Friday, March 23, 2007

பார்த்த முதல் நாளே! - II


Part-I


என் முறைப்பை புரிந்து கொண்ட TRC சார், "சரி! பொண்ண வர சொல்லுங்கோ!னு சிக்னல் குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக! மற்றும் நம் உறவினரேல்லாம் வந்ருகாக! வாம்மா! மின்னல்!னு ஒன்னும் டயலாக் அடிக்கலை. அம்மணியும் மின்னல் மாதிரி சரட்டுனு எல்லாம் ஒன்னும் வரலை.

மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
என் போஸ்ட் படிச்சதும் உடனே அம்மணி பிளாக் என்ன கலர்?னு கிளிக் பண்ணி பாக்கற வேலை எல்லாம் வேண்டாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா!
வந்து பெரியவங்களுக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணினாங்க.
"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"

(சரி, சரி, இதேல்லாம் கண்டுக்கப்படாது!)
எல்லாரும் ஒரு வழியா அவங்க அவங்க இடத்துல செட்டில் ஆனதுக்கு அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!
கேசரி நன்னா இருந்தது. போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?

சரி, மறப்போம்! மன்னிப்போம்!

அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்.
டீயா? காப்பியா?னு தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.
இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!

இதுக்கு தான், சைட் அடித்து கொண்டே உண்ணேல்!னு அவ்வையார் சொல்லி இருக்காங்க.
அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.

தங்கமணி பரத நாட்டிய டான்ஸர்! அதுக்காக நடு ஹால்ல சலங்கைய கட்டிண்டு, ரா! ரா! சரசுக்கு ரா! ரா!னு ஆட சொல்ல முடியுமா?
எங்க அப்பாவுக்கு பாட்டுனா உயிர். காலையில 4 மணிக்கு எழுந்து சாதகம் எல்லாம் நடக்கும். அதுவும் முருகன் பாட்டுனா அவ்ளோ இஷ்டம். அதுனால ஏற்கனவே தங்கமணிய ஏதவது முருகன் பாட்டு நாலு வரி பிராக்டிஸ் பண்ணி வை!னு சொல்லிட்டேன்.
சொல்லிட்டாலும் எனக்கு ஒரே பயம்!
மேடம், "பழம் நீயப்பா! தமிழியான பழம் நீயப்பா!னு பாடிட்டா என்ன பண்றது? நல்ல வேளை! அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க. எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?

ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

எல்லோரும் கேசரிய முழுங்கறதுலயே கவனமா இருந்தாங்களே தவிர, அடே! பொண்ணு கூட தனியா பேசறீங்களா(கடலை போடறீங்களா) அம்பி?னு யாருக்கும் தோணலை.
இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...

அப்ப தான் ஒரு வழியா தாய் மாமா திருவாய் மலர்ந்தார், "பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"

என் வயத்துல ஆரோக்யா பால வார்த்தீங்க மாமா!னு தடால்!னு எழுந்துட்டேன்.
TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை. கைய கால வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டான். எதுக்கும், நீயும் அவன் கூட போயிட்டு வா!னு என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.
மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.
ம்ம், ம்ம், அப்புறம்?னு எல்லோரும் சப்பு கொட்ட வேண்டாம்.

வெறும்ன பேசிட்டு வெளியே வந்தோம்.(வர வெச்சுட்டாங்க).
எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
ஊருக்கு போயி லெட்டர் போடரோம்!னு அல்வா குடுக்கலை. உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)

86 comments:

mgnithi said...

Naan thaan firstu
Attendance muthala..
Commentu appala..

கார்த்திக் பிரபு said...

சுவாரசியத்துக்காக இடையிடயே சேர்க்க பட்ட க்மென்ஸ் லாம் படம் கிளப்பது

நிறைய படம் பாப்பீங்களோ

mgnithi said...

//"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"
//

Gud one..

mgnithi said...

//இந்த இடைப்பட்ட கேப்புல, சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)

எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!
//

Ithukku thaan eppavum aduthavanga platea paarthutu irukka koodathu.. ha ha .

mgnithi said...

//ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)
//

Annaikku mattuma?

mgnithi said...

//மைக்கேல் மதன காமராஜன் படம் மாதிரி, திருப்பு! என்னது இது? நான் கேள்விப்பட்டதே இல்லை. கடைசி வரைக்கும் இந்த அவினாசி கூடவே இருப்பானா?னு நானும் டயலாக் விடாத குறை தான்.
//

ROTFL...

mgnithi said...

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//

Neenga mattum appadi kai kaatirukanum appuram therinjirukkum...

dubukudisciple said...

enna ambi idu..
idu ellam thaan unga thangamaniku theriyume..appuram enna friday release.. periya tamizh padam release panratha ninaipa??

//ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)

Annaikku mattuma?
னக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.

Neenga mattum appadi kai kaatirukanum appuram therinjirukkum...//
Repeate

dubukudisciple said...

enna kavithai ellam thool parakarthu... yar ubayam?

dubukudisciple said...

appa vanthathuku rounda 10

Sumathi said...

ஹாய் அம்பி,

சே..இன்னிக்கு 3 மணியிலிருந்து பாத்துகிட்டே இருந்தேன்....
அப்படியும் கூட ஹூம் முடியலை...

mgnithi said...

//
நல்ல நாள் பார்த்து நிச்ச்யதார்த்தம் வெச்சுக்கலாம்!னு நடுவர் மன்றம் தீர்ப்பு கூறியது! :)
//
Neenga pazhakka thoshathula theerpai maathunganu kathalaiye?

Sumathi said...

ஹாய் அம்பி,

//எனக்கு பிடிச்ச மெரூன் கலர் பட்டு புடவையில்(ஹிஹி, நானும் போன்ல நேயர் விருப்பம் சொல்லிட்டேன்) பாந்தமாக.//
ஓஹோ...ஏற்கெனவே பேசி முடிவு பண்ணி தான் இந்த அரங்கேற்றமா?

Sumathi said...

ஹாய் ம்பி,

//போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?//
@ms.c.note down..ஏற்கெனவே டிடி வீட்டு ரசத்துல உப்பு கம்மினு சொன்னாரு, இப்போ போண்டா மிருதுவாயிருக்கனும்னு ...ஹும்
என்னமோ போங்க ..

Madhusoodhanan said...

I enjoy ur posts , esp the comedy sense. ana oru varutham.film comdey ya kuratchu natural comedy poteenga na inum swarsiyama irukkum.. En thaazhmaiyana karuthu

Sumathi said...

ஹாய்,

//ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)..

ஆமாமாம்..SPB கூட ரொம்ம்ப வருத்தப் பட்டாரு.

Sumathi said...

ஹாஇ அம்பி,

//பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"/

அதான் முன்னாடியே எல்லாம் என்ன கலர் புடவை கட்டனும்னு கூட டிசைட் பண்ணியாச்சு..அப்பரம் இப்ப வேறயா?
ஆனாலும் இது ரொம்ம்ப ஓவரா தெரியல?

Sumathi said...

ஹாய் அம்பி,

//உடனே ரிஸல்ட் டிக்ளேர் செய்யப்பட்டது.//

இல்லேன்னா நீங்க சும்மா விட்ருவீகளாக்கும்....
திருநெல்வேலிகாரங்க எத எடுப்பாங்கன்னு தெரியாதாக்கும்?...

Anonymous said...

நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்

Nice to read this ambi..... Rendu perum patta kashtamum adhan palanum purinjadhu.....

With Love,
Usha Sankar.

Bharani said...

Superb narration annathe.....nerla vandhu kalathukitta maadhiriye irundichi.....naduvula oru kavidhaya eduthu vera uteenga paaarunga....anni clean bold :)

mgnithi said...

Ambi,
As usual nice narration in this post.

மு.கார்த்திகேயன் said...

