Thursday, June 14, 2007

மொய்

பொதுவாக கல்யாணங்களில் மக்கள் எந்த அளவுக்கு சாப்பாடு பத்தி பேசுவார்களோ( நான் ஜி3 அக்காவ ஒன்னும் சொல்லலை) அதே அளவு முக்கியத்துவத்தை மொய் எழுதுவதிலும் (ஹிஹி வசூலிப்பதிலும் தான்) காட்டுவர்.

குழந்தைக்கு (அட நான் இல்ல பா) காது குத்துவதிலிருந்து, பூப்புனித நீராட்டு, பரிசமிடுவது, முறை மாமன் சீர், கல்யாணம் என தமிழர்களின் வாழ்வில் மொய் என்பது பின்னி பிணைந்து விட்ட ஒரு விஷயமாகி விட்டது.
அன்பை வெளிகாட்ட ஒரு வழியாக இருந்த இந்த மொய், இப்போழுது பலருக்கு கவுரவப் பிரச்சனையாகி அடிதடி வரை கூட சென்று விடுகிறது.

"சோறு சாப்ட கோவிந்தசாமி எழுதும் மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்ய்"னு எங்க ஊர்களில் குழாய் மை செட்டில் ஒருவர் முழக்கமிட்டால் தான் அவரது சாதி சனங்கள் மத்தியில் அவருக்கு பெருமை.

பெரிய குடம், அரிசி அண்டா, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு, என பொருளாகவும் இந்த மொய் வசூலாகும்.
பின்னர் காலம் மாற, மாற அண்டா-குண்டா எல்லாம் சுவர் கடிகாரம், டின்னர் செட், கண்ணாடி-பீங்கான் செட், மிக்ஸி, கிரைண்டர் என புதிய அவதாரம் எடுத்தது.
இதில் மாப்பிளை பேரில் வரும் மொய் தனி, பெண் பேரில் வருவது தனிதனியாக பிரித்து குடுக்கப்படும். கல்யாணம் எல்லாம் முடிந்து, மணமக்கள் இருவரும் ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு இந்த கிப்ட் வகையறாக்களை பிரித்து பார்த்து தம் பெயரில் வந்த கிப்ட் பத்தி ஒருவருகொருவர் நக்கல் விட்டு கொள்வது பொதுவாக நடக்கும் விஷயம்.

ரங்கு: ( நக்கலாக) உன் அருமை பெரியம்மா என்ன இப்படி 10 கண்ணாடி கிண்ணமா பிரசண்ட் பண்ணி இருக்கா? நான் என்ன அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?

தங்கமணி: (பதிலுக்கு நக்கலாக) உங்காத்துல மட்டும் என்ன வாழுதாம்? உங்க அருமை அத்தை பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?

ரங்கு: (சமாளிப்புடன்) சரி, குழந்தைகள் எண்ணை பட்சணம் போட்டு வெச்சுகட்டுமேனு ஆசையா குடுத்ருக்கா. எவ்ளோ வெயிட்டா இருக்கு பாரு! இத மாதிரி தூக்கு உங்காத்துல பாத்ருக்கவே மாட்டா.

தங்கமணி: நன்னா சமாளிக்காதீங்கோ! ஈஈஈனு இளிச்சுண்டு வந்தாளே உங்க பாம்பே மாமி, வெறும் ஃபொக்கேவோட தானே கை வீசிண்டு வந்தா ரிஷப்ஷனுக்கு. அதுவும் ஊமத்தம் பூ வெச்சு ஒரு ஃபொக்கே, இந்த ஊருலயே உங்காத்து காராளுக்கு தான் கிடைக்கும்.

ரங்கு: (ரோஷத்துடன்), இதோ பாரு, நானும் பேசுவேன் அப்புறம்! சாயந்தரம் ஜானுவாசத்துக்கு கடலேண்ணைல ஒரு பஜ்ஜி போட்ருந்தேளே, யப்பா சாமி! சாப்ட அவனவனுக்கு கார்க் புடுங்கிருச்சு தெரியுமா? உங்க சித்திக்கு கூட நாலு வாட்டி போச்சாம்.

