Wednesday, May 09, 2007

வாளை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்!

தனது எட்டாம் ஆண்டு திருமண நாளை மே 13 அன்று கொண்டாட இருக்கும் 'வடையேழு வள்ளல்' டுபுக்கு அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

இதோ அதோ!னு தீர்ப்பு சொல்ற நாளும் வந்தாச்சு.

சற்று பின்னோக்கி பார்க்கிறேன்!

ஆஹா! கேரள திருச்சூர் விளக்கு டாப் டக்கர்! :)

சே! சற்று காலத்தால் பின்னோக்கி பார்க்கிறேன்.

விளையாட்டு போக்குல பிளாக் ஆரம்பிச்சு, அடிச்சு பிடிச்சு தமிழில் மட்டுமே எழுதி, உங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர்(?) வாங்கி, 68 பதிவு போட்டு, டகால்டி பண்ணி, தங்கமணிய பிக்கப் பண்ணி, 95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.

ஆமா! இது என்னோட 95வது பதிவு.

100 அடிச்சுட்டு கிளம்பலாம்!னு தான் பார்த்தேன். முடியலை. சரி விடுங்க, ஞாயிறுக்கும் திங்களுக்கும்(சாரி 'பில்லு' பரணி) தூரம் இல்லை.

தெரிஞ்சவங்க, பழகியவங்க, கூட வேலை பார்த்தவங்கனு எல்லாருக்கும் பத்திரிகை அனுப்பியாச்சு. நம்ம யூனியன் மக்களை டிடி அக்கா வாயிலாக வரவேற்றாச்சு.

சென்னையில வெய்யில் பட்டய கிளப்பும்!னு குகிலிள் தெரிந்து கொண்ட எங்கள் ஆபிஸ் ரசகுல்லா கூட்டம், "பாப் ரே! அம்பி நீ இங்க வந்தபிறகு உன்னை உங்க வீட்டுக்கே வந்து வாழ்த்தறோம்!னு சொல்லிட்டாங்க.

வேணாம் சாமி! நீங்க வந்துட்டு கும்மி அடிச்சுட்டு போனா தங்கமணி, "ஓதலாவா! நாக்கு எந்தா தைரியமு? சம்பிஸ்தானு! நேனு சந்ரமுகி!" னு அதட்டல் விடுவாங்க! ஆரம்பமே அல்லோலப்படும்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் நல்லா சாப்பிடவும், சைட் அடிக்க மட்டுமே கல்யாணங்களுக்கு போனதால், இப்ப தீடிர்னு என் கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு. கொடி, உனக்கும் அப்படி தான் இருந்ததா? :p

பொதுவா சொந்த பந்தங்களில் கல்யாணம்னு வந்துட்டா, அதுவும் நல்லா சம்மர் லீவுல வந்தா எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

இதையே சாக்கா வெச்சு ரங்கு தலைல மிளகாய் அரைச்சு, பட்டு புடவை வாங்கும் நம்ம டிடி அக்கா மாதிரி தங்கமணிகளாகட்டும்,
"ஆஹா! கல்யாணத்துல ஏதேனும் பிக்கப் ஆகுமா?"னு யோசிக்கும் நம்ம கோப்ஸ் மாதிரி பாசக்கார தம்பிகளாகட்டும்,
"காலை டிபன்லேந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்!"னு சப்பு கொட்டும் ஜி3 அக்காகளாகட்டும்,
எனக்கு ரிவர்ஸிபிள் பட்டு புடவை வாங்கி தந்தா தான் கல்யாணத்துக்கு வருவேன்!னு அடம் பிடிக்கும் கீதா பாட்டிகளாகட்டும்,
இனிமேலாவது அம்பிக்கு நல்ல புத்தி வரனும்!னு நல்லதையே நினைக்கும் TRC சார் மாதிரி இனிமையான அங்கிள்களாகட்டும்,
குழந்தைய (நான் தான்) ஒன்னும் சொல்லாதீங்கோ!னு எனக்கு சப்போர்ட் பண்ணும் TRC சாரின் தங்கமணி உமா மேடங்களாகட்டும்,எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவது திருமணங்கள்.

