் தானே?) :)
79 comments:
first :)
so romantic (azhagiye theeye prakashraj solra maadhiri padikanum )
yenna...adhula prasanna...navya-va first paartha scene-a solluvaaru...appadi oru effect :)
attendance ma..padichitu vanthu comment adikkaren
//முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்//
ambi... ithukku munnadi ethanai perukku bouquet vaangi kuduthu irukkenga ;-)
appada oru gundu pottachu...
Beautifully expressed feelings :)
It was indeed a wonderful moment at the airport when I finally set my eyes on my beloved :)
unga thangamani michigan nagaram urangum pothunu oru song ezhuthinaanganu ninaikkren.. athu intha listla illaya?
//அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம். ஆசை தோசை அப்பளம் வடை!னு சொல்லிட்டாங்க. //
Ayyo paavam...
@bharani, danq barani! naan innum antha padam paakala! :(
//ithukku munnadi ethanai perukku bouquet vaangi kuduthu irukkenga //
@mgnithi, ahaaa! பத்த வெச்சியே காந்திமதி சே MGநிதி! :p
//இந்த இழுவைக்கு இவ்ளோ எடுத்துக்காட்டுக்களா? ரூம் போட்டு யோசிப்பீங்களோ//
@veda, இல்ல, ஆபிஸ்ல இன்னிக்கு டேமேஜர் லீவு. அதான் கருத்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது! :)
//மனம் என்னும் தேரில் எண்ணங்கள் எனும் குதிரைகளை பூட்டி ராமன் இருக்குமிடம் சென்றேன் என்று சீதாதேவி தான் அசோகவனத்தில் தன் பிரிவுத்துயரை வர்ணிப்பார்//
@veda, அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
சுந்தர காண்டத்தில் வரும். இதுக்கு தான் படிச்சவங்கள பக்கத்துல வெச்சுகனும்!னு சொல்றது. :p
//It was indeed a wonderful moment at the airport when I finally set my eyes on my beloved //
@MS.C, நீங்க சொன்னா சரி தான் எஜமான்! :)
//unga thangamani michigan nagaram urangum pothunu oru song ezhuthinaanganu ninaikkren//
@mgnithi, ada daa, adhu kooda super paattu ache! danQ for the reminder. :)
paavam ace :)
nalla kaathitu irukeeenga!
kaathiruthal thaana kadhaluku sugam ;)
//நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.//
ithula ippadi pala bitu vera!
15!
//kaathiruthal thaana kadhaluku sugam //
@dreamz, அதுக்காக ரொம்பப நாள் தேவுடு காக்க கூடாது.
வந்தார்கள்!வென்றார்கள்!னு வரலாற்றில் நம்மை பாட வைக்கனும்.
என்ன சரி தானே?
உனக்கு தெரியாத விஷயத்தையா நான் சொல்ல போறேன்? :p
guddu guddu.... inime enna ore wedding preparation thaan!! enjoi maadi!!
ROTFL....:-)
ஆமா என்ன கொடுமை ACE இது :-)
koduthadhu ore oru malarkothu, adhukku ippdi oru puplicity.
@Ms.C:
//Beautifully expressed feelings :)
It was indeed a wonderful moment at the airport when I finally set my eyes on my beloved :) //
ada!ada!adadaa!ammani nalla irukka?yevalo solli koduthum ippdi avar pakkam ippovae ippdi verum oru rose ku kavudhutteengalae.
;)
என்னடா அம்பி, கதை எழுத ஆரம்பிச்சாச்சோன்னு நினச்சேன், போஸ்ட் தலைப்பு பாத்தவுடனே
//சரி, இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை?//
இழுவையை பாத்தா, எந்த அளவுக்கு பித்து பிடுச்சு போயிருக்கன்னு தெரியுது அம்பி
//என கலவையாய் மக்கள் கூட்டம்.//
வெட்டியாய் இருந்த நேரத்துல நல்லாத் தான்யா ஏர்போர்ட்ல சைட் அடிச்சிருக்க! ஜொள் ஆறு ஓடியிருக்கும் போல
//சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு //
இந்த குதிரை விஷயத்தை நீ விடவே மாட்டியா.. அந்த ஏர்ஹோஸ்டஸ் பாத்தவுடன் பஞ்சாப் ஞாபகம் வந்திடுச்சா அம்பி
அம்பி, கலக்கல் as usual... VVS ல short list ஆனதுக்கு வாழ்த்துக்கள்..
