Tuesday, March 06, 2007

மத்திய அமைச்சர் பதவியேற்ப்பு விழா!

நாட்டாமை ஷ்யாம் (ஓ.பன்னீர்செல்வம்!னு வாசிக்கபடாது) தலைமையில் பிளாக் முன்னேற்ற கழக மாநில அமைச்சர்கள் பதவியேற்ற கையோடு
மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டதை கழக செய்தி மலரான சங்கொலி மூலம் நீங்கள் அறிவீர்கள்.நாம் என்றுமே பதவியை தேடி போனதில்லை, வந்த பதவியை ஒரு வழி பண்ணாமல் விட்டதில்லை, மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.இந்த நேரத்தில் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி என்னை தேடி வந்ததால் வேறு வழியில்லாமல் தம்பி! உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.


இதோ நாம் பதவியேற்றுக் கொண்ட காணக் கிடைக்காத காட்சி! (படத்துக்கு நன்றி கோல்மால் கோபால்)
தூர்தர்ஷன் முதல் கிரான்ட்ஸன் டிவி வரை கோலங்கள் மற்றும் செல்வி சீரியலின் நடுவே ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பும் செய்யப்படும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா! இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் நாயுடு ஹால். (பார்த்தே ஆகனும்! அது உங்க தலைவிதி)

நாட்டு மக்களுக்கு என்ன சலுகைகள்? என்று கேட்கும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்க இதோ:

1a) புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).

1b) உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)

2) பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன். (எவன்டா அவன்! என் தங்கமணிட்ட போட்டு கொடுக்கறது?)

3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)

எப்படியோ நல்லது நடந்தா சரி! :)

4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!


5) மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள். கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.

இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.

76 comments:

மு.கார்த்திகேயன் said...

அட பர்ஸ்ட் :-)

மு.கார்த்திகேயன் said...

அல்டிமேட் போஸ்ட் அம்பி :-)

கட்சி தலைவர்ங்கிறதால முதல் அட்டென்டன்ஸ் நாம தான், பாத்தியாப்பு!

போட்டோ சூப்பர்! கோபாலுக்கு ஒரு ஷொட்டு!

மு.கார்த்திகேயன் said...

/புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா//

குசும்புபா உனக்கு! மொத சட்டமே உனக்கு தான் போல..

ஆமா.. அது என்ன பஞ்சாபுக்கு.. மகனே..மத்திய அமைச்சர்னாலும் உனக்கு பூரி கட்டை அடி உண்டு மச்சான்! என்ன கட்சி தொண்டர்கள் ஆசையா கொடுத்த தங்க பூரிகட்டைல விழும்னு நினைக்கிறேன்.. அது கூட கௌரவம் தானே அம்பி

Ram said...

Ambi - How are you? Romba naal aachu blog pakkam vanthu...velai thaan ( nambunga...).
Had a glance on ur previous posts.CONGRATS.!! Thangamanikkum seethuthaan...:)
Me at Sydney , will call you. dnrama@yahoo.com - Mail pannunga.

மு.கார்த்திகேயன் said...

//கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்.///அச்சோ.. பாவம் கீதா மேடம் நிலைமை!

/எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, //

நிறைய ஆட்டோ வேன்களுக்கு பின்னால் விளம்பரம் பார்த்திருப்ப போல அம்பி.. அந்த "சகாய விலை": வாசகத்தை சொல்றேன் :-)

Arunkumar said...

ROTFL :-)

வழக்கம் போல கலாசல் போஸ்ட் :-)

Arunkumar said...

//
பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்
//
அட அடா, என்ன ஒரு லாவகமான சிந்தனை :-)

நீவிர் வாழ்க...

Arunkumar said...

//
மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா
//
வி.வி.சி :-)

//
உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.
//
எப்பிடிலே இதெல்லாம்...

அல்டிமேட் குமால்டிக் போஸ்ட் தல :)

Arunkumar said...

