Monday, April 30, 2007

மைசூரை சுத்தி பாக்க போனேன்!

கடந்த ஈஸ்டர் விடுமுறையில் நம்ம டாக்டர் டிடி அக்காவின் குடும்பத்தோடு மைசூர் சுத்தி பாக்க போனோம். பெங்களூரிலிருந்து 3.5 மணி நேரத்தில் மைசூரை அடைந்து விடலாம், நடுவில் இருக்கும் மாண்டியா என்ற மாவட்டத்தில் ஏதும் ரோடு மறியல், பந்த் நடக்காமல் இருந்தால். ஏனெனில் நமது கன்னட கண்மணிகள் சும்மா டீ குடிப்பது போல இந்த ஏரியாவில் பந்த் நடத்துவார்கள்.

மைசூர் போகிற வழியில் ஸ்ரீரங்க பட்னம் என்ற அழகிய புதுமையும் பழமையும் கலந்த ஊர் உள்ளது. தமிழகத்தில் தஞ்சை வழியாக காவிரி ஸ்ரீரங்கத்து எம்பெருமாளின் காலை வருடிக் கொண்டு போவது போல இந்த ஊர் வழியாக தவழும் காவிரி இங்கு கோவில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியை தொட்டுக்கொண்டு செல்கிறது.


பெருமாள் அதே சயன கோலம் தான். வாக்காக கால் அமுக்கி விட தாயார் இருக்கும் போது தூக்கம் வராமலயா இருக்கும்? எனவே நமது வேண்டுதல்களை எல்லாம் தாயாரிடமே சொல்வது நலம். (சரி, உலா வரும் ஒளி கதிர் மாதிரி போகுது போஸ்ட்! அய்யே வேதா! நான் உங்கள சொல்லலை).

ஸ்ரீரங்க பட்னம் எம்பெருமாளின் கருட வாகனம் - பெரிய திருவடி (Air Force One )


இந்த கோவிலில் என்னை மிகவும் கவர்ந்தது இதன் கட்டிட கலை. (எவன்டா அவன்! புளியோதரை தானே?னு நக்கல் விடறது?). விஜய நகரத்து அமைப்பையும், முகலாயர்களின் சாயலும் நன்றாக தெரிந்தது. திப்பு சுல்தான் கூட மானியம், நகைகள் எல்லாம் வாரி வழங்கியதாக கல்வெட்டுக்கள் சொல்கிறது. வசூல் செய்வதில் பெருமாள் பலே கில்லாடி ஆச்சே! கோவில் கொஞ்சம் பராமரிக்கபடலாம். ஆனாலும் ரொம்ப மோசமாக இல்லை.
கோவில் வாயிலில் கணிணி தவிர எல்லாத்தையும் போட்டு விற்கிறார்கள். தாராளமாக பேரம் பேசலாம். வழக்கம் போல "அம்மா! தாயே! கைல இருக்கும் செல்போனையாவது தர்மம் பண்ணுங்க!" போன்ற தொல்லையும் உண்டு. குதிரை எல்லாம் சவாரிக்கு உள்ளது.

இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!ஹைதர் அலி ஏறிய குதிரையின் கொள்ளு பேத்தி குதிரை தான் இது!னு குதிரைகாரன் அள்ளி விட வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது ஒரு மார்வாடி குடும்பம்.


இந்த ஊர் வருவதற்க்கு முன்னாலேயே திப்பு சுல்தானின் கோட்டை, சமாதி எல்லாம் உள்ளது.


மதியம் லஞ்சை நல்ல ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. மைசூர் அரண்மனை பார்க்க கிளம்பினோம்.


இதற்க்கு முந்தைய அரண்மனை தீக்கிரையானதால் கிட்டத்தட்ட சுமார் 14 வருடங்களாக கடின உழைப்போடு 1897ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனைக்கான செலவு அந்த காலத்திலேயே 40 லட்சம் ரூபாய்.