//"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?
//
ஆண்ட்டிகள் மட்டும் இல்ல. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்.
//தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) //
சான்ஸே இல்ல.. ROFTL :)
//அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள்//
பயங்கரமா கவனிக்கிருக்கிங்க.
//முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! நமக்கு அவசரமாக வரும் போது அடக்கி கொண்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாக தியானம் பண்ணும் தடியனுக்காக ரெஸ்ட்ரூம் வாசலில் தவமாய் தவமிருப்பதும் ஒன்று தான்.
//
அய்யோ. சிரிப்ப அடக்க முடியல..
அண்ணி இந்தியா வந்துட்டார்ன்னு சந்தோஷமா சொல்றீங்க.. அண்ணன் சந்தோஷமா இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். :-D
வாழ்த்துக்கள்.. (வ வா சங்க போட்டி கடைசி சுற்றுக்கு தேர்வு பெற்றதுக்கு! வெற்றி பெற வாழ்த்துக்கள்)
:-D
(:-) thangamanikku koduthadhu oru bouquet adhuku ivalavu build up aa edho diamond necklace kodutha maari !!!
airportla kathirukkum pala peroda expressions azhaga solli irukeenga.
//கணம் மின்னின. பேச வார்த்தைகளே வர வில்லை. ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது.
vaarthai eppadi varum, adhaan jollu tank tanka varudhe
/அடுத்து எனக்கு தான்!னு நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம்./
ayyo,andha asadu vazhinja mugatha paaka mudiyama poche !
- Kittu maami
அம்பி வாய்ப்பே இல்ல.. கலக்கிட்டீங்க்க.. செமயா எழுதியிருக்கீங்க...
//
so romantic (azhagiye theeye prakashraj solra maadhiri padikanum )
//
அதே தான் பரணி..
gimme this. :)
வழக்கம் போல கலக்கிட்டீங்க தல!!
நடத்துங்க!! :-D
அட அட அட.. ஒரு 5 நிமிட மேட்டர இத்தனை அழகா, உங்களால தான் எழுத முடியும்.. :) :)
//ரேவதி சொன்ன மாதிரி வெறும் காத்து தேங்க் வந்தது. //
நீங்க ஏர்போர்ட்ல சைட் அடிச்ச மேட்டர் தெரிஞ்சா அந்த பக்கம் புயலே அடிச்சிருக்கும் :) :)
ஆமா என்ன கொடுமை இது..
va.vaa.sangam - select aanathukku vazthukkal :)
//inime enna ore wedding preparation thaan!! enjoi maadi//
@kutti, yes kutti, thanks maadi! :)
@Syam, இப்புடி எல்லாம் கமண்ட் பண்ண ஒப்பி அடிக்க கூடாது!:p
//yevalo solli koduthum ippdi avar pakkam ippovae ippdi verum oru rose ku kavudhutteengalae.
//
@skm, ஆஹா! நீங்க தானா அது? அதான் என்ற அம்மணி ஜிங்கு ஜிங்குனு ஆடறாங்க. :)
//வெட்டியாய் இருந்த நேரத்துல நல்லாத் தான்யா ஏர்போர்ட்ல சைட் அடிச்சிருக்க! ஜொள் ஆறு ஓடியிருக்கும் போல
//
@karthi, ஆமா! ஆமா! டைமை வேஸ்ட் பண்ணா கூடாது இல்ல. :p
//VVS ல short list ஆனதுக்கு வாழ்த்துக்கள்..
//
@priya, wow! thanks for the info. எனக்கே நீங்க சொல்லி தான் தெரியுது. :)
//ஆண்ட்டிகள் மட்டும் இல்ல. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்.
//
@priya, me too love that song. :)
//வாழ்த்துக்கள்.. (வ வா சங்க போட்டி கடைசி சுற்றுக்கு தேர்வு பெற்றதுக்கு! வெற்றி பெற வாழ்த்துக்கள்)
//
@my friend, உனக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீ ஜெயிச்சா அண்ணாவுக்கு என்ன treat தருவ? :p
//koduthadhu oru bouquet adhuku ivalavu build up aa edho diamond necklace kodutha maari !!!
