Monday, July 02, 2007

மீண்டும் ஒரு காதல் கதை!

பரணி ஆரம்பிச்சு வைக்க, ப்ரியா அதை அழகா டெவலப் பண்ணியதை கொடி கொத்து பரோட்டா போட அம்சமா அருண் சமாளிச்சு இப்ப பூமாலையா எங்கிட்ட வந்ருக்கு! (சரி, அடுத்து என்ன கமண்ட் விழும்?னு எனக்கே தெரியும்)

********************************************************************************
இதுவரை:

"ஹலோ....ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்

......"அப்டியா..

"...."பையன் எங்ககிட்ட சொல்லல..

அவங்க அப்பா வந்ததுக்குஅப்பறம் பேசிட்டு சொல்றோங்க..

".."

நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு.. "டேய், எத்தன நாளாடா இது நடக்குது..

" "அம்மா.. அது.. வந்து..."
***********************************************************************************
இதோ நம்ம மியூஜிக்:

என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.

யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!

அடடா ஆமா, சாரிடா கார்த்தி!

சரி, சரி, போன்ல யாருமா? ஏதோ ஜாதகம் மோதகம்னு சொன்னியே, ஹிஹி, எனக்கேதுக்குமா இப்பவே கல்யாணம்?

நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. அதுக்கப்புறம் உனக்கு ஒரு வேலை கிடைக்கனும். அது மட்டுமா? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. இன்னும் உன் பேரை ரேஷன் கார்டுலயே சேர்க்க முடியலை. சாமியே சைக்கிள்ள போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்.

ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்.

உன் பெரிப்பா பையன் சூர்யா, அவன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம வீட்ல தானே தங்கி படிச்சான், அவனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு, அது சம்பந்தமா தான் போன். போதுமா?

போதும் தாயே! போதும். ஆள விடுங்க.
டிவி ரிமோட்டை எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
டிவியை ஆஃப் செய்து குளிக்க கிளம்பினான் கார்த்திக்
.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இடம்: சந்தியாவின் வீடு

சந்தியா, "யப்பா! நைசா அம்மகிட்ட பேச்ச ஆரம்பிங்கப்பா!"


இருமா! உங்க அம்மா நல்ல மூட்ல இருக்காளானு பார்ப்போம்.

கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?

அய்யோ! என் பேரு காவேரி, நீங்க என்னிக்கு தான் திருந்த போறீங்களோ? ஒரு படம் பார்த்தா உடனே அதுல வர பெயரை வெச்சு என்னை ஒரு வாரம் கூப்ட வேண்டியது. நேத்திக்கு என்ன சம்சாரம் அது மின்சாரமா?

நான் கூட தான் முந்தானேத்து பதினாறு வயதினிலே பார்த்தேன், உங்கள ஒரு வாரம் பரட்டை!னு கூப்டவா? இல்லாட்டி சப்பாணினு கூப்டவா? - சந்தியாவின் அம்மாவாச்சே!சும்மாவா சொல்லி இருக்கா, தஞ்சாவூர் காராளுக்கு வாய் நீளம்னு!

சே! ஆரம்பமே சொதப்பல் இந்த அப்பாவால! இன்னிக்கு இவர் மேட்டரை ஓப்பன் பண்ணின மாதிரி தான்! இதுக்கு நானே சொல்லி இருக்கலாம்.

அம்மா! ஒரு முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசனும்.

சொல்லுமா!

நான் பிராஜக்ட் பண்ண டெல்லி போயிருந்த போது என் சம்மதம் கேக்காம நீ நிச்சயம் பண்ணியது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

தீர்க்கமான முகத்துடன் அம்மா, இதோ பாரு சந்தியா! உனக்கு எது நல்லது?னு எங்களுக்கு தெரியும். உன் தலைல தடவர ஹேர் ஆயிலுல இருந்து காலுல போடற கொலுசு வரைக்கும் இந்த அம்மா தான்மா பாத்து பாத்து செலக்ட் செஞ்சேன். உனக்கேத்தவர் யாருனு? எங்களுக்கு தெரியாதா?

அம்மா! நீ சொல்றது எல்லாம் சரி. ஆனா, என் கருத்தையும் நீ கேட்டு இருக்கலாமே! ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?

சந்தியா, உன்ன கேக்காம, நீ இல்லாத நேரத்துல நிச்சயம் வரைக்கும் போனது தப்பு தான். சரி, யாரந்த பையன்..?

