Friday, May 04, 2007

மொக்கை டேக்

மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது?) ஃமை பிரண்ட் ஒரு மொக்கை டேக் எழுத சொல்லி இந்தா அந்தா!னு போக்கு காட்டி ஒரு மாசம் ஆச்சு.

அதாவது, உங்க எல்.கே.ஜி ஸ்கூல் டீச்சரிலிருந்து +2 வரை படித்த பள்ளீயின் டீச்சர் பெயர் எல்லாம் சொல்லனுமாம். நல்லா துபாய்ல ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு. (ஆமா! இந்த டேக்கை ஆரம்பிச்சு வெச்சவருக்கு தான் இந்த அர்ச்சனை)

நான் ரெண்டே ஸ்கூலுல தான் படிச்சேன்.
எல்கேஜி முதல் ஐந்தாம் கிளாஸ் வரை ஒரு ஸ்கூல்.
6 முதல் 12 ம் வகுப்பு வரை இன்னொரு ஸ்கூல். அதுலயும் எனக்கு ரொம்ப பிடிச்ச டீச்சர்ஸ் பத்தி தான் எழுதுவேன். இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?

மேரி மிஸ்: அழகா பேபி பிங்க் கலர்ல மெட்டல் ஷிபான் சாரி கட்டி, போஃனி டெயில் போட்டு, கைல ஒரு குடையோட வருவாங்க கடலோர கவிதைகள் ரேகா மாதிரி. எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. நான் கிளாஸ்ல என்ன அட்டகாசம் பண்ணாலும் எங்க அம்மாட்ட போட்டே குடுக்க மாட்டாங்க.

ரஞ்சனி: என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற. அடியே ரஞ்சனி! உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!

சாந்தா - ஹிந்தி மிஸ்: நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். நல்ல வேளை, மிஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டாங்க.
தப்பா எழுதினா தொடைல நறுக்குனு கிள்ளு விழும். 7ம் கிளாஸ்லேயே கபீரின் கவிதைகளை ரசிக்க முடிந்தது இந்த குருவின் தயவால்.

காயத்ரி: ஸ்கூல் ஆண்டு விழாவுல எப்பவுமே நமக்கு இவங்க தான் ஜோடி. அப்பவே மூக்கும் முழியுமா இருப்பாங்க. ராமர் வேஷம் போட்டா இவங்க சீதை, கிருஷ்ணர் வேஷம் போட்டா, இவங்க தான் ருக்கு!

ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

கிருஷ்ண மூர்த்தி சார்: ஸ்கூலில் அஸிஸ்டண்ட் ஹெட்மாஸ்டர். அதனால பாதி நாள் கிளாஸுக்கு வர மாட்டார். வந்தார்னா ஒரே நாளில் பாதி புக் முடிச்சுட்டு போயிடுவார். என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம். இப்பவும் எனக்கு மேத்ஸ்னா கொஞ்சம் அலர்ஜி.

வினோதா: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்த குடும்பம். சிங்களத்து சின்ன குயிலே!னு பாடினா மின்னல் கீற்றா ஒரு புன்னகை எட்டிப் பார்க்கும். பேஸ்கட் பால் பிளேயர். வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.

(ச)ரோஜா டீச்சர்: இந்த தமிழ் மேடம் தினமும் தனது கொண்டையில் ரோஜா வெச்சுண்டு வருவாங்க. அதனால் சரோஜா டீச்சர் ரோஜா டீச்சர் ஆயிட்டாங்க.
எத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் விடற?னு என்கிட்ட கத்துவாங்க. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.

சுப்பையா சார்: ரொம்ப துடிப்பானவர். என்ஸிஸி ஆபிசர் வேற. எனக்கு அரைகுறை ஹிந்தி தெரியும்! என்ற ஒரே காரணத்துக்காக பூரி கிழங்குக்கு ஆசைபட்டு என்ஸிஸில சேர்ந்த என்னை, பஞ்சாப்புக்கு எல்லாம் கேம்ப் கூட்டிண்டு போறேன்!னு சொன்ன நல்லவர். எங்க அப்பா கேம்புக்கு விட மாட்டேன்!னு சொல்லிட்டார்.