தங்கள் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி கொள்ள, "நான் யார் தெரியுமா?" மாப்பிள்ளைக்கு ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு!
கல்யாண பெண்ணை ஸ்கூலில் கொண்டு போய் விட்ட பெரியம்மா நான் தான்!னு மார் தட்டி கொள்ள திருமணங்கள் அல்வா மாதிரி.

"எங்க ராஜு கல்யாணத்துல, எங்க குக் வெச்சுருந்த பாசந்தி இருக்கே!"னு நீட்டி முழக்க கல்யாணங்கள் நல்ல சான்ஸ். கொஞ்சம் தள்ளி பார்த்தா, ராஜுவுக்கே தோனி மாதிரி உசரமா ஒரு புள்ளையாண்டன் சைட் அடிச்சுண்டு இருப்பான்.

"இந்த நெக்லஸ் புதுசா இருக்கே! லலிதாவா?"
இல்லை, பிரின்ஸ்!னு பீத்தி கொள்ள இது ஒரு சாக்கு.

இது போதாதுனு யார் முக்கியத்துவம் பெற்றவர்கள்? யாருக்கு மரியாதை?னு ரெஸ்லிங்க் கிரவுண்ட் போல பல பரீட்ச்சை நடக்கும் களமாகவும் திருமணங்கள் அமைவதுண்டு.

மாப்பிள்ளை வீட்டார் ஆளுங்கட்சி போலவும், பொண்ணு வீட்டார் மைனாரிட்டி எதிர்கட்சி போலவும் ஒரு வித பய உணர்வுடன், எச்சரிக்கையுடனே ஒருவரை ஒருவர் அணுகுவர்.

"காப்பி சாப்டேளா அண்ணா? டிபன் சாப்டேளா அண்ணா?"னு விசாரிக்க மட்டும் பெண்ணின் ரெண்டு அத்திம்பேர்கள் ஆன் டூட்டியில் இருப்பார்கள்.

எல்லாம் திருப்தி தானே? ஒன்னும் குறை இல்லையே?னு காவிரி மன்ற நடுவர்கள் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்டு அந்த கொட்டை மரமாகி வளர்ந்த க்ரூப் ஒன்னு வலம் வரும்.
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும். எங்களுக்கு சாம்பாரே வரலைடா!னு இன்னோரு க்ரூப் கோதாவுல குதிக்கும்.

இதையெல்லாம் மீறிக்கூட திருமணங்கள் மகிழ்ச்சியை தருவது தான் ஆச்சர்யம் கலந்த உண்மை! (அட! சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரி இருக்கே!)

இப்ப கொஞ்சம் நிலைமை மாறி இருக்குனு தான் சொல்லனும்.

எது மாறுதோ இல்லையோ எனக்கு ரெண்டே ரெண்டு விஷயத்துல டவுட்டாவே இருக்கு.

1) கன்னா பின்னானு டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?

ஸ்ஸ்ப்பா! அத கட்டிட்டு, "அவுராம இருக்கனுமே முருகா!"னு ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு தவிக்கறது இருக்கே!

2) கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)

உங்கள் நல்லாசியுடன், பேராதரவுடன் இன்னொரு புதிய துவக்கம். குடுத்த வாக்குறுதிகளை(யாருப்பா அது அல்வா!னு படிக்கறது?) காப்பாத்தனும்.

இதோ, இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :)

95 comments:

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் அம்பி ... :)

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் அம்பி :-)

My days(Gops) said...

first ey post a paarthuten......

call panni ungalukku vaazhthugala sollitu, appuram inga vandhu innoru vaazhtha sollikalam nu idho vandhuten ...
(ducalty ducalty)

attendance note pannikonga thala...

My days(Gops) said...

/பின்னோக்கி பார்க்கிறேன்//
adhuku neeeenga punjab'ney solli irukalam.... he he he

oh கேரள திருச்சூர் aaa, naan edhir paarkala.....

//95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.//
yaaarupa anga, moi kodukuravanga oru chair'aium serthu kodungapa....konjam aaavadhu ukkarattum...


//100 அடிச்சுட்டு கிளம்பலாம்!னு தான் பார்த்தேன். முடியலை. சரி விடுங்க,//

sare sare, 95 thaaan unga last post'nu solreeeenga...
( i mean bachelor'a....siringa appuuuuuu . ulkuthu edhuvum illa...)

My days(Gops) said...

