Friday, March 16, 2007

பார்த்த முதல் நாளே!

பெண் பாக்கற அந்த நிமிடம் வரை தங்கமணியை நேர்ல பாக்கலை, போட்டோல பாத்தது தான். அதுனால சம்ப்ரதாயபடி பொண்ணு பாக்க வாங்க!னு அழைப்பு வந்ததும், நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம். எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.

என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!
(டொயிங்க்! டொயிங்க்!)"
னு அம்மணி போன்ல பாடினதுனால சென்னைக்கு வரதுக்கு முன்னாடியே ஜிலேபி தேசத்துல புதுசா வாங்கியாச்சு! அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?) வாங்கிட்டான்.

காலையில அம்மா கூட GRT ல ஷாப்பிங்க் எல்லாம் போயிட்டு சாயந்தரம் பொண்ணு பார்க்க TRC சாரோட கிளம்பினோம்.
(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)

சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.

அவங்க வீட்டுகுள்ள போனா,

ஆஹா! தங்கமணி பெரிம்மா, பெரியப்பா, அவங்க பசங்க, மாமா, மாமி, அவங்க பசங்க, சித்தி, சித்தப்பா!னு சுத்தி கும்மி அடிக்க ரெடியா இருந்தாங்க.
மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.
அவங்களும் அம்மணி, நல்லவள், வல்லவள்! நாலும் தெரிஞ்சவள்!னு சொன்னாங்க. பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.

இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.

அப்புறம், செல்லாது! செல்லாது!னு தீர்ப்பு சொல்லிட்டா என்ன பண்றது?
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.

மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)

71 comments:

Padmapriya said...

Naadhan 1st....

Padmapriya said...

Ambina really neenga kadhai sollara style ye thanidhaan..Hats off..

yedho neenga nadula ukkandundu sollara madhiriyum nangaellam suthi ukkandhu keakkara madhiriyum effect. :)


Paartha mudhal naale..yedho keatta kadhai mathiri irundhadhu... (Analum interesting) next episode la paakkalaam..

btw, enaku choclate icecream venum. :)

dubukudisciple said...

naan thaan second!

ROTFL!!!

waiting for the next post..

oru ponnu pakra padalathuke rendu episodea??

nadathu!!!

Ravi said...

Maayi annan - TRC sir, Mappilai Mokkachaamy - Ambi, so, adhutha padhivoda title enakku therinju pochu... "Vaamaa minnallll...." Correcta?? LOL!!

Anonymous said...

க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க.
நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.


Nalla pasangaluku - Love cum Arranged Maariage la nadakara GREAT EXPERIENCE THAN UNGALUKUM NADANDHU IRUKU POLA IRUKAE!!!!

Appo dhan

Ponnuku ithanai per iruka gara oru bayathulae - Thangamani kite samathavum irundhundu - poori kattai adi vangindum irupel.Vera edhukunu nenachel? Ha Ha Ha..

Ana - Apparama -

Neenga(matum)dhan ELLAM - thangamaniku

gara madhiri agum...Adhu dhan Love cum Arranged marriage oda SPECIAL.... I feel.

with Love,
usha Sankar.

.:: மை ஃபிரண்ட் ::. said...

யப்பா. இன்னைக்கு நான் சீக்கிரம் வந்துட்டேன்.. அஞ்சாவது.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

படிச்சு வாரேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்றைய போஸ்ட்டு ரொம்ப ஷார்ட்டா இருக்கிறது என்பதால் வன்மையாக கண்டிக்கிறேன் அம்பிண்ணா.. இன்னும் கொஞ்சம் நீட்டா போட்டிருக்கலாமே!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!//
ஓ! அதான் ப்ளாக் கலரும் மாறிடுச்சா??

//பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க.//
தங்கமணி நாட்டிய பேரொளின்னு சொல்லவே இல்லையே!!

//இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.//

ROTFL.. :-)))
என்னதான் இருந்தாலும் உங்களுக்கு ரொம்பவே குசும்பு.. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. மறந்தே போச்சு!! இன்னைக்கு வெள்ளி.. நீங்க போஸ்ட்டு போட்டிருப்பீங்கன்னு..

நல்ல வேளை.. கூகல் ரீடர் ஃபலாஷ் அடிச்சது.. திறந்து பார்த்தா உங்க போஸ்ட்டுதான் முன்னாடி தார்ச்லைட் அடிச்சிட்டு நின்னது! ;-)

mgnithi said...

Blue evening Ambi...

//என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்//

Ha Ha

mgnithi said...

//(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)//

Enna thaan Thangamaniya paarka pora excitementla irunthaalum, tiffenukku kidaikka enna vazhinu
yoishceenga paarunga, intha scenela neenga engayo poiteenga..

mgnithi said...

//சரி எதுக்கு வம்பு?னு நானே முதல்ல என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.//

Ithu Surukkama...

mgnithi said...

//" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.
//

Ippadi patta oru situationla sirichen mattum neenga sonna pothum. Athai asadu vazhiya sirichennu naangale padichikuvom.

mgnithi said...

//இப்படியே அரை மணி நேரம் ஓட்டிடாங்க.
கேசரியும் காணும்! பொண்ணையும் காணும்!
செம கடுப்பா TRC சாரை ஒரு லுக்கு விட்டேன்.//

Ithukku enga antha Nallavara paarhu kaduppa oru look viteenga..

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், பாவம், தி.ரா.ச. சார்., அவர்தான் பொண்ணு பார்க்க வரவே இல்லையாமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ? உமா மேடமும், அவங்க பொண்ணும் தான் வந்தாங்களாம். நீங்க வழிஞ்ச வழிசல் பத்தின ரிப்போர்ட் எனக்கு வந்தாச்சு! :P

Ram said...

//மீதியை அடுத்த பதிவில் பார்ப்போமா? :)//

salamon pappaiya :))

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் இன்னும் ஒரு தகவல், நீங்க என்ன "டகால்டி வேலை" செஞ்சாலும் என்னையும் எஸ்.கே.எம்.மையும் பிரிக்க முடியாது! உங்க நாரதர் வேலை ஏதும் பலிக்காது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Delhi_Tamilan said...

wow... very interesting description.. looking forward to the second part :) (btw..nanum oru tamil postu pottutaen...)

Padma said...

naan first comment podanumnu muyarchi panren hmm.. enga side gapala namma vida vettiya erukaravanga potturanga:)..
enda tagachi vela thane venamgaradu:P.. mega serial madhiri oru intersting kadttathula break pottuteengale:P..
sari sari puriyudu .. seekaram second part varattum:P..
first comment pottu kesari vangidaren:P

மு.கார்த்திகேயன் said...

/அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்டை பார்சல்!னு தம்பி வேற மானத்த(எங்கே இருக்கு?)//

அம்பி, பிரியமானவளே படத்துல சொல்ற மாதிரி எல்லாமே புளூவுங்கோ மாதிரி இருக்கு.. தி.ரா.சா கார் கூட

வேதா said...

என்ன அம்பி அங்கேயும் போண்டா தானா?:)

வேதா said...

ரவி சொல்றதை நினைச்சு பார்த்தேன் விவிசி:):)

வேதா said...

அது சரி பொண்ணு பார்க்க போன போது உங்க டகால்டி வேலையெல்லாம் அவங்க சைடுல தெரியுமா?:)

மு.கார்த்திகேயன் said...

/நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து//

அம்பி, நீ நம்ம நாட்டமையை கூட்டிட்டு போயிருக்கலாம்..

நம்ம சைடும் ஒரு நாட்டாமை இருக்காருல்ல

மு.கார்த்திகேயன் said...

/இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது.//

யோவ் அம்பி, உன் வாலுத்தனம் தாங்க முடியலப்பா சாமி

மு.கார்த்திகேயன் said...

/" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"//

உஷார், தங்கமணி..உஷார்..