அவ்ளோ தான்பா! யாராவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்புவர்கள் இந்த மொக்கை டேக்கை தொடரலாம். ;)

48 comments:

mgnithi said...

attendance ma..

Ms.Congeniality said...

//என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா. அவ பேனா எழுதறதா?னு என் பின்மண்டையில எழுதி செக் பண்ணிப்பா. நான் மிஸ்ஸ்!னு கத்தினா தொடையில நிமிட்டாம்பழம் வேற//
ROTFL!!!

//நான் இப்ப ரசகுல்லா கூட சக்ஸஸ்புல்லா கடலை போடறேன்னா அந்த பெருமை எல்லாம் இந்த மிஸ்ஸையே சாரும். //
Perumai pada vendiya vishayam dhaan..

//ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.//
hee hee hee!! nalla venum :p

As usual very funny post :D

Syam said...

கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத தங்கமணி ரசிச்சு கை தட்டிட்டு இருக்காங்க....நல்ல குடும்பம் பல்கலை கழகம்....:-)

mgnithi said...

//உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!
//

Reversela nadanthura poguthu.. Neenga adi vaangina maathiriye unga paiyanum adi vaangida poraan.

mgnithi said...

//கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத தங்கமணி ரசிச்சு கை தட்டிட்டு இருக்காங்க....நல்ல குடும்பம் பல்கலை கழகம்....:-)
// ROTFL

CVR said...

// இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும்//
ஏன்??? பாய்ஸ் பெயர் எதுவும் நியாபகத்துக்கு வரலையா?? :P


//வினோதாவுக்காக பாதி ஸ்கூல் கிரிக்கட்டை மறந்து பேஸ்கட் பால் ஆடியது.//
ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு சொல்றாங்க!! :-)


//என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு //
"கோட்டி" யா?? அப்படின்னா???

//. கட்டுரை போட்டி, நாடக போட்டினு எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே //
அட நீங்களுமா?? :-)

//mgnithi said...
//கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத தங்கமணி ரசிச்சு கை தட்டிட்டு இருக்காங்க....நல்ல குடும்பம் பல்கலை கழகம்....:-)
// ROTFL //

ரிப்பீட்டு!!! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

இருங்க.. அட்டெண்டன்ஸ் போட்டுட்டு படிச்சுட்டு வர்ரேன்.. :-D

சிங்கம்லே ACE !! said...

//என் கூட படிச்ச சக வானரம். ரஞ்சனி!னு பெயருக்கு பதிலா லங்கினினு வெச்சு இருக்கலாம். எப்ப பாரு! என்னய தான் டார்ச்சர் பண்ணுவா.//

உங்களையே டார்ச்சர் பண்ண ஒரு ஆளா?? கேக்கவே காதுல தேன் பாஞ்ச மாதிரி இருக்கு.. ;) ;)...

சிங்கம்லே ACE !! said...

//ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. //

LOL:), அம்பி, நம்பற மாதிரியே இல்லையே.. :) :)

நீங்க தான், 6 படிக்கும் போது, எதோ ஒரு ஃபிகரை பாத்துட்டே 8ம் கிளாஸுக்கு போயி உக்காந்ததா பேசிக்கறாங்க.. :) :)

சிங்கம்லே ACE !! said...

//அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க//

ஏன் அவங்களுக்கு கண் தெரியாதா?? உங்களுக்கு எதுக்கு வேஷமெல்லாம்.. நீங்க வேஷம் போடாமலயே தத்ரூபமா இருப்பீங்களே :) :) :)

(just kidding :) )

வழக்கம் போல், உங்க நக்கல், நடையில சூப்பர் போஸ்ட்.. :) :)

Arunkumar said...