சரி 4 மணி நேரம் வேல பாக்கனும்னு நீங்க சொன்னதால இதோட அபீட் !!

SKM said...

photo ku comment...saryadhan irukku.shd stop writing nu irukiradhudhan sariya thonalai.unga speciality aadhalal blog ezhudhuveer la irukanum.:D

தி. ரா. ச.(T.R.C.) said...

சென்னையிலேதான் வெய்யில் ஜாஸ்தின்னு பாத்தா பங்களூர் அதுக்கு மேலே அடிக்குது போல.இந்த ஆட்டம் எல்லாம் இன்னும் 20 நாளைக்கு மட்டும்தானே அப்பறம் அண்ணன் ஆடி அடங்கும் வாழ்க்கையடா

SKM said...

yennatha solla? :D

Kittu said...

ROTFL posshhtt ambi :-)

semma kalaasals. aaha anda BOTO vera arumai.

padhavikku mooku saLi semma ROTFL :-)

Delhi_Tamilan said...

all the best for your new designation.. u rightly deserve for that post ;)

Syam said...

ROTFL :-)

கலாசலா வாக்குறுதி குடுத்து இருக்க...அதுவும் அந்த போட்டோ சூப்பரு போ... :-)

Syam said...

//அப்பறம் அண்ணன் ஆடி அடங்கும் வாழ்க்கையடா//

@TRC Sir,

ROTFL :-)

My days(Gops) said...

padhinelu vachiten en kaaalu,

naan bayangara busy...
innaiku appeat
aaaaana illa aaavana
kandipaaa varuven repeat'u

varta

hema said...

puthu mappillai,puthu posting,kalakura ambi!!!
engal vattaram saarbaga ponaadai porthi valthukkalai therivithukolkirom...

Ms.Congeniality said...

arasiyal thalaivargal thothu poiduvaanga unga vaakurdhigal ku munnaadi..eppdi ippdilaam :-p

ROTFL at TRC Uncle's comment :-D

ambi said...

//போட்டோ சூப்பர்! கோபாலுக்கு ஒரு ஷொட்டு!
//
Thanks karthi!

//என்ன கட்சி தொண்டர்கள் ஆசையா கொடுத்த தங்க பூரிகட்டைல விழும்னு நினைக்கிறேன்.. அது கூட கௌரவம் தானே அம்பி //

உனக்கும் விழும், கவலைபடாதே! :p

//CONGRATS.!! Thangamanikkum seethuthaan...:)
//
@Ram, thanks ram, surely will mail U. :)

//அந்த "சகாய விலை": வாசகத்தை சொல்றேன் //
@karthi, yes, U r rite. :)

//அல்டிமேட் குமால்டிக் போஸ்ட் தல//
@arun, DanQ! DanQ! :)

//shd stop writing nu irukiradhudhan sariya thonalai.unga speciality aadhalal blog ezhudhuveer la irukanum//

@SKM, ohhh! thanks for the
feedback. That is a valid point. :)

//எல்லாம் இன்னும் 20 நாளைக்கு மட்டும்தானே அப்பறம் அண்ணன் ஆடி அடங்கும் வாழ்க்கையடா
//
@TRC sir, ஆஹா! இப்பவே பயம் காட்றீங்களே! :)

//semma kalaasals. aaha anda BOTO vera arumai.
//
@kittu, thanks kittu mama! ellam unga asirvatham. :)

//u rightly deserve for that post //
@delhi tamilan, danQ! DanQ for your paasam! :)

//கலாசலா வாக்குறுதி குடுத்து இருக்க...அதுவும் அந்த போட்டோ சூப்பரு போ//
@syam, ஆஹா! நன்றி நாட்டாமை!