பையன் இப்பவே என்னவோ பிளான் பண்றான்

CVR said...

Waiting for more! :-)

கீதா சாம்பசிவம் said...

மாப்பிள்ளை மொக்கைச்சாமிங்கறது நமக்கு எல்லாம் ஏற்கெனவே தெரியுமே வேதா, இதுக்கு ரவி வேறே வந்து சொல்லணுமா? நியாயமாப் பார்த்தா நாம எப்போவோ சொல்லி இருக்கணும்! :P

Ms.Congeniality said...

//எங்க பெற்றோர் திருனெல்வெலியிலிருந்து தங்கமணிக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு வந்து சேர்ந்தாங்க.
//

Adhu phone la en maamiyaar kitta naan kettu vaanginadhu avangalum aasaiyaa kondu vandhadhu :-p

//என்னை பத்தி சுருக்கமா சொல்லிக்கலாம்!னு நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்//
hee hee hee!!adhoda palan me also had to give my biodata(erkanave odharitrundhudhu, adhula idhu vera)
Idhu poraadhu naa kashta pattu pesi mudichitu appada nu nenaikumbothu ivar vera ennamo onnume theriyaadha maadhiri kelvi kekaraaru!!!!!!Toooooooo much I say :-p

kuttichuvaru said...

build-up ellam nallaa kudukkareengale.... adutha pathivukku ippove waiting!!

onnume theriyaatha maathiri oru image neenga nadippula pattaiya kelappiruppeenga.... avanga vera bharatha naattiyam ellam pattaiya kelappuvaanga.... enakkennamo Thillana Moganambal effect varuthe :-)

Priya said...

buildup lam balama dhan irukku...

//நானும் என் உடன்பிறப்பும் பெங்க்ளூரில் இருந்து சென்னைக்கு வந்து TRC சார் வீட்டுல டேரா போட்டோம்.//
adhukku dhan TRC sir nalla anubavikkarare ippo.

//"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!//
adhan blog color lendhu ellam adha??


//நட்ட நடு ஹால்ல அவங்க தாய் மாமா நாட்டாமை மாதிரி உக்காந்து, "கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?"னு என்னை ஒரு லுக்கு விட்டு அஹம்!னு தொண்டையை கணைத்து கொண்டார்.
//
LOL.. avar idha padikka porar.

//பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!//
appadi podunga. sari, inimel aada povadhu yaaru?


//இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?//
unga branded nakkals..

// மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"//
Ms.C yum ahde madhiri dhan ninachindu irukkangalam.

SKM said...

//"ஸ்கை ப்ளு தான் எனக்கு புடிச்ச கலரு!(டொயிங்க்! டொயிங்க்!)"னு அம்மணி போன்ல பாடினதுனால//
yabba!adhudhan ippo yengae ponalum adhae uniform la poreengalamae.
pudhu apt pakka, paal kaicha,ward robe la yellamae blue color ayiduchunu kelvi pattom.

//(ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்!)//
ulunga bajji sojji saidu vai nu mirattititu pona madhiri thagaval.

SKM said...

//நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!//

yengae neega avangalai comedy pannduveengalonu avanga bayandhu irupanga.Nalla velai adaki vasicheengalae.nalla manasu.

//நான் எல்கேஜில வாங்கின மார்க்லேந்து இப்ப பிடுங்கற ஆணி சைஸ் வரைக்கும் சொல்லி முடிச்சேன்.//

idhu peru surukama?

SKM said...

// பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க.//

appovae unga aatathukku avanga aaduvanganu therinju pochu.

//" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்.//
Ambi touch.Therinja vishyamnalum thirumba padikum bodhum ninachu ninachu sirippu vara madhiri yezhudhara style o style.super.

Bharani said...

idhu enna thriller novel maadhiri ezhudhi irukeenga :)

Bharani said...

aduthathu enna ????

SKM said...