நிறைய பேர் கும்மி அடிச்சுட்டாங்க போல.. படிச்சிட்டு வர்றேன் அம்பி

Padma said...

first comment podalamnu daily daily vandu parthen.. evalo peru comments pottutanga:P... vellikizhai post podara pazhakatta ennum vidaliya neengo:P.. parava ella edho sumara ezhadarel kavithai ellam:D.. en rangeukku elainalum;).. parava ella..
Mannii..
ambi anna ennamum velli kizhamai post podara.. neenga kavanichundu thane erukel?

மு.கார்த்திகேயன் said...

//முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)//

முன்னாடி பயங்கரமா வர்ணிக்கிறப்பவே நினச்சேன்.. இப்படி ஏதாவது கமெண்ட் அடிப்பேன்னு

மு.கார்த்திகேயன் said...

// போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது.//

அட சாமி! அம்பி லொள்ளு தாங்க முடியலையே

//இல்லாட்டி... (சரி துப்ப வேண்டாம்.)
//


என்ன சொன்னாலும் விடப்போறதில்லை உன்னை..

தூ!தூ!

இம்சை அரசி said...

// "விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"
//

nice :)))

மு.கார்த்திகேயன் said...

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//

தங்கமணிக்கு தங்கை இல்லையாக்கும்! இருந்தா நீ சொன்னாலும் சொல்லியிருப்ப படவா!

மு.கார்த்திகேயன் said...

//"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"
//

என்ன என்னமோ எழுதுற.. ஒண்ணுமே புரியலைடா சாமி!

நல்ல இருக்கு கவிதை, அம்பி!

SKM said...

//மெதுவாக இட்ட அடி எடுக்க,..... பாந்தமாக வந்தாங்க. (முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)//
ooruku vandhadhum shiva Thandavamdhan.;P

//"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"//

ada!ada!adadaa!

kuttichuvaru said...

mothamaa thamizh cinema-la vara ponnu paarkkara scene ellam use pannitteenga pola irukke!! neengale ella scene-um use pannittaa, mathavanga ellam uvamaikku enna panrathu??

SKM said...

//போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?//
LOL!idhuvae jasthi.yen veetukku vandhu bonda keta cricket ball madhiridhan varum.

//தங்கமணி அம்மா விசாரிக்க நான் பால்!னு அசடு வழிந்தேன்.//
appdiyum nanga ungalai chinna kuzhandhainnu nambaradha illai.

//அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை. :)//
Pavam TRC sir.Ungalukku nalladhu saiya poi padadha padu padrar.

// அம்மணியும் பொறுப்பா நெட்ல தேடி 4 வரில நச்னு பாடிட்டாங்க.//
Nalladhan padranga.

//ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி.. //
paadi irundha ponnu kodukka mattomnu solli irupanga.

SKM said...

//TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை... என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.//
Well done TRC Sir.Sariya purinju vaichurukkar.

// நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். என் தம்பி தலையில் அடித்து கொண்டான்.//
LOL!Pavam unga thambi,innum yevalo avasthai padanumo unga kaiyil.

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.//
ROTFL!too much idhu.Kai kaati irundha ippo ezhudha kai irundhu irukkaadhu.Kozhuppu.:D

கீதா சாம்பசிவம் said...

@Ms.C, முதல்லேயே என்னைக் கேட்டிருந்தா மெனு நான் கொடுத்திருப்பேனே? நல்லாப் பெரிய கத்திரிக்காயா வாங்கி பஜ்ஜி செஞ்சிருக்கலாம், சேசே, சான்ஸை விட்டுட்டீங்களே? ம்ம்ம்ம்ம், கல்யாணத்துக்கு அப்புறம் விடவேண்டாம். நல்லாக் குறிச்சு வச்சுக்கோங்க! இதை எல்லாம்.

Ms.Congeniality said...

ROTFL!!!Seri comedy aa iruku :)
//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//
edho feel panni solraa maadhiri iruku? :-p

Syam said...

ROTFL....unna adichukka mudiyaathu saami...indha maathir elutharathula...sema nakkal po :-)

Syam said...

//விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல//

இதுவே இன்னும் கொஞ்சம் நாள் கழித்து...

முதுகில் விழுந்தது அடி
வலித்தது கால் விரல் வரைக்கும்...