//kandipaaa varuven repeat'u//
@sachin, work first, blog next! :p

//puthu mappillai,puthu posting,kalakura ambi!!!//

@hema, ROTFL :)

//engal vattaram saarbaga ponaadai porthi valthukkalai therivithukolkirom... //

தங்கள் பொன்னாடையை சிரம் தாழ்த்தி ஏற்று கொள்கிறேன். :)

//arasiyal thalaivargal thothu poiduvaanga unga vaakurdhigal ku munnaadi..eppdi ippdilaam //
@Ms.C, கும்முடு போட்டுக்கறேன் எஜமான்! :p

//ROTFL at TRC Uncle's comment //
ஆஹா இப்பவே ஆரம்பிச்சாசா? ஏதோ கொஞ்சம் பார்த்து செய்யுங்க!

Padma said...

//புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).//

:P.. ambi anna edhu konjam rombava over.. atleast 8 hrs thookamavadu venum:P..

கீதா சாம்பசிவம் said...

ஹெல்லோ, ஜி-3 எந்தக் கட்சிக்கு வேணாத் தலைவியா இருக்கட்டும். நான் தனிப்பெரும் தலைவி, அது நினைப்பு இருக்கட்டும்.
@கார்த்திக், கோபிநாத் 10,000/-டாலர் கொடுத்ததை நான் கவனிக்கலைன்னு நினைக்காதீங்க. நினைப்பு வச்சிருக்கேன். கணக்கு கேட்பேன், அதனாலே அம்பி பேச்சைக் கேட்காதீங்க. அம்பி இப்படித்தான் மித்திரத் துரோகம் செய்யறதிலே புலி! :P

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, ;))))))))))

கீதா சாம்பசிவம் said...

மேலே சிரிச்சது பதிவுக்கு, நினைப்பு இருக்கட்டும். உங்களோட மித்திரத் துரோகத்துக்கும், நாரதர் வேலைக்கும் இல்லை. மூன்று கமெண்ட் அதிகம் இல்லை? ஒரு கமெண்டை அழிச்சுடுங்க.:P

.:: மை ஃபிரண்ட் ::. said...

Round of 25.. எனக்கு என்ன தருவீங்க மத்திய தகவல் தொலை தொடர்பு அமைச்சரே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

போட்டோ சூப்பர்.. ;-)

கார்த்திக் போஸ்ட்டு கொடுக்கிறதுக்கு முன்னவே இதெல்லாம் ரெடியா ப்ரீப்பேர் பண்ணி வச்சிருந்தீங்களா??

சூப்பர் போஸ்ட்டு போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.. அடுத்து என்ன திட்டங்கள் போட போறிங்க?? பலமா யோசிச்சிட்டு இருக்குற மாதிரி இருக்கே??

G3 said...

ROTFL :-) Super postu :D

//உன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.//

koodavae yesunaadhar mulgreedathoda siluva sumakkara stilla podaama vitteengalae.. sandhosham da saami :D

G3 said...

//(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்)//
Meedhi 6 mani neram msg time-ungala??

//ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.//
Idhai vanmaiyaaga kandikkaren.. 4 mani neramellam too muchu.. edho 4 nimishamna ok :P

G3 said...

//மொக்கை போஸ்ட் போடுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். அதை வருடம் தோறும் நடக்கும் மொக்கைகள் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவியாம் நமது ஜி3 அக்கா வழங்குவார்கள//

Bharani,
note pannikkonga.. idhukku thaniya oru 4 potti othukkidunga.. seriya :D

G3 said...

Rounda oru 30 :-)

Me the appeatu ippo :D

Anonymous said...

ambi,
4) இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!

Padhavi yetra udanaeyae naatin mel evvalavu akkarai. Great.Idharku yedharku naatamaiyai izhukanam.(Poori kattai bayam vandhudutha!!!!Ha Ha.

Innum 20 days dhanae (TRC post il irundhu therindhadhu.
Appuramum idhae pol mana thunivudan padhivu poda en vaazhthukkal ambi.

With Love,
Usha Sankar.

k4karthik said...

Adadada.... Innum ithu mudiyalaya?? Sindhubath kadhai mathiri poooooitee irukuya... sekaram pathavi erthutu makkaluku nalladhu pannungappu.. naanga ellam vote potrukoomle..