அதாவது, படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும் சரியா செஞ்சிருக்கீங்க... :)

ROTFL @ நாட்டாம மமெண்ட் :)

SKM said...

vittu pona post yellam padichutten.
Thani thaniya comment poda neram illai. Have fun.

கீதா சாம்பசிவம் said...

mmmm, Ranjanai thalaiyile ezuthinala? athan apove thalaiayile onnume illainu kandu pidichirukka. Very Shrewd Indeed. Nalla kudumbathile vazhkaipattu nalla irukkanum, pavam romba nalla ponnu. enakku avalai romba pidichirukku :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே.. நல்ல புள்ளையாட்டம் கொடுத்த வீட்டுப் பாடம் செஞ்சுட்டீங்க. ;-)

அதுலேயும் அத்தனை டீச்சர் பேரையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே.. என்னால முடியலைப்பா.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

கல்யாண வேலை தலைக்கு மேலே வச்சுக்கிட்டே கொடுத்த டேக்கை கரேக்ட்டா எழுதிய அண்ணனுக்கு ஒரு ஜே!! :-D

அதுக்கு முதல் பின்னூட்டம் போட ட்ரை பண்ணின அண்ணிக்கு இன்னொரு ஜே! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

@Syam:

//கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத தங்கமணி ரசிச்சு கை தட்டிட்டு இருக்காங்க....நல்ல குடும்பம் பல்கலை கழகம்....:-) //

ஆஹா.. நாட்ஸ்..

ஒன்னு சொன்னாலும் பொன்னா (நயன் இல்லைப்பா) சொல்லியிருக்கிங்க குரு. ;-)

Kittu said...

உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!


Ms.Congeniality, ketuteengalla? ayya sandhadi saakula ungalukku message anuparaaru.

Kittu said...

ருக்கு மட்டும் தானா? சத்யபாமா கிடையாதா?னு மிஸ் கிட்ட ஒரு தடவை கேட்டதுக்கு அடுத்த தடவை உனக்கு அனுமார் வேஷம் தான்!னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.


-school padikum bodhe enna aatam aadi irukeenga neenga ? padikardha thavira mathadhellam panni irukeenga pola :)
-K maami

மணி ப்ரகாஷ் said...

அம்பி.கலக்கல். மொக்கை டேக்னு போட்டு இருக்கீங்க..

பாருங்க கீதா மேடம் வந்து எப்படி என் தலைப்ப நீங்க யூஸ் பண்ணலாம்னு கேஸ் போட போறாங்க...

//மலேசிய புயல், காமடி க்வீன் (யாருப்பா அது கோவை சரளா!னு வாசிக்கறது//

நாந்தானு யாரும் சொல்ல கூடாது.. :)))

..அது எப்படிப்பா,
டீச்சர் பெயர் கேட்டா கூட படிச்ச கேள்ஸ் பெயர இலவச இணைப்பா..ம்ம்


நல்ல டிரைவ் பன்றப்பா..

அதுல

மணி ப்ரகாஷ் said...

அப்புறம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது?

எங்களுக்கு எல்லாம் எப்ப டீரிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்?

இலவசக்கொத்தனார் said...

எங்க தெரு வாத்தியாரானா கிருஷ்ணமூர்த்தி சாரைப் பத்தி எழுதியதை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எந்த போட்டி வந்தாலும் என்னய கேக்கமலேயே "அந்த கோட்டி பெயர எழுதிக்கோ!"னு என் பெயரை எழுதி அனுப்பிடுவாங்க.//

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி!
பாத்தீங்களா உங்க ரோஜா டீச்சர் சொன்ன வாய் முகூர்த்தம்...பலிச்சிடுச்சி!

