Wednesday, June 20, 2007

வாஷிங்க் மெஷின்

எப்பொழுதும் கரை புரண்டு ஓடும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமையில் வாஷிங்க் மெஷின் என்ற சாதனம் 5 வருடம் முன் வரை கூட வரவில்லை. எல்லோருக்கும், எல்லாத்துக்கும் பரணி தான்! (யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை).

எங்கூர் மாமாக்கள் காலங்க்காத்தால ஒரு 6 மணிக்கு எழுந்து, துண்டை தலைபாகையா கட்டி, வேட்டிய மடிச்சு கட்டி அப்படியே ஹாயாக வயற்வரப்பில் நடந்து, அக்கம்பக்கம் யாராவது வராங்களா?னு பார்த்து, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"னு வரவேண்டியதை பாட்டு பாடி வரவழைத்து, நைசா பங்காளி வயலுக்கு உரமிட்டு, அந்த வேட்டியை நம்ம வடிவேலு ஸ்டைலில் லேசா தூக்கிண்டு ஒரு வழியா ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்து, 501 சூப்பர் பார் சோப் போட்டு பாறாங்கல்லில் அந்த வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.

ஒரு சில மாமாக்கள் பொறுப்பு சிகாமணியாய் தங்கள் தங்கமணியின் புடவை, ரவிக்கை, இன்ன பிற ஐட்டங்களையும் அரசன் சோப் போட்டு வெளுத்து கட்டி எடுத்து வருவார்கள். அப்படி வந்தால் தான் ஒழுங்கா புவா கிடைக்கும் அது வேற விஷயம்.

தீடிரென்று சீமாச்சு மாமா மட்டும், "டெக்னாலஜி எல்லாம் நாமும் யூஸ் பண்ண வேண்டாமா? எத்தனை நாளைக்கு தான் இப்படி உழச்சு உழச்சு(துவைச்சுனு வாசிக்கவும்) ஓடா தேயறது?"னு பேங்க்ல லோன் போட்டு ஒரு வாஷிங்க் மெஷின் வாங்கி வந்து விட்டார்.
எங்க தெருவே ஓடி போய் பார்த்து, வாய் பிளந்து நின்றது.

"என்னடா சீமாச்சு! துணி துவைக்கறத்துக்கு இவ்ளோ பெரிய பொட்டியா? ஆனாலும் இதுக்கு இம்புட்டு ரூவாயா?

கிரிஜா! உங்காத்துகாரரை அனியாயத்துக்கு வேலை வாங்கற, அதான் பாவம்! பொறுக்க முடியாம இந்த வண்ணான் பொட்டிய வாங்கிட்டான் பாரு!னு போற போக்கில், சீமாச்சு மாமாக்கும் ஆப்படித்து விட்டு போனார்கள்.

வெறும் சோப் பவுடரை போட்டு தண்ணிய வாரி விட்டாச்சுனா அரைமணி நேரத்துல அதுவே கும்மு கும்முனு கும்மி, துவைச்சு, பிழிஞ்சு மொட்டை மாடியில காய போட்டு மடிச்சு எல்லாம் வெச்சுடுறது!னு சீமாச்சு மாமா தனது சகாக்களிடம் அள்ளி விட்டதில் சங்கு மாமா, வெங்காச்சம் மாமா, கிச்சா மாமா என மேலும் சில மாமாக்கள் தங்கள் தங்கமணிகளிடம் கண்ணை கசக்கி, வண்ணான் பொட்டி வாங்கி அழகு பார்த்தனர்.

சரி நம்ம கதைக்கு வரேன். கல்யாண கிப்டாக வாஷிங்க் மெஷின், பிளாஸ்மா டிவி எல்லாம் வரும்னு சப்பு கொட்டிண்டு இருந்த எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்.

சரி, நம்ம ஜீன்ஸை எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தானே துவைக்கிறோம்? வாஷிங்க் மெஷின் எல்லாம் இப்போ தேவைப்படாது!னு நினைத்த எனக்கு " பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!னு கதறாத குறையாய் எந்த கம்பெனிகாரன் மலிவு விலையில் மெஷினும் தந்து துவைத்து போட கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?னு ஒரு வாரமாய் என்கொயரி செய்ததில் மூன்று தேறியது (சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்).
ஒரு மாலை இளவெயில் நேரம், தங்கமணியையும் கூட்டிக்கொண்டு நாலு கடை ஏறி இறங்கி சேல்ஸ்மேன் கையில் துண்டு போட்டு பேரம் பேசி, இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்!னு கடைக்காரான் கத்தியதில் கடைசியாக ஒன்னை வீட்டுக்கு தள்ளிண்டு வந்தாச்சு (இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ)

அடுத்த நாள் டெமோ காட்ட ஆள் வருவான்! சன் மியூஸிக்குல ஹேமா சின்ஹாவ பாத்து ஊத்திண்டு இருக்காம ஒழுங்கா கவனிச்சு வைங்கோ!னு அம்மணி டோஸ் விட்டவுடன் எனக்கு டக்குனு ஏனோ சீமாச்சு மாமா தான் நினைவுக்கு வந்தார்.

"இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை.
முதலில் நீ கத்துக்கோ! அடுத்த மாசம் நான் தேறிடுவேன்!னு இப்போதைக்கு வண்டி ஓடுகிறது. (இந்த போஸ்ட் பப்ளிஷ் ஆனதும் அதுக்கும் ஆப்பு - இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வெச்சுக்றது சொல்றாங்களா?)

நமது பிளாகர் யூனியனிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து தான் இந்த வாஷிங்க் மெஷின் வாங்கப்பட்டுள்ளது! அதுக்காக நீங்க பெங்களூர் வரும் போது உங்க டிரஸ் எல்லாம் கழட்டி தந்து என்னை துவைத்து தர சொல்லப்படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா!)
இந்த அரிய பணியில் புயல் போல சுழன்று, இடி போல முழக்கமிட்டு, சூறாவளியாய், வசூல் செய்த நமது ஜி3 அக்காவுக்கு என் உளமார்ந்த நன்றிகள் கோடி.
ஜி3 யக்கா, நீங்க மட்டும் பெங்களூர் வாங்க, உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)
(உங்க ரேஞ்சுக்கு பில்லு பரணி தாங்குவான், நம்மால முடியாதுக்கா!)

இதை திறம்பட ஒருங்கிணைத்த டாக்டர் டிடி அக்காவுக்கு மிக்க நன்றி ஹை!

பி.கு: விரைவில் எதிர்பாருங்கள் கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா! - உங்கள் அபிமான பிரவுஸர்களில் - உலகமெங்கும்...

143 comments:

Padmapriya said...

Hiyya 1st :)

Padmapriya said...