கோபிநாத் said...

ஆஹா.....கலக்கல் போஸ்ட் ;))))


\\3) பிளாக் எழுதும் இளம் பேச்சுலர்களுக்கு ஆபிஸில் ஸ்பெஷல் பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(அந்த நேரத்திலும் கமண்ட் போட்டுண்டு இருக்க கூடாது)\\

இதை...இதை தான் நான் எதிர்பார்த்தேன்...வாழ்க..வாழ்க....

Dreamzz said...

அடடா!கண்கொள்ளா காட்சிங்கோவ்!

Dreamzz said...

போட்டோ சூப்பர்!


//எங்கள் வாரிய தலைவர்கள் வசம் சகாய வாடகைக்கு ஆட்டோக்கள், சுமோக்கள், லாரிகள் எல்லாம் ஜாமான் செட்டுக்களுடன் தயாராக உள்ளன. ரெண்டு முட்டை பிரியாணி மட்டும் தான் எங்களுக்கு செலவு, ஆகவே ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்///

ROFL!..நல்ல வேளை.. நாம ஒரே கட்சி!

வேதா said...

துணை முதலமைச்சரை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்:)

வேதா said...

/புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா/
இதற்கு நிதி அமைச்சரிடம் ஒப்புதல் வாங்கியாயிற்றா?

வேதா said...

/பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்!/
எடுறா அந்த கர்லா கட்டையை! கட்சி சார்பில் பூரிக்கட்டைகளை முதல்வரின் தங்கமணிக்கு ஹோல்சேலில் கொடுக்க முடிவெடுத்தது போல் இனி அம்பியின் தங்கமணிக்கு கர்லாகட்டைகள் வழங்கப்படும் என இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்:)

வேதா said...

/ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்./
இப்ப மட்டும் ஆபிஸில் முழு நேரமும் ஆணியா புடுங்கறீங்க:)

/கீதா மேடம் தான் அந்த கட்சியின் நிறுவனர் எனபதை நீங்கள் அறிவீர்கள்/.
அம்பி உங்களுக்கு சங்கு தான்:)

/நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்./
யோவ் அது சட்டசபை, என்னய்யா கட்சி நடத்துறீங்க? எங்க உட்காரணும் கூட தெரியாம?:)

வேதா said...

ஓ மத்திய அமைச்சரா அதான் நாடாளுமன்ற லெவலுக்கு சீன் போடறீங்களா?
பி.மு.க இருக்கற நிலைமைக்கு மத்திய அமைச்சர் வேறயா முதல்ல அவரை மாநில அமைச்சரா மாத்துங்க:) அப்ப தான் சட்டசபைல எங்களால கேள்வி கேட்க முடியும்:)

golmaalgopal said...

kalaasal post... :))

ennadhu idhu...leadership change in Mokkai katchi?? :))

idhula photo courtesy vera...hmmm nadakkatum nadakkatum...

ambi said...

//atleast 8 hrs thookamavadu venum//
@padma, when U get engaged, U'll know the situation. he hee :)

@geetha madam, :)))

//எனக்கு என்ன தருவீங்க மத்திய தகவல் தொலை தொடர்பு அமைச்சரே?
//
@my friend, என்ன வேணும் அருமை தங்கையே? ;)

//கார்த்திக் போஸ்ட்டு கொடுக்கிறதுக்கு முன்னவே இதெல்லாம் ரெடியா ப்ரீப்பேர் பண்ணி வச்சிருந்தீங்களா??
//
என்ன வேணும் அருமை தங்கையே?
இல்ல, கார்த்தி போஸ்ட் பாத்தவுடனே தோணிச்சு! உடனே களத்துல குதிச்சுட்டேன்!


//4 mani neramellam too muchu.. edho 4 nimishamna ok //
@G3 akka, கிழிஞ்சது கிருஷ்ணகிரி!

ambi said...