கன்னட, சாளுக்ய, விஜய நகர, மொகலாய, ஆங்கிலேய கட்டிட கலைகளின் ஒரு கூட்டு கலவையாய் திகழ்கிறது இந்த அரண்மனை. திரும்பிய பக்கமெல்லாம் வண்ண வண்ண ஓவியமென்ன, பளபளக்கும் தரைகள் என்ன, மார்பிள்கள், கிரானைட்டுகள், பெல்ஜியம் கண்ணாடிகள், கலர்கலரான லஸ்தர், சாண்டில்யர் விளக்குகள், சந்தன/பர்மா/தேக்கில்/யானை தந்தத்தில் கதவுகள் என பார்க்கும் இடமெல்லாம் கலையும் செல்வ செழிப்பும் வழிந்தோடுகின்றன.


பல ஓவியங்கள் ரவிவர்மா தீட்டியது. அரண்மனை ஊர்வலங்கள், யானை மேல் அம்பாரி வைத்து ராஜா, ராணி, அவர்களின் ஜால்ராக்கள் ஊர்வலம், சாமுண்டி தேவியின் திருவீதி உலா, ராஜாவின் தர்பார் காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.


"ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக, விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் பராக்! பராக்!என நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.

கீழே விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் மற்றும் அவரது தம்பி உடையார்!

(சரி, சரி, துப்பறத்துக்கு தான் கமண்ட் செக்க்ஷன் இருக்கே! இப்பவே ஆரம்பிச்சா எப்படி?)


நானும் டிடி அக்காவின் ரங்கமணியும்! :)

அரண்மனை உள்ளே காமிரா கொண்டு செல்ல அனுமதி நஹி. ஆனால் காமிரா மொபைல் கொண்டு போகலாம். என்ன கொடுமை I'm not ACE? :)உள்ளேயே ஒரு மியூசியம் உள்ளது. பெரிசா ஒன்னும் இல்லை. ராஜா சாபிட்ட தட்டு, சரக்கு அடித்த கண்ணாடி கோப்பைகள், உபயோகித்த வாள், வேல், உடுத்திய சிலுக்கு ஜிப்பாக்கள், பயணித்த பல்லக்கு, காலணிகள், அடித்து கொண்ட செண்டு, இத்யாதி.
ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.

ராஜாவின் பட்டு மேலங்கியை "ராஜா கா கோமணம் ஹை!"னு ஒரு கைடு சில சப்பாத்திகளிடம் அள்ளி விட்டு கொண்டிருந்தான். அரண்மனையின் முக்யமான இடமான அந்தபுரம் எங்கே?னு நைசா தேடி பார்த்தேன். விவரமா பூட்டி வெச்ருக்காங்க.

என்ன தான் கலை, ஓவியம்!னு நாம பாராட்டினாலும், ஒரு தனி மனிதனுக்கா இவ்வளவும்?னு சாமனிய மக்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை தவிர்க்க முடியலை.
இவ்ளோ சிறப்பு பெற்று இருந்தாலும், இந்த ராஜ பரம்பரைக்கு ஒரு சாபம் உள்ளதே! இதை பற்றி நமது டிடி அக்கா வூட்டுல போயி பாத்துக்கோங்க. :)

அரண்மனை மாலை 6 மணிக்கு பூட்டி விடுவார்கள். நாங்கள் அங்கேயே ரொம்ப நேரம் செலவிட்டதால் சாமுண்டி ஹில்ஸ் போக முடியலை. வரும் வழியில் நெடுஞ்சாலையில் உள்ள காமத் ஓட்டலில் இரவு டிபனை அமுக்கினோம். மசால் தோசை சூப்பர்.

அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))

64 comments:

dubukudisciple said...

ambi ippovum onnum kettu pogalai billa bharaniku anupidalam!! enna solre??

dubukudisciple said...

ambi
Buttermilka vitutiye???
idu sariya??

மு.கார்த்திகேயன் said...

vanthuttomla correctaa?

மு.கார்த்திகேயன் said...

//மாண்டியா என்ற மாவட்டத்தில் ஏதும் ரோடு மறியல், பந்த் நடக்காமல் இருந்தால்.//

1994-இல் இப்படித் தான் மைசூர் போகக் கிளம்பிய நாங்கள், ரோடு மறியலால் நந்தி ஹில்ஸ் சென்று திரும்பினோம், அம்பி

மு.கார்த்திகேயன் said...