// அம்பிக்கு இனிமேலே தி.ரா.ச. வீட்டிலே கத்திரிக்காய் தான் செய்து தருவாங்கன்னு சொல்லி இருக்கணும் நீங்க, விட்டுட்டீங்களே!!!!!! //

@geethaMaami:
Kathirikkai koduthalum saapduven nu sollra alavukku Ms.C vandhachu. so avanga kaiyalaiyae saidhu saapdaduttum nu vittuten.

@Ambi:
yenna?sirippu!yenaku kovam varudhunu sonna ungalukku sirippu varudha.appo kattayam kathirikkai undu.vanga.

Hema said...

Hi Ambi,
oooru suthittu irundhalum vellikilamai unga blog padika aajar aayachu...ore part-aa poda koodathaa...ela partum padichutu motthama comment pannuren...so far good...as usual LOL :-))

Hema

வேதா said...

@கீதா,
மொக்கைசாமின்னு முதல் தடவை மீட் பண்ணும் போதே தெரிஞ்சு போச்சு ஏதோ போனா போகுதுன்னு சொல்லாம இருந்தேன், இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சுப்போச்சேன்னு ஒரு சந்தோஷம் தான்:)

Sumathi said...

ஹாய் அம்பி,

சாரி நெட் பிராப்ளம்... அதான் கொஞ்சம் லேட்..

Sumathi said...

ஹாய் அம்பி,
ஓஓஓஓஓஓ... அதனால தான் உங்க ப்ளாக் கூட நீலமோ?

//"மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"னு அசடு வழிய ஒரு சிரிப்பு சிரிச்சேன்

ஆஹா இதான் ... இதான்.. இது தான் உங்க ஒரிஜினல் ஸ்டைல்.ROTFL

ஆமாமாம் நீங்க அவங்கள வச்சி காமடி ஏதும் பண்ணாம இருந்தா போதாதா?

Sumathi said...

ஹாய் அம்பி,

//பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு// இப்போ இது எல்லாம் எதுக்கு?

அதுசரி, இனிமேயா தங்கமணி உங்கள எப்படி ஆட்டி வைக்கறதுனு கத்துக்க போறாங்க?

Dreamzz said...

pen paarkum padalama ithu! super!

Dreamzz said...

//என்னடா ஆரம்பமே அல்வாவா?னு நீங்க யோசிக்கலாம். ஹிஹி, அது தான் நெல்லை ஸ்டைல்.//

vanga vaanga.. ithu! tirunelveliya kokka!

Dreamzz said...

//சாரோட நீல கலர் கார்ல சர்ர்ருனு போயி இறங்கியாச்சு! தங்கமணி வீடு மாடில இருந்ததால மேல இருந்து ஒரு க்ரூப் நேரடி வர்ணனை குடுத்து கொண்டு இருந்தது.//


adada! thriller kanakulla la ithu oduthu!

Dreamzz said...

//மூனு அத்தைமார்கள் ஊருல இருந்து வர டிக்கட் கிடைக்கலையாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நம்பள வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணிடுவாங்களோ?னு எனக்கு கொஞ்சம் உதறல் தான்!
/

ROFL!

Dreamzz said...

// மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை//


thakkiteenga! superappu!

Dreamzz said...

sari vandhadhukku oru 50 adikalana epadi!

Dreamzz said...

adichachu! varrta!

தி. ரா. ச.(T.R.C.) said...

On tour upto 26th.unnai apparam vanthu vechhikiren. athuvaraikkum motha kummiyaiyum atichi mutuchtu
camp Hyderabad

Pavithra said...

Nice post !! As usual a typical ambi post.;-)

Kavitha said...

Partha Mudhal Naale!!

solradha solli mudikka vendamo? ippadi thodarum pottuteengale! too bad!

"ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு!//
adhaan blog colorum blueva? nadathunga nadathunga!!

Cheers

Harish said...

en thalaiva...inda postaavdu serious a poduveenga nu paatha...idulayum unga ambitanatha kaati asatiteengale
...
As usual...Ambi rocks :D

Syam said...

vaalkaila andha ore oru naan thaan un vaaluthanatha surutti vechu okkandhu irukaa pola... :-)

Syam said...