//Padhavi yetra udanaeyae naatin mel evvalavu akkarai. Great.Idharku yedharku naatamaiyai izhukanam.(Poori kattai bayam vandhudutha!!!!Ha Ha.
//

@Usha shankar, ha haa. DanQ! DanQ!

//sekaram pathavi erthutu makkaluku nalladhu pannungappu.. naanga ellam vote potrukoomle..
//
@k4karthik, yes ejamaan!
btw, how is your campus i'vw preparation..? :p

//இதை...இதை தான் நான் எதிர்பார்த்தேன்...வாழ்க..வாழ்க....
//
@gopi, DanQ! DanQ! :)

//ROFL!..நல்ல வேளை.. நாம ஒரே கட்சி!
//
@dreamz, ROTFL :)

//துணை முதலமைச்சரை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்//

//இதற்கு நிதி அமைச்சரிடம் ஒப்புதல் வாங்கியாயிற்றா?
//
@veda, மத்திய அரசை மாநில அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தாது!

அவசியமெனில் 356 வது சட்டம் பாயும் என தெரிவித்து கொள்கிறேன். எப்படி வசதி..? :)

//ஓ மத்திய அமைச்சரா அதான் நாடாளுமன்ற லெவலுக்கு சீன் போடறீங்களா?
//
//மத்திய அமைச்சர் வேறயா முதல்ல அவரை மாநில அமைச்சரா மாத்துங்க:) அப்ப தான் சட்டசபைல எங்களால கேள்வி கேட்க முடியும்//

Too lateeeeeeee. :)

//idhula photo courtesy vera...hmmm nadakkatum nadakkatum//
@golmaal, vaapa gopalu! epdi keera? :)

வேதா said...

/மத்திய அரசை மாநில அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தாது!/
ஆனா கட்சியின் ஆதரவில்லாமல் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது:) ஆட்சியை கவுத்துடுவோம்:)

Delhi_Tamilan said...

Know what? It's also interesting to read your comment section as that of your original post..

Padma said...

he he ada appo parkalam.. BTW unga partha mudal naale poshttukaga romba naala waiting:D..

My days(Gops) said...

47 enakkaagavey

My days(Gops) said...

48

My days(Gops) said...

49

My days(Gops) said...

50 potudren first..

My days(Gops) said...

// மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.
//

lol.... eppadi thala ungalukku mattum avlo flow'a varudhu (மூக்கில் ஒழுகும் சளி போல) wordings ellam?>

My days(Gops) said...

//இந்த முள் கீரீடத்தை சுமக்க இசைந்து விட்டேன், தலை அசைத்து விட்டேன்.
//

ethanai naalukunu paarpom la

//குடும்ப குத்து விளக்கு செல்வி கவுஷா//
indha akka yaaaru? paarthadhey illa...

My days(Gops) said...

//விளம்பரதாரர் நாயுடு ஹால். //
indha naaidu hall name remba frequent'a varudhey? engai'o...........

//ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).//
y meeedhi 6 hrs mobile battery charge pannava? super'apppo

//அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன்.//
nalla vela, punjab kudhiraiku vaikol vaikalam'nu sollala..

My days(Gops) said...

//பெர்மிஷன், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.(///

meeedhi 4hrs'la ella blogaium round vara mudiuma? :((

My days(Gops) said...

//சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும். நாட்டமை சில வருஷங்களுக்கு முன் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக கேள்வி, அதான் இந்த ஏற்பாடு!
//


gud gud, May'la naaan college sera poradhu therinchi, neeeenga vaazhga..

My days(Gops) said...

//ஒழுங்கா மரியாதையா நாடாளு மன்றத்தில் அவரவர் இருக்கையில் அமரவும்.
///

vutta lakkadi girigiri, pakkathu voootla irukudhu vadakari....

thala asathal post endru koori vidai perugiren

nanri vanakkam
en nethila illa sandhanam...

மணி ப்ரகாஷ் said...