தங்கமணி: சரி, சன் பிளவர் ஆயில் காலியாயிடுச்சுனு ஒரு சேஞ்சுக்கு அதுல போட்டோம். அந்த பஜ்ஜிய கூட விட்டு வைக்காம ஒரே ஆளா 15 பஜ்ஜி சாப்டாரே உங்க கல்கத்தா சித்தப்பா அவருக்கு எத்தனை தடவ போச்சு?னு நான் சொல்லவா? மண்டபமே நாறி போச்சு.
இதுல கொத்தமல்லி சட்னி இல்லையா?னு மனுஷனுக்கு ரொம்ப குறை வேற.

ரங்கு: டிஸன்சியே இல்லை உங்காத்து காராளுக்கு.

தங்கமணி: டிஸன்சி பத்தி ரொம்ப பேச வேண்டாம். லைட் மியூசிக் காரா பாடின "அப்படி போடு! போடு! பாட்டுக்கு வேட்டி அவுந்தது கூட தெரியாம உங்க மாதுங்கா மாமா ஆடின ஆட்டம் தான் அன்னிக்கு டாக் ஃஆப் தி டவுனாம். சன் டிவியில பிளாஷ் நியூஸ்ல போடாத குறை தான்.

ரங்கு: (சமாதான தொனியுடன்) சரி, வீட்டுக்கு வீடு வாசப்படி!

தங்கமணி: ( நக்கலாக) எங்காத்துல எல்லாம் ஃலிப்ட் தான்.

ரங்கு: (பாவமான முகத்துடன்) ரொம்ப டயர்ட்டா இருக்கு. உங்க டெல்லி அத்தை ஆசையா பிரசண்ட் பண்ண சரக்கடிக்கற கண்ணாடி கோப்பைல அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன். உங்க அத்திம்பேருக்கு அதேல்லாம் உண்டா?

தங்கமணி: இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

50 comments:

சிங்கம்லே ACE !! said...

முதல் இடம் எனக்கே..

சிங்கம்லே ACE !! said...

லேபில் : அம்பியின் அனுபவங்கள்..

என்ன அம்பி அதுக்குள்ள பூரிக்கட்டை யூஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு போலிருக்கு.. :D :D

manipayal said...

நியாபகம் வருதே நியாபகம் வருதே நியாபகம் வருதே

mgnithi said...

Label : thangamani.

Intha labella neraiya post ethir paarkalama?

mgnithi said...

//பெரிய குடம், அரிசி அண்டா, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு, என பொருளாகவும் இந்த மொய் வசூலாகும்.
பின்னர் காலம் மாற, மாற அண்டா-குண்டா எல்லாம் சுவர் கடிகாரம், டின்னர் செட், கண்ணாடி-பீங்கான் செட், மிக்ஸி, கிரைண்டர் என புதிய அவதாரம் எடுத்தது.
//

ambi... ithula ethellam neenga vasool paneenga..

mgnithi said...

Total R.O.T.F.L post :-)

Unga kathaiyila first dialogue mudinjavudane poorikattai paranthirukkume?

mgnithi said...

naan vanthathukku moi vechachu...

CVR said...

"பூரிக்கட்டை பிரதாபங்கள்" என்று அணையா விளக்காக வெளிவர இருக்கும் தொடரின் முன்னுரையாக இந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.

தொடரின் முன்னுரையிலேயே பூரிக்கட்டையின் மகத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ரங்கமணி தங்கமணியிடம் சரன்டர் ஆகும் கட்டம் இந்த பதிவின் சிறப்பம்சமாகும்!!

நடத்துங்க!! ;-D

தி. ரா. ச.(T.R.C.) said...

இதில் மாப்பிளை பேரில் வரும் மொய் தனி, பெண் பேரில் வருவது தனிதனியாக பிரித்து குடுக்கப்படும். கல்யாணம் எல்லாம் முடிந்து, மணமக்கள் இருவரும் ஒரு வழியாக செட்டில் ஆன பிறகு இந்த கிப்ட் வகையறாக்களை பிரித்து பார்த்து தம் பெயரில் வந்த கிப்ட் பத்தி ஒருவருகொருவர் நக்கல் விட்டு கொள்வது பொதுவாக நடக்கும் விஷயம்


ஆமாம் இதெல்லாம் சரியான்னு ஆடிட் பண்ண வேண்டாமா. நான்வேணா இலவசமா செய்யட்டுமா?
R O F T l post. good good

G3 said...