அம்மா! அது வந்து காலேஜ்ல...

உன் தயக்கம் புரியுது, நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ணிய பையன் யூஸ்லேருந்து உன்னை பாக்க வரான்.
பையனை பாரு! பேசு! அப்புறம் ஒரு முடிவுக்கு வா! இப்ப நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?

நான் உங்க பொண்ணு மா!

அம்மா எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்!

மறு நாள் சந்தியாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.

பையன் வீட்டு காரங்க வந்தவுடன் ஏலக்காய் டீ கலந்துக்கலாம், சூடு ஆறிடும்! அம்மா ஏறக்குறைய விஜய சாந்தி ஐபிஸ்ஸாக மாறி கட்டளையிட்டு கொண்டிருக்க, அப்பா வழக்கமான ரங்கமணிகள் போல உத்தரவு எஜமான்! போட்டு கொண்டிருந்தார்.

பதவிசாக ஸ்கார்பியோ கார் அப்பார்ட்மெண்ட் கேட்டை வழுக்கி நின்றது.
இந்த அப்பார்ட்மென்டில் தானே சந்தியா குட்டி இருக்கா, எந்த ஃப்ளோர்னு தான் தெரியலை - வாட்ச்மேன் தடியன் ஒரு வில்ஸ் பாக்கேட்டையும் வாங்கிண்டு கவுத்திட்டான் - கார்த்தி யோசனையில் ஆழ்ந்தான்.
லிப்ட்டில் மூணாவது ஃப்ளோர் வந்து நின்றது.

வாங்கோ! வாங்கோ! வாயேல்லாம் பல் செட்டாக அப்பா வரவேற்றார்.
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
எல்லோரும் ஒரு வழியாக அவரவர் சீட்டில் செட்டில் ஆனதும், முதல்ல டிபன் சாப்டுடலாமா? இல்லாட்டி பொண்ண வர சொல்லட்டுமா? கேசரி ஆறிடும், அதான்! - அப்பா பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அவர் கவலை அவருக்கு.

முதல்ல பொண்ணை வர சொல்லுங்கோ! - எதிர் பாட்டு பாடியது பையன் வீடு.

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....
*************************************************************************************
ஹையா! ஹோம்வர்க் முடிச்சாச்சு!


சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.

உனக்கேன்னப்பா! பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. நாங்க அப்படியா?

இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!

அதனால இப்படி இரண்டு நாளுல எழுது! மூணு நாளுல எழுது!னு எல்லாம் ரூல்ஸ் போடப்படாது!

இந்த கதையை அடுத்து கலக்க போவது யாரு?


வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!

84 comments:

Manasa said...

first first :)

Manasa said...

Ambi, Superrrr...twist :)

I am a new varavu :) tamizla koodiya seekiram ezutha aarmbichuduvaen....

By the way, unka blog union la aikiyam aarthukku rules yenna :)

CVR said...

சூப்பரு!!!
இப்போதான் எல்லோருடைய கதையும் படிச்சேன்!!!
எல்லோரும் போட்டு தாக்கி இருக்கீங்க!!
நம்ம மை ஃபிரண்ட் என்ன பண்ணுறாங்கன்னு பாக்கலாம்!!
எல்லோருமே இது வரைக்கும் வந்தா மாதிரி காமெடியா எடுத்துட்டு போனா நல்லா இருக்கும்!!!

கலக்குங்க!! :-)

கீதா சாம்பசிவம் said...

கேசரிக்கு விளக்கெண்ணெய் ஊத்தற மும்முரத்திலே கதை எல்லாம் படிக்க நேரம் இல்லை! :P என்ன, வழக்கம் போல் ஒரு மொக்கைப் பதிவு, கணேசன் தயவிலேயா அல்லது இம்முறை தங்கமணி தயவிலேயோ யாருக்குத் தெரியும்? :P

Dreamzz said...

ஹிஹி@ கதை சூப்பரா கண்டினியூபன்னி இருக்கீங்க!

Dreamzz said...

நல்ல கதை.. சீக்கிரம் அடுத்த்ஹ டேக் போடுங்கப்பா!

Dreamzz said...

அப்புறம் அம்பி.. எப்படி இருக்கீங்க?

Dreamzz said...

வந்ததுக்கு

Dreamzz said...

நம்ம

Dreamzz said...

ஒரு 10 அடிச்சாச்சு! வர்ர்ட்டா!