//
@k-mami, ahaa! ipdiyaa atom bomb podarathu athuvum marriage timela..? :p
//ayyo,andha asadu vazhinja mugatha paaka mudiyama poche !
//
@k-mami, he hee, enakke nalla therinjathu naan vazhinjen!nu :p
//அம்பி வாய்ப்பே இல்ல.. கலக்கிட்டீங்க்க.. செமயா எழுதியிருக்கீங்க...
//
@arun danQ arun. உனக்கும் கன்கிராகுலேஷன்ஸ் VVS contestla வெற்றி பெற. :)
//வழக்கம் போல கலக்கிட்டீங்க தல!!
நடத்துங்க//
@CVR, ரெம்ப நன்றிங்கண்ணா! :)
//நீங்க ஏர்போர்ட்ல சைட் அடிச்ச மேட்டர் தெரிஞ்சா அந்த பக்கம் புயலே அடிச்சிருக்கும் //
@ACE, அடிச்சது அடிச்சது, சுத்தி சுத்தி அடிச்சது பா! :)
//va.vaa.sangam - select aanathukku vazthukkal //
@i'm not ace, ada yaaruppa ithu..?
danq for the wishes. :)
நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை. நான் சென்ற காரை விட என் மனம் வேகமாக ஏர்போர்ட் சென்று விட்டது.
ambi,
Feelings ai azhaga, ulladhu ullapadi express panradhil neenga soooper dhan.
Idhai unga thangamani nanna purinjuudu iruka nu ninaikiren.
Nijama neenga Lucky dhan ambi....
Andha dhariyam dhan - innum blog la rasgullla, kerala kuthuvillaku nu ezhudha vechundu iruku.. hmmm keep it up....
ENNUDIAYA ADVANCE WISHES TO YOU AND MS.C !!!!!!!!!!!!
With Love,
Usha Sankar.
nice post ambi."kathirundal edhirpathirundal oru nimishamum varushamadi" nnu kadhalan padapadal varigal ninivukku varudhu.
ammavukku kidachadu aaruirkkum kidaikkum !!!!!!!!!!PORUMAI KADALINUM PERIDHU.illaya???kathirukkum kanangal enrikum iniyadhu.
idhemadhiri avangalum feel panniirupanga.kettingla illaya??
karadi bommai kooda vangi poirrundheengala????
ineme "tirumana naal enni kadandhidum innatkal sugamana oru sumai dhane"nnu paadunga.o.k enjoy!!!!!!
wishing you a great time together.eppadi irukkanga?ungalai paakama illacchttangla?
_NIVI
1st kavithai vari ellam solli kuduthirkeenga paarunga oru build up....yeppa..chance ye illa :)
hhaa..yedho airport la ninnu direct eh paatha effect...
//நானும் சப்பு கொட்டிண்டு காத்திருந்தது தான் மிச்சம்.//
neenga pona post la potta ice kahavadhu ungala konjam kavanichirkalaam manni..
50!!
oru half centurkku aprum naan edha podaren..
nethe padichutten :)..
konjam somberi thanathunale comment podala..
Parava ella anna.. manniya alps malaileye kuli pattarel :D..
//சங்க காலம் முதல் ஷங்கர் காலம் வரை காதலை பாடிய கவிஞர்கள் எல்லாம் பிரிவையும் பாடாமல் விட்டதில்லை//
appadiya ambi!! sanga kaalam pathi ellam enaku theriyathu etho nee solre ketukaren
கால தோஷத்தால் தமயந்தியை பிரிந்த நளன் அந்த துயர செயலை நினைத்து நினைத்து புலம்புவதை நள சரித்திரம் படித்தால் கல்லும் கரையும்///
padichu parthutu solren
நாராய்! நாராய்!"னு நாரை விடு தூதில் கூட வறுமையில் வாடும் ஒரு புலவர் மறக்காமல் தனது தங்கமணிக்கு செய்தி சொல்லி இருப்பார்.