Indha postukku label Anubavangalnu illa irukkanum :P

கீதா சாம்பசிவம் said...

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!
அம்பிக்குப் பூரிக்கட்டை அடி விழுவதிலே ஆனந்தமே!

எல்லாரும் கொண்டாடுவோம்,
எல்லாரும் கொண்டாடுவோம்,
தங்கமணியின் பேரைச் சொல்லி,
அம்பியோட தங்கமணியின் பேரைச் சொல்லி
அம்பி அடி வாங்கும் சந்தோஷத்தைக்
கொண்டாடுவோம்!

KK said...

Yenga poi polambarthunu theriyama blog'la polambureengalo??? aiyo paavam...

Poori kattai vaazhga :)

Padmapriya said...

sema ROFTL post..
Nadandhadha Ezhutheerkeengala? Nadakka pogudhunu guess pannirkeengala? yedhuvana enna... todarndu ezhudhunga.. engaluku ubayogampadum future la :)

வேதா said...

மொதல்ல நாங்க வச்ச மொய் பணத்துக்கு கணக்கு காட்டுங்க ;)

Anonymous said...

ambi,
Sooper blog.Quote pannina full blog um dhan quote pannanam.

Sirichu sirichu - vayatha vali...

Ellarum solradhai naan solla maten ambi - Poori kattai bhyagyam ellam ungaluku kidaikadhu ambi...

Ana onnu, anubavam pesaradhu...

kalyanam achae - saraku avvalavu dhan nu nenachen...

marriage anubavam continue aradhu. Nice one...

Idhae pol interestana anubavanalai ezhudhungo ambi....

With Love,
Usha Sankar.

Anonymous said...

adada arambichacha!!!!!!!!!!!enga boori kattayaila adivangama irukka mudiyalaya?ethukunga pessamapondaatiiye charanam sollidunga.
nivi.

Arunkumar said...

vaazhga poori kattai..

sema ROTFL :)

Priya said...

இந்த dialogues லாம் சமீபத்துல எங்கயோ DD அக்கா கேட்டாங்களாம்..

Balaji S Rajan said...

Ambi,

Athukullava.... Ippa puriyutha.... Veluthathu yellam paal illaima Kannu.

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. கல்யாணம் ஆகி ஒரு மாதத்துலேயே சண்டை ஆரம்பிச்சாச்சா?

டிடி அக்கா எங்கே? அண்ணனையும் அண்ணியையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க அக்கா.

Blogeswari said...

Lol geetha and CVR
Ambi : Did you get Shahrukh khan padam poaata frame? or was it salman for you? I got about 3 as gifts.
What about 'Sweet home' poaata wall hanging? if you havent got one yet, do let me know. enkitta 10 irukku . will be glad to send you some

Bharani said...

LOL....enna ore anubhava vaadai adikudhu dialogs-la ellam ;)

Bharani said...

adi balama ;)

Bharani said...

summa oru...

Bharani said...

oru quarter adichiti poren :)

Ponnarasi Kothandaraman said...

hahaha post'na ithu post! :P Ammani nalla gavanichangala..hehehe

Marutham said...

LOL!!!

Super post ambi :P
Idhu nanna irukey- ini ipdi neraya post pakalaam polirukkey :P

Conversation - ROTFL!! :) ELaam kindaluku pesinaalum- nallavey pesureengapa rendu perum ! ;)

Mothathula kalyanathula onnu ekka chekka MOI :P or edhumey therla...:P andha adhangathula potta post! :P
Right'a?? Heehee..kidding!

Anonymous said...

thangamani oru labela!!! adadada pala vishayam varum polirukke :D

-kodi

Anonymous said...

adhukulla oru maasam agiduchu parunga! sandai podaama ozhunga photova upload pannindu samartha ukkandu irundha ipdi poori kattaiyala vaanga vendi irukkuma?? :)

-kodi

Kittu said...

hah, kalyanam aagi adhukulla fight startingaa ? semma sandhoshama irukku.
poori kattai giftaa vandhuducha illa anupattuma ?
-K mami

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
கற்பனை என்றாலும்னு நாங்க பாடணுமா இப்ப.
இதில ஏதோகொஞ்சம் நிஜம் இருக்குனு காதில விழறதே...
சூப்பர்பா.:-P

Gopalan Ramasubbu said...

