Monday, June 04, 2007

வந்தேன்! வந்தேன்!

வீட்டை கட்டி பார்! கல்யாணம் பண்ணி பார்!னு சொன்னவங்க வாயில நெய்யோட முந்திரிபருப்பு போட்டு இளம் சூடான கேசரிய தான் போடனும்.

பெங்களுர்-மதுரை-சென்னை-திருநெல்வேலி-கேரளா - மறுபடி தமிழ் நாடு - பெங்களுர்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!

16 நாளில் 3500 கி.மீட்டர்கள் 3 மாநிலங்கள். லட்சகணக்கான நமது கட்சி தொண்டர்களின் ஆரவார வரவேற்பு.(ஒரு விளம்பரம்தேங்க்!)

இதோ உங்கள் அம்பி வந்து விட்டான். ஒரு 16 நாள் பிளாக் படிக்காதது, சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.
ஒரு வழியா இன்னிக்கு நானும் தங்கமணியும் ஆபிஸுக்கு கிளம்பியாச்சு. அம்மணி ஆபிஸ் பஸ் தான் முதலில் வரும். காலைல அரக்க பரக்க 5.30 க்கு எழுந்து, தங்கமணிய ரெடி பண்ணி, எந்த எடத்துல பஸ் வரும்?னு விசாரிச்சு, ஸ்டாபுல கொண்டு போய் விட்டு, பஸ் வர வரைக்கும் ரோட்டுல பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற) வீடு வந்து சேர்ந்தா காலை மணி எட்டு.


சரி, நாமளும் ஒரு வழியா ஆபிஸுக்கு கிளம்பற நேரத்துல டிவில நச்சுனு ஒரு பாட்டு!


"போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகமால் இருப்பாய்!

சரியென்று சரியென்று உனை போக சொல்லி கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்!"

உடனே நாமளும் ஒரு ரொமாண்டிக் மூடுல, வீட்டுல சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம்னு டிரை பண்ணினா,"டாய் அம்பி! ஒழுங்க மரியாதையா இன்னிக்கு ஆபிஸ் வந்து சேரு! ஆணி இல்ல, கடப்பாரையே சேர்ந்து போச்சு!" வேற என்ன, டேமேஜர் கிட்ட இருந்து போன்.

சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே!

என்ன கொடுமை இது சிங்கம்லே ACE? (வேற பெயர் இன்னும் மாத்தலையா?)
எழுத நிறைய விஷயங்கள் இருக்கு, என் கல்யாண கலாட்டாக்கள், கேரள டிரிப்னு ஒவ்வோன்னா வரும். (பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?).

எனக்கு நேரிலும், கைபேசியிலும், இமெயிலிலும், பதிவுகள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த, ஹிஹி, மொய் எழுதிய, இன்னும் Belated மொய் எழுத துடிக்கும்,(விட மாட்டோம் இல்ல) அனைத்து அன்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி ஹை!

இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :)

59 comments:

Sudharshan said...

Hi Ambi...
Welcome Back...

kuttichuvaru said...

welcome back Ambi!! Vaazhthukkal!! Best Wishes for evrything to come!!

சிங்கம்லே ACE !! said...

வருக.. வருக.. மீண்டு(ம்) வருக!!!

கல்யாணம் ஆகியும் திருந்த மாட்டீங்களா..கொடுமை கொடுமை.. இதுக்கெல்லாம் பதில் சொல்ற பொறுப்பை கொடி எடுத்துகிட்டாங்க.. அவங்க கிட்ட கேளுங்க..

ஆபிஸ்ல ரசகுல்லாக்களின் வரவேற்பு எப்படி இருந்ததுன்னு ஒரு பதிவு போடுங்க.. :D :D

வேதா said...

வெற்றிகரமாய் திரும்ப வந்திருக்கும் புது மாப்பிள்ளையை வருக வருக என வரவேற்கிறோம் :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற)

ஹுஹூம் இந்த ஜன்மத்திலே திருந்தும் எண்ணமே கிடையாது!
பாவம் Mrs C ஆண்டவந்தான் காப்பாதனும்

Arunkumar said...

annathe, welcome back :)

Arunkumar said...