கோட்டின்னு சொன்னாங்க
கோட்டீஸ்வரர் ஆயிட்டீங்க! :-)))

Sree's Views said...

hmm enanga ambi..ungala muhurtha nerathula "yov..rendu perum ennaya kaila lappie ya vechukittu sirikareenga...vandhu thaaliya kattittu..appuram blog ezhudhi siringappa" nnu vaanga poraanga... :))
sooper jodi paaa :))

ivalo nalla teachers peru ellam nyabhagam vechi irukeenga...
great !
Ambi..neenga enna andha "pankajamum naanum vilavukku vandhu irumdhom" joke keteenga illa..rendu naala amma pinnadee suthikittu irkken..paadhi dhaan tamil la type panna mudinjidhu...adhukkuleyum enga amma en kitta oru malai velai vaangitaanga :(
innaiki eppadiyaavadhu thaaja panni post pottudaren :)

Ensssooooii pannunga rendu perum :)
Good Luck :)

Sree's Views said...

Naatamai..
unga email id kaaga ore theding :(
koncham correct mail id kodungalen :)

Padmapriya said...

Semma comedy post..adhenna unga kooda boys yaarumea padikkalaya?

Padmapriya said...

//என்ன நடத்தினார்?னு அவருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.
ஆமா, எட்டாம் கிளாஸ் புக்கை வெச்சு ஆறாம் கிளாஸுக்கு கணக்கு நடத்திடார் ஒரு தடவை. சிலபஸ்ல கிடையாது!னு சொல்லி எக்ஸாம்ல மார்க் வாங்கிட்டோம்.//
ROTFL :)

அனுசுயா said...

//கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத தங்கமணி ரசிச்சு கை தட்டிட்டு இருக்காங்க....நல்ல குடும்பம் பல்கலை கழகம்....:-)//

Athe than :)

தி. ரா. ச.(T.R.C.) said...

// இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும்//
ஏன்??? பாய்ஸ் பெயர் எதுவும் நியாபகத்துக்கு வரலையா?? :P

படிச்சதே பெண்கள் ஸ்கூல்தானே. அப்பரம் எப்ப்டி பாய்ஸ்?

பொற்கொடி said...

vanten vanten!

பொற்கொடி said...

rotfl!! teachersa pathi thaane solla sonanga, ranjini & vinodha pathi ellam naanga kettoma?? ;-)

பொற்கொடி said...

Ms.C, beauty parlorla kooda laptopa?? :D

Sumathi said...

Hai Ambi,

//உங்களையே டார்ச்சர் பண்ண ஒரு ஆளா?? கேக்கவே காதுல தேன் பாஞ்ச மாதிரி இருக்கு.. ;) ;)...//

repeeeetu...

Sumathi said...

hai ambi,

//வழக்கம் போல், உங்க நக்கல், நையாண்டி, சூப்பர் போஸ்ட்..

அது சரி, அம்பி இன்னும் ஒரு வாரத்துல ஆத்துக்காரி வரப் போறா...
நீ என்னடான்னா இன்னும் அந்த பாழாப் போன பஞ்சாப்பையே நினைச்சுண்டு இருந்தா எப்படி?
ஏம்மா, ப்ரியா இதை ஒன்னும் நீ கேக்க மாட்டியோ?

Padmashri said...

dhoda! teacher pathi yeludha sonna, figurenga pathi than jaasti irukku. anyways, mokkaiyanalaum mulumaiya irukku.
sari, saroja missa pathu yeppavavadhu 'saroja saman nikkalo' solli irukkiya???

ambi said...

@mgnithi, attendence marked.

@MS.C, நீங்க சொன்னா சரி தான் எஜமான்! :)

//கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு...இங்க என்னடான்னா ரங்கமணி பிளாக் எழுத //

@syam, ஆமா! ஆமா! நீங்க எல்லாரும் தர போற மொய் டாலர்களை எந்த பேங்குல மாத்தலாம்?

