Thursday, March 01, 2007

அந்ந்ந்த கலர்!

ஜிலேபி தேசத்திலிருந்து திருனெல்வேலி வரை பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக கல்லிடைக்கு பஸ் பிடிக்க பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தவுடன், "என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு கண்டக்டர் நெல்லைத் தமிழிலில் கொஞ்சியதை கேட்டவுடன் பாரதியின் காதில் பாய்ந்த தேன் என் காதிலும் பாய்ந்தது!

ஹப்பா! எவ்ளோ நாளாச்சு இத எல்லாம் கேட்டு!

எல்லா வயல்களிலும் அறுவடைக்கு அனேகமாக இன்னும் ஒரு வாரம் இருக்கும். மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல (ஹிஹி, என் தங்கமணியைப் போல!னும் வாசிக்கலாம்) நெற்கதிர்கள் மேற்க்குத்தொடர்ச்சி மலையின் காற்றில் தலை சாய்த்து நிற்கும் காட்சியை நேரில் பார்த்தால் தான் அழகு! என்பதால் போட்டோ பிடிக்க வில்லை.

(ஹிஹி, காமிரா கொண்டு போக மறந்துவிட்டேன்! என்ற மேட்டரை பின்ன எப்படி சமாளிக்கறதாம்? தங்கமணியிடம் செம ஆப்பு! :(

ஊருக்கு போனவுடன் சுகமாக தாமிரபரணியில் 2 மணி நேர குளியல், சுடச்சுட அடை!னு மெனு களை கட்டியது.



மறு நாள் அதிகாலையிலேயே நெல்லை ஆரேம்கேவிக்கு பயணம். கடையவே நாம தான் தொறந்தோம்.

அடடா! எத்தனை புடவைகள்! எத்தனை கலர்கள்!

இந்த பாவப்பட்ட ஆண்களுக்கு திரும்ப திரும்ப ஒரு சில பொதுவான நிறங்களில் தான் சட்டையும் சரி, பேண்டும் சரி அமையும். ஆனால் மீனா ஆண்டி சொல்லியபடி லேடிஸ்க்கு தான் எத்தனை சிங்குசா கலர்கள்!

மாம்பழ கலர்ல அரக்கு பார்டர்!


எம்.ஸ் ப்ளு, நேவி ப்ளு, ஸ்கை ப்ளு, டார்க் ப்ளு, காப்பர் சல்பேட் ப்ளு


கேவா கலர் (தெரியுமா?), பால் கோவா கலர், நவாப்பழ கலர்,


வெங்காய கலர் (அதுல பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வேற)

பாட்டில் க்ரீன், ஆலிவ் க்ரீன், கிளிப்பச்சை,


பர்கண்டி(ஜருகண்டி இல்லை),


மெரூன் ரெட், பிளட் ரெட், அஜித் ரெட்,


வெளிர்மஞ்சள், பச்சமஞ்சள், பொன்னிறம்(ஹிஹி, ஐஸ் குட்டி நிறம்!னு நான் கேட்டேன்),


லைட் பிரவுன், டார்க் பிரவுன், காப்பி பிரவுன்,


யானை கலர், கழுதை கலர்(கஷ்ட காலம்),


சிமெண்ட் கலர், செங்கற்பொடி கலர்,

அடங்கப்பா சாமி! என்ன, படிக்கற உங்களுக்கே கண்ண கட்டுதா?
கடைகாரனுக்கு எப்படி இருக்கும்?

100 வருஷமா கடை நடத்தறாங்க, அதுனால நாங்க கேட்ட கலர், பிடிச்ச டிஸைன் எல்லாம் ஜஸ்ட் ஒரு 3 மணி நேரத்துல கிடைத்து விட்டது.

"பார்த்தது போதும்! சட்டுபுட்டுனு ஒன்ன செலக்ட் பண்ணு!"னு அவசரப்படுத்தும் ரங்கமணிகளை பாண்டி பஜாருக்கு டிக்கட் எடுத்து குடுத்து நாயுடு ஹாலுக்கு அனுப்பி விடுவது சாலச் சிறந்தது!