///
adada antha kalathu courier service naarai thaane
"என்னுயிர் தோழி! கேள் ஒரு சேதி!
இது தானோ உங்கள் மன்னவன் நீதி?"னு அழகான அமீர் கல்யாணி ராகத்தில் சுசீலா அம்மா கர்ணன் படத்தில் பிரிவின் ஏக்கத்தை சொல்லி இருப்பார்.
////
oh adu suseela amma ezhuthina padala.. naan avanga padamatum thaan senjanganu ninaichene
"ராசாத்தி உன்னை காணாம நெஞ்சு காத்தாடி போலாடுது!"னு கேப்டன் கூட முட்டி வரைக்கும் கோட் எதுவும் போடாம உருக்கமா பாடி இருப்பார்.
////
adada captaine urugi padi irukarna appuram aduku appeale kidayathu
"சோலை புஷ்பங்களே! என் சோகம் சொல்லுங்களேன்" என்ற பாட்டை முணுமுணுக்காத இன்றைய ஆன்டிக்கள் யாரும் உண்டோ?////
punjab kudiraigalai mattum thaan theriyumnu ninaichen..aunty vera theriyuma??
இப்ப என்ன சொல்ல வர? எதுக்கு இந்த இழுவை//
kekave matome ippadi.. appuram aduku oru izhu izhupa
தங்கமணியை பிக்கப் செய்வதற்காக(அதான் ஏற்கனவே பிக்கப் பண்ணியாச்சே!னு நீங்கள் முணுமுணுக்கறது கேக்கறது எனக்கு) தமிழ் புத்தாண்டு அன்று இரவு ஏர்போர்ட் செல்ல நேரிட்டது///
manasu vanthu poitiya???
நடு இரவு 12 மணிக்கு கொஞ்சம் கூட தூக்கம் என் கண்களை தழுவ வில்லை///
pei pisasuku ellam rathiri 12maniku thookam varathupa
அடுத்த பிளைட்டுக்கு கிளம்ப ரெடியாக இருக்கும் அரை டிரவுசர் மாமாக்கள், 2 இஞ்ச் லிப்ஸ்டிக்கை சரி பார்க்கும் மாமிகள், தலையில் மதுரை மல்லி மணக்க இருபுறமும் பின் குத்திய துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்த தமிழ் நாட்டு ஸ்னேகாக்கள், ஜீன்ஸ் (பேண்டா, டிரவுசரா?னு தெரியாத வகையில்)அணிந்து வலம் வரும் சப்பாத்தி தேச கரிஷ்மா கபூர்/அகர்வால்/குப்தாக்கள், தான் அமெரிக்கனா? இந்தியனா?னு அவர்களுக்கே தெரியாமல், ஹெட்போன் மாட்டி, கோக் குடிக்கும் விடலை சிறுவர்கள், கஸ்டம்ஸ் செக்கிங்கில் எதை அமுக்கலாம்?னு காத்திருக்கும் கோட் போட்ட ஆபிசர்கள், ரங்க்மணிகளுக்கு காத்திருக்கும் தங்கமணிகள், எம்ஸ் படித்து(?) விட்டு வரும் தன் தவபுதல்வனை வறவேற்க காத்திருக்கும் பாசமிக்க பெற்றோர், பேரன்/பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் 'பூவே பூ சூட வா!' பாட்டிகள்/தாத்தாக்கள் என கலவையாய் மக்கள் கூட்டம்///
angeyum poi unnoda kadalai podara buthiya vidalainu nalla puriyuthu
காத்திருந்தால், எதிர்பாத்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி!"னு சும்மாவா வைரமுத்து மாமா பாடி வெச்ருக்கார்.
///
vairamuthu mama summa padalai kaasu vaangitu thaan padinaram.. ketene avara
முதல் தடவையாக பேரமே பேசாமல் ஃபொக்கே ஒன்று வாங்கி கொண்டு செக்கின் வாசலையே பார்த்து கொண்டிருப்பதும் ஒன்று தான்! /////
adu thaan madrasla peiya iruntha mazhai kooda peiyalaiyam
தூளி மாதிரி ஒரு வஸ்துவில் குழந்தையை சுமந்து வந்த அவரின் கணவன்(?), பிளைட் ஓட்டிய பைலட் மாமா, சாக்லேட் குடுத்த ஏர்ஹோஸ்டஸ் குதிரைகள்னு வரிசையாய் எல்லோரும் வந்தனர் என் தங்கமணியை தவிர////
enge ponalum intha kudiraiyai vidathe nee!!!