//க்ரூப் டிஸ்கஷன் மாதிரி என்னை உக்காத்தி வெச்சு சுத்தி உக்காந்து இருந்தாங்க//

pointer in C la kelvi ketkaama vitaangaley..thappicha... :-)

ராஜி said...

Ponnu paarka ponnadhae rendu post-ah..
Nadathunga Ambi sir....

Blue dhaan thangamanikku pidicha color-u..

ROTFL!!

ராஜி said...

Syam,
//pointer in C la kelvi ketkaama vitaangaley..thappicha... :-) //

Aaha commentlaiyum nakkala...

Gops said...

attendance guruve..

MLC said...

1st time here ... frm skm's blog ... sirikavechiteenga:-)! aana next episode ku wait panna vechiteengaley!

Arunkumar said...

வழக்கம் போல ROTFL போஸ்ட் தல :)

//
இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?னு கேக்கனும்னு வாய் வரைக்கும் வந்து விட்டது
//

LOL :)

Arunkumar said...

//
" மனமே பொறு!
மாலையை இடு!
அப்புறம் காட்டு உன் வாலுத்தனத்தை!"
//
அட அடா.. ROTFL

//
சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க
//

வாவ். சூப்பர். கலக்குறாங்க...
தங்கமணிக்கு வாழ்த்துக்கள்

அடுத்த பார்டுக்கு வீ ஆர் வெயிட்டிங் !!!

gils said...

enakenamo..meendum kokila padam than nyagabam varthu..ambi sitting with on kutti kozhandhai in chair..Ms.C singing chinnajiru vayathil!! :D

KK said...

Hahahaha super post...

TRC sir veetla irukthu kelambum bothu blungo blungo nu than kilambinatha kelvi patten... ??? appadiya Ambi???

//இவங்க கூட தான் காதலன் படத்துல நக்மா( நடிகர் சூர்யா மச்சினி) ஆடினாங்களா மாமா?//
Ithu semma ROTFL!!! intha scene yeppadi irukkumnu yosichu paarthen :)

LKG'la irunthu aani varaikkum solliyum oru soda kooda kudukuliya??? yenna kodumai saravanan :)

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
மணி ப்ரகாஷ் said...

அம்பி இப்பத்தான் நான் வர்ரேன்.இதுதான் லேட்டஸ்ட் போஸ்டா?

//ஹிஹி அப்ப தானே டிபன் கிடைக்கும்//

கிடைத்ததா?

என்ன மெனு

அதெ வடை , சட்னி, காபிதான இல்ல டிபரெண்டா .....????


//பரத நாட்யத்துல அம்மணி பட்டைய கிளப்பி இருக்காங்க!னு போட்டோ எல்லாம் காமிச்சாங்க. சிதம்பரம் நாட்யாஞ்சலில ஆடி இருக்காங்க!னு சொன்னாங்க//


அப்படி போடு ...

இனிமே நீங்க பாட்டு எழுதி, அத பாடி
அவங்க ஆடி...ம்ம்

ஒரே கலைக் குடும்பம்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


//ஸ்கை ப்ளு தான்
எனக்கு புடிச்ச கலரு//

அதுதான் இந்த பக்கத்துக்கு காரணமோ

ஆமா புதுசா பால் காச்சின வீட்ல, புளு கலர் பெயிண்ட் அடிக்கலைனு சண்டை போட்டதுக்கு இது தான் காரணமோ....

Arunkumar said...

annathe, oru mail anuppinen... vanducha illa innum transit-la irukka? :P

பொற்கொடி said...

paavame C! :(

Padmapriya said...

Ennachu??? serial kooda weekly once vandhidumea... adutha padhiva enga??

வல்லிசிம்ஹன் said...

புடவை வாங்கிட்டு பொண்ணு பாத்தீங்களா என்ன?
தலைகீழா இருக்கே.:-)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信