அங்கே தான் எடுத்து போட்ட நாலுல, ஒன்ன செலக்ட் பண்ணிண்டு வந்துண்டே இருக்கலாம். (இப்ப அதுலயும் டிசைன் எல்லாம் வந்துடுத்தாம்! )

பாரம்பரிய பட்டு தவிர, இப்ப ஸ்டோன் வர்க்(stone work), திரட் வர்க்(thread work) வெச்சு எல்லாம் வந்துருக்கு. இது போதாது!னு பனாரஸ் பட்டு, பாந்தினி சில்க்ஸ், போச்சம்பள்ளி சாரீஸ் வேற அட்டகாசமா இருக்கு!


- எதிர்கால தங்கமணிகள் கவனிக்கவும். வருங்கால, நிகழ்கால ரங்கமணிகள் கோ-ஆப்டெக்ஸ் துண்டு(அதுவும் 10% தள்ளுபடியில்) வாங்கி கொள்ளவும், வேற எதுக்கு தலைல போட்டுக்க தான்!

நான் எதிர்பார்த்தபடியே எங்களுக்கு பக்கதுல ஒரே கசமுசா!

"ஈ கலரு எனக்கு மேட்ச்சாயிட்டு இருக்கும்! நோக்கிக்கோ" - சூர்யா டிவி டாப் டக்கராயிட்டு ஓடிக்கொண்டிருந்தது.



ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?



ஓ! ஆ கலரு நிங்களுக்கு ஒன்னாம் கிளாஸாயிட்டு(first classaa) இருக்கும்! இது சத்யமாக்கும்!னு சொல்லி நெஜாமாலுமே அவங்களுக்கு மேட்ச்சான கலரில் ஒன்னை சுட்டி காட்டி சம்மன் இல்லாம ஆஜர் ஆக வேண்டி இருந்தது,



ஏனெனில் ஆப்பெண்குட்டி கையில் யான் தேடிக் கொண்டிருந்த கலர்ல எம்ராய்டரி பண்ணிய பட்டு புடவையாக்கும்!

ஹிஹி, எல்லா கலருமே அவங்களுக்கு மேட்ச் தான்! (சொக்கா! எனகில்லை! எனக்கில்லை!)

பாலக்காட்டு குட்டிக்கு பரம சந்தோஷம்! (ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.)

(இது தங்கமணிக்கு- என்ன நம்புங்க எஜமான்!)

கூட வந்த அச்சன் சுதாரிக்குமுன், நைசா அந்த புடவைக்கு பில்லை போட்டு விட்டேன். ஒரு வழியா எல்லா ஷாப்பிங்கும் முடிஞ்சு உங்களுக்கு அல்வா எல்லாம் வாங்கிண்டு இதோ மறுபடி ஆணி பிடுங்க வந்தாச்சு!

நான் சாப்டா நீங்க சாப்ட மாதிரி தானே!னு இந்த தடவையும் நான் அல்வா குடுக்க முடியலை. ஏனெனில் பக்கத்து வீட்டு டுபுக்கு டிசிப்பிள் கொத்தா சட்டைய பிடிச்சு அவங்க பங்கை எடுத்துண்டு தான் எனக்கே குடுத்தாங்க.



அல்வாவை முழுங்கிட்டு அப்டியே போகத லே! நச்சுனு நாலு கமண்ட் போட்டுட்டு போல!


பி.கு: மார்ச் மாத வெளியீடு "பார்த்த முதல் நாளே!" விரைவில் உங்கள் அபிமான பிரவுஸர்களில் உலகமெங்கும்!

77 comments:

G3 said...

Pharsht commentu :D

G3 said...

Paravaa illa.. naalaikku IT kavundhaalum neenga nalla javuli kada vechu pozhachipeenga pola irukku.. avlo detaileda therinju vechirukkeenga :D

G3 said...

4 comment potta alwa tharennu sonnadhu ippadi photola tharradhukku thaana :-(

G3 said...

//ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.//
Aaha.. sidela indha profession veraya.. nadathunga nadathunga :P

KK postla commenta paathu inga edho kaara saarama oru poshtu edhirpaatha ippadi emaathiteengalae :-(

Seri 4 comment over.. me the outies now :P

My days(Gops) said...

ada cha, jst a misss

My days(Gops) said...

kannula olive oil' vuttu ella blog'um poitu oru 1st place'a pudikalam'nu paaartha...

mmmm... ella blog'laium indha vilakku thiri maaadhiri indha G3...
ok ok

dubukudisciple said...