Romba nalaiku apparam 1st vandhirkenla...pudhusa kalyanam aanavaru..so neengale yedho paathu kudunga.. sari..poi padichutu varren

Padmapriya said...

adhu enna washing ku oru "ik"
வாஷிங் மெஷின் thaan!! ik laam kidaiyadhu!!

//வாஷிங்க் மெஷின் என்ற சாதனம் 5 வருடம் முன் வரை கூட வரவில்லை// idhu kadhai.. enga Ettayapurathulaye.. 10-12 varushathu munnadiye Shesha mama vaanginaar..

Padmapriya said...

//இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை// LOL

Padmapriya said...

sariyana comedy post!!..

aaha..ungaluku inimea thoikkaradhula irundhu viduthalai epo treat??

Anonymous said...

hehe..super post...next enna enna matter ellam veliye varumo theriyalaiye...washing machine vanthachu..next grinder vangina story iruntha sollunga ambi :D

CVR said...

//கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?னு ஒரு வாரமாய் என்கொயரி செய்ததில் மூன்று தேறியது (சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்).//
நம்பிட்டேன்!!!

//கடைக்காரான் கத்தியதில் கடைசியாக ஒன்னை வீட்டுக்கு தள்ளிண்டு வந்தாச்சு (இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ)
//
திரும்பவும் நம்பிட்டேன்!!!

நீங்க எவ்ளோ சொன்னாலும் நம்பறேன்,நான் எவ்ளோ ரொஓஓஓஓஓம்ப நல்லவனா இருக்கேன் பாத்தீங்களா?? :P

//இந்த அரிய பணியில் புயல் போல சுழன்று, இடி போல முழக்கமிட்டு, சூறாவளியாய், வசூல் செய்த நமது ஜி3 அக்காவுக்கு என் உளமார்ந்த நன்றிகள் கோடி.//
நல்ல காலம் அவிங்க இந்த மேட்டர் ஆரம்பிக்கறதுக்குள்ள நான் பேசவே விடாம நானே மொக்க போட்டு,மி த எஸ்கேப்பு!!! B-)

பூரிக்கட்டை பிதாபங்கள் தொடரின் அடுத்த பகுதி வெகு பிரமாதம். தொடரின் மையக்கருத்து இந்த பகுதியிலும் ஆணித்தரமாக சொல்லப்பட்டிருப்பது எழுத்தாளரின் ஆழ்ந்த அனுபவத்தின் சிறந்த எடுத்து காட்டு!!! :-D

mgnithi said...

//" பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!//

Adada enna oru thathuvam...

mgnithi said...

//இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"//

R.O.T.F.L

mgnithi said...

//ஜி3 யக்கா, நீங்க மட்டும் பெங்களூர் வாங்க, உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)//

Naatamai solli kudutha technica vachi ippadi ellarum G3kku aapu veikareengale..

G3 said...

//உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)//

Enakku okay.. Varradhukkum returnukkum flight charge unga selavu dhanae.. seekiram tkt edhuthu anuppunga :P

G3 said...

@CVR : //நான் எவ்ளோ ரொஓஓஓஓஓம்ப நல்லவனா இருக்கேன் பாத்தீங்களா?? :P//

Idha neenga sonnapo enaku neenga sonna nallavan = Ilichavaayan equation nyaabagam varavae illai :P

Padma said...

hey naan 11th comment :D..
anna.. manni erundalum romba mosam. poyum poyum ungala washing m/c la thokkaika solitale :).. kailaenna thoikka solli erukkanum.. pavum appavi pola eruku enga manni..
manni kaila thoicha than nanna azhukku pogum :)

CVR said...

//Idha neenga sonnapo enaku neenga sonna nallavan = Ilichavaayan equation nyaabagam varavae illai :P
//

அது எப்படி வரும்???
CVR = அதிமேதாவி என்பது ஐந்தாறு கண்டங்களிலும் மற்றும் ஐ.நா சபையில் கூட ஒற்றுக்கொள்ளப்பட்ட விஷயம் ஆயிற்றே!!
அப்படின்னு சொல்லலாம்னு பாத்தேன்!!
ஆனா இது எனக்கே ஓவரா இருக்கு!!

G3 said...

@CVR : //ஐந்தாறு கண்டங்களிலும்//
5-ஆ 6-ஆன்னே இன்னும் உங்களுக்கு தெரியலியே.. நீங்க எப்படி அடிமேதாவி லிஸ்ட்ல??

thurgah said...

//@CVR : //ஐந்தாறு கண்டங்களிலும்//
5-ஆ 6-ஆன்னே இன்னும் உங்களுக்கு தெரியலியே.. நீங்க எப்படி அடிமேதாவி லிஸ்ட்ல?? //

hehe..nalla kelvi.
CVR matter ellam veliye varum pola irruke...CVR paavam

Anonymous said...

//அது எப்படி வரும்???
CVR = அதிமேதாவி என்பது ஐந்தாறு கண்டங்களிலும் மற்றும் ஐ.நா சபையில் கூட ஒற்றுக்கொள்ளப்பட்ட விஷயம் ஆயிற்றே!!
அப்படின்னு சொல்லலாம்னு பாத்தேன்!!
ஆனா இது எனக்கே ஓவரா இருக்கு!! ///

romba over thaan.

//CVR said...
தெளிவா குழப்பிட்டீங்க அண்ணாத்த!!
ஏற்கெனவே ஒரு மாதிரி இருப்பேன்,இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! :-P
//

remember this comment from raam's post.neegale neega oru loosu nu sonninga...so eppadi neega athi methavi

CVR said...

இணைந்த கைகளின் இந்த இம்சையை கண்டு நான் கலங்க மாட்டேன்!!!
இமையமே வீழ்ந்தாலும் இம்மியும் அசராத மனது இந்த அக்காக்களின் எகத்தாளத்தால் எதுவும் ஆகாது என்று இன்று உலகம் அறிந்து கொள்ளும்!!!
இவர்களின் வஞ்சனை பேச்சை அறிந்து கொல்லும்!!!! B-)

(சீ.வீ.ஆரு!! எப்படி டா இதெல்லாம்?? :O)

CVR said...

நிற்க
/ஏற்கெனவே ஒரு மாதிரி இருப்பேன்,இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! :-P
neega oru loosu nu sonninga...//

நான் லூசு என்று ஒரு போதும் கூறவில்லை!!
தாங்கள் இந்த வரியை திரும்பவும் நன்றாக படிக்கவும்!!!!

//ஒரு மாதிரி இருப்பேன்//

means i look like அதிமேதாவி!!! :P

G3 said...

@CVR : //அறிந்து கொல்லும்//
எதால? அருவாமனையாலயா???

