Wednesday, June 27, 2007

எட்டுக்குள்ள (பிளாக்) உலகம் இருக்கு ராமையா!

எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு போப்பா அம்பி!னு பாசமா வல்லியம்மா கூப்பிட்டு இருக்காங்க. பில்லு பரணி கூப்பிட்டு இருக்காரு! மாமியார் வீடு வேற சென்னைல இருக்கு, பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே? :)

கல்யாணம் நல்ல படியா நடந்ததா?னு அமெரிக்கவிலிருந்து போன் போட்டு வல்லியம்மா அன்பா விசாரிச்சாங்க. கீதா பாட்டிக்கு பேரன் வயசாகிற இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(பீத்தறத்துக்கு?னு யாரோ வாசிக்கறாங்களே!)

(கீதா பாட்டி! நோட் தி பாயிண்ட்). :p


ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).

1) எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?
முடியாதே! சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே! எனவே செல்லாது! செல்லாது!

2) அட! எட்டாம் வகுப்பில் சுற்றுபுற சூழல் சம்பந்தமா கட்டுரை எழுதற போட்டிக்கு நாம வழக்கம் போல எகப்பட்ட டகால்டி பண்ணி ஒரு ஆராய்ச்சி கட்டுரை ரேஞ்சுக்கு ரெடி பண்ணி கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்துக்கு அனுப்பி, அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?

நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.

3) தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு போயி தலைய பிடிச்சு தூக்கி கரை சேர்ந்தோமே, அது?
ஹிஹி காப்பாத்த போன நானும் கொஞ்ச நேரம் தண்ணி குடிச்சு தத்தளிச்சு, தட்டு தடுமாறி தானே கரை சேர்ந்தோம், இதுவும் செல்லாது.

4) ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!

5) ஒரு கல்லூரியில் மாதம் இரண்டு கிலோ லயன் டேட்ஸுக்கு (அதான் பேரீச்சம்பழங்க) வேலை பார்த்த காலத்தில், சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது?

ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்? அது எப்படி சாதனையாகும்?
ஆமா! என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!

6) எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?

7) என்னை மாதிரி பசங்க எழுதற பதிவுகளுக்கு அனானி கமண்ட் விழறதே பெரிசா இருக்கற இந்த காலத்தில் நான் படைத்த இலக்கியங்களை, ஹிஹி பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?

8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?

அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.
( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)

ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!

பி.கு: ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!

87 comments:

Anonymous said...

me first

Anonymous said...

good one ammanchi

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

6

Anonymous said...

7

Anonymous said...

8

Anonymous said...

9

Anonymous said...

10

Blogeswari said...

loved it.. N T Ramarao solliyirukkare.. rofl rofl !

A lot of people in Golt land still kumbuttufy NTR as krishnar, raamar, arjunar, kamsar etc etc . Dunno which film but one of those mythological golt padams has NTR as ramar, ravanar, bharathan, anumaar, seethai..sorry shatrughnar etc.. ETV (FTV illa ) surf pannu teriyum

சுந்தர் / Sundar said...

எட்டு இப்படி கூட போடலாமா ...

அருமை . வாழ்த்துக்கள்.

Bharani said...

//எட்டி எட்டி பாக்கறியே என் கடைய,ஒரு எட்டு இங்க வந்து எட்டு விளையாடிட்டு//....ethana ettu...

Bharani said...

//பரணி தயவிருந்தா அடிக்கடி சென்னைக்கு போய் வரலாம். என்ன பில்லு, சரி தானே//....avvvvv.....mudiyaleengna....

Bharani said...

//கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா//......idhu dhaan saadhanaya...

Bharani said...

//பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் //....appave aarambichiteengala ;)

Bharani said...

/அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே//.....wow....sapaadu eppadi irundhunchi :)

Bharani said...

//தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு //....avvvvv.....ore feelingsba...

Bharani said...

//சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே //..super....idhu top saadhanai...

Bharani said...

//என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! //....idhu adhai vida periya saadhanaya iruku...

Bharani said...

//ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா//....appadi edachum irundha ippave escapu....

Bharani said...

ambi neengale first 10 comment potukiteengala enna ;)

Bharani said...

oru vaarthai solliya naan potupenla....

Bharani said...

sari vidunga naan oru quarter adichitu poren ;)

Bharani said...

25....nicely written :)

மு.கார்த்திகேயன் said...

//ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?
//

அங்கேயும் பஞ்சாப் தானா.. ஏதோ விட்ட குறை தொட்ட குறை பூர்வஜென்ம பந்தம் இருக்கே.. நோட் திஸ் பாயிண்ட் திருமதி.அம்பி

மு.கார்த்திகேயன் said...

//ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே//
ரஞ்சனி..ம்ம்.. இன்னும் பேரை ஞபகம் வச்சிருக்கதை பாத்தா சரியில்லையே அம்பி..


வழக்கம் போல ரவுசான பதிவு அம்பி

mgnithi said...

ROTFL post ambi...

Nenegale first 5 points sellathunu solliteenga.. so intha tag repeat pannuvengala?

Ambiya tag pannavanga avarai repeat panna sollunga...

mgnithi said...

//பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?
//

Theliva thaane itha solreenga :-)

mgnithi said...

//பதிவுகளை தமிழை மூன்றாம் மொழியாக ஸ்கூலில் எடுத்த என் தங்கமணி பார்த்து பரவசமாகி, என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?
//

Ithu saathanai thaanga...

mgnithi said...

//முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?
//

potaaruya bittu....

mgnithi said...

//ஆமா! யாரு அந்த ராமையா?னு யாரும் கேட்கபடாது.
காலம் நம் தோழன் முஸ்தபா!ல முஸ்தபா யாரு?னு நாம கேட்டோமா? இல்லையே! அத மாதிரி தான்!
//

ithai padicha vudane enakku unga
"kaatukuyil karugumani maalai" topic gnyabagam vanthuduchu..

CVR said...

/8) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரே பீலிங்ஸா பூடிச்சு பா!!

BTW,உங்க லிஸ்ட்டுல நான் இருக்கேனா இல்லையா?? அதை தெரியாம நான் பாட்டுக்கு சவுண்ட் விட்டுக்கிட்டு இருக்கேன்!! :-)))

// இந்த குழந்தை அப்படி என்ன சாதனை பண்ணி இருக்கு இங்க 8 தடவை சொல்றத்துக்கு?(//
8 போடறதுக்கு சாதனை பண்ணனும்னு ஒன்னும் அவசியமில்லை!! (ஒன்னுமே இல்லாத சீ.வீ.ஆர் கூட எட்டு போட்டிருக்கான்னா பாத்துக்கோங்கலேன்!! )

என்ன கலாசரதுக்கு எட்டு ஐடியாக்கள் என்று கூட நீங்க பதிவு போடலாம்!!நாங்க அதையும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம்!! :-))


வழக்கம் போல கலகலப்பான பதிவு அம்பி!!
இது பெருமை இல்லையே ,அது பெருமை இல்லையேன்னு சொல்லி சொல்லியே உங்க அறுமை பெருமை களை எல்லாம் நல்லா சொல்லிட்டீங்க!!
வாழ்த்துக்கள்!! :-D

Arunkumar said...

//
முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?
//

ellathukkum vaarthai irukku tamilla.. enakku venungambodhu onnu kooda thonaliye..
aan
feelings.. feelings of ohio state-aa pochu thala :)

Arunkumar said...

//
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
அடடா! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் பெங்களூரா இருக்கு.

//

enna thala engala vittuteenga...
"thala,guru"-nu peru vachi koopidra enna/kk maathiri aalungala neenga epdi deal-la vidalaam ??? :(((

Arunkumar said...

//
என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
//

ROTFL :)

Anonymous said...

Dear ambi,
Thangamani vandhum, Originalaga irukum ambiyae, Ungaluku evvalau nallllllllla Thangamani kedachu iruka nu theiryaradhu.My Kuduos to Your Thangamani.

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அடுத்த சங்கிலி பதிவு "ஒளிமயமான ஒன்பது" தான். யாரு ஷ்டார்ட் மியூசிக் போட போறாங்களோ? நல்லா இருங்கப்பா!

Ippadi than etthuku sonnel.Start panni iruka.Ippodhu onbadhuku eduthu koduthu irukel.......

ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்).

Kashtam kashtam....


நாம எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி இருக்கும்னு அம்மாவை விட்டு இல்ல எழுத சொன்னேன்? அதனால இதுவும் செல்லாது! செல்லாது.

Unmai sollum podhum enna azhagana udharanam.....


ஹிஹி, பூரி கிழங்குக்கு ஆசைப்பட்டு என்சிசியில் சேர்ந்த பய தானே நாம! இதுவும் செல்லாது! செல்லாது!