//என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு கண்டக்டர் நெல்லைத் தமிழிலில் கொஞ்சியதை கேட்டவுடன் பாரதியின் காதில் பாய்ந்த தேன் என் காதிலும் பாய்ந்தது!//
unga kadula then ellam pajucha???
enga kadula rathama vazhithu!!!

dubukudisciple said...

//எல்லா வயல்களிலும் அறுவடைக்கு அனேகமாக இன்னும் ஒரு வாரம் இருக்கும். மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல (ஹிஹி, என் தங்கமணியைப் போல!னும் வாசிக்கலாம்//
ada ada..
kavithai ellam ezhuthalam pola iruke

dubukudisciple said...

ennale!!
ore malayalathula ellam pesuthiya??
inda color anda color nu entha colora le parthe???

dubukudisciple said...

naan vanthu unga kite alwava pudingitena??
nambiduvanga ellarum!!
makale neegale nyayatha kelunga

appada vanthathuku rounda 10 comment potachele

Padma said...

\\100 வருஷமா கடை நடத்தறாங்க, அதுனால நாங்க கேட்ட கலர், பிடிச்ச டிஸைன் எல்லாம் ஜஸ்ட் ஒரு 3 மணி நேரத்துல கிடைத்து விட்டது.\\

2 mani nerama velaigidum:P.. manni kuda seekaram shopping panni mudichudu va pola erukke..
Welcome back ambi anna..
amma appa unga udan pirappu ellarum nanna erukala? yanaigal mugham inide nadai petraa;)..
nanna alwa koduthetel..:P

My days(Gops) said...

12 naaan ippodaiku inga comment'a maaten...

My days(Gops) said...

13th my spot....

innum indha post'a padikala....
aaani'nga tholla jaasthi ......
wait for a while...

மு.கார்த்திகேயன் said...

Attendance ambi!

padichchittu commenturen!

kuttichuvaru said...

naan kooda enga amma-kku pudavai vaanga ponapothu gavanichirukken.... nejamaave ithana color irukkaa?? illa vaai-kku vantha color name adichu udaraana-nnu!! ippo thaan confirm aachu... ungalukkum antha color ellam sollirukkaan-nu!!

Anonymous said...

Dear ambi,
Unga thangamani romba kuduthu vechavo...

Evvalavu porupa color , fashion , style ellam gavanichu irukeenga.....

Ana oru comment - Kerala party patri..

Nijama thangamani ungaluku poori kattai yil oru adi adika vendiyadhu dhan..... Onnum thappillai.....

Ha Ha Ha ha.... just for joke.Don't take is seriously.....

With Love,
Usha Sankar.

SKM said...

//ஆப்பெண்குட்டி கையில் யான் தேடிக் கொண்டிருந்த கலர்ல எம்ராய்டரி பண்ணிய பட்டு புடவையாக்கும்!..கூட வந்த அச்சன் சுதாரிக்குமுன், நைசா அந்த புடவைக்கு பில்லை போட்டு விட்டேன்.//

no,no,no,Idhellam not at all acceptable.adhenna adutha ponnu/lady kaiyila irukiradhukku dhan pidichurukku nu "bill" podradhu? Ms.C oorukku ponadhum unga kankaanippula kadaikku kooti poi (kadivalam pottu)shelf to direct a unga kaikku pru pudavai vanga vainga.

SKM said...

//camera kondu pogalai.// Acceptable.Suspence irukattum Ammanikku.Kalyana pudavai yelorukkum appdi easy a kaatta mudiyuma?

SKM said...

//DD:naan vanthu unga kite alwava pudingitena??
nambiduvanga ellarum!!
makale neegale nyayatha kelunga//

adhudhaanae!oru spoon taste ku koduthuttu, yellam ,(pavam Ms.C ku kannula kattittu) unakku badhila,ungaluuku badhila nu solli solli sapta madhiri la kelvi pattom.JK.;)

Anonymous said...

Ambi,
Pudavai edukurathula Phd thesis elluthalam neenga...kalakita-la kalaki...thanks for the halwa!!!

Bharani said...

sshh...ippave kanna kathudhe...romba porumaiyappa ungaluku :)

Bharani said...

photo-la mathume alwa thandathai vanmaya kandipa....naan alwa saapda poren :(

Syam said...

//ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்//

சேச்சி கிட்ட email id வாங்கினதா கேள்வி பட்டேன்...சரி சரி அது பத்தி நாம தனியா பேசிக்கலாம் :-)

Syam said...

போஸ்ட் வழக்கம் போல ROTFL.... ஒரு புடவ மேட்டர எடுத்து இப்படி ஊர்ல இருக்கரவன எல்லாம் வம்புக்கு இழுக்கரது உன்னால்(மட்டும் தான்) முடியும் தம்பி... :-)

Syam said...

சரி ஒரு கோட்டர் அடிச்சுக்கறேன் 25
:-)

Anonymous said...

present mattum pottukaren..

Anonymous said...

present mattum pottukaren..

Ms Congeniality said...

ada ada..3 hrs edutheengala pudavai select panna?
Poorichi poyten :-D

SKM,
kadaivaalam idea kandipa arangetram panna vendiyadhu dhaan :-p

Priya said...

ROFTL as usual..

Kadaisi varaikkum adhu enna colornu sollave illaye.. Ms.C mattum dhan andha color kattanumna?

colors pathi solli irukkaradha patha - unga anubavam nalla theriyudhu..

மு.கார்த்திகேயன் said...

/"அந்ந்ந்த கலர்!" //

கலர்னு போட்டவுடன் நான் அந்த கலரோன்னு நான் அரக்க பரக்க ஓடி வந்தேன், அம்பி..

நேத்து அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போயிட்டோமேன்னு

மு.கார்த்திகேயன் said...

//ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?
//

இது இது மேட்டர் அம்பி.. ஒண்னு சொன்னாலும் நச்சுன்னு சொன்னேபா

மு.கார்த்திகேயன் said...

எப்படி எல்லாம் எழுதி, நம்ம மனசை கரைக்கிற பாத்தியா அம்பி, ஊர் நினைப்பை விட்டு..

கார்த்தி.. பொறுமைடா பொறுமை

Anonymous said...

@g3, vaanga g3 akka vaanga! yeeh periya javuli kadai vekkalaam!

pavam arn and kk, athaaan oru free service :)

//ella blog'laium indha vilakku thiri maaadhiri indha G3...
//
@sachin, ROTFL :) but nee thaan secondu! be happy! :)

//kavithai ellam ezhuthalam pola iruke
//
@DD, yeeh, room pottu yosichitu irukken!
//inda color anda color nu entha colora le parthe???
//
ella colorum thaaan! :p

//naan vanthu unga kite alwava pudingitena??
nambiduvanga ellarum!!
//
ROTFL :p cha! enna sonnalum ooru namba maatenguthu pa!

//manni kuda seekaram shopping panni mudichudu va pola erukke..
//
@padma, vaama minnal! yeeh, she is little faster than me.

//amma appa unga udan pirappu ellarum nanna erukala? yanaigal mugham inide nadai petraa;)..//

amma, appa all r fine. udanpirappu is also with me, working in bnglre only. yaanaigal mugaam superrr! :p

//nanna alwa koduthetel//
ippavaavathu therinjathe! :)

//innum indha post'a padikala....
aaani'nga tholla jaasthi ......
//
@gops, no probs, methuvaa padi. :)

MyFriend said...

என்னலெ வம்பா போச்சு! கேமிரா எடுத்துபோலெ..

என்ன கலர் என்ன கலர்ன்னு சொன்னீங்க. அதை படம் புடிச்சு போட்டிருந்தீங்கன்னா எங்களுக்கும் யூச்புல்லா இருக்கும்லெ???

Anonymous said...

//nejamaave ithana color irukkaa?? illa vaai-kku vantha color name adichu udaraana-nnu!! ippo thaan confirm aachu//

@kutti, ohh gr8! confirm aachaa? very gud. i know these colors already! :)

//Unga thangamani romba kuduthu vechavo...
Evvalavu porupa color , fashion , style ellam gavanichu irukeenga.....//
@usha shankar, danQ! DanQ!
poori kattaiyaa? nalla koluthi podareenga madam! :p

//adutha ponnu/lady kaiyila irukiradhukku dhan pidichurukku nu "bill" podradhu? //
@skm, no, naan thedikittu iruntha color/design antha ponu kaila, he hee :)