//சீ.வீ.ஆரு!! எப்படி டா இதெல்லாம்?? //
ராமோட ஒரு காவியத்த படிச்சதுக்கே இந்த எஃபெக்டா??

My days(Gops) said...

//remember this comment from raam's post.neegale neega oru loosu nu sonninga...so eppadi neega athi methavi
//

thurga, ellorum oru naal aaviah thaan aaaga porom, yen neengalaum few days ku before aavi photo thaaney pottu irundheeeenga...

so, aaavi ku modhal stage medhaavi thaaaan purinchidho?

My days(Gops) said...

anbu thambi CVR ku aadharavu thara indha gops vandhutaaan.. yaarupa anga.. pooosanikaai'ah odaichi enna vazhi anupunga poo...

ambi thala , first namma thambi ku adaravu , apaaaala vandhu ungalukku aaaapu sorry, comment podurenu solla vandhen...

CVR said...

@Gops!
ஆஆஆ ஆஆஆஆ

அண்ணா!!!
வாழ்த்த வயதில்லை!!
வணங்குகிறேன்!!!!! B-)

Anonymous said...

///CVR said...
தெளிவா குழப்பிட்டீங்க அண்ணாத்த!!
ஏற்கெனவே ஒரு மாதிரி இருப்பேன்,இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! :-P //

அதி மேதவியை குழப்ப முடியுமா?அதுவும் நீங்க முத்தி போச்சுன்னு சொல்லி இருக்கீங்க.பைத்தியம் தான் முத்தி போச்சுன்னு சொல்லுவாங்க :D

சிங்கம்லே ACE !! said...

அம்பி, கலக்கல் ROTFL போஸ்ட்.. :D :D

துவைக்க வாஷிங் மிஷின் வாங்கிட்டீங்க.. சமையலுக்கு என்ன பண்ண போறீங்க.. அதுக்கு எதாவது டகால்டி பண்ண போறீங்களா??

சிங்கம்லே ACE !! said...

//yaarupa anga.. pooosanikaai'ah odaichi enna vazhi anupunga poo...
//

Gops, thalaya konjam kaattunga.. poosanikaai odaippom :D :D

My days(Gops) said...

//ராமோட ஒரு காவியத்த படிச்சதுக்கே இந்த எஃபெக்டா//

g3, raamarey avaru thaaan. theriaadha? he he he

My days(Gops) said...

//Gops, thalaya konjam kaattunga.. poosanikaai odaippom :D :D
//

indhaanga, ungala thaan thedikittu irundhen... enga nga poiteeengaa?
naaan sonnadhu ennachi?

Anonymous said...

/anbu thambi CVR ku aadharavu thara indha gops vandhutaaan.. yaarupa anga.. pooosanikaai'ah odaichi enna vazhi anupunga poo...//

மேன் உங்க மண்டையைதான் உடைக்கனும்.பூசனிக்காயை இல்லை,துரோகி.எதிரி கூட்டணியில சேர்ந்துட்டீங்களா!!

சிங்கம்லே ACE !! said...

ACVR,

நீங்க அதிமேதாவின்னு சொல்லியா தெரியனும்... விட்டு தள்ளுங்க.. உங்க அறிவை பாத்து மத்தவங்களுக்கு பொறாமை :D :D

My days(Gops) said...

//பைத்தியம் தான் முத்தி போச்சுன்னு சொல்லுவாங்க //

thurgah, enga ooorla, kathirikaai, vendikaai, beans, mullangi ponra kaaikariaium muthi pochinu solluvaaanga... he he

CVR said...

@துர்கா
குழம்பு ரசம் கூட குழம்பித்தான் தெளியும்!!
தெளிந்த பின் தான் ருசி!
குழும்பிய பின் தான் தெளிவு!!

இதை அறிவிலிகள் அறிந்து கொண்டால் அதுதான் அறிவு!!

சிங்கம்லே ACE !! said...

CVR, உங்க பேர், இன்றையிலிருந்து ACVR (அதிமேதாவி CVR) என்ற்ழைக்க படுகிறது..

Dubukku said...

ப்ளாகர் யூனியன்ல வாஷிங்மெஷின்லாம் தராங்களா...இதுக்காகவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே...(அதே தங்கமணியத்தான்...பத்த வைச்சுறாதப்பா)...இரு முன்னாடி அடிச்ச இன்விடேஷனே இருக்கும் இன்னிக்கு அனுப்பிறேன் எல்லாருக்கும்....அனுப்பறதோ அனுப்பறீங்க ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினா அனுப்புங்கப்பா...

G3 said...

@CVR : //இதை படிச்ச அப்புறம் நல்லாவே முத்தி போச்சு!! //

முத்தி போனதெல்லாம் இருக்கற ஒரே இடம் பாண்டி மடம் தான் :P


////ஒரு மாதிரி இருப்பேன்//

means i look like அதிமேதாவி!!! :P //

அதிமேதாவி = ஒரு மாதிரி
வெளங்கின மாதிரி தான் :P

சிங்கம்லே ACE !! said...

//enga nga poiteeengaa?
naaan sonnadhu ennachi? //

konjam time venum gops.. travel irukku.. vilavariya mail panren.. mannichidunga.. unga project-a nichayama pannuvom :( :(

CVR said...

அண்ணன் கோப்ஸின் அழகான விளக்கத்தை நான் ஆனந்த கண்ணீரோடு ஆதரிக்கிறேன்!!! :-D

My days(Gops) said...

//துரோகி.எதிரி கூட்டணியில சேர்ந்துட்டீங்களா!! //

dharagah, yaaru endha katchila evlo potti vaangura/kodukura appadinu paarka kooodadhu...

neenga cvr ponra oru appavi'ah thuvachi edukureeenga, adhvum indha washing machine postla,
innnoru naaal naaan edhum thani katchi aarambicha, enakku aadharavukku thambi thunai, summa thooonu maadhiri thevai padadhaa?
enna cvr naan solluradhu?

paambin kaaal paambarium...

paambukku kaal irukaaanum ketka koodadhu.. bcos, paaambukku kaal illati, pambu nu aagidum he he

My days(Gops) said...

@ace :- //konjam time venum gops.. travel irukku.. vilavariya mail panren.. mannichidunga.. unga project-a nichayama pannuvom :( :(
//

ok annathe, eppo free nu sollunga ok va.... inum oru 10 days aaguma normal aaga?

G3 said...

//g3, raamarey avaru thaaan. theriaadha? he he he //

@CVR, appo andha kuzhappum kaaviyatha padaichadhu neenga dhaana??? poli royal neenga dhaana? Raam.. unga perla poliya suthitirundhavara kandubidichitom :-)

My days(Gops) said...