//ஸ்ரீரங்க பட்னம் என்ற அழகிய புதுமையும் பழமையும் கலந்த ஊர் உள்ளது//

நிறைய தமிழ் சினிமாவில், முக்கியமா ரஜினி படங்களில் இந்த ஊர் வரும்ல அம்பி

CVR said...

Getting nostalgic abt my trip to the place!!
Good post Ambi!! :-)

mgnithi said...

// நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. மைசூர் அரண்மனை பார்க்க கிளம்பினோம்.
//

Ippa en avangala vambukku ilukkareenga

mgnithi said...

//என்ன கொடுமை I'm not ACE? :)
//

Ada paavingala.. unga kodumai thaangama thaane ACE peraiya maathi vachikkitar... innum vidalaya aneenga avara...

enna kodumai I'M not ACE ithu :-)

mgnithi said...

//அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :)) //

Bharani ippa fax panna reimbursement seyra policy kondu vanthirukkaram.
Intha maathiri vara request ellam handle panrathukku oru P.A appoint pannirukkatha oru news vanthrukku.... Ethukkum try apnni paarunga...

mgnithi said...

10 :-)

Hema said...

Adutha thadavai kandipa chamundeswari-yai darisanam pannitu vaanga...nice post:-)

-Hema

My days(Gops) said...

12

My days(Gops) said...

13 my spot first

கீதா சாம்பசிவம் said...

ponathe ocyile, ithile billu kattinathu ennamo dd than. athaiyum Barani thalai mele podanuma enna? Barani ellaathaiyum enakku anupi aachu. :P

Harish said...

Mr Ambi

Need one info. Please tell me when are you getting married. At least the month will do Sir. I need this info urrrrrrgently......

Arunkumar said...

mysore poitu vandhadhe ippidyum sollalaama-nu thonuchu posta paathu.. chumma anganga nagaichuvaya thoovi vitturkinga :)

Arunkumar said...

palasu thaan musuem-la vaipaanga. boorikattaigal innum vazhi vazhiya use pannitu irukkura naala vaikalayo ennavo :P

Arunkumar said...

//
"ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக, விஜய நரசிம்ம அம்பிராஜ உடையார் பராக்! பராக்!என நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.

எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.

//

unga kusumbukku oru azhave illaya :)

Anonymous said...

aajar

-porkodi

Anonymous said...

camera mobile irukkatum, maharajavum thambiyuma... enna koduma i m not ace idhu :-)

-porkodi

Anonymous said...

//Mr Ambi

Need one info. Please tell me when are you getting married. At least the month will do Sir. I need this info urrrrrrgently...... //

harish inna matternu sonna naangale sollitu porom, edhuku ivlo kashtam? :D

-porkodi

துளசி கோபால் said...

பிடிச்சிருக்கு.

Harish said...

@Porkodi
"harish inna matternu sonna naangale sollitu porom, edhuku ivlo kashtam? "

Chumma edho ennala mudinja oru chinna surprise daan. Adukku daan inda detail tevai padudu. yaaravudu en doubta teerthu vaingalen...pleeeaassseeeeee....

dubukudisciple said...

harish
May maasam kalyanam ambiku poruma??

.:: மை ஃபிரண்ட் ::. said...

25 நானே! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))//

எங்கேயும் இவரை விட்டு வைக்கிறது இல்லையா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

மைசூர் மகாராஜா, எப்படி இருக்கீங்க? :-P

Ms.Congeniality said...

//ராஜாவின் பட்டு மேலங்கியை "ராஜா கா கோமணம் ஹை!"னு ஒரு கைடு சில சப்பாத்திகளிடம் அள்ளி விட்டு கொண்டிருந்தான்.//
LOL!!!!

//மதியம் லஞ்சை நல்ல ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். நல்ல வேளை! "நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை. //
Too much :-p

Harish said...

@dubukkuDisciple
Inda udavikku ungalukku Ice cream vaangi taren :D. Nandri hai :-)

Padma said...