எங்கள்

தரணி புகழ் அம்பி
தாமிர பரணியின் Fiber optic கம்பி
Telecom deptmum irukiratha)
எங்களின் நம்பிக்கை
திரு அம்பி அவர்களின் பதவியேற்றுக் கொண்ட காட்சியினை பார்த்த கண்கள்
புண்ணியம் செய்த கண்கள்...

நீர் வாழ்க
நீர் பணி வாழ்க.

மணி ப்ரகாஷ் said...

//இதை எல்லாம் வரவேற்காமல் வெளி நடப்பு செய்ய நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்//

வெளிநடப்பு யாரேனும் செய்தார்களா அமைச்சரே..

சொல்லுங்க..இங்க பிளேனில் காத்து இருக்கிறேன்...

(வேற என்ன முட்டை பிரியாணி ஒசில சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுப்பா.... )

Ponnarasi Kothandaraman said...

Adadey :) Katchi kodi katti parakuthu pola ;) Matha manthiris ellam enna achu :P

Marutham said...

Paadhi post purila boss :D

Gops solra katchiya idhu??
enaku edhum purila
:P

Chinna ponuku purira mari yaravadhu solungalen .. :)
But enjoyed reading...it was funny :P

And photo also sema comedy ;) i have seen the orginal pic in golmaals page :P

Priya said...

he he.. boto superu golmal..

//மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.
//
I couldn't stop laughing Ambi..

//புதிதாக என்கேஜ்மெண்ட் ஆன ஜோடிகளுக்கு இலவச சாடிலைட் போன், வெப் காமிரா.(ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்//
talk time podhadhu :)

//உள்ளூர், வெளியூர் கட்டணங்களூம் அவர்களுக்கு ப்ரீ. (என்ன சந்தோஷம் தானே பிரியா?)//
doesn't matter for me :)

// ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும்.//
ennadhu 4 hrs a? team la irukkara ellar velayum seyya solringala?

Bharani said...

unga padhavi erpu pathi mathum potuteengalenna....ennodathum potu irukalam illa...hee..hee :)

Bharani said...

//மேலும் பதவி என்பது நமக்கு மூக்கில் ஒழுகும் சளி போல, எந்த நேரமும் சிந்தி விட்டு போயிவிடுவோம்! என்பதை தமிழகம் அறியும். தரணியும் புகழும்.
//...enna oru uvamai...pudusa pudusa yosikareenga....thaamirabharani thanni kuduchadhaan ippadi ellam varumo :)

Bharani said...

//இனி ஒவ்வோர் ஊரிலும் எத்தனை கல்லூரிகள், எத்தனை பிகர்கள் என்ற தகவல் சுரங்கம் டச் ஸ்கீரினில் அந்த கல்லூரி வாசலிலேயே நிறுவப்படும்//...aaha..aaha...idhu allavo thittam....indha titathuke mun urimai thandhu perum nidhi othukapadum enbathai indha nerathile solla kadamai pattu irukiren :)

Bharani said...

vandhuku oru 65 :)

KK said...

ssshhhhhbbbaaaaa antha photo paartha odane kanna kattiduchu.... :D
Appadiye antha fig monitor'la oru refferal thittamum kondu vantha nalla irukume...

Mothathil ROTFL post!!! :D

KK said...

hehehehe Ambi neenga thedi thedi 6th comment poduveenga
aana naan unga blog'liye 66'th comment potuten... aiya!!! yethavathu paarthu potu kodunga opicer...

KK said...

Ippo than unga antha color post padichen.... yenna oru othumai naanum athe polambal post than poten pona vaaram :D
Keralathu pen kutti'ya??? athu onnam class aache... ungalukku semma talent ambi... nice'a kadala potuteenga... yenakku kadala mittai saapidrathuku kooda vazhi illai.... romba naala Andra side try panni onnum success aagala... ini yenathu state Kerala... yenathu nadanam katha kali... yenthan bidi malabar bidi...
aana yenthan CM yepothume Natamai than :) (Natamai unga PA post koduthudunga )

ambi said...