@cvr :- //அண்ணன் கோப்ஸின் அழகான விளக்கத்தை நான் ஆனந்த கண்ணீரோடு ஆதரிக்கிறேன்//

ஆனந்த கண்ணீரோடு, adhu orama irukattum.. dun feel brother...

My days(Gops) said...

@g3 :- //unga perla poliya suthitirundhavara kandubidichitom :-)//

aaaama andha poli nabar ippo antartica vanapredhesam la irukaaaram.. poi thedunga..

G3 said...

@Ace : //ACVR //

Aanalum neenga CVR-a ippadi publica thittitu sidela sambandhamae illama oru explanation kuduthu emaathi irukkeenga paatheengala.. ungala thiramaiyai naan paaraataren.. idhoda original expansion CVR-kku purinjirundha avar adhimedhaavadhinu naan othukkaren :P

Anonymous said...

//so, aaavi ku modhal stage medhaavi thaaaan purinchidho? //

உங்ககிட்ட நான் ஒன்னுமே கேட்கலை.தமிழை தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு நீங்க சொல்லுற பதில் எனக்கு புரியவில்லை.

// சிங்கம்லே ACE !! said...
ACVR,

நீங்க அதிமேதாவின்னு சொல்லியா தெரியனும்... விட்டு தள்ளுங்க.. உங்க அறிவை பாத்து மத்தவங்களுக்கு பொறாமை :D :D
///

சிங்கம் சிவிஆர் பார்த்து எங்களுக்கு பொறமையா?இருக்குறது இருக்கும் பொழுது ஏன் பொறமை படனும்?நாங்க எல்லாம் பாசக்கார பய புள்ளைங்க.சரியா சிவிஆர்? ;)

Anonymous said...

//thurgah, enga ooorla, kathirikaai, vendikaai, beans, mullangi ponra kaaikariaium muthi pochinu solluvaaanga... he he //

சிவிஆர் என்ன காய்கறி மாதிரியா இருக்காரு :D

My days(Gops) said...

thurgah

//தமிழை தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு நீங்க சொல்லுற பதில் எனக்கு புரியவில்லை.//

konjam time kodunga, naaan washington university la poi nalla tamil kathukittu vandhu, ungalukku english la explain pannuren... :)

My days(Gops) said...

//சிவிஆர் என்ன காய்கறி மாதிரியா இருக்காரு //

thurgah, naan sonnadhu Muthi ponuchi nu soneenga la, adhuku sonnen

My days(Gops) said...

48

My days(Gops) said...

50

My days(Gops) said...

50

My days(Gops) said...

eppadi ducalty kaaamichi 50 potom la....

CVR said...

neenga cvr ponra oru appavi'ah thuvachi edukureeenga, adhvum indha washing machine postla,
innnoru naaal naaan edhum thani katchi aarambicha, enakku aadharavukku thambi thunai, summa thooonu maadhiri thevai padadhaa?
enna cvr naan solluradhu?
//அண்ணனின் கட்சிப்பணிகளுக்கு தூணாக,துறும்பாக,துவைக்கும் வாஷிங் மெஷீனாக நான் இருப்பேன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்

ரகசியம் : அண்ணாத்த!! உண்மையாலுமே கட்சி ஆரம்பிக்கிறீங்களா?? :-S

//
paambin kaaal paambarium...

paambukku kaal irukaaanum ketka koodadhu.. bcos, paaambukku kaal illati, pambu nu aagidum he he
//

ஆஹா!!! இவ்வளவு உயர்ந்த உள்ளறிவை உலகுக்கு உணர்த்துபவர் கூறினாலும் சிலருக்கு எம் மேல் வஞ்சம் இருப்பதை கண்டு பொறுக்குதில்லையே நெஞ்சம்!!! :P

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
My days(Gops) said...

thambi cvr

//துவைக்கும் வாஷிங் மெஷீனாக நான் இருப்பேன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்//

appo, dryer ah yaaru irupaaah?
ipo enakku kadukalavu doubt keedhey....

//அண்ணாத்த!! உண்மையாலுமே கட்சி ஆரம்பிக்கிறீங்களா?? :-S//
aaaama, ippa irukira katchi nammala kandukavey maatengudhu.... i mean ozhunga potti not cuming...
edhukum k4k kitta ketttu solluren..

//எம் மேல் வஞ்சம் இருப்பதை கண்டு பொறுக்குதில்லையே நெஞ்சம்//
sare sare, evening beach pakkkam po, anga vanchiram meena porichi vachi irupaaanga, adha vaangi saaaptu relax aaaagiko ok va?

G3 said...

//appo, dryer ah yaaru irupaaah?
ipo enakku kadukalavu doubt keedhey....//

ஆரம்பமே டவுட்டா? கூட்டணி உருப்பட்டாப்போல தான் :P

Anonymous said...

/sare sare, evening beach pakkkam po, anga vanchiram meena porichi vachi irupaaanga, adha vaangi saaaptu relax aaaagiko ok va? //

அடப்பாவி.அவரு சைவம்...

My days(Gops) said...

//இனிமேல் நீங்க என்னுடைய எதிரி/

enna thurgah ippadi solliputeeenga?
enna nalla paarunga, naan enna unga edhiri maadhiriah iruken... avvvvvvvvvvvvvvvvvvvvvv

//இந்த பூனை beer அடிக்கும் அளவுக்கு திருட்டு பூனை//
indha poonai milk kudicha adhu normal.... aaana, indha pooonaium beer adicha , adhu oru adhisiam... so, adhisiam song ah bgm ah podunga ippo ok va?

//அது போல ஒரு முத்தி போன case காலை இன்னொரு முத்தி போன case தான் அறியும் :D //
aaaama, naanga rendu perum muthi ponvanganu sollurathuku oru over aha muthi ponavanga naaala thaan solla mudium.. he he he

thurgah cool plz

CVR said...

@துர்கா
//ஆமா அது போல ஒரு முத்தி போன case காலை இன்னொரு முத்தி போன case தான் அறியும் :D //

அதனால் தான் ஏதோ ஒரு பதிவில் என்றோ போட்ட பின்னூட்டத்தை தேடிப்பிடித்து இங்கு மேற்கோல் காட்டினீரோ??? :-P

My days(Gops) said...

//அடப்பாவி.அவரு சைவம்//


irundutu pogatum., appo beach pakkam poitu sundal vaangi saapdatum :)

@g3:-
//கூட்டணி உருப்பட்டாப்போல தான் :P //

ada, enna irundhaalum ippa irukira katchi maadhiri varumo?

Anonymous said...

////இந்த பூனை beer அடிக்கும் அளவுக்கு திருட்டு பூனை//
indha poonai milk kudicha adhu normal.... aaana, indha pooonaium beer adicha , adhu oru adhisiam... so, adhisiam song ah bgm ah podunga ippo ok va?
//

ஒரு பேச்சுக்கு சொன்னேன்.சிவிஆர் ரொம்ப ரொம்ப நல்லவர்.உங்களை மாதிரி இல்லை.