//தெரிஞ்சவங்க, பழகியவங்க, கூட வேலை பார்த்தவங்கனு எல்லாருக்கும் பத்திரிகை அனுப்பியாச்சு. நம்ம யூனியன் மக்களை டிடி அக்கா வாயிலாக வரவேற்றாச்சு.
//

gud gud....ellathukum invidation kitti..

My days(Gops) said...

//எங்கள் ஆபிஸ் ரசகுல்லா கூட்டம், "பாப் ரே! அம்பி நீ இங்க வந்தபிறகு உன்னை உங்க வீட்டுக்கே வந்து வாழ்த்தறோம்!னு சொல்லிட்டாங்க.
//

bill'ku annaikaachum edhaiavadhu pick up panna chance kidaikum nu paartha..cha, neenga monday marriage vachi irukeeeenga...

billu un raasi + monday raasi working appuuuuuuuuu....
sollurathuku onnnum illa....

My days(Gops) said...

//ஓதலாவா! நாக்கு எந்தா தைரியமு? சம்பிஸ்தானு! நேனு சந்ரமுகி!" னு அதட்டல் விடுவாங்க! ///

அதட்டல் mattum thaaan விடுவாங்க.ok idha naanga namburom...
(poga poga thaaan booori kattai yempa nyabagam paduthureeeenga....
....)

ஜி said...

வாழ்த்துக்கள் அம்பி... கல்யாணத்துக்கு முன்னாடியே பூரிக்கட்டையால அடி வாங்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். உண்மையா??

My days(Gops) said...

//இதுவரைக்கும் நல்லா சாப்பிடவும், சைட் அடிக்க மட்டுமே கல்யாணங்களுக்கு போனதால், //
ellorumey ipppadi thaaaana?

//கொடி, உனக்கும் அப்படி தான் இருந்ததா? :p//
nalla keteeenga ponga... avanga kaila vikatan book vachikittu relax a irrundhu irupaaanga.....
enna kodi naan solluradhu right a?

My days(Gops) said...

//அதுவும் நல்லா சம்மர் லீவுல வந்தா எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.
//

aaaama thala, ungaluku eppadi nu theriala., engala maadhiri bachelors ku nallavey irrukum :P

My days(Gops) said...

//இதையே சாக்கா வெச்சு ரங்கு தலைல மிளகாய் அரைச்சு, பட்டு புடவை வாங்கும் நம்ம டிடி அக்கா மாதிரி //

yakka, inimel unga rasam thevai illanu, ungala eppadi thaakuraaru paarunga...

My days(Gops) said...

//ஆஹா! கல்யாணத்துல ஏதேனும் பிக்கப் ஆகுமா?"னு யோசிக்கும் நம்ம கோப்ஸ் மாதிரி பாசக்கார தம்பிகளாகட்டும்,//

he he he, thala correct'a sollureeenga... pinna edhuku naaanga (bachelors) kalyaana vootuku poganum?

idhu varaikum , sumaar oru 150 kalyaanatha attend panni irupen... mmmmmm enakku kidaicha bun'u...adhu appadiey irrukatttum...

My days(Gops) said...

13th my spot first pudichikiren,,,,

My days(Gops) said...

//காலை டிபன்லேந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்!"னு சப்பு கொட்டும் ஜி3 அக்காகளாகட்டும்,
//

adhuku modhal la kodukira coffee a vuttuteengaley....

//நல்லதையே நினைக்கும் TRC சார் மாதிரி இனிமையான அங்கிள்களாகட்டும்,//
uncle ungalukku oru salaaaam...

My days(Gops) said...

//,எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவது திருமணங்கள்.//

avangaluku mattum illai,
vaalai maram katturavanga,
mandhiram odhum aiyars,
bandhal poduravanga,
samaiyal seiravanga,
appadi ippadi nu ellathukumey sandhosama thaan irrukum :P

My days(Gops) said...

//தங்கள் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தி கொள்ள, "நான் யார் தெரியுமா?" மாப்பிள்ளைக்கு ஒன்னு விட்ட ஒர்படி பொண்ணு!
கல்யாண பெண்ணை ஸ்கூலில் கொண்டு போய் விட்ட பெரியம்மா நான் தான்!னு மார் தட்டி கொள்ள திருமணங்கள் அல்வா மாதிரி.