True .True.. NCC yil serndhutu, mor tiffin Pooriyum Kizhangum Nichayam Taste dhan ambi..... he he he....

( நல்ல வேளை, என் தங்கமணி மட்டும் அண்ணா!னு அல்வா குடுக்கலை)

Anna nu kuptava ellam Thangamani aga mudiyadhu.

Thangamaniya varava Anna nu Kupida mata ambi.Idhu theiryalaiya ungaluku!!!! Ha ha ha.

With Love,
Usha Sankar.

Dreamzz said...

//எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை முதல் மூன்று ரேங்க் மட்டுமே எடுத்ததுக்கு ஒரு கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல முடியுமா?//
நீங்களே பிட்டைய்யும் போட்டி அதுக்கு மற்றுமொழியும் போட்டுடற்றீங்க! இது ரொம்ப அநியாயம்!!!

Dreamzz said...

/முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?//
ஆஹா! தொட்டுபுட்டீங்க!

Dreamzz said...

/ஏற்கனவே நிறைய பேர் எட்டடி பாஞ்சுட்டாங்க. அப்படி பாயாதவங்க, தாராளமா பாயலாம், கமண்ட் போட நான் இருக்கேன்.
//

ROFL! aagatum annatha! 40!

வல்லிசிம்ஹன் said...

சாதனையாளர் அம்பி வாழ்க.

எட்டு எட்டாய் உலகம் இருக்கு ராமையா.
அந்த எட்டு உங்களுக்கு ரொம்ப
பொருத்தம் ராமையா.

பெருமாள் தீர்த்தம் தவிர வேற தீர்த்தம் கிடையாதா.
தம்பியை வேற காப்பாத்தி இருக்கீங்க.
உங்க பதிவில சொல்லாமலேயே நிறைய விஷயம் சொல்லிட்டீங்க.
நல்லா இருந்தது அம்பி.

ramya said...

yarandha ranjani ambi avargaley...kalyanathuku munnadi yarayo banglore vara solli irundheengaley avangala..mrs.ambi idhellam gavanikkanum nalla..

ramya said...

really well written...

ramya said...

//எழுதினா கையெழுத்து கேசரி கிண்டின மாதிரி // indha kesariya vida maatenga pola...ohh..halwa-oda replacement dhan kesari appadinu sollalaya innum unga aathukarammaku..

ramya said...

//ஒரு இந்தியனா, சரி விடுங்க, ஒரு மனிதனா என் கடமையை தானே செஞ்சேன்// nijamavey idhu dhaan top-u potta 8 la...indian endru sollada, thalai nimirndhu nillada nu pattum neenga dhaan sollikodutheengala...

ippo irukara nilamaiku ungalukku kalyanam dhaan best in 8 ..correcta

ramya said...

//சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?// idhu saadhanaiya illai life term policy-a saadhanainu solla vareengalaa..

ramya said...

//முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே// indha post podaradhuku munnadi edhachum bharadhiraja padam partheengaloooo...enna kumbudu dhaan misisng..

ramya said...

vandhadhuku oru half century potutu poidaren..

ramya said...

49.... aduthu andha 9 matter-ayum neengaley start panidunga...

adutha tag ready aaiduchu pola ungalukku..kadhai takkunu ezhudhunga idhey sootla..

ramya said...

50...aprama vandhu etti parkaren..

கீதா சாம்பசிவம் said...

எச்சரிக்கை! பயங்கரமான "ஆப்பு" காத்திருக்கு!

கீதா சாம்பசிவம் said...

பயங்கர பீத்தல் பதிவு! தற்பெருமை அடிச்சுக்கிட்டு அடக்கம் போல நடிப்பா? :P

வேதா said...

/.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்)./

இப்டியும் ஒரு கொடுமையான்னு உங்க தலைல தான் தட்டுவாரு :)

/அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி./

இப்டியெல்லாம் அதிர்ச்சி கொடுத்தா நாங்க எப்டிங்க முழு பதிவும் படிக்கறது?

வேதா said...

/சில பரீட்சைகளில் பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே!/

சில பரீட்சைகளில் மட்டும் தான நீங்க எல்லா பள்ளி பரீட்சைகளிலும் காப்பி பேஷ்ட் தான்னு தகவல வந்ததே :)

/அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே! அத சொல்லலாமா?/

இது தெரிஞ்சு தான நீங்க எழுதிப்போட்டீங்க ?:) சோறு கண்ட எடம் சொர்க்கமாச்சே ;)

வேதா said...

/ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?/

ஆகா சின்ன வயசிலேயே பஞ்சாப் குதிரை கனைக்க ஆரம்பிச்சுடுச்சா ? உங்கப்பாவுக்கு நீங்க செய்யற டகால்டி வேலை தெரிஞ்தனால தான் அனுப்பல ;)

வேதா said...

/என்.டி. ராமாராவே சொல்லி இருக்காரே,
கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே!/
அடப்பாவி :)

வேதா said...

/பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?/
இப்டி சொன்னதனாலேயே இன்னும் டவுட் அதிகாவுது. எங்க உங்க தங்கமணி? அவங்க கிட்ட கேட்டு தெளிவுப்படுத்திக்கிறேன் :)

வேதா said...

/இது கூட ஒரு சாதனையா? இல்ல இது அவங்களுக்கு வந்த சோதனையா?/
இதுல என்ன சந்தேகம்? ரெண்டுமே தான்.
தங்கமணி கிடைச்சது உங்களுக்கு சாதனை, அவங்களுக்கு நீங்ககிடைச்சுது அவங்களுக்கு சோதனை :) பாவம் அவங்க :)

Padmapriya said...

ohh neengalum 8 potu license vaangiteengala??

very well written!!

Padmapriya said...

engala ellam touch panniteengalea..

60!!!

Raji said...

//ambi neengale first 10 comment potukiteengala enna ;) //

enakku idhae doubt dhaan :)

Raji said...

// காப்பி-பேஷ்ட் பண்ணி இருக்கோமே//

Ahaha appavae s/w professionalu aagha poraomunura tholai nookku paarva irundhurukku ungalukku :)

//அவங்க நம்மள ஐந்து நாள் அங்க ஓசியா கூப்ட்டு சோறு போட்டாங்களே//

Enna saaapudu potaanga?Epidi irundhuchu?

//தாமிர பரணியில் நீச்சல் கத்துக்கறேன் பேர்வழி!னு மூழ்க இருந்த என் உடன்பிறப்பை கபால்னு நீச்சல் அடிச்சு //
Kappunu vizhundhu gabaalunu kaapthirukeengalae........Avvvvvvv...

ingavum Punjabaa vidalayaa...

//சுனாமிக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத சில மக்களுக்கு எழுத்தறிவித்தோமே அது//
Hats off :)
//கடமையை செய்!
பலனை எதிர்பார்க்காதே//Apaapa ungalukku kooda dialogue laam naala varudhu ;)

Ahaha ambi innum non-veg taste panninadhu illayaam pa ..Gr8 dhaan :)

Miss.C aaga irundhu Mrs.Ambi vazhga!

//முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?
//
Repeatuuuuuuuuuuu :)
Avvvvv..avvvvvvvvvvvvvvv..anna ipdi soliteengalae anna :)

Raji said...

Super nga..home work mudichachu...

Anonymous said...

good one.ana eppovo kooda padicha ranjani perllam nyabagam irukka?anyayam.mrs.ambi.notedown.
nivi.

Anonymous said...

ezhuthu arivichingla thats a great work.blog ulaga nanbargal pathiyellam solli nijamave feelings thann ponga.
nivi.

Anonymous said...

nijamave periya sadhanai madam ambikku mr.ambi anathu. thallamaiidam enna solraanga boss?
nivi.

Anonymous said...

olimayamana{urupadadha}padikka koodhadhu,paithiyyam pidichha pathhu,cha,ennallam thonudhu.puriyaadha padhinonnu,naanga ready?neenga ambi?
nivi.

Karthik Sriram said...

Kept me smiling for 10 mins today - nice one!

Anyways, my version of sivaji review is up on my blog - have alook!

Kittu said...

கேசரி சாப்டற பேசின் வாங்கினத இங்க நான் ஒரு சாதனைனு சொல்ல


kesari kilarra basin nnu sollalame, saapidradhuleye dhaan irukeenga :)

Kittu said...

) முகம் தெரிந்த நண்பர்களே முகவரி தொலைந்து போன இந்த நாட்களில், முகம் தெரியா முத்துக்களாகிய என் இனிய பிளாக் உலக மக்களே! உங்களை நண்பர்களாய் அடைய நான் என்ன தவம் செய்தோனோ?ada ada..ore feelings of India dhaan

Kittu said...

//பக்கத்து சீட்டு ரஞ்சனி பேப்பரை பார்த்து காப்பி-பேஷ்ட்

ranjani fail neenga passa :)

Kittu said...

saadhanaigal purindha ambikku ellarum o podunga..
oooooooooooooohhhhhhhhhhoooooo !!!