My days(Gops) said...

@thurgah :- //ஒரு பேச்சுக்கு சொன்னேன்.சிவிஆர் ரொம்ப ரொம்ப நல்லவர்//

adhu engalukkum theriumey.....

//உங்களை மாதிரி இல்லை. //
idhu enakku theriaadhey... avlo nallavana naan? he he he

Anonymous said...

/அதனால் தான் ஏதோ ஒரு பதிவில் என்றோ போட்ட பின்னூட்டத்தை தேடிப்பிடித்து இங்கு மேற்கோல் காட்டினீரோ??? :-P //

அது வந்து ஆதரத்தோட காண்பிக்கனும்.இல்லைன்னா மக்கள் நம்ப மாட்டாங்க.

Anonymous said...

//அது போல ஒரு முத்தி போன case காலை இன்னொரு முத்தி போன case தான் அறியும் :D //
aaaama, naanga rendu perum muthi ponvanganu sollurathuku oru over aha muthi ponavanga naaala thaan solla mudium.. he he he//

doctor kuda solluvangale.appadina avanga muthi poonavangu arthama?

Anonymous said...

////உங்களை மாதிரி இல்லை. //
idhu enakku theriaadhey... avlo nallavana naan? he he he //

மனசாட்சி இல்லை உங்களுக்கு?நீங்க பண்ற அட்டாகசத்துக்கு நீங்க நல்லவரா?

My days(Gops) said...

@thurgah :- //doctor kuda solluvangale.appadina avanga muthi poonavangu arthama?//

adhukunu, neeenga doctor nu ungala solli adha naanga aaamanu sonna, appo neenga sonna statment kandipaa unmai nu ellorukum therinchidum he he he eh

My days(Gops) said...

@thurgah :-
//மனசாட்சி இல்லை உங்களுக்கு?//
he he ipo thaan eduthu indha washing machine la thuvaika pottu iruken..

//நீங்க பண்ற அட்டாகசத்துக்கு நீங்க நல்லவரா? //
he he he adhai neenga ellam thaan tell anum..

Anonymous said...

/adhukunu, neeenga doctor nu ungala solli adha naanga aaamanu sonna, appo neenga sonna statment kandipaa unmai nu ellorukum therinchidum he he he eh
//

ennaku poi pesa varathu.i proved my statement with valid proof

Anonymous said...

////நீங்க பண்ற அட்டாகசத்துக்கு நீங்க நல்லவரா? //
he he he adhai neenga ellam thaan tell anum..
//
hehe...naan kandipa neega nallavarunu solluven nu mathum ninaikathinga.

My days(Gops) said...

@thurgah :- /ennaku poi pesa varathu.//

venum na , auto pudichi tharava?

CVR said...

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா??
வாய்ப்புண்ணுக்கு வெங்காயம் தேவையா??
கால்புண்ணுக்கு கார் சாவி தேவையா???


அதுபோல!!
அண்ணன் கோப்ஸ் நல்லவரா கெட்டவரா எனத்தெரிய மணி ரத்னத்தையா கூட்டிட்டு வர முடியும்???

இது என்ன சிறு புள்ளத்தனமா இருக்கு!! :-P

My days(Gops) said...

//அண்ணன் கோப்ஸ் நல்லவரா கெட்டவரா எனத்தெரிய மணி ரத்னத்தையா கூட்டிட்டு வர முடியும்???
//

avara yempaah kootitu vara, oru thirshavo, oru shreya vo koootitu vandha, oru vanakkam vaipen..... [:P]

Anonymous said...

/கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா??
வாய்ப்புண்ணுக்கு வெங்காயம் தேவையா??
கால்புண்ணுக்கு கார் சாவி தேவையா???

//

இது எல்லாம் தேவை இல்லைதான்

//அதுபோல!!
அண்ணன் கோப்ஸ் நல்லவரா கெட்டவரா எனத்தெரிய மணி ரத்னத்தையா கூட்டிட்டு வர முடியும்???

இது என்ன சிறு புள்ளத்தனமா இருக்கு!! :-///

இப்போ ஏன் மணிரத்னம் எல்லாம் இங்கே.கோப்ஸ் பத்தி சொல்ல நம்ப g3 அக்காவே போதும்...அவங்களை கூட்டிகிட்டு வரேன்

Anonymous said...

/avara yempaah kootitu vara, oru thirshavo, oru shreya vo koootitu vandha, oru vanakkam vaipen..... [:P] //

உங்க fav namithavai koothitu varuvar

My days(Gops) said...

@thurgah.

//கோப்ஸ் பத்தி சொல்ல நம்ப g3 அக்காவே போதும்...அவங்களை கூட்டிகிட்டு வரேன் //

yaaru sorna akkavai ah... koootitu vaaanga....avangalukku therinchadhu ellam, endha hotel'la enna menu, edhu taste ah irukum nu mattum thaan.. he he he he.

//உங்க fav namithavai koothitu varuvar //
ada, namma fav thrisha thaanga..

G3 said...

75-th commentu :-))

Bharani said...

sema rowse kaatreenga annathe....naduvule enna vera izhuthu....enna kodumai ace idhu...

Bharani said...

//யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை//...avvvv....

Bharani said...

// இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்//...chancae illa.....kalaasal...

Arunkumar said...

post sema ROTFL thala :)
eppidi ungalaala mattum ippdi ellam ezhuda mudiyuthu?

Arunkumar said...

washing machine vaanginada ivalo caamidiya yaarum solla mudiyaathu.. thala-na thala thaan :P

Arunkumar said...

//
இப்பவும் நான் வாஷிங்க் மெஷினை தான் சொல்றேனுங்கோ
//
aama aama :)

Arunkumar said...

//
பூரிக்கட்டை பிதாபங்கள் தொடரின் அடுத்த பகுதி வெகு பிரமாதம். தொடரின் மையக்கருத்து இந்த பகுதியிலும் ஆணித்தரமாக சொல்லப்பட்டிருப்பது எழுத்தாளரின் ஆழ்ந்த அனுபவத்தின் சிறந்த எடுத்து காட்டு!!! :-D
//

LOL :) CVR kalakkitinga :P

Arunkumar said...

//" பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!//

mudiyala.. epdi idhellam? thambi gops ungalta irundhu kathukitaara illa vice-versa va?

Arunkumar said...