அப்படின்னு கவிதை வரும் :-)

பொற்கொடி said...

ada che eppo vandhalum 32 36nu. naan indha azhuguni aatathukku varala po kaa! :(

பொற்கொடி said...

rotfl on machini-arvindswamy! neenga ovoru posta poda poda dhinam dhinam Cya nenachu naan varutha padren! :(

nalla velai anikku paadalai nu sandhoshapadren! :)

ipdi enna deal la vitutu ellaruma kesariya amukkittingle nu kola veri vandhu naane panni saptunden! enakku mattum thaane, hai jolly ;)

பொற்கொடி said...

epdiyo neenga podra posta ellam paathu serthu vechu kalyanathukku apram manni ungala thambalam pola vechu aadama irunda seri! konjam adakkiye vaasinganna :)

CVR said...

GREAT!!!
As usual you rock!!!

Kavidhai ultimate!!!
Keep it going!! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

comment no.41

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த போஸ்ட்ல ஒவ்வொரு வரியும் தூக்கல்.. செம்ம காமெடி மச்சி!

.:: மை ஃபிரண்ட் ::. said...

எதுன்னு ச்ஒல்ல.. எல்லாமே! எல்லாமே! பிடிச்ச வரி எதுன்னு கேட்டா, திரும்பவும் உங்க போஸ்ட்டை ஃபுல்லா காப்பி எண்ட் பேஸ்ட்டுதான் பண்ணணும் அம்பி. செம்ம கலக்கல்.. ;-)

ACE said...

உங்க பதிவு ஒரு சில படிச்சிருக்கேன்.. இப்போ தான் முதல் முறையா பின்னூட்டம் போடறேன்..

கலர் கலரா கல கலன்னு காமெடியா கலக்கியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் :)

Dreamzz said...

அடடா! சூப்பர் அம்பி! அந்த பொண்ணு யாருனு தான்ன் எனக்கு இன்னும்தெரியாது! சரி விடுங்க!
உங்களுக்கு தெரிஞ்சா சரி! :))

Dreamzz said...

//குடுக்க, தாய்மாமா, " TRC சார் வந்ருக்காக, மாப்ள மொக்கை போஸ்ட் அம்பி வந்ருக்காக//

ROFL! sari comedy!

Dreamzz said...

எப்படியோ நேயர் விருப்பம்ம் , கேசரி என்று சந்தோஷமா முடிந்தது! வாழ்த்துக்கள்!

Dreamzz said...

நடு நடுவுல, நக்கல், கவித எல்லாம் போட்டு கலக்கறீங்க!

Dreamzz said...

நம்ம ஊருன்னு வேற சொல்லிப்புட்டீங்க்க!

Dreamzz said...

50! அப்பால வரேன்!

MLC said...

LOL! romba nalla irundhadhu!! unga narration nejammavey nalla iruku!!

My days(Gops) said...

thala attendance...

sorry thala... neeenga 2 post potadhu enakku theriaadhu, enakku update aaagala...

ippa thaaaan noted...

My days(Gops) said...

pona episode missing..

Recap ellam illaingala? ok ok..

My days(Gops) said...

//விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"//

aarambamey alluthu.....

//போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?//
eppadi? thirunelveli alwa maaadhri'a?
(enga ponaalaum indha bonda problem PERIA problem a irrukey?)

My days(Gops) said...

//அடுத்த தடவை சரி பண்ணிடுவாங்க!னு நம்பறேன்//

adra sakka, innoru thaba ponnu paarka poreeengala?
venaam venaam neeenga bonda saaapradhukaaaga.. yenga?

//எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!//
adhai saapteeengala illa adhukkum oru kavidhai'a solli appadiey vachiteeeengala?

My days(Gops) said...

//அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!//

yenga unga kitta nokia phone'a irruku? appppa annaiku enkitta Sony ericson kaatuneeeeng? :))


//அவள் மாமாவும் நோக்கி விட்டார்!//
oh avaru kittaium nokia thaana?

//எனவே கண்ணும் கண்ணும் நோக்கியா!னு மலேசியா ஏர்போர்ட் எல்லாம் போயி டூயட் பாட முடியலை.
//

adhu singapore airport illa?