Thambi said...

geetha paati,
Kathai anna eluthinathuthaan.

Regards,
Ganeshan

ambi said...

//I am a new varavu :) tamizla koodiya seekiram ezutha aarmbichuduvaen//
@manasa, வாங்க மானசா! வாங்க! இந்தாங்க பிடிங்க கேசரி, முதல்ல வந்ததுக்கு!

//unka blog union la aikiyam aarthukku rules yenna//

ஒரு ரூல்ஸும் கிடையாது. ஒரு மெயில் தட்டி விடுங்க டுபுக்கு டிசிபிளுக்கு. :)

//எல்லோருமே இது வரைக்கும் வந்தா மாதிரி காமெடியா எடுத்துட்டு போனா நல்லா இருக்கும்!!!
//
@CVR, correct that's y homework given to the Comedy queen.

//என்ன, வழக்கம் போல் ஒரு மொக்கைப் பதிவு,//
@Geetha paati, உங்க பதிவை பத்தி தானே சொல்றீங்க? :p

//கதை சூப்பரா கண்டினியூபன்னி இருக்கீங்க!
//
@dreamz, நன்றி ஹை. நான் நல்லா இருக்கேன்பா! :)

//Kathai anna eluthinathuthaan.
//
@thambi, தம்பியுடையான் கமெண்டுகளுக்கு அஞ்சான்! :)

Sumathi. said...

ஹாய் அம்பி,

உங்களுக்கென்ன, கதை எழுத(விட) சொல்லித் தரனுமா? சூப்பரா சொல்லிட்டீங்க போங்க. (சந்தடி சாக்குல உங்களுக்குப் பிடிச்ச கேசரியும் பக்கோடாவையும், அதோட இன்னும் விட முடியாம நீங்க நினைக்கற"பஞ்சாப்ப" பத்தியும் நாசூக்கா சொல்லி யிருக்கீங்க)ம்ம்ம்ம்ம்..
நடக்கட்டும்..

Sumathi. said...

ஹாய் அம்பி,

இப்போ சமயல்ல்லாம் நீங்கதான்னு கேள்விப் பட்டேன், ஹி ஹி ஹி உங்க கைப் பக்குவத்த எங்களுக்கும் கொஞ்சம் காட்டலாம்ல...எப்ப சாப்பாடு போடப் போறீங்க.(நீங்க சமைச்சு தான்) ஹி ஹி ஹி ஹி ....

Bharani said...

poomalaya potu porati eduthuteenga :)

Bharani said...

//நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி//.....idha engayo ketta maadhiri iruken.....but sema dialog :)

Bharani said...

my friend sandhaya-ku dual role kudkaama irundha sari :)

Bharani said...

//பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. //.....innuma indha ooru nammala nambikitu iruku ;)

Bharani said...

//அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி//....super thatuvam.....kannalam kattuna udane enna maadhiri thatuvam ellam varudhu paarunga ;)

Bharani said...

20 :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ada kadavule anne!

ipapdi maaddi viddudeenggale?

sari.. ippadi taggirukkeengannu kooda oru vaarthaiyum sollala neengga?

epapdi enakku theriyumaam? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

eppothum pole velai velainnu irunthen.. sari, anne enna panraarunnu chumma ungge link thaddi paarthaa.. athiruthu ammanchi ille.. athinrthudden .::MyFriend::. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

sari.. but very sorry..

2-3 naalle ezhuthurathu nadakkaatha kaariyam.. 2nd julyle podda neengga, 5th julylethaan parthirukken

velai vera thalai mele alli kuvichu vachirukkaangga..

.:: மை ஃபிரண்ட் ::. said...

velaiyellaam senju mudichiddu (mudikka mudiyaathu pole).. iruppinum.. ungge kathaiyai saturday padichuddu.. athe naalle comments kummiddu, ithoda continuation yosichu ezhuthi podduduren..

.:: மை ஃபிரண்ட் ::. said...

aanaa, enakku oru kelvi!

comedynnaa ennannggaa????

[quater adichaachu post padikkaamaleye!]

.:: மை ஃபிரண்ட் ::. said...

ada aniyaaya aapisare, saturday vanthu kavanichikkiren. :-P

Anonymous said...

kadhai kallakkal.romba nalla irundhadhu.kesariyum punjabaiyum vidara madhhiri illa polirukku.romba badhiruchiruchu pola irukku.
enga thangmani ivuru marave mattara?
nivi.