"எங்க ராஜு கல்யாணத்துல, எங்க குக் வெச்சுருந்த பாசந்தி இருக்கே!"னு நீட்டி முழக்க கல்யாணங்கள் நல்ல சான்ஸ். கொஞ்சம் தள்ளி பார்த்தா, ராஜுவுக்கே தோனி மாதிரி உசரமா ஒரு புள்ளையாண்டன் சைட் அடிச்சுண்டு இருப்பான்.
///


thala, vutta dialogue a paartha, oorla oru kannaalatha vuttadhu illa pola.....statistics pinni jadai podudhu........

My days(Gops) said...

//காப்பி சாப்டேளா அண்ணா? டிபன் சாப்டேளா அண்ணா?"னு விசாரிக்க மட்டும் பெண்ணின் ரெண்டு அத்திம்பேர்கள் ஆன் டூட்டியில் இருப்பார்கள்.
//

na caaapi saaaapteeengla na,
na tiffen saaapteengala na nu
jolna paiyoda thaaaney?


//காவிரி மன்ற நடுவர்கள் மாதிரி பழம் தின்னு கொட்டை போட்டு அந்த கொட்டை மரமாகி வளர்ந்த க்ரூப் ஒன்னு வலம் வரும்.
சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும். எங்களுக்கு சாம்பாரே வரலைடா!னு இன்னோரு க்ரூப் கோதாவுல குதிக்கும்.
/

ROTFL O ROTFL......
thirunelveli ku alwa default maadhiri, kalyaana veeetu climax la idhu default thala.....

My days(Gops) said...

/இதையெல்லாம் மீறிக்கூட திருமணங்கள் மகிழ்ச்சியை தருவது தான் ஆச்சர்யம் கலந்த உண்மை! //

aaaama cinema'va thavara...


//(அட! சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரி இருக்கே!)
//
sonnadhu neeenga thaaney?

My days(Gops) said...

// எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?//

belt company kum, vesti company kum ula dealings paa adhu....

(vutta, buckle ellam vachi ketpeeenga pola...)


//கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)//
DD akka, thala'a konjam gavanichikunga.......

dubukudisciple said...

enna ambi
ithu ungal nallasiyudan appadinu niruthite... ungal nallasi matrum moiyudannu mudicha thaan adu ambi!!!!

@gops
kavanichikiren...
naane avaroda pangum serthu sapidaren

My days(Gops) said...

//உங்கள் நல்லாசியுடன், பேராதரவுடன் இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :) //

anaaathe, vaazhtha vadhillai, so vanangugiren......
((ai, syam brother indha thaba naan mundhikiteney....)


வாழ்த்துக்கள் அம்பி ... :)
(idhu syam brother saarba)


welcum to our jothi....
(idhu porkodi kural thaaan..)

My days(Gops) said...

rest edukurenu, ipppadi adichi aaditiey nu kovichikaadheeenga thala....

idho kelambiten...

enakku thoookam thookama varudhu,
marundhu saaapta effect.....
(*cough cough, hutch, paartheengala , vudura satham ketkudha? enna nambunga...)

varatta thala....

mgnithi said...

Hey... congrats Ambi..

ஸ்ரீமதன் said...

வாழ்த்துக்கள் அம்பி. :-):-)

Gopalan Ramasubbu said...

அம்பி குருவே,

மணவறையில் இருக்கும் போது மந்திரத்தைச் சொல்லாமல் மங்கைகளை நோட்டமிட்டுக் கொண்டிருக்காதீர்கள், வழக்கம்போல. ;)..வாழ்த்துக்கள் குரு...:)

Bharath said...

Congrats and All the very best.. somehow sambandhame illama i'm hearing the song

Aadiya aattam enna...
Pesiya vaarthai enna..

Sumathi. said...

ஹாய் அம்பி,

அதுக்கு தான் கேரளாகிட்ட ரொம்ம்ம்ப ஓட்டக் கூடாதுன்னு, ஏன்னா
//கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு.//

இது மாதிரி மந்திரம்...மாயம் னு சொல்லி மயக்கிடுவாங்க..ஹி ஹி ஹி ஹி ஹி ...

Geetha Sambasivam said...

appadi, ambiye aasikal pothum moyellam onnum vendamnu solliachu, nimmathi, without KESARI kalyanam seythukka pora ambikku vazhthukkal. No KESARI for ambi. DD watch it.