//
வெற்றிகரமாய் திரும்ப வந்திருக்கும் புது மாப்பிள்ளையை வருக வருக என வரவேற்கிறோம் :)
//

repeatu :)

Arunkumar said...

//
சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு
//
LOL :)
//
Belated மொய் எழுத துடிக்கும்,(விட மாட்டோம் இல்ல)
//
ROTFL :)

kusumbu apdiye irukku innum :)

Anonymous said...

பஸ் வர வரைக்கும் ரோட்டுல பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற)

Ambi,
Naan nechaen - marriage ana appra mariduvel nu..... He he he.

Ambiyavadhu, Maaruadhavadhu.....

Ippadi akramam pannina

Unga Mc nallavanga , vallavanga, naalum theirnjuavanga -

- Mc ku ice vecha dhanae ambi blog ku vara mudiyum......

Present panna kaathundu iruken ambi.

10 days la 5 trip Bangalore poi vnadhen.

Present panna eppo neram varadhu nu parpom... He he he he..

With Love,
Usha Sankar.

Anonymous said...

kalambra vandhu parthapo podalai! ipo usha solli paakren!! hmmmmmmmm....

//டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே! // adhukullaya!!!!!! ;-)

-porkodi

Anonymous said...

//கல்யாணம் ஆகியும் திருந்த மாட்டீங்களா..கொடுமை கொடுமை.. இதுக்கெல்லாம் பதில் சொல்ற பொறுப்பை கொடி எடுத்துகிட்டாங்க.. அவங்க கிட்ட கேளுங்க..//

ace, neenga evlo kadharinalum maaradhu! enna koduma singamle ace idhu ;-)

-porkodi

Anonymous said...

seri seri kannai thodachindu kadapparaiya pidungra vazhiya parunga! ;-)

-porkodi

Padmapriya said...

Hi Ambi Na,
Welcome back :)
wish you a very happy married life..

Upload the photos soon and send us the link.

Padmapriya said...
This comment has been removed by the author.
Padmapriya said...

Bangalore la enga epo get together?

gils said...

vaaya vambi :)

mgnithi said...

Welcome back Ambi...

//சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே//

Ithu typova illa deliberata type pannatha?

golmaalgopal said...

oui thala....welcome bak... :)

Inimel konjam jaakardhaiya ezhudhanam...appram poori kattai dhaan.. :))

Appidiye poruppa matthavangalukku ideas tharavum ;)

KK said...

Ai!!! Uncle vanthutaar!!!! Vanga uncle vaanga uncle...
//பராக்கு பாத்து(ஜொள்ளூ விட்டு!னு//
//அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?//
//சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.//

Innum veetla poori, chappathilakm suda arambikkalanu ninaikuren.... Uncle Seekiram adi vaanga praapirasthu :)

KK said...

//பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?)//

Athan 68 post pottu kalyaname aagiduche appuram yethukku count yethurathu??? Mrs.C Point to note :D

KK said...

//Inimel konjam jaakardhaiya ezhudhanam...appram poori kattai dhaan.. :))//

ada namma kokarako gumaango Gopal...err golmaalGopal kooda athe than solli irukaar :)

Harish said...

Vanakkam Boss....pattaya kelapunga :-)

Anonymous said...

adra adra adra!! :) Welcome back.
-viji

G3 said...

Welcome back!!! :-)))

G3 said...

25th commentu :-)) Inimae poi posta padikkaren :-)

G3 said...

//Ai!!! Uncle vanthutaar!!!! Vanga uncle vaanga uncle...//

Adada.. KK enakku thaatha.. avarukku neenga uncle-a?? ambi, ambutu vayasaanavara neenga?? ;)))

Anonymous said...

welcome back.enna idhu maarave illa neenga?kalyanam aagiyum poori katta bayam konjam kooda illa?
nivi.

Anonymous said...

congratulations and celebrations and best wishes once again.veetila seekiram chapathi boori suda vazhtukkal!!!!!!!!!
nivi.

மு.கார்த்திகேயன் said...