My days(Gops) said...

//அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
///

indha timing thaaan thala unga kitta + ey

My days(Gops) said...

//எங்க அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு, அவரும் ஒரு பாட்டு பாடிட்டார். அம்மணி வீட்டுல எல்லோருக்கும் செம ஷாக். மாமனாரே இவ்ளோ கேஷுவலா பந்தா பண்ணாம பாட்டு பாடறாரே?
//

:))

//இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்...//

purinchika maatenguraaley thala...
idhukum neeeenga ducalties panni irrundhu irrukanum

My days(Gops) said...

//பொண்ணு கிட்ட ஏதவது தனியா கேக்க(வறுக்க) ஆசைப்படறீங்களா?"//

avanga kitta thania poi கேக் vaaanga thaaan ithanai aaarpaatama....
ada cha.....

//நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். //
vettriku kidaicha parisu u mean?


//நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம். //
paaavam brother srinivas..(pass my regards thala)

My days(Gops) said...

//.(வர வெச்சுட்டாங்க).//

aaaama ungala kadalai poda sonna, neeenga paaatuku empty land vaangi, adhula kadalai'a vidhaichi, appuram adha aruvadai senchi, appuram appurm'nu continue pannu'na yaaaru thaaan poruthukuvaaanga?

same time, ulla pona kesari maximum 4hrs thaaan thaaangum...
:))

My days(Gops) said...

totaly ROTFL post thala...

kalakunga...

Ram said...

Ambi...unnoda way of telling is unique...sooper...un nadaiye thani..ithu antha nadai illa pa...

Padmapriya said...

cha... am too late.. 63 :(

Padmapriya said...

actually comment adikkanumna... unga entire posta ye inga copy panni pottu...line by line "LOL" podalaam....

Padmapriya said...

Office la vachu vera padichuten... ellarum..ennatha paathu sirikkaranu keakkaraanga :)

Padmapriya said...

seri ipo poi manni oda blog enna color nu paathutu varren :)

தி. ரா. ச.(T.R.C.) said...

//TRC சார் உடனே சுதாரிச்சு, அம்பி முழியே சரியில்லை... என் உடன்பிறப்பையும் என் கூட அனுப்பி விட்டார்.//
பக்கதுல இருக்கற தங்கமணியின் தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம்
உண்மையிலேயே எனக்கு பயம்தான்
நம்ப ஆள் அன்னிக்கி இருந்த இருப்பைப் பார்த்தால் தனியறையில் நுழைந்தவன் எங்கேயாவது டக் என்று உடனே தாப்பா போட்டுவிடுவானோ என்று. அதான் முன்னெச்சரிக்கையாக தம்பியையும் உள்ளே தள்ளி விட்டேன்

ராஜி said...

Kavidhai yellam sooper appu...

Congrats...

Deekshanya said...

Superappu! nalla eluthi irukinga! As usual ;-) good post!!

மணி ப்ரகாஷ் said...

என்னா சுவராசியமா இருக்கு..அம்பி இப்படி பார்த்த முதல் நாளா வினாடி மறக்காம இருக்கியேப்பா.. சூப்பர்...

//முந்தின நாள் ரிகர்ஸல் பண்ணி இருப்பாங்க போலிருக்கு!)
//

இஸ் ட்.. பின்னாடி பேக்ரவுண்ட் மியுசிக் என்ன ஒடிச்சு,.

நீங்க பாரதிராஜா படத்தில வர்ர மாதிரி
வெள்ளை கலர் டிரஸ் போட்ட தேவதைகளுக்கு நடுவ நீங்களும் ரங்கமணியும் பாட்டு பாடி இருப்பீங்களே.....

மணி ப்ரகாஷ் said...

//விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"//

கவித கவித..


கலக்கல்ஸ் அம்பி...

Priya said...

ROFTL ambi. Unga stylay thani dhan..

//மெதுவாக இட்ட அடி எடுக்க, எடுத்த அடி நோக, வருவது அன்னமா?
மயிலா?னு பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி /
nalla maska podaringa Ms.C kku ippave..