Sumathi. said...

ஹாய் அம்பி,

//கல்யாணத்தன்னிக்கு காலையில் எனக்கு எக்ஸ்ட்ரா கேசரி கிடைக்குமா? கிடைக்காதா? :)//

ம்ம்ம்ம்ம்... உங்களுக்கு பச்சத் தண்ணி கூட கிடையாது. இந்த அழகுல எக்ஸ்ட்ரா கேசரி கேக்குதா?

Sumathi. said...

ஹாய்,

கல்யாணத்துக்கு போயி சும்மா ஜாலியா தங்ஸ்க்கு தெரியாம அப்பப்போ முடிஞ்ச அளவுக்கு சைட் அடிச்சுட்டு,
கேட்டா யாரல்லாம் வந்துருக்காங்கனு ஒரு லுக்கு வுடறதா பீலாவுட்டுகிட்டு, ஜாலியா எப்பவும் போல சைட்டும் அடிசுட்டு, நல்லா மூக்கப் பிடிக்க சாப்டுட்டு,(தனியா எடுத்து வைக்க சொல்லி) நல்லா என்சாய் பண்ணிட்டு வாங்க.. என்ன சரியா ...

MyFriend said...

அண்ணாவுக்கு 31 மொய் வச்சிக்கிறேன். :-)

MyFriend said...

ஆஹா.. கல்யாண கலை கட்டிடுச்சு போல..

கானா உலகநாதனை இறக்கிவிடுவோமா? ;-)

MyFriend said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். :-)

CVR said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே!!! ;-)

தாங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ,எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! :-)

Anonymous said...

டேய் டேய்...

ரொம்ப மிஸ் பண்றேன்டா...வந்து ஒரு கலாசு கலாசலாம்ன்னு மனக் கோட்டை கட்டிகிட்டு இருந்தேன்...ஹூம்....

மிஸ்.சிக்கு உனக்கும் எங்கள் மன்மார்ந்த வாழ்த்துக்கள்!!!!! போட்டோஸ் அனுப்புடா...

Syam said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)

Syam said...

//சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கே!னு ஒரு க்ரூப் வலையை விரிக்கும்//

சாப்பாடுல கல்லுனு ஒரு செங்கல்ல வெச்சுட்டு ஒரு கோஷ்டி ரெடியா இருக்கும் :-)

ACE !! said...

வாழ்த்துக்கள் அம்பி... :)

ACE !! said...

கல்யாணம் ஆகும் போது கூட அடங்க மாட்டீங்களா??? :D :D

ACE !! said...

//குடுத்த வாக்குறுதிகளை(யாருப்பா அது அல்வா!னு படிக்கறது?) காப்பாத்தனும்.
//

இல்லேனா, பூரிக்கட்டை, புல்டோசர் எல்லாம் உபயோகப்படும்.. :) :)...

ACE !! said...

உங்க இல்லறம் நல்லறமாய் சிறக்க வாழ்த்துக்கள் :) :)

SathyaPriyan said...

உங்க இல்லறம் நல்லறமாய் சிறக்க வாழ்த்துக்கள் :) :)

Repeate

Arunkumar said...

வாழ்த்துகள் thala :-)

Arunkumar said...

//
உங்க இல்லறம் நல்லறமாய் சிறக்க வாழ்த்துக்கள் :) :)

Repeate

//

REPEATU

SKM said...

rotfl!
//1) கன்னா பின்னானு டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?//

belt nu onnu adhukkudhaan irukku. Illaiyana ponnuga madhiri Odiyanam panni pottukonga.Panchakacham pottu kondal onnum prachanai varadhu.

SKM said...

vazhthukkal sir.

Arunkumar said...

ivalo kalyaana velai irundhum unga blog ezhudura kadamai unarchiya nenacha.. enakku alugaachiya vardhu...

Arunkumar said...

aprom plasma tv anuppiten. neenga veetla illenu DD akka veetla erakkitadha Fedex kaaranuga solraanuvo.. paathu vaangikkonga...

Arunkumar said...

"Padhinaarum petru peruvaazhvu vaazhga"nu vaaztha vayadhillai

Arunkumar said...

vanangikkuren.. apdiye 50 potukuren.

ulagam sutrum valibi said...