30... nalla round figure :D..
//Ambi udaiyarum//:P.. naan neenga iyer nu ella nenachen :P.. udaiyara neenga:P..
vara vara unga lollukku alavu ellaiama pochu :P.. manni kitta solli adakki vekkanum :D..

Sumathi said...

ஹாய் அம்பி,

//இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!//

இப்ப அத யாரு கேட்டாங்க? குதிரயை மறந்தாலும் நீங்க பஞ்சாப்ப மறக்க மாட்டீங்க போல இருக்கு?!!!

Sumathi said...

ஹாய் அம்பி,

//டிடி அக்கா அடம் பிடிக்கலை..//

ஓசில சாப்பிடச்சேவே இவ்வளவு நக்கலா?

Priya said...

இப்ப தான் DD அக்கா ப்ளாக்ல படிச்சிட்டு வந்தேன். நீங்க உங்க ஸ்டைல்ல கலக்கியிருக்கிங்க.

வேதா said...

ஓசிலேயே ரசம் வாங்கி சாப்டு ஓசிலேயே டூரும் போய்ட்டு வந்து இவ்ளோ நக்கலா?:)

/அய்யே வேதா! நான் உங்கள சொல்லலை)./
இதுக்கு நீங்க நேரடியாவே சொல்லியிருக்கலாம் :)

/இது ஒன்னும் பஞ்சாப் குதிரை இல்லை!/
அதானே பார்த்தேன் குதிரைங்கற வார்த்தை யூஸ் பண்ணாம ஒரு போஸ்ட் போட முடியுமா? ;)

/எம்பெருமாளின் கருட வாகனம் - பெரிய திருவடி (Air Force One/
ஹாஹா விவிசி அப்ப சிறிய திருவடி ?:)

Priya said...

//அம்பிராஜ உடையார் பராக்! பராக்!//

அப்படி போடுங்க. :)

Priya said...

//அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))
//

ROFTL :)

Kittu said...

Nice post ambi ! photos and humour add panni kalakki irukeenga,
May masam vandachu, eppo kalyanam ?
Wishes to u and ur thangamani.
-K mams (i)

ambi said...

@DD akka, ada ithu kooda good idea. :) forget to add the buttermilk.

//1994-இல் இப்படித் தான் மைசூர் போகக் கிளம்பிய நாங்கள், ரோடு மறியலால் //
@karthi, ada paavigala! ithe pozhappa pochu avangalukku.

//நிறைய தமிழ் சினிமாவில், முக்கியமா ரஜினி படங்களில் இந்த ஊர் வரும்ல //
@karthi, could you pls mention any movie name..? muthu..?

//Getting nostalgic abt my trip to the place!!
Good post Ambi//
@CVR, thanks thala! :)

//ACE peraiya maathi vachikkitar... innum vidalaya aneenga avara//
@mgnithi, LOL :) avloo seekrama vidaratha illai :)

//Bharani ippa fax panna reimbursement seyra policy kondu vanthirukkaram.
//
@mgnithi. ROTFL :) itho fax anupidaren. :)

ambi said...

//Adutha thadavai kandipa chamundeswari-yai darisanam pannitu vaanga...nice post//

@hema, sure, sure! jodiyaa!nu oru word add panni irukalam. :p

//13 my spot first
//

@sachin, yow! ithellam 13 much! :)

//ponathe ocyile, ithile billu kattinathu ennamo dd than.//

@geetha madam, ha haaa. enna venaa sollikonga :)

@harish, chellam, personalized marriage invitation is on the way. moi ezhutha unakku ivloo aasaiyaa? :p

//boorikattaigal innum vazhi vazhiya use pannitu irukkura naala vaikalayo ennavo//
@arun, valid point. :)

//harish inna matternu sonna naangale sollitu porom, edhuku ivlo kashtam?//
@kodi, anna marriageku moi ezhutha romba asai padaran harish! amukki podu! :)

//பிடிச்சிருக்கு.
//

@thulasi madam, ஒரு வாசகமானாலும் திருவாசகமா சொன்னீங்க டீச்சர். :)
எலேய் யாருல அங்க? டீச்சருக்கு சேர் எடுத்து போடுங்க. எனக்கு கால் வலிக்குது. :p