//ரங்கு: ( நக்கலாக) உன் அருமை பெரியம்மா என்ன இப்படி 10 கண்ணாடி கிண்ணமா பிரசண்ட் பண்ணி இருக்கா? நான் என்ன அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?

தங்கமணி: (பதிலுக்கு நக்கலாக) உங்காத்துல மட்டும் என்ன வாழுதாம்? உங்க அருமை அத்தை பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?//

என்ன குரு, போன்ல பேசும் போது நீங்கதான் டெய்லி சமைக்கறதா சொன்னீங்க? சமைக்கறது நீங்க பேக் பண்றது அவுங்ளா?

தங்கமணி மேடம்.. குரு நன்னா சமைக்கறாரா?

Anonymous said...

ரொம்ப லேட்டா வந்து திருமண வாழ்த்துக்களைச் சொல்லிகிறேன் :D

My days(Gops) said...

ada eppovo post potaacha? sorry inga kaatavey illa... ennada thala innum orey post ukkandhu irukaarey, naatamai maadhiri bayangara busy aagitaaru nu paartha... post pottu 4 naal aaagiduchi... ennathe solluven/.

My days(Gops) said...

//( நான் ஜி3 அக்காவ ஒன்னும் சொல்லலை)//
neeenga sollaaatium naaan g3 thaan ninaichikuvom..

/முக்கியத்துவத்தை மொய் எழுதுவதிலும் (ஹிஹி வசூலிப்பதிலும் தான்) காட்டுவர்//
ippo ellam cover la vachi koduthudraaangaley... appuram eppadi?

My days(Gops) said...

//அன்பை வெளிகாட்ட ஒரு வழியாக இருந்த இந்த மொய், இப்போழுது பலருக்கு கவுரவப் பிரச்சனையாகி அடிதடி வரை கூட சென்று விடுகிறது//

aaaaama aaaama,

//குழாய் மை செட்டில் ஒருவர் முழக்கமிட்டால் தான் அவரது சாதி சனங்கள் மத்தியில் அவருக்கு பெருமை.
//
adhulaium avaru "tag" name ah vuttu kooopitaa rosam pothukittu varum la avarukku....

quarter govindhana , verum govindhanu sonna eppadi irukum.. adha sollla vandhen..

My days(Gops) said...

//அதுல தண்ணி விட்டு டிங்-டிங்-டிங்க்னு ஜலதரங்கம் கச்சேரியா பண்ண போறேன்?
//
lollu thaaaney....

/பெரிய தூக்கு சட்டி குடுத்ருக்கா. உங்களுக்கு அதுல நாளைக்கு லஞ்ச் கட்டி தரட்டுமா?//
mrs.co, thalai kay vaaaa... punch superu.......

//! இத மாதிரி தூக்கு உங்காத்துல பாத்ருக்கவே மாட்டா.//
thala, selaadhu selaadhu..... dialouge ah maathunga......

My days(Gops) said...

// அதுவும் ஊமத்தம் பூ வெச்சு ஒரு ஃபொக்கே, இந்த ஊருலயே உங்காத்து காராளுக்கு தான் கிடைக்கும்//

rotfl...

//கடலேண்ணைல ஒரு பஜ்ஜி போட்ருந்தேளே, யப்பா சாமி! சாப்ட அவனவனுக்கு கார்க் புடுங்கிருச்சு தெரியுமா? உங்க சித்திக்கு கூட நாலு வாட்டி போச்சாம்.//
sabaaaash sareaaana poti.....

// மண்டபமே நாறி போச்சு.
இதுல கொத்தமல்லி சட்னி இல்லையா?னு மனுஷனுக்கு ரொம்ப குறை வேற.//
rotfl..yabba mudiala enaala mudiala....

My days(Gops) said...