இருவரும் இனிதாய் இணைந்து
பதினாறு செல்வங்களையும் வளமோடுப்
பெற்று வாழ்க வாழ்கவென வாழ்துகிறேன்!!!!

Adiya said...

Mr. & Mrs.அம்பி கல்யாண வைபோகமை ....

wish you very happy, cherubic, awesome, thunderfull marraige life ahead.

-a

Anonymous said...

Anna,
Don't worry from 14th onwards ella figures(rasagullannum vasikkalam) nan pathukkaren, manni romba request panni kettathunalathaan he..hee

THAMBI

Anonymous said...

Dear ambi,
Best Wishes to YOU and Ms.C !!!!

Neenga dhan sollitaelae - Chennai veiyil nu.ADhanalae, Unga rendu periayum,
Unathutuku vandhu (Bangaloreku than)

(ORu periya Moiyoda dhan.Kozhandhai dhan asai pattuduthae.SEiyama iruka mudiyuma?)

Ungalai wish panna varen.Unga address venumae enaku? Give me your Bangalore address ambi.

Once again My Heartiest Wishes to YOu and Ms.C.... (Ms.C perai inivitation pathu dhan therinjuka poren.)

With Love,
Usha Sankar.

Anonymous said...

ahaa... ipo oru padhiva kalakkunga :-) vaazhkaiyin inoru adhyayathula adiyeduthu vaika (che che adi ellam kidaikkadhu dont worry) poringa, vaazhthukkal! :-)

enakkum bayamm udharal ellam irundhudhu, enna panradhu... ana en bayathai naan realise panradhukku munnadiye kalyanam mudinju poche!! :-) adhuku than satuputunu kalyanam nadakkanum ;-)

-porkodi

Anonymous said...

@gops:
avaru aikiyam aagiduvaru, neenga epo adhai sollunga :-)

naan relaxeda irundhena? unglukku oru matter theriyuma, pugundha idathila vikadan padikka permission illai! aapu adichutanga, ippo thrupthiya ;-)

-porkodi

Anonymous said...

Congratulations Ambi & Ms.C!! :-)

-porkodi

Sudharshan said...

Congrats ambi....

G3 said...

//பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-) //

Repeatu :-))

G3 said...

rounda 60 pottukaren.. :-))

Anonymous said...

Heartiest Congratulations and best wishes Ambi & Ms.C!! :-)

Nila

Padma said...

all the best and happy married life ambi anna and manni:)

Anonymous said...

Heartiest Congratulations and best wishes.

Aani Pidunganum said...

Hi ambi,

Surakottai Govindasamy Moyi Aayiram ruubaaaai.....
Hearty wishes for your married life.

Dreamzz said...

//இதோ, இன்னொரு புதிய துவக்கத்தை நோக்கி உங்கள் அம்பி பயணப்படுகிறான், உங்கள் நல்லாசியுடன்! :) //

புதிய துவக்கம் நல்ல படியா அமைய எனது வாழ்த்துக்கள்!!!!!

Dreamzz said...

/விளையாட்டு போக்குல பிளாக் ஆரம்பிச்சு, அடிச்சு பிடிச்சு தமிழில் மட்டுமே எழுதி, உங்க கிட்ட எல்லாம் நல்ல பெயர்(?) வாங்கி, 68 பதிவு போட்டு, டகால்டி பண்ணி, தங்கமணிய பிக்கப் பண்ணி, 95 வது போஸ்டுல கல்யாணத்துல வந்து நிக்குது.

//

கலக்கல்!

Dreamzz said...

//இப்ப தீடிர்னு என் கல்யாணத்துக்கு நான் போய் என்ன பண்ண போறேனோ?னு கொஞ்சம் உதறலா தான் இருக்கு//

கவலை படாதீங்க!

Dreamzz said...

once again, my hearty advance wishes!

kuttichuvaru said...

Best Wishes Ambi n Ms.C!! Happy Married life!!

மு.கார்த்திகேயன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்பி, உனக்கும் உன் தங்கமணிக்கும்..

மு.கார்த்திகேயன் said...

ஆபீசுல இந்த பக்கம் திரும்ப விட மாட்டேங்கிறாங்க..அவ்வளவு வேலை.. அது தான் பந்திக்கு வரவேண்டியவன் இவ்வளவு லேட்டா..

ஒன்ஸ்மோர், இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அம்பி!