//Suspence irukattum Ammanikku.Kalyana pudavai yelorukkum appdi easy a kaatta mudiyuma?
//
ithu matter. danQ for the idea. :)

//oru spoon taste ku koduthuttu, yellam ,(pavam Ms.C ku kannula kattittu) unakku badhila,ungaluuku badhila nu solli solli sapta madhiri la kelvi pattom//

illa, avanga panga naan kuduthuten! :p

//Pudavai edukurathula Phd thesis elluthalam neenga...//
@hema, katrathu kai man alavu! :p
mrrgeku vaanga, nejamaave vaangi vekkaren. :)

@bharani, pinna, courierla alwaa anupa solreengala? :)

//சேச்சி கிட்ட email id வாங்கினதா கேள்வி பட்டேன்...//
@syam, vaangi irukalaam. aprom adi yaaru vaangarathu? :)

//ஒரு புடவ மேட்டர எடுத்து இப்படி ஊர்ல இருக்கரவன எல்லாம் வம்புக்கு இழுக்கரது //
@syam, yaara vambuku izhuthen?(innocently) :)

@maniprakash, freeya irukum pothu vanthu padinga. :)

//ada ada..3 hrs edutheengala pudavai select panna?
Poorichi poyten //
@MS.C, ahaaa! intha jenmam edutha palanai adainthen ejamaan! :)

//Kadaisi varaikkum adhu enna colornu sollave illaye.. Ms.C mattum dhan andha color kattanumna?
//
@priya, i've mentioned the color in that list. :p
mrrgeku vaanga, U can see it. :)

Anonymous said...

//இது இது மேட்டர் அம்பி.. ஒண்னு சொன்னாலும் நச்சுன்னு சொன்னேபா
//
//எப்படி எல்லாம் எழுதி, நம்ம மனசை கரைக்கிற பாத்தியா //

@karthi, nee enga akkava thinking!nu enakku theriyum. what happened to my amaicher post..? :)

@veda, LOL :) adhaan postla irukke! venumna emailaa anuparen! :)

@my friend, he hee, athellam Liveaa poi paathu therinjukanum! photo paathu ellam varathu! :)

Geetha Sambasivam said...

சிலபேர் திருந்தவே மாட்டாங்க! :P

@வேதா, அம்பிகிட்டே இருந்து எதுவும் எதிர்பார்க்க முடியாது. பதிவிலே அல்வாவைக் காட்டறதே பெரிய விஷயம்!

Arunkumar said...

late-a vandhutteno.

ROTFL post Ambi :)

God's own country-la irundhu enakkum KK-kum ponnu paathingale.. neenga 200+ yrs unga thangamaniyoda supera vaazvinga :-)

Arunkumar said...

ippodaiku apit aayitu michatha aprom adichu aadren :-)

மு.கார்த்திகேயன் said...

// what happened to my amaicher post..?//

போஸ்டிங்கெல்லாம் பக்காவா ரெடிப்பா.. கொஞ்சம் இடைவெளி இருக்கட்டுமேன்னு தான் போடல.. அடுத்த வாரம் கண்டிப்பா

மு.கார்த்திகேயன் said...

படத்தை மட்டும் போட்டு அல்வா கொடுத்திட்டியேலே, அம்பி

Kavitha said...

Ambi!

Ivlo naala unga bloga silenta padichuttu irundhen! aana innaikku saree colours pathi ellam ezhudhi commenta vechuteenga.. Nallave ezhudhareenga..

Good work! keep it up!

Cheers
Kavitha

Gopalan Ramasubbu said...

//ஊருக்கு போனவுடன் சுகமாக தாமிரபரணியில் 2 மணி நேர குளியல்,//


எலேய், எப்ப பாரு தாமிரபரணியில் ரெண்டு மணி நேரம் குளிச்சேன், மூனு மணி நேரம் குளிச்சேன்னு சொல்றத பார்த்த சந்தேகமா இருக்கு.. ரெண்டு மாசதுக்கும் சேத்திவெச்சு குளிக்கரதுக்கு தான் ஊருக்கே போரீங்களாப்பு? என்னமோ, அந்த நெல்லையப்பருக்கு தான் வெளிச்சம் .. தங்கமணிகிட்ட சொல்லி விசாரனை கமிஷன் அமைக்கனும்.. :P

Arunkumar said...