வாங்க மாப்பிள்ளை..
அப்படியே புது உலகத்துல குதிச்ச மாதிரி இருக்குமே..
நல்லா பாத்துக்கப்பா தங்கச்சியை..
அம்பி, நீ பட்டயை கிளப்புப்பா

மு.கார்த்திகேயன் said...

ஆமா, அந்த பஞ்சாபி குதிரை எப்படி இருக்கு?
ஓரக்கண்ணாலை இன்னும் பாக்குறேல

Anonymous said...

//ஆமா, அந்த பஞ்சாபி குதிரை எப்படி இருக்கு?
ஓரக்கண்ணாலை இன்னும் பாக்குறேல // - ambiyanne amam nu mattum solliputinga... enna agum nan solla thevai illa! saakradhai! :-)

-porkodi

hotcat said...

Belated Wedding wishes....welcome ambi.

shankar

smiley said...

“You don't marry someone you can live with, you marry the person who you cannot live without.”

Wish you both a happy married life :) :) :)

Kittu said...

Welcome back ! marriage snaps podunga.
ஒரு வழியா அம்மணிய ஏத்தி விட்டு டாட்டா-பிர்லா எல்லாம் காட்டி (அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற) வீடு வந்து சேர்ந்தா காலை மணி எட்டு.
semma porups pa. Ms.C ya impress panna ennalaam panitrukeenga. kalakkunga.

சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே//
Ms.C kku hintaa idhu ? :)
-k MAMI

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சே! டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த டேமேஜர்களுக்கு பிடிக்கவே பிடிக்காதே! //

ஆஹா.. அண்ணா.. அதுக்குள்ள குட் நியூஸ் கொடுத்துட்டீங்களே! வாழ்த்துக்கள் :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//(பின்ன எப்படி பதிவு எண்ணிக்கைய கூட்டறதாம்?).//

68 போட்டதுக்கே அண்ணி அமைஞ்சாச்சு.. இப்போ பதிவெண்ணிக்கையை கூட்டி இன்னொரு அண்ணியை கூட்டிட்டு வந்துடாதீங்க.. ஹீஹீ..

கீதா சாம்பசிவம் said...

திருந்தவே திருந்தாதவங்களை வச்சிட்டு என்னதான் செய்யப் போறாங்களோ? பாவம் உங்க மனைவி! சில பேர் என்னிக்கும் திருந்த மாட்டாங்க! :P

கீதா சாம்பசிவம் said...

அது சரி, பிள்ளை, குட்டி எல்லாம் அதுக்குள்ளேயே வந்தாச்சா? ஏற்கெனவே இருக்கா? வேறே வழியிலே! ஜாக்கிரதை அம்மணி! ஜாக்கிரதை! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

ambiyanne amam nu mattum solliputinga... enna agum nan solla thevai illa! saakradhai! :-)

sari sari ambi ennanatukkumnu porkoti rangamani kittee keettuko

Bharani said...

Happy Married Life Annathe :)

BLOGESWARI said...

Wish you a very happy Married life, ammanchi!

Congratulations

Padma said...

anna jagarthai.. overa unmaiya sonna manni kitte erundu puri kattaila nalla kidakkum :)..

manipayal said...

வணக்கம் அம்பி, நான் வலைக்கு வந்துருக்கிற புது சிங்கம் இல்லை சுண்டெலி சரி எதோ ஒண்ணு
30 நாள் 60 நாள் என்று எந்த கணக்கிலும் அடங்காமல் வாழ் நாள் முழுவதும் அம்மணியுடன் மோகம் கொண்டு - நாங்கலெல்லாம் 20 வருஷமா இருக்கோம்பா - வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

BLOGESWARI said...

thanks ammanchi.. am touched :) kooptirunda kandipa vandiruppean.. :) *ananda kanneer*

what's your email id? check blog

ஜி said...

வாங்க அம்பி.... வாழ்த்துக்கள்...

அப்படியே முதல் பூரிக்கட்டை அனுபவம், அதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஒரு பதிவ போட்டுட்டீங்கன்னா, பின்னால வரக்கூடிய என்னைய மாதிரி சந்ததியினருக்கு அது பயன்படும் :))

Dreamzz said...