//Chumma edho ennala mudinja oru chinna surprise daan. Adukku daan inda detail tevai padudu. //

@harish, LCD/plasma TVyaa ok! ok! :p

//மைசூர் மகாராஜா, எப்படி இருக்கீங்க? //
@my friend, வாங்க காமடி க்வீன்! Selamat Datang! :p

@ms.congeniality, கும்முடு போட்டுகறேன் எஜமான்! :)

//@dubukkuDisciple
Inda udavikku ungalukku Ice cream vaangi taren //
@harish, antha icecreama naane collect pannikaren, he hee pakathu veedu thaan! :)

//vara vara unga lollukku alavu ellaiama pochu :P.. manni kitta solli adakki vekkanum //

@padma, vaama minnal! :)

ambi said...

//குதிரயை மறந்தாலும் நீங்க பஞ்சாப்ப மறக்க மாட்டீங்க போல இருக்கு?//

@sumathi, சரி, சரி! நோ டென்ஷன். :)

//இதுக்கு நீங்க நேரடியாவே சொல்லியிருக்கலாம்//
@veda, என்ன இருந்தாலும் துணை முதல்வர் இல்லையா? :p

//குதிரைங்கற வார்த்தை யூஸ் பண்ணாம ஒரு போஸ்ட் போட முடியுமா?//
குதிரைக்கே தனி பதிவு போடலாம்னு இருக்கேன். :)
சின்ன திருவடி வாகனம் பார்க்க முடியலை. ;(

//அப்படி போடுங்க//
@priya, சரிங்க ஆபிஸர்! :p

@kittu mama/mami, marriage is on may! email id pls. will send U the invitation. moi ellam undaa? :p

Anonymous said...

nice post.too good.mothathile mysoreiye ore kalakku kalakkiteenga.you have great observation skills.hats off.
nivi

Marutham said...

Adra Adra ! ! ;)(Gops style :P )
Mysore hogi bartheeniya?? Thmba chanagidhu ree...
Naan miss madi. Mysore palace awesome..
Snaps thomba chanagidhey..

Marutham said...

:D Hehe
Sari sari - thupra sectionla again thupina epdi..thupadheengapa.. :P

Soooper ambi. Enna neenga world tour range;ku poitu irukeenga.
apdiye engalukum kamikreenga..DAANX DAANX !!
Indha vaati naan partha place'a irundhalum - relived the experiences :D
Nandriiiiiiiiii :)

Marutham said...

Btw, Bharani sir auto anupradhula periya aalu i know..
bill also katting'a :D ??
Daanx for the inbo ambi ;)

Marutham said...

Round'a oru 45 :)

Ponnarasi Kothandaraman said...

Ennanamo nadakuthu! :) Enna Ambi sir, interesting'a oru subject pathi post panuveenganu am wwaiting 2 c :P Atha kaanumey! :)

Nalla enjoy panreenga ;) Nice pics. Pics have added more beauty 2 the post.

Delhi_Tamilan said...

unga postah padichitu nanae mysore poitu vandha madiri iruku.....

Dreamzz said...

//அம்பி: டிடி அக்கா! நாம ஒரு தப்பு பண்ணிட்டோம்!
டிடி: என்னடா சொல்ற?
அம்பி: நாம சாப்ட பில்லு கட்ட நம்ம பரணிய கூட்டிண்டு வந்து இருக்கலாம். :))//

ஹி ஹி! இத படிச்சதும் தான் மன்சு சந்தோஷமாஅ கீது!

golmaalgopal said...

sooper post thala...srirangapattanam puliyodharai saaptelo?? sooper'ah irukkum but qty dhaan kammi... :(

mysore palace ...really a gr8 piece of architecture...adhuvum andha durbar hall chancae illa...semma range..

Dreamzz said...

//ங்கு கோவில் கொண்டிருக்கும் பெருமாளின் திருவடியை தொட்டுக்கொண்டு செல்கிறது.//
:) எனக்கு ரோம்ப பிடிச்ச இடம்.

Dreamzz said...

அட! அப்படியே 50 அடிச்சிட்டேன் போல!