அடடா என்ன ஒரு ஆராய்ச்சி... ஒரு அலசு அலசிட்டீங்க அம்பி !!!

என்ன மாதிரி எதிர்கால ரங்கமணிங்களுக்கு வச்சீங்க ஆப்புனு
நெனச்சேன் ஆனா உங்க பெருந்தன்மை...
//
பாலக்காட்டு குட்டிக்கு பரம சந்தோஷம்! (ஆமா! அருண் & KK, அவங்களுக்கு பாலக்காடு தான் ஓரிஜினாம், மத்தபடி ஊரு மட்டும் தான் விசாரிச்சேன்.)
//
கொங்குராஜுலேஷன்ஸ் அம்பி, யூ ஆர் FULLY குவாலிஃபைட் :-)
(எங்க வழிகாட்டியா இருக்க...)

//ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?//
கடவுளோட "ரொமாண்டிக் டைம்"ல படச்ச ஊராச்சே :P

Arunkumar said...

//இந்த பாவப்பட்ட ஆண்களுக்கு திரும்ப திரும்ப ஒரு சில பொதுவான நிறங்களில் தான் சட்டையும் சரி, பேண்டும் சரி அமையும். ஆனால் மீனா ஆண்டி சொல்லியபடி லேடிஸ்க்கு தான் எத்தனை சிங்குசா கலர்கள்!
//
இதை நான் பல முறை வழிமொழிகிறேன் :)

//பர்கண்டி(ஜருகண்டி இல்லை),//
பகார்டினு படிச்சிட்டேன் , நாட்டாம ஞாபகம் வந்துருச்சு :-)

Arunkumar said...

Ravunda ambadhu :)

My days(Gops) said...

51 dho vandhuten....

(jump pannuradha paartheeengala?)

My days(Gops) said...

//என்ன லே புறத்தாலயே நிக்க! முன்னால வாலே!னு//

"adhuku yenley en moonchila thanni'a therikaaa"nu neenga edhuvum sound viteeengala:?


//மண நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிச்சயக்கப்பட்ட பெண் போல//
adada adada.. ennamaa line katti irukeeenga...

//என்ற மேட்டரை பின்ன எப்படி சமாளிக்கறதாம்? தங்கமணியிடம் செம ஆப்பு! :(//
ducalty ducalty... nambaadheenga nambaadheeeenga..

My days(Gops) said...

//தாமிரபரணியில் 2 மணி நேர குளியல், சுடச்சுட அடை!னு மெனு களை கட்டியது. //

ENAKKU VAIRU ERIUDHU... :((

My days(Gops) said...

//மறு நாள் அதிகாலையிலேயே நெல்லை ஆரேம்கேவிக்கு பயணம். கடையவே நாம தான் தொறந்தோம்//

unga vootla yaaraiumey thoonga vidalai'aamey?.
(enna color pudavai edukuradhu'nu ellathaium tholla panniteengalamey?)

My days(Gops) said...

//எம்.ஸ் ப்ளு, நேவி ப்ளு, ஸ்கை ப்ளு, டார்க் ப்ளு, காப்பர் சல்பேட் ப்ளு,கேவா கலர் (தெரியுமா?), பால் கோவா கலர், நவாப்பழ கலர்,வெங்காய கலர் (அதுல பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வேற)
பாட்டில் க்ரீன், ஆலிவ் க்ரீன், கிளிப்பச்சை,
பர்கண்டி(ஜருகண்டி இல்லை),
மெரூன் ரெட், பிளட் ரெட், அஜித் ரெட்,வெளிர்மஞ்சள், பச்சமஞ்சள், பொன்னிறம்(ஹிஹி, ஐஸ் குட்டி நிறம்!னு நான் கேட்டேன்),


thala idhana color solliputtu, last'la andha maambala color'la kili patchai border potta podavai color'a vuttuteengaley.. :((

My days(Gops) said...

//ஈ கலரு எனக்கு மேட்ச்சாயிட்டு இருக்கும்! நோக்கிக்கோ" //

oh, andha omana kutti'ai nee nokiaaaa?

//ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?//

adha sollunga'nu naaaan solla maaaten.....

/சம்மன் இல்லாம ஆஜர் ஆக வேண்டி இருந்தது,//
saamooga sevai'la ungala adichika (adivaaangama irrundhaa sare.. enga irrundhu'nu me wont tell u c )
aaaaley illai thalai..