Anonymous said...

idlimaavu thathuvam asatthal.sollama solli irukkinga?appa poori chapathiellam marandhachu. theriyudhu.
nivi.

Anonymous said...

dress description ,combination ellam super.thangamanikku indha colorla pattupudava irukka? illana ambi sir,oru pattupudavai vangi kodunga.adhigamillai gentlemen verum 10000 thukku tthan.
nivi.

Anonymous said...

eduukkunnu kekka koodathu.pramadhama kadha ezhidhinatthukku thaan. chinna treat.
nivi

Arunkumar said...

aaga motham kadhaya evanum mudikka maatingala? :)

Arunkumar said...

ingana oru parthiban kanavu padame odutheya..

Arunkumar said...

//
சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா
//
ada ada ada
aarambame top gear-la potu thaakureenga :)

Arunkumar said...

//
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
//
ROTFL-O-ROTFL :)

Arunkumar said...

innum ethana sandiyavo ethana karthiyo.. malaysia aandavanukku thaan velicham !!

Priya said...

அம்பி, கலக்கல் as usual..

Priya said...

//அருண் சமாளிச்சு இப்ப பூமாலையா எங்கிட்ட வந்ருக்கு!//

ROFTL. இப்ப எப்படி இருக்குனு அருண் தான் சொல்லணும்.

Priya said...

//இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா?/

ROFTL. இது மாதிரிலாம் உங்களால தான் முடியும்..

//அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. //

பொண்ணுங்க இப்படிலாம் நீங்க அவமானப் படுத்த கூடாது. அவங்களுக்கெல்லாம் தெரியும் இன்னும் க்ரீன் கார்ட் வாங்காதவங்கள கல்யாணம் பண்ணினா தான் உடனே அமெரிக்கா போக முடியும்னு.

Karthik Sriram said...

Good one Ambi - waiting for the finale (hopefully)


LKS

Priya said...

//"பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க//

உங்களால ஒரு நாள் கூட பூரிக் கட்டைய மீட் பண்ணாம இருக்க முடியாது போல..

//ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?
//

என்ன தத்துவம்.. என்ன தத்துவம்..

//மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும்//

இத பாத்தா வீட்ல சமையல் மட்டும் உங்க டிபார்ட்மெண்ட் இல்ல போல இருக்கே. என்ன தினம் Ms.C dressing table முன்னாடி உக்காந்தா, beautician நீங்க தானா?

Priya said...

பாப்போம் myFriend ன் கை வண்ணத்தை..

பாலராஜன்கீதா said...

//அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?//

சந்தியா, "நான் அவள் இல்லை" என்று சொல்லவில்லையா ?
:-)

Anonymous said...

adhenna edhukeduthaalum thanjavur kaara nnu izhukkaringa..
vendam. nalla illa. jakkardha. :p

appdiye kadhaya mudichurukkalam. aduthu ennagumo nnu irukku. ungaloda version nnu solli mudichudunga.

-viji

Raz said...

romba nalla irunthuchu! ana pusukunu pudichitingale!

சுப.செந்தில் said...

நன்னா காமெடியாய் கொண்டு போய் super twist வச்சிருக்கேள்!பிரமாதம்ணா அசத்திட்டேள் போங்கோ!!

சுப.செந்தில் said...

நம்ம பில்லு பயப்படுற மாதிரி My Friend சந்தியாவுக்கு Dual role கொடுக்காம இருந்தாங்கண்ணா நல்லாயிருக்கும்..Let's See :)

சுப.செந்தில் said...

//நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு//
இப்பிடி போட்டுத் தாக்கியிருக்கீங்க..
ROTFL :)

சுப.செந்தில் said...

//அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்//

கலக்கல்ல்ல்ல்ல்

Anonymous said...

ahahaha yanna, neenga thaan deivam. yaaaaaaaaaaaaaay! en kadhai back to track :D sondha annana irundha enna onnu vitta annana irundha enna? annan annan than thambi thambi thaan! :D

-kodi

Anonymous said...

50!

-kodi

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.

யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!//

ஃபர்ஸ்ட்டுலேயே டாப் கியரை போட்டு தூக்கிட்டீங்க. சபாஷ்@ ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//"பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" //

பஞ்சாப் இன்னுமா மறக்கலை நீங்க??? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?
//

LOL.. நேத்து ராத்திரி நீங்கதான் சம்சாரம் அது மின்சாரம் படம் பார்த்திருப்பீங்க போல? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
//

ROTFL.. இது டாப்பு!!! :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.//

வச்சீங்களே ஆப்பு! எனக்கு! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.
//

எனக்கும் இதே நிலமைதான். :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!//

நல்லா யோசிச்சுதான் என் பேரை போட்டீங்களா? நல்லா வந்தீருக்கிற கதை என் கையில மாட்டி என்ன படாத பாடு பட போகுதோ! :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்போதான் உங்க ஸ்டோரி படிச்சு முடிச்சிருக்கேன்..

இப்பவே எதாவது யோசிச்சு எழுத ஆரம்பிக்கிறேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனா, பரணிண்ணேவும் மத்தவங்களும் பயப்படுர மாதிரி, கண்டிப்பா சந்தியாவுக்கு டபல் ரோல் தற மாட்டேன்.. யாரும் பயப்பட வேண்டாம். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

60 போட்டாச்சு. ;-)

மு.கார்த்திகேயன் said...

kathai ellaam thodarnthu padikkala ambi.. athanaala, hehehe.. oru attendance mattum :)

ஜி said...

ippadi kaarthiya intha izu izukureengale :(( paavam avan :((

My days(Gops) said...

post potta solluradhu illai ah thala?

enna ponga... serious ah daily neenga indha tag eludhuveenga, eludhuveenganu kaathu irundha, inga kaaatavey illa....

aaana paarunga neena 2nd july ey pottuteeenga....

ippaium its not opening....

my friend blog moolama thaan inga vandhen...

My days(Gops) said...

//மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா?//

thala avaru "Malabar" beedi ku eppovo maaaritaaru.. :)

//நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. //

adhuvum correct thaaan.. he he he.. aama endha maadhiriaana project?

My days(Gops) said...

//இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க.//


Rotfl, appo UK maapilai's kum aaapaaah? :P

//ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்//

amma vey ippadi damage pannuna, paiyan enga povaaan? paavam...

My days(Gops) said...

//எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
//

NALLA situation ah kondu poreeengaley... he hehe

sandhya padadha paadu paduraaley :P

My days(Gops) said...

// காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?//

koooda avanum illa vaazhuvaaan :P
(aaama, vaazhuvaana?)

//நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. //
lol....germany kaaaga hitler sandai poduraaangalaakum :P

//நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?//

solla mudiaadhu, mazhai vandhuchina appuram oru dance pottutu thaaan varuven. he heh

My days(Gops) said...

//. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.//

innum adhulaiey irundha eppadi?

//பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்//
ROTFL ROTFL...... epppadi thala ippadi ellam yosikireeenga.. :P

My days(Gops) said...

//காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும்//

thala innum november maasathulaiey irukira maadhiri irukappa.... :P

My days(Gops) said...

//இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!
//

ivlo seekiram ippadi ellam anubavachi, pinnadi vara sangadhigalukku ellam advice vudureeenga...

vaazhga umadhu thondu..

totally , sema comedy post..
as usual.......kalakiteeenga... :)

Ponnarasi Kothandaraman said...

Hahaha..As usual unga style therithu! :) Looooooooong post.. part part'a potrukalam :) Anyway it was worth reading..

Raji said...

Ahaha naan dhaan lateaa?

Raji said...

Ambi superaa ezhudhirukeenga ...

Raji said...

Aduthu myfriend enna pannuraanganu paarpoam...

Raji said...

Vandhadhukku oru 75:-)

Karthik Sriram said...

adutha cinema quiz updated, ambi mama avargale!

Try panni parungo!

Syam said...

//இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!
//

ippo thaan thelivaa irukka...atha tookki pudi (keep it up nu solla vandhen) :-)

Syam said...

//poomalaya potu porati eduthuteenga :) //

@bharani,

itha thaan monkey kaila poomaalai kidaicha maathirinu solvaangalaa
:-)

Syam said...

ROTFL @ all u'r kaamady ambi :-)

Kittu said...

கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.neenga unga thangamani paaka pogum bodhu idhellam nalla amukineengala :)

Kittu said...

kitchenla ivalavu busyyya irundhum superaa oru kadhai koduthirukeenga.
good twist.
maavu arachu mudichacha ? oru 6 idli parcel pls :)

Anonymous said...

I love u Syam

மதுரையம்பதி said...

இப்பத்தான் படிக்க முடிந்தது.....போட்டுத்தாக்கீருக்கிங்க...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信