Padmapriya said...

Wish you a very happy married life !!

வெட்டிப்பயல் said...

வாழ்த்துக்கள் அம்பி...

Priya said...

Congrats to you and best wishes:))

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

Anonymous said...

வாழ்த்துகள் அம்பி & மிஸ். சி....

Harish said...

"எலாஸ்டிக் வெச்சு ஏன் வேஷ்டிகள் கண்டுபிடிக்கபடவில்லை?"
Romba naal doubt. Naan shorts potundu daan kalyaanam pannika poren :-)

Vaazhtukal thalaivare....

ambi said...

@all, வாழ்த்து தெரிவித்த அத்தனை பேருக்கும் மிக்க நன்றி! :)

Anonymous said...

வாழ்த்துக்கள் Ambi and Ms.C ....

பெங்களூர் வந்து சேர்ந்தவுடன் தெரிவிக்கவும்.

மதுரையம்பதி.

My days(Gops) said...

@kodi:- // neenga epo adhai sollunga :-)//

adhuku innum pala varusam irukunga...dun worry kandipaa solluren..

// pugundha idathila vikadan padikka permission illai! aapu adichutanga, ippo thrupthiya ;-)//
adra adra., book a padikka thaaan thadai nu neeenga internet la padikireeeengaley...
ippo enna sollureeenga,..

Unknown said...

Hi Ambi,
One of the regular readers of ur page..All the very best..Prosperous and joyous years ahead..
வாழ்த்துகள் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சீதா(லக்ஷ்மி) கல்யாண வைபோகமே
(ரெங்க) ராம கல்யாண வைபோகமே
கொத்தோடு வாழைமரம் லக்ஷிமிஹாலில் கொண்டுவந்து கட்டி
வரிசையாய் இலைபோட்டு கேசரியும் அல்வாவும் கொண்டு வந்து கொட்டி
தம்பியுடன் அம்பியும் அழகாக வந்து
பெரியம்மா சொல்படி பிரியாவும் வந்து
மகிழ்வுடன் மணமேடை அமர்ந்து மாங்கல்யம் அணிந்து மங்களம் பொங்க தி ரா சவும் ஓரமாய் நின்று வாழ்த்தப்போகும் நாள் நல்ல நாள் மே 14 ஆம் நாள்

Priya said...

ஆஹா, கல்யாண நேரத்துல கூட இவ்ளோ நிறைய போஸ்ட்டா? எனக்கு இப்பவே நேரம் கிடைக்க மாட்டேங்குது :)

Priya said...

இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்பி & Ms.C ..

Anonymous said...

Ambi,wishing you and MS.C a wonderful married life.ungal thirumana vazhkkai isaiyum layamum pol inidhaga amaya ellam valla iraivanai vendukiren.
nivi.

Anonymous said...

congratulations to both of you once again.ella vallamum perru needoozhi pala kalam vazha vazhthukkal.
nivi.

Anonymous said...

Congrats ambi and Ms.C,





















Congrats ambi and Ms.C, wishing u a very happy and funfilled married life.
enjoy.
-Kittu mama,mami




o

Raji said...

Congrats Ambi :)

Ponnarasi Kothandaraman said...

Mr & Mrs Ambi kku Vaazhthugal! :)

Ponnarasi Kothandaraman said...

Aaalaye kaanum :> Vaanga vaanga methuva vanga :)

Avial said...

Congrats Ambi..All the best

My days(Gops) said...

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

Marutham said...

:D Ayyyyyyyyyyyooooooooooo
ME the verrrrrrrrrrrrrrrry LATE"U!!

Mudhalil..
VAZHTHUKKAL..
to the 2 wonderful people! :)
Unga 2 perukkum en manaarndha vaazhthukkal :)

And to her especially.... JDART MUJIC!
" Marumagaley marumagaley vaa(nga)..vaa(nga)..."

Super :) - Wish you both a great lifetime together.

PS: Ungaludaya comment motivated me to put a post after probably a month :D -- Post potuten with a remix.. COLLEGE CRISPS!

PPattian said...

Beautiful... Good humor AND Idukkan Varungaal Naguga!

anybody said...

Wow, really interesting, funny, well-written blog. Some parts made me nostalgic and even home-sick. Ambi! you are a great writer - you made my day!! Keep up the good work

PS: how do you guys type in Tamil??