My days(Gops) said...

//நான் சாப்டா நீங்க சாப்ட மாதிரி தானே!னு இந்த தடவையும் நான் அல்வா குடுக்க முடியலை.//

*cough cough* indha climate change aaanaley ippadi thaaan pola...

//கொத்தா சட்டைய பிடிச்சு அவங்க பங்கை எடுத்துண்டு தான் எனக்கே குடுத்தாங்க.//
alwa'va mattum photo'la kaatum bodhey enakku therium'la..

My days(Gops) said...

58 nalla adichi aaditen..

My days(Gops) said...

59 aduvum solo'vaa....

My days(Gops) said...

60 meter'ku mela paaarthu pottu kodu thala...

Dreamzz said...

அட! நம்ம ஊர்காரரா நீங்க! நல்லதா போச்சு!

Dreamzz said...

atataa! namma iruttu kadai alvava paathe ethanai naalachu enru kavala pattindu irundhen.. kaamichu kulira vechuteenga

Dreamzz said...

Advanced Wishes!

Dreamzz said...

neenga solra maathiri, irundhaalum sree color ippellam konjam overa thaan poiduchu

Dreamzz said...

oru 65 pottuttu naan escaperen okey!

Dreamzz said...

aama, athenna palakaadu matter a arunnukum, kkkum sollareenga! enakku?

Sumathi. said...

Hai ambi,

konjam late.hi hi ...paravaaillai..

ena roooomba alinjiraakum paudavikku?.. kadaisila antha ketrala kuti kita irunthu taan suteeraakum...mmm

Sumathi. said...

Hai ambi,

idukku peeru taan 'ALVA KUDUKKARADHAA?' adadadaa ivvalavu naal theriyaama poche....

Sumathi. said...

Hai ambi,

sari kadisila pudavai enna colrne sollaliye? oru velai antha alva colr oo?

தி. ரா. ச.(T.R.C.) said...

@என்ன ஸ்யாம் புடவையைப்பத்தியே இந்த அளவுக்கு நம்ப ஆள் இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியுருக்கார்ன்னா அப்போ புடவைகட்டறவங்களைப் பத்தி என்னவெல்லாம் ஆராய்ச்சி பண்ணியிருப்பார்ன்னு நம்ப தங்கமணிக்கு ஒரு சந்தேகம் வராது. அப்ப வரலைன்னாலும் இப்போ எடுத்துக்கொடுத்த அப்பறம் நிச்சியம் வரணும்.அம்பி உனக்கு கல்யணப்பரிசு கவலையேபடாதெ பூரிகட்டைதான்.ரொம்ப உப்யோகமா இருக்கும்.

ambi said...

//பதிவிலே அல்வாவைக் காட்டறதே பெரிய விஷயம்!
//
@geetha madam, :)

//neenga 200+ yrs unga thangamaniyoda supera vaazvinga//
@arun, ahaa! ithu vallavo vaazhthu! :)

@karthi, ok, ok!

//Ivlo naala unga bloga silenta padichuttu irundhen! aana innaikku saree colours pathi ellam ezhudhi commenta vechuteenga.. //

@kavitha, ஆஹா! எத்தனை பேரு பா இப்படி கிளம்பிருகீங்க? :)
btw, வாழ்த்துக்கள் புது வூடு கட்டியதுக்கு!

//ரெண்டு மாசதுக்கும் சேத்திவெச்சு குளிக்கரதுக்கு தான் ஊருக்கே போரீங்களாப்பு? //
@gops, வாப்பா! கோப்ஸ், என்ன வாரரத்துக்குனு இப்படி ஒரு ஷிஷ்ய கேடி. :)

//கொங்குராஜுலேஷன்ஸ் அம்பி, யூ ஆர் FULLY குவாலிஃபைட் :-)
(எங்க வழிகாட்டியா இருக்க...)
//
@Arun, ROTFL :) danQ!

//பகார்டினு படிச்சிட்டேன் , நாட்டாம ஞாபகம் வந்துருச்சு //
ROTFL :) semaya vaari irukka! :p

//adada adada.. ennamaa line katti irukeeenga...
//
@sachin, LOL :) sari, freeya vudu! :)

//ENAKKU VAIRU ERIUDHU//
ada daa! ENO kudippa! sriya poidum! :)

//unga vootla yaaraiumey thoonga vidalai'aamey?.
//
he hee, unaku epdi theriyum...?