என்னடா இது? ஒரு வேளை தங்கமணி கடைசி சீட்டா?
இதுக்கு தான் பைலட் மாமாவை ஐஸ் வெச்சு பேசாம அவர் சீட்டுக்கு அடுத்த சீட்டுல உக்காச்சுண்டு வரணும்!னு நான் சொன்னதை கேட்டா தானே!
/////
adu thaane.. yarum nee solratha kekarthe illa.. enna panrathu nee kozhandainu ninaichitaanga
ஹாய் அம்பி,
ஆக ஒரு வழியா (வழிசலோட,, வழிஞ்சுகிட்டே) பொக்கேல்லாம் குடுத்து அம்மணிய பாத்து கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியதோ?
appa vanthathuku 65 potachu...
seri ethu eppadiyo nalla ezhuthi iruke...
oru 5 nimisha kadaiya ennomo 15 hrs mathiri sollite.. nadathu
paavam ACE!!
ippo peraya matha vachiteengale.. edo ungala ana nalla kaariyam
ivalavu thooram vanthachi.. innoru roound podalama
aiya naan than 70
wow..romanticooooooo romantic post
adangoyyala :-( friday thaan poduvinga nu yadhechaiya vandha 71a?? :-((
-kodi
rotfl! chappu kotindu readya irundhingla?? nalla vechangle aapu :D
-kodi
//Beautifully expressed feelings :)
It was indeed a wonderful moment at the airport when I finally set my eyes on my beloved :) //
enna enna ennadhidhu? over scene udambukku aavadhu!
-kodi
arun n bharani,
give it to me once more! ;-)
ada che mundhina comment adhe kodi thaan.
-porkodi
ana idhu pola ethanai bouquet ethanai kaathiruppu... idhellam unglukku pazhagi poirukkum, illiya ambi? ;-)
-kodi
//Idhai unga thangamani nanna purinjuudu iruka nu ninaikiren. //
@usha shankar, U r rite. :)
//Andha dhariyam dhan - innum blog la rasgullla, kerala kuthuvillaku nu ezhudha vechundu iruku.. //
ahaa, kuluthi pottaachaa? :) danq for the wishes, soon will send U my invitation. periya giftooda vaanga. he hee :)
//eppadi irukkanga?ungalai paakama illacchttangla?
//
@anony(NIVI), she is fine. ilaikavum illai, gundaagavum illai. :)
//pona post la potta ice kahavadhu ungala konjam kavanichirkalaam manni..
//
@padmapriya, apdi sollumaa en paasa malare! ithuku thaan onna maathiri naalu sisters venum!nu solrathu. :p
@DD akka, yekka, gummi adikka vera idame kidaikaliyaa? nan thaan maatinena? naama thaniyaa pesikalam. :)
//ஆக ஒரு வழியா (வழிசலோட,, வழிஞ்சுகிட்டே) பொக்கேல்லாம் குடுத்து அம்மணிய பாத்து//
@suamthi, yeeh, yeeh. paathachu oru vazhiyaa.
@gila, vaaya jols ooops sorry, gils, :) unga office epdi irukku? same MIP thaana illa ethavathu therichaaa? :p
//adangoyyala :-( friday thaan poduvinga nu yadhechaiya vandha 71a//
@kodi, ROTFL :) trend changed. he hee :)
//ana idhu pola ethanai bouquet ethanai kaathiruppu... idhellam unglukku pazhagi poirukkum, illiya ambi?//
@kodi, nee enna solra maa? onnum puriyalaiye..? :)
(mavale! india varum pothu unakku irukku diwali, grrrrr)
//கொடி,
பசலை நோய் பயங்கரமா பத்திக்கிச்சு அதான் இப்டி சீன் போடறாரு//
@veda, kandupidichutaanga paa Imasai arasi! :)
:( ipo katha ultavaa adichi...outta 7 4 ladies :(
Post a Comment