பிலாஸ்மா டிவிய எப்படி கஸ்டம்ஸ்ல மாட்டிக்காம கொண்டு வரலாம்?
கல்யாணம் அன்னிக்கு நடக்க போற பிளாகர்கள் மாநாட்டுல எனக்கு தர போறீங்களே வீர வாள், வைர கிரீடம் இதை எல்லாம் எப்படி பாதுகாப்பது?னு பல வேலைகள் இருக்கே. :)

//Reversela nadanthura poguthu.. Neenga adi vaangina maathiriye unga paiyanum adi vaangida poraan.//
@mgnithi, பயம் காட்டாதே பா! :)

//பாய்ஸ் பெயர் எதுவும் நியாபகத்துக்கு வரலையா?? //

@CVR, லூஸாப்பா நீயி? ;)

//ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு சொல்றாங்க//
ஹிஹி, நான் தானே கேப்டன். :p

//"கோட்டி" யா?? அப்படின்னா???
//
ஹிஹி, எனக்கும் தெரியாது. :p

//உங்களையே டார்ச்சர் பண்ண ஒரு ஆளா?? கேக்கவே காதுல தேன் பாஞ்ச மாதிரி இருக்கு.//

@ACE, இருக்கும்லே இருக்கும். ஏன் இருக்காது? :p

//நீங்க தான், 6 படிக்கும் போது, எதோ ஒரு ஃபிகரை பாத்துட்டே 8ம் கிளாஸுக்கு போயி உக்காந்ததா பேசிக்கறாங்க//

அட! உனக்கும் தெரிஞ்சு போச்சா? :)

//நீங்க வேஷம் போடாமலயே தத்ரூபமா இருப்பீங்களே//

ROTFL :)

//படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும் சரியா செஞ்சிருக்கீங்க... //

@arun. ஆஹா! வளர்த்த கடா மாரில் பாய்கிறதே! :)

ambi said...

//vittu pona post yellam padichutten.
Thani thaniya comment poda neram illai. Have fun//

@SKM, happy that U enjoyed.
நமக்கு கமண்ட்டா முக்யம்? நான் என்ன கீதா பாட்டியா? :p

//pavam romba nalla ponnu. enakku avalai romba pidichirukku //

@geetha paati, அப்பா! என்ன ஒரு வில்லதனம்? :p

//கொடுத்த டேக்கை கரேக்ட்டா எழுதிய அண்ணனுக்கு ஒரு ஜே//

//முதல் பின்னூட்டம் போட ட்ரை பண்ணின அண்ணிக்கு இன்னொரு ஜே//
@my friend, அப்ப, நீங்க அதிமுகவா? :p

//ketuteengalla? ayya sandhadi saakula ungalukku message anuparaaru.//

//school padikum bodhe enna aatam aadi irukeenga neenga ?//
@kmama & kmami, இப்படி சபைல போட்டு உடைக்கலாமா? :)

//பாருங்க கீதா மேடம் வந்து எப்படி என் தலைப்ப நீங்க யூஸ் பண்ணலாம்னு கேஸ் போட போறாங்க...
//

@mani, ராயல்டி குடுத்துரலாம். :p

//டீச்சர் பெயர் கேட்டா கூட படிச்ச கேள்ஸ் பெயர இலவச இணைப்பா..ம்ம்
//
எல்லாம் ஒரு இலவச சேவை தான்! :p

//எங்களுக்கு எல்லாம் எப்ப டீரிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்?
//
ட்ரீட் தானே? குடுத்துடுவோம். :)

//எங்க தெரு வாத்தியாரானா கிருஷ்ணமூர்த்தி சாரைப் பத்தி எழுதியதை வன்முறையாகக் கண்டிக்கிறேன். //
@ilavasam, அடடா! அவர் உங்க தெருவா? ஊருக்கு போகும் போது போட்டு குடுத்ராதீங்கண்ணா. :)


//கோட்டின்னு சொன்னாங்க
கோட்டீஸ்வரர் ஆயிட்டீங்க//

@kannabiran, வாங்க, வாங்க! பெரியவங்க எல்லாம் நம்ம கடைக்கு வந்தது என் பாக்யம். :)

//innaiki eppadiyaavadhu thaaja panni post pottudaren //
@sree's views, இதோ வந்து பாக்கறேன். அது என்ன கதை?னு ஒரே மண்டை குடச்சல். :)