//last'la andha maambala color'la kili patchai border potta podavai color'a vuttuteengaley//
ada daa! aama! miss pannitene! *ahem, unakku epdi theriyum? yaaruku vaangi kudutha? :p

//alwa'va mattum photo'la kaatum bodhey enakku therium'la..
//
ROTFL :) sari, vidu, ithellam namakku sagajam! :)

//60 meter'ku mela paaarthu pottu kodu thala... //
kandippa, marriageku varuve illa? :p

//namma iruttu kadai alvava paathe ethanai naalachu enru kavala pattindu irundhen.. kaamichu kulira vechuteenga
//
@dreamz, ahaa! i'm also soo happy! :)

//athenna palakaadu matter a arunnukum, kkkum sollareenga! enakku?
//
ஆஹா! எத்தனை பேரு பா இப்படி கிளம்பிருகீங்க? next time kandippa unakkum undu! :p

//idukku peeru taan 'ALVA KUDUKKARADHAA?' adadadaa ivvalavu naal theriyaama poche.//
@suamthi, வாங்க அக்கா வாங்க! இப்பவாவது தெரிஞ்சதே! :)

pudavai color..? it's mentioned in the list itself. :p

//அம்பி உனக்கு கல்யணப்பரிசு கவலையேபடாதெ பூரிகட்டைதான்.ரொம்ப உப்யோகமா இருக்கும்.//
@TRC sir, ha haaa :)
ஆமா! உங்க வீட்டுல நிறைய பூரிக்கட்டை இருக்கே என்ன விஷயம்..? :p

மு.கார்த்திகேயன் said...

அம்பி, உன் மந்திரி பதவி பதிவை போட்டாச்சுப்பா

Swamy Srinivasan aka Kittu Mama said...

ROTFL :-) ennatha solla...pudavaila naar naara kizichu irukeenga..ada local effectla irukkalae.

pinna ennalae...thangamanikku pudavainnu vandhuttaaa yaenlaae chalapudhae...

camera kondu pogaadhadhukkae aapaa...vaappu..innum irukku niraya noakku :-)

Anonymous said...

Ambi!

ele ambi, nee yahoo TN1 ambi dhane!? inga ennalae pannudha!?

RR

ambi said...

@karthi, paathachu!

//camera kondu pogaadhadhukkae aapaa...vaappu..innum irukku niraya noakku //

@kittu, ahaa! exp person solreega, unmaiyaa thaan irukkum! :p

//ele ambi, nee yahoo TN1 ambi dhane!? //

@rr, illiye! nee yaarule..? atha sollu muthalla.

Harish said...

"ஆயிரம் ஏஞ்சலினா வந்தாலும் ஒரு கேரளாவுக்கு ஈடு இணை ஆகுமா?"
Thangamani kitta udai confirmed. En thalai...idu unakke nalla irukka? Kaanju poi kidakarom..ippadi rusiyaana alwa photo pottu pugiya kelapariye :-(

Story Teller said...

hii.. as per your wish, I have introduced you on my story.. hehe..

Deekshanya said...

அண்ணேன், சரியான போஸ்ட் போங்க! சூப்பர்! கலர் கலரா அலசி அசத்திட்டீங்க, ஆனாலும் நம்ம பக்கத்து state மேல அலாதி பிரியம் தான் உங்களுக்கு! எல்லாம் அம்மணி பார்த்துக்குவாங்க கல்யாணத்துக்கு அப்புறம்!!

Anonymous said...

pakkathla glass tumbler la enna le? :P
-Viji

ambi said...

@harish, thangamani maranthaalum neey pottu kututhruva polirukku!

//எல்லாம் அம்மணி பார்த்துக்குவாங்க கல்யாணத்துக்கு அப்புறம்!!
//
@deeksh, ROTFL :) ellam unga aasirvaatham.

//pakkathla glass tumbler la enna le?//
@viji, thakaali juice, nejamaa! :p

வல்லிசிம்ஹன் said...

ஒரு புடவைக் கடைக்குப் போனதுக்கு இத்தனை லூட்டியா:-)