Marutham said...

And ayya manikanum..inaku dhaan nama friend solli parthen..Nama pera blog union'la invite oanirukeenga - i missed that post ..
Pulariks..
AWWWWWWWWWWWWWWWWWWW>>......... :)

I M NOT ACE :) :) said...

mysore erkanave paathirukken.. ippo marupadiyum paarka vendum enra unarvu.. :) :) unga usual style nakkala ezhuthi irukeenga vazthukkal.. :) :)

I M NOT ACE :) :) said...

//நான் தான் சமைச்சு கொண்டு வருவேன்!"னு டிடி அக்கா அடம் பிடிக்கலை//

OC rasathukke intha nakkals.. :) :) (aanalum LOL ;) )

I M NOT ACE :) :) said...

//அரண்மனை உள்ளே காமிரா கொண்டு செல்ல அனுமதி நஹி. ஆனால் காமிரா மொபைல் கொண்டு போகலாம். என்ன கொடுமை I'm not ACE? :)//

Ithellam kodumaye illai.. neenga ulla poi photo eduthu, ithu thaan enga veedunnu emaathuveengannu therinjirukku polirukku :D

Padmapriya said...

//சரி, உலா வரும் ஒளி கதிர் மாதிரி போகுது போஸ்ட//
LOL :)

//எனக்கு எதோ என் சொந்த அரண்மனைக்கே நுழைந்த மாதிரி ஒரு உணர்வு.
//

pona jenma nyabagama?

//ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.//
apo poori kattaiku badil vera yedhavadhu irunthirukumo??..

photos ellam super :)

ambi said...

//you have great observation skills.hats off.
//

@nivi, thanks nivi. yeeh i used to watch very minute details. :)

//Mysore hogi bartheeniya?? Thmba chanagidhu ree...
//
@marutham, howdhaa? :p dhanyavadhulu. endri, neeku kannada thumba ishtama? :)

//bill also katting'a :D ??
Daanx for the inbo ambi //
yeeh, rush your bills to barani. he will pay for U. :)

//Enna Ambi sir, interesting'a oru subject pathi post panuveenganu am wwaiting 2 c//
@ponnarasi, Already posted ma! search my archieves. "paartha naal muthale" topic. :)

//nanae mysore poitu vandha madiri iruku..... //
@delhi, is it..? ambi kush huvaa! ;)

ambi said...

//ஹி ஹி! இத படிச்சதும் தான் மன்சு சந்தோஷமாஅ கீது!
//
@dreamz, அடடா என்ன ஒரு நல்ல மனசு உனக்கு!

//adhuvum andha durbar hall chancae illa...semma range.. //

@golmaal, exactly, i too love that. next time poto pudichu podaren. :p

//Nama pera blog union'la invite oanirukeenga - i missed that post ..
Pulariks..
//
@marutham, seri, seri, seekram jothila aaikiyam aayiko! :)

//neenga ulla poi photo eduthu, ithu thaan enga veedunnu emaathuveengannu therinjirukku polirukku //

@ACE, cha! makkals usaraa thaan irukaanga. :)
//pona jenma nyabagama?
//
@padma, yeeh, yeeh! :p

gils said...

nanum mys poiruken..ipdilam gavinakalpa...ranganathar super...athey posela inoru edathulayum inga bloreaanda irukar...same star dimensions as the trichy one

gils said...

//fax panna reimbursement seyra policy kondu vanthirukkaram./
ROTLFL :D inumay billuna barani km kanaka oda porar

Sudharshan said...

ambi...mysore-ku nerla pona madhiri oru feeling..Also noted thambi udayan ambiandan :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ராணியிடம் அடி வாங்கிய பூரி கட்டையை ஏனோ காட்சிக்கு வைக்கவில்லை.

அட இதுகூட தெரியாதா. அதுதான் இப்போ கல்யாணப் பரிசா தங்கமணிகையில் வந்தாச்சே.14 ஆம் தேதிக்குமேல் தினமும் அதுதான் பேசும்

Anonymous said...

hello,

srirangam is in trichy not in tanjore. cauvery goes via trichy and then to tanjore.
- anon

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信