/அப்படி போடு! போடு! பாட்டுக்கு வேட்டி அவுந்தது கூட தெரியாம உங்க மாதுங்கா மாமா ஆடின ஆட்டம் தான் அன்னிக்கு டாக் ஃஆப் தி டவுனாம். //

mrs.co, valuable points ah eduthu vuduraaanga. thalai aala onnum panna mudiala..... idha thaaan,
SSS nu solluvaaanga...

//எங்காத்துல எல்லாம் ஃலிப்ட் தான்.//
inga paaruda thirumbium.....

katcheri kalai kattudhu....

My days(Gops) said...

//அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன்.//
adada ennanga, episode sooodu pudikira edathula ippadi sattunu silent aaagiteeenga.....

Anonymous said...

//அட்லீஸ்ட் ஒரு ஜூஸாவது தாயேன்.//
adada ennanga, episode sooodu pudikira edathula ippadi sattunu silent aaagiteeenga.....

Edhuthunda dhanae poori kattaiku velai?

Amaidhiya irundhuta .......... he he he

With Love,
Usha Sankar.

My days(Gops) said...

//Edhuthunda dhanae poori kattaiku velai?//
usha shankar, idhu eppadi enakku thonaaaama ponuchi..

ada aama, boori kattai ah suthama marandhey poiten naan . :)

ambi said...

@ACE, சபாஷ்! சிங்கமடா நீயி!

//லேபில் : அம்பியின் அனுபவங்கள்..
//
அட இந்த லேபிள் கூட நல்லா இருக்கே!

//நியாபகம் வருதே நியாபகம் வருதே நியாபகம் வருதே//

@mani, ஆஹா உங்களுக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


@mgnithi, கண்டிப்பா எதிர்பார்க்கலாம்!

//ithula ethellam neenga vasool paneenga..//
ஹிஹி, அத சொல்ல மாட்டோம் இல்ல, வருமான வரி பிரச்சனை வந்துடும்.


//பூரிக்கட்டை பிரதாபங்கள்" என்று அணையா விளக்காக வெளிவர இருக்கும் தொடரின் முன்னுரையாக//

@CVR, அண்ணா! எதுக்குண்ணா இந்த கொலவெறி? :p

//இதெல்லாம் சரியான்னு ஆடிட் பண்ண வேண்டாமா. நான்வேணா இலவசமா செய்யட்டுமா?
//
@TRC sir, பாலுக்கு பூனையே காவலா? :p

//Indha postukku label Anubavangalnu illa irukkanum //

@g3 akka, ungalukkum oru naal unduu! Grrr!

@Geetha paati, என்ன பாட்டி, ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கு போலிருக்கே! :p

//Yenga poi polambarthunu theriyama blog'la polambureengalo??? //

@kk, கழுதை கெட்டா ( நிஜமான)குட்டிச்சுவரு! :p

//yedhuvana enna... todarndu ezhudhunga.. engaluku ubayogampadum future la //
@padma, ahaa, enna oru nalla ennam! :p

ambi said...

//மொதல்ல நாங்க வச்ச மொய் பணத்துக்கு கணக்கு காட்டுங்க //

@veda, அட! நம்ம கட்சிக்குள்ள என்ன கணக்கு? முதல்ல ஷ்யாம குடுக்க சொல்லுங்க, நான் குடுக்கறேன்.

//kalyanam achae - saraku avvalavu dhan nu nenachen...//
@usha shankar, ஆஹா! நீங்களுமா? இப்ப எல்லாம் டைமே கிடைக்க மாட்டேங்குது அதான். :p

//ethukunga pessamapondaatiiye charanam sollidunga.
//
@nivi, ahaa, good idea. neenga kooda apdi thaanoo? :p

//vaazhga poori kattai..
//
@arun, unakkum undu oru naalaikku! Grrrrr.