//adhenna unga kooda boys yaarumea padikkalaya?
//
@padma, (scratching the head)படிச்சாங்க!னு நினைக்கிறேன். :)

//Athe than :)
//
@anu, அதே ரிப்ளை தான்! :)

//படிச்சதே பெண்கள் ஸ்கூல்தானே. அப்பரம் எப்ப்டி பாய்ஸ்?
//
@TRC sir, சே! டொட்டல் டேமேஜ். இருக்கட்டும், கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்டுக்கு தானே வர போறேன், அப்ப பாத்துக்கறேன். :)

// beauty parlorla kooda laptopa?? //

@kodi, சில மாதங்களுக்கு முன்னால் உன் கைல மொபைல் இருந்ததே! அது மாதிரி தான். :p

//அம்பி இன்னும் ஒரு வாரத்துல ஆத்துக்காரி வரப் போறா...
//
@sumathi, ஒரு வாரம் தனே இருக்கு, அதுகுள்ள ஆடி முடிச்சுகலாம்னு தான். :)


//sari, saroja missa pathu yeppavavadhu 'saroja saman nikkalo' solli irukkiya???//
@shree, சொல்லி இருந்தா மொத்தி இருப்பாங்க மொத்தி. :p
How is shrinidhi? :)

Anonymous said...

humorous post,unga teacher mattrum thozhigal peru ellam correcta nyabagam vechirrukeenga.good.
nivi.

Anonymous said...

description was great.unga kooda padicha oru paiyen peru koodava nyapagam illa?thats bad.enna ellam ponunga perra varudhu?seri seri ellam Mrs kku MR aggira varai thane?enjoy this period.

மு.கார்த்திகேயன் said...

/இலவச இணைப்பா கூட படிச்ச, சில கேள்ஸ் பெயரும், ஹிஹி. என்ன சரியா?//

அம்பி, உனக்குத் தான் எவ்வளவு நல்ல மனசுப்பா

Sudharshan said...

santha miss address kadaikuma :)

ராஜி said...

Annathaey ungala miss paeru ezhudha sonna ,neenga kadalai potta historyum serthu ezhudhirukeenga ;)..

Adhae Ambi agmark nakkals :P

Dreamzz said...

நல்ல டேக். நல்ல அனுபவங்கள்

Dreamzz said...

டீச்சர சைட் அடிச்சதெல்லாம் போடல?

Dreamzz said...

//உனக்கு லட்டுவா ஒரு பொண்ணு பொறந்து என் பையன விட்டு என் கணக்க டேலி பண்ணிகறேன் பாரு!
//
ஹா ஹா ஹா ஹா!
நல்ல காமெடி பன்னறீங்க. எனக்கென்னமோ பையன் பொறந்து டிரும்ப கிள்ள்ளு வாங்குவான் என்ற்று தோணுது

Dreamzz said...

45!

priya said...

H ther,

I read your new post about software professionals and stress in blog union. Well without your permisison, I just posted that link in my blog for people to read. Hope you don't mind.

Thanks.

ambi said...

//enna ellam ponunga perra varudhu?seri seri ellam Mrs kku MR aggira varai thane?//

@nivi, ahaa enna oru nalla ennam! :p

//உனக்குத் தான் எவ்வளவு நல்ல மனசுப்பா
//
@karthi, unakku theriyuthu, ooruku theriyuthaa? :p

@sudarsan, santha miss address ungalukku ethukku? :p

//Adhae Ambi agmark nakkals //
@raji, danQ! danQ!

//எனக்கென்னமோ பையன் பொறந்து டிரும்ப கிள்ள்ளு வாங்குவான் என்ற்று தோணுது//
@dreamz, உனக்குத் தான் எவ்வளவு நல்ல மனசுப்பா :p

//I just posted that link in my blog for people to read. Hope you don't mind.
//
@priya, so kind of U! i've to say thanks to U! :)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信