வந்துடீங்களா! நானும் வந்துட்டேன்! சூப்பர்! சூப்பர்! வாழ்த்துக்கள்!

Raji said...

Ambi Welcome Back........
Vaanga vaanga :)

Raji said...

48
Apuram Blore gettogether eppo?

Raji said...

49..

Raji said...

Kalayanam aaghiyum unga rowse koorayavae illaingoo :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மீண்டும் நல்வாழ்த்துக்கள் அம்பி!

//இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :)//

சரி, அப்படின்னா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க! அவுங்கள டைப் பண்ணச் சொல்லுங்க! அப்பத் தான் உண்மை எல்லாம் வெளில வரும்! அது கீதா மேடத்துக்கும் திராச-வுக்கும் உதவிகரமா இருக்கும்! :-)

//உடனே நாமளும் ஒரு ரொமாண்டிக் மூடுல, வீட்டுல சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம்னு//

ஆங்...அப்பிடி...அப்பிடி...அப்பிடியே மெயின்டைன் பண்ணிக்குங்க அம்பி! இந்த டான்ஸ்-க்குத் தான் ஆனந்த தாண்டவம்-னு பேரு! நல்லாவே டான்ஸ் ஆடறீங்க...:-)
நம்ம ஜீ கேட்ட கோனார் நோட்ஸ் சீக்கிரம் ரெடி பண்ணுங்க!

My days(Gops) said...

thalaaaaaaaaaaaaa
vandhuteeengala.. welcum back...

vaazhai thaaru, arisi mootai, thagara din ellam eduthukittu vandhuteeengala?

gud gud..

My days(Gops) said...

//சொன்னவங்க வாயில நெய்யோட முந்திரிபருப்பு போட்டு இளம் சூடான கேசரிய தான் போடனும்.///

adada, enga ponaalum indha kesari a vida maateeeegala? btw, alva va sollaama vuteeengaley... adhu varaikum ok ...

My days(Gops) said...

//பெங்களுர்-மதுரை-சென்னை-திருநெல்வேலி-கேரளா - மறுபடி தமிழ் நாடு - பெங்களுர்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா!//

kumba kumba kumbakonam nu prabhudeva sollura maadhiriey irundhuchi...

/16 நாளில் 3500 கி.மீட்டர்கள் 3 மாநிலங்கள். லட்சகணக்கான நமது கட்சி தொண்டர்களின் ஆரவார வரவேற்பு.(ஒரு விளம்பரம்தேங்க்!)//
adra adra, chakra gold tea kudicheeengala illlai ah?

My days(Gops) said...

// சைடு டிஷ் இல்லாம பகார்டி அடித்த ஷ்யாம் ரேஞ்குக்கு நம்ம நிலமை ஆகி போச்சு.//

avaru ippo india la bacardi ilaama Old cask ku maaritaaram.. weather report la solluraaanga...

//(ஜொள்ளூ விட்டு!னு உண்மைய எழுதுங்கோ!னு அம்மணி மிரட்டல் வேற), //
sollurathuku onnnum illai.....
we ar the peoples maadhiri, naaaama ellam ennaiku nalla pullai ah paraaku paarpomo? :P

My days(Gops) said...

//(அவங்க பக்கத்து சீட்டு பிகருக்கும் சேர்த்து காட்றேனோ?னு மேடத்துக்கு சந்தேகம் வேற)//

he he he.... ippo tata ellam voootulaiey kaatidunga nu sollluraanga polaa. :P

//டீம்ல ஒருத்தன் புள்ள குட்டியோட சந்தோஷமா இருக்கறது இந்த //
adhukullaiaaaaaah??????????????appadinu naan mathavanga maadhiri ketka maaaten thala... :P

My days(Gops) said...

//இதுக்கு மேல டைப் பண்ண முடியல, ஆனந்த கண்ணீர்ல கீ-போர்ட் நனைஞ்சு போச்சு). :) //

inga paaruda, damager kadapaarai ah kaatitaaaro?

Balaji S Rajan said...

Solavey illaiyey...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信