//போண்டா தான் கொஞ்சம் ஹார்டா இருந்தது. மிருதுவா இருக்க வேண்டாமோ?//
nakkala? Kalyanathukku appuram nattamai madhiri neengale soft bonda panni kuduppinga, appa theriyum.

Priya said...

//எனக்கு ஒரு தடவை தான் கேசரி கிடைச்சது!
//

alpam.. alpam..

// சில பெரியவர்கள் இரண்டாம் தடவை எல்லாம் கேசரி சாப்ட்டுடாங்க. அது TRC சார் தானா?னு நீங்க சந்தேகப்படலாம். தப்பில்லை.//
TRC sira varama irukka mattingale..

//அண்ணலும் நோக்கினேன்!
அண்ணியும் பதிலுக்கு நோக்கினாள்!
அவள் மாமாவும் நோக்கி விட்டார்!
//
ROFTL

Priya said...

//நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம்.//

eppadi 2 perum appavi madhiri vesham potrukkinga periyava munnadi.. chancey illa..

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//
asai dosai..

Harish said...

Ambi nna...oru ponnu paakara padalatha romantica ezhudaama ippadi mokkaya comedya ezhudina ungalukku varutta padaada valibar sangam saarba oru periiiiya vaazhtu solren...
Kannalam eppo ji?

ambi said...

@all, கும்மி அடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :)

ஏகப்பட்ட வேலை, அதனால தனிதனியா பதிலளிக்க முடியலை. மன்னிக்கவும்.

KK said...

//"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"//

Thirunelveli alwana summava???? yennma yosikireeenga Ambi :D

KK said...

//அப்புறமா டிபனும் வந்து சேர்ந்தது. வேற என்ன, கேசரி தான்! பஜ்ஜிக்கு பதிலா போண்டா!//
Para sakthi shivaji maathiri Success appadinu kathi irupeengale :)

//ஹிஹி அன்னிக்குனு பாத்து எனக்கு தொண்டை சரியில்லை. இல்லாட்டி... //
nalla velai naadu thapichuthu :)

//இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்..//
Yenna asirvatha seinga thalaiva :)

gils said...

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//

ur alambaluku no limita:) bonda harda irunthucha...
Miss C..note the point..after marriage..ambiku aatu kallural vaangi kudthurunga..maava nalal nice aati bondapoatu tharatum :D :D

Arunkumar said...

chance-ae illa ambi. as usual, oru ROTFL post. super comedya sollirkinga..

Arunkumar said...

//"விழுந்து எழுந்தது அவள்
வலித்தன என் கால்கள்!
கால்கள் மட்டுமல்ல
இதயமும் தான்!!
விழுவதே எழுவதற்க்கு தான்!
என எனக்கு புரிய வைத்தாளே!
என்னை புன்னகை புரிய வைத்தாளே!!"
//

ada adaa... super-o-super

Arunkumar said...

//எனக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சு இருக்கு!னு ரோஜா படத்து அரவிந்தசாமி மாதிரி மச்சினியை எல்லாம் கை காட்ட முடியலை.
//

idhu ellam 10 much.. :P

Arunkumar said...

//இதுக்கா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பிளாக் எழுதி, 68 போஸ்ட் போட்டு, தங்கமணிய புடிச்சு, டகால்டி பண்ணி, கேசரி தின்னு... ம்ஹூம்..//

yennayum aasirvaadham seynga ejamaa

Sasiprabha said...

Nanna oru plate kesariya nei manakka sooda vaaila thallina effect... Enjoy Enjoy

Sasiprabha said...

தனியறையில் உள்ளே நுழைந்தது தான் தாமதம், நானும் தங்கமணியும் விக்கட் எடுத்த வீரர்கள் கை தட்டி கொள்வதை போல தட்டி கொண்டோம்

Kondaatam thaan..
Thambi irundhaano polacheengalo..
Nathanaar yaarum illaya thangamanikku... Ennai maadhiri oru aalu anga irundhirundha therium galata..

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信