//இந்த dialogues லாம் சமீபத்துல எங்கயோ DD அக்கா கேட்டாங்களாம்..
//

@priya, கொஞ்ச மாசம் கழிச்சு உங்க வீட்டுலயும் கேட்கும். :p

//Ippa puriyutha.... Veluthathu yellam paal illaima Kannu. //
@balaji, anna, kuthunga ejamaan kuthunga! :)

//டிடி அக்கா எங்கே? அண்ணனையும் அண்ணியையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க அக்கா.
//
@my friend, நல்ல ஆள் பார்த்து சொன்ன போ! அவங்க தான் அம்பயரே! :)

//if you havent got one yet, do let me know. enkitta 10 irukku . will be glad to send you some
//
@blogeswari, ஓசி தானே! அப்ப என்ன வேணா அனுப்புங்க. :)

//adi balama ;) //
@bharani, illa, just missu! :)

//Ammani nalla gavanichangala..hehehe
//
@ponnarasi, ohh, superrra gavinikaraanga. :p

//Mothathula kalyanathula onnu ekka chekka MOI :P or edhumey therla...:P andha adhangathula potta post!//

@marutham, illa, nallave therichu! :)

//sandai podaama ozhunga photova upload pannindu samartha ukkandu irundha ipdi poori kattaiyala vaanga vendi irukkuma??//

@kodi, unmai! unmai! :)

//kalyanam aagi adhukulla fight startingaa ? semma sandhoshama irukku.//

@k-mami, என்ன ஒரு வில்லதனம்? :p

poori kattai giftaa vandhuducha illa anupattuma ?
//

ஏற்கனவே ரெண்டு வந்து இருக்கு. நீங்க வேறயா? தாங்காது!:)

//இதில ஏதோகொஞ்சம் நிஜம் இருக்குனு காதில விழறதே...//

@vallisimhan, ஹிஹி, கரெக்ட்டா கண்டுபிடிச்சுடீங்களே, சபாஷ்! :)

ambi said...

//பேசும் போது நீங்கதான் டெய்லி சமைக்கறதா சொன்னீங்க? சமைக்கறது நீங்க பேக் பண்றது அவுங்ளா?
//
@gops, யப்பா ஷிஷ்யா! உனக்கு போன் போட்டு பேசிய மேட்டர்களை இப்படி ஓப்பனா சொல்லி மானத்தை(?) வாங்கனுமா? :)

//ரொம்ப லேட்டா வந்து திருமண வாழ்த்துக்களைச் சொல்லிகிறேன் //

@durgaah, நன்றி ஹை!

@sachin gops, என்ன சச்சின் கோப்ஸ், அடிச்சு ஆடிட்ட போலிருக்கு! உனக்கும் இதே தான்! பாத்து சாக்ரதையா இருந்துக்க. :p

//Edhuthunda dhanae poori kattaiku velai?

Amaidhiya irundhuta .......... he he he
//

@usha shankar, அதான்! அதே தான்! :p

Anonymous said...

//Edhuthunda dhanae poori kattaiku velai?

Amaidhiya irundhuta .......... he he he
//

@usha shankar, அதான்! அதே தான்! :p

ellam anubavam dhan ambi,

Ingae engaathulae, No poorikattai... Sankar is always keep quite.Balamana edhir party irundha dhanae poori kataiku velai.He He He......

Ana sila samayam ippo ippo thonaradhu - ippadi amaidhya irukaradhukae poori kattai theviyo nu... chae chae pavam Sankar.Avaruku sandaiyae pidikadhu.....

Adhanal sonnen, Ungaluku poori kattai kidaiyadhu nu... :p

With Love,
Usha Sankar.

ambi said...

//Ana sila samayam ippo ippo thonaradhu - ippadi amaidhya irukaradhukae poori kattai theviyo nu... //

@usha shankar, ahhaaaa! shankar annaku seekrame aappaa? :p

Anonymous said...

// CVR said...
"பூரிக்கட்டை பிரதாபங்கள்" என்று அணையா விளக்காக வெளிவர இருக்கும் தொடரின் முன்னுரையாக இந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.

தொடரின் முன்னுரையிலேயே பூரிக்கட்டையின் மகத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ரங்கமணி தங்கமணியிடம் சரன்டர் ஆகும் கட்டம் இந்த பதிவின் சிறப்பம்சமாகும்!!

நடத்துங்க!! ;-D

///

அம்பி...யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.இந்த சிவிஆரை இப்படி நக்கல் பண்ணும் காலம் வரும்...so no worries friend :D

Anonymous said...

@usha shankar, ahhaaaa! shankar annaku seekrame aappaa? :p


Sankaruku no aappu ambi = Nallavaalai padutha kudadhu dhanae? :P

With Love,
Usha Sankar.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信