:) oru pineapple juice anuppi veinga. thondai vathi pochu.

_k mami

தருமி said...

கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவீங்களோ? ஏன்னா..இப்படி சொல்லியிருக்கீங்களேன்னு பார்த்தேன் ...
//கமண்ட் போட நான் இருக்கேன்.//

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹிஹி, நாம தீவிர அனுமார் பக்தனாச்சா, அவர மாதிரி தன்னடக்கம் கொஞ்சம் ஜாஸ்தி.(அனுமார் இந்த பதிவை படிச்சா தலைல அடிச்சுப்பார்

தலைல அடிச்சுக்க மாட்டார். கையில் இருக்கும் கதையால் த்லைல அடிப்பார்

தி. ரா. ச.(T.R.C.) said...

அது மட்டுமா?
அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,

ஏம்பா ஸ்யாம் பிளாக்கிளே யாரும் ஆம்பிளைகளே எழுதறது கிடையாதா
இருக்கட்டும் சென்னை பக்கம் வ்ந்துதானே தீரவேண்டும்

Marutham said...

ayyyoooooooo!!!
MISS!

Ungala 8'la maati vidalaamnu irundhen..hit list'la irundha neenbga escape..vera yarayavdhu mati vidren unga edathula :)

Super eight ! :D

Marutham said...

ellathayum adhu othuka mudiyaadhu - ilaa bongunu soliye....
ELAAAAAAAAM VALID'a potuteenga!

Awesome...
esply thanila kudhichu kapathinadhu, educating ppl, i think //முதல் மூன்று ரேங்க் மட்டுமே // idhuku same pinch podalaamnu :)

Marutham said...

//ஸ்கூல் படிக்கும் போது, என்சிசியில் மாவட்டதிலேயே ஒரே ஆளா பஞ்சாப்(ஆமா! ஆமா!) போறதுக்கு செலக்ட் ஆனோமே, அது..?//
elamey periya saadhanai dhaan panirukeenga ambi :)

Marutham said...

//எவ்வளோ சோதனை வந்தாலும் சைவ உணவு தவிர வேற எதையும் சாப்பிடகூடாது! பெருமாள் கோவில் தீர்த்தம் தவிர வேறு எந்த தீர்த்தமும் குடிக்க கூடாதுனு உறுதியா இருக்கோமே அது..?//
Same pinch! ...... Struggling hard!

Marutham said...

//என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! //

Pinna ilaya?! :)
Idhu dhaan miga periya saadhanai :)
U found ur life partner!

Marutham said...

//அம்பி அண்ணா! அம்பி அண்ணா!னு பாசமாய் அழைத்திடும் பிளாக் உலக தங்கைகள்/தம்பிகள், தம்பி!னு பாசம் காட்டும் டிடி, எஸ்கேஎம் போன்ற அக்காமார்கள், தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாய் என்னை வைத்து பார்க்கும் வல்லியம்மாக்கள், தனது பேரனாய் பாசம் காட்டி என் காதை திருகும் கீதா பாட்டிகள்,
//

avvvvvvvvvvvvvvvvvvvvvvv ....
Feelings of asia! :(

Padma said...

//என்னயும் நல்லவன்னு நம்பி கழுத்தை நீட்டி இருக்காங்களே! //


Wihtou any doubt edhu manikku vanda sodhanai than :D.. aana kandippa neenga avala thank pannunam :D.. ungala anna kuptu alwa koduthatuku :)..

Ponnarasi Kothandaraman said...

Inga vantha mattum ethathu paathu sirippu vanthudum. .Either the comment section or the post itself.. :P Earlier post'la grinder mixi nu orey koothu paniruntheenga ;)

Nice post! :) Keep up the spirit!

Anonymous said...

indha post enakku pudikkala! yenna en peru thangai listla thaniya varala, skm DD madhiri:-(

kadhai tag podavum!! :-)
veetla enna visesham? ;-)
-kodi

ramya said...

ennanga sir romba busya irundhalum oru kadhaiya mudicha nanga thondharavu pannama iruppomla...ippadi etti parkaracha ellam etukulla ulagam irukku ramaiya nu mattum irukku...seekiram update ..illati veetla edhuvum visheshama..

ஜி said...

//பக்கத்து சீட்டு ரஞ்சனி //

ராம்... ஓடியாங்க.. உங்க ஆளப் பத்தி இவரு என்னமோ சொல்றாரு...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信