//உங்களுக்கு நான் ட்ரீட் தரேன் சுக் சாகருல. மெனு - வேற என்ன, சூசு தான்! :)//

cha cha aprom ungalukkum naatsukkum enna vithyaasam.. neenga sukh-sagar pakkathula irukkura potti kadaila oru thenmittai vaangi kudunga podhum :)

Arunkumar said...

oru 4 peru serndhu ingana sema gummi pola :)

KK said...

Uncle kalakitel!!! semma ROTFL!!!

//தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!//
Ithu padichathe paal payasam kudicha maathiri irukku... so G3'ku yethukku sooos???

KK said...

//"இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"//

Note panna vendiya vishayam... note paniten... intha maathiri sarakellam appo appo yeduthu vidunga :D

Anonymous said...

கல்யாண கிப்டாக வாஷிங்க் மெஷின், பிளாஸ்மா டிவி எல்லாம் வரும்னு சப்பு கொட்டிண்டு இருந்த எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்.
Ha Ha Ha - Ippadi unmaiyai sollikareengalae!!!!!! Neenga nalla paiyan ambi .......

Label la Poori kattai nu serthi irueengalae? Enna achu ? Poori kattai ivvalavu seekirama? mmmmm Sollungo....

With Love,
Usha Sankar.

ambi said...

@CVR, Durgaah, G3 akka,

அடபாவிகளா! இன்னிக்கு கும்மி அடிக்க என் கடை தான் கிடச்சதா?

சும்மா வளச்சு வளச்சு அடிச்சு நாஸ்தி பண்ணி இருக்கீங்களே? :)

வேதா said...

/எல்லாத்துக்கும் பரணி தான்! (யப்பா பில்லு! இதுல எந்த உள்குத்தும் இல்லை)./
என் சிஷ்யனை வம்புக்கு இழுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:D

வேதா said...

/ வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்./
அப்ப நீங்க உங்க ஊருக்கு போகும் போது இந்த வேலையை தான செய்வீங்க :)

ambi said...

@priya, ஆமா நீ தான் பஷ்ட்டு! எங்க வீட்டுக்கு வா! கேசரி கிண்டி தரேன். :)

ஓ! சேஷு மாமா முன்னாடியே வாங்கிட்டாரா?

//next grinder vangina story iruntha sollunga ambi //
@durgaah, grinder came as gift. he hee :)

//தொடரின் மையக்கருத்து இந்த பகுதியிலும் ஆணித்தரமாக சொல்லப்பட்டிருப்பது எழுத்தாளரின் ஆழ்ந்த அனுபவத்தின் சிறந்த எடுத்து காட்டு//
@CVR, LOL, சன் டிவி விமர்சன தொனியில் படிச்சு பார்த்தேன் :)

//Naatamai solli kudutha technica vachi ippadi ellarum G3kku aapu veikareengale..
//
@mgnithi, he hee, adhaane naatamai spl. :)

//seekiram tkt edhuthu anuppunga //
@G3 akka, already edutha ticket irukku. anupava? :p
sari, சரி, நீங்க பிளைடுல எல்லாம் வித்தவுட்ல தான் வருவீங்க!னு அருண் சொன்னானே? உண்மையா? :p

//poyum poyum ungala washing m/c la thokkaika solitale :).. kailaenna thoikka solli erukkanum//
@padma, vaama minnal! nee oruthi pothum enakku aapu vaikkarathuku. :p

//இதுக்காகவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே...(அதே தங்கமணியத்தான்...பத்த வைச்சுறாதப்பா//

@dubukku, அதானே! டுபுக்கா கொக்கா?

சரி, மன்னியும் உங்களையே தான் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களா? அத கேட்டுட்டு வாங்க முதல்ல. :p
இந்த மெஷினும் ஆட்டோமேட்டிக் தான்! :)

வேதா said...

/ஒரு சில மாமாக்கள் பொறுப்பு சிகாமணியாய் தங்கள் தங்கமணியின் புடவை, ரவிக்கை, இன்ன பிற ஐட்டங்களையும் அரசன் சோப் போட்டு வெளுத்து கட்டி எடுத்து வருவார்கள்/
பின்ன தங்கமணின்னா சும்மாவா? இதெல்லாம் டீபால்டா ரங்கமணிகள் செய்ய வேண்டிய வேலை :D

வேதா said...

/எனக்கு ஜலதரங்க கிண்ணங்கள், டீ கப், ஜி3 அக்கா சரக்கடிக்கற (சாரி உளறிட்டேன்!) சூசு குடிக்கற கண்ணாடி கோப்பைகள்னு தந்து ஆப்படித்து விட்டனர்./
நீர் பண்ற அலம்பலுக்கு இதுவே அதிகம்(கை கொடுக்கற சாக்குல ஜி3யோட வளையலை சுட ட்ரை பண்ண ஆள் தான நீ:))

வேதா said...

/ ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட /
மோதிர கையால குட்டு வாங்கறதுக்கு நீங்க கொடுத்து வச்சுருக்கணும் :)

வேதா said...

/இந்த போஸ்ட் பப்ளிஷ் ஆனதும் அதுக்கும் ஆப்பு - இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வெச்சுக்றது சொல்றாங்களா?)/
இதுல சந்தேகம் வேறயா? ;)

வேதா said...

/(சத்தியமா நான் வாஷிங்க் மெஷினை தான் சொன்னேன்)./
நாங்க நம்பிட்டோம் உங்க தங்கமணி நம்பல போல இருக்கே ;)

வேதா said...

/நமது பிளாகர் யூனியனிலிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து தான் இந்த வாஷிங்க் மெஷின் வாங்கப்பட்டுள்ளது!/
ஒவ்வொரு முறையும் நீங்க துணி துவைக்கும்போது(வாஷிங்மெஷினில் தான்)எங்க நினைவு வரும் :) எங்க நல்ல மனசை பாருங்க உங்க அழுக்கை போக்க மெஷின் வாங்கி கொடுத்துருக்கோம் :)இனிமேலாவது ஜீன்ஸை துவைச்சுப் போடுங்க ;)

வேதா said...

அட 99

வேதா said...

அடிச்சேன்யா செஞ்சுரி :)

வேதா said...

/விரைவில் எதிர்பாருங்கள் கும்தலக்கடி கும்மாவா! கேரளானா சும்மாவா!/
இது ஏதாவது டி.ஆர் படமா?:)
சரி உம்ம போஸ்டுக்கு இதுவே அதிகம் :)வர்ட்டா?:)

Anonymous said...

boorikattai pradhapangal pramadham,oru washing machine vanginatukke ivlo avasta padareengle!!!!!!!rombakashtam saami.
nivi

Anonymous said...

enga unga veetila pathiram yarru theikiranga?neenga illa thane?athutha BKP thodarula dish washer vaangiya anubavangal edhirparkalama.
nivi

Anonymous said...

t.v.remote kallakall.innamum unga sense of humour baaki irupaathu kurithuu magizhchhi.ithukku than valluvan"idukkan varunkal naguga "appave soolivechuttan.
nivi.