@padma, ha haa, wait. it's in design phase. :)

//indha akka yaaaru? paarthadhey illa...
//
@gops, Go to dubuku disciple blog. U can dharshan that akka. :)

//nanri vanakkam
en nethila illa sandhanam...
//
ROTFL on your all comments. :)

//தரணி புகழ் அம்பி
தாமிர பரணியின் Fiber optic கம்பி
Telecom deptmum irukiratha)
எங்களின் நம்பிக்கை
//
@mani, wow! i'm sooo happy! :)

//வேற என்ன முட்டை பிரியாணி ஒசில சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுப்பா.... ) //
thodaaa! :)

//Katchi kodi katti parakuthu pola ;) Matha manthiris ellam enna achu //
@pons, danQ! pls ask this to karthik. :)

//Chinna ponuku purira mari yaravadhu solungalen .. //
@marutham, pls go thru the link which i've given in my post. U'll understand.

ambi said...

//talk time podhadhu :)
//
//doesn't matter for me :)
//
@priya, கிழிஞ்சது கிருஷ்ணகிரி! :)

//ennadhu 4 hrs a? team la irukkara ellar velayum seyya solringala?
//
athaane! :p

//unga padhavi erpu pathi mathum potuteengalenna....ennodathum potu irukalam illa...hee..hee //

@bharani, aiiiii! U also post wih boto. :)

//thaamirabharani thanni kuduchadhaan ippadi ellam varumo //
yeeh, U r correct. :)

//Appadiye antha fig monitor'la oru refferal thittamum kondu vantha nalla irukume...
//
@kk, wow! great idea. will implement this also. :)

//aana naan unga blog'liye 66'th comment potuten... aiya!!! yethavathu paarthu potu kodunga opicer...
//
@kk, ROTFL :) oru vanilla icecream on the way! :p

//yenakku kadala mittai saapidrathuku kooda vazhi illai.... romba naala Andra side try panni onnum success aagala... //

@kk, LOL :) ada daa! East or west kerala is the best! :)

//aana yenthan CM yepothume Natamai than :) (Natamai unga PA post koduthudunga )
//
@kk, ahha, enna oru paasam! :)

ramya said...

//நாளைக்கு 18 மணி நேரம் மட்டுமே டாக் டைம்).// idhellam ungalukkey overa therilaya pa...engalukkaga create panna sonna ungalukum thangamanikum vasadhiya panni vachikittu...c eppadi indha 18 manineram enakku patthukm, u knw naney romba kammiya pesarava, enakkey ivlo konjoondu time kodukareenga...nalla illa avlo than solliputten..

ramya said...

//பத்து பைசாவில் பஞ்சாப்புக்கு கால் செய்யலாம்! அதாவது பஞ்சாபில் உள்ள மக்களுக்கு கால் செய்யலாம்!னு சொல்ல வந்தேன்.// adhu seri, thangamaniya oora maathitu kudumbam samadhinara tamilnattuku vara sollidaren..idhu eppadi work out aagudhunu parkalam...

but neenga manasula ninaicha innoru point marandhuteenga, US to India n India to US unlimited talktime apadinu neenga unga manasula ninacheenga thana ...enakku theriyum adha appadiye arivichidungalen..

golmaalgopal said...

hai...romba diplomatic dhaan...ldrshp change in mokka front patthi sollave illa :))

ராஜி said...

Hi Ambi,
Ultimate comedy ...

ambi said...

//eppadi indha 18 manineram enakku patthukm, u knw naney romba kammiya pesarava, enakkey ivlo konjoondu time kodukareenga//

@ramya, aiii neeyuma? neeyumaa? sollave illa? :p

//US to India n India to US unlimited talktime //
total damage panniyachu! :)

//ldrshp change in mokka front patthi sollave illa//
@golmaal, G3 akka vanthu unnai thooki pottu mithikka poraa! :p

@raji, danQ DanQ!

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信