Anonymous said...

i couldn't control my smile.great post.
nivi.

Anonymous said...

:OOOOO ennadhu adhukulla 105a?! Mr.Ambi, naan unga pechu kaa!

-kodi

Anonymous said...

andha washing machinelaye ungalai pottu thuvaikka solren manniya! enakku theriyama oru post pottu 105 comment vera!!! idhai naan summa vida matten ambiyanne!

-kodi

Sumathi. said...

ஹாய் அம்பி,

சூப்பர் கலக்கல் போங்க, அது சரி, துணிக்கு மிஷின் ஒ.கே.

அப்ப இந்த அரைக்கறது (மிக்ஸி, கிரைண்டர்) கரைக்கறது, அப்பறமா சப்பாத்தி மாவு பிசையறது இந்த கதைல்லாம் எப்ப வரும் சார்?

Sumathi. said...

ஹாய் அம்பி,

//கேரளாவிலிருந்து ஓமனகுட்டியும் தருகிறான்?// ஏன் பஞ்சாப்லயிருந்து குடுத்தா வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?

Raji said...

Ambiyum Washing machineum nalla comedy padam ngoooo

Raji said...

//எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு//

ROFL:-)

dubukudisciple said...

che enna ambi idu...
ennoda thambi prove panna vendama?? oru photo eduthu poda vendama???

dubukudisciple said...

adu seri kerala omana kuttya innum marakaliya???

dubukudisciple said...

seri inime yarum DD akka kite paisa kuduthume enna panninanganu yosika matanga... naan thapichen.. ellarukum solliten naan kuduthachu ambikite

dubukudisciple said...

115 naan thane!!! iduku nee enaku oru plasma tv vaangi kudu podum

manipayal said...

" பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!

அந்த பீரயே 7அப்போட கலந்து ஷான்டி(shandi)யா அடிச்ச காலம் போய் இப்ப "ராரா" சரக்கெல்லாம் "ராரா"ன்னு உள்ள போகுது. As usual அம்பி post கலக்கல்.

ambi said...

//naduvule enna vera izhuthu....enna kodumai ace idhu...
//

@bharani, he hee, oru chinna correction billu:
enna kodumai Singale ace idhu...

//washing machine vaanginada ivalo caamidiya yaarum solla mudiyaathu.. thala-na thala thaan //
@arun, DanQ DanQ! :) enna vechu comedy ethuvum pannaliye..? :p

//neenga sukh-sagar pakkathula irukkura potti kadaila oru thenmittai vaangi kudunga podhum //

G3 akka note this point. :)

//Uncle kalakitel!!! //
@kk, இந்தா கேகே! பேசி தீர்த்துக்கலாம், உனக்கும் ஆப்பு ஜூலைல, நியாபகம் இருக்கட்டும். :)

//Label la Poori kattai nu serthi irueengalae? Enna achu ? Poori kattai ivvalavu seekirama?//

@usha shankar, he hee, yest chapathi dinner. so takkunu memoryla vanthu vittathu. :)

ambi said...

//என் சிஷ்யனை வம்புக்கு இழுப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்//

@veda, இத பார்த்தா கண்டிக்கற மாதிரி தெரியலையே! :p

//நீங்க உங்க ஊருக்கு போகும் போது இந்த வேலையை தான //

எந்த வேலைய?னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேடம், மக்கள்ஸ் குழம்பறாங்க. :)

//கை கொடுக்கற சாக்குல ஜி3யோட வளையலை சுட ட்ரை பண்ண ஆள் தான நீ//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? ;)

//எங்க நல்ல மனசை பாருங்க உங்க அழுக்கை போக்க மெஷின் வாங்கி கொடுத்துருக்கோம் //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! peelings of banglore. :)

//இது ஏதாவது டி.ஆர் படமா?:)

wait pls :)

சரி உம்ம போஸ்டுக்கு இதுவே அதிகம் //

கீதா பாட்டி இத படிச்சா ஒரே புகைச்சல் தான்!

@geetha paati, இப்ப தெரியுதா வேதா எங்க கட்சினு! :)

//neenga illa thane?athutha BKP thodarula dish washer vaangiya anubavangal edhirparkalama.
//
@nivi, சும்மா இருங்கய்யா! நல்ல கிளப்பி விடறாங்க பா! :)

//i couldn't control my smile.great post.
//
DanQ DanQ! :)

@kodi, ellaam kummi commentu, pugunthu vilayidaanga. oru commentu pottu po thaayi :)

//ஏன் பஞ்சாப்லயிருந்து குடுத்தா வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?
//
@sumathi, அய்யோ! பஞ்சாப்பா? :)

//ellarukum solliten naan kuduthachu ambikite
//
@DD akka, ahaa! ithuvallavo porupunarchi! :)

@Raji Danks alot. :)

ambi said...

//அந்த பீரயே 7அப்போட கலந்து ஷான்டி(shandi)யா அடிச்ச காலம் போய் இப்ப "ராரா" சரக்கெல்லாம் "ராரா"ன்னு உள்ள போகுது.//

@mani, டெக்னிக்கலா ஏதோ சொல்றீங்க, ஆனா எனக்கு தான் புரியலை.

//As usual அம்பி post கலக்கல்.
//
danQ! DanQ!

கீதா சாம்பசிவம் said...

ஓ.சி. வாஷிங் மெஷினுக்கே இவ்வளவு லொள்ளா? சகிக்கலை!:P

கீதா சாம்பசிவம் said...

அது சரி, கமென்ட் வாங்கறதுக்காக அவங்க கிட்டே முன்கூட்டியே சொல்லிட்டு, இப்போ என்னைப் பார்த்து "வேதா என் கட்சி"யா? அதெல்லாம் வேதா என் கிட்டே சொல்லிட்டுத் தான் கமென்டினா. அது தெரியுமா? தாங்கலை! :
சிவிஆரும், மை டேஸும், துர்காவும், பேசி வச்சுக்கிட்டு கமென்ட் போட்டதுக்கே இவ்வளவு லொள்ளா? தாங்கலை! :P

மு.கார்த்திகேயன் said...

//துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்//

அந்த கொடுப்பினை கூட இப்ப இருக்க (உனக்கும் சேர்த்து தான்) கணவன் மார்களுக்கு கிடைக்கிறது இல்லியேப்பா அம்பி

Ponnarasi Kothandaraman said...

Adadey.. Puthumana thambathiyinar epdi keeringo! :D

Very good 2 c the blog unions awesome deed! :)

Fridge,AC,Grinder ellam yaaru vaanguvangalam :P Kidding!

Ponnarasi Kothandaraman said...

Bytheway ithellam unmai thaney? As usual summa nakkal panirukeengala illana? Naa vera serious'a comment potruken! :(( Bulb adichitena?

shree said...

:)
enna dhan kalyanam agi yenna, adanga mattengariye - un pin kurippa pathi dhan solren

மு.கார்த்திகேயன் said...

//உங்க டிரஸ் எல்லாம் கழட்டி தந்து என்னை துவைத்து தர சொல்லப்படாது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா//

அடச்சே! நான் அப்படி பண்ணலாம்னு நினச்சேன்.. தப்பிச்சிட்டியேப்பா அம்பி

My days(Gops) said...

thala ennadhu 126 aah?
eppadi ippadi ungaluku mattum score varudhuney therialai ey.
he he he

//@CVR, Durgaah, G3 akka,
அடபாவிகளா! இன்னிக்கு கும்மி அடிக்க என் கடை தான் கிடச்சதா?
//

he he he ellaamey indha effect thaan..

My days(Gops) said...

/"சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"னு வரவேண்டியதை பாட்டு பாடி வரவழைத்து, நைசா பங்காளி வயலுக்கு உரமிட்டு, அந்த வேட்டியை நம்ம வடிவேலு ஸ்டைலில் லேசா தூக்கிண்டு ஒரு வழியா ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்து, 501 சூப்பர் பார் சோப் போட்டு பாறாங்கல்லில் அந்த வேட்டியை அடிஅடினு அடித்து(துவைக்கும் போது அவரது தங்கமணி நியாபகம் போலும்) அதிரடி சலவை செய்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள்.
//

ROTFL..
ippo ellam kaalam maaari pochi.. he he he...

i mean, formula onnu thaaan,
but place thaan vera, aathangaraiku badhil la , bathroom la nu solla vandhen....

My days(Gops) said...

//நம்ம ஜீன்ஸை எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை தானே துவைக்கிறோம்? வாஷிங்க் மெஷின் எல்லாம் இப்போ தேவைப்படாது!னு நினைத்த எனக்கு//

jeans kandupudichavan idha manasula vachikittu thaaan introduce panni irupaaan pola...

//" பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!னு தங்கமணி மண்டையில் குட்டு குட்டுனு குட்ட அகர முதல எழுத்தேல்லாம் அறிய வைத்தாய் தேவி!னு கதறாத குறையாய்//

lollu, aaaama beeer ku enna side dish vaanguveenga?

//இதோ பாருமா! எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு டகால்டி பண்ணி பாத்தும் ஒன்னும் நடக்கலை.//
typical ambi touch thala... chancey illa...

(aaama, hema singh enna sollluraaanga?)

Guna said...

//எங்க பேமிலில டீவி ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தறத்துக்கே நாங்க வீட்டு மெயினை ஆஃப் பண்ணிட்டு தான் மாத்துவோம். கரண்ட் சமாச்சாரம்னா அவ்ளோ பயம்!"னு//

கலக்குறீங்க போங்க..
ஒரு சின்ன சந்தேகம்...
வாஷிங் மெஷின,உங்க வீட்டில வச்சிருக்கீங்க, ஓமன குட்டிய எங்க ......???(சத்தியமா உங்க குடும்பத்துல குழப்பம் வரணும்னு, இத கேக்கலைங்க ;))

Blogeswari said...

rofl-ed .. lovely :)

Aani Pidunganum said...

ambi

super post, first ippadi thaan irukum, poga poga ellam sariyapoedum... Naanga ellam kalyanam aagiyum ippadi sondha selavula sooniyam vechundadhundu...But ippo munnadi alavuku ellai.......

Anonymous said...

//@CVR, Durgaah, G3 akka,

அடபாவிகளா! இன்னிக்கு கும்மி அடிக்க என் கடை தான் கிடச்சதா?

சும்மா வளச்சு வளச்சு அடிச்சு நாஸ்தி பண்ணி இருக்கீங்களே? :)


///

gops peyar varala?!!avaru ellam ungaluku theriyala...avar nalathaan eppadi aachu...
:D

hehe...G3 akka paasama koopithanga.so oodi vanthen.unga vudu vera free ah irunthatha...so played...next time post poodtha solli annupunga,appadiye comment moderation poodama iruntha engaluku vaasathiya irrukum

Dreamzz said...

அட்ரா அட்ரா! சூப்பர் வாஷிங்மெஷின் வாங்கியாச்சா! கூல்!

Dreamzz said...

//இதுக்கு மேல விலையை குறைக்கனும்னா நான் தான் உங்க வீட்டுக்கு வந்து தினமும் துவைச்சு போடனும்!னு க//

ROFL! athu sari thaan!

Dreamzz said...

enna company pa vaanganeenga?

வல்லிசிம்ஹன் said...

அம்பி,அண்ணா டிஷ் வாஷர் எழுதினா தம்பி வாஷிங் மெஷினா,.
நல்லாத்தான் போறது புராணம்.
இதில ஓமனக் குட்டி வேறயா.

கசக்கி கட்டுங்கோ வேண்டம்னு சொல்லலை.கசக்கி கிழிச்சிடுதாங்க.:-))

வல்லிசிம்ஹன் said...

அம்பி,இப்போ எல்லாம் விளையாடற 8 விளையாட்டுக்கு உங்களை அழைத்து இருக்கிறேன்.
சும்மா ஊதி தள்ளிடுவீங்க.எனக்குத் தெரியும்.

Karthik Sriram said...

Dude, i was aprtciularly rofl when i read seemachu's routine - super appu!

LKS

Siva said...

washing machine(vera yaru manaivithan) vanginathukku santhosam vendiyathuthan

Siva said...

pls announce when will u publish ur next uranam(BLOG post). Otherwise, daily i hv to check ur blogsite. Is there any Alert in BLOG?

cheena (சீனா) said...

அம்பி, இடுகை முழுவதும் படித்தேன். ரசித்தேன் - நகைச்சுவை மிளிருகிறது.

ஆமா நம்பற மாதிரி ஏதாச்சும் சொல்லக்கூடாதா ?? ( வாஷிங் மெஷினெத் தான் வாசிங் மெஷினெத் தான்னு சொன்னா - அதுக்கு பின்னாடி என்னா )

வருவதை வரவழைக்கும், பங்காளி வயலில் உரம் போடுவதில் உள்ள இன்பம் இக்கால இளைஞர்களுக்கு கிட்டாத இன்பம்.
//
" பீரானாலும் சைடு டிஷோடு அடி! ஜீன்ஸானாலும் கசக்கி கட்டு!//

Adada enna oru thathuvam...//

ர்ர்ர்ர்ரீபீட்ட்ட்டேஎய்ய்ய்ய்ய்ய்

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信